Sign in to follow this  
putthan

"மெல்பேர்ன் கப்"கீதை

Recommended Posts

Image result for கீதையில் கண்ணன் imagesஅவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில்  எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை.

 சாப்பாடு, தண்ணி என்று  அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்தய டிக்கட்டிலிருக்கும் குதிரையை கூகில் செய்து பார்த்துவிட்டு அதைப்பற்றி அன்று முழுவதும் சக தொழிலாளியுடன்  பேசிகொண்டிருப்பேன்.அந்த குதிரை கடைசியாகத்தான் வரும் என்று விசயம் தெரிந்தவங்கள் சொன்னாலும் நான் என்ட குதிரை தான் வெல்லும் என்று அடம் பிடிப்பேன்...

இந்த தடவை இரண்டு பியர் அதிகமாக பருகியதால் வந்த கீதை இது


 

எது ஓடினதோ அது நன்றாகவே ஓடினது
எது ஓடுகிறதோ அது நன்றாகவே ஓடும் 
எது ஓட இருக்கிறதோ அதுவும் நன்றாக ஓடும்
உன்னுடைய எதை நீ இழந்தாய் 
நீ அழுவதற்கு 
(பொக்கற்றை தட்டிபார்த்தேன் என்னுடைய ஐந்து டொலர் இழந்திட்டேன்...உடனே)
எதை நீ படைத்திருந்தாய் அதை வீணாக்குவதற்கு
(அதுதானே)
எதை கொடுத்தாயோ அது இங்கயே கொடுக்கப்பட்டது.
(என்ட‌ பெர்சிலிருந்து எடுத்து கொடுத்தனான் கொம்பனி தான் சம்பளம் தந்தவன் அவன்கள் வைத்த பந்தயத்தில் தான் திருப்பி கொடுத்திருக்கிறேன்.)
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையதாகிறது.
(அட கோதாரி எவ்வளவு உண்மை...நான் ஐந்து டொலர் கொடுத்து பந்தயம் போட என்னுடன் வேலை செய்யிற ஒருத்தன் இரண்டு டொலர் போட்டு இருநூறு டொலரகளை பெற்றுக்கொண்டான்)

அன்று கிருஸ்ணர் குதிரை வண்டியிலிருந்து உபதேசித்தை இன்று மெல்பேர்னில் குதிரையிலிருந்து புரியவைக்கிறார்கள்.....:10_wink:


Stephen Baster rides #1 Setsuna to victory

Edited by putthan
  • Like 7
  • Haha 3

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, putthan said:

இந்த தடவை இரண்டு பியர் அதிகமாக பருகியதால் வந்த கீதை இது

நோர்மலாய் எத்தினை பியர் பாவிக்கிறனீங்கள்?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

நோர்மலாய் எத்தினை பியர் பாவிக்கிறனீங்கள்?

அது சிதம்பர ரகசியம்:10_wink:.....ஆனால் எத்தனை போத்தல்  என்பதை விட எவ்வளவு நேரத்தில் எத்தனை என்பதில் தான் விசயம் இருக்கு ...

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு....புத்தன்!

எனக்கு ஒரு முறை...ஐந்நூறு டொலர் கிடைத்தது!

வேலைத்தலத்தில் அவர்களாகவே தேர்வு செய்த குதிரை!

நம்ம கஷ்டம், சனிக்கும் நமக்கும் உள்ள நிரந்தரமான பிரிக்க முடியாத உறவு...என்று எல்லாவற்றையும் ஞான திருஷ்டியால் அறிந்த குதிரை போல உள்ளது!

ஒருவரும் எதிர்பாராத குதிரை....எனக்காகவே மூச்சைப் பிடித்து ஓடியிருக்க வேண்டும்!

அடுத்தது காசை என்ன செய்யிறது எண்ட பிரச்சனை வேறு தலை தூக்கியது!

வீட்டில போய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு....குதிரையில் காசு கட்டி வெண்டனான் எண்டு சொல்லும் தையிரியம் அப்போது இருக்கவில்லை!

இன்னும் வாத்திப் பரம்பரையின்...ஆதிக்கம் குடுபத்துக்குள் உண்டு!

உங்கட சிட்னி முருகனுக்கு ஒரு நூறு டொலர் ...!

மிச்சத்தைச் சொல்ல மாட்டேன்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கணம் கோட்டார் அவர்களே...., இந்த அஸ்வமேத ஸ்லோகத்துக்கு ஒரு பச்சை பரிசளித்து விட்டேன் இன்னும் ஒன்பது அதிலேயே பரிசளிக்க வசதியுண்டா....!  tw_blush:  tw_blush:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மெல்பேர்ன் கப்பை, மெல்பேர்ன் கீப் என்று வாசித்து உள்ள வந்து புதினம் பார்ப்பமென்றால் சப்பென்று போட்டுது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, putthan said:

அன்று கிருஸ்ணர் குதிரை வண்டியிலிருந்து உபதேசித்தை இன்று மெல்பேர்னில் குதிரையிலிருந்து புரியவைக்கிறார்கள்.....:10_wink:

 

நானும் நாலைந்து வருடங்களாக பந்தயம் கட்டினேன் (மிகச் சிறிய தொகை தான்). சில வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தடவை மட்டும் பலன் கிடைத்தது. இந்த முறையும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குதிரைகளையே தேர்ந்தபடியால் ஒன்றும் கிடைக்கவில்லை.
எனது மனைவிக்கு எண்சாத்திரத்தில் நம்பிக்கை அதிகம். ஆனால் பந்தயத்தில் ஆர்வம் இல்லை. ஆனாலும், இந்த தடவை எண்சாத்திரப்படி அவரின் அபிப்பிராயத்தை கேட்டிருக்கலாம்.  வெற்றி பெற்ற இலக்கங்கள் அப்படி!
மனதுக்கு ஆறுதலான கவிதைக்கு நன்றி புத்தன். :11_blush:

Edited by மல்லிகை வாசம்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, putthan said:

ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்தய டிக்கட்டிலிருக்கும் குதிரையை கூகில் செய்து பார்த்துவிட்டு அதைப்பற்றி அன்று முழுவதும் சக தொழிலாளியுடன்  பேசிகொண்டிருப்பேன்.அந்த குதிரை கடைசியாகத்தான் வரும் என்று விசயம் தெரிந்தவங்கள் சொன்னாலும் நான் என்ட குதிரை தான் வெல்லும் என்று அடம் பிடிப்பேன்...

இந்த தடவை இரண்டு பியர் அதிகமாக பருகியதால் வந்த கீதை இது

எது ஓடினதோ அது நன்றாகவே ஓடினது
எது ஓடுகிறதோ அது நன்றாகவே ஓடும் 
எது ஓட இருக்கிறதோ அதுவும் நன்றாக ஓடும்
உன்னுடைய எதை நீ இழந்தாய் 
நீ அழுவதற்கு 

காலையில்... மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தனின்  பதிவிற்கு  நன்றி. :grin:
நீங்கள் செய்வது மாதிரி,  இங்கு வேலை இடத்தில்.... உதை பந்தாட்டத்தை பைத்தியம் மாதிரி தொடர்ந்து கதைத்துக் கொண்டு இருப்பவர்களுடன், கூகிளில் சரியோ, பிழையோ  ஏதாவது ஒன்றை  தேடி...  "கயிறை" கொடுத்து விட்டு, பேசாமல் போய் விடுவேன். அதோடை... ஆளுக்கு மண்டை காய்ந்து விடும்.:)

Edited by தமிழ் சிறி
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this