• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • டுபாயிலும் கொரோனா வைரஸ்   ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது  நபர் இனங்காணப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் கொரோனா வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தாய்வான் மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.  இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்தில்  சீனாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ‘சீனாவின் வுகான் நகரிலிருந்து இங்கு வந்துள்ள குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அவர்கள் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது’ என அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/டபயலம-கரன-வரஸ/50-244708
    • T20 அரங்கில் 30ஆவது அணிக்காக விளையாடவுள்ள பொல்லார்ட் By Mohammed Rishad -     மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கிரென் பொல்லார்ட் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற 32 வயதான கிரென் பொல்லார்ட் தற்போது மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.  இந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்காக இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்டில் நொர்தம்ப்டன்ஷெயார் அணியில் விளையாடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவர் விளையாட இருக்கும் 30ஆவது டி20 அணியாகும்.    பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடிவரும் பொல்லார்ட், இதுவரை ஒட்டுமொத்தமாக 499 போட்டிகளில் விளையாடி 9,966 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.  நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாடுவது குறித்து பேசிய அவர், “இங்கிலாந்து கழகமொன்றுக்கான டி20 போட்டித் தொடரொன்றில் விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார். இதுஇவ்வாறிருக்க, நொர்தம்ப்டன்ஷெயார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ரீப்ளே கருத்து வெளியிடுகையில், “கிரென் பொல்லார்ட் பற்றி நான் பலரிடம் பேசியுள்ளேன். எல்லோரிடமிருந்தும் அவர் ஒரு வெற்றியாளர் என்பதுதான் பதிலாக கிடைக்கும். டி20 போட்டிகளில் அருமையான பல சாதனைகளை படைத்துள்ள அவர் ஒரு சிறந்த போட்டியாளர்” என கூறினார். முன்னதாக 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சமர்செட் அணிக்காக பொல்லார்ட் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக இம்முறை பொல்லார்ட் 8 போட்டிகளில் விளையாடவுள்ளார். இதன் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி டர்ஹம் அணிக்கெதிராக நடைபெறவுள்ளது.  இதேவேளை, நொர்தம்ப்டன்ஷெயார் அணி 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் டி20 பிளாஸ்ட் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டதுடன், கடந்த பருவத்தில் 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது.  http://www.thepapare.com/kieron-pollard-joins-northamptionshire-vitality-blast-tamil/
    • விதிமுறை மீறிய குற்றச்சாட்டில் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்   By Akeel Shihab -   AFP   சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது ஐ.சி.சி போட்டி ஊதியத்திலிருந்து அபராத தொகை விதித்துள்ளதுடன் ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.   தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் விளையாடுகிறது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் (27) நிறைவுக்குவந்த நிலையில் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.  இந்நிலையில் குறித்த போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் தென்னாபிரிக்க அணி 466 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடியது. இதில் தென்னாபிரிக்க அணித்தலைவர் பெப் டு பிளஸிஸ் 35 ஓட்டங்களை பெற்று பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெப் டு பிளஸிஸ் ஆட்டமிழப்பதற்கு முன்னர் களத்தில் துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கும் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட், பெப் டு பிளஸிஸுடன் முரண்பட்டார்.  இதன் போது மைதானத்தில் வைத்து ஸ்டுவர்ட் ப்ரோட் பெப் டு பிளஸிஸுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார். பின்னர் நடுவர்கள் விரைந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். போட்டி நிறைவடைந்ததன் பின்னர் களநடுவர்களாக செயற்பட்ட ரொட் டக்கர், ஜொய்ல் வில்சன், மூன்றாம் நடுவர் ப்ரூஸ் ஒக்ஸன்பேர்ட் மற்றும் நான்காம் நடுவர் அலஹ்டீன் பலேகர் ஆகியோரினால் போட்டி மத்தியஸ்தரிடம் குறித்த நிகழ்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.    இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையில் வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நடத்தை கோட்பாடுகளை உள்ளடக்கும் இலக்கம் 2.3 இன் படி சர்வதேச போட்டியொன்றின் போது உபயோகிக்கக்கூடாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதன் அடிப்படையில் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி போட்டி மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் குறித்த சம்பவத்திற்காக தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மாத காலப்பகுதியில் ஸ்டுவர்ட் ப்ரோட் இரண்டாவது தகுதி இழப்பீட்டு புள்ளியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, நிறைவுக்குவந்த குறித்த இறுதி டெஸ்ட் போட்டியில் மாத்திரம் நான்கு முறை அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு பதிவாகியுள்ளது. ஒழுக்க விதிமுறை மீறலுக்காக பென் ஸ்டோக்ஸ், வேர்னன் பிளாண்டர் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோருக்கும், குறைந்த பந்துவீச்சு பிரதி காரணமாக தென்னாபிரிக்க அணிக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  http://www.thepapare.com/stuart-broad-fined-for-breaching-the-icc-code-of-conduct-tamil/
    • நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி By A.Pradhap - ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 362 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி, மதியபோசன இடைவேளைக்கு முன்னர் 406 ஓட்டங்களை குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணி சார்பாக சேன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 107 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, சிக்கண்டர் ரசா 72 ஓட்டங்களையும், ப்ரெண்டன் டெய்லர் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இன்றைய தினம், டினோடெண்டா முடொம்போட்ஷி 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுகளை வீழ்த்த, தனன்ஜய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, மதியபோசன இடைவேளையின் போது, விக்கெட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, தொடர்ந்து துடுப்பாட்டத்தை நகர்த்தியது. இதில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும், 94 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், திமுத் கருணாரத்ன, சிக்கண்டர் ரசாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த குறுகிய நேரத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஓசத பெர்னாண்டோவும் விக்கெட்டினை பறிகொடுத்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் மீண்டும் இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். எனினும், மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்படும் போது, இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் தலா 44 ஓட்டங்களையும் பெற்ற நிலையில், குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களையும் அஞ்செலோ மெதிவ்ஸ் 4 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் சிக்கண்டர் ரசா மற்றும் டொனால்ட் டிரிபானோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதேவேளை, இலங்கை அணியானது ஜிம்பாப்வே அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை எட்டுவதற்கு இன்னும் 284 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.     Stumps     Sri Lanka 122/2 (54)   Zimbabwe 406/10 (115.3)     Updated at 08:31 PM 2020-01-28 Zimbabwe 1st Innings   Batsmen R B 4s 6s SR Prince Masvaure c Niroshan Dickwella b Lahiru Kumara 9 44 1 0 20.45 Kevin Kasuza b Suranga Lakmal 38 97 4 0 39.18 Craig Ervine c Oshada Fernando b Dhananjaya de Silva 12 11 1 1 109.09 Brendan Taylor lbw b Suranga Lakmal 62 62 10 1 100.00 Sean Williams b Dhananjaya de Silva 107 137 10 3 78.10 Sikandar Raza c Angelo Mathews b Lasith Embuldeniya 72 99 4 2 72.73 Regis Chakabva c Niroshan Dickwella b Lasith Embuldeniya 31 69 3 0 44.93 Tinotenda Mutombodzi lbw b Dhananjaya de Silva 33 99 4 0 33.33 Donald Tiripano c Suranga Lakmal b Lasith Embuldeniya 13 47 1 0 27.66 Carl Mumba not out 11 19 2 0 57.89 Victor Nyauchi c Dhananjaya de Silva b Lasith Embuldeniya 6 10 1 0 60.00 Extras 12 (b 8 , lb 3 , nb 1, w 0, pen 0) Total 406/10 (115.3 Overs, RR: 3.52) Fall of Wickets 1-21 (13.6) Prince Masvaure, 2-49 (19.4) Craig Ervine, 3-114 (32.6) Kevin Kasuza, 4-133 (36.5) Brendan Taylor, 5-292 (71.6) Sikandar Raza, 6-324 (78.5) Sean Williams, 7-362 (95.2) Regis Chakabva, 8-386 (110.1) Tinotenda Mutombodzi, 9-394 (111.6) Donald Tiripano, 10-406 (115.3) Victor Nyauchi, Bowling O M R W Econ Suranga Lakmal 22 9 37 2 1.68 Vishwa Fernando 14 1 45 0 3.21 Lahiru Kumara 20 5 60 1 3.00 Lasith Embuldeniya 42.3 8 182 4 4.30 Dhananjaya de Silva 17 1 71 3 4.18 Sri Lanka 1st Innings   Batsmen R B 4s 6s SR Dimuth Karunarathne lbw b Sikandar Raza 44 120 3 0 36.67 Oshada Fernando c Regis Chakabva b Donald Tiripano 44 119 4 0 36.97 Kusal Mendis not out 19 48 1 1 39.58 Angelo Mathews not out 4 37 0 0 10.81 Extras 11 (b 2 , lb 9 , nb 0, w 0, pen 0) Total 122/2 (54 Overs, RR: 2.26) Fall of Wickets 1-94 (36.2) Dimuth Karunarathne, 2-104 (43.1) Oshada Fernando, Bowling O M R W Econ Carl Mumba 9 1 23 0 2.56 Sikandar Raza 17 4 39 1 2.29 Donald Tiripano 12 9 5 1 0.42 Victor Nyauchi 11 4 17 0 1.55 Tinotenda Mutombodzi 5 0 27 0 5.40   http://www.thepapare.com/sri-lanka-tour-of-zimbabwe-2020-2nd-test-day-2-live-scorecard-report-tamil/
    • பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்       சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றது.   http://tamil.adaderana.lk/news.php?nid=125114