-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 48 கி.மீ நீளமுள்ள ராமர் பாலத்தின் தோற்றம் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. 48 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. ராமர் பாலம் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன இலங்கை அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் ராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ராமர் பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். இந்துக்களின் அடையாளமாகவும், நம்பிக்கை சார்ந்த விடயமாகவும் இருப்பதால் ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் ராமர் பாலம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ராமர் பாலத்தின் மர்மங்கள் குறித்து ஆய்வுசெய்ய இந்திய அரசு ஒப்புதல் | Virakesari.lk -
அரசியல் அறத்தினை மீறாதீர்கள்..!: விக்னேஸ்வரனுக்கு அனந்தி மின்னஞ்சலில் கோரிக்கை (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விடயத்தினை தாங்கள் உள்ளிட்ட ஒருசிலருக்குள் மட்டுப்படுத்தி வைக்க கூடாது என்று குறிப்பிட்டு தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனுக்கு அக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் மின்னஞ்சலொன்றை அனுப்பியுள்ளதாக நம்பரகமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/143843/hfhfhfh.jpg அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இடுவது மறுக்கப்பட்டமையானது, அரசியல் அறத்தினை மீறும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, ஐ.நா விடயத்தில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் சிவாஜலிங்கம், மூத்த அரசியல்வாதி மாவை.சேனாதிராஜா, கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சர்வதேச விசாரணையை மறுதலிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது, அதனை வலியுறுத்தி கையொப்பமிட்டு கூட்டுக்கோரிக்கை விடுத்த சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் ஒதுக்கப்பட்டள்ளமையானது ஏற்புடையதாகாது என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைவிடவும் தனது கணவரை இராணுவத்திடத்தில் ஒப்படைத்தமை. போரின் நேரடிச் சாட்சியமாக இருக்கின்றமை உள்ளிட்ட பத்து காரணங்களை முன்வைத்து கையெப்பம் இடுவதற்கும் அதற்கான கோரிக்கை விடுப்பதற்குமான தகுதியைக் கொண்டிருப்பதாகவும் அவர் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் அறத்தினை மீறாதீர்கள்..!: விக்னேஸ்வரனுக்கு அனந்தி மின்னஞ்சலில் கோரிக்கை | Virakesari.lk
-
By பிழம்பு · பதியப்பட்டது
(ஆர்.ராம்) யாழ்.நயினாதீவு, நெடுந்தீவு, மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதன் ஊடாக தென்னிந்தியாவை சீனா மிகவும் நெருங்கி வந்துள்ளது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/143847/suresh_01.jpg இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வினை கட்டுப்படுத்துவதற்கு தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் உடனடியான கரிசனையைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கமானது கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா நிறுவனத்திற்கு தீவுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக இந்திய நிறுவனங்கள் சிலவும் கேள்விமனுக்களை சமர்ப்பித்திருந்தபோதும் அவை நிராகரிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விதமான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. முழு இலங்கையையும் இந்தியா தனது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ள பகுதியாகவே பார்க்கின்றது. அதிலும் குறிப்பாக, வடகிழக்கு பிரதேசங்களை தனது தென்பகுதிக்கு மிக நெருங்கியவையாக இருப்பதால் அதில் அதிக கவனத்தினையும் கொண்டிருக்கின்றது. மேலும் வடமாகாணத்தின் மன்னார், வடமராட்சி மற்றும் தீவிகப்பகுதிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கேந்திர ஸ்தானங்களாகவே உள்ளன. இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்காதே நிலைமைகளே இதுவரை காலமும் இருந்து வந்தது. கடந்த கால இலங்கை அரசாங்கங்களும் அவ்விதமான தீர்மானங்களையே எடுத்து வந்திருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் திடீரென தீவகப்பகுதிகளில் சீனா கால்பதிப்பதற்கு இடமளித்திருக்கின்றது. இந்த செயற்பாடானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக தீவகத்தில் சீனாவுக்கு இடமளிப்பதன் ஊடாக இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்வதற்கு அல்லது கிழக்கு முனைய விடயம் உள்ளிட்டவற்றில் அழுத்தங்களை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக கையிலெடுக்க இலங்கை அரசாங்கம் விளைகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது. அதேநேரம், வடக்கு மாகாணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான வல்லாதிக்கப்போட்டியை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதனை விடவும், சாவகச்சேரிப்பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றின் பெயரால் சீன பிரஜைகள் வந்து தங்கியுள்ளார்கள். அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் என்ன தேவைக்காக அங்கிருக்கின்றார்கள். எவ்விதமாக செயற்படுகின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதும் இருப்பதாக இல்லை. இலங்கை அரசாங்கத்தின் இவ்விதமான எதேச்சதிகாரச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இயலாதவர்களாகவே தமிழர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தற்போது மாகாண சபைகள் இயங்காத நிலையில் இருக்கின்றன. அவ்வாறு அவை செயற்பட்டாலும் இவ்விதமான விடயங்களை கட்டுப்படுத்தவல்ல காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்காது மத்திய அரசாங்கம் இருந்து வருகின்றது. டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையான கரிசனை கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழர்களுக்காக முழுமையான அதிகாரப்பகிர்விலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் தங்கியுள்ளது என்பதை சீனாவின் வடக்கை நோக்கிய நகர்வு குறித்து நிற்கின்றது என்றார். தென்னிந்தியாவை மிகவும் நெருங்கியது சீனா: கட்டுப்படுத்துவதற்கு அதிகரமில்லாத நிலையில் தமிழர்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் | Virakesari.lk -
மிகவும் சிறப்பாக இருக்கின்றது உங்களது கவிதையும் வசன நடைகளும் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்......! 👍
-
By மல்லிகை வாசம் · Posted
தமிழ்நிலா, உங்கள் மரபுக்கவிதைகள் மனதைக் கவர்கின்றன. இந்தக் காலத்தில் இப்படியான செந்தமிழ் வார்த்தைகளும், ஆழமான அர்த்தமும் ஒருங்கே சேர அமைந்த கவிதைகளைக் காண்பது அரிது. வாழ்த்துக்கள்!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.