வல்வை சகாறா

உவகை (மணமக்கள் இணைப்பு)

Recommended Posts

30 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனுக்கு.....  குசும்பு, கூடிப்  போச்சுது. :grin:
24 / 7 நேரமும் தொலைபேசி அடித்தால்.. வல்வை,  சாரத்துடன்....  வாள்  (கொடுவாக் கத்தி) தூக்கிக் கொண்டு  வந்து விடும். :D:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, வல்வை சகாறா said:

விண்ணப்பத்தை நிரப்பி உவகையின் மணமக்கள் தேடலில் இணைவதற்கு 50 கனெடிய டொலர்கள் கட்டவேண்டும். அதன் பின்னர்  திருமணம் முழுமையடையும்போது மேலதிக பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக மணமக்கள் வதியும் நாடுகளை பொருத்தே முழுமையான கட்டணம் அறவிடப்படும்.

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, MEERA said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

கேக்கமுன்னம் உருட்டுக்கட்டைகளை ஒழித்துவைத்துவிடவும்..

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, nochchi said:

கேக்கமுன்னம் உருட்டுக்கட்டைகளை ஒழித்துவைத்துவிடவும்..

நீங்க வேறை

அவ எப்படி தன்ரை குறிப்பை இவரிடம் கேட்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறாவோ தெரியாது?

Share this post

Link to post
Share on other sites
On 2.11.2017 at 5:00 PM, வல்வை சகாறா said:

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

மிகவும் சிக்கலானதொரு துறையாகவேபடுகிறது. பெண்பார்ப்பது என்பது அவளவு இலகுவானதல்ல என்பது எனது மகன்விடயத்தில் அனுபவமாக உள்ளது. நேரிலே உறவுகள் பார்த்து  பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட முற்றாகியபின்னர் மொழிகற்பதற்கான பணத்தை அனுப்பி ஒழுங்கையும் செய்தபின்னர்  தாயார் அங்கிருக்கும் உறவுகளை விட்டு எனது துணைவியாரோடு நேரடியாக உரையாடி உறவுகளைக் குறைசொல்லத் தொடங்கி  இடைநிறுத்தத்திற்கு வந்துவிட்டது. அதன்பின்னர் இந்தியாவில் உள்ள ஒரு முகவரூடாக  தாயகத்திலே  பெண்பார்க்க நாடினோம். அவர் இந்தியாவில் பெண்ணைப்பார்த்தார் எனது துணைவியரோ தனது உறவுகள் பார்க்கவேண்டும்  என்று மறுத்துவிட்டார்.அவருமோ எப்படியாவது அந்தப்பெண் நல்லபெண் எனக்குத்தெரிந்தவர் அது இது என்று கூறியபோதும் குறைந்தபட்சம்  சரியான தகவலையாவது பெறவேண்டுமே என்ற எண்ணத்தில்.............!   இப்படித்தான் ஒரு வாழ்க்கையை அமைத்தலென்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகவுள்ளது.  சொந்தபந்தமென்று  அதிகமிருந்தால்கூட இலகுவாக இருக்கும். ஆனால் இப்பொழுது  பிள்ளைகள்  மச்சாள் மச்சானென்று திருமணம் செய்ய மறுக்கிறார்கள். 

உங்கள்சேவை சிறப்போடு பலருக்கு வாழ்வமைக்க உதவிட வாழ்த்துகிறேன். 

49 minutes ago, ஈழப்பிரியன் said:

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

சரியென்றே நம்புகின்றேன்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

ஈழப்பிரியன் அண்ணா சேவை செய்வது எனக்கு புதிய விடயமல்ல. மற்றும் இங்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கம் இதற்காக மட்டுமே பாவனைக்கு உரியதாகும். ஆகவே எந்நேரமும் தேவை ஏற்படும் இடத்து தொடர்பு கொள்ளலாம். நான் வாகனம் செலுத்தும் நேரமும் ,உறங்கும் நேரமும் தவிர மற்றைய நேரம் பேசக்கூடியதாக இருக்கும்.

அண்ணா பொது விடயங்கள் தொடர்பாக எனக்கு பல அநுபவங்கள் உள்ளன. இவ்விடயத்தில் அவை  கைகொடுக்கின்றன. தெளிவான விதிகளைக் கையாள்கிறேன். கவனமெடுத்து தகுந்த புத்திமதிகளை வழங்குவதோடு விட்டுவிடாமல் தொடர்ந்தும் உவகையோடு அதன் செயற்பாடுகளுக்கும் துணையாக நிற்க வேண்டுகிறேன்.

1 hour ago, MEERA said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

நன்றி மீரா. குறிப்பு கேட்டு ஆத்துக்காரியைக் கொண்டு குறி இழுக்க வைத்துவிடவேண்டாம் நல்ல சமர்த்துத் துணைவனாக இருக்கவும்:cool:

42 minutes ago, nochchi said:

மிகவும் சிக்கலானதொரு துறையாகவேபடுகிறது. பெண்பார்ப்பது என்பது அவளவு இலகுவானதல்ல என்பது எனது மகன்விடயத்தில் அனுபவமாக உள்ளது. நேரிலே உறவுகள் பார்த்து  பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட முற்றாகியபின்னர் மொழிகற்பதற்கான பணத்தை அனுப்பி ஒழுங்கையும் செய்தபின்னர்  தாயார் அங்கிருக்கும் உறவுகளை விட்டு எனது துணைவியாரோடு நேரடியாக உரையாடி உறவுகளைக் குறைசொல்லத் தொடங்கி  இடைநிறுத்தத்திற்கு வந்துவிட்டது. அதன்பின்னர் இந்தியாவில் உள்ள ஒரு முகவரூடாக  தாயகத்திலே  பெண்பார்க்க நாடினோம். அவர் இந்தியாவில் பெண்ணைப்பார்த்தார் எனது துணைவியரோ தனது உறவுகள் பார்க்கவேண்டும்  என்று மறுத்துவிட்டார்.அவருமோ எப்படியாவது அந்தப்பெண் நல்லபெண் எனக்குத்தெரிந்தவர் அது இது என்று கூறியபோதும் குறைந்தபட்சம்  சரியான தகவலையாவது பெறவேண்டுமே என்ற எண்ணத்தில்.............!   இப்படித்தான் ஒரு வாழ்க்கையை அமைத்தலென்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகவுள்ளது.  சொந்தபந்தமென்று  அதிகமிருந்தால்கூட இலகுவாக இருக்கும். ஆனால் இப்பொழுது  பிள்ளைகள்  மச்சாள் மச்சானென்று திருமணம் செய்ய மறுக்கிறார்கள். 

உங்கள்சேவை சிறப்போடு பலருக்கு வாழ்வமைக்க உதவிட வாழ்த்துகிறேன். 

மிகச் சிக்கல் என்பதை அறிவேன் நொச்சி.

முகவர் குறிப்பு பொருந்துகிறதா, குடும்பங்கள் இணையக்கூடியனவா, நிபந்தனைகள் பொருந்துகின்றனவா என்பதை மட்டுந்தான் பார்க்க முடியும்... இவை சரியாக அமைந்தால் மாத்திரமே மேற்கொண்டு இரு பக்கத்தையும் அறிமுகப்படுத்த முடியும்.

நன்றி நொச்சி

Share this post

Link to post
Share on other sites

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, colomban said:

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

கொழும்பான் என்னிடம் பலர் இவ்விடயம்பற்றி கேட்டார்கள் நிச்சயமாக.... இளவயதில் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள், மணவிலக்கு பெற்றவர்களும் உவகையில் இணைக்கப்படுவர். அவர்களுக்குப் பொருத்தமானவர்களோடு இணைப்பதற்கான முயற்சிகளையும் உவகை மேற்கொள்ளும்.

Edited by வல்வை சகாறா
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, colomban said:

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

விட்டது தொட்டது எல்லோருக்கும் தான்.

Share this post

Link to post
Share on other sites

ஜேர்மன் மாப்பிளையளுக்கு ஜேர்மனியிலையே  பொம்புளை எடுக்கும் வசதிகள் ஏதும் இருக்கா?
வயது 35,32
ஊர் தீவுப்பக்கம்
சாதி வெள்ளாளர்
சமயம் சைவம்
தொழில் படித்து பட்டம்  பெற்ற தொழில்
கார் இல்லை
அழகு பரவாயில்லை
சொந்த வீடு இல்லை
சீதனம் தேவையில்லையாம்(அவையளாய் பாத்து குடுத்தால் வாங்குவினம்)
சாதகம்/குறிப்பு கட்டாயம் பாப்பினம்
ஜேர்மன் புறோக்கர்மார் பேச்சுக்காலுக்கு 100ஈரோ எடுப்பினம்...எல்லாம் சரி வந்தால் இரு பகுதியும் தலா 500 ஈரோ குடுக்க வேணும்... நீங்கள் என்ன மாதிரி?:grin:

Share this post

Link to post
Share on other sites

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

22 hours ago, நிழலி said:

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

நானும் அதுவே

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

நேரிலே பார்க்கவிட்டாலும் ...
உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை வந்திருக்கு ?

குளிச்சு முழுகி....
சேவ் எடுத்து தலை இழுத்தா 
அந்த பட்டியலில் ... ஒரு ஓரமா 
என்றாலும் வர மாட்டமா ? 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Maruthankerny said:

நேரிலே பார்க்கவிட்டாலும் ...
உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை வந்திருக்கு ?

குளிச்சு முழுகி....
சேவ் எடுத்து தலை இழுத்தா 
அந்த பட்டியலில் ... ஒரு ஓரமா 
என்றாலும் வர மாட்டமா ? 

நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் தான் - த்ரிஷா பேட்டி!

நடிகைகள் போல் அழகை எதிர்பார்க்கும் தங்களுக்கு நடிகையே கிடைத்தால்...? மேலேயுள்ள இந்த செய்தி கண்ணில் பட்டது..

எதற்கும் சகாராவிடம் போட்டு வையுங்கள், உவகை மூலம் தாங்கள் 'உவகை' பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..! :):grin:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன் மாப்பிளையளுக்கு ஜேர்மனியிலையே  பொம்புளை எடுக்கும் வசதிகள் ஏதும் இருக்கா?
வயது 35,32
ஊர் தீவுப்பக்கம்
சாதி வெள்ளாளர்
சமயம் சைவம்
தொழில் படித்து பட்டம்  பெற்ற தொழில்
கார் இல்லை
அழகு பரவாயில்லை
சொந்த வீடு இல்லை
சீதனம் தேவையில்லையாம்(அவையளாய் பாத்து குடுத்தால் வாங்குவினம்)
சாதகம்/குறிப்பு கட்டாயம் பாப்பினம்
ஜேர்மன் புறோக்கர்மார் பேச்சுக்காலுக்கு 100ஈரோ எடுப்பினம்...எல்லாம் சரி வந்தால் இரு பகுதியும் தலா 500 ஈரோ குடுக்க வேணும்... நீங்கள் என்ன மாதிரி?:grin:

கு. சா அண்ணா ஜேர்மனிலிருந்தும் மணமகன் பார்ப்பவர்கள் என்னிடத்தில் உள்ளனர். அவர்களும் ஜேர்மனியில் வசிப்பதையே விரும்புகின்றனர். உங்கள் இரண்டு மணமகன்களையும் உவகையோடு தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யச் சொல்லுங்கள். இவர்கள் எதிர்பார்ப்பும் அவர்கள் எதிர்பார்ப்பும் ஓரளவுக்கு ஒத்துவரக்கூடியதாக இருந்தால் இணைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

14 hours ago, Athavan CH said:

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

நானும் அதுவே

நன்றி ஆதவன் சே

2 hours ago, சுவைப்பிரியன் said:

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

நன்றி சுவைஞன்

7 minutes ago, அபராஜிதன் said:

7ல் செவ்வாய் ஆரும் இருப்பின் சொல்லவும் :D

அபராஜிதன் 7 இல் செவ்வாய் என்றால் அவர்களுக்கு 7 இல் செவ்வாயுடன், உதயத்து செவ்வாய் மற்றும் 8 இல் செவ்வாய் உள்ளவர்கள் சாதக ரீதியாகப் பொருந்துவார்கள் அப்படிப்பட்ட சாதகங்களும் உள்ளன... தேவையுள்ளளவர்கள் விண்ணப்பிக்கும்போதே ஆவன செய்ய முடியும்.

Share this post

Link to post
Share on other sites
உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, யாயினி said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா?

நன்றி யாயினி

19 hours ago, Paanch said:
உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:

இவ்விடயத்தில் நாம் பொய் எதனையும் சொல்ல முடியாது பாஞ்ச்... மணமக்கள் என்னிடம் விண்ணப்பிக்கும்போது தரும் தகவலை மட்டுமே நான் பரிமாறிக் கொள்ள முடியும். தீர விசாரித்து முடிவு பண்ண வேண்டியது அவர்களே. நான் பொருத்தமானவர்களை அறிமுகப்படுத்தி வைப்பேன். தேவைப்படுமிடத்து திருமணம் நடக்கும்வரை இரு வீட்டாரின் சந்திப்புகளுக்கு உதவி செய்வேன். இதில் என்பக்கம் பொய்கள் உருவாக சாத்தியம் இல்லை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, Paanch said:
உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:

அந்த வாக்கியத்தின் அர்த்தம் என்பது வேறு தானே பாஞ்ச் அண்ண

ஆயிரம் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்று  சொல்வது  என நினைக்கிறன் 

Share this post

Link to post
Share on other sites
On 11/3/2017 at 3:24 PM, ஈழப்பிரியன் said:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

ஈழப்பிரியன் அண்ணா  இப்போதுதான் தொழில்முறை போட்டி எப்படி இருக்கும் என்று உணர்கிறேன். நல்ல காலம் உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து அரச பதிவை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு எடுத்ததனால் என்னை நோக்கி நிகழ்த்தப்பட்ட மறைமுகத் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளேன். குறைந்த கட்டணத்தில் தொடக்கப்பட்ட உவகை மணமக்கள் இணைப்பை தடை செய்யதரகுத் தொழிலில் ஏற்கனவே விருட்சமாக  வியாபித்தவர்கள் உவகையை முளையிலேயே கிள்ளி எறிய பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். உவகை மீதான நம்பிக்கையினாலே குறுகிய காலத்திற்குள் கணிசமான தொகையினர் உவகையை நோக்கி வந்துள்ளனர். அந்த வகையில் உவகையைப்பற்றி யாழ் கருத்துக்கள நண்பர்களும் தாம் அறிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி என்னிடம் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் பலர். முகந்தெரியாமல் இணைய வெளியில் உரையாடும் கண்டங்கள் கடந்து வாழும் நண்பர்களே. உவகை பற்றிக் கூறி மற்றவர்களுக்கு நம்பிக்கையை விதைத்ததில் உங்களுக்கும் மற்றும் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் பங்கு உண்டு. உண்மையிலேயே உங்கள் அனைவருக்குமு; இவ்விடத்தில் நன்றி உரைக்கக் கடமைப்பட்டுள்ளேன் நன்றி உறவுகளே.

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

வல்வை  சகாறா...  புதிய  "புரோஃபில்"   படம் போட்டு இருக்கிறா போல இருக்கு.
இந்திரா காந்தி.... மாதிரி, பக்கத்தில.... நரை,  தலை காட்டுது.
புதிய... சமூக சேவையில்... வந்ததாக இருக்குமோ....... :grin:  :D:

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

வல்வை  சகாறா...  புதிய  "புரோஃபில்"   படம் போட்டு இருக்கிறா போல இருக்கு.
இந்திரா காந்தி.... மாதிரி, பக்கத்தில.... நரை,  தலை காட்டுது.
புதிய... சமூக சேவையில்... வந்ததாக இருக்குமோ....... :grin:  :D:

திருமண இணைப்பாளரென்றால் கொஞ்சம் முதுமை தெரிந்தால்தான் நம்புவினமாம் ச்சா இவ்வளவு காலமும் கட்டிக்காத்த கெட்டப்பை மாத்த வேண்டியதாப்போச்சு இலையான் கில்லர். :cool:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, வல்வை சகாறா said:

திருமண இணைப்பாளரென்றால் கொஞ்சம் முதுமை தெரிந்தால்தான் நம்புவினமாம் ச்சா இவ்வளவு காலமும் கட்டிக்காத்த கெட்டப்பை மாத்த வேண்டியதாப்போச்சு இலையான் கில்லர். :cool:

இப்பதான் புதுசு புதுசா கலர் டை வந்திருக்கு வாங்கி அடிச்சு கலற மாத்த வேண்டியதுதானே tw_blush:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.