யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

குளிர்காலத்துக்கான சுவையான சமையல்

Recommended Posts

குளிர்காலத்துக்கான சுவையான சமையல்

 

குளிர்காலம் வந்தாலே சூடாக, காரசாரமாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது நம் இயல்பு. அதிலும் நான்வெஜ் இருந்தால் கேட்கவே வேண்டாம்... அசைவப் பிரியர்களுக்கு பெரும் குஷி தான். நம் குங்குமம் தோழி வாசகர்களுக்காக நம்மூர் அசைவ வகைகளை நமக்காக செய்து காட்டி அசத்தி இருக்கிறார் கார்ப்பரேட் செஃப் பி.எம்.சாமி. தென்னிந்திய அசைவ உணவுகளின் ஸ்பெஷலிஸ்ட் இவர்.
1.jpg
தென்னிந்திய இனிப்பு வகைகள் செய்வதிலும் கை தேர்ந்தவரான இவர் நமக்காக ஒரு சில இனிப்பு வகைகளையும் இங்கே செய்து காட்டி இருக்கிறார். பெஸ்ட் சாய்ஸ் சென்னை மற்றும் சென்னை செட்டி விலாஸ் என்ற இரண்டு ரெஸ்டாரென்டுகளின் ஹெட் செஃப் இவர்தான். இருபது வருடங்களாக இங்கே பணிபுரியும் இவரின் சமையல் அனுபவம் மொத்தம் முப்பதாண்டு கள். எளிய முறையில் இவர் வழங்கி இருக்கும் சமையல் முறைகளை பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டு அடுத்தவர்களுக்கும் கொடுத்து இந்த குளிர்காலத்தை என்ஜாய் பண்ணுங்க.

 

 

நாட்டுக்கோழி பூண்டு  பிரட்டல்

 

என்னென்ன தேவை?

நாட்டுக்கோழி - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 3,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 15 பல்,
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
தனியாத்தூள் - 30 கிராம்,
சீரகத்தூள் - 10 கிராம்,
மிளகுத் தூள் - 10 கிராம்,
சோம்பு தூள் - 10 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 10 கிராம்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.
13.jpg
எப்படிச் செய்வது?

சிக்கன், சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கி, தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர், நறுக்கிய பூண்டு, உப்பு, அனைத்து மசாலாத்தூள் சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

 

 

 

ஆட்டுக்கால் இடி மிளகு ரசம்

 

என்னென்ன தேவை?

ஆட்டுக்கால் - 2 துண்டு,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - 1 துண்டு,
காய்ந்தமிளகாய் - 20 கிராம்,
தனியா - 40 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
மிளகு - 10 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் - 20 கிராம்,
நெய் - 20 கிராம்,
உப்பு - தேவைக்கு.
2.jpg
எப்படிச் செய்வது?

சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகை வறுத்து உரலில் இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் + நெய் ஊற்றி சூடானதும் இடித்த வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவை, இடித்த மசாலா பொடி, மஞ்சள் தூள், 2 மட்டன் கால் துண்டுகளை நான்கு துண்டுகளாக நறுக்கி போட்டு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இது நன்றாக கொதித்து 1 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

 

http://www.kungumam.co.in

இன்னும் வரும்...

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

இறால் மாங்காய் குழம்பு

 

என்னென்ன தேவை?

இறால் - 1/2 கிலோ,
நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
தக்காளி - 2, புளி - 50 கிராம்,
தேங்காய் - 1/2 மூடி,
காய்ந்தமிளகாய் - 5,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
தனியாத்தூள் - 40 கிராம்,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
சீரகத்தூள் - 30 கிராம்,
கடுகு - 10 கிராம்,
வெந்தயம் - 10 கிராம்,
நல்லெண்ணெய் - 200 மி.லி.,
உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவைக்கு.
27.jpg
எப்படிச் செய்வது?

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கிள்ளிய காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இறால், தக்காளி, பச்சைமிளகாய், மாங்காய், புளிக்கரைசல், மசாலா தூள் வகைகள் போட்டு கிளறி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

 

 

களரி கறி

என்னென்ன தேவை?

எலும்புடன் கூடிய ஆட்டு இறைச்சி - 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 5, தயிர் - 100 மி.லி.,
மஞ்சள் தூள் - 20 கிராம்,
மிளகாய்த்தூள் - 25 கிராம்,
தனியாத்தூள் - 30 கிராம்,
சீரகத்தூள் - 20 கிராம்,
சோம்பு தூள் - 10 கிராம்,
மிளகுத்தூள் - 10 கிராம்,
வாைழக்காய் - 1 துண்டு,
மாங்காய் - 1 துண்டு,
தேங்காய் - 1/2 மூடி,
முந்திரி - 25 கிராம்,
பட்டை - 1 துண்டு,
கிராம்பு - 6,
ஏலக்காய் - 6,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 10 பல்,
உப்பு - தேவைக்கு.
நெய் - 50 மி.லி.,
எண்ணெய் - 200 மி.லி.,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு.
20.jpg
எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி முந்திரி சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் இரு பங்காக பிரித்து வைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டனை போட்டு எல்லா பொருட்களிலும் பாதியளவு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், சோம்புத்தூள், மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, ஏலம், அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு, எண்ணெய், வெங்காயம், கொத்தமல்லித்தழை, தயிர் போட்டு நன்றாக கலந்து மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து நன்றாக வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் + நெய் சேர்த்து காயவைத்து மீதியுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள் வகைகள், சிறிது உப்பு,
வெந்த மட்டனை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கி சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

 

 

http://kungumam.co.in

Share this post


Link to post
Share on other sites

மணப்பாடு மீன் வறுவல்


 

என்னென்ன தேவை?

விருப்பமான மீன் - 5 துண்டுகள்,
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
தனியாத்தூள் - 20 கிராம்,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
சீரகத்தூள் - 10 கிராம்,
பொரிக்க தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
நெய் - 20 மி.லி.,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கு.
17.jpg
எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீனை சுத்தம் செய்து கழுவி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் போட்டு பிரட்டி தேங்காய் எண்ணெயில் வறுத்தெடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் பொன்னிறமாக வதக்கி, பொரித்த மீனை போட்டு பிரட்டி எடுக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

 

 

நாட்டு கோழிச்சாறு

 

என்னென்ன தேவை?

நாட்டுக் கோழி - 250 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - 1 துண்டு,
துவரம்பருப்பு - 30 கிராம்,
பட்டை, கிராம்பு,
ஏலக்காய் - 10 கிராம்,
சோம்பு, சீரகம், காய்ந்தமிளகாய், மிளகு - தலா 10 கிராம்,
தக்காளி - 100 கிராம்,
கொத்தமல்லி, புதினா - 1/2 கட்டு,
கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு,
நல்லெண்ணெய் - 250 கிராம்.
3.jpg
எப்படிச் செய்வது?

சிக்கனை உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும். அதேபோல் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு ஆகியவையும் இடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் சோம்பு, சீரகம், காய்ந்தமிளகாய், மிளகை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, இடித்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு கலவை போட்டு நன்கு வதக்கி, சிக்கன் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்கவும். பின் அரைத்த மசாலா பொடி, தக்காளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, தண்ணீர் 2 லிட்டர் ஊற்றி கொதிக்க விடவும். சிக்கன், துவரம்பருப்பு நன்கு வெந்து தண்ணீர் 1 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

http://kungumam.co.in

Share this post


Link to post
Share on other sites

இறைச்சி மசாலா

 

 

என்னென்ன தேவை?

எலும்பு நீக்கிய மட்டன் - 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
தனியா தூள் - 50 கிராம்,
மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்பு தூள் - தலா 10 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 50 கிராம்,
இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல்,
பட்டை - 1  துண்டு,
கிராம்பு - 6, ஏலக்காய் - 5,
பெரிய வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
தேங்காய் - 1/2 மூடி,
முந்திரி - 15 கிராம்,
எண்ணெய் - 200 மி.லி.
நெய் - 50 கிராம்,
உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவைக்கு.
25.jpg
எப்படிச் செய்வது?

மட்டனை சிறு துண்டுகளாக வெட்டிக்  கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை உரித்து முழுசாக வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைக்கவும். தேங்காயை துருவி முந்திரியுடன் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

பின் அனைத்து தூள் வகைகள், மட்டன், அரைத்த தேங்காய் விழுது, சின்ன வெங்காயம், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மட்டன் நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை தூவி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

 

 

இறால் புட்டு

 

என்னென்ன தேவை?

இறால் - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 5,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்,
மஞ்சள் தூள்- 10 கிராம்,
தக்காளி - 1,
நல்லெண்ணெய் - 10 மி.லி.,
எலுமிச்சை பழம் - 1, உப்பு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.
18.jpg
எப்படிச் செய்வது?

இறாலை சுத்தம் செய்து கழுவி இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சீரகம், சோம்பு சேர்த்து கைமா போல் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளியை வதக்கி, இறால் கைமாவை போட்டு கிளறி மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.

 

http://kungumam.co.in/

Share this post


Link to post
Share on other sites

30 வகை குளிர் கால உணவுகள்

 

 

2_1512389521.jpg

கேப்சிகம் புலாவ்

தேவை:     பாஸ்மதி அரிசி - ஒரு கப்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  குடமிளகாய்த் துண்டுகள் (மஞ்சள், சிவப்பு, பச்சை) - ஒரு கப்  தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 4 பல் (தட்டவும்)  பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  பிரியாணி இலை, கிராம்பு - தலா ஒன்று  பட்டை - சிறிய துண்டு  நெய் - 2 டீஸ்பூன்  எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை:    பாஸ்மதி அரிசியைக் கழுவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து வடிகட்டவும். குக்கரில் நெய்விட்டுச் சூடாக்கி, பட்டை, கிராம்பு, அரிசி சேர்த்து வறுக்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம், பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இறுதியாக, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.


3_1512389541.jpg

சோளப் பணியாரம்

தேவை:       சோளம் - ஒரு கப்  உளுத்தம்பருப்பு - கால் கப்  வெந்தயம் - கால் டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கேரட் – ஒன்று (துருவவும்)  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  எண்ணெய், ­உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளத்துடன் வெந்தயம், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாகக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். மாவுடன் வதக்கிய காய்கறிக் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவை ஊற்றி, மூடி வேகவிடவும்.  பிறகு, திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.


4_1512389560.jpg

கோபி பராத்தா

தேவை:  கோதுமை மாவு - ஒரு கப்  தண்ணீர்  உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு:      காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) - ஒரு கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்  சீரகத்தூள், கரம் மசாலாத் தூள் - தலா கால் டீஸ்பூன்  நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். காலிஃப்ளவர் துண்டுகளை சுடுநீரில் போட்டு எடுத்துத் துருவவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்க வும். இதுவே மசாலா. சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக்கி சற்று கனமான சப்பாத்திகளாகக் கைகளால் தட்டவும். அதன் நடுவே சிறிதளவு காலிஃப்ளவர் மசாலாவை வைத்து மூடி உருட்டவும். பிறகு உருண்டைகளை சப்பாத்திக்கல்லில் வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் நெய் தடவி, சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். தால், தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.


5_1512389589.jpg

கம்பு தோசை

தேவை:     கம்பு - ஒரு கப்  உளுத்தம்பருப்பு - கால் கப்  வெந்தயம் - கால் டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    கம்புடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்துக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.


6_1512389610.jpg

ராகி ரொட்டி

தேவை:     ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:  ராகி மாவுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, மாவு உருண்டைகளை எடுத்து கைகளால் ரொட்டிகளாகத் தட்டவும்.  சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:    மாவை பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வாழை இலையில் தட்டியும் போடலாம். விரும்பினால் கேரட், குடமிளகாய், தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.


7_1512389626.jpg

மசாலாப் பொரி

தேவை:      பொரி - 100 கிராம்  வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 50 கிராம்  கறிவேப்பிலை - சிறிதளவு  பூண்டு - 6 பல் (தட்டவும்)  காய்ந்த மிளகாய் - 2  கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் பூண்டு, வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து வறுக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாகப் பொரியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து 10 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

குறிப்பு:     மோர் மிளகாய் அல்லது மிளகு - சீரகத்தூள் சேர்த்தும் செய்யலாம்.


8_1512389642.jpg

மைசூர் போண்டா

தேவை:     உளுத்தம்பருப்பு - ஒரு கப்  அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  பச்சை மிளகாய் -  3 (பொடியாக நறுக்கவும்)  மிளகு - ஒரு டீஸ்பூன்  பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எடுக்கவும். அதனுடன் அரிசி மாவு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகு, தேங்காய்ப் பல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, மாவைச் சிறிய போண்டாக்களாக எடுத்துப்போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.


9_1512389661.jpg

நெய்க் கடலை

தேவை:      கடலைப்பருப்பு - அரை கிலோ  கறிவேப்பிலை - சிறிதளவு  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  தட்டிய பூண்டு - 4 பல் (விரும்பினால்)  உப்பு -  தேவையான அளவு  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:  கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடித்து, ஈரம்போக உலரவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடலைப்பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்துப் பொரித்தெடுக்கவும். வறுத்த கடலைப்பருப்புடன் கறிவேப்பிலை, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான நெய்க் கடலை ரெடி.


10_1512389679.jpg

பட்டாணி சுண்டல்

தேவை:      காய்ந்த பட்டாணி - 100 கிராம்  பல்லு பல்லாக நறுக்கிய  மாங்காய், தேங்காய் - தலா 4 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  எண்ணெய் - 3 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி  வேகவைத்த பட்டாணி, மாங்காய்ப் பல், தேங்காய்ப் பல், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.


11_1512389695.jpg

மிளகு ரசம்

தேவை:      தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  புளி - கோலிகுண்டு அளவு  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  பூண்டு - 3 பல் (தட்டவும்)  காய்ந்த மிளகாய் - 2  மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:   மிளகுடன் சீரகத்தைச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், மிளகு - சீரகப்பொடி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


12_1512389710.jpg

க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்

தேவை:      மஷ்ரூம் - 5 (பொடியாக நறுக்கவும்)  வெங்காயம் -  ஒன்று (பொடியாக நறுக்கவும்)  வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்  சீஸ் க்யூப் – ஒன்று (துருவவும்)  காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப்  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன்  மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கார்ன்ஃப்ளாருடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம், மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். மஷ்ரூம் வெந்தவுடன் கார்ன்ஃப்ளார் கரைசல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து பளபளப்பானவுடன் பால் ஊற்றி இறக்கவும். மேலே மிளகுத்தூள், சீஸ் துருவல் தூவிப் பரிமாறவும்.


13_1512389724.jpg

புடலங்காய் வடை

தேவை:      புடலங்காய் - ஒன்று (200 கிராம்)  கடலைப்பருப்பு - முக்கால் கப்  துவரம்பருப்பு - கால் கப்  காய்ந்த மிளகாய் - 6  சோம்பு - ஒரு டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் (புடலங்காயில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் மாவு அரைக்க தண்ணீர் சேர்க்க வேண்டாம்). புடலங்காயைப் பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் போட்டுப் பிசிறி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். நன்றாகப் பிழிந்துவிட்டு வடை மாவில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழையையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். பின்னர் இந்த மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.


14_1512389740.jpg

கற்பூரவல்லி டீ

தேவை:      கற்பூரவல்லி இலை - 4 (பொடியாக நறுக்கவும்)  டீத்தூள் - ஒரு டீஸ்பூன்  தேன், பனங்கற்கண்டு - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை:  பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது டீத்தூள், கற்பூரவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி பாத்திரத்தை மூடவும். சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி, தேன், பனங்கற்கண்டு சேர்த்துச் சூடாகப் பருகவும். குளிர்காலத்தில் இந்த டீயை அருந்துவதன் மூலம் இருமல், சளி தொல்லையைத் தவிர்க்கலாம்.


15_1512389757.jpg

மிளகுக் குழம்பு

தேவை:      புளி - சிறிய எலுமிச்சை அளவு  மஞ்சள்தூள் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

அரைக்க:      எண்ணெய் - அரை டீஸ்பூன்  மிளகு, மல்லி (தனியா) - தலா 2 டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:     நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:  அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.  ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். அதே வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் புளிக் கரைசல், மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். இந்தக் குழம்பை ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.


16_1512389777.jpg

கொள்ளு ரசம்

தேவை:      கொள்ளு வேகவைத்த தண்ணீர் - ஒரு கப்  வேகவைத்த கொள்ளு - 2 டேபிள்ஸ்பூன் (மசிக்கவும்)  புளி - நெல்லிக்காய் அளவு  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  பூண்டு - 3 பல்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:      எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்  வெந்தயம் - சிறிதளவு  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:  மிளகுடன் சீரகம், பூண்டு சேர்த்துத் தட்டவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மசித்த கொள்ளு, தட்டிய மிளகுக் கலவை, கொள்ளுத் தண்ணீர், புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு நுரைகட்டி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


17_1512389794.jpg

மிளகு அடை

தேவை:     பச்சரிசி - ஒரு கப்  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப்  மிளகு - ஒரு டீஸ்பூன்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  பச்சரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து மிளகு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். மாவுடன் தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைச் சிறிய அடைகளாகத் தட்டி, எண்ணெய்விட்டுச் சுட்டு எடுக்கவும்.


18_1512389815.jpg

காலிஃப்ளவர் மிளகு பொரியல்

தேவை:      காலிஃப்ளவர் – ஒன்று (சிறிய பூக்களாக நறுக்கவும்)  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் காலிஃப்ளவர் சேர்த்துக் கிளறவும். மேலே மிளகுத்தூளைத் தூவி இறக்கவும்.


19_1512389832.jpg

இஞ்சிப் பச்சடி

தேவை:      தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்  பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கவும்)  புளி - எலுமிச்சை அளவு  வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்  வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்  கடுகு - அரை டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், பெருங்காயத் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.


20_1512389847.jpg

காலிஃப்ளவர் சூப்

தேவை:      நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் - 10  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)  துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒரு கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  சோம்பு, கல்பாசி, மிளகு - தலா கால் டீஸ்பூன்  எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோம்பு, கல்பாசி, மிளகு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். பிறகு, பருப்பு வேகவைத்த தண்ணீர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:    துவரம்பருப்பை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து, கொஞ்சம் அதிகமாகத் தண்ணீர்விட்டு நன்றாக வேகவைத்து, மசித்து அந்தத் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.


21_1512389862.jpg

கம்பு பக்கோடா

தேவை:      கம்பு மாவு - ஒரு கப்  அரிசி மாவு - கால் கப்  வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  சோம்பு - அரை டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - முக்கால் கப்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:   கம்பு மாவுடன் அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவைச் சிறிய பக்கோடாக்களாகக் கிள்ளிப்போட்டு, நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.


22_1512389880.jpg

பைனாப்பிள் ரசம்

தேவை:     அன்னாசிப்பழ ஸ்லைஸ் - 4  வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மிளகு, சீரகம்  - தலா அரை டீஸ்பூன்  பூண்டு - 4 பல்  கடுகு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  ரசப்பொடி - 2 டீஸ்பூன்  கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு  பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை  காய்ந்த மிளகாய் - 2  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகுடன் சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 2 அன்னாசி ஸ்லைஸ்களை விழுதாக அரைத்து எடுக்கவும். மீதமுள்ள 2 அன்னாசி ஸ்லைஸ்களைப் பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் மிளகு விழுதுடன் அன்னாசி விழுது, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு, பாதியளவு தக்காளி, தண்ணீர், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மீதமுள்ள தக்காளி, அன்னாசித் துண்டுகள் சேர்த்து வதக்கவும். இதைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


23_1512389908.jpg

புதினா புலாவ்

தேவை:      பாஸ்மதி அரிசி - ஒரு கப்  புதினா - ஒரு கப்  வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  கேரட், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு  பூண்டு - 7 பல்  பச்சை மிளகாய் - 4  உப்பு - தேவையான அளவு  தண்ணீர் - ஒன்றரை கப் (அ) ஒன்றே முக்கால் கப்

தாளிக்க:      பிரியாணி இலை - ஒன்று  கிராம்பு - 2  பட்டை - 3 சிறிய துண்டு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  புதினாவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், தக்காளி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.


24_1512389923.jpg

ராகி - ஆலு பராத்தா

தேவை:     ராகி மாவு (கேழ்வரகு மாவு), கோதுமை மாவு - தலா அரை கப்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  ஓமம், கரம் மசாலாத்தூள் - தலா 2 சிட்டிகை  உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)  கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  ராகி மாவுடன் கோதுமை மாவு, மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக்கி பராத்தாக்களாக தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, பராத்தாக்களைப் போட்டு, சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


25_1512389938.jpg

வெள்ளை மிளகாய்ப் பச்சடி

தேவை:      பாசிப்பருப்பு - ஒரு கப்  வெள்ளை மிளகாய் - 15 (நீளவாக்கில் நறுக்கவும்)  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:   குக்கரில் பாசிப்பருப்புடன் வெங்காயம், தக்காளி, வெள்ளை மிளகாய், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிட்டு இறக்கவும். ஆவி அடங்கியவுடன் திறந்து, உப்பு சேர்த்துக் கலந்து சூடாக்கிக் கொதிக்கவிட்டு இறக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம் தாளித்துப் பச்சடியில் சேர்க்கவும்.  கொத்தமல்லித்தழை தூவி பராத்தாவுடன் பரிமாறவும்.

குறிப்பு:     வெள்ளை மிளகாய் கிடைக்காவிட்டால் பச்சை மிளகாய் பயன் படுத்தலாம்.


26_1512389952.jpg

ஸ்பைஸி வேர்க்கடலை சாட்

தேவை:      பச்சை வேர்க்கடலை, மசாலா பொரி - தலா ஒரு கப்  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - அரை கப்  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கேரட் – ஒன்று (துருவவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன்  எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவிடவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலே மசாலா பொரி, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

குறிப்பு:      பரிமாறும்போது மசாலா பொரி, ஓமப்பொடி சேர்க்கவும். இல்லையெனில் நமர்த்துப் போய்விடும்.


27_1512389966.jpg

ரச வடை

தேவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப்  மிளகு - அரை டீஸ்பூன்  பச்சை மிளகாய் - ஒன்று  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு  புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)  மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  பருப்புத் தண்ணீர் - ஒரு கப் பெருங்காயத்தூள் - சிறிதளவு  கடுகு, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை  கொத்தமல்லித்தழை - சிறிதளவு தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிளகு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், மிளகு - சீரகத்தூள், மஞ்சள்தூள், பருப்புத் தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்த ரசத்தில் வடைகளைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். ஊறிய பின் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


28_1512389979.jpg

வேப்பம்பூ ரசம்

தேவை:      வேப்பம்பூ - ஒரு டேபிள்ஸ்பூன்  புளி - நெல்லிக்காய் அளவு  வெல்லம் - அரை டீஸ்பூன்  மஞ்சள்தூள் - 2 சிட்டிகை  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:      நெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்  துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வேப்பம்பூவை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து எடுக்கவும். புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். புளிக்கரைசலுடன் உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். மேலே வறுத்த வேப்பம்பூவைத் தூவி இறக்கவும்.


29_1512389995.jpg

தக்காளி சூப்

தேவை:      தக்காளி  பச்சை மிளகாய் - தலா 2 (நீளவாக்கில் நறுக்கவும்)  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  சோம்பு, மிளகு - தலா கால் டீஸ்பூன்  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோம்பு, மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் வேகவைத்த துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு மூடியைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


30_1512390007.jpg

தக்காளி ரசம்

தேவை:     தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)  புளி - நெல்லிக்காய் அளவு  ரசப்பொடி - 2 டீஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  வெந்தயம் – சிறிதளவு  எண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். அதனுடன் தக்காளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்த பிறகு புளிக்கரைசல், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


31_1512390023.jpg

ஸ்வீட் கார்ன் சூப்

தேவை:       வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - அரை கப்  நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், வெங்காயம் - தலா கால் கப்  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்  சர்க்கரை, மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஸ்வீட் கார்ன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கார்ன்ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். காய்கள் நன்றாக வெந்தவுடன், கார்ன் ஃப்ளாரை ஊற்றி கைவிடாமல் கிளறவும். கார்ன் ஃப்ளார் வெந்து சூப் பளபளப்பாக வரும்போது உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். மிளகுத்தூள், வெங்காயத்தாளைச் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.


32_1512390042.jpg

குளிர்காலம் வந்துவிட்டாலே, நாவின் சுவை நரம்புகள் `ஓவர்டைம்' பார்க்க ஆரம்பித்துவிடும். `சூடா, மொறுமொறுனு ஏதாவது கொண்டு வா!' என்று மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கும். அதேநேரம், அந்தச் சுவையான உணவுப் பொருள்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்துக்கும் நன்மையளிப்பதாக இருக்க வேண்டும்; எளிதில் தாக்கும் ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் கருத்தில்கொண்டு, நாவுக்கு ருசியாகவும், தொண்டைக்கு இதமாகவும், வயிற்றுக்குப் பதமாகவும் பல்வேறு ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.

சுவையில் அசத்தும் கேப்சிகம் புலாவ், கோபி பராத்தா, மைசூர் போண்டா, ரச வடை போன்றவற்றுடன், தொண்டைக்கு இதமாக மிளகு ரசம், பைனாப்பிள் ரசம், தக்காளி சூப் என பலவற்றை தயாரித்து அளிக்கிறார். அதோடு, ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கும் ராகி ரொட்டி, கம்பு பக்கோடா, கற்பூரவல்லி டீ, மிளகுக் குழம்பு போன்றவற்றையும் படங்களோடு தருகிறார். இவை எல்லாவற்றையும் செய்து பரிமாறுங்கள்; குளிர்காலத்தில் குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்துங்கள்!

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

 பகிர்வுக்கு நன்றி 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • இல‌ங்கை அணி 1996 இருந்து 2015ம் ஆண்டு வ‌ர‌ ந‌ல்ல‌ நிலையில் தான் இருந்த‌து / இனி இல‌ங்கை அணியால் ஒரு போதும் மீழ‌ முடியாது / இல‌ங்கை அணிக்கு 2014ம் ஆண்டு உல‌க‌ கோப்பை தான் க‌ட‌சி கோப்பை / சிங்க‌ள‌வ‌ன் த‌ல‌ கீழா நின்றாலும் இனி அவ‌ர்க‌ளால் ஆசியா கோப்பையை கூட‌ தூக்க‌ முடியாது / இல‌ங்கை பேய் என்றால் இந்தியா பிசாசு / பேயின் க‌தை முடிந்து விட்ட‌து , பிசாசு விஸ்ப‌ரூப‌ம் எடுக்குது 
  • நான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது😂. வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம். நீங்கள் 90களில் இருந்திருப்பீர்களோ? முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி 😂😂😂. வைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம். நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே. ஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது.  சுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.
  • அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா? மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை. நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம். இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை. உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும். நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு. ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன. இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள். ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக.  நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை. எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.  
  • சோம்பேறிக் குணம் தான்...காரணம் பையா...! மாடு மரத்தின் கீழ் படுத்து இரை மீட்டுவது போல.....தனிமையில்...இனிமை காண்பதில்....இப்போதெல்லாம் ஒரு சுகம்! பார்வையாளராக இருக்கத் தான் ...எண்னினேன்! இப்போது பங்காளியாகி இருக்கலாமோ என்று கவலைப்படுகின்றேன்!
  • தலைவர் பதவி வேண்டாம் | ராகுல் காந்தி உறுதி!   நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டுமெனச் சில அங்கத்தவர்கள் விரும்புவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் தனக்கு அப்பதவி வேண்டாமெனவும் அதற்கு இன்னொருவரை நியமிக்க்கும் பட்சத்தில் தான் அதில தலையிடப் போவதில்லை எனவும் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியாக 80 இருக்கைகளையும், தனியாக 52 இருக்கைகளையும் பெற்றது. அதே வேளை பா.ஜ.க. கூட்டணியாக 350 இருக்கைகளையும், தனியாக 303 இருக்கைகளையும் பெற்றது.  இதனால் மக்களவையில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி நிலையைக்கூடத் தக்கவைக்க முடியாத நிலையில் (இதற்கு குறைந்தது 54 இருக்கைகள் வேண்டும்) காங்கிரஸ் அவமானப்பட்டுப் போய் இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து பல மானில காங்கிரஸ் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தமது பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். ராகுல் காந்தியும் தான் தனது தலைவர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். ஆனால் கசியின் மூத்த தலைவர்கள் அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார்கள். ஆனாலும் ராகுல் காந்தி தனது முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அத்தோடு கட்சியின் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் தான் தலையிடப் போவதில்லை எனப்தில் மிகவும் உறுதியாக உள்ளதாகவும் தெரிகிறது. Video Credit: youtube/oneindia-tamil http://marumoli.com/தலைவர்-பதவி-வேண்டாம்-ராக/?fbclid=IwAR3BprrdJAUoKvY3KjuSD-_QJDZcz_x-7fUhzaRQ1Dxj-0pVh5kozC10nfo