நிலாமதி

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும்...

Recommended Posts

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை .

"நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்."

பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.

எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.

மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு

இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.

இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது

இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.

தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.

தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை.

( நயினை அன்னைமகன் )

நன்றி  முக நூலில் இருந்து 

  • Like 9
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இந்தளவு அவல வாழ்க்கை வாழுபவர்கள் தான் பல லட்சம் செலவு செய்து தமது உறவினர்களை எடுக்க முனைகிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, நிலாமதி said:

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை .

 இஞ்சத்தையான் கஸ்டங்களை அப்ப தொடக்கம் சொல்லிக்கொண்டு வாறன்......

அங்கையிருக்கிறதுகள் கேட்டாத்தானே....

ஏதோ நான் காசுமரத்துக்கு கீளை படுத்திருக்கிற மாதிரியும் அவையள் முன்னேறிடுவினம் எண்டு எரிச்சல் பொறாமையிலை சொல்லுறமாதிரி நினைக்கினம்....
வாங்கோ இங்கை வந்து வேலை செய்து பாருங்கோ....அப்ப தெரியும் கையின் கருக்குமட்டை சொரசொரப்பு...:(

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, நிலாமதி said:

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர்.

தற்போதைய நிலைமை இதுவல்ல ...ஊரிலிருக்கும் ஒரளவு விடயம் தெரிந்த அனைவருக்கும் இந்த விளக்கம் தெரியும். இவர்கள் காட்டும் கலரில் பிரமிப்பதில்லை மாறாக நமுட்டு சிரிப்பை சிரித்து மனதுக்குள் சொல்லிக்கொள்வினம் தம்பியர இனி நான்கு வருடத்துக்கு ஊரில காணக்கிடைக்காது என்று. பிரமித்தகாலம் எல்லாம் மலையேறிவிட்டது. இவர்களை சூழ்ந்து கொள்ளும் இன சன நண்பர்கள் எல்லாம் பெரும் பாசத்திலோ சூழ்கிறார்கள் ...?
வெளிநாட்டு வெற்று பந்தா பார்ட்டி புடுங்கும் வரைக்கும் புடுங்குவோம் என்று ஓசித்தண்ணி இத்யாதி ...இத்யாதி என்று அனுபவித்து விட்டு போகும்போது கஜுக்கொட்டை பக்கெட்  ஒன்றை கையில் திணித்து அனுப்பிவிடுவர்...எங்கடை புலத்து ஆக்களும் நெம்பர் ஒன் சுயநலவாதிகள் தெரியுமோ. சிக்கினான் சின்னத்தம்பி என்று பிரித்து மேஞ்சுடுவினம்   

Share this post

Link to post
Share on other sites

இங்குள்ள மக்கள் யாவும் அறிந்தவர்கள் ஒரு சிலரைத்தவிர ஆனால் வெளிநாட்டு வாழ்க்கை  பந்தாக்கு வாழ்பவ்ரகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்குறார்கள் சில படு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கூழோ கஞ்சியோ எம் நாட்டில் வாழ்ந்தால் போதும் எனக்கு 

எனக்கு கார் வேணாம் அப்பாடா பெடல் இல்லாத சைக்கிள் போதும் 

கையில் சுவிஸ் வாச்சி வேணாம்  காகம் போதும் கரந்தால் நேரமறிவேன் மாலை மய்க்கினால் நேரமறிவேவ் 

பீசா , வேணாம் , பர்கர் வேணாம் பழைய தண்ணிச்சொறு போதும் 

ஒரு சறமும் வேட்டியும் சொல்லும் நான் தமிழன் என எந்த ஆடையும் என்னை பிடிக்க முடியாது 

கையில் அதிக காசு  வேணாம் நல்ல உறவுகள் போதும் போலியாக வாழ முடியாது 

ஏசி வேணாம் , மெத்தை வேணாம் ஒர்  தரை போதும் படுத்துறங்க

இன்னும் இருக்கு 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தமிழன் தமிழனாக ஒன்று சேர்ந்தால்தான் அதிசயம் !

மற்றும்படி எல்லா குடும்பத்திலும் கலந்து இருப்பதாலோ என்னோவோ 
இன்னமும் கொஞ்சம் பொது நிறமானவர்கள் ... கறுப்பானவர்கள் 
என்பதை தவிர 

மற்றையபடி எல்லா வித பிரிவினையும் உண்டு.
பொறாமையின் அதியுச்சிதான் இதன் முதன்மை காரணம் 

போராட்டம் என்றாலும் ...
பொருளாதார உதவி என்றாலும் ...
குடும்ப மேம்பாடு என்றாலும் ....
கூத்தமைப்பு உண்டியல் குலுக்கினாலும்.
கடடேறும்பாய் தேய்ந்தது புலப்பெயர்ந்த தமிழன்தான்.

அவன் செய்த மாபெரும் குற்றம் ....
25 30 வருடம் முன்பு வரும்போது கொண்டுவந்த 
சாரம் கேஷியோ மணிக்கூடு இதுகளை தொலைத்துத்தான்.
திரும்பி போகும்போது அவற்றுடன் திரும்பி இருந்தால் 
அங்கிருந்து கொளுத்தவர்களுக்கு குளிர்ந்திருக்கும் போல??

அங்கிருக்கிறவை பெருமை கொள்ளலாம் தாம் ஐ போன் 8 10 
எல்லாம் வைச்சிருக்கிறம் என்று ...
இங்கிருக்கிறவனுக்கு அந்த குப்பை ஒரு வார சம்பளம் 
ஆனால் அதனுடன் போக கூடாது ....
இனி ஆப்பிளுக்கு சொல்லி இங்கிருந்து கொண்டுபோற மாதிரி 
ஐ போன் - 5    -6 என்று ரிவெர்சில செய்ய வேணும். 

Share this post

Link to post
Share on other sites
35 minutes ago, Maruthankerny said:

அங்கிருக்கிறவை பெருமை கொள்ளலாம் தாம் ஐ போன் 8 10 
எல்லாம் வைச்சிருக்கிறம் என்று ...
இங்கிருக்கிறவனுக்கு அந்த குப்பை ஒரு வார சம்பளம் 
ஆனால் அதனுடன் போக கூடாது ....
இனி ஆப்பிளுக்கு சொல்லி இங்கிருந்து கொண்டுபோற மாதிரி 
ஐ போன் - 5    -6 என்று ரிவெர்சில செய்ய வேணும். 

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சிறப்பு எழுத்துக்குறிகள்

புலம்பெயர்தவணை உங்களின் சகோதரர்கள் எனும் மனநிலையில் பார்த்தால்
இந்த கேள்விகள் வரத்தேவையில்ல
அவர்கள் வரும்போது கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அவன

சிறப்பு எழுத்துக்குறிகள்
புலம்பெயர்தவணை உங்களின் சகோதரர்கள் எனும் மனநிலையில் பார்த்தால்
இந்த கேள்விகள் வரத்தேவையில்லை
அவர்கள் வரும்போது கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அவனது உழைப்பில்தான்
அவனது குடும்பம்
ஊர்
நாடு
என்று எல்லாம் வளருகிறது.

எல்லவற்றையும் உதறிவிட்டு இருந்தால்
ஒருவார உழைப்பில் அந்த குப்பையை வாங்க முடியும்.

முதல் தலைமுறைதான் உள்ளதை எல்லாம் ஊருக்கு
ஊத்திவிட்டு இப்படி புலம்புகிறார்கள் ... இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் நாட்டுக்கு என்று உழைத்தவன்
ஊரில் இருந்தாலும் .... புலம்பெயர்ந்து இருந்தாலும்
இழந்தவன் அவன்தான்.

தான் இருந்தவன் இங்கிருந்தாலும் அங்கிருந்தாலும்
ஊத்திதான் இருக்கிறான். 
 
இதை மேம்படுத்த உதவவும்!
44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

து உழைப்பில்தான்
அவனது குடும்பம்
ஊர்
நாடு
என்று எல்லாம் வளருகிறது.

எல்லவற்றையும் உதறிவிட்டு இருந்தால்
ஒருவார உழைப்பில் அந்த குப்பையை வாங்க முடியும்.

முதல் தலைமுறைதான் உள்ளதை எல்லாம் ஊருக்கு
ஊத்திவிட்டு இப்படி புலம்புகிறார்கள் ... இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் நாட்டுக்கு என்று உழைத்தவன்
ஊரில் இருந்தாலும் .... புலம்பெயர்ந்து இருந்தாலும்
இழந்தவன் அவன்தான்.

தான் இருந்தவன் இங்கிருந்தாலும் அங்கிருந்தாலும்
ஊத்திதான் இருக்கிறான். 

இதை மேம்படுத்த உதவவும்!

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, Maruthankerny said:

.. இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

புலம்பெயர்சின் அடுத்த  தலைமுறைகள் அவுடிகளுடனும் பீமர்களுடனும் வலம் வருவது மகிழ்ச்சி 
ஆனால் முக்கியமாக  ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது   அவர்களுக்கும் புலத்து சொந்தங்களுக்கிடையான உறவு அப்படியே அருகிக்கொண்டு செல்கிறது. புலத்திலும் புலம்பெயர்சிலும் முதலாம் தலைமுறை  இறுதி தலை விழும் காலத்திருந்து 
புலம் , புலம்பெயர் இரண்டாம் தலைமுறைகளுக்கான உறவு சொந்தம் என்பதிலிருந்து நாகரிகம் கருதிய ஒரு உறவாக மாறும் சாத்தியமே அதிகம் 
உதாரணமாக எனது குடும்பத்திலும் எனது தாயாரின் நான்கு சகோதரங்கள் எண்பதுகளில்  புலம்பெயர்ந்தவர்கள் . அவர்களுக்கிடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை விட 
அவர்களது பிள்ளைகள் (இரண்டாம்   தலைமுறை ) எங்களிடம் இருக்கும் அந்நியோன்னியம் நாகரிகம் கருதிய ஒன்றாகவே இருக்கிறது 
அதாவது எனது மச்சான் என்பதை விட மாமாவின் மகன் என்பதாகவே இருக்கிறது . எந்த நல்லவை கெட்டவைகளில் இரண்டாம் தலைமுறைகளை காணவே கிடைக்காது. புலம் பெயர் இரண்டாம் தலைமுறைகளின் வாழ்க்கை துணைகள் அனைத்துமே வெள்ளைகள்  
உதாரணமாக குழந்தை பிறந்தால் கூட முகப்புத்தகத்தில் லைக் போட்டு வாழ்த்திவிட்டு நகரும் ஒரு வகையிலே தான் இரண்டாம் தலைமுறை இருக்குகிறது . உண்மையிலே இரண்டாம் தலைமுறை எப்போதாவது  புலத்திற்கு வரும்நோக்கில் 
தொடர்புகொண்டாலோ புலத்திலிருக்கும் இரண்டாம் தலைமுறை ஏதாவது சாக்கு சொல்லி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்க்கும் பாங்கே அதிகரித்துகொண்டு  செல்கிறது. மூன்றாம் தலைமுறையில் இந்த இடைவெளிகள் அதிகமாகி 
தமக்கு  உறவுகள் உண்டென்பதையே இரு சாராரும் மறந்துவிடுவார்கள்.  இப்படி புலத்துடனான தொடர்பே முற்றாக அற்றுபோனபின் புலம் பெயர் அடுத்த சந்ததிகளில் எவ்வாறு புலத்தின் அடுத்தசந்ததி தங்கியிருக்கப்போகிறது
நிச்சயமாக இதுமட்டும் நடக்காது    

  • Like 5

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

தற்போதைய நிலைமை இதுவல்ல ...ஊரிலிருக்கும் ஒரளவு விடயம் தெரிந்த அனைவருக்கும் இந்த விளக்கம் தெரியும். இவர்கள் காட்டும் கலரில் பிரமிப்பதில்லை மாறாக நமுட்டு சிரிப்பை சிரித்து மனதுக்குள் சொல்லிக்கொள்வினம் தம்பியர இனி நான்கு வருடத்துக்கு ஊரில காணக்கிடைக்காது என்று. பிரமித்தகாலம் எல்லாம் மலையேறிவிட்டது. இவர்களை சூழ்ந்து கொள்ளும் இன சன நண்பர்கள் எல்லாம் பெரும் பாசத்திலோ சூழ்கிறார்கள் ...?
வெளிநாட்டு வெற்று பந்தா பார்ட்டி புடுங்கும் வரைக்கும் புடுங்குவோம் என்று ஓசித்தண்ணி இத்யாதி ...இத்யாதி என்று அனுபவித்து விட்டு போகும்போது கஜுக்கொட்டை பக்கெட்  ஒன்றை கையில் திணித்து அனுப்பிவிடுவர்.
..எங்கடை புலத்து ஆக்களும் நெம்பர் ஒன் சுயநலவாதிகள் தெரியுமோ. சிக்கினான் சின்னத்தம்பி என்று பிரித்து மேஞ்சுடுவினம்   

cause and effect........  

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலம்பெயர்சின் அடுத்த  தலைமுறைகள் அவுடிகளுடனும் பீமர்களுடனும் வலம் வருவது மகிழ்ச்சி 
ஆனால் முக்கியமாக  ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது   அவர்களுக்கும் புலத்து சொந்தங்களுக்கிடையான உறவு அப்படியே அருகிக்கொண்டு செல்கிறது. புலத்திலும் புலம்பெயர்சிலும் முதலாம் தலைமுறை  இறுதி தலை விழும் காலத்திருந்து 
புலம் , புலம்பெயர் இரண்டாம் தலைமுறைகளுக்கான உறவு சொந்தம் என்பதிலிருந்து நாகரிகம் கருதிய ஒரு உறவாக மாறும் சாத்தியமே அதிகம் 
உதாரணமாக எனது குடும்பத்திலும் எனது தாயாரின் நான்கு சகோதரங்கள் எண்பதுகளில்  புலம்பெயர்ந்தவர்கள் . அவர்களுக்கிடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை விட 
அவர்களது பிள்ளைகள் (இரண்டாம்   தலைமுறை ) எங்களிடம் இருக்கும் அந்நியோன்னியம் நாகரிகம் கருதிய ஒன்றாகவே இருக்கிறது 
அதாவது எனது மச்சான் என்பதை விட மாமாவின் மகன் என்பதாகவே இருக்கிறது . எந்த நல்லவை கெட்டவைகளில் இரண்டாம் தலைமுறைகளை காணவே கிடைக்காது. புலம் பெயர் இரண்டாம் தலைமுறைகளின் வாழ்க்கை துணைகள் அனைத்துமே வெள்ளைகள்  
உதாரணமாக குழந்தை பிறந்தால் கூட முகப்புத்தகத்தில் லைக் போட்டு வாழ்த்திவிட்டு நகரும் ஒரு வகையிலே தான் இரண்டாம் தலைமுறை இருக்குகிறது
. உண்மையிலே இரண்டாம் தலைமுறை எப்போதாவது  புலத்திற்கு வரும்நோக்கில் 
தொடர்புகொண்டாலோ புலத்திலிருக்கும் இரண்டாம் தலைமுறை ஏதாவது சாக்கு சொல்லி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்க்கும் பாங்கே அதிகரித்துகொண்டு  செல்கிறது. மூன்றாம் தலைமுறையில் இந்த இடைவெளிகள் அதிகமாகி 
தமக்கு  உறவுகள் உண்டென்பதையே இரு சாராரும் மறந்துவிடுவார்கள்.  இப்படி புலத்துடனான தொடர்பே முற்றாக அற்றுபோனபின் புலம் பெயர் அடுத்த சந்ததிகளில் எவ்வாறு புலத்தின் அடுத்தசந்ததி தங்கியிருக்கப்போகிறது
நிச்சயமாக இதுமட்டும் நடக்காது    

Share this post

Link to post
Share on other sites

புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி மேலோட்டமாக ஆராய முற்பட்ட மேற்படி முகநூல் பகிர்வு அதன் இப்பிரச்சனைக்கான அடிப்படை என்ன என்பதை பற்றி வசதியாக மறந்து விட்டு தனியே புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது மட்டும் சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டியுள்ளது. மற்றவர்களுக்கு பந்தா காட்டும் பழக்கம் ஐரோப்பாவில் இருந்து அங்கு சென்றதல்ல. எமது தாயகம் உட்பட தெற்காசிய நாடுகளில தான் இப்பழக்கம் பல காலமாக  வேரூன்றி உள்ளது. புலம் பெயர் மக்களில் சிலர் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் அந்த பழக்கம் அவர்களுக்கு தாயகத்தில் தான் ஊட்டப்பட்டது என்பதை மறந்து அது ஏதே மேற்கத்தய பழக்கம் என்பது போல கட்டுரையாளர் காட்ட முன்வந்துள்ளார். ஐரோப்பியர்கள் தனது வாழ்வில் என்றுமே பந்தாகாட்டுவதில்லை என்பது அவர்களுடன் பழகும் எவரும் இலகுவில் அறிந்து கொள்வர். எனவே இவவாறு பந்தா காட்டுபவர்கள் அந்ந பழக்கத்தை தாயகத்தில் தான் வாழ்ந்த காலத்தில் தான் கற்று தனது நிலை பொருளாதாரத்தில் உயரும் போது அதை மற்றவர்களுக்கு காட்ட முன்வநதுள்ளனர். எனவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்  என்ற விடுப்பு பார்க்ககும் கலாச்சாரத்தை தாயகத்தில் உள்ளவர்கள் உட்பட நம்மவர் கைவிடும் போது இந்த பந்தா காட்டும் பழக்கமும் இல்லாமல் போய்விடும். உண்மையில் மற்றவர்களை பார்க்கும் தவறான பார்வையும் அவர்கள் பந்தா காட்டுகிறார்கள் என்ற நினைப்புக்கு காரணம்.

நாற்பதுகளின் நோய்களை சுமந்து முதுமை அடைந்து விடும் மக்கள் கூட்டம் என்றால் தவறு எங்கே இருக்கிறது. இருபதுகளில் சிறந்த உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களே நாற்பதுகளில் மனிதர்கள்  நோய்வாய்பட பெரும்பாலும் காரணமாகிறது. இருபதுகளில் இங்கு வந்த தலைமுறையினர்  தவறான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தனர் என்பதையே மறைமுகமாக  கட்டுரை சொல்கிறது. அப்படியானால்   இருபதுகளின் தமது ஆரம்ப உயர் கல்வியை முடித்து இங்கு வந்த இளைஞர்களுக்கு சிறந்த சுகாதார  வாழ்க்கை முறையை தாயக கல்விமுறை சொல்லி கொடுக்க வில்லையோ என்ற ஐயம் எழுவது இயல்பானது. 

துப்பவரவு தொழிலாளி காட்டும் கலரால் என்று அத்தொழிலை இழிவாக கட்டுரையாளர் கூறுவது எமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அத்துப்பரவு தொழிலாளிடன் ஒரு நிறுவனத்தில் இயக்குனர் பதவியில் இருக்கும் ஒருவர் சரிசமமான இருந்து உணவருத்துவது  ஐரோப்பிய கலாச்சாரம்

எம்மவர்களின் அளவுக்கு அதிகமான மது பாவனை  இங்கு கற்று கொண்டதல்ல. தாயகத்தில் கூட அப்படிதான். ஐரோப்பாவில் ஒரு Restaurant அறிமுகம் இல்லாத  மது அருந்துபவர்களின் பக்கத்து மேசையில் ஒரு குடும்பம் தனது குழந்தைகளுடன் கண்ணிமான முறையில்  உணவருந்த முடியும். அதிகம் கலாச்சாரம் பேசும் தாயகத்தில் என்ன நிலை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  மனிதர்கள் உறவாடாத தனிமை சிறை என்பது மிகைபடுத்த பட்ட கூற்று. பணத்தை தவிர வேறு உலக அறிவு இல்லை என்றால் அதற்கு காரணம் வாழும் நாட்டின் இணைவு வாழ்க்கையை (intergration) வாழ தவறுவதே. தூக்கி எறியவேண்டிய பத்தாம்பசலி த்தனமான  மடைத்தனமான பல  பழக்கங்களை கலாச்சாரம் என்ற அடைமொழியுடன்  இன்றும் கைகொள்ள தெரிந்த எமக்கு  வாழும் நாட்டின் சிறந்த பழக்கங்களை கற்று கொள்ள தவறுவது  மறுப்பது ஏன்?  எம்மை போல புலம்பெயர்ந்த மற்றய இன மக்கள் ஒப்பீட்டு ரீதியில் மிகவும் வேகமாக இணைவு வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் போது எம்மவர்களால் அது முடியாதற்கு காரணம் தாயகத்தில் அவர்கள் பழகிய விதமே. ஆகவே இங்கு புலம் பெயர்ந்தவர்களின் மீது விரல் நீட்டி தாயகத்தில் இருப்பவர்கள் குற்றம்   சாட்டும் போது மற்றயை விரல்கள் குற்றம் சாட்டுவபர்களையும் சேர்த்தே காட்டி நிற்கிறது.

.

  • Like 6

Share this post

Link to post
Share on other sites

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

அண்ணேய் முதலில் ஊரில் இருக்கும் சிங்கங்களை ஒழுங்கா ஒரு வேலை செய்ய சொல்லுங்க பார்க்கலாம் ஒரு வாழை மரத்துக்கு பாத்தியை மாத்த கூலிக்கு ஆட் பிடிக்கும் கூட்டம் இன்னும் வருது வேண்டாம் .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இன்று தான்  பார்த்தேன்

அருமையான  கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன

2003  இல் ஊர்   போயிருந்தபோது நான்  சொன்னது

எனது ஊரை கூட்டி அள்ளினாலே நான் கோடீசுவரனாகிவிடுவேன்

இன்றுவரை அதை செய்ய  ஆளில்லை

இது தான் அங்குள்ள  நிலைமை

ஆனால் புலத்தில் வந்து......???

Share this post

Link to post
Share on other sites

புலத்தில்  வாழ்ந்துவிட்டு

தாயகத்தில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் ஒன்றை  செய்துவரும்

முகநூல் நண்பர் ஒருவரின் கருத்து இது.

களத்திலும் புலத்திலும் வாழ்பவன்

எனக்கொரு உண்மை தெரியும்.

நாட்டில் உள்ளவர்களில்99%

வெளி நாடு சென்றுவாழவே விரும்பும் கின்றார்கள்.

சின்ன உதாரணம்                                                                                                                                                                                                                                                                                                               என்  நண்பர் படித்தவர் வசதியானவர் அவரின் ஆதங்கம் "எங்கள் குடும்பதில் ஒருவர் கூட வெளிநாடு செல்லும் பாக்கியம் அற்றவர்கள்."

Share this post

Link to post
Share on other sites
On 12/13/2017 at 1:39 AM, சுவைப்பிரியன் said:

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

இன்னும் எழுத தொடங்கல எதிர்பார்த்தேன் பார்த்துக்கொண்டிருக்கிறன் உங்கள் கருத்தையும் :unsure:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.