Jump to content

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா

Recommended Posts

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா

தோசை, சப்பாத்தி, சாம்பார் சாதம், புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த விருதுநகர் மட்டன் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா
 
தேவையான பொருட்கள்:
 
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 4
 மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு
 
201801011514060126_1_virudhunagarmuttonmasala._L_styvpf.jpg
 
செய்முறை :
 
மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கிய பின்னர்  மிளகாய் தூள், உப்பு, கழுவி வைத்துள்ள மட்டனை போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
 
அடுத்து குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கி விசில் போனவுடன் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் சுருண்டு வரும் வரை வதக்க வேண்டும்.
 
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
 
சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா ரெடி.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே சொல்கிறேன் 40 வருடங்களுக்கு முன் ஐந்து சந்தியில் ப்ளவ்ஸ் கடையில் சாப்பிட்ட  றோஸ் (மாட்டிறைச்சி) ஞாபகத்தில் வந்து தொலைக்குது. அதுக்காக இது 40 வருடங்களுக்கு முன் செய்தது என்று நான் சொல்லவில்லை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நிஜமாகவே சொல்கிறேன் 40 வருடங்களுக்கு முன் ஐந்து சந்தியில் ப்ளவ்ஸ் கடையில் சாப்பிட்ட  றோஸ் (மாட்டிறைச்சி) ஞாபகத்தில் வந்து தொலைக்குது. அதுக்காக இது 40 வருடங்களுக்கு முன் செய்தது என்று நான் சொல்லவில்லை.....!  tw_blush:

மொக்கன் கடை, ரொட்டியும், ரோஸ் பீப்ஸ் கறியும் அருமையோ அருமை.

மொக்கன் என்ற பெயர் வந்தது, அருமையாக சமைக்கும் அளவுக்கு, கணக்கு பார்த்து, சரியான பில் சொல்லி, காசை வாங்கத் தெரியாததால். 

காசு இல்லாமல், பிளேன் டீ க்கு, தவண்டை அடிக்கிற மாணவர் கூட்டம், மொக்கனை நம்பி போகும். :grin: 

இதே பெயரில் கனடாவில், கடை திறந்த ஒருவர்..... கணக்காக பில் கொடுத்த காரணத்தால்.... கொஞ்ச நாளில் கடையை பூட்டினார்... :grin: 

****************

நவீனா,

நன்றி. படத்தில கருவேற்ப்பிலை தெரியுது. 

செய்முறையில் இல்லை. ஆகவே.... இது சேர்ப்பில்லை.  :grin:

சுவியர் கவனிக்காமல் விட்டுட்டாரே. tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ் நீங்கள் ஒரு பந்துல இரண்டு விக்கட் எடுத்துட்டீங்கள்....! (எல்லாம் இவர் நவீனனால் வந்தது). 

Link to comment
Share on other sites

கருவேற்பிலை கிலோ 30 யூரோ இங்கு. அதனால் கருவேற்ப்பிலையை எடுத்துவிட்டேன்..tw_blush:

வருடம் பிறந்து காலம் காத்தால எங்க இருந்து கிளம்பி வாரீங்க..:rolleyes:

42 minutes ago, Nathamuni said:

நவீனா,

நன்றி. படத்தில கருவேற்ப்பிலை தெரியுது. 

செய்முறையில் இல்லை. ஆகவே.... இது சேர்ப்பில்லை.  :grin:

சுவியர் கவனிக்காமல் விட்டுட்டாரே. tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

நாதம்ஸ் நீங்கள் ஒரு பந்துல இரண்டு விக்கட் எடுத்துட்டீங்கள்....! (எல்லாம் இவர் நவீனனால் வந்தது). 

வருசம் பிறந்து... ஆட்டு இறைச்சியை எடுத்துக் கொண்டோடிவந்து.... இப்ப கருவேற்ப்பிலைக்கு திரும்பி போக வேண்டி இருக்குது.....

எல்லாம் நவீனனால் வந்தது தான் சுவியர்...  :10_wink:

3 minutes ago, நவீனன் said:

கருவேற்பிலை கிலோ 30 யூரோ இங்கு. அதனால் கருவேற்ப்பிலையை எடுத்துவிட்டேன்..tw_blush:

வருடம் பிறந்து காலம் காத்தால எங்க இருந்து கிளம்பி வாரீங்க..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்கனியில் இருக்கும் வீட்டு தோட்டத்தில எல்லாத்தையும் புடுங்கி எறிஞ்சு போட்டு, கறுவேல்பிள்ளை மரங்கள் வையுங்கோ சுவியர்.

இப்போ இலங்கை போய் வரும் ஆக்கள்.... 10, 20 கிலோ மிளகாய்த் தூள்... 2, 3 கிலோ கறுவேல்பிள்ளை கொண்டுவந்து போன செலவை சரிக்கட்டுகினம்.

கறிவேல்பிள்ளையை, அங்கேயே 50 கிராம பிரிச்சுக் கட்டிகொண்டுவந்து கடைகளுக்கு 50 சதபடி கொடுத்தெல்லோ காசு பாக்கினம்.  :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா

தோசை, சப்பாத்தி, சாம்பார் சாதம், புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த விருதுநகர் மட்டன் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா
 
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சாப்பாடு ஸ்பெசலாய் இருக்கும்.....காரணம் அந்தந்த ஊர்தண்ணியிலைதான் எல்லாவிசயமும் அடங்கியிருக்கு கண்டியளோ......:cool:

ஜேர்மனியிலை இருந்துகொண்டு விருதுநகர் ரேஸ்ற் எடுக்கிறது வலு கஸ்டம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பால்கனியில் இருக்கும் வீட்டு தோட்டத்தில எல்லாத்தையும் புடுங்கி எறிஞ்சு போட்டு, கறுவேல்பிள்ளை மரங்கள் வையுங்கோ சுவியர்.

இப்போ இலங்கை போய் வரும் ஆக்கள்.... 10, 20 கிலோ மிளகாய்த் தூள்... 2, 3 கிலோ கறுவேல்பிள்ளை கொண்டுவந்து போன செலவை சரிக்கட்டுகினம்.

கறிவேல்பிள்ளையை, அங்கேயே 50 கிராம பிரிச்சுக் கட்டிகொண்டுவந்து கடைகளுக்கு 50 சதபடி கொடுத்தெல்லோ காசு பாக்கினம்.  :grin: 

உங்கள் வாய்க்கு சக்கரைதான் போடணும்...., இப்பொழுது எனது பால்கனியில் ஒரு ஜான் அளவு கறிவேப்பிலை கன்றும், ஒரு சாடிக்குள் ஆறேழு இலைகளுடனும் சின்ன குட்டியோடும் வாழை கன்றும் இருக்குது.பால்கனி முழுதும் பனி அடிக்காமல் பாலித்தீன் பேப்பரால் மூடி இருக்கிறன்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சாப்பாடு ஸ்பெசலாய் இருக்கும்.....காரணம் அந்தந்த ஊர்தண்ணியிலைதான் எல்லாவிசயமும் அடங்கியிருக்கு கண்டியளோ......:cool:

ஜேர்மனியிலை இருந்துகொண்டு விருதுநகர் ரேஸ்ற் எடுக்கிறது வலு கஸ்டம். :grin:

தண்ணி இல்லை அண்ணோய்...

ஜேர்மனி செம்மறி ஆட்டிறைச்சியை வைத்து... விருதுநகர் வெள்ளாட்டு இறைச்சி ருசி எடுக்கேலுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

தண்ணி இல்லை அண்ணோய்...

ஜேர்மனி செம்மறி ஆட்டிறைச்சியை வைத்து... விருதுநகர் வெள்ளாட்டு இறைச்சி ருசி எடுக்கேலுமோ?

ஜெர்மனி செம்மறி இறைச்சியை ஜெர்மனி ரெட் வைனில் சமைத்து விருதுநகர் "தண்ணி"யுடன் சாப்பிட்டாலும்  அந்த ருசி வராதா....!   tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.