Jump to content

எல்லா மாதம் போலல்லாத கார்த்திகை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தினமும் 

யாரோ ஒரு 
தோழனின் ஞாபகம் 
தோழியின் ஞாபகம் 
வந்தே போகும்
அதுவே எங்கள் 
விடுதலையின் விலாசம். 
 
ஆயினும் கார்த்திகை மாதம் 
கண்ணீரால் கரைந்து
கனக்கும் சோகம் 
சொல்லிப்புரிவிக்க இயலாத பாரம். 
 
எல்லா மாதம் போலல்லாத
கார்த்திகையே எங்கள்
காவியங்கள் கண்திறந்து 
கதை சொல்லும் காலம். 
 
எத்தனையோ ஞாபகங்கள்
அத்தனையும் ஒருசேர
உயிர் வேகும் மாதமிது. 
 
உயிர் போகும் வரையுமெங்கள்
ஊர்காத்து உயிர் காத்த வீரர்களை
உயிர் கரைய நினைவேந்தும் மாதம். 
 
சாந்தி நேசக்கரம் 
11. 11. 17
 

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.