Jump to content

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்


Recommended Posts

இன்று நள்ளிரவு வெளியாகும் உயர்தர பெறுபேறுகள்
 

image_ba1af29aa1.jpgஇந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்றஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு(27) இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கும்,  தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் தபால் மூலம் பரீட்சை முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இன்று-நள்ளிரவு-வெளியாகும்-உயர்தர-பெறுபேறுகள்/150-209495

Link to comment
Share on other sites

சற்று முன்னர் வெளியாகின க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

 

சற்று முன்னர் வெளியாகின க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

எதிர்பார்க்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலேயே இவை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படும் என்று என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே சற்று முன்னர் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளதோடு கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் சென்று பரீட்சார்த்திகளின் சுட்டிலக்கத்தை வழங்குவதன்மூலம் பெறுபேறுகளைக் கண்டறியலாம். குறித்த பெறுபேறுகளை அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

http://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/al-result-released-now

Link to comment
Share on other sites

பெறுபேறுகள் எப்படியோ?? ஆனால் வட மாகாணகல்வி தரம் வீழ்ந்து போச்சு எண்டு குப்பாடு போட ஒரு கூட்டம் ஆய்த்தமாக இருக்கும், அதுக்கு ஒரு நொண்டி சாக்கும் ஆயத்தமாக இருக்கும் அதாவது மோபைல் போன் வந்துட்டுது, மோட்டார் பைக் வந்துட்டுது என்று!!! 

Link to comment
Share on other sites

4 hours ago, Dash said:

பெறுபேறுகள் எப்படியோ?? ஆனால் வட மாகாணகல்வி தரம் வீழ்ந்து போச்சு எண்டு குப்பாடு போட ஒரு கூட்டம் ஆய்த்தமாக இருக்கும், அதுக்கு ஒரு நொண்டி சாக்கும் ஆயத்தமாக இருக்கும் அதாவது மோபைல் போன் வந்துட்டுது, மோட்டார் பைக் வந்துட்டுது என்று!!! 

அகில இலங்கை அளவில் ஹார்ட்லி கல்லூரி மாணவர் சிறிதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

ஏனைய பிரிவுகளிலும் சில மாணவர்கள்  அகில இலங்கை அளவில் 10வது இடத்தையும், மாவட்ட அளவில் 5க்கு உட்பட்ட இடங்களையும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

சிங்கள-பௌத்த அரச-இராணுவப் பயங்கரவாதிகளால் 1980 களிலேயே பலதடவைகள் தீவைக்கப்பட்டு, ஆக்கிரமித்து அழிக்கப்பட்ட பாடசாலை மீண்டும் தனது உயர் அடைவு மட்டத்தை அடைந்தது மகிழ்ச்சியானது.

இன்றும் ஹார்ட்லி கல்லூரி இரண்டு பக்கமாக உள்ள வேலிகளுடன் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.  கல்லூரி நேரங்களில் அந்தப் பயங்கரவாதிகள் பாண்ட் அடிப்பதும் கூச்சலிடுவதும் கூத்தாடுவதும் இப்பவும் நடைபெறும் கொடுமைகள் என அங்கு படிக்கும் மாணவர்கள் கூறுகின்றனர்.

சிங்கள-பௌத்த அரச-இராணுவப் பயங்கரவாதிகளானது அழுத்தங்களின், தடைகளின்  மத்தியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

625.0.560.350.160.300.053.800.700.160.90

625.0.560.350.160.300.053.800.700.160.90

625.0.560.350.160.300.053.800.700.160.90

Link to comment
Share on other sites

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீடசை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன் துவாரகன் என்பவர் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

 

இதேவேளை, வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டுலந்தி ரசந்திக பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டிலினி சந்துனிக்கா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சதகரமலன்கர பிரிவேனாவைச் சேர்ந்த பத்பெரிய முதவன்ச தேரர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்

http://www.virakesari.lk/article/28678

Link to comment
Share on other sites

பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் துவாரகன் இலங்கையில் முதலிடம்!

 

 

பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் துவாரகன்  இலங்கையில் முதலிடம்!

2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகின.இதில் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் முதலிடம பெற்றுள்ளாா்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன.

கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை(29) பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/advanced-level-exam-result-28

உ/த பெறுபேற்றில் யாழ். மாணவன் முதலிடம்
 

image_daa423c212.jpgகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், இன்று அதிகாலை வெளியாகின.
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

பெறுபேறுகளின் பிரகாரம் பௌதீகவியல் விஞ்ஞானத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரன், அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பொது விடயத்தான துறையில் முதலிடத்தை கொழும்பு தேவி பாலிகா கல்லூரி மாணவி ஹிருணி சாக்யா அபேதுங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

உயிரித்தொழிற்நுட்ப பிரிவில், இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த லக்ஷித சத்துரங்க மெதலக முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பொறியற் தொழிற்நுட்ப பிரிவில், அகில இலங்கை ரீதியில் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தைச் சேர்ந்த ரத்சிறினி ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டுள்ளார்.

கலை துறையில், அகில இலங்கை ரீதியில் இரத்தினபுரிய சத்தர்மாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த வண. பத்பேரியே முனித்தவங்ச தேரர் பெற்றுக்கொண்டுள்ளார்.

வணிகத்துறையில், மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரின் மாணவியான துலானி ரன்திகா பெற்றுக்கொண்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உ-த-பெறுபேற்றில்-யாழ்-மாணவன்-முதலிடம்/175-209533

Link to comment
Share on other sites

1,63,104 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி

 

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் 2,53,483 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/58289.html

வட்டு. மாணவர்கள் நால்வர் சாதனை1!

 

ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்ந்துள்ளனர்.

பெளதீக விஞ்ஞானப் பிரிவில் பிரபாகரன் பிரதீஸ்,
விக்டர் ஜெயக்குமார் வசந்த் கோட்ப்ரே ஆகியோரும்,
வணிகப் பிரிவில் அஸ்வினி ஸ்கந்தராஜாவும், அனோஜா சத்தியசீலன்  ஆகியோரும்  3 எ சித்தியைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58260.html

Link to comment
Share on other sites

உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

 

உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இராகலை ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவனே மூன்று ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இதேவேளை இந்த மாணவன் கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

இந்த மாணவனை ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/nuwara-eliya-AL-result

Link to comment
Share on other sites

  • கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்
கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில்  யாழ். மாணவன் மூன்றாம் இடம்
 
 

கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்

http://newuthayan.com

Link to comment
Share on other sites

பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சிறிதரன் துவாரகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சிறிதரன் துவாகரன் மற்றும் சித்தியடைந்த அனைவருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த ஹாட்லி மைந்தன் துவாரகனுக்கும் சித்தியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

“ சிறந்த பொறியியலாளராக வருவதே எனது இலக்கு”

சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதே எனது எதிர்கால இலக்கு என கணிதத்துறையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவன் றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

spc.jpg

ஆரம்பப் பிரிவில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்வி கற்று சிறந்த சித்தி பெற்று பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றேன். 

எனக்கு சிறுவயது முதலே கணிதப் பிரிவில் அதிக ஈடுபாடு இருந்தமையால் உயர்தரத்திலும் கணிதப் பிரிவை தெரிவு செய்து கொண்டேன். 

 

அதிகமாக எனது கல்வியை அதிகாலை பொழுதில் தான் தொடர்வேன். எதிர்கால மாணவர்களும் கடினமான பயிற்சியை முன்னெடுத்தால் என்னை விட சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து இந்த சமூகத்திற்கு கடைமையாற்றுவதே  எனது இலக்கு என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/28697

Link to comment
Share on other sites

முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!

 

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!

நேற்று வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர உயர்தரப்பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் முதலாமிடத்திற்கு தெரிவாகியுள்ளார். மேலும் ஏனைய துறைகளில்,முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு.

பௌதீக விஞ்ஞானம்

1. ஸ்ரீதரன் துவாரகன் - ஹார்ட்லி கல்லூரி, பருத்தித்துறை.

2. பமுதிதா ஹிமான் சோமாரட்னே - பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா.

3. ஜெயராஜன் பால் ஜேன்சன் - சென் பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்.   

உயிரியல் விஞ்ஞானம்

1. திலினி சந்துனிகா பலிஹக்கார - சுஜாதா வித்தியாலய, மாத்தறை

2. ஹசிதா கீத் குணசிங்க - ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ.

3. இஷான் ஷலுகா ராமநாயக்க - ஆனந்த கல்லூரி, கொழும்பு.   

வர்த்தகம்

1. துளனி ரசாந்திகா - சுஜாதா வித்தியாலய, மாத்தறை.

2. கௌசல்யா சுபாஷிணி தாபரே - மியூசஸ் கல்லூரி, கொழும்பு.

3. பாத்திமா அக்கேலா ஈஸ்வர் - செயின்ட் பால்'ஸ் கர்ல்ஸ் ஸ்கூல், கொழும்பு.  

கலை

1. வண. பாபீரியிய முனிந்தவான்ச தெரோ - சதர்மாலங்கர பிரிவேனா, இரத்தினபுரி.

2. சஹிலி அகானா விக்கிரமநாயக்க - சி.எம்.எஸ் பெண்கள் கல்லூரி, கொழும்பு

3. தில்கா சப்பாபமா - பெர்குசன் உயர்நிலை பள்ளி, இரத்தினபுரி

பொறியியல் தொழில்நுட்பம்

1. பாரிமதி பிரசாதி ரான்சிரினி - மஹிந்த ராஜபக்ச கல்லூரி, மாத்தறை.

2. பிரகதி இஷான் மதுஷங்கா - நாரந்தெனிய எம்.எம்.வி., கும்பூபியிட்டி.

3. பாசிந்து லக்ஷன் - மயூர்பாடா மத்திய கல்லூரி, நாரமலை.

https://news.ibctamil.com/ta/internal-affairs/details-of-students-who-got-first-three-places

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கு ஓர் அனுபவம் அடுத்த தடவை வெற்றி என்ற இலக்கை மட்டும் நினைத்தே இருக்க போகிறீர்கள் அந்த இலக்கு உங்களை வெற்றி பெறச்செய்யும் 

Link to comment
Share on other sites

 
யாழ்.இந்து மாணவர்கள் 20 பேர் சாதனை!!
 
 

யாழ்.இந்து மாணவர்கள் 20 பேர் சாதனை!!

 

2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவர்கள் 3 எ சித்தி பெற்று பாடசாலைக்குப் பெரு மை சேர்த்துள்ளனர்.

கணிதப் பிரிவில் 10 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 4 மாணவர்களும், வணிகப் பிரிவில் 6 மாணவர்களும் 3எ சித்தி பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58498.html

 
நெல்லியடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!
 
 

நெல்லியடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!

 
 

நெல்லியடி மத்திய கல்லூரியில் 2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் 8 மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் 2 மாணவர்களும், வணிகப்பிரிவில் 5 மாணவர்களும், கலைப்பிரிவில் ஒர் மாணவியும் 3எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58501.html

Link to comment
Share on other sites

வட. மத்திய மகளிர் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!

 

 

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில்  2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் 7 மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் ஒருவரும்,கணிதப் பிரிவில் ஒருவரும், கலைப்பிரிவில் ஐவரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58515.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A/L Best Results -2017

Biology

1) Dilini Sandunika Palihakkara (Sinhala medium) - Sujatha Balika Vidyalaya, Matara
2) G.A.H.Geeth Gunasinghe (Sinhala medium) - Joseph Vaz College, Wennappuwa
3) K.I.Shaluka Ramanayake (Sinhala medium) - Ananda Collage, Colombo

Physical Science

1) Sridharan Duwarakan (Tamil Medium) - Hartley College, Point Pedro
2) P.M.P.Himan Somaratne (Sinhala medium) - Bandaranaike Vidyalaya, Gampha
3) R.D.Jeyarajan Paul Janshan (Tamil Medium) - St. Patrick's College, Jaffna

Commerce

1) S.A.Dulani Rasanthika (Sinhala Medium) - Sujatha Balika Vidyalaya, Matara
2) P.K. Subashini Dabare (English medium) - Musaeus College, Colombo
3) F.Akila Iswar (Sinhala Medium) - St Paul’s Balika Vidyalaya, Colombo

Art

1) Ven. Pathberiye Munindawansha Thera (Sinhala medium) - Saddarmalankara Pirivena, Ratnapura
2) S.Achana Wickremanayake (English medium) - CMS, Colombo
3) G.G.Dilki Sadupama (Sinhala medium) - Ferguson High School, Ratnapura

Engineering Technology

1) P.P. Ransirini Hettiarachchi (Sinhala Medium) - Mahinda Rajapaksa Vidyalaya, Matara
2) M.G.P.Ishan Madusanka (Sinhala Medium) - Narandeniya Central College, Kamburupitiya
3) W.A.M.P.Lakshan Adhipattu (Sinhala Medium) - Mayurapada Central College, Narammala

Bio Systems Technology

1) M.K. Lakshitha Chaturanga Medalagama (Sinhala Medium) - Sivali Central College, Ratnapura
2) W. P Ramesha Shreemali (Sinhala Medium) - Debarawewa Central College, Tissamaharama
3) Kamaleshwarie Sendilnaadan (Tamil Medium) - Vembadi Girls High School, Jaffna

Other

1) Hiruni Shakya Abeytunga (Sinhala Medium) - Devi Balika Vidyalaya, Colombo
2) Shaveen Bhashitha Thilakaratne (Sinhala Medium) - Royal College, Colombo
3) Diyol Brandon Antony (Sinhala Medium) - De Mazenod College, Kandana

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் தேற்றிய தோற்ற அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

உயர்தரப் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப் பெற்ற மாணவர்கள்

 

 

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.மாவட்டத்தில் மாவட்ட மட்டத்திலான முதலிடங்களை யாழின் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.

AL.jpg

இதன்படி கணித பிரிவில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் பெற்றுள்ளார். இவர் தேசிய மட்டத்திலும் முதலிடத்தை பெற்றுள்ளார். கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாலசுப்பிரமணியம் தாட்சாயினி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 51 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி சாரங்கா விஜயகுமார் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 26 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

பொறியல் தொழிநுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஆர்.நிலக்ஷன் 2 ஏ , பி பெறுபேற்றை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 08ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

உயிரியல் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மு.வக்சலன் 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 09ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

 

உயிரியல் முறமை தொழிநுட்ப பிரிவில் யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி மாணவி 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 3ஆம  இடத்தையும் பெற்றுள்ளார்.

 

கணிதத்துறையில் யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரி மாணவனான றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/28704

Link to comment
Share on other sites

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம்

 

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம்

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவியே 2ஏ, 1பீ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில  இலங்கை ரீதியில் 52ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

சாத்துமணி, பத்மா  தம்பதியரின் புதல்வியான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

http://www.samakalam.com/செய்திகள்/அட்டன்-ஹைலண்ஸ்-கல்லூரிய-3/

 

Link to comment
Share on other sites

மன்னாரில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

 

தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

mannar-al.jpg

மன்னார் மாவட்டத்தில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த  அருள்பிரகாசம் டெல்சியஸ் என்ற மாணவனே கலைப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். 

 

இவர் கங்காணித்தீவு நானாட்டான் பகுதியைச் சேர்ந்த திரு.திருமதி அருள்பிரகாசம் மேரி யோசேப்பின் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.

http://www.virakesari.lk/article/28710

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்தகளும் பாராட்டுகளும். கல்வியே எமது இருப்பு என்பதை அனைத்து மாணவர்களும் பற்றிப்பிடிக்கும் வகையிலே தமிழ்தலைமைகள் சிந்திக்கவேண்டும். அறிவார்ந்த குமுகாயத்தால் மட்டுமே இவ்வுலகில் நின்று நிலைத்து நிமிர முடியும். 

மது, வெண்சுருட்டு விற்பனைகளுக்கான வரிகளைக் கூட்டுவதோடு போதைப்பொருள் விற்பனைக்கு ஆகக்கூடிய ஒறுப்பினை வழங்கும் சட்டமாற்றத்தையும் கொண்டுவருவதே எமது இளையோரை முன்னேறவைக்கும். அதேவேளை கிராமிய மட்ட அமைப்பு களும் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மேலதிக அறிவூட்டற் செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றையும் முன்னெடுப்பதனூடாகப்  ஒரு முழுமையான கல்விக் குமுகாயத்தை உருவாக்குவதனூடாக ஈழத்தீவிலும் உலகிலும் முன்னேற முடியுமெனலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் மென்மேலும் ஒளிமயமானதாக வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைகள் பல சேர்த்து புகழுடன் வாழ பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.