Jump to content

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Bild

நிலம் நீரை விற்க ஆரம்பித்தான், 

வாங்க ஆரம்பித்து விட்டார்கள். 

காற்றையும் விற்க ஆரம்பித்து விட்டான், வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் நல்ல விலையில் களைகட்டுகிறது

மிச்சம் மீதி இருப்பது ஆகாயமும், நெருப்பும் மட்டுமே.

அதுக்கும் எப்போது ஆபத்தோ?? 

Link to post
Share on other sites
 • Replies 2.6k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.  அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.  

நீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய

நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்???????  எண்டு

 • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தில்  தான் அமெரிக்கன்  சீனன் இந்தியன் எல்லோரும்

ரொக்கட் விட்டு  இடம் பிடிக்கினமே 
 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் Green House Effect எண்டு சத்தம்  போடுறாங்களே, ஜேர்மனி பக்கம் சத்தமில்லையோ?🙃
நிலக்கரி பாவனை, காடுகளை அழித்தல் எல்லாம் ஆகாயத்தை ( காற்றை) அழிக்கும் காரியங்கள் தானே?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von Text „எவ்வளவு கேவலமாக திட்டி ,சண்டை போட்டு கொண்டாலும், வெட்கமே இல்லாமல் அடுத்த நாள் பேசிக்கொள்பவர்களே சிறந்த கணவன் மனைவி நህ“

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொம்பு சீவுதல் .....எவ்வளவு லாகவமாய் செய்கின்றார்......!  👍

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பூகம்பத்தின் மத்தியில்
பூக்கும் பூக்களுக்கு ஆயுள் குறைவுதான்
ஆயினும், மகத்துவம் அதிகம் 

💘

Bild

Edited by குமாரசாமி
 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பசு வளர்க்கும் பாக்கியம்......(அவவின் பெயரல்ல).

பசு பாக்கியத்தை வளர்க்குதா இல்லை பாக்கியம் பசுவை வளர்க்குதா, உங்களின் கற்பனைக்கே .....!  😂

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாரியார் சுவாமிகள் சொன்ன குட்டிக்கதை.......!   🌹

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

                                           குட்டிக்கதை.

ஒருத்தன் சரியான போதையில் தவறணைக்கு முன்னால்  இருந்த கழிவுநீர் வாய்க்கால் அருகே விழுந்து அரற்றிக் கொண்டு கிடந்தான். எல்லோரும் அவனை வேடிக்கை பார்த்து கொண்டு கடந்து போய்க்கொண்டிருந்தனர். சிலர் அவன் எப்போது வாய்க்காலில் விழுவான் என்று ஆர்வத்துடன் பந்தயம் கட்டிப்  பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண் நின்று அவனது விலகிய ஆடையை சரிசெய்துவிட்டு நகரும் பொழுது அவன் அவளை விளித்து, ஏ ...குட்டி நில். இந்தா அந்த தவறணையில் எனக்கு ஒரு போத்தல் சாராயம் வாங்கித் தந்துட்டு போ என்று காசை நீட்டினான்......!

குட்டியும் போ....எனக்கு வேலை இருக்கு நான் போறன் என்று சொல்ல  அவன் மீண்டும் கெஞ்சிக் கேட்டான்.

சரியென்று குட்டியும் காசை வாங்கிக்கொண்டு தவறணைக்கு போனாள்....திரும்பி வரவில்லை.....!

இவனும் காத்திருந்தபடியே கிறக்கத்தில் மயங்க சற்று நேரத்தில் சிறு தூறல் தொடங்கி  மழையாகிக் கொண்டிருந்தது.......!

நேரம் கடந்து செல்ல இவன் பெருமழையில் தெப்பமாக நனைந்து போனான்....வெறியும் முறிந்து விட்டது....அப்போதுதான் கொஞ்சம் நினைவு நிழலாடியது, யாரோ ஒரு குட்டியிடம் தான் சாராயம் வாங்க  பணம் கொடுத்ததும் அவள் அப்படியே ஏமாத்திப் போட்டு போனதும்.......!

அட .....காலையில் இந்த காசை மனிசிட்ட  குடுத்திருந்தாலாவது அவள் சுடசுட நல்ல கறியும் சோறும் சமைத்து வைத்திருந்திருப்பாள்.......இந்த மழைக் குளிருக்கு மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு ஒரு சாறத்துக்குள்ள ரெண்டு பெரும் போர்த்துக் கொண்டு படுத்திருக்கலாம் என்று நினைத்த படியே வீட்டுக்கு வருகிறான்......!

அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.....அவன் மனைவி விறாந்தையில் இருந்து உருண்டு விழுந்து  முற்றத்தில் கிடக்கிறாள்.....ஆடைகள் விலகியிருக்க புடைத்திருக்கும் அழகுகளில் மழைத்துளிகள் கொட்டித் தெறிக்கின்றது.....  விறாந்தையில் ஒரு போத்தல் சாராயம் வெறும் போத்தலாய் உருண்டு கிடக்கின்றது. அருகே சாப்பிட்ட  இறைச்சி எலும்புகள் இறைஞ்சு கிடக்க வெறுஞ் சட்டி இருக்குது....!

அவனுக்கோ அகோரப்பசி....அப்படியே அவளைத் தூக்கி வந்து விறாந்தையில் கிடத்தி விட்டு, பானைக்குள் இருந்த சோற்றை அள்ளி அந்த வெறுஞ் சட்டிக்குள் பிரட்டி சாப்பிடுகின்றான். அப்போது நினைவில் நிழலாடுகின்றது, தன்னிடம் காசு வாங்கிய குட்டியின் முகமும் தன் மனைவியின் முகமும் ஒன்றுபோல்  இருக்கின்றது.......அப்போ அந்தக்குட்டி இவளா.......!

அப்போதே முடிவெடுக்கிறான்.அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவனது இலட்சியம் கொள்கை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கின்றது..... இனிமேல் குடிப்பதற்கு முன் தேவையான சரக்கை முதலே வாங்கி சாறத்துக்குள்  வைத்திருக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம் என்று.....!

 

(வாரியார் சுவாமிகளின் தகுதிக்கு அவரின் குட்டிக் கதை அப்படித்தான் இருக்கும்.....சுவியின் ரேஞ்சுக்கு குட்டிக்கதை குட்டியும் புட்டியுமாய்  இப்படித்தான் வந்து தொலைக்குது என்ன செய்ய....).

 

 • Like 3
 • Haha 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எது எதுவோ அதை அதுவாகவே விட்டு விடுங்கள் 
... தயவு செய்து தமிழில் மட்டும் மாற்றி வாசித்து விடாதீர்கள் 

May be an image of text that says 'You think you can hurt my feelings? I used to hold the flashlight for my dad.'

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild

 • Like 2
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுதான் வராகம்......!   😂

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen und Text „இங்கு தூக்கி விட்டவர்களை விட.. தூக்குவது போல் விட்டவர்களே அதிகம்..“

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதிசயம் ஆனால் உண்மை.......!   🙏

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of 2 people and text that says 'FB/SarcasmLol வேலைக்கு போடா பரதேசி எப்படி பணம் சம்பாதிப்பது!'

எப்படி... பணம், சம்பாதிப்பது? :grin: 🤣

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தற்கொலை தாக்குதல் செய்ததுக்கு பதிலடியாக 
சிங்கள நன்பர்கள் செய்த படுகொலை 
மற்றும்படி அவர்கள் கொலை கொள்ளை என்று எதையும் அறிந்ததே இல்லை 
 

1. 1958 தமிழினப் படுகொலையின் ஆரம்ப நாள் (22-05-1958) தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசுகள் செய்துவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள், இனப்படுகொலை என்ற கட்டத்திற்க்கு வந்தது 1958 ஆம் ஆண்டாகும். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காடையர்களாலும் அரசின் குண்டர்களாலும் சாகடிக்கப்பட்டபோது அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அதை மௌனமாக அங்கீகரித்திருந்தார். இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும்.

 

Image

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

புலிகள் தற்கொலை தாக்குதல் செய்ததுக்கு பதிலடியாக 
சிங்கள நன்பர்கள் செய்த படுகொலை 
மற்றும்படி அவர்கள் கொலை கொள்ளை என்று எதையும் அறிந்ததே இல்லை 
 

1. 1958 தமிழினப் படுகொலையின் ஆரம்ப நாள் (22-05-1958) தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசுகள் செய்துவந்த திட்டமிட்ட நடவடிக்கைகள், இனப்படுகொலை என்ற கட்டத்திற்க்கு வந்தது 1958 ஆம் ஆண்டாகும். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காடையர்களாலும் அரசின் குண்டர்களாலும் சாகடிக்கப்பட்டபோது அப்போதைய சிறிலங்காப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அதை மௌனமாக அங்கீகரித்திருந்தார். இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும்.

 

Image

இப்பிடியும் ஒரு காலம் இருந்தது.
ஆனால் என்ன எங்கடை தமிழ்ச்சனத்தை மாதிரி அவையளும்  அப்பப்ப மறந்து போயினம்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 கொரோனாவால் சிறிது காலம் வீட்டுக்குள்ளேயே இருக்கவே இவ்வளவு புலம்புகின்றோம்
ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு காடுகளை தன் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் அசுர பலம் கொண்ட இவற்றின் நிலையை எண்ணிப் பாருங்கள். 

உண்மையான மிருகம் யார் என்பது உங்களுக்கே புரியும்......
 

Bild

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.