-
Topics
-
Posts
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனின் சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. தனது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தமிழில் தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் 'தர்பார்', கமல் நடிக்கும் 'இந்தியன்-2', மணிரத்னம் இயக்க உள்ள 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது லைகா குழுமம், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் ஒரு பிரிவான லைகா மொபைல் நிறுவனம், உலகின் பல நாடுகளில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. இது மட்டுமின்றி, சமூக சேவையிலும் சுபாஸ்கரன் கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கான வீடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு பல வகையான உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகள் என பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்நிலையில், அவரது சமூக சேவைகளைப் பாராட்டி மலேசியாவில் உள்ள அமிஸ்ட் (ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இதையொட்டி, சுபாஸ்கரனுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, ''சுபாஸ்கரனின் அபார வளர்ச்சி வியக்க வைக்கிறது. அதை ஒருநாள் சினிமாவாக பண்ண ஆசை'' என்றார். தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, ''நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் மத்தியில் அவர் பிரபல தொழிலதிபராக ஆட்சி செய்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை. அவரது வெற்றிக் கதை ஒரு பாகத்தில் அடங்காதது. முதல் பாகத்தை மணிரத்னம் எடுத்தால், நான் 2-ம் பாகம் பண்ணிக் கொள்கிறேன்'' என்றார். https://www.bbc.com/tamil/india-50703011?ocid=socialflow_facebook&fbclid=IwAR0cfmWK62tmN6_YqvMr4uy_E-K1DLoGUFMp0I0K4CtVXpv1H3cXHaF-L3g
-
இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முஸ்தீபுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஈடுபட்டுள்ளன. இதற்கான கலந்துரையாடல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டுள்ளன என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்- யுத்தத்தின் பின்னர்- ஏகபோக தலைமைத்துவமாக உருவெடுத்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி, கூட்டணி தர்மங்களை துளியும் கணக்கெடுக்காமல் ஏகபோகமாக செயற்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசு கட்சியுடன் கூட்டு வைத்துள்ள இறுதி கட்சிகளும் வெளியேறும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதற்கான சில சுற்று பேச்சுக்கள் இந்த இரண்டு கட்சிகளிற்குமிடையில் நடைபெற்றுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது. இந்த பேச்சுக்களில் கலந்து கொண்ட ரெலோ பிரமுகர் ஒருவரும் தமிழ்பக்கத்திடம், பேச்சு நடப்பதை உறுதி செய்தார். கடந்த அரசில், ரணில் தரப்புடன் இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திய தமிழ் அரசு கட்சி, அதற்கான சில வரப்பிரசாதங்களை பெற்றிருந்தது. அது கட்சியின் மூன்று உறுப்பினர்களிற்கு மாத்திரமானது. அரசியல்தீர்வு உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த விவகாரங்களில் கூட்டமைப்பாக நெருக்கடியை சந்தித்திருந்த வேளையில், தனிப்பட்ட வரப்பிரசாங்களுடன் தமிழ் அரசுகட்சி தலைவர்கள் திருப்தியடைந்து விட்டனர் என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. இந்த நிலையில், புதிய ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், திரைமறைவிலான இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், கோட்டா அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்கும் திரைமறைவு முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதற்கு சாதகமான அப்பிராயத்தை உருவாக்க, புதிதாக அரசியலுக்கு ஈர்க்கப்படும் இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் பேசி வருகிறார். இந்தநிலையில், தமிழ் அரசு கட்சியின் ஏகபோகம், தன்னிச்சை, பிழையான அரசியல் முடிவுகளின் எதிரொலியாக, அந்த கட்சியுடனான கூட்டணியை முறிக்க ரெலோ, புளொட் கட்சிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இரண்டு கட்சிகளிலுமுள்ள உயர்மட்ட தலைவர்கள் மத்திரம் தொடர்புபட்ட இந்த பேச்சுக்களில் சில சுற்றுக்கள் முடிவடைந்துள்ளன. இதேவேளை, இதன் அடுத்த கட்டமாக புதிய கூட்டணி உருவாக்கும் பேச்சுக்களும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருவதை தமிழ்பக்கம் அறிந்தது. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிவற்றுடன் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்கும் முதற்கட்ட பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. அடுத்த சில தினங்களில் இந்த நான்கு தரப்பின் முக்கிய தலைவர்களும் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதையும் தமிழ்பக்கம் அறிந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியிருந்தது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறின. இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு கட்சிகளும் வெளியேறும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன. இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் இலங்கை தமிழ் அரசு கட்சி கையெழுத்திட்டிருக்கவில்லை.தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன அதில் கையெழுத்திட்டன. இந்த கட்சிகள் இப்பொழுது மீண்டும் கூட்டணி வைக்கும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதால், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரையே பயன்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. https://www.pagetamil.com/92584/
-
By Kavi arunasalam · Posted
சியான் மறக்கமுடியாத பாத்திரம். இந்தப் படத்தில் அப்பா சிவகுமார் ஓகே. பின்னாட்களில் பாலா எடுத்த படங்களில் அப்பாக்கள் ‘லூசு’க்கள். -
பையன் சும்மா சிரிப்புக்காக எழுதப்பட்டது.
-
By Kavi arunasalam · Posted
1959இல் கல்யாணபரிசு என்றொரு திரைப்படம் வந்தது. ஶ்ரீதரின் திரைப்படம் அது. முக்கோணக் காதல்கதை. அந்த திரைபடத்தில் “என்னக்காவை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று காதலனிடம் காதலி கேட்பாள். அப்போ எல்லாம் சரோஜாதேவி இல்லைன்னா விஜயகுமாரி
-