• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Athavan CH

ஈழ அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)

Recommended Posts

ஈழத்து... அரசியல்,  கோமாளிகளுக்கும்.... 
தனித் திரியை... ஆரம்பித்த, ஆதவனுக்கு  நன்றி.

நான்.. அவதானித்த வரையில்,  
படத்தில்,  கன வசனம் வராமல்.... வள்ளுவனின் குறள்  போல்....
நச்செண்டு... நாக்கை புடுங்கிறமாதிரி.. பெரிய எழுத்தில்  இருந்தால் நல்லது. :)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

23621990_10214164791209679_3318915580227055323_n.jpg?oh=e23e0734afe9538e5b2b8cc660e7681c&oe=5A9EC0C4

மாவை.... உள்ளூராட்சி தேர்தலுக்கு, வியூகம் வகுக்கின்றார். 

Share this post


Link to post
Share on other sites

இடைக்கால அறிக்கை சமஷ்டியையே வலியுறுத்தியுள்ளது – மாவை சேனாதிராஜா

அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம், உலகம் நன்கறியும்....

கள்ளிறக்கத் தடை வந்ததாலை கொன்பியூஸாகியிருப்பரோ? .......

நரி கூட்டம் எல்லாம் தேர்தலுக்கு ஆயத்தம் ஆகுது.மக்களே.....

 

 

22814377_183745765509130_215338216458265

 

 

22814422_501314146906479_179909475258361

Edited by Athavan CH

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen

2014 இல் தீர்வு வரும் என்றார்
2015இல் தீர்வு வரும் என்றார்
2016 இறுதிக்குள் தீர்வு வரும் என்றார்.
2017 தீபாவளிக்குள் தீர்வு வரும் என்றார்
இப்போது சொல்கிறார் 2019 பொங்கலுக்குள் தீர்வு வரும் என்று.....!...

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்தியா - சீனா எல்லை பதற்றம்: லடாக்கில் படைகள் விலகியதற்கு காரணம் என்ன? அனந்த் ப்ரகாஷ் பிபிசி இந்தி Getty Images கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. பதட்டத்தை குறைக்க இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன. திங்களன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், "சீன மற்றும் இந்திய துருப்புக்கள் ஜூன் 30 அன்று தளபதிகள் அளவிலான 3 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைகளின் கடைசி இரண்டு சுற்றுகளில் உடன்பாடு இருந்த விஷயங்களை அவர்கள் செயல்படுத்துவதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும் எல்லையில் பதற்றத்தை குறைப்பதில் நாங்கள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்." என்று கூறினார் இருப்பினும், இதற்குப் பிறகும், பல கேள்விகள் எழுகின்றன. முதல் முக்கியமான கேள்வி, இந்திய ராணுவம் இந்திய எல்லைக்குள் தான் இருந்தது என்றால், அது பின் வாங்க வேண்டிய காரணம் என்ன? நடந்தது என்ன? கால்வன், கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீன துருப்புக்கள் பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் திங்களன்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர். Getty Images நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருந்த இரு நாட்டு வீரர்களும் இப்பொழுது அப்படி இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது, 'ஐ பால் டு ஐ பால்' என்று சொல்லப்பட்ட நிலை இல்லை. ஆனால் பதற்றத்தை குறைக்கும் பணி இன்னும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள், கால்வன், கோகரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற மூன்று இடங்களில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  பிபிசிக்கு தகவல் கொடுத்த அதிகாரி, டெப்சாங் அல்லது பாங்காங் சோ ஏரி பற்றி எதுவுக் பேசப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். மற்றொரு அதிகாரி, "கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகள் இரண்டும் அகற்றப்பட்டு, வீரர்கள் பின்வாங்குகிறார்கள்" என்று கூறினார். "ஜூன் 30 அன்று இரு தரப்பு தளபதிகள் கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்யப்பட்ட ஒரு செயல்முறையின் ஆரம்பம் இது" என்று அவர் கூறினார். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் திங்களன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரு தரப்பினரும் எல்லையில் பதட்டங்களைக் குறைக்கவும், தங்கள் துருப்புக்களை எல்லையிலிருந்து திரும்பப் பெறவும் ஒப்புக் கொண்டனர்" என்று செய்தி நிறுவனம் ஏ.எஃப்.பி கூறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு மந்திரி வாங் யிக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இதன் பின்னர், இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வைடோங் இந்த உரையாடலின் விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் பேச்சு வார்த்தையில் குறிப்பாக நான்கு விஷயங்கள் குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. - 1. இரு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் செயல்படுத்தப்படும். எல்லைப் பகுதிகளில் அமைதியுடன் அபிவிருத்திக்காக நீண்ட காலமாக ஒன்றிணைந்து பணியாற்ற இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். 2. பரஸ்பர ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் கூட்டாக எல்லையில் பதற்றத்தை குறைக்க முயற்சிக்கும். 3. சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான தொடர்பு மூலம், இரு தரப்பினரும் பரஸ்பர உரையாடலை மேம்படுத்துவார்கள். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு முறைமை மேம்படுத்தப்படும். இது இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தும். 4. சமீபத்தில் நடைபெற்ற தளபதி மட்டக் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட விஷயங்களை இரு தரப்பினரும் வரவேற்றனர். ஜூலை 1 ம் தேதி நடந்த தளபதிகள் அளவிலான கூட்டத்தில், இரு தரப்பினரும் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் இரு தரப்பினரும் எல்.ஏ.சி -யில் படை விலக்க நடவடிக்கைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், அமைதியை நோக்கி நகர்வதற்கான அறிவிப்புகள் மற்றும் நேர்மறையான செய்திகளுக்கு மத்தியில், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வீரர்களும் பின்வாங்குகிறார்களா என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தெளிவான பதில் இல்லை. ஒருவேளை அப்படி நடந்தால், அது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் சீனப் படைகள் பைகோங்க் ஸோ ஏரியிலிருந்தும் தெப்சாங்க் பகுதியிலிருந்தும் இன்னும் படைகளை விலக்கிக் கொள்ளவில்லை கல்வானில் சீனப்படைகள் ஏன் பின்வாங்குகின்றன? முதலில் எழும் கேள்வி, கல்வான் பிராந்தியத்தில் சீன வீரர்கள் ஏன் பின்வாங்குகிறார்கள் என்பதுதான். இந்த கேள்விக்கான பதில் பிரதமர் மோடியின் லே பயணத்தில் தான் மறைந்துள்ளது என்று, சீனா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ள மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பிரேம்ஷங்கர் ஜா கூறுகிறார். Getty Images "சீனாவைப் பற்றி ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் சமிக்ஞ்சைகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோதி லே சென்று நமது துருப்புக்களை ஊக்குவித்தார், ஆனால் அவர் சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதன் பொருள் இந்தியா போரை விரும்பவில்லை என்பது தான் என்று சீனா புரிந்து கொண்டது. ராஜதந்திரத்தில், சிறிய சமிக்ஞைகள் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சீனா இந்த சமிக்ஞையைப் புரிந்து கொண்டது. ஆனால், இது ஒரு பிரச்சனையின் முடிவு அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு ஆரம்பம்." என்று அவர் கூறுகிறார். அதே நேரத்தில், சீன-இந்தியா உறவுகள் குறித்து கவனித்துவரும் ஜே.என்.யூ பேராசிரியர் ஸ்வர்ன் சிங், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பதைக் காட்டுகிறார்கள் என்று கூறலாம், இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கருத்து தெரிவிக்கிறார்.  மேலும் ஸ்வர்ன் சிங் கூறுகிறார், "இரு நாடுகளின் பிரதிநிதிகள் மூலமாக லடாக் எல்லையில் உள்ள படைப்பிரிவு தளபதி மற்றும் கார்ப்ஸ் தளபதி வரை பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. உரையாடலில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று இரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் இந்த முழு உரையாடலின் போதும் இராணுவ மற்றும் இராணுவ உபகரணங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே அரசாங்கம் அறிக்கை வெளியிடும் வரை நிலைமை குழப்பமாகவும் பதட்டமாகவும் தான் இருக்கும். இப்போது, நிலைமை என்னவென்றால், டாக்டர்கள் சொல்வது போல் ஸ்டேபிள் பட் க்ரிடிக்கல். நிலைமை சீராக உள்ளது. ஆனால் ஆபத்து நிறைந்தது." பைகோங்க் ஸோ மற்றும் தெப்சாங்க் -ல் இருந்து சீனப் படைகள் இன்னும் ஏன் விலகவில்லை? கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன துருப்புக்களுக்கு இடையிலான தூரம் அதிகரிக்கும் செய்தி வந்தபிறகு, சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிலும் ஒரு நேர்மறையான எண்ணம் நிலவுகிறது. ஆனால் சீன வீரர்கள் இன்னும் தெப்சாங் மற்றும் பைகோங் பகுதியில் இருந்து பின்வாங்கவில்லை என்பதால் இது பிரச்சினையின் முடிவாக கருதப்படக்கூடாது என்று பிரேம் சங்கர் ஜா எச்சரிக்கிறார். "தெப்சாங்கில் அவர்கள் இருப்பது அவர்கள் கரகோரம் பகுதியில் கவனம் செலுத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது. சீனா இதுவரை உரிமை கோரி வந்துள்ள பைகோங்க் ஏரி பகுதியில் தனது நிலையை பலப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் ஒரு புதிய புரிதல் உருவாகும் வரை அந்தப் பகுதியிலிருந்து அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள்." என்று அவர் கூறுகிறார். 'இந்தியா மற்றும் சீனா' என்ற நூலின் ஆசிரியர் பிரேம் சங்கர் ஜா கூறுகையில், "சீன ராணுவம் தாங்கள் உரிமை கோரிய பைகோங்க் ஏரி பகுதியில் ஃபிங்கர் 4 ஐ கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில், இந்தியா தனது ஃபிங்கர் 8 வரை உரிமை கோருகிறது. இதுவரை சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருந்த நான்கு மலைத்தொடர்களில் சீனா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், சீனர்கள் இந்திய எல்லைக்குள் வரவில்லை என்று மோதி சரியாகக் கூறியிருந்தார், ஏனெனில் அவர்கள் வந்தது சர்ச்சைக்குரிய ஒரு இடம் தான். " என்று கூறினார். மூன்று மாதங்களில் கள நிலவரத்தில் என்ன மாற்றம் வந்தது? புவியியல் ரீதியாகப் பார்த்தால், தெப்சாங் சமவெளி மற்றும் பைங்கோங்க் ஏரி பகுதியில் சீனத் துருப்புக்களின் இருப்பு முன்பை விட வலுவாகிவிட்டது, ஆனால் இதை நில விரிவாக்கம் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது என்று பிரேம் சங்கர் ஜா கூறுகிறார். Getty Images அவர் கூறுகிறார், "இரு நாடுகளுக்கும் நில பற்றாக்குறை இல்லை. இந்த நிலையில், யார் எவ்வளவு தூரம் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்ற கோணத்தில் இதைப் பார்க்கக்கூடாது. மூலோபாய நடவடிக்கையாகத் தான் இதைப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு 2014 க்கு முன்னர் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சீனாவை இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியிருக்கிறது." தனது கருத்தை விளக்கி, பிரேம் சங்கர் ஜா கூறுகையில், "அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்கி, லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றி, அக்சாய் சின்னை உள்ளடக்கிய ஒரு ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, இந்த முடிவுகளின் மூலம் இந்திய அரசு சீனாவைச் சீண்டியது. இதனால், சீனா தனது சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (சிபெக்) பாதுகாப்பு குறித்து சந்தேகம் அடைந்துள்ளது, ஏனெனில் இவ்வளவு முதலீடு செய்து இந்தத் திட்டத்தை சீனா செயல்படுத்துவது, ஒரு வேளை மேற்கு நாடுகள் கடல் வர்த்தக பாதையில் அதன் வர்த்தக பொருட்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால், இந்த பாதை வழியாக தனது சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான்." என்கிறார். "ஆனால் இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகளால், சீனாவின் இந்த லட்சிய திட்டத்தின் எதிர்காலம் நெருக்கடியில் காணப்பட்டது. அதனால்தான் முதலில் சீனா பேச்சு வார்த்தை மூலமாக சமிக்ஞை அனுப்பியது. இப்போது ராணுவ ரீதியில் சமிக்ஞை அனுப்புகிறது ". இந்தியா பின் வாங்கக் காரணம் என்ன? இந்திய ராணுவம் பின்வாங்கியிருந்தால், சர்வதேச அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்களில் அறிவும் உள்ள புஷ்ப் அதிகாரி நம்புகிறார். மேலும் அதிகாரி கூறுகிறார், "கல்வான் குறித்து ஊடக அறிக்கைகளில் வருவது முற்றிலும் உண்மை என்று நான் முதலில் நம்பவில்லை. அப்படியே அது உண்மை என்று கொண்டாலும் என்னைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம். இதற்கு ஒரு காரணம், இந்தியா அதன் மூலோபாய திறன் எவ்வளவு என்பதை புரிந்து கொள்ள விரும்புகிறது, இதன் காரணமாக இந்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது." அவர் மேலும் கூறுகிறார், "இந்த நேரத்தில் துணைக் கண்டத்தில் முடக்கமான சூழல் உருவாகி வருகிறது. இது யாருக்கும் பயனளிக்காது. மேலும் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள், வளரும் வல்லரசுகள் தங்களுக்குள் மோதிக்கொள்வது கூடாது என்பதும் இரு நாடுகளுக்கும் தெரியும்." "தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, இந்தியா-சீனா உறவுகள் விஷயத்தில் ஒரு முற்றுப்பெறாத நிலையே காணப்படுகிறது. வருங்காலத்தில் அது பல மாற்றங்களைக் காணலாம்."   https://www.bbc.com/tamil/india-53341071
  • சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂 உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.
  • மனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்? - ஒரு டைம் ட்ராவல் டுன்கன் க்ரே பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மேகசின் Getty Images இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது. மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த பூமியிலிருந்த 99 சதவீத உயிரினங்கள் பேரழிவுகளில் அழிந்துவிட்டன. இந்த பூமியில் பெரும் விலங்காகக் கருதப்பட்ட டைனோசர் இப்போது இல்லை. எல்லா பேரழிவுகளிலிருந்தும் இதுவரை தப்பிவந்த மனிதக்குலத்தின் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாக இல்லை. ஆம், காலப்போக்கில் மனித இனமும் இல்லாமல் போகலாம்.  மனிதகுலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது மனிதகுலம் அழியும் என்பதில் வல்லுநர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. ஆனால், பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள். அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். மக்கள் தொகை பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும் என்பது அவர் வாதம். Getty Images புவி அழியாது. மனித இனம் அழியும் மனித இனம் இல்லாமலே இந்த புவி ஜீவிக்கும். நம் இருப்பின் சாட்சியாக நாம் இந்த புவியில் விட்டுச் சென்ற தடயங்கள் அனைத்தும், நாம் கணிக்கும் காலத்திற்கு முன்பே இல்லாமல் போகும். நம் நகரங்கள் அழியும், பாலங்கள் சரியும்.  இறுதியில் இயற்கையானது நாம் உருவாக்கிய அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும் என மனிதர்கள் அற்ற உலகம் என்ற புத்தகத்தில் அலன் வைஸ்மேன் குறிப்பிடுகிறார். 2007ஆம் ஆண்டு வெளியான இந்த புத்தகம், மனிதர்களற்ற இந்த புவி எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது. Getty Images நெகிழி துகள்கள், கதிரியக்கம் மற்றும் பிராய்லர் கோழியின் எலும்புகள் இவைதான் மனித இனம் விட்டு செல்லப் போகும் புதைபடிவ தடயங்கள். கோழியின் எலும்பு இந்த பட்டியலில் எப்படி வந்தது என பார்க்கிறீர்களா? ஆண்டுக்கு குறைந்தது 60 பில்லியன் கோழிகளை இந்த புவியில் கொல்லப்படுகின்றன. அப்போது நிச்சயம் அதன் தடயங்கள் இருக்கத்தானே செய்யும்.  நாம் இந்த புவியில் சில இடங்களுக்குச் செல்லாமல் இருக்கிறோம் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறோம். அங்கெல்லாம் என்ன இருக்கிறது என பார்ப்போம். இயற்கை திரும்ப எடுத்துக் கொள்ளும் செர்னோபில் அணு உலை விபத்து உங்களுக்கு நினைவிருக்கும். உக்ரைனில் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அந்த அணு உலையைச் சுற்றி உள்ள 30 கி.மீ பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது.  மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ள அந்த பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குச் செடி கொடிகளும், விலங்குகளும் பெருகி வருகின்றன. Getty Images இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மன்ற நிதி உதவியில், 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, அந்த அணு உலை இருந்த பகுதியில் இப்போது ஏராளமான வனவிலங்குகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியது. அதாவது அணு கதிர் வீச்சைவிட உள்ளூர் தாவரம் மற்றும் விலங்கினத்துக்கு மனித இனமே மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது என விவரித்தது. இயற்கை ஒரு நிலப்பரப்பை மீட்பதற்கு முக்கிய காரணியாக அந்த பகுதியின் தட்பவெப்பமும் இருக்கிறது.  உதாரணத்துக்கு மத்திய கிழக்கில் உள்ள பாலைவனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் காண முடிகிறது. ஆனால், வெப்ப மண்டல காடுகள் உள்ள பகுதியில் நூற்றாண்டுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் கூட காண முடியாது. ஐரோப்பியர்கள் 1542ஆம் ஆண்டு பிரேசில் மழைக் காடுகளைப் பார்த்த போது, அங்கு ஓடிய நதிக்கரையில் நகரங்களை அமைத்தனர். ஆனால், ஒரு நோயால் அந்த மக்கள் தொகை முற்றும் முழுவதுமாக அழிந்த போது, அந்த நகரங்களை மீண்டு காடுகள் எடுத்துக் கொண்டன. அதாவது அந்த நகரங்கள் காடாக மாறியது. யார் துயரடைவார்? மனித இனம் அழியும் போது, மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த விலங்கினமும், செடி கொடிகளும்தான் அதிக துயர் அடையும். உரத்தையும், பூச்சி கொல்லிகளையும் அதிகம் சார்ந்து இருந்த பயிர் வகைகளின் இடத்தை அந்த பயிர் வகைகளின் காட்டுச் செடி வகைகள் பிடிக்கும். கேரட் வகை அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும், அது போல சோளமும்தான் என்கிறார் அலன் வைஸ்மேன்.  Getty Images உதாரணத்துக்குத் தமிழ்நாட்டுப் பின்னணியில் சொல்ல வேண்டுமானால்,இப்போது நம் தேவைக்காக மாற்றியமைக்கப்பட்ட பல் நெல் வகைகள், அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும். பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்ட உடன், பூச்சிகள் பல்கி பெருகும்.  பூச்சிகளைக் கட்டுப்படுத்த மனிதன் அனைத்து வகைகளிலும் முயலும் போதே, அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவை பெரியளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டால் என் நேரும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பூச்சிகள் பெருக பெருக அதனை உண்டு வாழும் பிற உயிரினங்களும் பெருகும். அதாவது பறவைகள், கொறித்துண்ணிகள்ம் ஊர்வன என அனைத்தும் பல்கிப் பெருகும். உணவு சங்கிலியில் உள்ள அனைத்து கண்ணிகளும் பெருகும். ஆனால், எவை உச்சம் தொட்டாலும், அவை கீழே இறங்கியே ஆக வேண்டும். இப்படி பல்கிப் பெருகிய உயிரினங்கள் அதிக காலம் இருக்காது.அந்த உணவு சங்கிலியில் மனித இனம் இல்லாத காரணத்தினால், அது ஏற்படுத்தும் தாக்கமும் அழுத்தமானதாக இருக்கும். ஆம். மனித இனத்தின் அழிவு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு, ஒரு புதிய இயல்பு உருவாகும் வரை, உணவு சங்கிலியில் தாக்கம் செலுத்தும்.  மனித இனம் அழிந்த பின்னரும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட சில விலங்குகள் உயிர்பிழைத்து வாழ அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் வைஸ்மேன். ஆடு, மாடுகள் மெல்ல இல்லாமல் போகலாம். ஆனால், பூனை தப்பிப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார். நாயைவிடப் பூனை அனைத்து சூழலுக்கும் ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கிறது என்கிறார். பல்கி பெருகும் வன விலங்குகளால் ஆடு, மாடுகள் கொல்லப்படலாம் என்கிறார் வைஸ்மேன். மனித இனம் அழிந்த பிறகு புத்திசாலித்தனம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது? பதில் கூறுவதற்குக் கடினமான கேள்விதான். புத்திசாலித்தனம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. சூழலியல் சார்ந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது, அதன் காரணமாகப் புத்திசாலித்தனம் பரிணமித்தது என்பது ஒரு கோட்பாடு. மனிதன் குழுக்களாக வாழப் புத்திசாலித்தனம் உதவியது என்பது அடுத்த கோட்பாடு. இறுதியாக, ஆரோக்கியமான ஜீன்தானா என்பதை அளவிடும் கருவியாகப் புத்திசாலித்தனத்தைக் கருதலாம். மனித அழிவுக்கு பிறகும் இந்த மூன்று விஷயங்களும் மீண்டும் நிகழலாம். மனித இனத்திற்கு அடுத்தபடியாக, மூளை அளவு அதிகம் கொண்டது பாபூன் குரங்கு வகை. “காடுகளில் வாழும் இனம் அது. ஆனால், காடுகளைக் கடந்தும் அவை வாழப் பழகி இருக்கிறது. நாம் செய்ததை பாபூன் செய்யக்கூடும். ஆனால், அவை நம்மை போல செயல்படாது என்றே தோன்றுகிறது. அது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறது,” என குறிப்பிடுகிறார் வைஸ்மேன். மனித இனம் அழிந்த பிறது தனது செளகர்யமான எல்லையை விட்டு பாபூன் அல்லது பிற உயிரினங்கள் வெளியே வரக்கூடும். இந்த புவியின் எதிர்காலம் நாளையே அழிந்தால் கூட, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இந்த புவி எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு திரும்ப பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம். Getty Images முன்னமே கரியமில வெளியேற்ற விஷயத்தில் ஆபத்து கட்டத்தைக் கடந்துவிட்டோம். அதுமட்டுமல்லாமல், அணு உலை சார்ந்து நமக்கு வேறொரு பிரச்சனை இருக்கிறது. கதிர்வீச்சு வெளியேற்றத்திலிருந்து இந்த சூழல் மீளும் என்பதை செர்னோபில் உணர்த்துகிறது. ஆனால், இந்த உலகம் முழுவதிலும் உள்ள 450க்கும் அதிகமான அணு உலைகள் மனிதன் அழிந்த பிறகு இயக்க ஆள் இல்லாமல் வெடித்தால் என்ன ஆகும்? அவை எவ்வளவு கதிர்வீச்சை வெளியேற்றும். அவை பூமியில் என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்தும்? இவை மட்டுமல்ல, எண்ணெய் கசிவு, ரசாயன கசிவு, வெடி விபத்து என மனிதர்கள் விட்டுச் செல்லப் போகும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இதில் பல சூழலியல் கேடுகள் பல நூற்றாண்டுகளுக்குக் கொழுந்துவிட்டு எரியலாம். பென்சில்வேனியா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து பல பத்தாண்டுகளுக்குப் பற்றி எரிந்ததை நினைவில் கொள்ள வேண்டும். மனித இனத்தின் தடயம் மனித இனம் விட்டு செல்ல போகும் தடயம் அழியப் பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் விட்டு செல்லும் நெகிழிக் கழிவுகளை உண்ணும் அளவுக்கு மைக்ரோப்ஸ்கள் பரிணமிக்கப் பல காலம் ஆகும்.  நாம் அழிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கான்கிரீட் கழிவுகளின் எச்சங்கள் இருக்கும். ஆனால், நிச்சயம் ஒரு கட்டத்தில் அவை முழுமையாக அழியும். நாம் நம் சில செயல்பாடுகளை மின்காந்த அலைகளாக மாற்றி இந்த வளிமண்டலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுப்பி வருகிறோம். அவை பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும். அந்த மின்காந்த அலைகளின் தாக்கம் தான் இறுதியாக அழியும்.   https://www.bbc.com/tamil/science-53326369      
  • இலங்கையின் இறையாண்மைக்கு ஐ.நா சபை மதிப்பளிக்கவேண்டும் - அரசாங்கம் அறிக்கை.!   "இலங்கையின் மீது நிரூபிக்கப்படாத மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அமைதிகாக்கும் படையின் அதன் பங்களிப்புக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதனினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறுப்புடைய மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை விளங்குவதுடன், அதன் உறுப்புரிமை நாடுகளுடனான தொடர்புகளின்போது அவற்றின் இறையாண்மைக்கு முழுவதுமாக மதிப்பளித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டிருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்." - இவ்வாறு இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஜேர்மனியினால் 'அமைதி நடவடிக்கைகளும் மனித உரிமைகளும்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்த விவாதத்துக்கென இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் அனுப்பிவைக்கப்பட்ட நீண்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாடுகளுக்குள்ளே காணப்படும் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றினால் மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதும் அரசு சார்பற்ற கட்டமைப்புக்களால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இயற்கை அனர்த்தங்கள், சுகாதார நெருக்கடிகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதுமான தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக இத்தகையதொரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருக்கும் ஜேர்மனியின் முயற்சியை வரவேற்கின்றோம். அத்தோடு பல தசாப்தங்களாக பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியிலும் அமைதியை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்காகக்கொண்டு செயற்பட்ட ஆயிரக்கணக்கான ஆண், பெண் உத்தியோகத்தர்களுக்கு எமது கௌரவத்தையும் வெளிப்படுத்துகின்றோம். அதேவேளை ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இலங்கையும் தொடர்ச்சியாக அதன் பங்களிப்பை வழங்கிவருவதையிட்டுப் பெருமையடைகின்றோம். ஐ.நா அமைதிப்படையின் நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது மிகமுக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அமைதி காத்தல் என்பவற்றில் இலங்கை முழு உறுதியுடன் இருப்பதுடன், இலங்கையின் சார்பில் அமைதிகாக்கும் படையில் பணிபுரியும் வீரர்களுக்கு இவ்விடயங்களில் முழுமையான கோட்பாட்டு அறிவும் செயன்முறைப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கையில் பொலிஸாருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்குமான பயிற்சி வழங்கலில் மனித உரிமைகளும் ஓரங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தால் மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன தொடர்பில் இராணுவம், பொலிஸாருக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல், குறிப்பாக மோதல் நெருக்கடிகள் காணப்படும் பகுதிகளில் மனித உரிமைகள் மீது வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலையிலுள்ள சமூகங்களைக் கொண்ட நாடுகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் மீது நிரூபிக்கப்படாத மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அமைதிகாக்கும் படையின் அதன் பங்களிப்புக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதனினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறுப்புடைய மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை விளங்குவதுடன், அதன் உறுப்புரிமை நாடுகளுடனான தொடர்புகளின் போது அவற்றின் இறையாண்மைக்கு முழுவதுமாக மதிப்பளித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டிருக்கின்றது என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்" - என்றுள்ளது. http://aruvi.com/article/tam/2020/07/09/14254/ 
  • மின் வணிகத்தின் அடிப்படைகள் அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூலை 06  கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது.   குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது.   இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள்.   ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிடைக்கக் கூடியதாகி விட்டன. இந்தச் சூழ்நிலையும் மின் வணிகத்துக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.   வாடிக்கையாளர்களின் நேரமின்மை என்கிற ஒரு கருவை மூலதனமாகக் கொண்டு இயங்கும் இவ்வகை மின் வணிகங்கள், தனித்து மனிதர்களின் தேவைகளுக்கான பொருள்களை மாத்திரம் வழங்குவதில்லை. அவர்களது தேவைகளையும் விருப்பங்களையும் உருவாக்கக்கூடிய பொருள்கள், சேவைகளையும் வழங்குவதிலும் வெற்றி காண்பவையாக இருக்கின்றன.    இதனால்தான், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் மிகப்பெருமளவிலான புதிய வாடிக்கையாளர்களை, மின்வணிகத்தால் தன் பக்கம் ஈர்க்க முடிந்திருக்கிறது    இன்றைய நிலையில், இலத்திரனியல் வணிகச் சந்தையானது தன்னகத்தே எவ்விதமான தடைகளையும் கொண்டிராத முற்றிலும் ஒரு திறந்த சந்தையாகவே (Open Market) இருக்கிறது. இந்தச் சந்தையில் வாடிக்கையாளர்களைத் தம்வசபடுத்திக்கொள்ளும் சந்தைப்படுத்தல் திறன் கொண்ட எவருமே இங்கு ராஜாதான்.    இவ்வாறு தொழிற்படும் மின் வணிகத்தில், ஒரு தனிநபராகவும் நிறுவனமாகவும் வெற்றிக்கொள்வதற்கு, அடிப்படையாக உள்ள விதிகள் தொடர்பிலும் அறிந்திருக்க வேண்டியது அவசியமல்லவா?    கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்குபவர்கள் அல்ல   மின் வணிகத்தைப் பொறுத்தவரையில், கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. சந்தை வாய்ப்பைக் கொண்டிராத பொருள்களையும் சந்தை வாய்ப்பைக் கொண்ட பொருள்களை மிக எளிமையாகக் கொள்வனவாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையையே, மின் வணிகச் சந்தை செய்கிறது.   பாரம்பரிய வணிக முறையில், கொள்வனவாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விநியோகச் சங்கிலியாகும் (supply chain). அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருள்களை, வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் வரையில், உற்பத்திப் பொருள்கள் மீது சேர்க்கப்படும் மேலதிக செலவுகள், உற்பத்தி பொருள்களினதும் சேவைகளினதும் விலைகளை அதிகபடுத்துவதாகும்.    ஆனால், இணையச் சந்தையில் உற்பத்தியாளர் கூட, விற்பனையாளராக இருக்கலாம். வாடிக்கையாளரை நேரடியாகச் சந்தித்துக் கொள்ளக்கூடிய மின்சந்தையில், உற்பத்தியாளரே விற்பனையாளராக இருக்கலாம். இதன் விளைவாக, செலவினங்கள் குறைக்கப்பட்டு, சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதுவே, கொள்வனவாளர்களையும் உருவாக்கும்.    எனவே, மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக, முதலீட்டுக்கு வருமான மதிப்பீட்டைக் கொண்ட எந்தவொரு பொருள்களுக்கும் சேவைகளுக்கும் கூட, வணிக வாய்ப்பை உருவாக்குபவையாக அமையும்.   மின் வணிகத்தின் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளுதல்   மின் வணிகம் என்பது, உங்களது இணையத் தளத்துக்கான பார்வையாளர்களை அதிகபடுத்துவதோ, அது சார்ந்த விளம்பரங்கள் மூலம் இணையத்தின் பார்வையிடலை (Webssite Traffic) அதிகப்படுத்தி, அதன் நிலையை உயர்த்துவதோ அல்ல.    மாறாக, உங்கள் இணையத் தளத்தில் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரத்துக்கேற்ப, அவர்கள் வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட வைப்பதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை மீளவும் இணையத்தளத்துக்கு வருகைதர வைத்தலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதுமே ஆகும்.   பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாரம்பரிய வணிகமுறையிலும் பார்க்க, இணைய வர்த்தகத்தில் உள்ள நன்மையே, நீங்கள் விளம்பரம் என்கிற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்குமான பெறுபேற்றை அறிந்துக்கொள்ள முடிவதாகும்.    எனவே, மின் வணிகத்தில் பார்வையாளர் அதிகரிப்புக்கு நீங்கள் செலவு செய்வதைப் பார்க்கிலும், வாடிக்கையாளர்களை எப்படி உருவாக்கிகொள்ள முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும். இதுவே, கட்டற்ற திறந்த சந்தையில், இலாபகரமான வணிக முயற்சியாளராக உங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.   வாடிக்கையாளர் உறவே முக்கியமானது   எத்தகைய வணிகமுறையாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களுடன் மிகச்சிறந்த உறவைப் பராமரித்தல் என்பது முக்கியமானது. ஆனால், மின் வணிகத்தில் இது மேலும் ஒருபடி முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மின் வணிகத்தில் பெரும்பாலும் விற்பனையாளர்களும் கொள்வனவாளர்களும் சந்தித்துக்கொள்ளுவதே இல்லை. எனவே, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே இடம்பெறும் வர்த்தகத்தில், ஒருவரின் உணர்வுகளையும் கருத்துகளையும் புரிந்துக்கொண்டு, வர்த்தக உறவைப் பலப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்ல.    பெரும்பாலான மின் வணிகங்கள் அடிவாங்கும் இடமாகவும் இதுதான் இருக்கிறது. காரணம், சேவைக்கு முந்தியதும் சேவைக்குப் பிந்திய வாடிக்கையாளர் உறவைப் பலப்படுத்தத் தவறுவதன் விளைவாகவே, பெரும்பாலான மின் வணிகங்கள் போட்டித்தன்மைமிக்க சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.    சந்தையில் எவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்தாலும், வாடிக்கையாளர் உறவு என்பதை மிக உயர்ந்தளவில் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், அதுவே உங்களது வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் காரணியாக மாறிவிடும்.   வெளிநாடுகளில் இணைய வர்த்தகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர் உறவைத் திறமையாகக் கையாள மட்டும் ஆண்டொன்றுக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இணைய நிறுவனங்கள் செலவு செய்வதாக Forbes இணையத்தளம் குறிப்பிடுகிறது. இது ஒன்றே, வாடிக்கையாளர் உறவு இந்நவீனமயப்படுத்தப்பட்ட வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது.   இணைய இடைத்தரகர்கள் தொடர்பில் அவதானமாக இருத்தல்   இணையப்பரப்பில் வர்த்தகத்தின் வெற்றியே, இடைத்தரகர்கள் (Cybermediary) அல்லது விநியோக சங்கிலியின் பயன்பாடு குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வணிக செயற்பாடுகளை இலகுவாக்குகிறோம் என்பதன் பெயரில், மீண்டும் பாரம்பரிய வணிகம்போல, இடைத்தரகர்களை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. மின்வணிகத்தில் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் பொறிமுறைகளும் சற்றே வித்தியாசமானதாக இருக்கும்.    உதாரணமாக, இணையத்தில் கொள்வனவாளரும் விற்பனையாளரும் வர்த்தகத்தைத் தனித்து முடித்துக்கொள்ள முடியாது. வாடிக்கையாளர் குறித்த விற்பனையாளரிடம் பொருளை வாங்க விரும்பின், அதற்கான பணத்தைச் செலுத்த வேண்டும். அதை நேரடிப் பணமாகச் செலுத்த முடியாது.   எனவே, அதற்காக இணையப் பணத்தை (அட்டைகள் அல்லது பணவைப்புக் கணக்குகள்) பயன்படுத்த முடியும். இதன்போது, தவிர்க்க முடியாத வகையில் இணையப் பணம் என்கிற போர்வையில், இடைத்தரகர்கள் உருவாகுகிறார்கள். அதுபோல, வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்த எடுப்பில் செலுத்துவதில்லை.   அதைச் செலுத்துவதற்கு, விற்பனையாளர்கள் பாதுகாப்பான கொடுப்பனவு முறையைக் கொண்டிருக்க வேண்டும். இதையும் வேறு தரப்பினரிடமிருந்து பெற்று, வழங்குவார்களாயின், அவ்வாறும் இடைத் தரகர்கள் உருவாகுவார்கள்.    இவ்வாறாக, பாரம்பரிய வணிகத்திலிருந்து வேறுபட்ட முறையில் இடைத்தரகர்கள் மின்வணிகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.    இவர்களால் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதுமட்டுமல்லாது,  இவர்களுக்குச் செலுத்தும் அனைத்துக் கட்டணங்களுமே பொருள்கள், சேவைகளின் பெறுதியுடன் சேர்க்கப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களையே வந்தடையும்.   மேலே கூறிய அனைத்துமே, மின் வணிகத்தில் இன்றியமையாத வகையில் கவனிக்க வேண்டிய அல்லது கவனிக்கப்பட வேண்டிய விதிகளாகும். கால மாற்றத்துக்கு ஏற்ப, வணிகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலில், அத்தகைய மாற்றங்களில் நம்மைத் தொலைத்துக்கொள்ளாமல் எப்படி நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது.       http://www.tamilmirror.lk/வணிகம்/மின்-வணிகத்தின்-அடிப்படைகள்/47-252854