Jump to content

துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods


Recommended Posts

துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods

 
 

சம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே...

ரசம்

 

மிளகு ரசம்

தமிழர்களின் அன்றாடச் சமையலில் நிச்சயம் மிளகுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. மிளகு, செரிமானக் கோளாறுகளைப் போக்க உதவும். ஜலதோஷம், தும்மல், சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும். உடல்வலியைத் தீர்க்கும். உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அல்லது மலச்சிக்கலால் வயிற்றுவலி ஏற்பட்டால் அவற்றை மிளகு குறைக்கும். மிளகில் ரசம் வைத்துச் சாப்பிடுவது எளிது. அதோடு இந்த மழைக்காலத்துக்கு இதம் தரும். சரி... மிளகு ரசத்தை எப்படிச் செய்வது?

தேவையானவை: மிளகு - அரை டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு - 3 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தக்காளி - சிறியது, புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியாவை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளவும். புளியைத் தண்ணீர்விட்டு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பெருங்காயத்தூள், அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்து வதக்கி, கரைத்துவைத்திருக்கும் புளித்தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். ரசம் நுரைத்து வரும்போது கொத்தமல்லித்தழை போட்டு இறக்கினால் மிளகு ரசம் தயார்.

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்

தூதுவளை இருமல், மூக்கில் நீர் வடிதல், சளி, இளைப்பு, ஆஸ்துமா போன்றவற்றைச் சரிசெய்யும். பெருவயிறு, மந்தம் போன்றவற்றைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். இதை துவையல், ரசம், சூப்... எனச் செய்து சாப்பிடலாம். 

தேவையானவை: தூதுவளை இலை - இரண்டு கைப்பிடி, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, புளி -எலுமிச்சை அளவு, துவரம் பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,  தக்காளி - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தூதுவளைக் கீரையைச் சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். ஊறவைத்து நன்றாகக் கரைத்த புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து வாணலியில் ஊற்றிக் கொதிக்கவிடவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். இவற்றுடன் வடிகட்டி வைத்த தூதுவளைச் சாறு, மிளகு, சீரகப் பொடி சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு வேறொரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துக் கொட்டினால் மழைக்காலத்தில் இதமளிக்கும் தூதுவளை ரசம் தயார்.

ஓமவல்லி ரசம்


ஓமவல்லி ரசம்

கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி... இது இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. இதைப் பொதுவாகவே வெறுமனே மென்று, தின்று வெந்நீர் குடிப்பது அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது வழக்கம். இன்னும் சிலர் மாலை நேரங்களில் கடலைமாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால், ஓமவல்லியில் ரசம் செய்து சாப்பிட்டால் மழைக்கால நோய்களுக்கு நிவாரணம் தரும்.

தேவையானவை: ஓமவல்லி இலைகள் - ஒரு கைப்பிடி, புளி - எலுமிச்சை அளவு, பூண்டுப் பற்கள் - மூன்று, தக்காளி - இரண்டு, பச்சை மிளகாய் - இரண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தனியா, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இந்த ரசத்தை வழக்கமான மற்ற ரசம்போலவே செய்யலாம். ஆனால் பச்சை மிளகாயுடன் ஓமவல்லி, பூண்டு சேர்த்து அரைத்து ஊற்றி இறக்கினால் தொண்டைக்கு இதம் தரும் ஓமவல்லி ரசம்.

துளசி ரசம்

துளசி... இது சளி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடலில் உள்ள நச்சுத்தன்மை உள்ளிட்டவற்றை சரிசெய்யும். துளசியை வெறுமனே மென்று சாப்பிடுவது, சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது என இருந்தாலும் இந்த மழைக்கு ரசமாக்கிச் சாப்பிடுவது பலன் தரும்.

தேவையானவை: துளசி இலைகள் - ஒரு கப், மிளகு - இரண்டு டீஸ்பூன், சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். துளசியைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். நன்றாக ஊறவைத்த புளியைக் கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு அரைத்த மிளகு, சீரகம் உள்ளிட்ட கலவையைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியைச் சேர்த்து நுரை வந்ததும் இறக்கவும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்த்தால் கமகமக்கும் துளசி ரசம் தயார்.

கொள்ளு ரசம்

கொள்ளுப் பயறு... ஜலதோஷம், இருமல், உடல்வலி மற்றும் சோர்வை நீக்கும். கொள்ளுத் துவையல் சாப்பிடச் சுவையாக இருக்கும். அதில் ரசம் செய்து அருந்துவது மழைக்காலத்துக்கு ஏற்றது. `நீரேற்றமோடு குளிர் சுரம் போம்' என்று கொள்ளின் பயனை அகத்தியர் பாடல் எடுத்துரைக்கிறது, ஆனால் `கொள்ளு ரசம் குடிச்சா ஜலதோஷமெல்லாம் ஜகா வாங்கிடும்' என்று புதிய பழமொழி ஒன்று சொல்லப்படுகிறது. கொள்ளு ரசம் நெஞ்செரிச்சல், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம் போன்றவற்றுக்கும் நல்ல மருந்து.

தேவையானவை: கொள்ளு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, தனியா - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - எட்டு, பூண்டுப்பல் - மூன்று, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொள்ளுப் பயறை குக்கரில் வைத்து மூன்று கப் தண்ணீர்விட்டு, நான்கு விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு வெந்த கொள்ளுப் பயறுடன் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தேவையானால் வேகவைத்த தண்ணீருடன் அரைத்த பொருள்களைச் சேர்த்து மஞ்சள்தூள் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கொதி வந்த கலவையுடன் சேர்த்தால் கொள்ளு ரசம் தயார். 

 

இதேபோல் பூண்டு, வெற்றிலை, கண்டதிப்பிலி போன்றவற்றிலும் ரசம் செய்து சாப்பிடலாம். இவை மழைக்காலத்துக்கு ஏற்ற இதம் தரும் பானங்கள்!

http://www.vikatan.com/news/health/107106-variety-of-rasam-for-rainy-season.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குளிர்காலங்களில் ஒரு துண்டு பாணுடன் சுடச்சுட ரசம் உறிஞ்சுவது பேரானந்தம்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

மழைக்கால நோய்களைத் தடுக்கும் 6 கஷாயங்கள்! நீங்களே தயாரிக்கலாம்

 

மழைக்கால நோய்

 

தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவகாலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களைச் செய்வார்கள். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருள்களை வைத்தே கஷாயம் செய்து அதன்மூலம் நோய்களை  அண்டாமல் விரட்டிசித்த மருத்துவர் வேலாயுதம் விடுவார்கள். 

அப்படியான சக்தியும் சத்தும் மிகுந்த பாரம்பர்யமான சில கஷாயங்களின் செய்முறைகளையும், பலன்களையும் விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

சுக்கு - மல்லி கஷாயம்

தேவையானவை:

சுக்கு - 10 கிராம்,

மல்லி - 20 கிராம்,

சீரகம் - 5 கிராம்.

செய்முறை:

சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.

பலன்கள்:

மழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.

அறுகம்புல்  கசாயங்கள்

அறுகம்புல் கஷாயம்

தேவையானவை:

அறுகம்புல் - ஒரு கைப்பிடி,

மிளகு - 10

செய்முறை:

அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.  இந்தக் கஷாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.

பலன்கள்:

மழைக்கால பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாகும். 

 

சீரகம் - ஓமக் கஷாயம்

தேவையானவை:

ஓமம் - 20 கிராம்,

சோம்பு - 10 கிராம்,

சீரகம் - 5 கிராம், 

உத்தாமணி (வேலிப்பருத்தி) இலை - சிறிதளவு

செய்முறை:

ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையைப் போட்டு இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம். 

பலன்கள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் தரும். 

கஷாயங்கள்

ஆடாதொடை கஷாயம்

தேவையானவை: 

ஆடாதொடை  இலைகள்- 10,

சுக்கு - 10 கிராம்,

மிளகு - 10 கிராம்,

கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்

செய்முறை:

ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்:

தொண்டைக் கரகரப்பு, மார்புச் சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

வெற்றிலை  கசாயங்கள்

 

கற்பூர வள்ளி - வெற்றிலை கஷாயம்

தேவையானவை:

கற்பூரவள்ளி இலை- 4,  வெற்றிலை - 4 ,  தூதுவளை இலை- 2 , சுக்கு, மிளகு - சிறிதளவு 

செய்முறை:

கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது  கஷாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம். 

பலன்கள்:

தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.

 

கபசுர கஷாயம்

தேவையானவை: 

சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

செய்முறை: 

இந்தப் பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்:

மழைக்காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்தக் கஷாயம் உதவும். 

 

கவனம்:

 

மேற்கண்ட கஷாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30  மி.லியும்,  பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். சளி, காய்ச்சல் கண்டவர்கள் சுயமாக இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்." என்கிறார் அவர்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.