Jump to content

சிக்கன் ஸ்டிர் ஃப்ரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவையானவை:

 

போன்லெஸ் சிக்கன் - 200 கிராம்

எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய பூண்டு - ஒன்றரை டீஸ்பூன்

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் (இடித்தும் சேர்க்கலாம்)

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்

கேரட் - 1 (மெல்லிய நீளமாக நறுக்கவும்)

பச்சை கேப்ஸிகம் - 1 (விதை நீக்கிவிட்டு நீளமாக நறுக்கவும்)

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் (தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ளவும்)

 

செய்முறை :

 

சிக்கனை நன்கு சுத்தம் செய்து சுண்டுவிரல் நீளத்துக்கு நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் நான் - ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதுமே சிக்கனை சேர்த்து வதக்கவும்.

சிக்கனின் பச்சை வாசனை போனதும் நறுக்கிய கேரட், கேப்ஸிகம் சேர்த்து அடி பிடிக்காமல் மிதமான தீயில் கிளறி வேகவிடவும். சிக்கன் வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கினால் சிக்கன் ஸ்டிர் ஃப்ரை ரெடி.

குறிப்பு:

சிக்கன் முழுமையாக வேக சற்று கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதாலேயே வெங்காயம் பாதி வதங்கியதுமே சேர்த்து விடுகிறோம். சிக்கனை இன்னும் மெல்லியதாகவும், சிறிய துண்டுகளாகவும் நறுக்கினால் விரைவாக வெந்துவிடும். கேரட், கேப்ஸிகம் விரும்பாத பேச்சுலர்கள் அதை நீக்கிவிட்டு கூட செய்யலாம். கலர் கம்மியாக, கேரட், கேப்ஸிகத்தின் மணம் இல்லாமல் இருக்கும் அவ்வளவே. இன்னும் கூடுதல் சுவைக்கு வொர்சிஸ்ஷெர் சாஸையும் (worcestershire sauce) பயன்படுத்தலாம். இந்த சாஸின் விலை கூடுதலாக இருக்கும். புளிப்புச் சுவையை விரும்புபவர்கள் சோயா சாஸை உங்கள் சுவைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளலாம்.

Image may contain: food
FB
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.