யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நியானி

கருத்துக்களில் மாற்றங்கள் [2018]

Recommended Posts

வணக்கம்,

2018 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி திரியில் பதியப்பட்ட ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

ஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட கொள்கையிலிருந்து மாறமாட்டோம்... இரா.சம்மந்தன் எனும் செய்தி எழுத்து வடிவில் இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது.

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

அரசியல் பண்பாடு எதுவுமின்றி மிகவும் தரக்குறைவான வார்த்தை பிரயோகத்துடனான நாகரீகமற்ற விதத்தில் சுவரொட்டியுடன் இணைக்கப்பட்ட திரி ஒன்று அகற்றப்படுகின்றது.

அரசியல் ரீதியிலான தரமான விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் யாழ் இணையம் வரவேற்கும் அதே வேளை கைகூலி / துரோகி / ஓநாய் போன்ற தரக்குறைவான எந்தவிதமான அரசியல் பண்பாடுமற்ற நாகரீகமற்ற கருத்தாடல்களை யாழ் இணையம் ஒரு போதும் வரவேற்காது என்பதை கருத்தில் கொள்ளவும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

'பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா?' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

கருப்பு பட்டியலில் உள்ள இணையத்தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும், மூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும் நீக்கப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

செய்தியின் மூலம் தெரிவிக்காமல் இணைக்கப்பட்ட மற்றுமொரு செய்தி நீக்கப்படுகிறது. தயது செய்து  செய்திகள் இணைப்பதற்கான களவிதிகளை பின்பற்றுங்கள். நன்றி.

Share this post


Link to post
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் http://akuranatoday.com இணையத்தளத்தில் இருந்து பதியப்பட்ட மூன்று தலைப்புக்கள் நிகழ்வும் அகழ்வும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இத் தலைப்புக்கள் செய்திகளாக இல்லாமல் சில தனிப்பட்டோரின் கருத்துக்களாக உள்ளன. எனவே செய்திகளைத் தவிர வேறு பதிவுகளை ஊர்ப்புதினம் பகுதியில் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

அத்துடன் குறித்த இணையத்தளம் தற்போது இயங்காமலும் உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

ஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று எதுவித மூலமும் கொடுக்கப்படாமல் தனியே பத்திரிகை ஒன்றின் படச்செய்தியாக இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது.

செய்திகளை இணைப்பவர்கள் எழுத்து வடிவில் சரியான மூலத்தைக் குறிப்பிட்டு இணைக்கவேண்டும்.

 

Share this post


Link to post
Share on other sites

மக்கள் வசமாகுமா காங்கேசன்துறை எனும் திரியிலிருந்து சில சீண்டல்களும் அநாகரீகமான கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காதோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

'தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு' என்ற தலைப்பிலிருந்து அநாகரீகமான கருத்துக்கள் மற்றும் மீம்ஸ் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

மொளவியவர்களின் முஸ்லீம் ஊர்காவல் படைதொடர்பான கருத்து எனும் தலைப்பு ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களை தாயகச் செய்திகளை இணைக்கும் பகுதியாகிய ஊர்ப்புதினம் பகுதியில் இணைப்பதை தவிர்க்கவேண்டும்

Share this post


Link to post
Share on other sites

தவறான ஒருவரை தலைவனாக வரலாற்றில் எழுதமுடியாது எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட பதிவு கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளம் ஒன்றினை மூலமாகக் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு சிலர் மிகவும் பழைய செய்திகளை கருத்துக்களாக பதிவதும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவை ஆரோக்கியமான கருத்தாடலுக்கு உதவா என்பதை கள உறுப்பினர்கள் உணரவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

அநாமேதய இணையங்களில் இருந்து பிரதி செய்யப்பட்ட சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. 

ஊர்ப்புதினம் பகுதியை குப்பைக்கூடமாகப் பாவிக்காமல் தமிழீழத் தாயகச் செய்திகளையும் முக்கியமான சிறிலங்காச் செய்திகளையும் மட்டும் இணைத்தல்வேண்டும்.

தனிநபர்களின் பத்திகள் ஊர்ப்புதினம் இணைக்கப்படுவது அனுமதிக்கப்படமாட்டாது.

Share this post


Link to post
Share on other sites

கொழும்பில் அதிகளவு போதையில் மிதந்த பெண் வைத்தியர்! இளைஞர்களுடன் நடந்து கொண்ட விதம் எனும் தலைப்பு ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

செய்திகளை இணைத்து  கருத்துக்களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் கள உறுப்பினர்கள் ஊர்ப் புதினம் பகுதியில் கருத்தாடலைத் தூண்டும் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகளை மாத்திரம் இணைத்து உதவவேண்டும்.

 

ஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் இணைப்பது பற்றிய மேலதிக குறிப்புக்கள்:

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ராசி, நட்சத்திரம் எது என்று அறிவதற்கு எனும் திரி அகற்றப்படுகின்றது. இத்தகைய சமூகத்தை பின்னோக்கி தள்ளும் சாத்திர மூட நம்பிக்கைகளை பரப்பும் திரிகளை இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

  • Confused 1

Share this post


Link to post
Share on other sites

மூலம் குறிப்பிடப்படாமல் ஊர்புதினப் பகுதியில் இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டது. ஊர் புதினம் பகுதியில் செய்திகளை பதியும் போது மூலத்தை குறிப்பிட்டு பதியுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

கொலம்பான் இணைத்த தரக்குறைவாக ஒருமையில்  எழுதப்பட்ட செய்தி 'இலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை' நீக்கப்படுகின்றது. அடிப்படை நாகரீகத்தை பேணும் இணைப்புகளை கள விதிகளுக்கு ஏற்ப இணைக்கவும்.

Share this post


Link to post
Share on other sites

அநாகரீதியான முறையில் எழுதப்பட்ட, அனாமதேய இணையம் ஒன்றில் இருந்து ஒட்டப்பட்ட 'விடுதலைக்குக் குறுக்குவழியிருப்பதாய்க் கதையளப்பவர்கள் குழிபறிக்கும் கைக்கூலிகளே ' எனும் பதிவு நீக்கப்படுகின்றது.

யாழ் களத்தின் விதிகளுக்கு ஏற்ப அமையாத கட்டுரைகளையும், கைகூலிகள்,துரோகிகள் என்று மற்றவர்களை கொச்சைப்படுத்தி எழுதும் பதிவுகளையும் யாழில் இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடையாகவிருப்பதனால் வீதியில் இறங்கிய மக்கள்!  எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

சக கள உறுப்பினர்களுடன் நட்புறவோடு கருத்தாடல் புரியவேண்டும்.

 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு