Jump to content

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முடி­வுகள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தை தக்­க­வைக்­குமா?


Recommended Posts

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முடி­வுகள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தை தக்­க­வைக்­குமா?

1-b33478a3be6cf484f60de4db385ae6baee8d1e2b.jpg

 

இலங்­கையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் புதிய உள்­ளூ­ராட்சி சட்­டத்­திருத்­தங்­க­ளுடன் கலப்பு முறையில் நடை­பெ­ற­வுள்­ளது. இரண்டு வரு­ட­காலம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள இத் தேர்­த­லா­னது எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி பத்தாம் திகதி நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த தேர்­த­லா­னது அடி­மட்ட அர­சியல் பிர­தி­நி­தி­களை பிர­தேச, நகர, மாந­கர சபை­க­ளுக்­கூ­டாக தெரிவு செய்­கின்ற ஒரு தேர்­த­லா­கவே பார்க்­கப்­பட்­டாலும் இன்றைய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு முக்­கி­யத்­துவம் மிக்க தேர்­த­லாக அமைந்­துள்­ள­தாக அர­சியல் விமர்­ச­கர்கள், அர­சியல் ஆய்­வா­ளர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்டாம் திகதி இந்த நல்­லாட்சி அர­சாங்­கம் பத­விக்கு வந்த பின்னர் நடை­பெறும் தேர்தல் என்­பதால் இத்­தேர்தல் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது எனலாம்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதி­னாறாம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்­ற­போது எந்தக் கட்­சிக்கும் பெரும்­பான்மை ஆச­னங்கள் கிடைக்­காத நிலையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் இணைந்து அர­சியல் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றை மேற்­கொண்டு ஒரு தேசிய அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்கிக் கொண்­டனர்.

இதன் பின்னர் ஜன­நா­ய­கத்­திற்கு உர­மூட்டும் வகையில் பத்­தொன்­ப­தா­வது அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு முக்­கி­யத்­துவம் வாய்ந்த பல சட்­ட­மூ­லங்கள் சட்­ட­மாக்­கப்­பட்டு அவை நாட்டில் அமு­லுக்கு வந்­தன.

இதற்­க­மைய தகவல் அறியும் சட்­ட­மூலம், காணாமல் ஆக்­கப்­பட்டோர் சம்­பந்­த­மான சட்­ட­மூலம் உட்­பட பல சட்­ட­மூ­லங்கள் அமு­லுக்கு வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் அறு­பது சத­வீதம் வட்­டார அடிப்­ப­டை­யிலும், நாற்­பது சத­வீதம் விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வ­முறை மூலமும் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லையில் இத் தேர்தல் ஏன் முக்­கி­யத்­துவம் பெற­வுள்­ள­தென்றால், தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செல்­வாக்கை மக்கள் மத்­தியில் நாடி­பி­டித்துப் பார்ப்­ப­தற்கு இத் தேர்தல் ஒரு அடை­யா­ள­மாக அமைந்­துள்­ளது எனலாம்.

நாட்­டி­லுள்ள 341 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மாக 8356 உறுப்­பி­னர்­களை தலைவர், உப தலைவர், உறுப்­பி­னர்கள் என தெரிவு செய்ய வேண்­டி­யுள்­ளது. இத் தேர்­தலில் 50 இற்கும் மேற்­பட்ட அர­சியல் கட்­சி­களும் பல சுயேச்சைக் குழுக்­களும் கள­மி­றங்­கி­யுள்­ளன.

இந் நாட்­டி­லுள்ள பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி “யானைச் சின்­னத்­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி “கை” சின்­னத்­திலும் போட்­டி­யி­டு­கின்­றன.

மக்கள் விடு­தலை முன்­னணி அர­சியல் களத்தில் குதித்­துள்­ளது. எனினும் அரசியல் திருப்பம் என்­ன­வெனில், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்­கத்­த­வர்­க­ளா­க­வுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ர­வா­ளர்கள், பிர­மு­கர்கள், பொது­ஜன பெர­முன என்ற கட்­சியை உரு­வாக்கி தாமரை மொட்டுச் சின்­னத்தில் களம் இறங்­கி­யுள்­ள­மை­யாகும். இதனால் இத்­தேர்தல் மும்­முனைப் போட்­டிக்கு வழி­வ­குத்­துள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ

பக் ஷ தலை­மை­யி­லான தரப்­பினர் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்­ப­வற்றை எதிர்த்து மக்கள் மத்­தியில் செல்­கின்­றனர். ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வி­யுற்ற நிலை­யிலும் அவர் இலங்கை அர­சி­யலில் முக்­கிய வகி­பா­கத்­துடன் உள்­ள­தையும் காண­மு­டி­கின்­றது.

இன்­றைய நிலையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தற்­போ­தைய ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சவா­லாக உள்ளார். இந்­நி­லையில், இவ்­விரு அர­சியல் தலை­வர்­க­ளையும் இணைத்து வைக்­கவும் அர­சியல் இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வரவும் எடுத்த பல முயற்­சிகள் தோல்­வியைத் தழு­வி­யுள்­ள­தையும் காணலாம்.

பெரும்­பான்­மை­யின சிங்­கள மக்கள் வாழும் கிரா­மங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் நாமம் இன்­னமும் ஒலிப்­ப­தாலும் சிங்­கள தேசி­ய­வா­தத்தின் அடை­யா­ள­மாக அவர் இருப்­ப­தாலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முடி­வு­களில் அவ­ரது கட்சி பெரும் தாக்­கத்­தினை செலுத்­து­மென அர­சியல் ஆய்­வா­ளர்கள் கூறி­வரும் நிலையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இத் தேர்தல் விடை கொடுக்­குமா? என்ற வினாவும் எழுப்­பப்­ப­டு­கின்­றது.

சில நேரங்­களில் பொது­ஜன பெர­முன பெரும்­பான்­மை­யான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கைப்­பற்­றினால் அது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பாதிப்­ப­தை­விட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பெரிதும் பாதிப்­புக்­குள்­ளாக்கும்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் உறவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வாபஸ் வாங்­கி­னால்தான் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட ஆயத்தம் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தரப்­பினர் கூறி வரு­கின்­றனர். ஆனால், இது இல­கு­வாக நடந்­தேறும் விட­ய­மல்ல.

சர்­வ­தேச ஆத­ரவு தளத்தை கொண்ட ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு அர­சியல் தலை­மைகள் தமது ஆத­ரவுத் தளத்தை இழக்­காமல் இருப்­ப­தற்கு பல அர­சியல் உத்­தி­யினை இப்­பொ­ழுது கையாளத் தொடங்­கி­யுள்­ளன.

தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அர­சியல் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இம்­மாதம் 31 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைய இருக்கும் நிலையில், அந்த ஒப்­பந்தம் மீளவும் புதுப்­பிக்­கப்­ப­டுமா? தேசிய அர­சாங்கம் தொடர்ந்தும் செயற்­ப­டுமா? என்ற வினாக்கள் எழு­கின்­றன.

குறிப்­பாக பிணை­முறி விவ­காரம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்­ப­வற்­றுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பிணை­முறி ஆணைக்­கு­ழுவின் அறிக்கைகள் வெளி­வர இருக்கும் நிலையில், அது ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ரவு தளத்தை தளர்த்­தக்­கூடும். அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­வங்­கி­களில் சரிவை எதிர்­நோக்க வேண்­டி­வரும்.

இத் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தரப்பால் அர­சியல் தீர்­வுக்கு எதிர்ப்பு, சர்­வ­தேச நீதி­ப­திகள் தேவை­யில்லை, அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற கோஷங்கள் மக்கள் முன்­கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. இதற்கு சிங்­கள மக்கள் செவி­சாய்த்தால் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு புதிய அர­சியல் யாப்பு மாற்றம் முன்­கொண்டு செல்­லப்­ப­டுமா? இடை­ந­டுவில் கைவி­டப்­ப­டுமா? என்ற வினாக்கள் தொக்கி நிற்­கின்­றன.

மறு­பக்கம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வாக்கை திரட்டி எடுப்­பதில் வாழ்­கைச் ­செ­லவு உயர்வு, பொருட்­களின் விலை ஏற்றம், வெளி­நா­டு­களின் தலை­யீடு போன்ற கார­ணிகள் தடை­க­ளாக உள்­ளன.

ஊழல்­வா­தி­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பு கொண்­டுள்ள நிலையில் பிணை­முறி விவ­காரம், ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பிணைப்பை முடி­வுக்கு கொண்டு வந்தால் தேர்தல் முடி­வு­களும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு பாத­க­மாக அமைந்­து­விட்டால் 2018 பெப்­ர­வரி 10 ஆம் திக­திக்குப் பின்னர் இலங்கை அர­சியல் அரங்கில், அர­சியல் நிகழ்ச்சி நிரலில் பல அதி­ர­டி­யான மாற்­றங்­களை, அர­சாங்க கட்­ட­மைப்பு மாற்­றங்­களை நாம் எதிர்­பார்க்­கலாம்.

இதே­வேளை, உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஆளும் அர­சாங்­கத்தை மாற்றும் தேர்தல் அல்ல. தலை­வர்­களை மாற்றும் தேர்­தலும் அல்ல. ஆட்சி மாற்­றத்­திற்­கான தேர்­தலும் அல்ல என்று நாம் பொது­வாக கூறி­னாலும் மைத்­திரி, ரணில், மஹிந்த எனும் முப்­பெரும் அர­சியல் கிரீ­டங்­களை தீர்­மா­னிக்கும் ஒரு அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பாக மாறப் போகின்­றது.

இதன் முக்­கி­ய­மான இன்­னு­மொரு விடயம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் விடு­தலை முன்­னணி உள்­ளிட்ட கட்­சி­களின் அர­சியல் செல்­வாக்கை இந்த தேர்தல் நிச்­சயம் பிர­தி­பலிக்கும்.

இக்­கட்­சிகள் கடந்த இரண்­டரை வரு­ட­கா­ல­மாக தாம் சார்ந்த சமூ­கத்தின் நல­னுக்­காக சாதித்­தது என்ன என்ற வினாக்கள் எழுப்­பப்­பட்­டுள்ள நிலையில், இக் கட்­சி­க­ளுக்கு இடையே ஏற்­பட்­டுள்ள பிள­வுகள், கருத்து மோதல்கள், முரண்­பா­டுகள், பிர­தேச அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்கள் இக் கட்­சி­களை முன்­னோக்கி நகர்த்த வேண்­டுமா? பின்­நோக்கி நகர்த்த வேண்­டுமா என்­ப­வற்றை வாக்­கா­ளர்கள் தீர்­மா­னிப்­பார்கள்.

குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டான அர­சியல் தலைமை வேண்டும் என்ற கோஷம் அது சார்ந்த புதிய அர­சியல் கட்­சி­களின் வெளிப்­பாடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னு­டைய தலைமை தொடர்­பிலே மக்கள் நம்­பிக்கை கொண்­டுள்­ளார்­களா? இல்­லையா என்­ப­வற்­றை­யெல்லாம் இத்­தேர்தல் முடி­வுகள் தீர்­மா­னிக்கும்.

ஆயினும், மக்கள் விடு­தலை முன்­னணி தமது அர­சியல் பாத்­தி­ரத்தை துணி­வோடும் உண்மைத் தன்­மை­யு­டனும் கொண்டு செல்­கின்­றது என்ற அபிப்­பி­ராயம் இலங்கை மக்­க­ளிடம் நிலவும் நிலையில் அக்­கட்சி இத்­தேர்­தலில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப்பெறும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-29#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.