Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

மேக்கப் செய்யிறன் எண்டு தெரியிற கூட்டத்தை எல்லோ வெடி வைக்கோணும். 😜

🤭😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மேக்கப் செய்யிறன் எண்டு தெரியிற கூட்டத்தை எல்லோ வெடி வைக்கோணும். 😜

அதையேன் பேசுவான்! உந்த மேக்கப்காரர் வருவினம் பாருங்கோ.... சொல்லி வேலையில்லை. ஒரு பொம்புளைக்கு மேக்கப் பண்ண  நாலைஞ்சு சூட்கேஸ் கொண்டுவருவினம்.மக்கு தப்புற மாதிரி அள்ளி தப்பு தப்பபெண்டு தப்பி உள்ள வடிவையும் கெடுத்துப் போட்டு போவினம்.😁

உந்த மேக்கப் எண்டது சொந்த செலவிலை சூனியம் செய்யிற மாதிரி...:cool:

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்! உந்த மேக்கப்காரர் வருவினம் பாருங்கோ.... சொல்லி வேலையில்லை. ஒரு பொம்புளைக்கு மேக்கப் பண்ண  நாலைஞ்சு சூட்கேஸ் கொண்டுவருவினம்.மக்கு தப்புற மாதிரி அள்ளி தப்பு தப்பபெண்டு தப்பி உள்ள வடிவையும் கெடுத்துப் போட்டு போவினம்.😁

உந்த மேக்கப் எண்டது சொந்த செலவிலை சூனியம் செய்யிற மாதிரி...:cool:

ஒரு பொம்பிளையா.....நீங்கள் ரொம்ப அப்பாவியாய் இருக்கிறீர்கள்.... பொம்பிளையோடு அவவின் நண்பர்கள், உறவுக்காரர்கள்,பிள்ளைகள்,  குஞ்சு குருமான் என்று ஒரு முப்பது நாப்பது தேறும்.....இதில் எழுதப்படாத விதி அவரவர்கள் மேக்கப்புக்கான செலவை அவரவர்களே குடுக்க வேண்டும்.....ஒருமுறை மகள் மேக்கப் செய்து கொண்டு வர (அவதான் பொம்பிளைத்தோழி )  கடைசி கிட்டவே போகவில்லை. தாயென்று நம்பவே மாட்டன் என்று.அவளும் தாத்தாவோடயே இரு என்றுட்டுப் போட்டாள் .....!  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாளின் மேனியை அலங்கரிக்கும் அணிகலன்கள், தீபாராதனையுடன்.....!   💐  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகியை காணவில்லை. 

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்ல  பிராணியில்  எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் அழுகையும் கண்ணீருமாய் ?
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் யார்????
வேறை ஆர் எங்கடை சகோதரத்திலை ஒண்டு.

Bild

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை தமிழ் கலியாண வீட்டிலை நன்றாக வெட்டுகிறார் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிலாமதி said:

அண்ணை தமிழ் கலியாண வீட்டிலை நன்றாக வெட்டுகிறார் 😀

Bild

எங்கடை கொண்டாட்டங்களிலை ஒரு பலகார தட்டுக்கு நாலைஞ்சு மட்டன் ரோல் கேக்கிற நம்ம சிங்கங்களை யோசிக்க இந்த படம் ஞாபகத்துக்கு வந்தது...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறினாலும் தட்டிவான் மாறாது. :cool:

Bild

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 14:07, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்! உந்த மேக்கப்காரர் வருவினம் பாருங்கோ.... சொல்லி வேலையில்லை. ஒரு பொம்புளைக்கு மேக்கப் பண்ண  நாலைஞ்சு சூட்கேஸ் கொண்டுவருவினம்.மக்கு தப்புற மாதிரி அள்ளி தப்பு தப்பபெண்டு தப்பி உள்ள வடிவையும் கெடுத்துப் போட்டு போவினம்.😁

உந்த மேக்கப் எண்டது சொந்த செலவிலை சூனியம் செய்யிற மாதிரி...:cool:

கறுப்பாக்களை வெள்ளையாக்க வேண்டுமென்றால் அவங்களும் என்ன தான் செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

கறுப்பாக்களை வெள்ளையாக்க வேண்டுமென்றால் அவங்களும் என்ன தான் செய்கிறது.

கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு எண்டதெல்லாம் பொய்யா சார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of one or more people and text that says 'ஆண்கள் தினமாம்மா...?! அது ஊட்டுக்காரம்மா வெளியூருக்கு போயிருக்கும்போது நாங்களே வீட்ல சத்தமில்லாம கொண்டாடிக்குவோம்மா...!'

ஆண்கள் தினம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலக வழக்கம்..👌

IMG-20210309-110852.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் பற்றிய உளவியல் தகவல்
--------------------------------------------------------------

(1) ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

(2) அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

(3) எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ "மிஸ்" பண்றீங்களாம்.

(4) குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

(5) நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

(6) உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.

(7) சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

(8) மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

(9) முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

(10) இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

(11) ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது.

(12) ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம். 

(13) ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

(14) ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.

(15) ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

(16) ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் *(Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.

(17) ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

(18) ஒருவர் அதிகமாக  Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.👆👆👆


வாட்ஸ் அப்பிலை இப்பதான் வந்தது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணையில் பகிடி செய்யும் மிருகங்கள்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-03-12-16-37-20-880-com-a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலா அல்லது விதியா........!   😎

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.