Jump to content

தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு


Recommended Posts

  • தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு
தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு
 
 

தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு

 
 

இலங்­கை­யின் தலைமை அமைச்சரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரு­டன் பல்­வேறு விட­யங்­கள் தொடர்­பாக விரி­வான பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ளார். இதன்போது இந்­தி­யத் தரப்­பி­லி­ருந்து இலங்­கைக்கு உத­வி­கள் வழங்­கு­வது தொடர்­பாக சாதக மான சமிக்­ஞை­கள் காட்­டப்­பட்­டுள்ளன.

இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் எந்த விட­யத்தை­ எடுத்­துக்­கொண்­டா­லும் சொந்­தக் காலில் நிற்­கக்­கூ­டிய வல்­ல­மை­யை அது கொண்­டி ­ருக்­க­வில்லை என்­பது தெரிந்த விட­ய­ம் தான்.

பிற நாடு­க­ளி­டம் கடன்­பெற்றோ அல்­லது உத­வி­களைப் பெற்றோதான் தனது தேவை­களை நிறைவு செய்து கொள்­வ­தை இந்த நாடு வழக்­க­மா­க்கிக் கொண்­டுள்­ளது.தற்­போது வெளி நாடுகளிடமிருந்து அள­வுக்கு மீறிப் பெற்­றுக்­கொண்ட கடன்­க­ளைத் திருப்­பிச் செ­லுத்­து­வ­தில் அதிக சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றது.

மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் சீனா அதிக வட்­டிக்கு பெரும் தொகை­யான கடன்­களை இலங்கைக்கு வழங்­கி­யது. கேள்வி கேட்­ப­தற்கு எவ­ரு­மில்­லாத நிலை­யில் மகிந்த தலை­மை­யி­லான அரசு அவற்­றைச்­செ­ல­விட்­டது. நாட்­டுக்­குத் தற்­போது பெரும் சுமை­க­ளாக மாறி­யுள்ள அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கம்,மத்தள வானூர்தி நிலை­யம் ஆகி­ய­வை பெ­ரும் தொகை­யான நிதி­யைச் செல­விட்டு அமைக்­கப்­பட்ட போதி­லும், அவை பயன்­ப­டாத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன.

ஆனால் அவற்­றுக்கு செல­வி­டப்­பட்ட கடன்­தொகை வட்­டி­யு­டன் சேர்ந்து நாட்டு மக்­க­ளின் தலையை நெரித்து வரு­கின்­றது. ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் விடு­கின்ற தவ­று­கள் இறு­தி­யில் நாட்டு மக்­க­ளையே பாதித்து விடு­கின்­றன.

 

மோடியின் தலைமையிலான அரசுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை கிடையாது

இலங்­கை­யைப் பொறுத்த வரை­யில் சீனா­வு­ட­னும், இந்­தி­யா­வு­ட­னும் உற­வைக்­கொண்­டி­ருக்­கவே அந்த நாடு விரும்பு­கின்­றது. தனது பொரு­ளா­தார தளம்பல் நிலையை சமாளிக்க வேண்­டு­மென்­றால் இதைத்­த­விர வேறு வழி­யொன்­றும் இந்த நாட்­டுக்கு இல்லை. இலங்கை கேந்­திர முக்­கி­யத்­து­வம் மிக்­க­தொரு இடத்­தில் அமைந்­துள்­ள­தால், இந்­தியா மற்­றும் சீனா ஆகிய நாடு­கள் இலங்கையு டன் சுமூக உறவு கொண்­டி­ருக்­கவே விரும்­பு­கின்­றன.

இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி­ யு­ட­னான சந்­திப்­பின்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்­கைத் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சினை தொடர்­பா­கக் கதைத்­தாரா என்­பது குறித்து எதுவும் தெரி­ய­வில்லை. அவ்­வாறு கதைத்­த­தற்­கான அறி­கு­றி­யும் தென்­ப­ட­வில்லை. மோடி கூட அனைத்து வழி­க­ளி­லும் இந்­தியா இலங்­கைக்கு உத­வு­மென்ற உறு­தி­மொ­ழியை வழங்­கி­னாரே தவிர, தமி­ழர்­கள் தொடர்­பாக வாயைத் திறக்­க­வே­யில்லை.

இந்­தி­யத்­த­லைமை அமைச்­சர் தாம் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்தபோது தமி­ ழர்­கள் தொடர்­பாக வழங்­கிய வாக்­கு­றுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்­தி­ரா­காந்தி அம்­மை­யா­ரின் மறை­வுக்­குப்­பின்­னர் ஈழத் தமி­ழர்­கள் தொடர்­பான இந்­தி­யா­வின் கொள்­கை­ நிலைப்பாட்டில் பெரும் மாற்­றம் ஏற்­பட்­டு­விட்­டது. அம்­மை­யார் ஈழத் தமி­ழர்­கள் மீது நிறை­யவே அனு­தா­ப­முள்­ள­வ­ரா­கத் திகழ்ந்­தார்.

1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்­க­ல­வ­ரத்­தில் தமி­ழர்­கள் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­ட­னர். இதை­ய­றிந்த அம்­மை­யார் இந்­தி­யா­வின் அயலுறவுத்துறை அமைச்­ச­ரா­க­
வி­ருந்த பி.வி.நர­சிம்மராவை இலங்­கைக்கு அனுப்பி வைத்­தார். அவ­ரது வருகை கல­வ­ரத்தைத் தணிப்­ப­தற்­குப் பெரி­தும் உத­வி­யது.

 

தமிழ் இளைஞர்களது ஆயுதப் போராட்ட முயற்சிக்கு ஆதரவளித்த இந்திராகாந்தி

இலங்கையின் சிங்கள அரசுகள் தமி­ழர்­க­ளுக்கு எது­வுமே செய்­யா என்­பதை நன்­கு­ணர்ந்து கொண்ட இந்­தி­ர­காந்தி அம்­மை­யார் தமிழ் இளை­ஞர்­க­ளுக்­குப் ஆயுதப் ப­யிற்­சி­களை இந்­தி­யா­வில் வைத்து வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டார்.இந்த இளை­ஞர்­களே இலங்­கை­யில் ஆயு­தப் போராட்­டத்தை ஆரம்­பித்து நடத்­தி­னார்­கள்.

ஆனால் அம்­மை­யா­ரின் அகால மறை­வுக்கு பின்­னர் ஆட்­சி்க்கு வந்த அவ­ரது புதல்­வ­ரான ராஜிவ்­காந்தி இலங்கை அர­சுக்­குச் சார்­பான கொள்­கை­க­ளையே கொண்­டி­ருந்­தார். எந்­த­வி­த­மான சட்ட வலு­வும் இல்­லாத ஒப்­பந்­தம் ஒன்றை இலங்கை அர­சு­டன் இவர் செய்து கொண்­டார். இதன் மூல­மாக வடக்­கும் கிழக்­கும் இணைக்­கப்­பட்­ட­தா­கப் பெரி­தா­கக் கூறப்­பட்ட போதி­லும் நீதி­மன்­றத் தீப்­பொன்­றின் பிர­கா­ரம் அந்த இணைப்பு இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டது.

விடு­த­ லைப் புலி­களை குறுகிய காலத்துள் ஒழித்­து­வி­டு­வது என்ற நோக்­கோடு இங்கு அனுப்பி வைக்­கப்­பட்ட அமை­திப்­படை என்ற பெயர் தாங்­கிய இந்­தி­யப்­ப­டை­கள் தமி­ழர்­க­ளுக்­குச் செய்த அட்­டூ­ழி­யங்­கள் வர­லாற்­றில் மறக்க முடி­யா­தவை. இறு­தி­யில் தமது நோக்கத்தில் தோல்வி யுற்று தாய் நாட்­டுக்­கு வெறும் கையு டன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை இந்தியப் படைகளுக்கு ஏற்பட்டது. பெரும் உயி­ரி­ழப்­புக்­க­ளை­யும் அவை எதிர்­கொண்­டன. ராஜிவ் காந்­தி­யின் படு­கொ­லை­யின் பின்­னர் ஈழத்­த­மி­ழர்­கள் மீதான அனு­தா­பம் இந்­திய அர­சி­ட­மி­ருந்து முற்­றா­கவே மாறிவிட்டது.

 

இறுதிப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா

இறு­திப்­போ­ரின்­போது இந்­தியா இலங்­கை அரசுக்கு சகல வகை­யி­லும் உத­வி­யது. புலி­களை முற்­றாக அழிக்க வேண்­டும் என்ற எண்­ணமே அந்த நாட்­டி­டம் நிறைந்து காணப்­பட்­டது. தமிழ்­மக்­க­ளைப் பற்­றிய சிந்­தனை சிறிதுகூட அத­னி­டம் காணப்­ப­ட­வில்லை. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­டமை கூட இந்­தி­யா­வின் மனச்­சாட்­சியை உலுப்­ப­வில்லை.

ஆனால் இலங்கை அர­சுக்கான அதனது ஆத­ரவு தொட­ரத்­தான் செய்­கின்­றது. சீனா இலங்­கை­யில் கால் பதிப்­பதை விரும்­பாத இந்­தியா இலங்­கையை அர­வ­ணைத்­துச் செல்­வ­தில் ஆர்­வம் காட்டி வரு­கின்­றது.
இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி­ யும் ஈழத்­த­மி­ழர்­க­ளைக் கைவிட்டு விட்­டார் என்­று­தான் கூற வேண்­டும். அவர் இலங்­கைக்கு வருகை தந்த போது கூறிய வார்த்­தை­களையும் அவர் மறந்து விட்­டார்.

ஈழத்­த­மி­ழர்­கள் இலவு காத்த கிளி­யின் நிலை­யில்­தான் தற்­போது உள்­ள­னர். தமது பிரச்­சி­னை­க­ளுக்­கெல் லாம் தீர்வு கிடைக்­கு­மென்ற அவர்­க­ளது நம்­பிக்கை நிறை­வே­றுமா என்­பது சந்­தே­கமாகவே உள்ளது. இவர்­கள் இனி­யும் இந்­தி­யாவை நம்­பி­யி­ருப்­ப­தில் பய­னொன்­றும் கிடைக்காது. ஏனென்­றால் தீர்­வுக்­கான ஒளிக்­கீற்றை வெகு தூ­ரத்­தில் கூட காண முடி­ய­வில்லை.

http://newuthayan.com/story/52877.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊடகங்கள் சில "கோமா"விலிருந்து எழும்பியதுபோல் அப்பப்போ செய்திகளையும் ஆய்வுகளையும் தவறான கருத்துருவாக்கக் கட்டுரைகள்(கட்டுக்கதைகள்)ஐயும் வெளியிடுகின்றன. எப்போதாவது இந்திராகாந்தியால் தமிழருக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுத்திருக்கமுடியுமா(?) என்றெல்லாம் சிந்திக்கவே மாட்டார்களா இந்த ஊடகப் பிரதானிகள்.

இந்தியா இருக்கட்டும் முதலில் சம்பந்தரையாவையும் சுமந்திர மகாத்தய மாமாவையும் தீர்வுகுறித்துப் பேசுமாறு கேட்கலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரா காந்தி பற்றிய புரிதல் மிகவும் தவறானது.

இந்திரா காந்திக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தவிர ஏனைய இயங்களிட்ற்கு வெளிப்படையான அரசியல் அங்கீகாரம் வழங்கி, ஏன் ஈழத்தமிழரின் பிரதி நிதிகளாக உத்தியோக பற்றற்ற முறையில் கூட ஏற்க்கவில்லை.

இதை புலிகளும் ஏனைய இயக்கங்களும் பெரிது படுத்தாமல் தம்மை இராணுவ-அரசியல் சக்தியாக வலிமைப்படுத்துவதிலும், வளப்படுத்துவதிலும், வளர்த்தெடுப்பதிலுமே  கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

ஆயினும், புலிகலின் தலைமை ஒன்றில் குறியாக இருந்ததது. அதவாது, இந்தியா என்கின்ற அரசும், அதன் அரச இயந்திரமும் மற்றும் வெளிநாட்டுக்கு கொள்கையும், தமிழீழம் என்ற சுதந்திர தேசம் அமைக்கப்படு வதிற்கு எவ்வளவு தூரம் தானே (இந்திய அரசு) முன்வந்து தடுக்கும் என்பதை அனுபவ வாயிலாக அறிவதற்கு புலிகலின் தலைமை மிகவும் முயறசி எடுத்தது. இந்தியாவின் புலிகளை நோக்கிய அணுகுமுறை அத்தகைய புரிதலை புலிகள் வளர்பதற்கு மிகவும் ஏதுவாக அமைந்தது.  இந்திய அரசின் புலிகளை நோக்கிய அணுகு முறை மிகவும் முறைசாரா, உத்தியோக பற்றற்ற தரத்திலேயே இருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இந்திரா காந்தி எத்தகைய புரிதல்களை கொண்டிருந்தார் என்பது அமிர்த லிங்கத்திற்கு கூட தெரிந்திருக்குமா, அப்படி  தெரிந்திருந்தால் அமிர்த லிங்கம் இந்திரா காந்தியின் நிலைபாட்டுகளை  தெளிவான புரிதல் கொண்டிருந்தாரா என்பது சந்தகமே.

அண்மையில் கூட யதீந்திராவின் ஓர் ஆய்வில்  அமிர்த லிங்கம், இந்திரா காந்தி மற்றும் பார்த்த சாரதி தான் கேள்விப்பட்ட ஓர் உரையாடலை பற்றி  குறிப்பிட்டிருந்தார். அந்த உரையாடலில், இந்திரா காந்தி மிகவும் தெளிவாக (no mincing of words or beating the bush) அமிர்தலிங்கத்திற்கு, பார்தஹ் சாரதி முன்னிலையில், "இலங்கை இனப் பிரச்னைக்கு இந்தியா பெரும்பான்மையினர் மனம் நோகாத படி ஓர் தீர்வீடிற்கு ஆதரவு அளிக்கும்."

அரசியல் ராஜ தந்திரத்தில் கூட புலிகள் இந்தியாவை விஞ்சி விட்டார்கள். ஏனெயவர்கள் தெரிந்து தெரியாமலோ ஏமாந்து விட்டார்கள். இதனால் தான் புலிகளை இந்திய ஒரு போதும், ஈழத்து தமிழின அழிப்பை விடுத்தது, கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. நடந்து முடிந்தவை சமீபத்திய வரலாறு.

தற்போதைய நிலைமைகளின் படி, ஈழத்து தமிழினத்தின் தனித்துவமும் அடையாளமும் பேணப்படுவது, பெரும்பான்மை இனத்தவரின் மனதையும் மதியையும் வெந்தணலாக எரித்துக்கொண்டிரிருக்கிறது.

இந்தியாவின் நகர்வுகளை இதில் இருந்தே புரியலாம்.

Link to comment
Share on other sites

இதுக்கு கிந்தி தெரியாது.
அதுக்கு சிங்களம் தெரியாது.
ரெண்டுக்கும் இங்லிஷ் தெரியாது.
உருப்பட்டாப்போலதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.