• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • 1962 conflict with China significantly damaged India's standing at world stage: S Jaishankar Nov 14, 2019, 08.35 PM IST India's position at world stage seemed assured but the 1962 conflict with China significantly damaged the country's standing, External Affairs Minister S Jaishankar said on Thursday. "If the world is different (today), we need to think, talk and engage accordingly. Falling back is unlikely to help," he said, adding "purposeful pursuit of national interest is shifting global dynamics."  https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1962-conflict-with-china-significantly-damaged-indias-standing-at-world-stage-s-jaishankar/articleshow/72059047.cms
    • ரணில் பதவி விலகுவதாக கூறி விட்டார். கடிதத்தை நாளை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். அதை தொடர்ந்து நாளையே மகிந்த பிரதமராக பதவியேற்பார். இது ரணிலின் statement. தமிழ் மொழிபெயர்ப்பு.
    • புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்  ஆட்சிக் காலம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிமயமிக்க பொற்காலமாக மாற்றம் பெறவுள்ளதாக தெரிவித்த  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், இதற்கான ஆணையினை மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் வழங்கியிருக் கின்றனர்.  நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின்  மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்  போதே   மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு  மேலும் கருத்து  தெரிவிக்கையில்: கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின்  ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தியில்  கிழக்கு மாகாணத்தில்  எதுவி தமான அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. மக்களை அபிவிருத்தி தொடர்பாக ஏமாற்றிய வரலாறுகளே தான்உள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியானது வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றியாகும்.  இது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விடயம்.இதற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டனர். இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றமை மொட்டு மலர்வதற்கு சாதகமாக அமைந்தது.  பிரசாரக் கூட்டங்களில் மக்கள் அலை அலையாக வலம் வந்தமை மூலமாக கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.  இதனை அறியாத சில அரசியல்வாதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மை விமர்சித்தனர். ஆனால் இன்று மௌன நிலைக்குத் தள்ளப்பட்டு வாய்ப்பூட்டுபோடப்பட்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்திக்காக நாம்  கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து வெற்றிவாகை சூடியிருக்கின்றோம் என்றார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமழ-மககளகக-பறகலமகலம/73-241266
    • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சியொன்று கடந்த திங்கள்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.  இந்தச் சம்பவம் பற்றி கருத்து  தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன்:-  "தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி னேன். நான் வீடு திரும்பியதும் எனது மனைவி வீட்டு கதவை  பூட்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எனது வீட்டுக்கு முன் வாகனமொன்றிலும்  டிப்பர் ஒன்றிலும்  சுமார் 20 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பல், " டேய் ராஜன்" "வீட்டுக்கு வெளியே வாடா" என்று கத்தி சத்தமிட்டனர். நான் வீட்டைத் திறக்காமல் அருகிலுள்ள எனது சகோதரியின் வீட்டுக்கு, பின்பக்கத்தால் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை அவதானித்தேன். அதில் இருவர் எனக்குத் தெரிந்தவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் விசுவாசிகள்.அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.  நாங்கள்  கதவைத் திறக்காததால்  என்னைத் தாக்க வந்தவர்கள்,  ஆத்திரமடைந்து  கோடரியால் கதவைக் கொத்திவிட்டு     வீட்டு வாசலில் நின்று "சஜித்திடம் காசு வாங்கிவிட்டா  வேலை செய்தாய் ".  "இனி நாங்கள் வந்துவிட்டோம். உன்னை கவனிப்போம்"என்று கூச்சலிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/அம்பாறை/ரஜன-மத-தககதல-மயறச/74-241265
    • மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமராகிறார், ரணில் விக்ரமசிங்க பதவி விலகல் 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார். இந்த நிலையில், தனது தீர்மானம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றுவதன் ஊடாக தெளிவூட்டவுள்ளார். இதனிடையே, இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றார். இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அதை அவர் கையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ஷ எப்போது பதவியேற்பு? ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெரும்பாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நாளை பதவி பிரமாணம் செய்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைகால அரசாங்கத்தில் 16 அமைச்சர்கள் அங்கம் வகிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுகின்றார். கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா? இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - யார் இவர்? இந்த இடைகால அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி வரை நடைமுறையில் இருப்பதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தலில் பெற்றிருந்தார். இதன்படி, இலங்கையில் ஆளும் அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி வசமும், ஜனாதிபதி பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமும் காணப்படுகின்றமையினால் நாட்டை சரியான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த விடயங்களை கருத்திற் கொண்டே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இரண்டு கட்சிகள் நாட்டை ஆட்சி செய்கின்றமையினால், எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் என்ற விடயத்தை கருத்திற் கொண்டு சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். சிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன் இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப் பணம் இழந்தனர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக விதம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய தினம் அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்த முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும். பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை இடைகால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதிபதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதி வரை இடைகால அரசாங்கம் ஒன்றை நடத்தி செல்லும் வகையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்கி, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். நாட்டு மக்களுக்கு ரணில் உரை இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக ஜனநாயகம், மனித சுதந்திரம், கருத்துகளை வெளியிடக் கூடிய தகவல் அறியும் உரிமை மற்றும் அனைவரையும் சமமாக மதிக்கும், நல்லிணக்கத்தை உருவாக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக அனைத்து திணைக்களங்களையும் அரசியலில் இருந்து விடுவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும், நியாயமாகவும் நடைபெற்றமை அதன் ஒரு பிரதிபலனாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாங்கள் ஆற்றிய அந்தப் பணிகளுக்கான சரியான தீர்மானத்தை எதிர்காலமே பெற்றுக்கொடுக்கும் என கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடி நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் தொடர்பில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கின்ற போதிலும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை கருத்திற் கொண்டு, அவர்களின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தாம் பதவி விலகத் தீர்மானித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-50488510