Jump to content

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா


Recommended Posts

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா

 

வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு மட்டன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா
 
தேவையான பொருட்கள் 
 
மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - தேவைக்கு
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு
 
201801031506407810_1_muttonpakora._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
மட்டனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
 
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும். 
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி,1  டம்ளர் தண்ணீர் சேர்த்து 6 விசில் போட்டு வேக விடவும். இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது. கறியில் இருக்கும் தண்ணீரே போதுமானது.
 
கறிவெந்தவுடன் அதில் தண்ணீர் இருந்தால் வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும். 
 
வெந்த மட்டனை ஒரு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம். 
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டனை அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரியாக போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும். 
 
சுவையான மட்டன் பக்கோடா ரெடி.
 
குறிப்பு : அசைவ சமையல் மட்டன் பக்கோடா செய்ய எப்போதும் தீயை குறைவாக இருப்பது நல்லது..

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கோடாவில் முரசை கிழிக்கும் அளவுக்கு மொரமொரப்பு இருக்குமா......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2018 at 5:13 PM, suvy said:

இந்த பக்கோடாவில் முரசை கிழிக்கும் அளவுக்கு மொரமொரப்பு இருக்குமா......!  tw_blush:

அப்பதான் அது பக்கோடா இல்லாட்டா அது பூந்தி போல் இருக்கும் பல்லு இல்லாத ஆட்களுக்கு பக்கோடா சரிவராதேtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.