Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உவகை (மணமக்கள் இணைப்பு)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு தகவல் பரிமாற்றம்

 

உவகையுடன் தொடர்புகளை மேற்கொள்ள உவகை நிலைகொண்டுள்ள  இடத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் தங்கள் தொடர்புகளை மேற்கொள்ள இலகுவான வழி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்கை இங்கு இணைக்கிறேன். உவகையுடனான தகவல் பரிமாற்றங்கள் இரகசியம் பேணப்படும். இணைய வெளிகளில் தோன்றாது. இந்த லிங் உங்களுக்கும் உதவலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவலாம்  கவனத்தில் கொள்க.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVLzf396sA9Kq9Pak9-9VfL-REq7l17yiVfWsHYJqP7nGMzw/viewform?usp=sf_link 

ஜிமெயில் மூலமாகவே இந்த லிங்கை கையாளலாம். நேரடியாக வினாக்களுக்கான பதில்களை பதிவிடலாம்

Edited by வல்வை சகாறா
Link to post
Share on other sites
 • Replies 68
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

எல்லோருக்கும் வணக்கம் உவகை பற்றி பேச வந்துள்ளேன். "உவகை" மணமக்கள் இணைப்பு இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்

இன்று வெள்ளிக்கிழமை யாழில் உலாவும் இலையான் கில்லர் யாழிற்கு விடுதலை கொடுத்துவிட்டு என்னோடு உரையாடினார். மகிழ்ச்சி. யாழ் நண்பர்கள் சகிதம் லொலிப்பொப் பார்ட்டி வைப்போம். அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்

ஈழப்பிரியன் அண்ணா  இப்போதுதான் தொழில்முறை போட்டி எப்படி இருக்கும் என்று உணர்கிறேன். நல்ல காலம் உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து அரச பதிவை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு எடுத்ததனால் என்னை நோக்கி நிகழ்த்தப்

 • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு, நன்றி... வல்வை சகாறா. :)
நல்ல  பொருத்தமான இடமாக... ஜேர்மனியில், எனது மாகாணத்தில்.... வரன்  வந்தால்...
எனக்காக... ரிசர்வ் பண்ணி வையுங்கள். 

நாம்.. எமது பிள்ளைகளை,  அந்நிய நாட்டவரையோ... 
வேறு  நாட்டுக்கோ அனுப்பி வைக்கும், எண்ணம் எமக்கு இல்லை.
மருமக்கள் எமது அயலில்.. இருக்க வேண்டும் என்பதையே... விரும்புகின்றோம்.

எமது தாய், தந்தையர்... எம்மை, இங்கு  அனுப்பி வைத்து விட்டு,
பிள்ளைகளை.. பிரிந்த துயரை, தாங்கும் சக்தி... எமக்கு  இல்லை.

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறி அண்ணா நாட்டில இருந்து வரன் பார்த்த்து உங்களிற்கு பக்கத்தில் கூப்பிட்டு வைத்திருக்கலாம் தானே

அக்கா மடல் போட்டிருக்கன் பாருங்க 

Edited by அபராஜிதன்
Link to post
Share on other sites
 • 7 months later...
 • கருத்துக்கள உறவுகள்

42505239_10155691859721551_5225543493358

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் தாயகத்தில் இருக்கும் உறவுகளும் இலகுவாக இணைய கீழ்க்காணும் தொடுப்பை அழுத்தி gmail மூலம் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVLzf396sA9Kq9Pak9-9VfL-REq7l17yiVfWsHYJqP7nGMzw/viewform

முக்கியமான விடயத்திற்கு வாறன்...........................

  "உவகை" மணமக்கள் இணைப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் உறவுகள் தொடர்பு சார்ந்து சரியான தகவலையும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சரியான தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல்களையும் பதிவிட தவறவேண்டாம்.

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

Edited by தமிழ் சிறி
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

இன்று வெள்ளிக்கிழமை யாழில் உலாவும் இலையான் கில்லர் யாழிற்கு விடுதலை கொடுத்துவிட்டு என்னோடு உரையாடினார். மகிழ்ச்சி. யாழ் நண்பர்கள் சகிதம் லொலிப்பொப் பார்ட்டி வைப்போம். அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉

உவகை மூலமாக யாழின் கருத்துக்கள நண்பர்கள் மட்டுமல்ல யாழைத் தொடர்ந்து வாசிக்கும் வாசக வட்டத்தினரும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகை தந்துள்ளார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் எல்லோருடைய எழுத்துக்களையும் எமக்கு அப்பால் இன்னொரு உலகம் பார்த்தும், படித்தும் இரசித்தும் வருவதை அவர்கள் வாயிலாக அறிய முடிந்தது. முகம் தெரியாமலே நம்மை நேசிக்கவும் பலர் உள்ளனர். நண்பர்களே எனக்கு மட்டுமில்லை இங்குள்ள கிண்டல் மன்னர்களுக்கு அதிகம்....

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

 "உவகை" மணமக்கள் இணைப்பு... மூலமாக,
வல்வை  சகாறாவிடம், சில நிமிடங்களுக்கு முன்,
நானும், மனைவியும்... தொலை பேசியில்.. உரையாடினோம்.
மிகவும்... பயன் உள்ள, உரையாடலாக,  இருந்தமையையிட்டு... மகிழ்ச்சி  அடைகின்றேன். ❤️

ஆகா பிள்ளைகள் படிப்பு முடிந்த கையோடு ஆக்களை அமுக்கிற பிளான் போல.
நடக்கட்டும் நடக்கட்டும்.

28 minutes ago, வல்வை சகாறா said:

அதுவரை இலையான் கில்லரின் இரகசியத்தை பாதுகாப்பதாக உறுதி எடுக்கிறேன் 😉<span><span>

இன்னும் என்ன ரகசியம்?எல்லாம் தெரிந்தது தானே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms)  இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இன்னும் என்ன ரகசியம்?எல்லாம் தெரிந்தது தானே.

இலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா??????🙄

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vanangaamudi said:

தொடர்பு தொழில்நுட்பம் எங்கேயோ போயிட்டுது நீங்கள் கூகிள் படிவத்தைதான் (Google forms)  இப்போதும் நிரப்பசொல்லி கேட்கிறீங்க. கைத்தொலைபேசியில் பயன்படுத்த அப் (smartphone apps) ஏதாவது தயாரித்தால் நன்கு உதவுமே. அப்படி ஏதும் இருக்கா?

யோவ் வணங்காமுடி இதையே இன்னும் நிரப்பத்தெரியாமல் நம்மாட்கள் அல்லாடுறாங்க ஸ்மார்ட் போனில் 'அப்"  :) சுத்தம்

இந்தமாதிரி யோசனை நல்லாத்தான் இருக்கு ஆனா நடைமுறைக்கு நம்மவர்களிடம் இப்போதைக்கு சாத்தியம் ஆகாது. இப்பவே திருமண  வெப் மூலம் தமக்கான வரன்களைத்தேடிய பலரும் பல சங்கடங்களோடு என்னிடம் பதிவு செய்கின்றனர். இதில் திருமண வெப்புகள் மூலம் குழப்பமானர்வர்கள் உவகை மூலம் குழப்பங்கள் விலக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடக்கின்றன. இணையவெளிப் பரிச்சயம் குறைந்தவர்கள் அதனைப்பயன்படுத்தத் தெரியாமல் தொடர்ந்தும் முயற்சி செய்யமுடியாமலும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு அவசியப்பேச்சை ஏற்படுத்த தகுந்த சூழல் இணைப்பாளர் இல்லாமல் அரைகுறையாக விடுபட்டு செய்வதறியாது நிற்கின்றனர். அநேகமாக பெற்றோர்தான் பிள்ளைகளுக்கான வரன்களைத் தேடுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களும் இணைய வெளியில் சுழியோடுபவர்கள் அல்ல.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2018 at 3:56 AM, வல்வை சகாறா said:

இலையான் கில்லர் முதுமையில் பேச்சுத்துணைக்கு பாட்னர் வேணும் என்று சொன்னதை நான் யாருக்கும் சொல்லேல்லையே.... யாரு சொல்லியிருப்பா??????🙄

எனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ராசி அப்படி.....! 😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

எனக்குத் தெரியும். வாங்கிற பேச்சு காணாது எண்டு இணையம் மூலமாகவும் பேச்சு வாங்க ஆள் தேடுகிறார். அவற்ர ராசி அப்படி.....! 😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

சிலருக்கு அப்படி ஒரு ராசி ஆனா ஒன்று அதிகமான ஆண்கள் இப்படி பேச்சு வாங்குவதே சொர்க்கம் என்று இருக்கிறார்கள்... இவரும் அந்த ரகம்தான் விட்டுவிடுவம்...

ஆமா உங்களுக்கும் பேச்சுத்துணைக்கா??????? வேறு ஒன்றுக்கும் இல்லைத்தானே...கொஞ்சம் சந்தேகமாக்கிடக்கு துருச்சாமி குறுநாவலை நீங்கள்தானே எழுதினீர்கள்....😋 சாமிகளே திருந்தினால் பித்தலாட்டம் குறைந்துவிடும். சரி பரவாயில்லை உங்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமென்றால் ஒரு 60 ஐ தாண்டியவர் ஓகேயா? மணமக்கள் லிஸ்டில் 55 வயதுவரை பதிவில் இருக்கிறார்கள் அதனால் 60 இற்கு குறைந்தவர்கள் பேச்சுத்துணைக்கு சாத்தியப்படமாட்டார்கள்..... அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வல்வை சகாறா said:

சிலருக்கு அப்படி ஒரு ராசி ஆனா ஒன்று அதிகமான ஆண்கள் இப்படி பேச்சு வாங்குவதே சொர்க்கம் என்று இருக்கிறார்கள்... இவரும் அந்த ரகம்தான் விட்டுவிடுவம்...

ஆமா உங்களுக்கும் பேச்சுத்துணைக்கா??????? வேறு ஒன்றுக்கும் இல்லைத்தானே...கொஞ்சம் சந்தேகமாக்கிடக்கு துருச்சாமி குறுநாவலை நீங்கள்தானே எழுதினீர்கள்....😋 சாமிகளே திருந்தினால் பித்தலாட்டம் குறைந்துவிடும். சரி பரவாயில்லை உங்களுக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமென்றால் ஒரு 60 ஐ தாண்டியவர் ஓகேயா? மணமக்கள் லிஸ்டில் 55 வயதுவரை பதிவில் இருக்கிறார்கள் அதனால் 60 இற்கு குறைந்தவர்கள் பேச்சுத்துணைக்கு சாத்தியப்படமாட்டார்கள்..... அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

 

மன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை  என்பதை  நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது.  சராசரி  25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்...... அதுக்கும் குறைவு எண்டால் வேண்டாம். ஜெயிலில  களி தின்ன இப்ப உடம்பு ஒத்துழைக்காது.....!   😁

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மன்னிக்கவும் சகோதரி, நான் பேச்சுத் துணை  என்பதை  நீங்கள் பார்மஸி துணை என புரிந்து கொண்டீர்களோ என விசனப்படுகிறேன். வேளாவேளைக்கு மருந்துகள் எடுத்து குடுத்து ,கை கால் அமுக்கி விட்டு ........அது சரிவராது.  சராசரி  25ல் இருந்து 20 க்குள் பரவாயில்லை என நினைக்கிறன்...... 

ஸ்ஸப்பா... ரொம்பக் கஷ்டம்.. ! (உங்கள் துணைவியருக்கு..:))

இந்த வயதிலும் லொள்ளு..!! exhorbite-1.gif

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வல்வை சகாறா said:

அத்தோடு பேச்சுத்துணைக்கு எதிர்ப்பாலர் தேவையில்லைத்தானே... உங்களுக்கான விண்ணப்பக்கட்டணம் டபிளாக இருக்கும் பரவாயில்லையா?

இதைவிட யாழே பரவாயில்லை.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2018 at 12:51 PM, suvy said:

😁

அது கிடக்கட்டும்,இப்பவும் அந்தமாதிரி பார்ட்னர் இருக்கிறார்களா,சும்மா பேச்சு துணைக்குத்தான்....! 😋

சுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவியர் பேசாமல் ஒரு கிளியை வாங்கி வளவுங்கோவன்.

அது பறந்திட்டுது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வெடுக்குநாறிமலை ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டும்- ஆலய நிர்வாகம் அறிக்கை தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு” என அவ்வாலய நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது. சுமார் 3000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலையானது பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது. 300m உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ்ப்பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும். மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப் பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர். 2018ம் ஆண்டு இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் அதனைத் தமது பிரதேசமாக கைக்கொள்ளும் வகையில், இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தற்போது நீதி மன்றத்தினால் வழக்கு தாக்கல் நிராகரிக்கப்பட்டு ஆலய உற்சவத்தை வழமை போன்று நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க இவ்வாலயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு. அந்தவகையில் வெடுக்குநாறிமலை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 17.09.2020 அன்று ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற 26.09.2020 சனிக்கிழமை அன்று 108 பானைகளில் பொங்கலுடனான இறுதி உற்சவம் நடைபெறவுள்ளது. எனவே எவ்வித மதவேறுபாடுகளுமின்றி தமிழரின் பாரம்பரியத்தை காப்பதற்கு தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்பு என்பது அவசியமாகின்றது. இன்று தமிழரின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். அவற்றை பாதுகாப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு தமிழரின் பாரம்பரியங்கள், அடையாளங்களை தெரியப்படுத்துகின்ற தேவை எமக்கு உண்டு. இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக வெடுக்குநாறிமலை ஆலயம் காணப்படுகின்றது. தமிழர்களின் எல்லையோர கிராமங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதேபோன்று இவ்வாலயமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவிடும் என்ற பயம் எம்மவர் மத்தியில் காணப்படுகின்றது. இந் நிலையில் இவ்வாலயத்திற்கு மக்கள் சென்று வரும் பட்சத்தில் இவ்வாலயம் தொடர்பாக மேலதிக விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் கிடைக்கப்பெறும். எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் இவ்வாலய பொங்கல் நிகழ்விற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அன்பான தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் எமது கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் இப் பொங்கல் நிகழ்விலே கலந்துகொள்ளமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   http://www.ilakku.org/வெடுக்குநாறிமலை-ஆலயத்தை/  
  • நாடாளுமன்றத்தில் திலீபன் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது, ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவு கூறும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனை சுட்டிக்காட்டி, குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும்  கோரிக்கை ஒன்றை இன்று நாடாளுமன்றில் வாசிக்கப்படுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற நிலையியல், கட்டளைச்சட்டம் 27 (2) இன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் உரையாற்ற முடியும். அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர அனுமதி மறுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் உணர்வுகளை புண்படுத்தும் செயலும் உரிமைகளை முற்றாக மீறும் செயலும் என்ற அடிப்படையில் மேற்படி கட்டளையின் பிரகாரம் உரையாற்றுவதற்கு முன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுமதி கோரியிருந்தார். ஆனால் அவர் சமர்ப்பித்திருந்த கோரிக்கையை உண்மைக்குப் புறம்பான காரணம் என்றும் குறித்த விடயமானது நீதி மன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விடயம் எனவும் கூறி அவர் உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது   http://www.ilakku.org/நாடாளுமன்றத்தில்-திலீபன/
  • திலீபன் நினைவேந்தலுக்கான தடை 14 நாட்களுக்குத் தொடரும் யாழ். நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு   தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை அடுத்த 14 நாட்களுக்குத் தொடரும் என சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது  என்று யாழ். நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. http://www.ilakku.org/திலீபன்-நினைவேந்தலுக்கா/
  • 26ம் திகதி உண்ணாவிரதம், 28 ம்திகதி ஹர்த்தால்- தமிழ்கட்சிகள்தீர்மானம்   தியாகதீபம் திலீபனின் நினைவு தினமான 26 ம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்தேஇந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்துஅவசரமாக ஒன்றுகூடிய பத்துதமிழ்கட்சிகள் இது குறித்துதீர்மானித்துள்ளன. 6ம் திகதி திலீபனின் நினைவேந்தல்நிகழ்வை ஆலயங்களில் விசேடபூஜைகள்மூலமும் வீடுகளில்இருந்தவாறும் நினைகூறுமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை எட்டுமணிமுதல் மாலை ஐந்துமணிவரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. எதிர்வரும் 28 ம்திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. http://www.ilakku.org/26ம்-திகதி-உண்ணாவிரதம்-28-ம்த/
  • மாதவிவனேஸ்வரர் அருகினில்    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.