Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உவகை (மணமக்கள் இணைப்பு)

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம்

உவகை பற்றி பேச வந்துள்ளேன்.

"உவகை"

மணமக்கள் இணைப்பு

uvakai_side.jpg.6c3beadcab6f981929e83ebc

இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்ள சமூகச் சாளரமே சிறந்த இடமாக தென்பட்டது ஆதலால் இவ்விடத்தில் "உவகை " பற்றி மனம் திறந்து பேசலாம் என்று நினைக்கிறேன்.

இன்று உலகளாவிய ரீதியில் எமது இனம் பரந்துபட்டு தொழில் நுட்பத்தால் பற்பல விடயங்களை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு விடயம் தேவைதானா என்று பலர் சிந்தையில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இணைய யுகம் வலைப்பதிவில் மணமக்கள் தெரிவு அவநம்பிக்கைகளுக்கூடாக திருமணம் என்ற நிலையில் பல தோல்விகளும், உவப்பில்லா வாழ்வியலுமாக ஒரு புறம் , தமக்கான சரியான தெரிவுகளைச் செய்ய முடியாமல் தெளிவான முடிவை எடுக்கமுடியாமல் திணறும் இளைய சமூகம் ஒரு புறம், புலம் பெயர்ந்து குடும்பங்கள் பிரிந்து சிதறிய நிலையில் திருமண முன்னெடுப்புகளை இளையவர்களுக்கு மேற்கொள்ளமுடியாத ஆதரவற்ற நிலை ஒரு புறம், திருமணம் செய்யும் வயதை கடந்து தனிமரமாக விரக்தியுற்ற நிலையும் ஒரு புறம் இப்படியாக எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக மாறிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

காதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமன்று. எல்லா காதலும் திருமணத்தை அடைவதில்லை. பல தோல்விகளைச் சந்தித்து வெறுத்து திருமணமே வேண்டாம் என்பவர்களையும் அதிகம் காணக்ககூடியதாக இருக்கிறது. அப்படி தனித்து வாழ முடிவெடுத்த இளையவர்கள் 35ஐ கடக்க முன்னரே வெறுமையையும், தனிமையையும் சந்தித்து அதன் பின்னர் தமக்கான வாழ்வை தேடும் கணத்தில் உறவுகளும் சரி , சமூகமும் சரி அதனைக் கணக்கில் எடுப்பதில்லை. இப்படிப்பட்ட பலரை சந்தித்ததன் விளைவே இன்று இந்த "உவகை"யின் பிறப்பு. எங்களின் அடுத்த சந்ததி..... புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் இன்னும் விடுபடமுடியாத எமது பாரம்பரியங்களுடன் எதிர்காலத்தில் தனித்தவர்களாக, மன அழுத்தம் நிறைந்தவர்களாக, போதைக்கு அடிமையுற்றவர்களாக மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். வாழ ஆசைப்படுபவர்களுக்கு வழிகளைத்  திறக்கவேண்டும். கணனி முன் தோன்றும் பிம்பங்களை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்வது எத்தனை பேருக்கு சாத்தியம்? 

ஒரு திருமணத்தின் மூலம் இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. உறவுகள் பலப்படுகின்றன. தேடல்கள் மூலமே இப்படியான உறவுகள் வலுப்படுகின்றன. ஆரோக்கியமான சமூகம் உறுதியாகும். பல பெற்றோர் தம் பிள்ளைக்கு சரியான துணை கிடைக்கவில்லையே என்று கவலையுறுவதையும், தமக்கான வாழ்க்கைத்துணையை எப்படி எங்கே தேடுவது என்று பிள்ளைகள் தவிப்பதையும் நான் வாழும் சூழலில் நிறையவே சந்தித்துக் கொண்டிருக்கிறேன். சரியான இணைப்பாளர் இல்லாத பெரும் குறையை காணக்கூடியதாக இருக்கிறது. இணைப்பாளரிடம் நேர்மையும் உற்சாகமும் வாழும் சூழல் சார்ந்து புரிதலும் இருக்கவேண்டும். நான் அறிந்த வரை இங்கு அத்தகைய இடம் அதிக வெற்றிடத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரவும் முயற்சிதான் "உவகை"யின் உதயம்.

நண்பர்களே, இது கனடா என்ற நாட்டுக்குள் மட்டுப்பட்டதல்ல தமிழர் வாழும் அனைத்து நாட்டிலும் "உவகை" கரங்கள் விரிந்துள்ளது. கண்டங்கள் கடந்தும் இதன் செயற்பாடுகள் இருக்கும். எமது உறவுக் கொடிகள் எங்கிருந்தும் தமது தொடர்புகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கமும், மின்னஞ்சல் முகவரியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தொடர்புகளை மேற்கொள்ளும்போது விண்ணப்படிவங்களை நிரப்பி அனுப்புவதற்கான லிங் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

உறவுகளே, உங்கள் உறவுகளுக்கும் "உவகை"யின் தேவை இருக்கலாம். அவர்களுக்கும் "உவகை"யை அறிமுகப்படுத்த மறக்காதீர்கள்.

uvakai_side.jpg.6c3beadcab6f981929e83ebc

 • Like 12
Link to post
Share on other sites
 • Replies 68
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

எல்லோருக்கும் வணக்கம் உவகை பற்றி பேச வந்துள்ளேன். "உவகை" மணமக்கள் இணைப்பு இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்

இன்று வெள்ளிக்கிழமை யாழில் உலாவும் இலையான் கில்லர் யாழிற்கு விடுதலை கொடுத்துவிட்டு என்னோடு உரையாடினார். மகிழ்ச்சி. யாழ் நண்பர்கள் சகிதம் லொலிப்பொப் பார்ட்டி வைப்போம். அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்

ஈழப்பிரியன் அண்ணா  இப்போதுதான் தொழில்முறை போட்டி எப்படி இருக்கும் என்று உணர்கிறேன். நல்ல காலம் உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து அரச பதிவை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு எடுத்ததனால் என்னை நோக்கி நிகழ்த்தப்

 • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் மற்றவர்களை நம்ப வேண்டும் அதை இணையம் எப்படி செய்யும் என்பதே கேள்வி வெளி உலகை கண்டே பல ர் காதல் புரிகின்றனர் ஆனால் உள்ள இருக்கும் மனதை யாரும் கண்டுகொள்ள வாய்ப்பில்லை  அண்மையில் எனக்கும் ஒரு சம்பந்தம் வந்தது ஜேர்மனியில் இருந்து ஆனால்  எனக்கு இங்கிருந்து போகவும் விருப்பம் இல்லை ஆகையால் விட்டு விட்டேன் அவங்களும் எனது தோற்றம் வெறும் 5 அடி மூன்று உயரம்   அவர்கள் அத விட எதிர்பார்த்தார்கள் இதுவரைக்கும் அவர்களை எனக்கு தெரியாது ஊரில் நல்ல மாப்பிள்ளை தேவை என வினவிய போது யாரோ என்ற தம்பி எனக்கு தெரியாமல் இந்த  வேலையை பார்க்க கடைசியில் நடக்கவில்லை சந்தோஷம் இருந்தாலும் அங்குள்ள பெண்பிள்ளைகளை ஏன் அங்குள்ள ஆண்கள் விரும்புவதில்லை அவர்கள் அந்த வாழ்க்கைக்கு ஒத்து போக மாட்டார்களா  என்ற கேள்வி கண் முன்னே நிற்கிறது சகாறா அக்கா

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

Edited by வல்வை சகாறா
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வல்வை சகாறா said:

பதிலுக்கு நன்றி அக்கா இங்குள்ள பல பெண்கள் குறிப்பா ஐரோப்பிய நாடுகள் என்றதும் பாய்ந்து செல்கிறார்கள் அங்கே வீட்டில் அடைபட்டு இருக்கிறார்கள் அது இரண்டாம் கட்டம் ஆக ஒரு ஆணுக்கு அடங்கிய அடக்கம் உள்ள பெண்ணாக தேடுகிறார்கள்  அங்கே போனதும் சில பெண்கள் மீண்டும் இங்கே வந்த கதைகளும் உண்டு 

நான் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் தொடர விரும்பவில்லை   வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு பலர் பலன் பெறட்டும் 

Quote

அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள்

இத்தனைக்கு அவள் என்னை விட உயரம் குறைவே அக்கா .எது நட்ந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்க இருக்கிறதோ அவை நன்றாக நடக்கும் ஹாஹாஹாtw_blush: 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். நானும் முடிந்தவரை எனது நண்பர்கள்,உறவினர்கள்,தெரிந்தவர்களிடம் பரிந்துரைக்கின்றேன் சகோதரி......!  tw_blush:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.

நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஓகோ என்று எல்லோரும் போற்ற வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு தேவையான பணியை,   தொடங்கிய.. வல்வை  சகாறாவிற்கு பாராட்டுக்கள். :)

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உவகை திருமண சேவை தனித்துவத்துடன் வளர்ச்சியடைந்து பலரை இல்வாழ்வில் இணைக்க வாழ்த்துக்கள்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
பல பெற்றவரின் கவலை களையப்பட்டு
பல பிள்ளைகளின் கனவு மெய்ப்பட்டு
பல மணமக்கள் ஒரு மனப்பட்டு
மனதார உவகையுடன் வாழ்த்த
எம் இனிய வாழ்த்துக்கள்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய எமது புலம்பெயர் சமூகத்திற்கான நற்பணி. சர்ச்சைகள் வரக்கூடிய பணி. 
திடத்துடன் செயல்பட வாழ்த்துக்கள். tw_thumbsup:

 • Like 1
Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா எப்படி கரை சேருவது என்ற ஏக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது ...
குறிப்பு.....பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரம்.... பாஸ்ப்போர்ட் கொப்பி.
எல்லாம் எடுத்து சகாரா அக்காவிட்க்கு அனுப்பி இருக்கு 

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

ஈழத்தில் யார் ஆகியோ ? அவளையே சரிப்படுத்தி தாராதா அக்கா சொல்லி இருக்கிறா.

பொறுத்தார் பூமி ஆழ்வார் ...
முந்துவோன் பிந்துவான் ... பிந்துவோன் முந்துவான்
என்று பைபிள் வேறு சொல்லியிருக்கு 

சேவையை பார்த்ததும் ஒரே சந்தோசம்.
வாழ்த்துக்கள் அக்கா !

"இதுவரை (ஈழ)மண்ணில் பிறந்த பெண்ணில் ... நீதான் நீதான் அழகியடி"
என்ற பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

1 hour ago, Maruthankerny said:

....

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

...

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். நானும் முடிந்தவரை எனது நண்பர்கள்,உறவினர்கள்,தெரிந்தவர்களிடம் பரிந்துரைக்கின்றேன் சகோதரி......!  tw_blush:

நன்றி சுவி அண்ணா. பலருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாலேயே இம்முயற்சி.

21 hours ago, தமிழினி said:

வாழ்த்துக்கள் சகாறாக்கா!!!

நன்றி தமிழினி உங்கள் நண்பர்களுக்கும் உவகையை அறிமுகப்படுத்தி வையுங்கள்

21 hours ago, தமிழரசு said:

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.

நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். 

நன்றி தமிழரசு

19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஓகோ என்று எல்லோரும் போற்ற வேண்டுகிறேன்.

ஆகா ஓகோ என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை ஆத்மார்த்தமாக ஆசீர்வதித்தாலே போதும்.

19 hours ago, தமிழ் சிறி said:

காலத்திற்கு தேவையான பணியை,   தொடங்கிய.. வல்வை  சகாறாவிற்கு பாராட்டுக்கள். :)

அதனை உணர்ந்ததினாலத்தான்  சர்ச்சைகள் நிறைந்தபணி என்று தெரிந்தும் பொருட்படுத்தாமல் குதித்துள்ளேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

உவகை திருமண சேவை தனித்துவத்துடன் வளர்ச்சியடைந்து பலரை இல்வாழ்வில் இணைக்க வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தனித்துவம் பேணும் கிருபன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சகாரா வேறு வேறு நாடுகளில் சப்ஏஜன்ட் தேவை என்றால் கள உறவுகளையே நேர் முக பரீட்சை வைத்து எடுக்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavallur Kanmani said:
பல பெற்றவரின் கவலை களையப்பட்டு
பல பிள்ளைகளின் கனவு மெய்ப்பட்டு
பல மணமக்கள் ஒரு மனப்பட்டு
மனதார உவகையுடன் வாழ்த்த
எம் இனிய வாழ்த்துக்கள்

வழெஃத்துகளுக்கு நன்றி தோழி

16 hours ago, குமாரசாமி said:

இன்றைய எமது புலம்பெயர் சமூகத்திற்கான நற்பணி. சர்ச்சைகள் வரக்கூடிய பணி. 
திடத்துடன் செயல்பட வாழ்த்துக்கள். tw_thumbsup:

சமூகத்தை மனதிற்கொண்டுதான் இதனை கையிலெடுத்தேன் கு.சா அண்ணா

15 hours ago, நிழலி said:

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

நன்றி நிழலி எல்லோரும் இணைந்திருப்போம். நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம் 

10 hours ago, Maruthankerny said:

அப்பாடா எப்படி கரை சேருவது என்ற ஏக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது ...
குறிப்பு.....பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரம்.... பாஸ்ப்போர்ட் கொப்பி.
எல்லாம் எடுத்து சகாரா அக்காவிட்க்கு அனுப்பி இருக்கு 

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

ஈழத்தில் யார் ஆகியோ ? அவளையே சரிப்படுத்தி தாராதா அக்கா சொல்லி இருக்கிறா.

பொறுத்தார் பூமி ஆழ்வார் ...
முந்துவோன் பிந்துவான் ... பிந்துவோன் முந்துவான்
என்று பைபிள் வேறு சொல்லியிருக்கு 

சேவையை பார்த்ததும் ஒரே சந்தோசம்.
வாழ்த்துக்கள் அக்கா !

"இதுவரை (ஈழ)மண்ணில் பிறந்த பெண்ணில் ... நீதான் நீதான் அழகியடி"
என்ற பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 

மருது உங்கள் குறிப்பும் ,பிறப்பு அத்தாட்சிப்பத்திரமும் பாஸ்போர்ட்டும் கிடைத்தது ஆனால் நீங்கள் விண்ணப்பச் சந்தாவை அனுப்பவில்லையே  உவகையின் செயற்குழுமம் விண்ணப்ப நிதி செலுத்தாதவர்களை பரிசீலிக்கமாட்டார்கள்.... :cool:

9 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

நன்றி ராசவன்னியன்

1 hour ago, ஈழப்பிரியன் said:

சகாரா வேறு வேறு நாடுகளில் சப்ஏஜன்ட் தேவை என்றால் கள உறவுகளையே நேர் முக பரீட்சை வைத்து எடுக்கலாம்.

இந்த விடயத்தில் கள உறவுகளும் என்னோடு கை கோர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நான் எல்லோரும் இணைந்தால் எல்லோருக்கும் நன்மைதானே.

15 minutes ago, மியாவ் said:

இதில் பதிவு செய்து கொள்ள எவ்வளவு செலவு பிடிக்கும்...

விண்ணப்பத்தை நிரப்பி உவகையின் மணமக்கள் தேடலில் இணைவதற்கு 50 கனெடிய டொலர்கள் கட்டவேண்டும். அதன் பின்னர்  திருமணம் முழுமையடையும்போது மேலதிக பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக மணமக்கள் வதியும் நாடுகளை பொருத்தே முழுமையான கட்டணம் அறவிடப்படும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமை...  இரண்டு பேர், மூன்று  விதமான பொருத்தங்களுக்கு விசாரித்தவர்கள்...
அவர்களிடம்... உங்கள்,  மின் அஞ்சல் முகவரியை,  கொடுத்து விடுகின்றேன்.

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற கிழமை...  இரண்டு பேர், மூன்று  விதமான பொருத்தங்களுக்கு விசாரித்தவர்கள்...
அவர்களிடம்... உங்கள்,  மின் அஞ்சல் முகவரியை,  கொடுத்து விடுகின்றேன்.

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

நல்லது இலையான் கில்லர்.

தொலைபேசி இலக்கதொடர்பு கொள்வதென்றால் ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் பின்பாக அழைக்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

24/7

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

24/7

ஈழப்பிரியனுக்கு.....  குசும்பு, கூடிப்  போச்சுது. :grin:
24 / 7 நேரமும் தொலைபேசி அடித்தால்.. வல்வை,  சாரத்துடன்....  வாள்  (கொடுவாக் கத்தி) தூக்கிக் கொண்டு  வந்து விடும். :D:

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

24/7

அண்ணா............................................................

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் ரிசாத் பதியுதீன்    41 Views கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார் என சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையில் சிறைச்சாலை கைதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் https://www.ilakku.org/தனிமைப்-படுத்தல்-நிலையத்/
  • தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்    34 Views “இலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் தீர்வொன்றை நிலைபெறச் செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர். அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை நாடாளுமன்றில் கொண்டிருக்கின்றோம் என்ற இறுமாப்புடன் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் காணப்படும் ஒரேயொரு ஏற்பாடான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகரவே மாகாண சபை முறைமைகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருவதோடு, இந்திய எதிர்நிலை வாதத்தினையும் தோற்றம்பெறச் செய்து வருகின்றார். அதேநேரத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார். ஆனால் இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியில் உள்ளவர்கள் எந்தவிதமான பிரதிபலிப்பையும் செய்ததாக இல்லை. அதேநேரம் ஜனநாயக கட்டமைப்புக்களை தகர்த்து ஜனநாயக விழுமியங்களுக்கு மரணஅடி அளிக்கப்போகும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முனைந்து கொண்டு இருக்கின்றது. அதற்கு அடுத்ததாக புதிய அரசியலமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுகின்றன. ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டில் சர்வாதிகாரத்தினை முன்னெடுக்கும் வகையில் தனி நபருக்கான அதிகாரக்குவிப்பை இலக்கு வைத்தே புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்படப் போகின்றது என்பது திண்ணம். இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுயையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அந்த தார்மீக கடமையிலிருந்து இந்தியா தவறும் பட்சத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு மாகாண சபை முறைமையும் நீர்த்துப்போகும் பேராபத்தே உள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தற்போது கூட பிராந்தியத்தின் தலைமைப் பாத்திரத்தினைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது தமிழர்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கு அப்பால் சென்று உரிய தலையீடுகளை செய்ய வேண்டும். கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தியா தமிழர்களின் விடயத்தில் தீவிரத்தன்மையை காட்டியது. இத்தகைய பகடைக்காய்களாக பயன்படுத்தும் நிலைமையை இந்தியா கைவிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. சமகாலத்தில், ஆட்சியாளர்கள் சீனாவுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுவடைந்து செல்கின்றன. அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார மந்தநிலைமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு சீனாவின் பங்களிப்பும் கணிசமாக உள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதை உறுதி செய்துள்ளது. ஆகவே இந்த உறவு நிலை மேலும் வலுப்படும் பட்சத்தில் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதானது, வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு சமாந்தரமாக தென்னிந்தியாவிலும் சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்படும். அவ்விதமான நிலைமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமைவதோடு பிராந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே, இந்திய மத்திய அரசானது, தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மென்போக்கினை விடுத்து நேரடியான தலையீடுகளைச் செய்வதன் மூலமாகவே தமிழர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படுவதோடு இந்தியாவின் பூரண அமைதியும் உறுதி செய்யப்படும்” என்றுள்ளது. https://www.ilakku.org/தமிழர்களை-பகடைக்காய்களா/
  • சரியாக சென்னீர்கள். நன்றி அறிய தந்ததிற்கு இனி ஜாதி என்றே பாவிப்போம். ஆரியர்களால் திணக்கப்பட்ட ஒன்று, இதைவிட்டு வெளிவரனும்
  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • உயிர்பயம் காரணமாக ஜாதியம் உறைநிலையில் (Hibernation) வைக்கப்பட்டதே அன்றி ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை.... ஆனால் இன்று, ஆறு கடந்தாச்சு... பி.கு: தமிழில் சாதி என்று ஒரு சொல் இல்லை. ஜாதி எனும் சமஷ்கிருத சொல்லைப் பயன்படுத்துவதே சரியாக அமையும். அதுவே சொல்லுடன் எங்கிருந்து வந்தது, யாருடைய நன்மைக்காக திணிக்கப்பட்டது போன்றவற்றை "காவி"வரும் பொருத்தமான காரணச்சொல்லாக அமையும்...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.