• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் Aug 21, 20190     பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி இந்த பொறுப்பை ஏற்கிறார். பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகி அங்கு தனது BA (Hons ) பட்டப்படிப்பையும் பின்னர் PHD பட்டத்தையும் பெற்றுள்ளார். பேராசிரியர் நிஷான் கனகராஜா 2006-2009 ஆம் ஆண்டுவரை பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்துக்கான ஆராய்ச்சி பணிப்பாளராகவும், 2010- 2011 வரை கணனி விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும், 2011- 2014 வரை பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக நியமனம் பெற்றார். Signal Processing என்ற ஆய்வில் பேராசிரியர் நிஷான் கனகராஜா நிபுணத்துவம் பெற்றுள்ளார். இது தொடர்பில் இவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் பல பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 1966 இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள். உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167 ஆம் இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 25 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென் ஜோன்ஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவில் கற்ற பேராசிரியர் றமா திருநாமச்சந்திரன் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இல் துணைவேந்தராக உள்ளார் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.   http://www.samakalam.com/செய்திகள்/புகழ்பெற்ற-லெஸ்ரர்-பல்கல/
    • ஆம், Three இன் mobile home  broadband, மிகவும் உபயோகமானது. வாகனத்தில் boot இற்குள்ளோ அல்லது ஆசனகளுக்கு கேலேயோ வைத்து, மின் இணைப்பு கொடுத்தால், வாகனத்தில் broadband.     
    • 10 வரு­டங்­களில் ஸ்ரீலங்­க­னுக்கு 24000 கோடி ரூபா நஷ்டம்  சுட்­டிக்­காட்­டு­கி­றது கோப்­குழு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறு­வ­னத்­துக்கு 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கான மொத்த நஷ்டம் 24000 கோடி ரூபா என்றும் இதற்கு மேல­தி­க­மாக அரசு வங்­கிகள்,இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் உள்­ளிட்ட அரச நிறு­வ­னங்­க­ளுக்கு 14600 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம்  கட­னாக செலுத்த வேண்டி உள்­ள­தெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.  அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)வின் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்­தி­யினால் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்­பெ­னியின் விமா­னங்­களை மீள் தொகு­திப்­ப­டுத்­து­தலும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட A 350-900 ரக 8 விமா­னங்­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையை முடி­வு­றுத்தல் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யி­லேயே இவ்­வி­பரம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.  தாபனம் சார் முகா­மைத்­துவ பல­வீ­னங்­க­ளினால் மட்­டு­மன்றி அர­சியல் பலம் பொருந்­தி­ய­வர்­க­ளினால் புரி­யப்­பட்ட அர­சியல் தலை­யீ­டு­க­ளி­னா­லேயே ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்­பெனி பாரிய நஷ்­டத்தை சந்­தித்­துள்­ளது. ஆகவே  இத்­த­கைய நஷ்­டத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்தின் முன் வர­வ­ழைத்து அவர்­க­ளுக்­கான  தண்­ட­னையை  வழங்க  உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)  இந்த விசா­ரணை அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  அத்­துடன் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யின்றி முறை­யான செல­வுப்­ப­குப்­பாய்வு மேற்­கொள்­ளப்­ப­டாமல் 14 நவீன விமா­னங்கள் 8 வருட காலப்­ப­கு­திக்குள் விமா­னத்­தொ­கு­தியில் சேர்ப்­ப­தற்கு நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவம் மேற்­கொண்ட தீர்­மா­ன­மா­னது தமது அதி­கா­ரத்­தி­ணைக்­க­டந்து மேற்­கொண்­ட­தொரு தீர்மானமெனவும் குறித்த தீர்மானம் வெற்றியளிக்காமை தொடர்பில் உரிய அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இந்த விசாரணை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.    https://www.virakesari.lk/article/63145
    • அமேசன் மழைக்காடுகளை அச்சுறுத்தும் காட்டுத் தீ அமேசன் காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் (2.1 மில்லியன் சதுர மைல்) பரப்பளவை கொண்ட உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல காடாகும். புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இது 83 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் புகையால் சூழப்பட்டுள்ள நிலையில் மனாஸ் நகரில் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையும், பெரு நகரில் சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலையில் காட்டுத்தீ பரவுவது இயல்பு தான் என்ற போதிலும் சில விவசாயிகள் பண்ணைகள் அமைப்பதற்காக வேண்டுமென்றே தீ வைத்து சட்டவிரோதமாக காடுகளை அழித்து வருவதாகவும் பிரேசில் அதிபர் ஜைர் போல்சோனரோவின் சுற்றுச்சூழல் கொள்கையினால் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    https://www.virakesari.lk/article/63147  
    • விளம்பரமாக இருந்தாலும்... ஒரு நியாயம் வேண்டாமா?