Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!!

என்ட மகனோட குமரப்பா, புலேந்திரன், ரகு, லாலாரஞ்சன், சீலன், மாத்தையா, செல்லக்கிளி அம்மான் எல்லாரும் அடிக்கடி வெளியில போய் வருவினம். ஆனா தலைவர் மட்டும் என்ட மகன்ட அறைக்குள்ள இருந்து இயக்க வேலையள பார்த்துக்கொண்டிருப்பார்.

அந்த நேரங்களில் நான் தனியா சமைக்கும் போது, எனக்கு விறகு வெட்டி ஒத்தாசையா இருப்பார். சில வேளை சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்கும் அந்த நேரத்தில் மரவள்ளி கிழங்கு தான் மூண்டு நேர சாப்பாடா இருக்கும்.

இப்பிடி தான் என்னோட பிள்ளைகள் இந்த மண்ணுக்காக போராடினதுகள்.

அந்த அற்புத தலைவனை நான் மீளவும் ஒருக்கா பார்க்க வேணும். அவர் மீள வரவேணும்...

இதனை கூறியவர் 1985 இல் அச்சுவேலி சுற்றிவளைப்பில் வீரமரணமடைந்த கப்டன் பண்டிதருடைய தாயார் மகேஷ்வரி.

(இதை சொல்லி முடிக்கும் போது அந்த தாயின் கண்களில் கண்ணீர் முட்டியது)

நாளை தலைவருக்கு அகவை 63

#HBDPrabhakaran

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

நீங்க சொல்றீங்க, ஆனா, பல ராணுவ நெருக்கடிகளின்போதெல்லாம் சாதிகொடுமை என்றபேரில் அவர்கள் குடும்பமும், தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த  பண்டிதர் கட்டவுட்டுக்களும் தள்ளி வைக்கப்பட்டதே தமிழீழ வரலாற்று சோகம்!  இப்போகூட பலருக்கு நீங்க சொல்லித்தான் பண்டிதர்பத்தியும் தெரிஞ்சிருக்கலாம்!  ராணுவம் வடக்கை கைப்பற்றியதும் பலபேர் ’வீ’ர’ சப்தங்கள் அடங்கிபோயின  ஆனா ராணுவம் முழுதாய் சுத்தி வர இருக்கும் சூழலிலும்... நிஜமான விடுதலையை நேசித்த ஒரு மாவீரனின் தாய் மட்டும் சத்தமா பேசுறா ...இங்குதான் உண்மையான தியாகத்துக்கு அர்த்தம் என்ன என்று நாங்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரையும் விடுதலை போராட்டத்தையும் காரணம் காட்டி நம்மாளு புலம்பெயர தொடங்கியதிலிருந்து தமிழனின் விடுதலை உணர்வுக்கு ரொம்ப பேரு சங்கு ஊதிட்டாங்க. இயக்கம் எதிரியுடன் ஆயுதம் கொண்டு போராடிய அதே வேளையில் விடுதலையில் பற்றுறுதியற்று தடுமாறும் தமிழ்மக்களின் மனோநிலையுடன் ஒரு தார்மீகப் போராட்டைத்தையும் நடாத்திக்கொண்டிருந்தனர் என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.