• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மாணவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை   ஆர்.மகேஸ்வரி   கொரோனா வைரஸ் குறித்து பரவும் பொய்யானத் தகவல்களால் மாணவர்களும் பெற்றோரும் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மாணவர்கள்  முகக் கவசத்தை அணியுமாறு அரசாங்கம் வலியுறுத்தவில்லை என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், பிரதமர் மஹிந்த தலைமையில் பல அமைச்சுகளின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) நடைபெற்றதாகத் தெரிவித்த அவர், இதன்போது தற்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதி குறித்து அவதானம் செலுத்தப்பட்டதென்றார். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, சுற்றுநிருபம் ஒன்று பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சோ, சுகாதார அமைச்சோ முகக் கவசத்தை  அதிக விலை கொடுத்து வாங்கி அணியுமாறு மாணவர்களுக்கோ மக்களுக்கோ ஆலோசனை வழங்கவில்லை என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மணவரகளகக-மகக-கவசம-தவயலல/175-244725
    • மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்   சீனாவில் கல்வி கற்கும் 110 மாணவர்கள் இன்று (29) நாடு திரும்பியிருப்பதாக சீனாவின் பேஜிங் நகரில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இதுவரை 380 மாணவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். நேற்று 66 மாணவர்கள் நாடு திரும்பினார்கள். மேலும் 484 மாணவர்கள் சீனாவில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர் இனங்காணப்படுவாராயின், அதுபற்றி உடனடியாக அறிவிக்கப்படவிருக்கிறது. கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் அங்கொட தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் எட்டுப் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, மூவரின் பரிசோதனை அறிக்கைகள் தற்சமயம் கிடைத்திருக்கின்றன. இதில் சீனப் பெண் ஒருவர் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய இருவருக்கும் இந்த நோய் தொற்று ஏற்படவில்லை. மேலும் ஐந்து பேருக்கு இது தொடர்பான அறிக்கை வழங்கப்படவிருக்கிறது. வைரஸ் பரவல் பற்றி அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. வைரஸ் பரவலை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=125128
    • டுபாயிலும் கொரோனா வைரஸ்   ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது  நபர் இனங்காணப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் கொரோனா வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தாய்வான் மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.  இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியத்தில்  சீனாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ‘சீனாவின் வுகான் நகரிலிருந்து இங்கு வந்துள்ள குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அவர்கள் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது’ என அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/டபயலம-கரன-வரஸ/50-244708
    • T20 அரங்கில் 30ஆவது அணிக்காக விளையாடவுள்ள பொல்லார்ட் By Mohammed Rishad -     மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கிரென் பொல்லார்ட் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற 32 வயதான கிரென் பொல்லார்ட் தற்போது மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.  இந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்காக இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்டில் நொர்தம்ப்டன்ஷெயார் அணியில் விளையாடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவர் விளையாட இருக்கும் 30ஆவது டி20 அணியாகும்.    பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடிவரும் பொல்லார்ட், இதுவரை ஒட்டுமொத்தமாக 499 போட்டிகளில் விளையாடி 9,966 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.  நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாடுவது குறித்து பேசிய அவர், “இங்கிலாந்து கழகமொன்றுக்கான டி20 போட்டித் தொடரொன்றில் விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார். இதுஇவ்வாறிருக்க, நொர்தம்ப்டன்ஷெயார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ரீப்ளே கருத்து வெளியிடுகையில், “கிரென் பொல்லார்ட் பற்றி நான் பலரிடம் பேசியுள்ளேன். எல்லோரிடமிருந்தும் அவர் ஒரு வெற்றியாளர் என்பதுதான் பதிலாக கிடைக்கும். டி20 போட்டிகளில் அருமையான பல சாதனைகளை படைத்துள்ள அவர் ஒரு சிறந்த போட்டியாளர்” என கூறினார். முன்னதாக 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சமர்செட் அணிக்காக பொல்லார்ட் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக இம்முறை பொல்லார்ட் 8 போட்டிகளில் விளையாடவுள்ளார். இதன் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி டர்ஹம் அணிக்கெதிராக நடைபெறவுள்ளது.  இதேவேளை, நொர்தம்ப்டன்ஷெயார் அணி 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் டி20 பிளாஸ்ட் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டதுடன், கடந்த பருவத்தில் 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது.  http://www.thepapare.com/kieron-pollard-joins-northamptionshire-vitality-blast-tamil/
    • விதிமுறை மீறிய குற்றச்சாட்டில் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்   By Akeel Shihab -   AFP   சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது ஐ.சி.சி போட்டி ஊதியத்திலிருந்து அபராத தொகை விதித்துள்ளதுடன் ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.   தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் விளையாடுகிறது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் (27) நிறைவுக்குவந்த நிலையில் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.  இந்நிலையில் குறித்த போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் தென்னாபிரிக்க அணி 466 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடியது. இதில் தென்னாபிரிக்க அணித்தலைவர் பெப் டு பிளஸிஸ் 35 ஓட்டங்களை பெற்று பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெப் டு பிளஸிஸ் ஆட்டமிழப்பதற்கு முன்னர் களத்தில் துடுப்பெடுத்தாடி கொண்டிருக்கும் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட், பெப் டு பிளஸிஸுடன் முரண்பட்டார்.  இதன் போது மைதானத்தில் வைத்து ஸ்டுவர்ட் ப்ரோட் பெப் டு பிளஸிஸுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார். பின்னர் நடுவர்கள் விரைந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். போட்டி நிறைவடைந்ததன் பின்னர் களநடுவர்களாக செயற்பட்ட ரொட் டக்கர், ஜொய்ல் வில்சன், மூன்றாம் நடுவர் ப்ரூஸ் ஒக்ஸன்பேர்ட் மற்றும் நான்காம் நடுவர் அலஹ்டீன் பலேகர் ஆகியோரினால் போட்டி மத்தியஸ்தரிடம் குறித்த நிகழ்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.    இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையில் வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நடத்தை கோட்பாடுகளை உள்ளடக்கும் இலக்கம் 2.3 இன் படி சர்வதேச போட்டியொன்றின் போது உபயோகிக்கக்கூடாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதன் அடிப்படையில் ஸ்டுவர்ட் ப்ரோட் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி போட்டி மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் குறித்த சம்பவத்திற்காக தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மாத காலப்பகுதியில் ஸ்டுவர்ட் ப்ரோட் இரண்டாவது தகுதி இழப்பீட்டு புள்ளியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, நிறைவுக்குவந்த குறித்த இறுதி டெஸ்ட் போட்டியில் மாத்திரம் நான்கு முறை அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு பதிவாகியுள்ளது. ஒழுக்க விதிமுறை மீறலுக்காக பென் ஸ்டோக்ஸ், வேர்னன் பிளாண்டர் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோருக்கும், குறைந்த பந்துவீச்சு பிரதி காரணமாக தென்னாபிரிக்க அணிக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  http://www.thepapare.com/stuart-broad-fined-for-breaching-the-icc-code-of-conduct-tamil/