Jump to content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செய்திகள்


Recommended Posts

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படுகிறதா? - கலக்கத்தில் அ.தி.மு.க

 

தினகரன்

Chennai: 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட ஆர்.கே. தொகுதிக்கு தற்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன், டி.டி.வி. தினகரன் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

நடிகர் விஷால் இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்செய்து, பின்னர் கடைசி நேரத்தில் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் தான் வெற்றிபெற்று மக்களுக்கு நல்லது செய்துவிடக்கூடாது என்பதற்காக தன் மனுவை தள்ளுபடி செய்திருப்பதாக விஷால் குற்றம்சாட்டினார். 

இந்தச்சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு பிரசாரம் செய்வதற்காகச் சென்ற பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பி.ஜே.பி. தொண்டர்கள், பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சனிக்கிழமையன்று ஆர்.கே.நகர் தொகுதி அடங்கிய பகுதியில் வேட்பாளர் நாகராஜன் மற்றும் கட்சியினருடன் தமிழிசை, சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த முடியாவிட்டால், மீண்டும் ரத்துசெய்து விட்டுப் போங்கள். பணப்பட்டுவாடாகுறித்த புகார்கள் எங்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்துள்ளோம்" என்றார்.

ஆர்.கே.நகர்

இதுஒருபுறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஓ.பி.எஸ். அணியினரைத் தவிர, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், மதுசூதனனை எதிர்த்தும், தினகரனுக்கு ஆதரவாகவும் கடந்த ஏப்ரல் மாதம் இதே தொகுதியில் வாக்கு சேகரித்தனர். டி.டி.வி. தினகரனுக்காக, அவருடன் திறந்த ஜீப்பில் சென்று தொப்பி சின்னத்துக்கு வாக்குசேகரித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது ஞானோதயம் பிறந்து, அ.தி.மு.க. அணிகள் இணைந்து, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டிருப்பது தனிக்கதை.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்தான் பாவம். அவர்கள், இப்போது எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்பதுதான் வேடிக்கை. தினகரனை ஆதரித்தவர்கள், தற்போது அவருக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு எதிராகவும் வாக்குகேட்டு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 

தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தினகரனோ, தற்போது குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

தி.மு.க. வேட்பாளர், வழக்கம்போல் தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து, உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். பி.ஜே.பி. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யச் சென்றபோதுதான் தமிழிசை, மறியலில் ஈடுபட்டு, மீண்டும் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆர்.கே.நகர்

கடந்த ஏப்ரல் மாதத்தில், தினகரன் தரப்பினர் (முதல்வர் எடப்பாடி அணி), வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தததாகக் கூறி, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள் முன்பாக தேர்தலை ரத்துசெய்தது. அந்த நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய பட்டியலில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் மற்றும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்குறித்த விசாரணை என்னவாயிற்று என்று ஆர்.கே. நகர் தொகுதி மக்களும், தமிழக மக்களும் இதுவரை கேட்கவில்லலை.

இதுஒருபுறமிருக்க, தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் தரப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைக்கப் பெற்றவுடன் நடைபெறும் முதல் தேர்தல் களம் என்பதால், சின்னத்தின் பெருமையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தரப்பு தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலைப் பின்பற்றியே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ரத்துசெய்யப்படலாம் என்ற தகவல் பரவலாக வெளியாகத் தொடங்கியுள்ளது. 

இதுபற்றி, தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம். "தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே பி.ஜே.பி-யின் விருப்பம். முறையாக தேர்தலை நடத்தமுடியாவிட்டால், மீண்டும் ரத்துசெய்ய வேண்டும் என நான் குறிப்பிட்டேன். கடந்த முறை பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. இப்போதும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா, பட்டப்பகலிலேயே நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. எங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். எனவே, இனி முறைகேடுகள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெறும் என்று நம்புகிறோம்" என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன்

இதற்கிடையே சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த், "பணப்பரிமாற்றத்தை காரணம் காட்டி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையமே வெளியிடும்" என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

தவிர, பி.ஜே.பி. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் தன் ட்விட்டர் பதிவில், இடைதேர்தல் ரத்தாகலாம். தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற காரணத்துக்காக ஆட்சி கலைக்கப்படலாம்" என பொருள்படும்படி குறிப்பிட்டுள்ளார்.  எஸ்.வி.சேகரின் இந்தப் பதிவு ஆளும் அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் ஒருவேளை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால், அதைக் காரணம் காட்டி, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் ஆளும் அ.தி.மு.க. கலங்கிப் போய் உள்ளது.

https://www.vikatan.com/news/rk-nagar/110386-will-rknagar-bypoll-postpone-again.html

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
ஆர்.கே.நகரில் ஓட்டுச்சாவடிக்கு 250 ஓட்டுகள் பெற கட்சிகள்... போட்டா போட்டி!

சென்னை, ஆர்.கே.நகரில், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 250 ஓட்டுகளை பெற, வியூகம் அமைத்துள்ள கட்சிகள் இடையே, போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இதற்காக, இக்கட்சிகள் செய்யும் பணப் பட்டுவாடா தொடர்பான புகார்கள், தினமும் வந்து குவிவதால் திணறும் தேர்தல் கமிஷன், அறிக்கை அளிக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படையினர், விடிய விடிய அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

 

ஆர்.கே.நகரில் ஓட்டுச்சாவடிக்கு 250 ஓட்டுகள் பெற கட்சிகள்... போட்டா போட்டி!


கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்த வாக்காளர்களில், 45 ஆயிரம் பேர், இரட்டை பதிவு, இடம் மாறியது உட்பட, பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, 2.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம், 256 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒரு ஓட்டுச்சாவடியில், 500 - 1,300 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., - தினகரன் தரப்பு ஆகியவை, தேர்தலில் வெற்றி பெற, ஒரு ஓட்டுச்சாவடிக்கு, குறைந்தது, 250 ஓட்டுகளை பெற திட்டமிட்டு உள்ளன.

ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 250 ஓட்டுகள் வாங்கினால், 64 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும்.வாய்ப்புஎந்த கட்சி, 64 ஆயிரம் ஓட்டுகளை தக்க வைத்து, அதனுடன், கூடுதல் ஓட்டுகள் வாங்குகிறதோ, அந்த கட்சிக்கு, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது.


தற்போது, ஜெயலலிதா இல்லாதது; அ.தி.மு.க., வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்; ஊழல் புகார்;கூட்டணி கட்சிகளின் பலம் போன்ற காரணங்களால், கூடுதலாக, 20 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும் என, அக்கட்சி கருதுகிறது.
தினகரன் தரப்பு, 250 ஓட்டுகளை பெற முடியாவிட்டாலும், அதில் பாதியாவது கிடைத்து விட்டால், அ.தி.மு.க.,வுக்கு செல்லும், 32 ஆயிரம் ஓட்டுகள் பிரிகிறது. இதன் வாயிலாக, அ.தி.மு.க., வெற்றியை தடுத்து விட முடியும் என,கருதுகின்றனர்.
 

வியூகம்


இதை தடுக்க, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வும், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 250 ஓட்டுகள் என, 64 ஆயிரம் ஓட்டுகளை தக்கவைக்க, வியூகம் வகுத்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்து உள்ளதாலும், அனைத்து வாக்காளர்களுக்கும் தாராளமாக பண பட்டுவாடா செய்வதாலும், கூடுதலாக, 30 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தால், வெற்றி நிச்சயம் என, அக்கட்சி எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு, பணப்பட்டுவாடா நடப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு,புகார்கள் வந்தபடி உள்ளன. தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகளும், புகார் மனு அளித்துள்ளன.'தேர்தல் விதிமீறல்களை தடுக்க, காவல் துறையினரும், தமிழக அதிகாரிகளும், போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை' என, தேர்தல் பார்வையாளர்களும், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

புகார்கள் குவிவதால், தொகுதியில் என்ன நடக்கிறது என, அறிக்கை அளிக்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

 

ஆலோசனை அதைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள், விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.

பண பட்டுவாடா புகாரால், தேர்தல் கமிஷன், இடைத்தேர்தலை ரத்து செய்து விடுமோ என்ற சந்தேகம், கட்சிகளிடம் எழுந்துள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா செய்வதை தற்காலிகமாக நிறுத்தி, தேர்தல் நெருக்கத்தில் வழங்கலாமா என்பது குறித்தும், கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
 

'வாட்ஸ் ஆப்' வாயிலாக குவியும் புகார்கள்


'ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் தொடர்பாக நடக்கும் முறைகேடுகள் குறித்து, 99405 99465 என்ற, பிரத்யேக, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு புகார் அனுப்பலாம்' என, போலீசார் தெரிவித்திருந்தனர். அந்த எண்ணிற்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அரசியல் கட்சியினர், வீட்டிற்கு அடிக்கடி வந்து, தங்களை துாங்க கூட விடாமல் தொல்லை கொடுத்து வருவதாகவும், பணப் பட்டுவாடா எப்படி நடக்கிறது; அதில், ஈடுபடுவோர் யார் என்பது உள்ளிட்ட விபரங்களையும், 'வீடியோ'வாக எடுத்து, போலீசாரின் பிரத்யேக, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, பொதுமக்கள் அனுப்புகின்றனர். பொதுமக்களின் இந்த புகார்கள், போலீசாரை திக்குமுக்காடச் செய்துள்ளன.

இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் தொடர்பான பாதுகாப்புக்கு, பொதுமக்களின் பங்களிப்பு திருப்தியாக உள்ளது.அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, பதிலும் தெரிவித்து விடுகிறோம். தொகுதி முழுவதும் கூடுதல் கமிஷனர், ஜெயராம், இணை கமிஷனர், சுதாகர் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1916332

Link to comment
Share on other sites

எங்கள் ஆட்களை மிரட்டாதீங்க!
போலீசுக்கு தினகரன் எச்சரிக்கை    
 

 

 
 

சென்னை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு கொடுக்க வந்த தினகரன், போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன்


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக, தினகரன் களம் இறங்கி உள்ளார். அவரது ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, புகார் எழுந்துள்ளது. நடவடிக்கைஅவர், தன் ஆதரவாளர்களுடன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியை சந்தித்தார்.

'போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு, எனக்கு தேர்தல் பணியாற்றுவோர் மீது, பொய் வழக்கு போட்டு, கைது செய்கின்றனர். 'எனவே, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர், ஜெயராம், உளவுத்துறை ஐ.ஜி., சத்தியமூர்த்தி ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினார்.
 

மேலும், அவர் கூறுகையில், 'அதிகாரிகள் நடுநிலையாக செயல்படாவிட்டால், அவர்களை, எப்படி கையாளுவது என்பது எனக்கு தெரியும்; அதை நான் விரும்பவில்லை. 'தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதால், அமைதியாக உள்ளேன். என் ஆட்களையும், அமைதியாகஇருக்கும்படி கூறியுள்ளேன். எனவே, என் புகார் மீது, உரிய நடவடிக்கை எடுங்கள்' என்றார்.

சந்திப்புக்கு பின், தினகரன் அளித்த பேட்டி:எங்களை சேர்ந்தவர்களை, 'நக்சலைட்' போல், இரவு பிடித்து, வேறு எங்கோ கொண்டு சென்று, சிறையில் அடைத்துள்ளனர். ஆளும் கட்சி, விரக்தியின் உச்சியில் உள்ளது. காவல் துறை, ஏவல் துறையாக இருந்தால், நீதிமன்றம் செல்வோம். எங்களுக்கு ஊர்வலம் நடத்த, போலீஸ் கமிஷனர் அனுமதி கொடுக்கிறார்.
 

'மப்டி' போலீஸ்


அதன்பின், 'முதல்வர் வருகிறார். விட்டுக் கொடுங்கள்' என்கிறார். நாங்களும் விட்டுக் கொடுத்தோம். ஆனால், மறுபுறம், எங்கள்ஆட்களை கைது செய்கிறார். அதேபோல், உளவுத்துறை ஐ.ஜி., சத்தியமூர்த்தி, எங்கள் ஆட்களை மிரட்டுகிறார்.
நாங்கள், 30 ஆண்டுகளாக, உளவுத்துறையை கையாண்டுள்ளோம். போலீசை வைத்து மிரட்டு வதை, எத்தனை முறை பார்த்துள்ளோம்! காவல் துறை, ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.

 


இல்லையெனில், நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுப்பேன். யார் தவறாக நடந்து கொண்டாலும், கமிஷனர் தான் பொறுப்பு. 'மப்டி' போலீசாரை பயன்படுத்தி, எங்கள் ஆட்களை மிரட்டுவதை, உளவுத்துறை ஐ.ஜி., கைவிட வேண்டும்.

ஏற்கனவே இருந்த கமிஷனர்களுக்கு வந்த நிலையை, நினைத்து பார்க்க வேண்டும். ஏற்கனவே, உளவுத்துறையில் இருந்த, ஜாபர்சேட் நிலையை நினைத்து பார்க்க வேண்டும்; இதை மிரட்டுவதற்காக சொல்லவில்லை.

தற்போது, கோமாளி அரசு நடக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும், தேர்தல் வேண்டாம் என்றால் நிறுத்தட்டும். அதை விடுத்து, எங்கள் ஆட்களை மிரட்டக் கூடாது. இவ்வாறு தினகரன் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1916343

 

Link to comment
Share on other sites

செய்தியாளர்கள்மீது அ.தி.மு.க-வினர் தாக்குதல்! - அதிர்ச்சியில் ஆர்.கே.நகர்

 
 
Chennai: 

ஆர்.கே.நகரில் தேர்தல் செய்தி சேகரிப்பில் இருந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர்

 

சென்னை திருவொற்றியூர் எஸ்.கே.மஹால் திருமண மண்டபத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பணப்பட்டுவாடா நடப்பதாகத் தகவல் பரவியது. இதையடுத்து செய்தியாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் அங்கு சென்று செய்தி சேகரிக்க முயன்றனர். அப்போது கேமராமேன்கள் முஸ்தபா, ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோரை அவர்கள் தாக்கத் தொடங்கினர். இச்சம்பவத்தின்போது ஐ.டி மந்திரி மணிகண்டன் அதே மண்டபத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். தகவலறிந்து அவர் கட்சிக்காரர்களை அழைத்து அமைதிகாக்க கேட்டுக்கொண்டார்.

ஆர்.கே.நகர்

 

திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர ஜெயராமன், உதவி கமிஷனர் ஏ.கே.ரகுராம், எஸ்.ஐ.பார்த்தசாரதி ஆகியோர் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். செய்தியாளர்களின் செல்போனை பறித்துச் சென்றதைக் கண்டித்து நிருபர்கள் போட்டோகிராபர்கள் எஸ்.கே.திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க நகரச் செயலாளர் தனியரசு தலைமையில் நூற்றுக்கணக்கில் தி.மு.க-வினர் திரண்டதால் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடும் போராட்டத்துக்குப் பின்  செய்தியாளர்களின் செல்போன் போலீஸாரால் மீட்டு ஒப்படைக்கப்பட்டது.

https://www.vikatan.com/news/rk-nagar/110694-journalists-were-attacked-at-rk-nagar.html

Link to comment
Share on other sites

`தினகரனின் ஒருநாள் பிரசார செலவு ரூ. 3 கோடி!’ - மிரளவைக்கும் ஆர்.கே.நகர் கணக்கு #VikatanExclusive

தினகரன்

Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் தமிழக அமைச்சர்கள். ‘தினகரன் தரப்பினரின் பிரசார வியூகத்தைப் பார்த்து தி.மு.க நிர்வாகிகளே மிரண்டுபோய் உள்ளனர். நான்கு வீடுகளுக்கு குக்கர் சின்னத்தை வரைந்து அ.தி.மு.க வேட்பாளருக்கு அதிர்ச்சி கொடுக்கின்றனர்' என்கிறார்கள் ஆர்.கே.நகர் அரசியல் பிரமுகர்கள். 

 

தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க எம்.பி-க்கள் எனப் பிரசார களத்துக்குள் நுழைபவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். நேற்று மாலை 7 மணியளவில் பிரசாரத்துக்குச் சென்ற எம்.பி வைத்திலிங்கத்தின் கார்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தென்மாவட்ட அமைச்சர்கள் பலரும் தினகரன் தரப்பினரின் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. 'சின்னம்மாவுக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவர்களுக்கு, நாம் யார் என்பதைக் காண்பிக்க வேண்டும்' எனப் பெரியகுளத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் கொதிக்கின்றனர்.

சசிகலா“தாக்குதல், கல்வீச்சு என நாள்தோறும் அதிகரிக்கும் வன்முறைக் காட்சிகளின்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் தினகரன் ஆட்கள்மீது தாக்குதலை நடத்துகின்றனர். இவர்களோடு உள்ளூர் போலீஸாரும் கை கோத்துச் செயல்படுகின்றனர். இந்த வழக்குகளிலிருந்து ஆதரவாளர்களைக் காப்பாற்ற வக்கீல் குழு ஒன்றை நியமித்திருக்கிறார் தினகரன். ஆர்.கே.நகரில் உள்ள 14 மண்டலங்களுக்கும் தலா ஆறு வக்கீல்கள் எனப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தினகரன் ஆதரவாளர்களான பழனியப்பன், செந்தில்பாலாஜி, மாரியப்பன் கென்னடி, தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 14 முக்கிய நிர்வாகிகளை மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின்கீழ் இந்த வக்கீல் குழு இயங்குகிறது. ‘டி.டி.வி அட்வகேட் விங்' என்ற பெயரில் இவர்கள் செயல்படுகின்றனர். காவல்நிலையங்களுக்கு டி.டி.வி ஆதரவாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டால், இந்தக் குழு உடனடியாகக் களமிறங்கும்" என விவரித்த தினகரன் ஆதரவாளர்களில் ஒருவர், 

“தினகரன் பிரசாரத்துக்கு வருகிறார் என்று சொன்னாலே, தாய்மார்கள் கூட்டம் திரள்கிறது. தெருவுக்குத் தெரு சாலையில் குக்கர் சின்னங்களை வரைந்துள்ளனர். இப்படி வரைவதற்குத் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இருப்பினும், ஒவ்வொரு கூட்டத்துக்கும் 3 ஆயிரம் பேர் வரையில் கூடுகின்றனர். இவர்களுக்கான செலவுகள், ஆரத்திச் செலவுகள், நிர்வாகிகளின் செலவுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டால் நாளொன்றுக்கு மூன்றரை கோடி ரூபாய் வரையில் செலவாகிறது. இதற்கான நிதி ஆதாரம் யார் மூலம் வருகிறது என்பதைக் கணிக்கவே முடியவில்லை. ஆனாலும், அவரவர் தேவைக்கான பணம் உடனடியாக வந்து சேர்ந்துவிடுகிறது.

அ.தி.மு.க எவ்வளவு பணம் கொடுத்தாலும், அதற்கு மேல் 1,000 ரூபாய் கொடுப்போம் என்பதை உறுதியாகக் கூறிவிட்டோம். தேர்தலில் பணம் செலவழிக்கும் முடிவில் தி.மு.க இல்லை என்பதால், தினகரனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. தினம்தோறும் கூடும் கூட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர். இவர்களுக்குப் பிரசாரப் பணிகளைப் பிரித்துக் கொடுக்கும் பணிகளில் மண்டலப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவதுதான் தினகரனின் நோக்கம்” என்றார் விரிவாக. 

“தொடக்கத்தில் தினகரனோடு முரண்பட்டுக்கொண்டிருந்த குடும்ப உறவுகள் அனைவரும் ஆர்.கே.நகர் களத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர். இரண்டு நாள்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதிக்குள் தீவிர பிரசாரம் செய்தார் ஜெயானந்த். விவேக் தரப்பில் இருந்தும் தினகரனுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது, ஆட்களைத் திரட்டுவது என களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதை நேரில் பார்த்த அமைச்சர்கள் சிலர், தினகரனை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ‘சின்னம்மாதான் எங்களுக்கு எல்லாம். வேறுவழியில்லாமத்தான் இங்க இருக்கோம். சின்னம்மா சிறையிலிருந்து வந்ததும் நாங்களும் வந்துவிடுவோம். எங்கள் மீது கோபம்கொள்ள வேண்டாம்' எனப் பேசியுள்ளனர். அதேபோல், சிறையிலிருந்தும் குடும்ப உறவுகளுக்கு மெசேஜ் வந்துள்ளது. ‘எவ்வளவு சண்டைகள் இருந்தாலும் தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடுங்கள். நமது குடும்பத்தின் கௌரவமும் இதில் அடங்கியிருக்கிறது. நாம் யார் என்பதை இந்தத் தேர்தலின் முடிவு காட்ட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் சசிகலா. அதன் விளைவாகத்தான் மன்னார்குடி சொந்தங்கள் களமிறங்கியுள்ளன" என்கிறார் பெரியகுளத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

 

தனது பிறந்தநாளையொட்டி திருப்பதிக்குச் சென்றுள்ள டி.டி.வி.தினகரன், அங்கிருந்து திருவண்ணாமலைக்குப் பயணப்பட இருக்கிறார். அதன்பிறகு ராமாவரம், எம்.ஜி.ஆர் தோட்டத்துக்கு வருகை தந்துவிட்டு, மாலை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர இருக்கிறார். அவரது ஒவ்வொரு நாள் பிரசார பாணியையும் கதிகலங்கியபடியே கடந்து செல்கின்றனர் அமைச்சர்கள்.

https://www.vikatan.com/news/rk-nagar/110647-rupees-3-crores-per-day-was-spent-during-dinakarans-campaign.html

Link to comment
Share on other sites

'அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் திடீர் சோர்வு' - கலக்கத்தில் அ.தி.மு.கவினர்  

 

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.வினரின் உள்ளடி வேலையால் வேட்பாளர் மதுசூதனன் சோர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க.சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர். ஆரம்பத்திலிருந்த இந்த உற்சாகம் தற்போது கட்சியினரிடையே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக உள்ளடி வேலைகளால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர். இதனால், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வினர், "இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததால் வெற்றிவாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதுதான் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரிந்தது. அ.தி.மு.க.வில் பிரிந்த அணிகள் இணைந்தாலும் மனங்கள் இன்னமும் இணையவில்லை. இதனால் ஒற்றுமையாக யாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இன்னமும் பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்ற நிலைமையே தொடர்கிறது. தேர்தல் பிரசாரம் குறித்த தகவல்கள்கூட சரிவர தெரிவிப்பதில்லை. அடுத்து, தொகுதியில் மாவட்டச் செயலாளராக இருக்கும் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தினகரனின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். இதனால், அவரது தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.வுக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அடுத்து, தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடு நிலவுகிறது. குறிப்பாக பணம் செலவழிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் தேர்தல் பொறுப்பாளர்களில் பலர், கணக்குப் போட்டு பணத்தை செலவழிக்கின்றனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்குகூட உணவு வாங்கிக் கொடுக்ககூட சில தேர்தல் பொறுப்பாளர்கள் கணக்குப்பார்க்கின்றனர். இதனால், தொண்டர்கள் பெயருக்கு தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும், உள்ளடி வேலையில் பலர் ஈடுபடுவதால் அ.தி.மு.க. வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தசமயத்தில் கட்சித் தலைமையில் கட்டுப்பாட்டை யாரும் மீறுவதில்லை. அவ்வாறு மீறுபவர்கள் மீது பதவிகள் பறிக்கப்படும். ஆனால், தற்போது, கட்சித் தலைமையின் உத்தரவை யாரும் மதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்தின்படி செயல்படுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்தில் பேசினாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

இந்தச் சமயத்தில் 75 வயதாகும் வேட்பாளர் மதுசூதனன், தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். முதுமை காரணமாக அவர் அடிக்கடி சோர்வடைவதாக கட்சியினர் தெரிவித்தனர். சோர்வையும் மீறி அவரது மனஉற்சாகத்தின் காரணமாகவே இந்தளவுக்கு மதுசூதனன் பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். இதற்கிடையில் இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அ.தி.மு.க. அம்மா அணியினர் தினகரனுக்கு ஆதரவாக தொப்பிச் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டனர். அப்போது, மதுசூதனனைக் கடுமையாக விமர்சித்தனர். தற்போது, தினகரனை விமர்சித்து மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஓட்டுக்கேட்கின்றனர். இது, சில வாக்காளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

 

மேலும், தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைக்கின்றனர். இது, ஆளுங்கட்சியினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மழையிலும் ஆர்.கே.நகர் மக்கள் தத்தளித்துவருகின்றனர். ஜெயலலிதா போட்டியிட்டசமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதையெல்லாம் பட்டியிலிட்டு தி.மு.க.வினரோடு தினகரனும் விமர்சிக்கிறார். இவையெல்லாம் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும்வகையில் இருக்கிறது. 
 உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.  அதுதொடர்பாக நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் மதுசூதனன் வெற்றிபெற பல்வேறு தேர்தல் வியூகங்கள் அமைக்கப்பட்டன. அடுத்து, தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களைத் தனித்தனியாக அழைத்து கட்சியின் மூத்தநிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதோடு, ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக வாங்கும் பூத் கமிட்டிமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையையும் கட்சித்தலைமை தெரிவித்துள்ளது. இது, கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

https://www.vikatan.com/news/rk-nagar/110763-admk-madhusudhanan-falls-ill-whats-happening-in-admk.html

Link to comment
Share on other sites

ஆர்.கே நகர் யாருக்கு..? மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் காரசார விவாதம் |

 

முழுமையாக நாளை

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் பதற்றம்... கடைகள் அடைப்பு! #RKNagarAtrocities

 
Chennai: 

இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று முதல் பணம்பட்டுவாடா நடைபெற உள்ளதாகத் தகவல் கசிந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

rknagar
 

 

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான ரவி என்பவர் தொகுதி மக்களுக்குப் பணம் கொடுத்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் ரவியைத் தண்டையார்பேட்டை போலீஸார் விசாரித்தனர். தகவல் அறிந்த தினகரன் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடந்த ஒரு மணி நேரமாகப் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆர்.கே.நகரில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே மதுசூதனன் தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு தினகரன்மீது புகார் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் ‘ஆர்.கே.நகரில் ரூ.1.50 கோடிக்கு குக்கர் விற்பனை பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும். குக்கருக்கான தொகையைத் தேர்தல் கணக்குச் செலவில் சேர்த்து தினகரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். 

https://www.vikatan.com/news/rk-nagar/110988-dinakaran-supporters-holds-protest-in-rk-nagar.html

Link to comment
Share on other sites

‘தினகரன் வந்துவிட்டால் நமக்குத்தான் அவமானம்!’ - அறிவாலயத்தை அசைத்த ஆர்.கே.நகர் #VikatanExclusive

 
 

பிரசாரத்தில் தினகரன்

Chennai: 

‘ஆளும்கட்சி வென்றால்தான், ஆர்.கே.நகர் தொகுதி வளம்பெறும்’ என்ற முழக்கத்தோடு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'ஜெயலலிதா இல்லாததால், எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்' எனக் கணக்குப் போட்ட தி.மு.க-வினருக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'மதுசூதனன் வெற்றி பெற்றால்கூட பரவாயில்லை. தினகரன் வந்துவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும்' என்ற பதற்றத்தில் இருக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

 

‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்’ என்ற கட்டாயத்தில் அனைத்து அமைச்சர்களும் களமிறங்கியுள்ளனர். ஜெயலலிதா போட்டியிட்டபோதே 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய தி.மு.க, இந்தமுறை ஜெயலலிதா இல்லாத ஆர்.கே.நகரில் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என உறுதியாக நம்பிக்கொண்டிருந்தது. 'சிம்லா முத்துச்சோழனை வேட்பாளராக்கியிருந்தால், தி.மு.க வெற்றி பெற்றிருக்கும். வேட்பாளர் தேர்வில் தலைமைக் கவனம் செலுத்தியிருக்கலாம்' என்ற பேச்சுகளும் தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது. அ.தி.மு.க, தி.மு.க பிரசாரத்தைவிட, தினகரன் தரப்பினரின் பிரசாரம் தொகுதிக்குள் அனல்பரப்பிக்கொண்டிருக்கிறது. "ஆளும்கட்சியைவிட அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார் தினகரன். அவரது நோக்கம் புரிந்தாலும், தொகுதி மக்களிடையே தினகரனுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தி.மு.க-வினரே மிரள்கின்றனர்" என விவரித்த ஆர்.கே.நகர் தி.மு.க நிர்வாகி ஒருவர், 

ஸ்டாலின்"நாளை செயல் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்யவிருக்கிறார். 'ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் ஸ்கூட்டர் உள்பட அனைத்து உதவிகளும் தேடி வரும்' என அமைச்சர்கள் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி நேரம் கடந்தும் அமைச்சர்கள் பிரசாரம் செய்கின்றனர். இவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆளும்கட்சியினர் சிறப்பு மரியாதை கொடுத்தாலும், அமைச்சர்களை விரட்டுவதில் தினகரன் ஆட்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இவர்கள் மோதலால், தி.மு.க-வே வெற்றி பெறும் என நாங்கள் நினைத்தாலும், களநிலவரம் அவ்வளவு எளிதாக இல்லை. அந்தளவுக்கு தொகுதி மக்கள் மனதில் குக்கர் நிறைந்துள்ளது. தி.மு.க கூட்டத்துக்கு வரும் பெண்களைவிடவும் தினகரனுக்காகத் திரளும் கூட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தினகரன் தரப்பினரின் பிரசார வியூகம் அறிவாலயத்தை அசைத்துவிட்டது. தேர்தல் தொடர்பாக, ஆர்.கே.நகர் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் பேசும்போது, 'பணம் கொடுத்து வெற்றியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக தோற்றுப் போகலாம்' எனக் கூறியபோது, நிர்வாகிகள் சிலர், 'அதுவும் சரிதான். பொதுத்தேர்தல் வரும்போது செலவு செய்யலாம்' எனக் கூறினர். ஆனால், அடுத்து வந்த நாள்களில் ஆர்.கே.நகர் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். ‘தி.மு.க-வுக்குப் பாதகமாகத் தேர்தல் முடிவுகள் அமைந்துவிடக் கூடாது' என அச்சப்படத் தொடங்கியுள்ளனர்" என்றார் நிதானமாக. 

இதையடுத்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், "தேர்தல் ஆணையத்தில் தினகரன் கேட்டது மூன்று சின்னங்கள்தாம். அவர் தன்னுடைய மனுவில், விசில், பேட், தொப்பி ஆகிய சின்னங்களைக் கேட்டார். 'தினகரன் கேட்பதைக் கொடுத்துவிடக் கூடாது' என்பதில் தேர்தல் அதிகாரிகள் தெளிவாக இருந்தனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தினகரனுக்குக் குக்கர் சின்னம் தேடிவந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. காலையில் எழுந்தாலே குக்கர் முகத்தில் விழிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், இந்தச் சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுவே, தி.மு.க-வின் வெற்றிக்கு இடைஞ்சலாக வந்து சேர்ந்திருக்கிறது. அ.தி.மு.க வெற்றி பெற்றால், 'அதிகார துஷ்பிரயோகத்தால் வெற்றி பெற்றார்கள்' என்று கூறிவிடலாம். அதுவே, தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் தி.மு.க-வுக்குப் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்திவிடும். ஸ்டாலின் தலைமை மீதான கேள்விகளும் எழும். எனவே, 'வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள்களில் நாமும் பணம் கொடுப்போம்' என்ற முடிவுக்கு சீனியர்கள் சிலர் வந்துள்ளனர். இதை ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். தினகரனை ஓரம்கட்ட எங்களுக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை" என்றார். 

 

ஜெயலலிதா இல்லாமல் ஆர்.கே.நகரை எதிர்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு, வாழ்வா... சாவா போராட்டமாக அமைந்துவிட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம். 'தேர்தலுக்குப் பிறகு, கட்சியே என்னுடைய கைக்கு வரும். வெற்றி அல்லது இரண்டாம் இடம்' என அதிர வைத்துக்கொண்டிருக்கிறார் தினகரன். 'இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதைவிட அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது' என தன்மானப் பிரச்னையாக ஆர்.கே.நகரைக் கவனிக்கிறது தி.மு.க. ஆர்.கே.நகர் மக்கள் கரன்சி மழையில் நனைந்துகொண்டிருக்கிறார்கள்.

https://www.vikatan.com/news/rk-nagar/110964-if-dinakaran-wins-it-would-be-a-disgrace-strategy-that-shakes-dmk.html

Link to comment
Share on other sites

ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம்! - கலவரக்காடான ஆர்.கே.நகர்!

 
 

பிடிபட்ட 2000 ரூபாய் நோட்டுகள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வழங்க கொண்டு வந்த பணத்தைத் தி.மு.க-வினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனால், ஆர்.கே.நகர் களேபரக் களமாக மாறியுள்ளது. 

 

ஆர்.கே.நகர் களேபரம்

 

ஆர்.கே.நகர் தொகுதியின் மன்னப்பன் தெரு, நாவலர் நகர், மூப்பனார்நகர், ஆர்.கே.நகர் ஒன்று மற்றும் இரண்டாவது தெரு, எழில்நகர், பிள்ளையார் கோயில் தெரு ஆகிய இடங்களில் இன்று பகல் பணப்பட்டுவாடா நடந்தன. 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை, பிரம்புக் கூடை மற்றும் கட்டைப் பைகளில் அடுக்கி வைத்துக்கொண்டு வந்தனர் சிலர். அதை தி.மு.க-வினரும் நடுநிலையாளர்களும் தடுத்ததால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதேபோல் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகக் கொருக்குப்பேட்டையில் உள்ள ஆர்த்தோ பிசியோதெரபி சென்டரில் பதுக்கியிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளையும் தி.மு.க-வினர் கைப்பற்றினர். அவற்றின் எண்ணிக்கை 13 லட்ச ரூபாய் ஆகும். இச்சம்பவம் குறித்த தகவலைப் பெற்ற தேர்தல் அதிகாரிகள், தொகுதிக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் தினகரன் தரப்பும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க தரப்பும் மோதிக்கொண்டன. நிலைமையைச் சரிசெய்ய முதல்முறையாகத் துணை ராணுவத்தினர் கட்சிக்காரர்களைப் பிடித்து சாலை ஓரமாகத் தள்ளிவிட்டனர். பின்னர் கட்சிக்காரர்களை எச்சரித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் பதற்றநிலை நீடிக்கிறது. தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நேற்று பொறுப்பேற்ற பத்ரா, "இதுவரையில் பொதுவான புகார்களே எங்களுக்கு வந்திருக்கிறது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம்" என்றார். 

https://www.vikatan.com/news/rk-nagar/111001-rs13-lakhs-ceased-in-rknagar.html

Link to comment
Share on other sites

தயக்கம்!
விதிமுறை மீறும் கட்சி பெயரை வெளியிட...
ஆர்.கே.நகரில் தேர்தல் கமிஷன் 'பம்முவது' ஏன்?
 
 
 

சென்னை, ஆர்.கே.நகரில் அனுமதியின்றி சென்றதாக, பறிமுதல் செய்யப்படும் வாகனங் கள், எந்த கட்சியினருடையது; தேர்தல் விதிமீறல் வழக்குகள், யார் மீது போடப்பட்டு உள்ளன என்ற விபரங்களை வெளியிட, தேர்தல் அதிகாரிகள் தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

விதிமுறை, மீறும், கட்சி, பெயரை ,வெளியிட,தயக்கம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப் பட்டு வாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அவற்றில் பெரும்பாலா னவை, நடைமுறைக்கு வர வில்லை. வீதிகளில் நாற்காலி,மேஜை போட்டு, யாரும் அமரக் கூடாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், ஒவ்வொரு வீதியிலும், வெளி

மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் முகாமிட்டு வருகின்றனர்; முக்கிய இடங்களில், நாற்காலி போட்டு அமர்ந்துள்ளனர். அவர்களை வெளியேற்ற, அதிகாரிகள்எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

'ஓட்டு சேகரிப்பின் போது,எத்தனை பேர் உடன் வருவர் என்பதை, பிரசாரத்திற்கு அனுமதி பெறும் போது தெரிவிக்க வேண்டும். 'அனுமதிக்கப்பட்ட நபர்களை விட, கூடுதல் நபர்கள் பிரசாரத்தின் போது வந்தால், வழக்கு பதிவு செய்யப்படும்.

அடுத்து, பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்படும்' என,தெரிவிக்கப்பட்டு உள்ளது; அதுவும் பின்பற்றப் படவில்லை.'அனுமதியின்றி தொகுதிக்குள் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவற்றின் விபரம், உடனுக்குடன் வெளியிடப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் குறித்த விபரம்தெரிவிக்கப்படும்' என்றும், தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை தொகுதியில், அனுமதியின்றி பிரசாரத் தில் ஈடுபடுத்தப்பட்ட, 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவை, எந்த கட்சியினருக்கு உரியவை என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை

 

.தேர்தல் விதிகளை மீறியதாக, 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவை, எந்த கட்சிகளின் மீது போட பட்டு உள்ளன; எதற்காக போடப்பட்டு உள்ளன என்ற விபரமும் வெளியிடப்படுவதில்லை. இதனால், எந்த கட்சி, அதிகளவில் விதி மீறலில் ஈடுபடுகிறது என்ற விபரம், மக்களுக்கு தெரியாமல் உள்ளது. தேர்தல் கமிஷன் இணையதளத்தில்,இந்த தகவல்களை வெளியிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1919973

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைமீறல்: 102 வழக்குகள் பதிவு

ஆர்.கே.நகரில்படத்தின் காப்புரிமைNAVEEN Image captionதேர்தல் விதிமுறை மீறல்களுக்காக நடந்த கைதுகளுக்கு பிறகு நடந்த போராட்டம்

ஆர் கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நவம்பர் 24ம் தேதியில் இருந்து ஓட்டுக்கு பணம், பரிசு அளிக்கப்படுவது மற்றும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரைத் தாக்குவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ் தற்போதுவரை 102 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரில் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் தற்போதுவரை 39 நபர்கள் தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தேர்தல் விதிமுறைமீறலில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேநேரத்தில் ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் செல்வி என்ற நபர் பட்டுவாடா செய்வதற்காக ரூ.20 லட்சம் பணம் வைத்திருந்தார் என்று திமுகவினர் அளித்த புகாரின் பேரில் செல்வி கைது செய்யப்பட்டார். செல்வியை அதிகாரிகள் கூட்டிச் செல்வதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் தனது தரப்பினர் பணம் கொடுப்பதாக எழுந்துள்ள புகார்களை மறுத்துள்ளார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கொண்டுள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு டெபாசிட் இழந்துவிடுவோம் என்ற பயத்தில் பணம் கொடுப்பதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வரை அவர்கள் கொடுப்பதாகவும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர் கே நகர்படத்தின் காப்புரிமைNAVEEN Image captionதேர்தல் விதிமுறை மீறல்களுக்காக நடந்த கைதுகளுக்கு பிறகு நடந்த போராட்டம்

அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவார்கள் என்ற பயத்தில் திமுகவினர் மற்றும் டிடிவி அணியினர் பணம் கொடுப்பதாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊடகங்களிடம் தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் உண்மையானவையா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

அதிமுக மற்றும் தினகரன் தரப்பும் போட்டிபோட்டு பணம் கொடுத்துவருவதாகவும், கடந்த மூன்று நாட்களில் பணம் பட்டுவாடா செய்த இரண்டு நபர்களை திமுகவினர் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த பரசுராமன் தெரிவித்தார்.

ஆர் கே நகரில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக ஆதாரத்துடன் புகார் அளித்தபிறகும் கூட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டப்பட்டது என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் ஆர் கே நகர் வாக்காளர்களுக்கு, ஆர் கே நகர் பகுதியில் இருந்து வெளியேறி சென்னையின் பிற பகுதிகளுக்குச் சென்று பணம் கொடுக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு அருகே ஒரு தனியார் விடுதியில் வாக்காளர் அடையாள அட்டை கொண்டுவந்து மக்கள் பணம் பெற்றுச் செல்வதாக நேரலையில் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

அரசியல் கட்சிகளிடம் வாக்காளர்கள் பணம் வாங்குவது தெரியவந்தால் அவர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி திவ்யா தர்ஷினி தெரிவித்தார்.

பிபிசிதமிழிடம் பேசிய அதிகாரி திவ்யா தர்ஷினி, ''ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், பெறுவதும் சட்டத்திற்கு புறம்பானது. வாக்காளர்கள் பணம் பெறுவது ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டால், நாங்கள் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். பணம் கொடுக்கும் அரசியல் கட்சியும், பணம் வாங்கும் வாக்காளரும் தவறு இழைத்வர்கள் என்பதால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவிர்க்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் கட்சியினருக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்தார்.

 

http://www.bbc.com/tamil/india-42385249

Link to comment
Share on other sites

gallerye_002005562_1920539.jpg

 

 

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரே நாளில், ஓட்டுக்காக, 100 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஓட்டு போட்டால், வீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன், வாக்காளர்களுக்கு சீட்டும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும், மூன்று நாட்களே உள்ள நிலையில்,
வாக்காளர்களுக்கு கட்சிகள் தாராளமாக பணத்தை வாரி வழங்குவதால், மீண்டும் தேர்தல் ரத்தாவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

 

ரிப்பீட்டு!,ஆர்.கே.நகர் ,தேர்தல் ,மீண்டும், ரத்தாக, வாய்ப்பு


ஜெயலலிதா இறந்ததை அடுத்து, அவர் போட்டியிட்ட, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் பிரசாரம் நாளை நிறைவடைகிறது.அரசியல் கட்சிகள் போட்டி போட்டு பிரசாரம் செய்கின்றன. வாக்காளர்களை கவர, பணம், பரிசுப்பொருட்கள் வினியோகமும் களை
கட்டியுள்ளது.தினகரன் தரப்பினர், ஆரம்பத்தில் ஓட்டுக்கு, 5,000 ரூபாய்; பின், ஓட்டுக்கு, 10 ஆயிரம் என, வாரி வழங்கினர். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வும், ஓட்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இரண்டு நாட்களாக, பணப் பட்டுவாடா தீவிரம் அடைந்துள்ளது. ஒரு தரப்பினரை, மற்றொரு தரப்பினர் தடுப்பதால், ஆங்காங்கே மோதலும் நிகழ்ந்து வருகிறது. ஏராளமானோர், பணம்
கொடுக்கும் போது, கையும், களவுமாக சிக்குகின்றனர்.இருப்பினும், பணப் பட்டு வாடாவை தடுக்க, தி.மு.க., தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனால், சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.


'அ.தி.மு.க., கரை வேட்டி கட்டிய படியும், இரட்டை இலை சின்னத்துடனும், தினகரன் தரப்பினர் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க., மீது பழி போடுகின்றனர்' என, ஆளும் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.'தோல்வி பயத்தில், பட்டப்பகலில் பணம் கொடுத்து, தேர்தலை ரத்து செய்ய, அ.தி.மு.க., முற்படுகிறது' என, தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.


எப்போதும் இல்லாத வகையில், பணப் பட்டுவாடா நடப்பதை தடுக்க முடியாமல், தேர்தல் கமிஷனும் திணறி வருகிறது. பணப் பட்டுவாடா உச்சகட்டத்தை அடைந்துள்ள

நிலையில், தேர்தல் சிறப்பு அதிகாரி, விக்ரம் பத்ரா, நேற்று தலைமை செயலகத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.


அ.தி.மு.க., சார்பில், அமைச்சர், ஜெயகுமார், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை; தி.மு.க., சார்பில், கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின், துரைமுருகன்; பா.ஜ., தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன்;தினகரன் தரப்பில், வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனித்தனியாக மனுவும் அளித்தனர்.


பின், ஸ்டாலின் கூறுகையில்,''ஒரே நாளில், ஓட்டுக்கு, 6,000 ரூபாய் என, 100 கோடி ரூபாய் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். தேர்தல் கமிஷன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறுகையில், ''ஆட்சி அவர்களிடம் உள்ளது; தேர்தல் கமிஷனும் ஒத்துழைக்கிறது. அப்படி இருந்தும், ஓட்டுக்கு, 6,000 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள் என்றால், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பயமே காரணம். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,'' என்றார்.


லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை கூறியதாவது:


ஆர்.கே.நகர் தொகுதியில், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், மதுசூதனன் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால், நிர்வாகிகளை தாக்குவதுடன், பணப்பட்டுவாடா செய்வதாக, தவறான தகவலை தெரிவிக்கின்றனர்.சிலர், அ.தி.மு.க., கரை வேட்டியை கட்டிச் சென்று, அராஜகங்களை செய்து, எங்கள் மீது பழிபோடுகின்றனர்.


எனவே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும்; வாக்காளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தந்து, அவர்கள் அச்சமின்றி, ஓட்டு அளிக்க, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, தேர்தல் சிறப்பு அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் நடக்க இருந்த போதும், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுத்தது. 89 கோடி ரூபாய் பட்டுவாடா

 

செய்ததற்கான ஆதாரங்கள், அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கின; அதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, அதை விட தாராளமாக, அரசியல் கட்சிகள் பண பட்டுவாடா செய்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், 'வெற்றி பெற்றதும், வீடு வழங்கப்படும்' என, பல இடங் களில், சீட்டும் வழங்கப்படுகிறது. தொகுதி முழுவதும், பண மழை கொட்டுவதால், மீண்டும் தேர்தல் ரத்தாகும் சூழல் உருவாகி உள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

ரூ.30 லட்சம் பறிமுதல்



* ஆர்.கே.நகர்குடிசை மாற்று வாரிய பகுதிகளில், ஓட்டுக்கு வீடு தருவதாகக் கூறி, மயிலாடுதுறை அ.தி.மு.க., - எம்.பி., பாரதிமோகன் ஆதரவாளர்கள், அவர் கையெழுத்திட்ட, சீட்டுகளை வினியோகித்து உள்ளனர்.தினகரன்ஆதரவாளர்கள்,100க்கும் மேற்பட்டசீட்டுகளை பறிமுதல் செய்து,தேர்தல்கமிஷனில்புகார் அளித்துள்ளனர்.

* சென்னை, கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரில், பண பட்டுவாடாவில் ஈடுபட்ட தினகரன் ஆதரவு, பெண் பிரமுகர் செல்வியை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.ஆனால், 16 ஆயிரத்து, 240 ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்தோம் என, போலீசார் கூறினர். செல்வியை விடுவிக்கக் கோரி, தினகரன் ஆதரவாளர்கள், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்


* சென்னை, தண்டையார்பேட்டை, நேரு நகர் பகுதியில், பட்டுவாடா செய்ததாக, அ.தி.மு.க., பெண் பிரமுகர் ரேவதியை, 28, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 53 ஆயிரத்து, 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


* காசிமேடு, காசிபுரம் பகுதியில், பட்டுவாடா செய்த, அ.தி.மு.க., வை சேர்ந்த, செல்வராஜ், 37, போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து, 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது


* முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை, 789 புகார்கள் பதிவாகி உள்ளன. அதில், 758 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை யாக, 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


* பணப்பட்டுவாடா செய்ய இருந்த, 29 லட்சத்து, 96 ஆயிரத்து, 780 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1920539

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் – வடக்கு மண்டல இணை ஆணையாளர் மாற்றம்

suthagar-premananth.jpg?resize=630%2C422
ஆர்.கே.நகர் தேர்தலில் காவல்துறை அதிகாரிகளை மாற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் வடக்கு மண்டல இணை ஆணையாளர் சுதாகர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  வடக்கு மண்டல இணை ஆணையாளராக போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையாளர் பிரேமானந்த் சின்ஹாவை நியமிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் இந்த மாதம் 21ம்திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை இடைத்தேர்தலில் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து அனைவரையும் தேர்தல் ஆணையகம் மாற்றியிருந்தது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தொகுதிக்குள் மாற்று வாகனங்கள் வரக்கூடாது, அனுமதியில்லாமல் வரும் வெளியூர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மாலை 6 மணிக்கு மேல் வீடு வீடாக வாக்காளர்களை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையகம் விதித்துள்ளது.

ஆனாலும் தொகுதிக்குள் வாக்குகளுக்காக பணக் கொடுப்பனவு எளிதாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பல இடங்களில் வாகனங்களைப் பிடித்து கொடுத்தாலும் காவல்துறையினர் அதைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சுதாகர் வடக்கு இணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வடக்கு மண்டல இணை ஆணையாளராக பிரேமானந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2017/55930/

Link to comment
Share on other sites

'ரூ.6,000 கிடைக்கல':அ.தி.மு.க. அலுவலகம் முற்றுகை
 
 
 

சென்னை,:'ஓட்டுக்கு பணம் கொடுத்த போது, நாங்கள் வீட்டில் இல்லாததால், எங்களுக்கு கிடைக்கவில்லை' எனக்கூறி, அ.தி.மு.க., பணிமனையில், நேற்று வாக்காளர்கள் குவிந்தனர்.

 

'ரூ.6,000 கிடைக்கல':அ.தி.மு.க. அலுவலகம் முற்றுகை

 

வீட்டுக்கு வீடு ரூ. 6000



சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 21ல் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வாக்காளர்களை வளைக்க, கட்சியினர் போட்டி போட்டு, பணத்தை வாரி இறைக்கின்றனர்.
அ.தி.மு.க.,வினர், 16ம் தேதி, ஒரே நாளில் தொகுதி முழுவதும் பணப் பட்டுவாடாவை முடித்தனர். வாக்காளருக்கு, தலா, 6,000 ரூபாய் என, வீட்டுக்கு வீடு பட்டுவாடா செய்தனர்.
இந்நிலையில், 16ம் தேதி பணம் கிடைக்காத வாக்காளர்கள், 100க்கும் மேற்பட்டோர்,

காசிமேட்டில் உள்ள, அ.தி.மு.க., பணிமனையை, நேற்று முற்றுகையிட்டனர். 'பணம் கொடுத்த அன்று, வீட்டில் இல்லாததால், பணம்கிடைக்கவில்லை' எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அங்கிருந்த நிர்வாகிகள், பட்டுவாடா பொறுப்பாளர்களின் மொபைல் போன் எண்களை கொடுத்து, அவர்களை சந்திக்கும்படி கூறி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்களும் கலைந்து சென்றனர்.
 

போலீஸ் குடியிருப்பிலும் வினியோகம்



ஆர்.கே.நகரில், தி.மு.க.,வினரின் தேர்தல் பிரசார பணிகளை, துரைமுருகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.சென்னை, ஆர்.கே.நகரில்,தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, சூரியநாராயணா சாலையில் உள்ள சத்தியா நகரில், அண்ணா நுாலகம் பகுதியில் தி.மு.க.,வினர், நேற்று பிரசாரம் செய்தனர்.

 

அங்கு, முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர், ஒரு காரில் காலை, 11:27 மணிக்கு வந்தனர். அவர்களை, நுாலகத்திற்கு அழைத்து சென்று, தேர்தல் பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர், வேலு தெரிவித்தார். அங்கிருந்தவர்களிடம், 'உங்கள் பிரசார பணிகளை, ஸ்டாலின் பார்த்து வர சொன்னார்' என, துரைமுருகன் கூறினார்.
அப்போது, தொண்டர் ஒருவர், 'அ.தி.மு.க.,காரங்க, அருகில் இருக்கிற காவலர்கள் குடியிருப்பில், ஓர் ஓட்டுக்கு, 6,000 ரூபாய் பணப் பட்டுவாடா செய்தனர். அதை, அசிங்கமே இல்லாமல், அவர்களும் வாங்கினர்' என்று புலம்பினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1921233

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உலகத் தமிழர்களின் வாக்கு யாருக்கு? - ஆச்சரிய அதிர்ச்சி முடிவு #MyVoteInRKNagar #WhoShouldWinRKNagar

 
 

மிழகத்தில் நடக்கும் அத்தனை அரசியல் குழப்பங்களும் எத்திசையில் தீர்விருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் களமாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. 'ஒண்ணாத்தான் இருக்கோம்' என வெளியே சொல்லிக்கொள்ளவாவது இந்த வெற்றி பயன்படுமே என்ற பதட்டத்தில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இதைப் பார்க்கும் தி.மு.க, குஜராத் உற்சாகத்தை இங்கும் அறுவடை செய்யலாம் என நினைக்கும் பா.ஜ.க, ’அ.தி.மு.கவை ஜெயிக்க விடாமல் செய்து ‘நான் யார்’ எனக் காட்டுகிறேன்’ என முஷ்டி முறுக்கும் தினகரன் என களத்தில் பலமான போட்டி நிலவுகிறது. ஆர்.கே.நகர்வாசிகளின் வாக்குகளைப் பெற அனைத்துக் கட்சிகளும் பிரசாரம், பணபலம், அதிகார பலம் என பலவாறாக பரபரத்துக் கிடக்கிறார்கள். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு உலகத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள, சிம்பிளாக ஒரு மிஸ்டுகால் சர்வே நடத்தினோம். 

ஆர்.கே.நகர் தேர்தல்

 

சர்வே தொடங்கிய வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி டி.டிவி தினகரன்தான் லீடிங்கில் இருந்தார். ஆனால், சனிக்கிழமை பகலில் காட்சி அப்படியே மாறியது. தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷுக்கு தாறுமாறாக ஓட்டுகள் விழுந்தன. சனி இரவு மீண்டும் உல்டா. தினகரன் லீடிங்கில் வந்தார். இந்த பரமபத விளையாட்டு சர்வே முடியும் வரையில் தொடர்ந்தது. மறுபக்கம் அஃபிஷியல் அ.தி.மு.க என அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு மிகக் குறைவான ஓட்டுகளே கிடைத்தன. 

மூன்று நாட்கள் பதிவான மிஸ்டுகால் சர்வே முடிவுகளின்படி ஆர்.கே நகரில் குக்கரின் விசில் சத்தம் சற்றே ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், 'விடாதே பிடி' என வெகு நெருக்கத்தில் விரட்டி வருகிறார் தி.மு.கவின் மருதுகணேஷ். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையிலான முன்னிலை நிலவரம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் அடுத்து பெரும் வித்தியாசத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் அ.தி.மு.கவின் மதுசூதனன். ஆச்சரியமாக, பி.ஜே.பி-யை முந்தி நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பிடித்திருக்கிறது. சுவாரஸ்யமாக, அந்தக் கட்சி பெற்ற வாக்குகளில் பாதிக்கும் மேல் வெளிநாட்டு தொலை/அலைபேசிகள் மூலம் பதிவானவை. அதுவும் இரவுகளிலேயே அதிகளவில் மிஸ்டுகால்கள் பதிவாகின நாம் தமிழர் கட்சிக்கு. ஐந்தாவது இடத்தில் சொற்ப சதவிகிதத்தோடு இருக்கிறது குஜராத்தில் வென்ற பா.ஜ.க. மிஸ்டு கால் கொடுத்தே கட்சிக்கு ஆள் சேர்த்தவர்களால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு மிஸ்டு கால் கொடுக்கமுடியவில்லை போல. நோட்டாவுக்கும், சுயேட்சை மற்றும் பிற வேட்பாளர்களுக்கும் சொற்பமாக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 

ஆக, இப்போதைய நிலவரப்படி  தினகரன், தி.மு.கவின் மருதுகணேஷ் இருவருக்கு இடையே எவரேனும் ஒருவர் ஜெயிக்க வேண்டும் என உலகத் தமிழர்கள் நினைக்கிறார்கள். அதன் பின்னரே அ.தி.மு.க. வருகிறது. இவை இணைய நிலவரம்தான். கள நிலவரம் நிச்சயம் வேறுபடும்... தேர்தல் நடைபெறும் நாளுக்குள் களம் இன்னும் அதகளமாகும். மத்திய அரசின் நிர்பந்தம், தமிழக அரசின் செல்வாக்கு, கோடிகளில் விளையாடும் பணம், தி.மு.கவுக்கும் தினகரனுக்குமான போட்டி என பல சக்திகள் இத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும். அவற்றில் எது தேர்தல் முடிவை ஆதிக்கம் செலுத்தும் என்பது இறுதி நிலவரத்தைப் பொறுத்தே அமையும். ஆக, உலகத் தமிழர்களின் மனநிலையை ஆர்.கே.நகர்வாசிகளும் பிரதிபலிக்கிறார்களா என்பதை 24-ந் தேதி தெரிந்து கொள்வோம்.

வாழ்க ஜனநாயகம்!

https://www.vikatan.com/news/rk-nagar/111235-online-voting-for-rknagar-candidates-conducted-by-vikatan.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மூவருக்கு தகுந்த பாடம் புகட்டவே ஆர்.கே.நகர் தேர்தல்: நிறைவு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

 

 
stalinjpg

பிரச்சாரத்தில் ஸ்டாலின்.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மூவருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஸ்டாலின் நேதாஜி சிலை அருகிலும், கலைஞர் நகர் 3-வது தெருவிலும், நிறைவுரையாக வைத்தியநாதன் தெருவிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இன்றைக்கு ஆர்.கே.நகர் மக்களை விலைபேசி 6,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு துணையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் பட்டியல் எங்களுக்கு வந்துவிட்டது. செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது. தேர்தல் முடிந்து, அடுத்த 3 மாதங்களில் சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வந்து, திமுக ஆட்சி அமர்ந்ததும், அவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோரையும் சொல்லவில்லை, தீய சக்திகளாக சிலர் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். தலைவர் கருணாநிதி பெருந்தன்மையோடு அவர்களை மன்னிப்பார். ஆனால், தவறு செய்தவர்களை நாங்கள் நிச்சயமாக விடமாட்டோம். எனவே, உரிய தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள்.

இதைச் சொல்வதற்குக் காரணம், தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் உள்ளது. எனவே, இனியாவது திருந்த வேண்டும். செய்த பாவத்துக்கு பரிகாரம் காண வேண்டும். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளின்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இதைத்தான் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நான் மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடந்த 22 நாட்களாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இன்றைய தினம் பிரதமர் நேரில் வந்து ஆறுதல் சொன்னதாக செய்திகள் வந்திருக்கிறது. பிரதமர் வருகிறார் என்றதும் இங்கிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பறந்து போயிருக்கிறார். ஆனால், கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோது 15 நாட்கள் அங்கு சென்று பார்க்கவில்லை. அங்கு சென்றது கூட பரவாயில்லை, பிரதமர் வந்தால் முதல்வர் போக வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், புயல் பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்கள் கடந்து சென்றபோது, அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் சென்று அமர்ந்து, கூட்டம் நடத்திவிட்டு, அறிவிப்பை வெளியிட்டு விட்டு வந்து விட்டார்.

அங்கிருக்கும் தாய்மார்கள், மீனவர்கள் இறந்தபோது வரவில்லை, ஆனால் காரியத்துக்கு வந்திருக்கிறார், என்று தெரிவித்தார்கள். ஆகவே, இங்கிருக்கும் மீனவ சமுதாய சகோதர, சகோதரிகளை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்கு துரோகம் செய்த இந்த அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

நீங்க தேர்ந்தெடுத்த ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவி வரும் மர்மம் குறித்து உங்களுக்கே நன்றாக தெரியும். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள், இந்த தொகுதிக்கு என்னென்ன துரோகங்கள் செய்வார்கள் என்பதும் உங்களுக்கே நன்றாக தெரியும். ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓபிஎஸ், 2-வது குற்றவாளி ஈபிஎஸ், 3-வது குற்றவாளி சசிகலா. இவர்கள் மூவருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதற்கான வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்'' என்று ஸ்டாலின் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article21941471.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?

அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?

தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கத் துடிக்கும் டிடிவி தினகரன், தங்கள் பக்கமே அ.தி.மு.க. இருக்கிறது; மக்கள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்று காட்டத்துடிக்கும் ஆளும் அ.தி.மு.க, ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி இருக்கிறது என்று நிரூபிக்கத் துடிக்கும் தி.மு.க. என மூன்று துருவங்களால் இழுபடுகிறது சென்னையின் வட பகுதியில் அமைந்திருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசம் இருந்த இத்தொகுதியில் கடந்த ஏப்ரலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்காளர்களுக்குப் பெரிய அளவில் பணம் கொடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் இந்தத் தொகுதியில், செவ்வாய்க்கிழமையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு.

1977ல் உருவாக்கப்பட்டதிலிருந்து பதினொரு முறை தேர்தலைச் சந்திருக்குக்கும் இத்தொகுதியில் அதிக தடவைகள் அ.தி.மு.கவே வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது ஏழு முறை அ.தி.மு.க. இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்தது. காங்கிரஸ் இரண்டு தடவையும் தி.மு.க. இரண்டு தடவையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.

 

2011ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா, 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், தான் மீண்டும் போட்டியிடுவதற்கு இந்தத் தொகுதியையே தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவியாக அப்போது இந்தத் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினமா செய்தார் (இந்த வெற்றிவேல் தற்போது டிடிவி தினகரன் அணியில் இருக்கிறார்).

எதிர்பார்த்ததைப் போலவே அந்தத் தேர்தலில் 88 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் ஜெயலலிதா. அதனால், 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 56 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் அவர்.

2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்த பிறகு, 2017 ஏப்ரலில் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே அணியாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாகவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னமும் கட்சியின் பெயரும் முடக்கப்பட்டிருந்தது. எடப்பாடி - சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு மின் விளக்குக் கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தன. எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இ. மதுசூதனனும் தி.மு.க. சார்பில் மருது கணேஷும் அப்போது வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரையடுத்து வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பாக, தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?

பிறகு, இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென வழக்குகள் எல்லாம் தொடரப்பட்ட நிலையில், இப்போது டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

குறுகலான சாலைகள், குப்பை, போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளில் தவிக்கும் இத்தொகுதி, இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக மூச்சுத் திணறிப்போயிருக்கிறது. அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் தொகுதியின் பல சாலைகள் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனால், ஏற்கனவே நெரிசலாகக் காட்சியளித்த பல சாலைகளில் இப்போது வாக்குகேட்டு நடக்கும் ஊர்வலங்களால் மொத்தமாக முடங்கிப் போயிருக்கின்றன.

தினகரன் பலம் என்ன?

இங்கு யார் வெற்றிபெறுவது என்பது ஒரு புறமிருந்தாலும், தொகுதியின் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டவராக இருக்கிறார் டிடிவி தினகரன். கடந்த முறை, சசிகலா தலைமையிலான அணியில் இருந்த டிடிவி தினகரனுக்காக ஆளும்கட்சி மிகத் தீவிரமாகப் பணியாற்றியது. அதன் தாக்கம் இப்போதும் தொகுதிக்குள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

கடந்த முறை இரட்டை இலை முடக்கப்பட்டதால் தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் இந்த முறை ஒரு சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். தினகரனுக்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அந்தச் சின்னம் தொகுதிக்குள் பிரபலமாகியிருக்கிறது.

குக்கர் படம் பொறித்த கொடிகள், தினகரன் வரும்போது குக்கர் கோலங்கள், தொண்டர்களின் கையில் குக்கர் என எல்லா வழிகளிலும் குக்கரை வாக்காளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார் தினகரன். தவிர, அவரது பிரச்சாரக்கூட்டங்களுக்கு கூடும் கூட்டமும் உற்சாகமும் பிற கட்சிகளை கவலைக்கு உள்ளாக்கவே செய்திருக்கின்றன.

கடந்த முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருந்தபோது தினகரன் தரப்பு மீது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகப் புகார் எழுந்தது. அதே போன்ற புகார் இப்போதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்தப் புகார்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தெம்பாக வலம்வருகிறார் தினகரன். அவர் பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியெங்கும் தோரணங்கள், கோலங்கள், குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் வைபவங்கள், ஆரத்தி என ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர, வீட்டின் மாடிகளிலிருந்து பூ தூவுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஆளும் அ.தி.மு.கவின் வாக்குகளைப் பிரிப்பார் தினகரன் என்று அளவிலேயே கருதப்பட்ட டிடிவி தினகரன், தற்போது வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கிறார்.

தொகுதிக்குள் ஒரு சுற்று சுற்றிவந்தால், ஒருவர் பலமுறை தினகரன் ஆதரவு பிரச்சார ஊர்வலங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. களத்தில் உள்ள வேறு எந்தப் பெரிய கட்சியும் இவ்வளவு தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

பிரச்சாரத்தின் கடைசி நாளில் தினகரன் கூட்டிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொகுதியே ஸ்தம்பித்தது, பிற கட்சிகளை அதிரவைத்திருக்கிறது.

மதுசூதனனுக்குள்ள வாய்ப்புகள்

ஆளும் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிடும் இ. மதுசூதனனுக்கு இந்த முறை இங்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் அழுத்தத்தால் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்திருப்பது மதுசூதனன் தரப்புக்கு மிகப்பெரிய பலம். தவிர, தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைக்காதது, தினகரனின் பிரச்சாரத்தில் துவக்கத்தில் இருந்த தொய்வு ஆகியவற்றால் ரொம்பவுமே தெம்பாகக் காட்சியளித்தது அ.தி.மு.க. ,

கடந்த 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றியவர் மதுசூதனன். அதன் பிறகு பெரிதாக அவருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியிலேயே வெகுநாட்கள் இருந்தவருக்கு இப்போது மீண்டும் தேர்தல் அரசியலில் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கும் மதுசூதனனுக்கும் ஒத்துப்போகாது என்பது ஒரு பலவீனம்.

தவிர, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசின் மீது பரவலாகக் காணப்படும் அதிருப்தியும் மதுசூதனுக்கு எதிராக உள்ளது.

இருந்தபோதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் மதுசூதனனுக்காக தீவிரமாக வாக்குவேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், இரட்டை இலைச் சின்னம் இருப்பதாலேயே மதுசூதனுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துவிடுமா என்பது கேள்விக்குறிதான்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.கவைத்தான் குறிவைத்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். சில சந்தர்ப்பங்களில் தினகரனின் பெயரைச் சொல்லாமல் அவரைத் தாக்குகிறார்.

திமுக-வின் வாய்ப்புகள்

அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?

தி.மு.க. வேட்பாளர் மருத கணேஷ், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டவர் என்பதால் இப்போது தொகுதிக்குள் நன்றாக அறிமுகமாகியிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியும் அக்கட்சியின் வாக்குகளை தினகரன் பிரிப்பதும் தி.மு.கவுக்கு உள்ள சாதகமான அம்சம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர், தொகுதியின் பிரச்சனைகளை நன்றாக அறிந்தவர் என்ற பலத்துடன் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் மருது கணேஷ்.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளும் தி.மு.கவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்தக் கட்சிகளின் வாக்குகளில் பெரும் பகுதி தி.மு.கவிற்குக் கிடைக்கக்கூடும்.

ஆனால், இந்தத் தொகுதி எப்போதுமே தி.மு.கவிற்கு கைகொடுக்காத தொகுதி என்பது இக்கட்சியின் மிக முக்கியமான பலவீனம்.

அ.தி.மு.கவும் டிடிவி தினகரனும் யார் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பது போன்ற திசையில் தேர்தலைக் கொண்டுசெல்ல, தி.மு.க. தொகுதியிலிருக்கும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டுப் பேசுகிறது. ஆனால், அ.தி.மு.க., டிடிவி தினகரன் தரப்பு பிரச்சாரத்தில் காணப்படும் உற்சாகமும் பரபரப்பும் தி.மு.க. பிரச்சாரத்தில் தென்படவில்லை. முழுக்க முழுக்க ஆளும்கட்சி மீதான அதிருப்தியையும் நம்பி களமிறங்கியிருக்கிறது தி.மு.க.

இதற்கு நடுவில், பா.ஜ.கவின் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரச்சினைகள் மலிந்த தொகுதி

சுமார் 2,19,409 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதி சென்னையின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று. சென்னையின் மிகப் பழைய பகுதியான இத்தொகுதியில் குறுகிய சாலைகளும் சிறு சிறு சந்துகளும் அதிகம். தீராத குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல், ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு என பிரச்சனைகளுக்குப் பஞ்சமே இல்லாத தொகுதி இது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிறகு குடிநீர் பிரச்சனை ஒரளவுக்குச் சரிசெய்யப்பட்டிருக்கிறது. குப்பைகளும் ஒழுங்காக அள்ளப்பட்டுவந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் குப்பைகூளங்களுடன் காணப்படுகிறது இந்தத் தொகுதி.

இந்தத் தொகுதியில் ஒரு கலைக் கல்லூரியும் பாலிடெக்னிக்கும் கட்டப்படும் என தேர்தல் வாக்குறுதியளித்தார் ஜெயலலிதா. சொன்னபடி கலைக்கல்லூரி கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குள் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குன்றியதால் அந்தக் கட்டடம் திறக்கப்படாமலேயே இருக்கிறது. இருந்தபோதும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் இரண்டு பிரிவுகளுடன் இந்தக் கல்லூரி நடந்துவருகிறது.

குப்பைக் கிடங்கு

இதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த ராதாகிருஷ்ணன் நகரிலும் நூலகங்கள், வங்கிக் கிளைகள் குறைவு என்ற குறையையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

ராதாகிருஷ்ணன் நகரின் மிக முக்கியமான பிரச்சனை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு. இந்த குப்பைக்கிடங்கு, தொகுதிக்குள் வரவில்லை என்றாலும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை ஒட்டியுள்ள எழில்நகர் பகுதிகளை ஒட்டிதான் இக்கிடங்கு அமைந்துள்ளது.

அனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு?

வட சென்னையின் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படும் இடம் இதுதான். இதனால், இதைச் சுற்றி வசிக்கும் மக்கள் அனைவரும் கொசுத்தொல்லை, நிலத்தடி நீர் மாசடைந்திருப்பது, காற்றில் பரவியிருக்கும் துர்நாற்றம் ஆகியவற்றால் எப்போதும் அவதிப்பட்டுவருகின்றனர். "தமிழ்நாட்டில் அதிகம் புற்றுநோயாளிகள் உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று" என்கிறார் சிபிஐயின் சி. மகேந்திரன்.

தற்போது இந்த குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுவிட்டாலும், ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மை அவசியம் என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

இந்தத் தொகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள். ஆகவே ரேஷன் கடைகள் சரியாக இயங்குவது மிக அவசியம் என்கிறார்கள் இப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள்.

கரைபுரளும் பணம்

ஆனால், எந்த வேட்பாளருக்கு களம் சாதகமாக உள்ளது என்பதைக் கணிக்க முடியாத வகையில் பணம் கரைபுரண்டு ஓடுகிறது. தொகுதி முழுவதும் கண்காணிப்பு இருந்தாலும் அதை மீறி பல கட்சிகள் பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் ஆகியோர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளன. தேர்தல் ஆணையமும் காவல்துறையும் இதுவரை லட்சக் கணக்கான ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால், இம்மாதிரி பணம் பறிமுதல் செய்யப்படும்போது பொதுமக்களில் சிலரே இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது பிற கட்சிகளுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்களுக்கு நேரடியாக அளிக்கப்படும் பணம் தவிர, பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், வரவேற்பு ஆகியவற்றுக்கும் பெரும் தொகையான பணம் வேட்பாளர்களால் அளிக்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/india-42410614

Link to comment
Share on other sites

ஜெ. வீடியோ வெளியீடு: வெற்றிவேல் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிய ராஜேஷ் லக்கானி உத்தரவு

 

 
download

ராஜேஷ் லக்கானி, வெற்றிவேல் வீடியோ வெளியிட்ட காட்சி   -  வெற்றிவேல் படம்: எல் சீனிவாசன்

ஜெயலலிதா சிகிச்சை பற்றிய பல தகவல்கள் உலாவந்த நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற வீடியோவை வெற்றிவேல் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த செப்.22 அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் திடீர் மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் அவரைப்பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அவர் சிகிச்சை பெற்றது குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் பலரும் சந்தேகம் எழுப்பினர். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் நீதி விசாரணை கோரினார்.

இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும், டிடிவி தினகரன் சுயேச்சையாகவும், மருது கணேஷ் திமுக சார்பிலும் நிற்கும் இந்த தேர்தலில் பிரச்சாரம் நிறைவுப்பெற்று நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில் இன்று காலை திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல்.

இது தேர்தல் விதிமீறல் ஆகாதா? என்ற கேள்விக்கு, "ஆர்.கே.நகர் ஒரு தொகுதி இது தமிழகம் முழுதும் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் எழுப்புபவர்கள் கண்டபடி பேசுவதை மனம் பொறுக்க முடியாமல் வெளியிடுகிறேன், நான் இதை வைத்து தேர்தல் பிரச்சாரமா செய்கிறேன்?" என்று வெற்றிவேல் பதிலளித்தார்.

தேர்தல் விதிமீறல் என்று பல அரசியல் கட்சித்தலைவர்கள் பதிலளித்தபோதும் தேர்தல் ஆணையம் பதிலளிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது தேர்தல் விதிமீறல் ஆகும். ஆகவே அவர்மீது விதிமீறல் வழக்கு 126(1பி) கீழ் வழக்குப்பதிவு செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22009136.ece?homepage=true

Link to comment
Share on other sites

கைதாகிறாரா வெற்றிவேல்?

 
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் கைதாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெற்றிவேல்

 
 

ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பினர் இன்று காலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். தற்போது இந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுவருகின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள உத்தரவில், ``ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது ’126 பி’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்” எனத் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் வெற்றிவேல் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/111334-vetrivel-to-get-arrested.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.