-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
இதெல்லாம் எங்க தொகுதி... பிரசாரத்தில் தன்னிச்சையாக குதித்த பாஜக.. அதிர்ச்சியில் அதிமுக.! சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் தொடங்கி 40-ல் வந்து நின்றது பாஜக. ஆனால் இவ்வளவு தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கவே முடியாது என்கிற திட்டவட்டமான நிலையை அதிமுக தெரிவித்து வந்தது. இதையடுத்து அதிமுக அணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. அதேநேரத்தில் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இந்த தொகுதி உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் எல். முருகன், மகிழ்ச்சியும் இல்லை.. கவலையும் இல்லை என கூறினார். தொகுதிகள் ஆக்கிரமிப்பு ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னரே பாஜகவே தாமாகவே சில தொகுதிகளை கைப்பற்றிக் கொண்டது. அந்த தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தி பிரசாரத்தையும் பாஜக தன்னிச்சையாக தொடங்கிவிட்டது. குமரிக்கு மல்லுக்கட்டு பாஜகவின் பிரபலங்களான நடிகைகள் குஷ்பு, கவுதமி, மாஜி எம்.பி. சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் என பலருக்கும் இந்த தொகுதிதான் என பாஜகவே சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அத்தனை சட்டசபை தொகுதிகளும் தங்களுக்குதான் என அடம்பிடிக்கிறதாம் பாஜக. பாஜகவின் அடம் அத்துடன் இல்லாமல் அதிமுக வெல்லும் வாய்ப்புள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சில முக்கிய தொகுதிகளுக்கும் பாஜக மல்லுக்கட்டுகிறதாம். குறிப்பாக தென்மாவட்ட கோவில் நகரங்களை குறிவைத்து அதிமுகவிடம் பிடிவாதம் காட்டுகிறதாம் பாஜக. அதிர்ச்சியில் அதிமுக பாஜகவின் இந்த தன்னிசையான போக்கை அதிமுக தரப்பு இம்மியளவுக்கு கூட விரும்பவில்லை. இப்படி ஒரு அடாவடித்தனமான கட்சியாக, கூட்டணியாக ஒருபோதும் எந்த கட்சியும் நடந்து கொண்டதே இல்லை என்பது அதிமுக மூத்த தலைவர்களின் கருத்து. தேர்தல் களத்திலேயே இப்படி என்றால் ஜெயித்துவிட்டார்கள் எனில் என்ன என்ன செய்வார்களோ? என்கிற ஆதங்கமும் அவர்களிடம் வெளிப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/admk-upsets-over-bjp-takes-constituencies-413900.html -
By அக்னியஷ்த்ரா · Posted
இருவரும் இரத்தம் உறைந்து போய் , மெதுவாக பின்னேறிக்கொண்டிருக்க நாயோ இன்று ஒரு சம்பவத்தை நடத்திக்காட்டியே தீருவது என்ற முடிவில் இருவர்மேலும் வெறிகொண்டு பாய எதுவாக குனிந்து எம்ப தயாரானது, அந்தக்கணத்தில் ..திடீரென்று இவர்களிருவரும் பின்புறமிருந்து ஒரு டோர்ச்சின் மின்னொளியுடன் "தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க...?" என்ற வசனமும் சேர்ந்து ஒலித்தது , திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே பாடசாலை இரவு காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு இருவரும் நாயை நோக்கி திரும்பிய கணம் அங்கு நாய் நின்ற அடையாளமே இல்லை, கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தால் இருவருக்குமே குரல் அடைந்துக்கொண்டது, இருந்தும் ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு "அது .......ஒண்டுக்கு போக வந்தம் அண்ணன் " என்று சுலக்சன் சொல்ல காவலாளியோ சகட்டு மேனிக்கு கிழிக்க தொடங்கினான், "இங்கே வரக்கூடாது என்றெல்லா சொல்லியிருக்கன் ...நாளைக்கு நாய் அது இது என்று கடிச்சால் நான் தான் பதில் சொல்லவேணும், இப்படி நீங்க கண்டபடிக்கு இருட்டிற்குள் திரிவீர்கள் என்றால் நான் அதிபரிடம் முறையிட்டுவிடுவேன்,இது தான் கடைசி எச்சரிக்கை இனி உங்களில் யாரையும் இங்காலப்பக்கம் காணக்கூடாது " என்று முடித்தான், மன்னித்துக்கொள்ளுங்கோ அண்ணன் என்றுவிட்டு இருவரும் நடந்ததை தமக்குள்ளே மென்குரலில் பேசிக்கொண்டுசெல்வதை அவன் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன, அடுத்தநாள் மொத்த குழுவும் பாடசாலையில் அவர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஆஜர், நடந்தவற்றை இவன் விபரிக்க, நாயிடம் மாட்டிய கதையை சுலக்சன் விபரிக்க மற்றைய மூவருக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது, மூவரில் ஒருவன் (அவனது பட்டப்பெயர் ஐடியா மணி, முக்கியமான நேரங்களில் வித்தியாசமாக யோசித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஐடியா தருவதால் மொத்தக்குழுவும் அவனுக்கு வைத்த பெயர் அது ) தாடையை தடவி கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னான். "புதரிட்க்கு அருகிலும் போகக்கூடாது, ஆனால் வளவிற்குள் என்ன நடக்குது என்றும் பார்க்கவேண்டும் டேய் எதுக்குடா இப்படி யோசிக்கிறீங்க கோமேர்ஸ் கிளாசில் வலப்பக்க சுவரில் மேசை வைத்து ஏறியிருந்து பார்த்தால் முழுவதுமே தெரியுமே ...? " .ஐடியா மணி ஐடியா மணிதான் அவன் சொல்லிய வர்த்தக வகுப்பு அந்த வெறும் வளவின் இடதுபுற வேலியுடன் ஒட்டிக்கொண்டுசெல்லும் மூன்று மாடிக்கட்டடத்தில் கடைக்கோடியில் இருந்தது, அட ஆமால்ல.... மெதுவாக காவலாளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்டிடத்திற்குள் புகுந்தால் அப்புறம் வேட்டை தான், சரி இன்றைக்கு மொத்தக்குழுவும் இரவு 11:00 மணியளவில் கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து நோட்டம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது 1946, கோவா பதினைந்து நாட்களாக தொடர்ந்து பயணித்த களைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணுவதும் உறங்குவதுமாகவே போய்விட்டது வில்லிக்கு, எழுந்து ஒரு காப்பியை தயார்செய்து மேசையிவைத்துவிட்டு பத்திரிகையை கையில் எடுக்க அவரது சபை முதல்வரிடமிருந்து அழைத்துவந்தது, உடனடியாக முதல்வரை சந்திக்க அவரோ "நீர் உடனடியாக இன்னும் ஐந்து தினங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்களதுசபையின் கீழுள்ள பாடசாலைக்கு புறப்படவேண்டும், அங்கே ஆங்கில ஆசிரியருக்கு வெற்றிடமுள்ளதுடன் அடுத்த ரெக்டராக உம்மைத்தான் சபை தெரிவுசெய்துள்ளது, எனவே இப்போதுள்ள ரெக்டரின் கீழ் நீர் பணி செய்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார் புதிய இடம் புதிய அனுபவம் புதிய இனக்குழுமத்திற்கு சேவை செய்யப்போவதை நினைத்து தனக்குள்ளே மகிழ்ந்து போன வில்லி பயண ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார். (தொடரும்) பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன் -
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆவணி 2015 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ரோந்தில் ஈடுபடுத்தப்படும் பிள்ளையான் கொலைக்குழு கொக்கட்டிச்சோலைப் பகுதியிலிருந்து வரும் செய்திகளின்படி, படுவான்கரையின் பல கிராமங்களிலும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. திடீரென்று மக்களை அச்சுருத்தும் வகையில் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், பிள்ளையான் கொலைக்குழுவும் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கியிருப்பது தமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவு துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் உலாவருவது மக்களை அச்ச நிலையில் வைத்திருந்து வாக்குகளைப் பிரிக்கும் தந்திரத்திற்காகத்தான் என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். பொதுச்சந்தைகள், வங்கிகள், தேனீர்க் கடைகள், முக்கியமான சந்திகள் ஆகிய இடங்களில் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களும் சிங்கள புலநாய்வுத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் தாந்தா மலை ஆலய உற்சவத்தின்போது, தொடர்ச்சியாக அவ்வாலயத்திற்கு வந்த துணை ராணுவக் கொலைக்குழு உறுப்பினர்கள் மக்களை அச்சுருத்தும் பாணியில் நடந்துகொண்டதாகவும், ஆலயத்திற்கு வருகைதந்த பல பக்தர்கள் இவர்களால் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானுக்குப் பெருமை சேர்த்த இரட்டைப் படுகொலைகள். அமரர்கள் ஜோசேப் பரராஜசிஙம் மற்றும் ரவிராஜ் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், துணைராணுவக் கொலைக்குழுக்களும் வீதிகளில் வலம்வந்து பாடசாலை செல்லும் மாணவிகளை துன்புறுத்துவதாகவும், இதனால் பாடசாலை செல்வதற்கே அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கும் பெற்றோர்கள், வீடுகளில் தனியே இருக்கும் பெண்களின் பாதுகாப்பும் இந்தச் சமூக விரோதிகளால் கேள்விக்குறியாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இதேவேளை படுவான்கரை மற்றும் பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் பிள்ளையான் கொலைக்குழுவுக்கு ஆதரவாக மக்களை அச்சுருத்திவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழு உறுப்பினர்களும், மக்களை பிள்ளையானின் கட்சிக்கே வக்களிக்க வேண்டுமெ என்றும் வற்புறுத்திவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
மாத்தி யோசியுங்கள்.. சிறீதரன் அவர்களே.! கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென சிவஞானம் சிறீதரன் எம் பி சாணக்கியனைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு முதன் முதல் தெரிவாகும் தமது உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட நேரம் வழங்குவது மரபு. ஆனால் அந்தத் தார்மீகக் கடமையைச் செய்யவில்லை. அப்படியிருந்தும் சுழித்துக்கொண்டோடிய சாணக்கியன் இந்த வலையில் வீழ்ந்து விடுவாரென நாம் நம்பவில்லை. இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ சாணக்கியன்தான். பல அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயம் இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாந்தியெடுக்கிறார்கள். உண்மையில் கட்சியின் நலன், எதிர்காலத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டிய தேவை, இவையெல்லாவற்றையும் விட இனத்தின் நன்மையை கருதுபவராக இருந்தால் சிறீதரன் கட்சியின் செயலாளராக வரவேண்டும் என்றுதான் சாணக்கியனுக்கு சொல்லியிருப்பார். முதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ஒருவரை தடுப்பிலிருந்து வந்த ஒரு முன்னாள் போராளி சந்தித்தார். அவரிடம் “சம்பந்தன் ஐயா போல ஆட்கள் இப்படியே தொடர்ந்து இழுபட்டுக்கொண்டிருக்காமல் அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும். இப்ப நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறன். இன்னும் ஒருநாடாளுமன்ற உறுப்பினரானதுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டன். அடுத்தவர்கள் வர வழிவிடுவேன்” என்றார். இதனைக் கேட்ட அந்தப் போராளி புன்னகைத்துக்கொண்டார். ஒரு உரையாடலின் போது “பதவியை விடத் தயார்;தயார் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமேயொழிய ஒரு நாளும் அதை விடக்கூடாது” என்று திரு.அமிர்தலிங்கம் தனக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார் . ஏதோ தெரியவில்லை அந்த நேரம் பார்த்து இந்த விடயம் நினைவுக்கு வந்தது . இன்று கிழக்கில் கட்சியை யாரிடம் ஒப்படைத்திருக்கிறார் மாவை ? ஒரு கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு விருப்பு வாக்கில் இறுதி இடத்தைப் பெற்றுக்கொண்ட பொன். செல்வராஜாவிடம் 2013ல் தனது பாட்டனார் சி.மு இராசமாணிக்கத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட விருந்த நிதியத்தின் நிகழ்வுக்கு சம்பந்தன் ஐயாவை அழைத்திருந்தார் சாணக்கியன். சம்பந்தன் ஐயாவின் வருகை செல்வராஜாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. தொலைபேசியில் சாணக்கியனைஅழைத்து 2020 வரை அரசியலுக்கு வரும் எண்ணம் வரக்கூடாது என எச்சரித்தார். இது சம்பந்தமாக மாவையை நேரில் சந்தித்துக் கூறினார் சாணக்கியன்.எப்போது தான் மாவை தனது ஆளுமையை நிரூபித்து காட்டியுள்ளார் ? வளவளா பதில்தான். இக் கால காலகட்டத்தில் தான் அருண் தம்பிமுத்து தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு சாணக்கியனை அழைத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்..அரசியலில் களமிறங்கினார்..அவ்வருடம் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வில் சாணக்கியன் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 24.இது நாள் வரை தமிழரின் விடுதலைப்போராட்டம் அரச பயங்கர வாதத்தின் விளைவுகள் பற்றியெல்லாம் எதுவுமே அவருக்குத் தெரியாது. துயிலுமில்லத்தில் கண்ட அபூர்வமான காட்சிகள் அவரை உலுப்பின. அந்த வித்தியாசமான உணர்வலைகள் பற்றி கனவிலும் அவர் அறிந்ததில்லை. தான் எங்கே நிற்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். அருண் தம்பிமுத்துவின் கட்சியிலிருந்து விலகினார்.அவரைப் பொறுத்தவரை அது ஒரு அரசியல் விபத்து. இத் தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது. தந்தை செல்வாவுடன் பழகிய கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர் பேரவைக் காரரும் பின்னாளில் ஆயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவருமான பாசி அல்லது யோகன் பாதர் எனப்படும் பாலிப்போடி சின்னத்துரையை தனது இல்லத்துக்கு வரவழைத்து கலந்துரையாடினார் சம்பந்தன் ஐயா. உடனே மாவையும் இன்னுமொரு முக்கிய புள்ளியும் புலிகள் அரசியலுக்குள் கொண்டு வரப்பட வேண்டியவர்கள் அல்ல ; அவர்களை வைக்கவேண்டிய இடத்தில்தான் வைக்கவேண்டும் எனத் தமது பலத்த ஆட்சேபனையை த் தெரிவித்தனர்.(ஆனால் மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகளின் வாக்குகள் மட்டும் வேண்டும்) தமிழ் இளைஞர் அரசியலில் தன்னை விட யாருக்கும் வரலாறு இருக்கக் கூடாது என்பது மாவையின் நிலைப்பாடு. எப்படி அவர் பாலிப்போடி சின்னத்துரையை ஏற்றுக்கொள்வார்? புதிய சுதந்திரனும் மாவையையே சுற்றிச் சுற்றி வரலாறு எழுதியது. இந் நிலையில் யோகன் பாதரும் சாணக்கியனும் சந்தித்துக் கொண்டனர். சாணக்கியனுக்கு முழுமையான ஆதரவளிக்க முடிவெடுத்தார் யோகன் பாதர். சாணக்கியனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியமை தொடர்பாக பொன்.செல்வராஜா அதிருப்தி வெளியிட்டார். அருண் தம்பிமுத்துவுடன் சிலகாலம் இணைந்து செயற்பட்டவர்என்று குற்றஞ்சாட்டினார்.இதற்கு நீங்கள் எல்லாம் முன்பு எங்கேயிருந்தீர்கள்? என்று கேட்கப்பட்டதும் பதில் சொல்ல முடியவில்லை . பொன்.செல்வராஜாவினால் .(1977 தேர்தலில் கணேசலிங்கம் போட்டியிட்போதே செல்வராஜாவின் உடலில் தேசியக் காற்றுப்பட்டது. கணேசலிங்கம் வெற்றி பெற்ற பின் அவரது கோவை தூக்குபவராகத் திரிந்தார். அதற்கு முன் இவர் தம்பிராஜாவின் ஆதரவாளர். 1970 தேர்தலில் ஐ.தே. கட்சியில் போட்டியிட்டு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியவர் தம்பிராஜா ) இந் நிலையில் சாணக்கியன் சிங்களத்தியின் மகன் என்ற கதையை தமிழரசுக் கட்சியினரே அவிழ்த்து விட்டனர். எல்லோருடைய சதியையும் தாண்டி 33332 விருப்பு வாக்குகளை பெற்றார் சாணக்கியன். அரசுத் தரப்பில் பிள்ளையானை,வியாழேந்திரனை வெல்ல வைப்பதற்காக சாத்தியமான சகல விடயங்களும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தலின் பின்னர் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் உள் வீட்டுக் குழப்பங்களையடுத்து செயலர் ராஜினாமா செய்யவேண்டியேற்பட்டது. இந் நிலையில் புதிய செயலாளராக கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரான பாலிப்போடி சின்னத்துரையை தெரிவு செய்வதே நல்லது என மாவைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. பிள்ளையான்,கருணாவை எதிர்கொள்வதற்கு சின்னத்துரையே பொருத்தமானவர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது சின்னப்பிள்ளைத்தனமாக மாவை ஒரு கேள்வி கேட்டார். “அது சரி இவர்கள் போன்றோரெல்லாம் இருக்கும் போது பிள்ளையான் எப்படி இவ்வளவு வாக்குகள்( 54108) பெற்றார்” என்று. முதலில் தனது நிலையை அவர் உணரவில்லை. 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ள தான் இருக்க அங்கஜன் எப்படி 36895 வாக்குகளை பெற்றார் என்று யோசித்திருந்தால் இவ்வாறான கேள்வியெழுந்திருக்காது. உண்மையில் புலிகளை மட்டுமல்ல புலிகள் சார்பானோரும் நிர்வாகப் பதவியில் அமர்வதை அவரால் சகிக்க முடியாது. மக்கள் பிரதிநிதியாக இவர் தெரிவாகும் முன்னரே 1970 களில் யாழ். மாநகர உறுப்பினராக விளங்கியவர் சொலமன் சூ சிறில். (இராஜா விஸ்வநாதன் மேயராக இருக்கும்போதே).இன்றுள்ள மாநகர சபை உறுப்பினர்களில் இவரே சீனியர். இரு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆர்னோல்ட்டை மேயர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்த்தே வாக்களிப்போம் என்று EPDP தெளிவாக அறிவித்து விட்டது. எண்ணத் தெரியாத ஒருவரா தமிழரசுக் கட்சித் தலைவர் ? இல்லை நன்றாகவே தெரியும். எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு சகுனப் பிழை ஏற்பட வேண்டும் என்று எண்ணித்தான் சொலமன் சூ சிறிலை மேயர் வேட்பாளராக அறிவிக்காமல் விட்டார். எப்படியோ புலிகள் சர்பானோரை மேயர் பதவியில் அமர விடாமல் செய்தாயிற்று என்று பூரணமனத் திருத்தியுடன் அன்று தூக்கத்துக்குச் சென்றிருப்பார். மணிவண்ணனை மேயராக்கும் எண்ணம் அவருக்கு இருந்திருக்காது என்றும் சொல்ல முடியாது.இந் நிலையில் தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிக் காரரான பாலிப்போடி சின்னத்துரையை செயலாளராக்க எப்படி சம்மதிப்பார் மாவை ? இந் நிலையில் கட்சியை இளைஞர் மத்தியில் கொண்டுசெல்லவும், மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பாதைக்கு வழிவகுக்கவும் சுயநலமின்றிச் சிந்திப்பவராக இருந்தால் சாணக்கியனைக் கட்சி செயலாளராக்க வேண்டும் என்று அடுத்த செயற் குழுக் கூட்டத் திலோ பொதுச் சபையிலோ வலியுறுத்த முனைவாரா சிறீதரன் ? பாலிப்போடி சின்னத்துரையைத்தான் மாவையால் நிராகரிக்க முடியுமே தவிர சாணக்கியன் விடயத்தில் அவரால் எதுவும் கூறமுடியாது. தார்மீக ரீதியில் செயலர் பதவி மட்டக்களப்புக்குத்தான். இதனை கட்சித் துணைத் தலைவரான சி. வி.கே சிவஞானம் ஏற்கெனவே அறிவித்துள்ளார். கட்சிச் செயலர் பதவியில் இன்னொருவரும் கண் வைத்துள்ளார்.”பயங்கரவாதத்தை அழித்த இந்த அரசாங்கத்துக்கு விசர் நாய்களைக் கொல்வது என்பது கஸ்ரமான செயலல்ல “யூன் மாதம் 9ம் திகதி 2011 ஆண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆற்றிய உரை இது. நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து வெளியிடும் அரசின் ஹன்சாட்டில் பக்கம் 1336 இல் இவ் விடயம் காணப்படுகிறது.விலங்குகள் நலச் சட்டம் மீதான விவாதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறுவதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ரசிக்கலாம் மாவை. இது அரியநேந்திரனுக்கான சிறப்புத் தகுதியெனவும் கருதலாம்.ஆனால் இதனை சிறீதரன் ஏற்க மாட்டார் என்றே நாம் நம்புகின்றோம். இதே வேளை கட்சிரீதியாக துணிச்சலுடன் செயலாற்றும் தகுதி சாணக்கியனுக்கு உண்டுதான். ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு அவருக்கு எதுவுமே தெரியாது. தலைவர் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அவருடன் கூட இருந்த சிலர் இன்றும் பார்வையாளர்களாக அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சாணக்கியன் பிறந்திருக்க வில்லை இத்தனை வருடத்தில் சந்தித்த வேதனைகள், வலிகள் அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சியும் ,ஆயுதமும் புகலிடமும் வழங்கியது. பின்னர் ஸ்ரீலங்கா சார்பில் தமிழர் மீது போர் தொடுத்தது. இந்தியாவை இந்த மண்ணிலிருந்து விரட்ட என்னென்ன செய்யவேண்டுமோ அதனைப் புலிகள் செய்தனர். எனவே வரலாறு எந்தக் கட்டத்திலும் எப்படியும் மாறலாம்; இதற்கு ஆண்டுக்கணக்கில்லை என்ற விடயங்களை ஸ்ரீதரனும் யோகன் பாதரும் சாணக்கியனுக்கு விளக்க வேண்டும் . முற் கற்பிதங்கள் தேவையில்லை எனவே கட்சிச் செயலாளராக சாணக்கியனை நியமிக்கவேண்டும் என ஏனையவர்களை வலியுறுத்தும் பணியை அவர் விரைந்து மேற் கொள்ளவேண்டும். முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற சர்சைகளை நிறுத்துமாறு சம்பந்தன் ஐயாவும் சொல்லிவிட்டார். எனவே கட்சியின் நலன் கருதி சாணக்கியனை செயலாளராக்க முனைவார் சிறீதரன் என நம்புகிறோம். அவதானி https://thamilkural.net/thesathinkural/views/127857/ -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
இலங்கையை அழிக்க லசந்தவின் மகள் முயற்சி! - அரசு குற்றச்சாட்டு.! சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு இலங்கை அரசு நீதியைத் தராமல் மறுத்து வருகின்றது என அவரது மகள் அகிம்ஸா விக்கிரமதுங்க வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்காக சர்வதேச சமூகத்தை திரட்டி இலங்கையை அழித்து அதன் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு அகிம்ஸா விக்கிரமதுங்கவும் மேலும் பலரும் முயற்சிக்கின்றனர் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இதேவேளை, புலம்பெயர் குழுக்கள் மற்றும் எதிரணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினர் அகிம்ஸா விக்கிரமதுங்கவை இயக்குகின்றனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை சவால்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் லசந்தவின் மகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது துரதிஷ்டவசமானது. குற்றவாளிகளை ஒருநாள் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்கும் முயற்சியில் அகிம்ஸா வெற்றி பெறுவதற்காக வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்" - என்றார். வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அகிம்ஸா விக்கிரமதுங்க எழுதியுள்ள கட்டுரையில், "2007 இல் பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்ச இருந்தபோது நடந்த ஆயுதக் கொள்வனவின்போது 10 மில்லியன் டொலர் ஊழல் நடந்திருப்பது பற்றி எனது தந்தை லசந்த விக்கிரமதுங்க வெளிப்படுத்தியிருந்தார். கோட்டாபய ராஜபக்ச அவரை அவதூறு குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் எனது தந்தையின் பதிப்பகம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த ஆயுத ஊழல் தொடர்பில் எனது தந்தையிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி எனது தந்தை பணிக்குச் சென்று கொண்டிருக்கும்போது இராணுவப் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். கோட்டாபய ராஜபக்சவையே அதற்கு நான் பொறுப்பாளியாக்குகின்றேன" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றி பெற்று விட்டதால், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் முயற்சிகள் வெற்றியளிக்காத நிலை நீடிக்கின்றது எனவும் அந்தக் கட்டுரையில் அகிம்ஸா தெரிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளும் சாட்சியங்களும் ராஐபக்ச அரசால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அகிம்ஸா தனது நீண்ட கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/03/06/23350/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.