Jump to content

சைனீஸ் ரெசிப்பிக்கள்...


Recommended Posts

சூப்பர் சைனீஸ் ரெசிப்பிக்கள்...

 

dot3(2).jpgயூ ஷெங்  

dot3(2).jpgபோர்குபைன் சிக்கன்  

dot3(2).jpgவாட்டர் செஸ்ட்நட் ஸ்பைசி ஹாட் சாஸ்

dot3(2).jpgசீ ஃபுட் கிரில்  ஷ்ரெட்டட் லேம்ப் செஸ்வான் பெப்பர்

dot3(2).jpgடிரைகலர் ஸ்பைசி ரூட்  

dot3(2).jpgஜங்கிள் ஃப்ரைட் ரைஸ்  

dot3(2).jpgலோஹான் மெயின்

p59.jpg

 

சைனீஸ் உணவுகளைத் தயார்செய்து காட்டியவர் ரெசிடன்சி ஓட்டலின் கன்சல்டன்ட் செஃப் சண்முகம்...

சைனீஸ் ரெசிப்பிக்களின் சில பிளஸ் பாயிண்ட்ஸ்:

எந்த உணவிலும அதிக எண்ணெய் சேர்க்கப்படுவதில்லை. இதனால் அதிக அளவில் கலோரி சேர்வதற்கான வாய்ப்பில்லை.

நீராவியை (ஸ்டீம்)  அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படுவதால், ஆரோக்கியமான உணவாக இவற்றைத் தடையின்றி எடுத்துக் கொள்ளலாம்..

எந்த சைனீஸ் ரெசிப்பியும் இஞ்சி மற்றும் பூண்டு இல்லாமல் சமைக்கப்படுவதில்லை. இதனால் செரிமானம் அதிகமாவதோடு , பல மருத்துவ பயன்களும் கிடைக்கின்றன.


ஃபெஸ்டிவல் டிஷ்....

யூ ஷெங்

(தமிழர்களுக்கு பொங்கல் போல இந்த யூ ஷெங் சீனர்களின் பாரம்பர்ய உணவு)

தேவையானவை:

தோல் சீவப்பட்டு துருவிய கேரட், பப்பாளி, முள்ளங்கி, வெள்ளரிக்காய் - தலா 50 கிராம்  

 போமேலோ (கிரேப் ஃபுரூட்)- ஒரு துண்டு

இஞ்சி மற்றும் ஸ்வீட் இஞ்சி - தலா 25 கிராம் 

தேன் - ஒரு டீஸ்பூன் 

எலுமிச்சைச்சாறு - அரைப்பழத்திலிருந்து எடுக்கவும் 

ஏலக்காய்த்தூள், வெள்ளை எள், மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை 

ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி, வறுத்து பொடித்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓலை பக்கோடா -  50 கிராம்

p60.jpg

செய்முறை:

அனைத்து காய்கறிகளையும் நன்றாக மெலிசாக நறுக்கி பெரிய பிளேட்டில் வைப்பார்கள். இதன் நடுவே சிறிதளவு ஓலை பகோடா வைப்பார்கள்  தேன், எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில், ஏலக்காய், மிளகு  ஆகியவை தனித்தனி கிண்ணங்களில் எடுத்துக் கொள்வார்கள்.  பண்டிகை நேரம் வந்தவுடன் கிண்ணத்தில் உள்ள எல்லாவற்றையும் அவரவர் தட்டில் எடுத்து ஊற்றி, சாப் ஸ்டிக் பயன்படுத்தி இதைக் கிளறியவாறே ‘லோ ஹெய்’ எனச் சந்தோஷமாகக் கத்திக்கொண்டே சாப்பிடுவார்கள்

இந்த டிஷ்ஷின் பிளஸ் பாயின்ட்:

இந்த டிஷ்ஷில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி அர்த்தம் சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு.... எலுமிச்சை அதிர்ஷ்டத்துக்காக, மிளகு செல்வம் சேர்வதற்காக... பண்டிகையின் போது இவர்கள் சொல்லும் ‘லோ ஹெய்’ என்ற இந்த வார்த்தையின் அர்த்தம் தமிழில் சொல்லக்கூடிய வாழ்க வளமுடன் என்பதுதான்...


மெயின் டிஷ்

போர்குபைன் சிக்கன்

தேவையானவை:

அரிசி - 200 கிராம்

கோழிக்கறி (பொடியாக நறுக்கியது) அல்லது இறால் - 300 கிராம்

நன்கு விழுதாக அரைக்கப்பட்ட பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை மற்றும் செலரி (சிவரி கீரை) - தலா 20 கிராம்

நல்லெண்ணெய் - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

சைட் டிஷ்:

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் 

எண்ணெய் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்

p63.jpg

செய்முறை:

அரிசியை நான்கு முதல் ஐந்து முறை தண்ணீரில் நன்கு அலசி இறுத்து, மீண்டும் தண்ணீர் ஊற்றி நாற்பது நிமிடம் ஊற வைக்கவும். கோழிக்கறியில் பூண்டு, வெங்காயம், இஞ்சி, உப்பு, நல்லெண்ணெய் கலந்து உருண்டை பிடிக்கவும். இதை தண்ணீர் இறுத்த அரிசியின் மீது போட்டு புரட்டினால், உருண்டையில் அரிசி முழுவதும் ஒட்டிக் கொள்ளும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அந்தப் பாத்திரத்தின் மேல் ஸ்டீம் பேஸ்கட்டை வைத்து, அதில் உருண்டைகளை வைத்து அதற்கான மூடியால் மூடவும். தீயை அதிகப்படுத்தி பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து இறக்கி, சூடு ஆறியதும் திறந்தால் உருண்டையில் அரிசி நிற்பது போல அழகாக வெந்திருக்கும். இது தான் போர்குபைன் சிக்கன் கொத்தமல்லித்தழை செலரி தூவிப் பரிமாறவும்.

சைட் டிஷ்:

ஒரு பவுலில் சைட் டிஷுக்குத் தேவையானதைச் சேர்க்கவும். இதன் மேலே கொதித்த எண்ணெயை ஊற்றினால், அந்த சூட்டில் பவுலில் உள்ளவை வெந்துவிடும். இதை போர்குபைன் சிக்கனோடு சேர்த்துப் பரிமாறவும்.


வாட்டர் செஸ்ட்நட் ஸ்பைசி ஹாட் சாஸ்

தேவையானவை: 

வாட்டர் செஸ்ட் நட் (சிங்காரா) - 200 கிராம்

பச்சை குட மிளகாய் - 20 கிராம்

பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தாள் - அலங்கரிக்க

சில்லி பேஸ்ட் - 25 கிராம்

ஸ்பைசி ஹாட் சாஸ் - 25 கிராம்

கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன்

பூண்டு, இஞ்சி - தலா 25 கிராம் (விழுதாக அரைக்கவும்)

நல்லெண்ணெய் - சிறிதளவு

p63a.jpg

செய்முறை:

சென்னையில் வண்ணாரப்பேட்டை, பாரி முனை போன்ற இடங்களில் வாட்டர் செஸ் நட்டை சாலையோரக் கடைகளில் விற்பார்கள். வாட்டர் செஸ்ட்நட்டின் தோலை நீக்கி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் தவிர்த்து, மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கலவையைச் சேர்த்து வதக்கி வெந்ததும் இறக்கி வெங்காயத்தாள் தூவிப் பரிமாறவும். சாஸில் உப்பு இருக்கும் என்பதால், தனியாக உப்பு சேர்க்கத் தேவையில்லை. 


 
சீ ஃபுட் கிரில்

தேவையானவை:

மீன் அல்லது இறால் - 250 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - 25 கிராம்

பழுத்த சிவப்பு மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி - தலா 50 கிராம்

ஆய்ஸ்டர் (சிப்பி ) சாஸ் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

p64.jpg

செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து தோல் நீக்கி, ஒரு விரல் நீளத்துக்கு நறுக்கி வைக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை மீனோடு சேர்த்துக் கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, மீனைப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.


ஷ்ரெட்டட் லேம்ப் செஸ்வான் பெப்பர்

தேவையானவை:

இளம் ஆட்டுக்கறி - 200 கிராம்

செஸ்வான் பெப்பர் (சிவப்புக் கோகிலம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)  - 3 கிராம்

கார்ன்ஃப்ளார் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் - 20 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - 20 கிராம்

p65.jpg

செய்முறை:

கறியை மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் செஸ்வான் பெப்பரைச் சேர்த்து வதக்கி, அதில் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் கறியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேக விடவும். பத்து நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும். ஸ்பைசி டிஷ் இது.


டிரைகலர் ஸ்பைசி ரூட்

தேவையானவை: 

வாட்டர் செஸ்ட்நட், புரோக்கோலி, காளான் – தலா 50 கிராம்

பேபி கார்ன் - 20 கிராம்

நல்லெண்ணெய் மற்றும் கார்ன்ஃப்ளார் ஆயில் - தலா 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பூண்டு+வெங்காயம்+இஞ்சி+சில்லி பேஸ்ட்- தேவையான அளவு

p66.jpg

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் காய்கள் வேகும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் ஊற்றி, வாட்டர் செஸ்ட்நட், புரோக்கோலி, காளான், பேபி கார்னை உப்புப் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் பூண்டு, வெங்காயம், இஞ்சி விழுது, சில்லி பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் வதக்கிய கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்கி இறக்கிப் பரிமாறவும்.


ஜங்கிள் ஃப்ரைட் ரைஸ்

தேவையானவை:

பாஸ்மதி் சாதம் - 250 கிராம்

பேபி கார்ன், புரோக்கோலி, டிரைகலர் கேப்சிகம், மூங்கில் குருத்து, கேரட், பீன்ஸ் - 100  கிராம்

அரைத்த பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் விழுது - தலா 25 கிராம்

உப்பு - தேவையான அளவு 

நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

p67.jpg

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அந்த எண்ணெயை வேறு கிண்ணத்தில் ஊற்றி விடவும். இப்போது அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து பாஸ்மதி சாதம் தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். இவையெல்லாம் வெந்ததும் சாதம், உப்பு சேர்த்து சில நிமிடம் வதக்கி இறக்கிப் பரிமாறவும்.


லோஹான் மெயின்

தேவையானவை:

வேகவைத்த நூடுல்ஸ் - 200 கிராம்

வேக வைத்த பேபிஃகார்ன், நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சோயா பீன்ஸ், பொடியாக நறுக்கிய கேரட் - மொத்தம் 100 கிராம்

அரைத்த பூண்டு, இஞ்சி மற்றும் பழுத்த சிவப்பு மிளகாய் - 25 கிராம்

டொமேட்டோ மற்றும் சில்லி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

p68.jpg

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, மிளகாய் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்து தண்ணீர் வற்றும்போது சாஸைச் சேர்த்துக் கிளறவும். வேக வைத்த நூடூல்ஸை ஒரு தட்டில் பரப்பி, சாஸை அதன் மீது ஊற்றிப் பரிமாறவும்.

க.தனலட்சுமி, படங்கள்: எம்.உசேன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.