கிருபன்

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

Recommended Posts

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

ஜெயமோகன்

vairamuthu1xx

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்.. பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக  படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள்,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியேவாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது.

இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும்.  இன்று இந்திய இலக்கியச் சூழலில் தமிழுக்கு என எந்த மதிப்பும் கிடையாது. காரணம், நாம் தேசிய அளவில் முன்னிறுத்தும் படைப்பாளிகள் பெரும்பாலும் எவரும் இலக்கியப்பெறுமதி கொண்டவர்கள் அல்ல. அகிலன்,நா.பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் பாமா, பெருமாள் முருகன் வரை. ஆனால் அவ்வரிசையிலேயே கூட இறுதியாகச் சேர்க்கப்பட வேண்டியவரான வைரமுத்து ஞானபீடம் பெறுவார் என்றால் தமிழிலக்கியச் சூழல் தன்னைத்த்தானே அவமதித்துக்கொள்வதாகவே பொருள்படும்.

இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். இங்கே சமநிலையும் நேர்மையும் கொண்ட இலக்கிய விமர்சனம் இல்லை. வைரமுத்து ஒரு நல்ல படைப்பாளி அல்ல என அறியாத இலக்கியவாசகன் இல்லை. ஆனால் அவரைப்பற்றி அப்படி தெளிவாக மதிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை தமிழிலக்கிய சூழலில் இருந்து எழுதப்பட்டிருக்காது. அந்த மதிப்பீடுகள் செவிச்சொற்களாகவே சுழன்றுவரும். ஆனால் அசோகமித்திரன் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியுமெல்லாம் பக்கம் பக்கமாக வசைகளும் நிராகரிப்புகளும் எழுதப்பட்டிருக்கும். அரிதாகவே நல்லசொற்கள் தென்படும்.

ஏனென்றால் நல்ல இலக்கியத்தை, அழகியல்மரபை நிராகரிக்கும் தெருமுனை அரசியல் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் எதிராக சலிக்காமல் எழுதிக்குவித்திருப்பார்கள். இலக்கியத்திற்குள் இருக்கும் உள்குத்துகள் மற்றும் காழ்ப்புகளால் இலக்கியவாதிகளாலும் அவை  எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழின் மையஓட்டமான அதிகார முகங்கள் பற்றி ஆழமான அமைதியே இருக்கும்.ஏன் வைரமுத்து குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் பொதுவாக தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகளின் ஆவேசமெல்லாம் அதிகாரமேதுமில்லாத அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களை நோக்கியே திரும்பியிருக்கும். வைரமுத்து போன்ற அதிகாரத்திற்கு அணுக்கமானவர்களைப்பற்றி எவரும் வாய் திறப்பதில்லை.அந்த அதிகாரம் கும்பலதிகாரமாக இருந்தாலும் அப்படியே.

உதாரணம், இன்குலாப் இவ்வருடச் சாகித்ய அக்காதமி விருதுபெற்றதற்கான எதிர்வினைகள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியமரபு இன்குலாபை ஓர் இலக்கியவாதியாக கருதியதில்லை. எந்த எழுத்தாளரும் அவரைப்பற்றி பேசியதில்லை. அவரே அதைப்பற்றி கசந்து கூறியிருக்கிறார். இப்போதும் அவருடைய கவிதையை தனிப்பேச்சில் ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதியோ வாசகனோ இல்லை ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கொடுக்கப்பட்டபோது நானறிந்து லட்சுமி மணிவண்ணனும் நானும் மட்டுமே எதிர்வினையாற்றினோம். மற்றவர்களின் நிலைபாடு  ‘எதற்கு வம்பு’ என்பதே.வசைக்கும்பலைக் கண்ட அச்சமே காரணம்.  இந்த தயக்கத்திலிருந்தே வைரமுத்து போன்றவர்கள் மேலெழுந்து செல்கிறார்கள். அவருக்கு இங்கிருப்பவர்களின் இடமென்ன இயல்பென்ன என நன்றாகவே தெரியும்.

ஆகவே, வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்.இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவுசெய்யப்போவதில்லை. என் குரல் அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடத்திற்கு எதிராக எழுந்த சுந்தர ராமசாமியின் குரலுக்கு ஒரு சமகாலநீட்சி என சிலரேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.

ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும்.  தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி.

இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. ஞானபீடம் தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை இந்தியாவின் பேருருவப் படைப்பாளிகளின் வரிசையில் நிற்கவைத்து தமிழில் இவ்வளவே இலக்கியம் உள்ளது, தமிழுக்கு இதுவே தரம் என்று சொல்கிறது என்பதே இவ்விருதின் உண்மையான அர்த்தம் . தமிழை மட்டுமல்ல ஞானபீடம் தன்னைத்தானேகூட இதன் வழியாக மட்டம்தட்டிக்கொள்கிறது.

சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார்

கி.ராவுக்கு ஞானபீடம் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் என நான் எழுதியபோது, அதற்கு கல்வித்துறையின் சிறிய ஆதரவு இருந்தால்கூடப்போதும் என்றபோது, தமிழ்ச்சூழலில் இருந்து சிறிய அளவில்கூட ஆதரவு எழவில்லை. இலக்கியவாதிகள்கூட குரலெழுப்பவில்லை. அதற்குப்பின்னாலிருப்பது இத்தகைய அரசியல் கணக்குகள், சாதிக்கணக்குகள்.

என்ன துயரம் என்றால் உள்ளே பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்தமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும்

அனைத்துக்கும் மேலாக ஒன்றைச் சொல்லிக்கொள்வேன், இலக்கிய மதிப்பு என்பது அமைப்புகளின் அடையாளங்களால் அமைவதல்ல. ஞானபீடம் என்ன நோபல் கூட எவரையும் இலக்கியவாதியாக நிலைநாட்டுவதில்லை. அகிலனின் மதிப்பு இந்திய இலக்கியத்தில் என்ன? ஏன் தமிழில் அவருடைய இடம் என்ன? வைரமுத்து தமிழின் முகம் அல்ல என மிக எளிதில் வலுவான சில கட்டுரைகள் வழியாக தேசிய அளவிலேயே இலக்கியவாசகர்களிடம் நிறுவிவிடமுடியும். இதனால் அவருக்குக் கிடைப்பது இலக்கியத்துடன் சம்பந்தமற்ற ஒரு தற்காலிகப்புகழ் மட்டுமே. உண்மையான சோகம் என்பது இதன்மூலம் இந்தியாவின் பொதுவாசகனிடம் உள்ள தமிழைநோக்கிய இழிவான நோக்கு உறுதிப்படுத்தப்படும் என்பதும் , இவ்விருது வாழும் முன்னோடிகளை அவமதிப்பதாக ஆகும் என்பதும் மட்டுமே

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.   இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம்.

http://www.jnanpith.net

 

http://www.jeyamohan.in/105208#.WkZvybunxR4

 

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்து ஞானபீடம் பெறுவதால் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சனை? மக்களிடம் நன்கு பரீட்சயம் பெற்ற மக்கள் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி வைரமுத்து. 

Share this post


Link to post
Share on other sites

எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர் ஜெயமோகனின் அறிக்கை ,

இங்கே யாழில் சில சமயங்களில் ஒருவர்மேல் ஒருவர் தொடுக்கும் தனிப்பட்ட தாக்குதல் ரகம்! ஒரு படைப்பாளிக்கு விருது கொடுக்காதே என்று தடுக்கும் இன்னொரு படைப்பாளியின் குரலில் கண்டிப்பாக இலக்கியம் இருக்காது ஏதோ ஒருவகை எரிச்சல்போலவே பார்க்கப்படும்!

வைரமுத்து என்ற திமுக அடிவருடி,கருணாநிதியின் பாதம் தொழுதுவாழும் மனிதன்மேல் எனக்கு துளியளவுகூட மரியாதை கிடையாது,

ஆனால் வைரமுத்து என்ற தமிழை சுவாசிக்கும் பெரும் கவிஞன்மீது எப்போதும் கொள்ளை ஆசை உண்டு!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை, ஒரு பெரும் கவிஞன் என்று நாங்கள் சொல்வது, அவர் இயற்ற, கரிகரன் கதைக்க, ரகுமான் தட்ட, நாங்க மேற்கத்திய இசைபோல்லிருக்கென்று ரசித்ததால்.

ஒரு நன்மை, மேற்கத்திய ஆங்கில மோகத்திலிருந்து இந்த அடிமைக்கூட்டத்தை (வேறு வழியில்லாமல் அடியானவர்களும் இதிலடங்கும்) கொஞ்சம் காப்பாத்தியிருக்கிறார்கள் இவர்கள், இல்லையென்றால் நாங்களிப்ப ஆங்கில பாடல்களைத்தான் எல்லா சமூகவலைத்தளங்களிலும் பகிர்ந்திருப்போம்.

இவர்கள், எமது அடிமனத மேற்கத்தையர்க்குகெதிரான, போட்டி, வெறுப்பு, இவற்றுக்கு இவர்கள் தீனிபோட்டார்கள் அல்லது நாங்கள் அவர்களை பாவித்தோம், அவர்கள் கனகச்சிதமாக உழைத்தார்கள்.

Edited by Knowthyself

Share this post


Link to post
Share on other sites
On 29/12/2017 at 5:26 PM, கலைஞன் said:

வைரமுத்து ஞானபீடம் பெறுவதால் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சனை? மக்களிடம் நன்கு பரீட்சயம் பெற்ற மக்கள் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி வைரமுத்து. 

ஜெயமோகன் சொல்வது..

 

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.

Share this post


Link to post
Share on other sites

வைரமுத்து – எத்தனை பாவனைகள்!

ஜெயமோகன்

vairamuthu1xx

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

வைரமுத்துவின் ஞானபீடமுயற்சிகளைப் பற்றி மலையாளம் தமிழ் இரு மூலங்களிலிருந்து அறிந்தேன். அதை பொதுவில் வைக்கவேண்டும் என்றும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். வைரமுத்து அதற்காக முயல்கிறார் என்பதும் அதன்பொருட்டே பாரதிய ஜனதாவின் பிரமுகர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரியாத எவரும் தமிழில் இல்லை. அவர் எப்போதுமே எல்லா வழியிலுமே சுயமுன்னேற்றத்திற்காக முயல்பவர், ஆகவே அதில் அதிர்ச்சி கொள்ளவும் ஏதுமில்லை

ஞானபீடம் ‘நல்ல’ எழுத்துக்காக அளிக்கப்படுவது அல்ல. ஒரு காலகட்டத்தின் குரலாக, ஒர் இலக்கியச்சூழலின் அடையாளமாக, ஒரு உச்சசாதனையாளாக கருதப்படும் ஒருவருக்கு அளிக்கப்படுவது. வைரமுத்து அவ்வாறு இந்தியச்சூழலில் அடையாளப்படுத்தப்படுவார் என்றால் அது தமிழுக்கு மிகப்பெரிய சிறுமை. எளிதில் களையப்படக்கூடியது அல்ல அது. அதையே நான் குறிப்பிட்டேன்.

ஞானபீட விருதுகள் ஆகஸ்ட் வாக்கில் உறுதிசெய்யப்படுகின்றன. செப்டெம்பர் அல்லது அக்டோபரில் அறிவிக்கப்படும். இப்போது அதற்கான திட்டமிட்ட பூர்வாங்க வேலைகள் நிகழ்கின்றன. இத்தருணத்தில் கறாரான விமர்சனங்கள் வழியாக அவருடைய இடத்தை தமிழில் வகுக்கவேண்டிய பொறுப்பு, வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதை தெளிவாக்கவேண்டிய பொறுப்பு தமிழ் இலக்கியச் சூழலுக்கு உண்டு. முன்னரே அவருடைய முயற்சிகளைப்பற்றிஎழுதியது இதனாலேயே

ஏனென்றால் வைரமுத்து தமிழின் ஓர் அதிகார மையம் என்பதனாலேயே இங்கே அவரைப்பற்றி எதிர்மறையாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. அது பொதுவான தமிழ்க்குணம், அதிகாரமற்றவர்களைச் சீண்டுவதும் அதிகாரத்தை போற்றுவதும். இது அவருக்கு துணையாக ஆகிறது. விருதுக்கு அவர் சென்றுகொண்டிருக்கையிலேயே ஓரிரு விமர்சனக்கருத்துக்களேனும் வந்தால் மட்டுமே பயன். அன்றி ஆகஸ்டில் முடிவெடுக்கப்பட்டபின் பேசிப் பயனில்லை

இணையம் அளிக்கும் வாய்ப்புகளில் ஒன்று எந்த மனமயக்கமும் தேவையில்லை, நாம் பெரும்பாலும் மொண்ணைகளிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று ஐயமில்லாமல் நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறது அது என்பது. இவ்விஷயத்திலும் அதையே எதிர்பார்த்தேன். நடக்கிறது

வழக்கமான மொண்ணைத்தனங்கள், நூறாயிரம் முறை மறுமொழி சொல்லப்பட்டுவிட்டவை. ஒன்று, ’எல்லாமே இலக்கியம்தான், இதுதான் இலக்கியமென எவர் முடிவுசெய்வது?’ – என்னும் குரல். இந்த விஷயத்தை சோறு துணி எதிலாவது இந்த மொண்ணைகள் கருத்தில்கொள்கின்றனவா? இலக்கியத்தில், சிந்தனையில், கலையில் எப்போதுமே தரம் என்று ஒன்று உண்டு. அது ஆதாரங்களால் எல்லா மொண்ணைகளுக்கும் தெரிய நிரூபிக்க முடியாதது. ஆனால்  மானுட முயற்சிகள் எதிலும் ஒன்று இன்னொன்றைவிட மேல் என்பதனால்தான் ரசனை என ஒன்று இருக்கிறது. அந்த தரம்நோக்கிச் செய்யப்படும் முயற்சியே கலையின் அடிப்படை விசை. அதில் கருத்தியல்வேறுபாடு இருக்கும், ஆனால் கலைச்செயல்பாட்டின் நெறிகள் பொதுவானவையே

நல்ல இலக்கியம் என ஒன்று இல்லை என்பது இலக்கியம் என்பதே இல்லை என்பதற்கு நிகரானது. இதே மொண்ணைகளிடம் வைரமுத்துவை விட ராஜேஷ்குமார் மேல் என்று சொல்லுங்கள், எகிறுவார்கள். மக்கள் வாசித்தால்தான் இலக்கியம் என்றால் பி.டி.சாமிதான் அய்யா இலக்கியமேதை.

இன்னொரு மொண்ணைக்குரல்.எவர் முடிவுசெய்வது என்பது. இலக்கியத்தின் தரத்தை அவ்விலக்கியச்சூழலில் இருப்பவர்களே முடிவுசெய்யவேண்டும். நல்ல டாக்டரை டாக்டர்களே முடிவுசெய்கிறார்கள். நல்ல பொறியாளரை பொறியாளர்களே முடிவுசெய்கிறார்கள். ஐராவதம் மகாதேவன் சிறந்த தொல்லியல் ஆய்வாளர் என்பதை மக்கள் வாக்களித்தா தேர்ந்தெடுத்தார்கள்? Peer review என அதற்குப்பெயர். வைரமுத்து இலக்கியச்சூழலில் இலக்கியவாதியாக இன்றுவரை ஏற்கப்படாதவர்.

மொண்ணைத்தனங்கள் மேலும். ’வைரமுத்து லாபி செய்கிறார் என்றால் எங்கேதான் லாபி இல்லை’ என இன்னொருகுரல். வைரமுத்து லாபிசெய்வதை குறைசொல்லவில்லை, செய்யட்டும். அதன்மூலம் தமிழுக்கு அவர் சிறுமையை ஈட்டித்தருவதை மட்டுமே கண்டிக்கிறோம். இது இலக்கியமதிப்பீடு சார்ந்த ஒரு கண்டனம். நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கே இருந்துவரும் நவீன இலக்கியம் என்னும் இயக்கத்திலிருந்து எழும் குரல் இது.

எந்த எழுத்தாளரையும் விருதுகள் வரை கொண்டுசென்று சேர்க்கவேண்டும். அவ்வாறு கி.ராவை கொண்டுசென்று சேர்க்கவேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அது இலக்கியச் செயல்பாடு. ஆனால் ஆளும்கட்சிக்குப்பின்னால் சென்று அதைச்செய்வது அப்படி அல்ல, அது கீழ்மை. அதை வணிகத்தில் ஒருவர் செய்தாலே கீழ்மை. இலக்கியம் வணிகம் அல்ல, என்ன இருந்தாலும் இதுஒரு கொள்கைச்செயல்பாடு..

’இவன் விருதுக்காக எழுதுகிறான், பொறாமையால் பேசுகிறான்’ – என ஒரு குரல்.  ‘எல்லா விருதுகளையும் இப்படித்தான் இவன் எதிர்க்கிறான்’ என இன்னொரு குரல். இதெல்லாம் எழுதப்படிக்கத்தெரியாத கும்பல். எந்த விருதுகளை ஏற்றிருக்கிறேன், எந்த விருதுகளுக்கெல்லாம் பாராட்டுவிழாக்களையே ஒருங்கிணைத்திருக்கிறேன் என வாசிப்பவர்களுக்குத் தெரியும்..

என்னென்ன அறிவுஜீவி பாவனைகள்!

“நான் விருதுகளுக்கு அப்பால்சென்று யோசிப்பவன், ஆனால் இக்கட்டுரையில் இலக்கணப்பிழை உள்ளது”

“சரி, இதைச்சொல்ல இவர் யார்?”

“நான் இதை பின்நவீனத்துவப் பகடிதான்சார் பண்ணுவேன்”

ஆனால் எந்த அந்தர்பல்டியிலும் தெரியாமல்கூட, வாய்தவறிக்கூட வைரமுத்துவை இலக்கியவாதி என ஏற்கவில்லை என்று ஒரு சொல் வந்துவிடக்கூடாது. பின்நவீனத்துவமே ஆனாலும் அதிகாரத்துடன் உரசிவிடக்கூடாது.வேடிக்கை என்னவானாலும் அது வைரமுத்துவுக்கு எதிரானதாக தொனிக்கவும் கூடாது.சாதுரியத்தில் சமத்காரத்தில் பல்டியடித்தே அதிகாரம் நோக்கிச் செல்வதில் இவர்கள் ஒவ்வொருவரும் வைரமுத்துக்களே.

ஆனால் வைரமுத்து நல்ல படைப்பாளி என்று சொல்லிவிடவும்கூடாது, அறிவுஜீவி முகம் கலையக்கூடாதல்லவா? இவர்களுடன் ஒப்பிடுகையில் கள்ளிக்காட்டு இதிகாசமே தமிழிலக்கிய உச்சம் என நம்பும் அப்பாவிகள் எவ்வளவோ மேல். இந்த மொண்ணைகளுக்கு இவர்களின் தகுதிக்குரிய முகம்தான் கிடைக்கும். அது வைரமுத்துதான்போல

எண்ணிப்பாருங்கள், இவ்வாறு இன்னொரு எழுத்தாளர் பாரதியஜனதாவிடம் உறவாடி விருதுக்கு அலைந்தால் தமிழ் இணைய உலகம் என்னென்ன வசைகளை எழுப்பும். சாகித்ய அக்காதமி விருதை திருப்பியளிக்காத இலக்கியவாதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னென்ன வசைகள் கொண்டு அவமதித்தனர். ஒருசொல்லேனும் வைரமுத்துவுக்கு எதிராக அப்போது எழுந்ததா?அன்றைக்குப் பொங்கியவர்களெல்லாம் இன்று எங்கே?இப்போதும் அந்த அற்பத்தனத்தை மறைக்கவே இலக்கியவாதிகள் கோமாளிவேடம் பூணுகிறார்கள்.

இத்தருணத்தில் திட்டவட்டமாக என் மதிப்பீட்டை முன்வைப்பது கடமை என்று தோன்றியது. இது நூறாண்டுகளாக இங்கே மிகச்சிறிய தீவிர இலக்கிய வட்டத்திற்குள் திரட்டி வளர்க்கப்படும் இலக்கிய மதிப்பீடு. இதை ஏற்பவர்களுக்காகவே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்இந்த இலக்கிய மதிப்பீட்டை நான் என் முன்னோடிகளிடமிருந்து பெற்றேன். முப்பதாண்டுகளாக அத்தனை சந்தர்ப்பங்களிலும் எந்தச் சமரசமும் இல்லாமல் இதை முன்வைத்து வருகிறேன். அடுத்த தலைமுறையில் சிலரிடம் இது சென்றடையவேண்டும் என்பது மட்டுமே எதிர்பார்ப்பு. இங்கே இந்த மொண்ணைகளுக்கு அப்பால் சற்றேனும் நுண்ணுணர்வும் தீவிரமும் கொண்ட சிலர் உண்டு என நான் அறிவேன் என்பதனால்இக்குரலை முன்வைக்கிறேன். நான் எதற்கும் எங்கும் சென்று நிற்பவனல்ல என்பதனால் தயக்கமில்லை.

 

http://www.jeyamohan.in/105260#.WkjAQ7unxR4

Share this post


Link to post
Share on other sites

ஜெயமோகன் ரொம்பவே மனம் நொந்து இருக்கிறார் போல. பாவம் அந்தாளையும் கூப்பிட்டு ஒரு ஞானபீடமோ அல்லது சக்திபீடமோ விருதை கொடுங்கள். கடைசி மொண்ணையங்கள் என்று சொல்லி விமர்சனம் செய்ததற்காவது  ஒரு கிரீடம் அவர் தலையில் சூட்டத்தான் வேண்டும். :10_wink:

இப்படியான வார்த்தைப்பிரயோகத்தை நான் வைரமுத்துவிடம் இருந்து காணவில்லை. வைரமுத்து நல்ல கவிஞரோ அல்லது எழுத்தாளரோ இல்லை என்று ஜெயமோகன் வாதிடுவதன் அர்த்தம் இப்போது விளங்குகின்றது. 

Share this post


Link to post
Share on other sites

ஜெயமோகன் விருதுகளை மறுப்பவர்!

 

 

Share this post


Link to post
Share on other sites

ஜெயமோகனின் அரசியலையும் அவரது அகம்பாவத்தையும் சிறிதும் பிடிப்பதில்லை எனக்கு. ஆயினும் வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுப்பது  தொடர்பான அவரது எதிர்ப்பினை வரவேற்கின்றேன்.

கி.ஜா, அசோகமித்திரன் போன்ற உன்னத எழுத்தாளர்களை எல்லாம் விட்டு விட்டு எந்த இலக்கிய செழுமையுமற்ற வெறுமனே சினிமா பாட்டு எழுதி வரும் வைரமுத்துக்கு கொடுக்கப்படும் ஞானபீட விருதால் தமிழுக்குத் தான் அவமானம்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • நன்றிகள் Gowin. இன்னும் ஓர் உலகம் இருந்தால் அங்கு மனிதன் அமையோடும்  இயற்கையொடும் அன்பாகவும் இருந்தால் நல்லது Paanch. உங்கள் கருத்துக்கு நன்றி .
  • ‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:40   மூன்றாவது  ‘எழுக தமிழ்’ப் பேரணி, திங்கட்கிழமை (16)  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ‘எழுக தமிழ்’ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை மக்களின் பங்கேற்பு என்பது, கணிசமாகக் குறைந்திருக்கின்றது.  ஓர் அரசியல் கட்சி, தன்னுடைய கூட்டங்களுக்குத் தொண்டர்களைத் திரட்டுவதற்கும்,  எழுச்சிப் போராட்டங்களில் மக்களைப் பங்கேற்க வைப்பதற்கும் இடையில், நிறைய வித்தியாசங்கள் உண்டு.  அரசியல் கட்சியின் தொண்டர்களுக்கு, கட்சி நலன் மாத்திரமல்ல, தங்களின் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த சுயநல விடயங்களும் முக்கியம் பெறும். அதன்சார்பில், கட்சிக் கூட்டங்களை நோக்கித் திரள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.  ஆனால், எழுச்சிப் போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சி என்பது, சுயநல அடிப்படைகள் சார்ந்ததாக அமைவதில்லை. அது, இன- சமூக விடுதலை, அரசியல் உரிமை, நீதி உள்ளிட்ட விடயங்களை முதன்மைப்படுத்தி நிகழ்வன.  சுயநலத்தைத் தாண்டிய கடப்பாட்டை, ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கான நம்பிக்கையை அந்தப் போராட்டங்களும், அதற்கான காரணங்களும் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அந்தப் போராட்டங்களை ஒழுங்கமைக்கும் தரப்புகள், அதற்கான அர்ப்பணிப்பைச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதுதான், போராட்டங்களை நோக்கிய மக்கள் திரட்சியை அதிகப்படுத்தும். ‘எழுக தமிழ்’ப் பேரணியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தின் இறுதிப் பகுதி, “...எமது மக்களின் தொடர் போராட்டங்களையும் எழுச்சிகளையும் நமது தேசத்தின் பலமாக மாற்றுவது தொடர்பாக, நாம் காத்திரமான யோசனைகளை முன்வைத்துச் செயற்பட வேண்டியுள்ளது. அந்தவகையில், இந்த ‘எழுக தமிழ்’ப் பரப்புரையின்போது, நாம் சந்தித்த மக்கள், பொது அமைப்புகளுடனான உரையாடல்களின்போது, அவர்கள் முன்வைத்த கருத்துகளை உள்வாங்குதோடு, தொடர்ந்தும் எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தில், அதற்கான காத்திரமான செயற்றிட்டங்களை முன்வைத்து, எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என உறுதி பூணுவோமாக....”  என்று கூறுகிறது. போராட்ட வடிவமொன்று, வெற்றிபெறுவதற்கும் தோற்றுப்போவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு போராட்ட வடிவத்தை, வழிமுறையை ஏற்படுத்திய தரப்புகளே, அந்தப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்து, மக்களை விலகிப்போக வைப்பது என்பது, என்றைக்குமே ஜீரணிக்க முடியாதது.   தமிழ் மக்கள் பேரவை மீதான ஆதரவு, எதிர்ப்பு மனநிலைகளுக்கு அப்பால் நின்று, ‘எழுக தமிழ்’ப் பேரணியை நோக்கி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் திரண்ட போது, அந்தப் போராட்ட வடிவம், அடுத்த கட்டங்களை நோக்கிப் பயணப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்தது.  முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, கானல் வெளியைக் கடக்கும் கட்டங்களில், சிவில்- புலமைத் தரப்பின் பங்களிப்பு என்பது, தவிர்க்க முடியாதது.  அப்படியான நிலையில், பேரவை போன்ற அமைப்பின் தேவை, உண்மையிலேயே தவிர்க்க முடியாதது. ஆனால், அதைப் பேரவை உணர்ந்து செயற்பட்டிருந்தால், ‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்வியின் காரணங்களைப் பற்றி, யாரும் பேச வேண்டி ஏற்பட்டிருக்காது. ‘எழுக தமிழ்’ப் பேரணியின் தோல்வி என்பது, ‘எழுக தமிழ்’ என்ற ஒன்றை வடிவத்தின் தோல்வி மாத்திரமல்ல; அது, மக்கள் போராட்டங்களின் தோல்வி. ஏனெனில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், காணி விடுவிப்புப் போராட்டம், போர்க்குற்ற விசாரணைகளுக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், அரசியல் தீர்வுக்கான போராட்டம் என்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமை, நீதிக் கோரிக்கைப் போராட்டங்களின் அனைத்து வடிவங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்ட போராட்ட வடிவமாகவே, ‘எழுக தமிழ்’ போராட்ட நிகழ்வைப் பேரவை முன்னிறுத்தியது. இது, ‘பொங்கு தமிழ்’ போராட்டத்தின் இன்னொரு வடிவமாக இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான, பல கடப்பாடுகளை, ‘எழுக தமிழ்’ கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கடப்பாடுகளை, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவதிலிருந்து தவறிவிட்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிப் பிரகடனத்திலும், “மக்களின் கருத்துகளை அறிவோம்; மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற வெற்று வார்த்தைகளில், விடயங்களைக் கடக்க நினைப்பதை எவ்வாறு எதிர்கொள்வது? முதலாவது, ‘எழுக தமிழ்’ப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக, பேரவை செயற்பட ஆரம்பித்து இருந்தாலே, பேரவை தவிர்க்க முடியாத மக்கள் இயக்கமாக வளர்ந்து இருக்கும்.ஆனால் பேரவை, “மக்கள் சந்திப்புகளை நடத்துவோம்; கருத்துகளை அறிவோம்; அதன்பால் இயங்குவோம்” என்று, சி.வி.விக்னேஸ்வரனை வைத்து அறிக்கைகளை வெளியிட்டதைத் தவிர, செயற்பாட்டு வடிவத்தில் எதையும் செய்திருக்கவில்லை.  அத்தோடு, தேர்தல் அரசியல் சார்ந்து, தன்னுடைய நிலைப்பாடுகளின் பக்கத்தில் இயங்கியதன் விளைவாலேயே, ஒட்டுமொத்தமான நம்பிக்கையீனங்களையும் சந்தித்து நின்றது. தங்களுக்குள் பிளவுபட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் திட்டித் தீர்க்கும் கட்டத்தையும் எட்டியது. தேர்தல் அரசியல் என்பது, தீர்க்கமாகத் தாக்கம் செலுத்தும் சூழலில், அது தொடர்பில் பேசுவதோ, செயற்படுவதோ தவறில்லை. ஆனால், அதில், குறைந்தபட்ச நேர்மையாவது இருந்திருக்க வேண்டும்.  ஓர் அமைப்பு, தனியொரு மனிதனில் தங்கியிருக்கும் சூழல் ஏற்படுவதென்பது, எவ்வளவு அபத்தமானது? அதைத்தான், விக்னேஸ்வரன் பேரில், பேரவை செய்தது. அது, இன்றைக்கு பேரவையை மாத்திரமல்ல, எழுச்சிப் போராட்டங்களையும் தோல்வியின் கட்டங்களுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. தேர்தல், வாக்கு என்ற அரசியல் சிந்தனைகளோடு இயங்கும் கட்சிகளிடமும் தரப்புகளிடமும் ‘பொறுக்கித்தனங்கள்’ நிறைந்திருக்கும். அதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் கூட விதிவிலக்கானவை அல்ல. அ.இ.த.கா, தமிழரசுக் கட்சி தொடங்கி, த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.கூ என்று யாருமே விதிவிலக்கு அல்ல.  முதலாவது ‘எழுக தமிழ்’ப் பேரணியைத் தமக்கான அச்சுறுத்தலாக உணர்ந்த தமிழரசுக் கட்சி, அதற்கு எதிரான கைங்கரியங்களில் ஈடுபட்டது. ஆனால், மக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டங்களின் அவசியத்தை உணர்ந்து பங்கேற்றார்கள். ஆனால், மூன்று வருடங்களுக்குள், ‘எழுக தமிழ்’ நிகழ்வை எதிர்க்கும் கட்டங்களில் இருந்து, தமிழரசுக் கட்சி விலகிவிட்டது; அமைதியாக வெளியில் இருந்து கவனிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆனால், மூன்றாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வைப் பேரவைக்குள் இருந்த தரப்புகளே எதிர்த்து, விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன. அதனை, ஓர் அறமாக, அந்தத் தரப்புகள் கருதின. குறிப்பாக, பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகளில், ‘தேசம், சுயநிர்யணம்’ என்கிற வார்த்தைகளைச் சேர்க்கக் கூடாது என, விக்னேஸ்வரன் எதிர்த்தார் என்கிற விடயத்தை, ஒரு பிரசாரமாகத் த.தே.ம.மு, ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு எதிராக முன்னெடுத்தது.  கடந்த வாரம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வாறு விக்னேஸ்வரன் செய்த திருத்தங்களின் ‘மின்பிரதி’யை வெளிப்படுத்தினார். அந்தப் பிரதியை, விக்னேஸ்வரன், கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, வெளியிட்டிருந்தால், மக்களுக்கு இன்னும் தெளிவு கிடைத்திருக்கும் அல்லவா?  அதனையெல்லாம் செய்யாமல், தேசத்தை எதிர்த்த விக்னேஸ்வரனோடு, இரண்டாவது, ‘எழுக தமிழ்’ மேடையில் ஏறியதும், விக்னேஸ்வரனைக் கட்சித் தலைமையாக ஏற்க விரும்பியதும், தேசியத் தலைவராக முழங்கியதும் கஜேந்திரகுமாரினதும், அவரின் தொண்டர்களினதும் எவ்வாறான நிலைப்பாடு? இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? இன்னொரு பக்கம், விக்னேஸ்வரன் என்கிற தனிமனிதனை நோக்கி, பேரவையின் அடையாளத்தை வரைந்துவிட்டது, யாழ். மய்யவாத அரசியல் ஆய்வாளர்களும் புலமைத் தரப்புகளும்தான். அதன்பின்னால், கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளும் படையெடுத்தன.  என்றைக்குமே, தன்னுடைய ஆளுமையை நிரூபிக்காத, அதனை நிரூபிப்பதற்காக உழைக்காத ஒருவரை நோக்கி, மேட்டுக்குடிச் சிந்தனைகளின் போக்கில், ஜனவசிய கற்பனைக் கதைகளை எழுதிய தரப்புகள் எல்லாமும் சேர்ந்துதான், பேரவையின் தோல்வியையும் எழுதின.  போராட்டமே, ஈழத் தமிழ் மக்களின் அடையாளம்; அதுவே, அவர்களின் அரசியல் கருவி. அப்படிப்பட்ட மக்களிடம், போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துவதும், மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல் கற்பனைக் கதைகளில் உழல்வதும், தோல்வியின் கட்டங்களையே அதிகப்படுத்தும். பேரவையும் ‘எழுக தமிழ்’ நிகழ்வும் அதன் சாட்சிகளாக, இன்று மாறி நிற்கின்றன.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எழுக-தமிழ்-நிகழ்வின்-தோல்விக்குப்-பேரவையே-பொறுப்பு/91-238742  
  • ரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:28  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது.    ‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கிறார்.    அதேவேளை, அவருக்கு அதற்கு இடமளிப்பதில்லை என்பதில், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாக இருக்கிறார்.   இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, சஜித்துக்கு ஆதரவாகக் கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.    இதற்கு முன்னர், ஐ.தே.கவுக்குள் தலைமைத்துவப் பிரச்சினை உருவாகியிருந்த போதிலும், இம்முறைபோல், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை.   இலங்கையில், அரசியல் கட்சிகளுக்குள், தலைமைத்துவப் போட்டிகளால், சித்தாந்த முரண்பாடுகளால் ஏற்படும் கட்சிப் பிளவுகள் புதியனவல்ல.  இலங்கையில் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி, அதற்கடுத்த பழைய கட்சியான கொம்யூனிஸ்ட் கட்சி, ஐ.தே.க, அதிலிருந்து பிரிந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சகல கட்சிகளுக்கு உள்ளும், தலைமைத்துவப் போட்டிகள் அல்லது சித்தாந்த முரண்பாடுகள் ஏற்பட்டு, கட்சிகள் பிளவுபட்டுள்ளன.    இவற்றில் சில பிளவுகள், நாட்டின் அரசியல் வரலாற்றையே மாற்றக்கூடியதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஐ.தே.க பிளவுபட்டு, ஸ்ரீ ல.சு.க உருவாகியமை, கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு, சீன கொம்யூனிஸ்ட் கட்சி உருவாகி, அதிலிருந்து மக்கள் விடுதலை முன்னணி உருவாகியமை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து தமிழரசுக் கட்சி உருவாகியமை போன்றவற்றை, இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.    இன்று போலவே, ஐ.தே.கவுக்குள் எப்போதும் தலைமைத்துவ மோதலே ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளுக்குள் ஏற்பட்டது போல, ஐ.தே.கவுக்குள் ஒருபோதும்,  சித்தாந்தப் பிரச்சினைகள் உருவாகவில்லை.  உதாரணமாக, 1952ஆம் ஆண்டு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆதரவாக, ஐ.தே.க செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிக் கொண்டு, அக்கட்சியிலிருந்து பிரிந்து, ஸ்ரீ ல.சு.கவை ஆரம்பித்த போதிலும், டி.எஸ் சேனாநாயக்கவுக்குப் பின்னர், ஐ.தே.கவின் தலைமை, தமக்குக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அவருக்கு இருந்திருந்தால், அவர் அக்கட்சியிலிருந்து பிரிந்திருக்க மாட்டார்.    அதேபோல், ஜே.ஆர். ஜெயவர்தனவுக்குப் பின்னர், காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோரில் ஒருவருக்கு, ஐ.தே.கவின் தலைமைப் பதவியும் ஜனாதிபதி பதவியும் கிடைத்திருந்தால், அவ்விருவரும் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றிருக்க மாட்டார்கள். தாம், நாட்டில் ஜனநாயகத்துக்காகப் போராடுவதாக அவர்கள் கூறிய போதிலும், உண்மையிலேயே அது பதவிப் போராட்டமேயன்றி வேறொன்றுமல்ல.    ஐ.தே.கவே, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை நாட்டில் அறிமுகப்படுத்தியது. அதேவேளை, அப்பதவியே அக்கட்சிக்குள் கூடுதலான மோதல்களையும் உருவாக்கி இருக்கிறது. அதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராகவே, கூடுதலான கிளர்ச்சிகள் உருவாகியிருக்கின்றன.    ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக, இதுவரை மூன்று பிரதான உட்கட்சிக் கிளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. 2001ஆம் ஆண்டிலும் 2011-2014 காலப்பகுதியிலும், இரண்டு கிளர்ச்சிகள் இடம்பெற்றன. தற்போதையது மூன்றாவதாகும்.    1977ஆம் முதல் 1994 ஆம் ஆண்டு வரை, ஸ்ரீ ல.சு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாட்டில் நடைபெற்ற சகல பிரதான தேர்தல்களிலும் தோல்வியடைந்தன.  அதேபோல், 1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் வரை, தேர்தல் தோல்விகளை, ஐ.தே.க சந்தித்து வந்தது. இந்த நிலையில், ஐ.தே.கவின் தோல்விக்கு, ஐ.தே.கவின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்றதோர் அபிப்பிராயத்தை, ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியினர், அக்காலத்திலும் (2000ஆம் ஆண்டளவில்) மிகச் சாதுரியமாகச் சமூகத்தில் பரப்பிவிட்டனர். இதை ஐ.தே.கவினர் பலரும் நம்பினர்.    இந்தநிலையில், அப்போதைய ஐ.தே.க உபதலைவர் காமினி அத்துகோரள, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.ஜே.ஏம். லொக்குபண்டார, இன்று ரணிலின் ஆதரவாளர்களாக இருக்கும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் தலைமையில், 23 ஐ.தே.க எம்.பிக்கள், ரணிலுக்கு எதிராக அன்று செயற்பட ஆரம்பித்தனர்.    2001ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி, பாதீட்டுத் திட்டம் தொடர்பான, இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உதவியுடன், அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ய ஐ.தே.க எதிர்பார்த்தது. ஆனால், இ.தொ.கா அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை; வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றது. அன்றே, நோர்வே நாட்டுக்கு நீண்ட பயணம் ஒன்றை, ரணில் ஆரம்பித்தார். இதற்கிடையே, இ.தொ.காவின் உதவியைப் பெறமுடியாது போனமைக்கு, ரணிலே காரணம் என்று, மேற்படி குழுவினர் ரணிலுக்கு எதிராகச் செயற்பட, இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.  இதைச் சிலர் ரணிலுக்கு அறிவிக்கவே, உடனடியாக நாடு திரும்பிய ரணில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர், கட்சியில் ஒரு தலைவருக்குப் பதிலாக, தலைமைத்துவ சபையொன்றை நியமிப்பதாக வாக்குறுதியளித்து, பின்னர் அதை இழுத்தடித்து, கிளர்ச்சிக்காரர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்தார்.    அந்தக் கிளர்ச்சியின் போது காணப்பட்ட முக்கிய விடயம் என்வென்றால், இன்று ரணிலோடு இருக்கும் ரவி கருணாநாயக்க, அன்று அவருக்கு எதிராகச் செயற்பட்டமையும் இன்று, ரணிலுக்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கும் சஜித் பிரேமதாஸ, அன்று ரணிலுக்கு ஆதரவாகச் செயற்பட்டமையுமாகும்.    அதனையடுத்து, 2010ஆம் ஆண்டும் ரணிலுக்கு எதிராக, உட்கட்சிக் கிளர்ச்சியொன்று உருவானது. அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐ.தே.க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தோல்வியடைந்த நிலையிலேயே இந்தச் சர்ச்சை உருவானது.  ரணிலின் தலைமையில், தேர்தல்கள் வெற்றிபெறுவதில்லை என்ற ஒரு கருத்தைச் சிலர் அப்போதும் முன்வைத்திருந்தனர். அதேவேளை, சஜித் உள்ளிட்ட சிலர், கட்சித் தலைமையை எதிர்பார்த்தனர்.    இறுதியில், சஜித்தின் குழுவிடமே, தலைமைக்கு எதிரான போராட்டத்தின் தலைமை சென்றடைந்தது. 2011ஆம் ஆண்டு, கோட்டேயில் உள்ள கட்சித் தலைமையகமான ‘சிறிகொத்த’வில் ரணிலின் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற போது, கட்சித் தலைமையகத்தின் முன்னால், சஜித் பிரிவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  அன்று, மஹிந்தவின் அரசாங்கம், ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற ஆணையொன்றைப் பெற்று, ‘சிறிகொத்த’ தலைமையகத்தின் முன்னால் உள்ள வீதியைச் செப்பனிட ஆரம்பித்தது. இது இன்றுவரை, அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும் சம்பவமொன்றாகும்.    இந்த ரணில்-சஜித் பிணக்கு, 2014ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் வரை நீடித்தது. தாமே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என, சஜித் அடம்பிடித்தார். இன்று போலில்லாவிட்டாலும், பெருமளவிலான கட்சி ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டனர்.  இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரவே, கட்சியின் அப்போதைய செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க, சர்ச்சையைத் தீர்க்க, மத்தியஸ்தம் செய்தார்.    கட்சியின் தலைவருக்குப் பதிலாகத் தலைமைத்துவ சபையொன்று அமைக்கப்படும் என்று, ரணில் 2001ஆம் ஆண்டு முதல் வழங்கி வந்த வாக்குறுதியின் பிரகாரம், 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கரு ஜயசூரியவின் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய தலைமைத்துவ சபையொன்று அமைக்கப்பட்டது. அதில், சஜித்தும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன்படி, இருவருக்கும் இடையே சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டது.  ஆனால், அந்தக் குழுவுக்குக் கட்சி யாப்பின் மூலம், அதிகாரம் வழங்கப்படவில்லை. அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் வரவே, மைத்திரிபாலவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகச் சகலரும் நிறுத்தி, தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட்டனர். பிணக்கும் தலைமைத்துவ சபையும் மறக்கப்பட்டுவிட்டன.    கடந்த வருடம் பெப்ரவரி மாதம், நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், ஐ.தே.க படு தோல்வியடைந்தது. அப்போதும் ரணிலின் தலைமையைப் பலர் விமர்சித்தனர்.  அப்போதும், கட்சித் தலைவருக்குப் பதிலாக, தலைமைத்துவ சபையொன்றை நியமிப்பதாக, தொலைக்காட்சியில் தோன்றி, ரணில் வாக்குறுதியளித்தார். ஆனால், அவ்வாறு சபை எதுவும் நியமிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே, தற்போதைய கிளர்ச்சி உருவாகி இருக்கிறது.    கடந்த இரண்டு கிளர்ச்சிகளுக்குப் பின்னர், நடைபெற்ற தேசிய மட்டத் தேர்தலில், ஐ.தே.க அல்லது அக்கட்சியின் தலைமையிலான கூட்டு, வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  2001ஆம் ஆண்டுக் கிளர்ச்சியை அடுத்து, அதேயாண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐ.தே.க வெற்றிபெற்று ரணில் பிரதமரானார். 2014ஆம் ஆண்டு, கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, சில வாரங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐ.தே.க ஆதரவில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார்.    இம்முறையும் வரலாறு மீட்டப்படுமா? அல்லது, ஐ.தே.க பிளவுபட்டு படுதோல்வியடையுமா?   ஐ.தே.கவின் ஒற்றுமைக்குத் தடையாகும் 19 ஆவது திருத்தம் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், தாம் கட்சித் தலைமையை இழப்போம் என்றும், சஜித் தேர்தலில் தோல்வியடைந்தால், தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழப்போம் என்றும் கருதியே, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்தைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தயங்குகிறார் எனப் பலர் கூறுகின்றனர்.  எனவே, சஜித் ஜனாதிபதியானாலும் கட்சித் தலைமைப் பொறுப்பு, ரணிலிடமிருந்து பறிக்கப்பட மாட்டாது என்றும், அவரே பிரதமராகத் தொடர்ந்தும் இருப்பார் என்றும் சஜித்தும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால், இவ்வாறானதோர் இணக்கப்பாட்டில், இந்தச் சர்ச்சை தீருமா என்பது சந்தேகமே.   ஏனெனில், ஐ.தே.கவின் யாப்பின் பிரகாரம், நாட்டில் ஜனாதிபதியாக ஒருவர் இருக்க, மற்றொருவர் கட்சித் தலைவராக இருக்க முடியாது. யாப்பின்படி, கட்சி உறுப்பினர் ஒருவர், நாட்டில் ஜனாதிபதியானால் அவரே, கட்சியின் தலைவராகவும் இருக்க வேண்டும். எனவே, சஜித் ஜனாதிபதியாகவும் ரணில் கட்சித் தலைவராகவும் இருக்க முடியாது. அவ்வாறு இருக்க கட்சியின் யாப்பு, திருத்தப்பட வேண்டும்.    சஜித்தை வேட்பாளராக நியமிப்பதில்லை என்ற நிலையில் இருக்கும் வரை, ரணில் அவ்வாறானதொரு திருத்தத்தை கொண்டுவர மாட்டார். சஜித்தை வேட்பாளராக நியமிக்கத் தாம் நிர்ப்பந்திக்கப்படும் அளவுக்கு, சஜித்தின் பலம் கட்சிக்குள் அதிகரித்தால், இப்போது சஜித் எவ்வாறு கூறினாலும், அவ்வாறானதொரு யாப்புத் திருத்தம் கொண்டு வரப்படாது என்றும், அதன்படி தமது தலைமைப் பதவியும் பறிபோகலாம் எனவும் ரணில் சிந்திக்கலாம்.    அடுத்ததாக, சஜித் ஜனாதிபதியானால் அவர் தம்மைப் பிரதமராக நியமிப்பாரா என்றும் ரணில் சந்தேகிக்கலாம். ஏனெனில், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் பிரகாரம், பிரதமர் பதவி மிகவும் பலமானதாகும். ஜனாதிபதி பதவியானது பலத்த கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.    19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் படி, பிரதமரின் ஆலோசனையின் படியே, ஜனாதிபதி அமைச்சர்களை நியமிக்க வேண்டும். அனேகமாக, பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவராகவே இருக்கும் சபாநாயகரின் தலைமையிலான அரசமைப்புச் சபையின் பரிந்துரையோ ஒப்புதலோ இல்லாமல், ஜனாதிபதியால் முப்படைத் தளபதிகளையோ, உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையோ, கணக்காய்வாளர் நாயகம், சட்ட மா அதிபர், நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற ஒம்புட்ஸ்மன் போன்றவர்களையோ நியமிக்க முடியாது.    ஜனாதிபதியால் இந்தப் பதவிகளிலிருந்து எவரையும் தன்னிச்சையாக நீக்கவும் முடியாது. இந்தப் பதவிகள் மூலமே, அரசாட்சி நடைபெறுகிறது. அதாவது, அனேகமாகத் தமது கட்சிக்காரராக இருக்கும் சபாநாயகரின் உதவியால், முழு அரச இயந்திரத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பிரதமருக்குக் கிடைக்கிறது.  அரசமைப்புச் சபையினதும் பிரதமரினதும் ஆலோசனையோ, பரிந்துரையோ, ஒப்புதலோ இன்றி ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியாது. தற்போதைய அரசாங்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையிலான மோதலுக்கு முக்கிய காரணமும் இதுவே.    இது போன்றதொரு பொம்மை ஜனாதிபதி பதவிக்காகவா சஜித் போராடுகிறார்? அதேவேளை, அவ்வளவு பலம் வாய்ந்த பிரதமர் பதவிக்காக, சஜித் தம்மை நியமிப்பாரா என்று, ரணில் சந்தேகப்படுகிறார் போலும். எனவே, ரணில் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித்தை நியமிப்பதாக இருந்தால் இருவருக்கும் இடையே, ஆழ்ந்த புரிந்துணர்வொன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்காகக் கட்சிக்குள் மிகவும் பலமானதொரு பொறிமுறை இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரணிலின் விருப்பப்படி வேட்பாளர் நியமிக்கப்படலாம். தற்போதைய நிலையில், அது கட்சியைப் பிளவுபடுத்தவும் கூடும்.      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலுக்கு-எதிரான-மூன்றாவது-உட்கட்சிக்-கிளர்ச்சி/91-238740  
  • நான் மாறிப் பொல்லிருக்கிறவன் எண்டு அவசரத்தில வாசிச்சுப் போட்டன்.....!   தோழர் மன்னிக்க வேணும்...!😀
  • இந்தப் பேய்க் குஞ்சுக்குக்.....குழந்தை பிறக்காதது....ஒரு நல்ல விடயம் போலவே உள்ளது...!😑