Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இண்டிகோ - அடிங்கோ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இண்டிகோ - அடிங்கோ..!

 

இண்டிகோ விமான ஊழியர்கள், அதில் பயணம் செய்த பயணியை அடித்து வீழ்த்தி கழுத்தை நெரித்த காணொளி இணையத்தில் வைரலாக உலா வரும் இவ்வேளையில், அந்நிறுவனத்தின் வியாபார சின்னத்தை(Logo) மாற்றியமைத்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்..

'இண்டிகோ' என்பது 'அடிங்கோ'வாக மாறியுள்ளது..! :grin:

சின்னத்திலுள்ள விமான படத்தையும் எட்டி உதைக்கும் விதமாக மாற்றியுள்ளனர்.  சின்னத்தின் கீழே அருமையான வாசகத்தையும் பொறித்துள்ளனர்.. "நம்பி வாங்க.. அடி வாங்கிட்டுப் போங்க..!"

 

IndiGo_Logo.jpg

 

1ze8kfq.jpg

 

 

Edited by ராசவன்னியன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டிகோ...  லோகோவை, எல்லோரும் ரசிக்கும் படியாக மாற்றி அமைத்த...  நெட்டிசனின்  சிந்தனைக்கு பாராட்டுக்கள். 
மிகவும் நன்றாக செய்துள்ளார். :)

Link to comment
Share on other sites

நான் இந்தக் காணொளியை பார்த்தவரையில் விளங்கிக்கொண்டது..

காட்சி 1:  ஒரு மேல் நடுத்தர வர்க்க மனிதர் வலுக்கட்டாயமாக விமானத்துக்கான பேருந்தில் ஏற முனைகிறார். அதை ஒரு சாதாரண ஊழியர் தடுக்கிறார். தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியாகிறது. கண்டனங்கள் எழுகின்றன. விமான நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது.

காட்சி 2: ஒரு ஏழை உழவரால் உழவு இயந்திரத்திற்கான கடனை அடைக்க முடியாமல் போகிறது. வங்கி ஒன்று அடியாளை அனுப்புவதுபோல காவல்துறையை அனுப்பி அடித்து இழுத்து வருகிறது. வாழ்க்கை இயல்பு நிலையில் நகர்கிறது.

நீதி என்பது யார் செய்தார்கள் என்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது. என்ன செய்தார் என்பதில் அல்ல. :unsure:

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.