• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

சென்னையிலிருந்து டெல்லி சென்ற பயணியைத் தாக்கும் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்..!

Recommended Posts

சென்னையிலிருந்து டெல்லி சென்ற பயணியைத் தாக்கும் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்..!

 

 

 

விமானப் பயணி ஒருவரை 'இண்டிகோ' விமான நிறுவன ஊழியர்கள் தாக்குவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

FareHawker_Indigo_Flight_booking_Offers_

 
 


டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கும் 'ராஜீவ் கட்டியால்' என்ற பயணியிடம் விமான நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், 2 ஊழியர்கள் அவரைத் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அந்த சம்பவத்தின்போது உடனிருந்த மற்றொரு ஊழியரான 'மோண்டு கர்லா' என்பவர், அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து, தற்போது வெளியிட்டதாகத் தெரிகிறது. சம்பவத்தின்போது, சக ஊழியர்கள் அந்தப் பயணியைத் தாக்குவதை 'மோண்டு கர்லா' தடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

விகடன்

 

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this