• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

வழி சொல்லுங்க..!

Recommended Posts

வழி சொல்லுங்க..!

image.jpg

 

விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...

அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு...

கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு...

த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது...

சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு...

அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது...

பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...

விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு...

ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்...

எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய,

யாராவது ஒரு ஆள், இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?

முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...

அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்...!

 

முகநூல் இணைப்பை ரசித்தது

 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உண்மை தான் அண்ணா .கொண்டு போய் காட்ட தான் வேணும் . நன்றி
    • பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற . என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது . தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார். இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி? தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு . ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள். சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ? ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை? பதில் சொல்லுங்கள்  கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ . புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது. புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉 இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்? எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி  உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?