Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேசுங்கள்......
 
 
ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?
ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.
வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.
கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”
அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை”
வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”
“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்”
வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் அப்பா”
திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.
வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.
இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.
புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.
எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.
 • Like 6
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதை இங்கு இணைத்ததால் நான் எதோ இங்கிலீஸ் கடல் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு......அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.......இது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு அவ்வளவுதான்.....!   😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தரமான கைவேலை .....!  👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

c004c9df5283e97d38e9de64a5607b79.jpg?resize=390%2C550&ssl=1

 

பெண்களுக்கு உடம்பை விட இடுப்பு பகுதி மட்டும் மிகவும் பெரிதாய் இருப்பதற்கு காரணம்......
குடத்தை தூக்கவும்,
அடுத்து குழந்தைகளை தூக்கவும்,
 இயற்கையால் படைக்க பட்டுள்ளதாகும்.   
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ தேவி & பிரபுதேவா ..........!   👌

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இத நினைச்சு அழுகிறதா சிரிக்கிறதா எண்டு தெரியேலயே... கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முண்டியடிக்கும் தென்னிலங்கை மதுப்பிரியர்கள்.. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மதித்து பொறுமையாக வரிசையில் காத்திருக்கும் வடஇலங்கை மதுப்பிரியர்கள்.. WINE'

தமிழன் என்றாலே... பொறுமைசாலி.  Q வரிசையில்தான் நிப்பான். :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மனித சமுதாயம்.

main-qimg-0bfeff2f70250d2d9141e5e3bd88fb15

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வறுமையின் நேரம்.

Ist möglicherweise ein Bild von Armbanduhr und Text

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

தவணி = தாவணி
குலங்களையும் = குளங்களையும்…
இந்த மாதிரி எழுத்து பிழைகள சுட்டி காட்டி வருங்கால சந்ததியினருக்கு சரியான தமிழை சொல்லி குடுக்கற கடைசி தலை முறையும் நாம் தான்…👍🏻💪🏻💪🏻😏😏😀👏👏👏👌🏻
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்திய வரலாற்றில் காணாத புகைப்படங்கள்.......!   😁

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

Bild

ஆகா நானும் போடலாம் போல இருக்கே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*
நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!
டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,
“சார் பின்னாடி போய் உட்காருங்க.
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.
என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!
*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*
*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*
*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*
*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,
உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*
*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?*
*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*
*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*
எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.
*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*
*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*
*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*
எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*
யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.
*தீதும் நன்றும் பிறர்தர வாரா.*
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா நானும் போடலாம் போல இருக்கே.

நீங்கள் சரியான அல்பமாய் இருக்கிறீங்கள் பிரியன்.....மணமகளுக்கு ஒரு 18ல் இருந்து 20 க்குள் என்று மாற்றி விண்ணப்பிக்கவும்.......!  😁

கணிதம் :  62 - 18 = 44.....!

                     18 - 62 = ? 😴.....!

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடவுள் வேறு, கடவுள் சிலைகள் வேறு.....வாரியார் சுவாமிகள்......!  🌹

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

Bild

 

முதலிருவரும் ஒரு tinpot சர்வாதிகாரிகள் ஆகும். 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.