Jump to content

இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!


Recommended Posts

இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!

இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!

சர்வதேச அளவில் அதிவேக இணையச் சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 Mbps ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சராசரியாக கிடைத்த வேகத்தை (7.65 Mbps) விட அதிகமாகும். இந்தப் பட்டியலில் 62.66 Mbps மொபைல் இணைய வேகத்துடன் நார்வே முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து 53.01 Mbps வேகத்துடன் நெதர்லாந்து இரண்டாம் இடத்திலும், 52.78 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும், 51.50 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் நான்காவது இடத்திலும், 50.46 Mbps வேகத்துடன் மால்டா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

பிராட்பேண்ட் இணையச் சேவையில் இந்தியா 18.82 Mbps வேகத்துடன் 76வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 153.85 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்திலும், 147.51 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து இரண்டாம் இடத்திலும், 133.94 Mbps வேகத்துடன் ஹாங்காங் மூன்றாவது இடத்திலும் உள்ளன

https://minnambalam.com/k/2017/12/12/1513103103

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் எப்படி அடுத்த சில வருடங்களில் வல்லரசு எனும் கனவில் இருக்கினம் எண்டு எனக்கு இன்னும் புரியவே இல்லை பக்கத்து எதிரி நாடு சீனா அமரிக்காவை மிஞ்சின சூப்பர் கொம்புயுட்டரை உருவாக்கி சாதனை படைக்கிது இவை ஈழத்து தமிழனை வஞ்சகமாக சொறிலங்கா அரசுடன் சேர்ந்து அழித்தது ஒன்றுதான் அவர்களின் சாதனை யாக இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இவையள் எப்படி அடுத்த சில வருடங்களில் வல்லரசு எனும் கனவில் இருக்கினம் எண்டு எனக்கு இன்னும் புரியவே இல்லை பக்கத்து எதிரி நாடு சீனா அமரிக்காவை மிஞ்சின சூப்பர் கொம்புயுட்டரை உருவாக்கி சாதனை படைக்கிது இவை ஈழத்து தமிழனை வஞ்சகமாக சொறிலங்கா அரசுடன் சேர்ந்து அழித்தது ஒன்றுதான் அவர்களின் சாதனை யாக இருக்கும் .

இந்தியாவின்ரை வல்லமையிலை இன்னுமொண்டை மறந்து போனியள்....
அதுதான்.....

அந்த மாலைதீவு விசயம்...

எங்கையோ இருந்து மாலை தீவை காப்பாற்ற கட்டுமரத்திலை போச்சினமாம்.....

அதை அடிச்சு நொருக்கிச்சுதாம் இண்டிய வள்ளரசு :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.