-
Tell a friend
-
Topics
-
0
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்… https://www.thaarakam.com/news/96a1dfbf-60c9-4b0b-b0e7-e255b20f2ec8 -
By கிருபன் · பதியப்பட்டது
தமிழ் தேசியமே எமது மூச்சு! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கையும் வாசித்துக் காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய நினைவு நாளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு, https://www.ibctamil.com/srilanka/80/158140 -
By கிருபன் · பதியப்பட்டது
கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் January 17, 2021 இலங்கையில் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை அடுத்த மாதம் நடுப்பகுதி முதல் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொிவித்துள்ள அவா் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாகவும் தொிவித்துள்ளாா். இதனை தவிர கொவெக்ஸ் சலுகை ஊடாக, கொரோனா எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியும் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #கொரோனாதடுப்பூசி #இலவசமாக #சுதர்ஷனி_பெர்னாண்டோபுள்ளே #ஒக்ஸ்போர்ட்_அஸ்ட்ராஸெனெக்கா https://globaltamilnews.net/2021/155750/ -
இரண்டும் ஒன்று தான். ஜேர்மன் மொழியில் Kupplung.
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.