Jump to content

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன்


Recommended Posts

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன்

கமல்ஹாசன்  
 

 

ன்னுள் மையம் கொண்ட புயலை உங்கள் கரை வரை கொண்டு சேர்க்கும் தீரா ஆசையின் முதல் அலை இது.

இன்னும் எவ்வளவு காலம் தமிழர் தம் கண்முன் நடக்கும் அநீதிகளையும் அநியாயங்களையும், மக்கள் செல்வங்கள் எல்லாம் தனியார் தம் ஆசைக் கோட்டைகள் கட்ட மண்ணெடுக்கும் மேடாய் மாறிவருவதையும் பார்த்துக்கொண்டிருப்பர்?

இந்தக் கேள்வி பல கோடி மனங்களில் எழத்துவங்கி கால் நூற்றாண்டாகிவிட்டது. என் மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. தானுண்டு தன் வேலையுண்டு என்று கண்டும் காணாமல் இருந்த தமிழர்களில் நானும் ஒருவன். இந்த மெத்தனத்துக்கான தண்டனையைப் பல ஆண்டுக்காலம் அனுபவித்தாயிற்று. விழிப்புடன் இல்லாமல், குற்றங்கள் நடப்பதைப் பார்த்திருந்ததுதான் நாம் செய்த குற்றம். நல்லவரெல்லாம், நாணயமானவரெல்லாம் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று ஒதுங்கியதில், கள்வர்களும் கயவர்களும் நம் மண்ணில், நம் காசில், தமக்கெனக் கோட்டை கட்டிக் கொடியேற்றி கோஷமிடுவதை மந்தை மந்தையாய் வேடிக்கை பார்த்து வெதும்பி நிற்கிறோம்.

‘முன்பு ஏன் பேசவில்லை; இப்போது பேசுகிறாயே?’ என்ற இரைச்சலுக்குப் பதிலாய் உமிழ்நீர் வற்றக் கத்திப் பிரயோசனமில்லை. ‘இப்பொழுதாவது பேசுகிறானே’ என்று செவி சாய்க்கப்போவதில்லை. அவர்கள், ‘முன்பு பேசாதிருந்ததுபோல் இப்போதும் பேசாதிரு. எஞ்சியிருக்கும் வேளையில் எங்கள் வேலையை முடித்துக்கொள்கிறோம்’ என்பதாகத்தான் அவர்கள் பதற்றத்தைக் கணிக்க வேண்டியதாய் இருக்கிறது. அவர்கள் கேள்விகளின் இலக்கைப் புரிந்துகொண்டதால் அவர்கள் கேள்வித்தாளின் முன்மாதிரியை பதிலுடன் கீழே இணைத்துள்ளேன்.

12p1.jpg

கேள்வி: ``நீ யார்?’’

நான்: ``தமிழன்.’’

கேள்வி: ``ஆனால் பார்ப்பான் ஆயிற்றே?’’
12p2.jpg
நான்: ``அது என் பிறப்பு. நான் தேர்ந்த நிலையில்லை அது.’’

கேள்வி: ``பகுத்தறிவு பேசுகிறாயே?’’

நான்: ``அது நான் தேர்ந்த அறிவுநிலை.’’

கேள்வி: ``ஆக, தனித்தமிழ்நாடு வேண்டுமா?’’

நான்: ``தமிழராய் எமக்கு மரியாதை வேண்டும். கேள்வியின்றி வங்க மொழியில் தேசியகீதம் பாடும் என்னிடம் மன்றாடிக்கேட்டாலும் பயமுறுத்திக் கேட்டாலும் அன்றாடம் பேசுவது தமிழாகத்தான் இருக்கும். இந்தியாவை இணைக்கும் மொழி ஆங்கிலம்தான். ஹிந்தி அல்ல. மத்திய அரசிடம் நான் உரையாட, வழக்காட அம்மொழி போதுமானது. மற்ற மொழிகளை சாய்ஸில் விட்டுவிடுங்கள்; வற்புறுத்தாதீர்கள் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிக்கும் குரல். என் குரலும் அது தான்.’’

கேள்வி: ``உன் வண்ணம் காவியா என்றால் மறுக்கிறாய், காவியுடன் கலக்காதா என்று கேட்டால் என் கறுப்புச்சட்டையில் காவியும் இருக்கிறது என்கிறாய் - இது உன் தன்நிலை விளக்கமா - விஞ்ஞான விளக்கமா?’’

நான்: ``இரண்டும்தான். ஒளியியல்படி, பகுத்தறிவாளன் போல் கறுப்பும் எல்லா வர்ணமாயைகளையும் உள்வாங்கிப் பகுத்தறியும், ஒரு வண்ணம் மட்டுமே வெளித் தெரியும். தன்னிலை விளக்கம் என்று எடுத்துக் கொண்டாலும் காவியை உணராமலே வெறுப்பவனல்ல. 12 வயது வரையில் அதன் மாயைக்கு மயங்கியவன். பின் விடுபட்டவன்.’’

கேள்வி: ``அப்படியென்றால் உள்ளே எங்கோ கொஞ்சம் காவி ஒட்டியிருக்கிறது என நம்பலாமா?’’

நான்: ``நம்பிக்கைதானே உங்கள் போதைப் பொருள். நம்பாதீர்கள். என்னுள் எஞ்சிய காவி மனதில் இல்லை. எப்போதாவது  வெற்றிலையைக் குதப்பினால் வாயில் இருக்கக் கூடும். அது சாதியம் மெச்சும் புராதனக் கூட்டத்தின் கொள்கை விளக்கப் பிரகடனங்கள் மீது துப்ப ஏதுவாக இருக்கும்.’’

கேள்வி: ``உனக்கு முதலமைச்சனாக வேண்டுமா?’’

நான்: ``அது என் ஆங்கிலப் பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதுவும் பளபளக்கும் தலைப்புத் தேடும் சில ஊடகங்களின் தேவைக்கேற்ப மொழிபெயர்க் கப்பட்டது. என் மையக்கருத்தைச் சிதைத்துக் கிட்டிய தலைப்பு. ஆட்சி பலத்தை அசைக்கக்கூடிய அகற்றக்கூடிய செயல் எதுவோ அதுவே என் ஆசை. புதிய தமிழ் மாநிலம் அடுத்த தலைமுறையாவது காணவேண்டும் என்ற பல தலைமுறை ஆசையை என் தலைமுறையாவது நிறைவேற்றத் துடிக்கும் தமிழனின் ஆசை. யாம் முதல்வர் என்பது என்னை மட்டும் குறிப்பிடாது. என் மக்களைக் குறிக்கும். யாமே முதல்வராக முதன்மையானவராக இருத்தல் வேண்டும். அமைச்சர்களெல்லாம் இம்முதல்வர்களின் கருவியாகச் செயல்படவேண்டும். ஜனங்களோ நாயகம் செய்தல் வேண்டும். நான் தொண்டன், அடிப்பொடியா, உச்சிக்குடுமியா என்பது முக்கியமல்ல. ஒருநாள் வெல்வோம் என்று காத்திருக்க மாட்டேன். தோற்றால் என்ன கதி எனக் கலங்கவும் மாட்டேன்.’’

70 வருட சுதந்திரத்தில் கிட்டத்தட்ட 50 வருடங்களை தமிழர்கள் நாம் கண்களை மூடிக்கொண்டு கடந்துவிட்டோம். வீட்டுக்கு மருமகளாக, மருமகன்களாக வரும் வரன்களிடம் எத்தனை விஷயங்களை எதிர்பார்க்கிறோம். ‘சம்பாதிப்பாரா, பெண்ணைக் காப்பாற்றுவாரா, நல்ல மருமகளா...’ எத்தனையெத்தனை கேள்விகள், எத்தனையெத்தனை எதிர்பார்ப்புகள். ஆனால், ‘நாட்டை நடத்தும் உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது, தகுதியானவர்களா’... என்று மந்திரிகள், எம்.எல்.ஏக்கள்,
A.jpg
எம்.பி.க்களிடம் அப்படி ஏதாவது கேள்விகள் கேட்டிருக்கிறோமா? ‘வரதட்சணை கொடுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, கொடுக்கவில்லை என்றால், புகுந்தவீட்டில் என்ன பாடுபடுத்துவார்கள்? அந்தப் பாட்டையெல்லாம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த மக்கள் பிரதிநிதிகளும் படவேண்டும் என்கிறேன். வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கவில்லை. வரதட்சணைபோல் ஊழல் அரசியலும் நம் யதார்த்த வாழ்க்கையில் கலக்கவிடக் கூடாதென்கிறேன்.

ஆரம்பத்தில் நல்லவர்கள் பலர் மக்கள் பிரதிநிதிகளாக அரசியலில் இருந்திருக்கிறார்கள். இப்போது இல்லை என்பதுதான் எங்கள் கோபம். ‘இன்று அது சாத்தியமில்லை’ என்றுவேறு சொல்கிறார்கள். அந்த நல்ல தமிழ் அரசியல் வம்சாவளியில் வந்தவர்கள் நிறைய பேர் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் வெளியே நிற்கிறார்கள். `சரி இனிமேலாவது நீங்கள் ஏதாவது பண்ணுங்கள். வேண்டுமானால் நாங்கள் வேலையைக்கூட விட்டுவிட்டு வருகிறோம்’ என்று சொல்லும் வெளிநாட்டு, வெளிமாநிலத் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழகமெங்கும் கொதிக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் ‘செப்பனிட வேண்டும் என்று சொல்லுங்கள். பெரிய படிப்புப் படித்தவர்கள் அந்தப் பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்யத் தயார்’ என்கிறார்கள்.

ஆமாம், பழைய வாகனங்களே கூடாது. புதிதாகக் கட்டுவோம் என்கிற ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் அ.தி.மு.கவிலும் இப்படிச் சொல்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உருவத்தைக் கைகளில் பைகளில் வைத்துக்கொண்டு திரிபவர்கள் அல்ல அவர்கள். அவரை மூளையில் பச்சைகுத்திக்கொண்டவர்கள். ‘இன்னும் எம்.ஜி.ஆர்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’ என நம்புபவர்கள். ஆனால், நிஜம் அவர்கள் நம்புவதுபோல் இல்லை என்பதே நிதர்சனம்.

கடந்த இரு மாமாங்கங்களாக நிஜத் தொண்டர்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆர் உருவம், கட்சி போஸ்டர்களில்கூடச் சுருங்கிப் போய்விட்டதை யாரும் உணராதிருக்கவில்லை. நிறுவியவரைவிடத் தற்கால நிர்வாகியே பிரதானம் என நம்பி, கால்வருடிகளாகிவிட்டனர் சிலர். ஆனால், அஸ்திவாரத்தில் ஆதிநாதனை மனதில் பதிந்து வைத்து, பொருமிக்கொண்டிருக்கும் பல லட்சம் பேர் கட்சியில் இருக்கிறார்கள் செய்வதறியாது.

12p3.jpg

என் அரசியல் பேச்சில் மூத்த அரசியல்வாதிகள் பேச்சிலுள்ள அழகு இருக்காது. ஆனால் பேச்சு உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் இருக்கும். என் பேச்சு வார்த்தை அலங்காரம் சரியில்லை எனில் மன்னித்துக்கொள்ளுங்கள். மொழியைச் செம்மைப்படுத்தும் பணியைத் தொல்காப்பியர் தொடங்கி ஏகப்பட்டோர் செய்து கொண்டிருக்கிறார்கள். மொழிமேம்பாடல்ல என் நோக்கம். என் அடுத்த சந்ததிக்கு வாழ்வு தேடிவைக்கும் வேலையுமல்ல என் நோக்கம். நான் இப்போது அரசியலுக்கு ஆதார வசதிகளோடுதான் வந்திருக்கிறேன். இனி வந்துதான் கார், வீடு வாங்கவேண்டும் என்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் அரசியலுக்கு வந்தால் இப்போது போகும் காரில் போக முடியாது என்கிறார்கள். ஆனால், நான் போவேன். ஏனெனில், இது என் சினிமா தந்த கார். திடீரென இப்போது இருக்கும் பெரிய வீட்டைத் துறந்து சிறிய வீட்டுக்குப்போய் ‘எளிமை’ என்று போலி வேஷம் போட மாட்டேன். ஏனெனில், இது என் சம்பாத்தியம். இதுவும் மக்கள் பணம்தான். ஆனால், நான் மக்களை ஏமாற்றாமல் மகிழ்வித்திருக்கிறேன்; அரசையும் ஏமாற்றாமல் வரி கட்டியிருக்கிறேன்.

நான் சேர்க்க நினைப்பது தமிழ்நாட்டுக்குப் பெருமையும் வசதியையும். ‘இவனெல்லாம் பேசலாமா?’ என்று திருடர்கள் எல்லாம் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்கள். சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வருகிறது. கேட்பவர்கள்மீது வழக்குகளே இருக்கின்றன. பொறுப்பில் இருப்பதால் செய்த குற்றங்கள், குற்றமில்லாமல் போய்விடுமா? புராணக்கதைகளின்படி பார்த்தால்கூட, சிவனே ஆனாலும் கேள்வி கேட்பேன் என்று சொன்ன நக்கீரர் எண்ணம் நமக்கு வேண்டாமா?

கடைத்தெருவில் ஒருவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு ஓடினால் ‘திருடன் திருடன்’ என்று கத்துகிறார்கள். அதையே ஒரு வங்கி மேலாளர் செய்தால் ‘கையாடல்’ என்கிறார்கள். கவுன்சிலர், எம்.எல்.ஏ செய்தால் ஊழல். மந்திரிகளும் அவர்களுக்கு மேல் உள்ளவர்களும் செய்தால், ‘ஏதோ பிசகு நடந்துவிட்டது, விசாரணை நடக்கிறது’ என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் திருடர்கள்தான். இப்படிப் பகுத்து அறிய வேண்டுமே தவிர வகுத்துப்பிரித்து அவர்களை எடுத்துக்கொண்டு போகவிடக் கூடாது.

‘உங்கள் கருத்து வக்கிரமா இருக்கு. நீங்க கறுப்புச் சட்டைக்காரர்’ என்கிறார்கள். அது என் சட்டையின் வண்ணம். ஆனால், உங்கள் சட்டையை மாற்றுங்கள் என்று நான் சொல்லவே இல்லை. கோயிலில் நான் சாமி கும்பிடாமல் இருக்கலாம். ஆனால், அந்த அழகான கட்டடம் நம்முடையது இல்லையா? அதில் தெய்வம் வைத்தால் பிரசித்திபெற்ற கோயில். வைக்கவில்லை என்றால் பாழடைந்த கோயிலா? தூணிலும் துரும்பிலும் இருப்பவருக்கு ஒரு பாழடைந்த கோயிலுக்குள் இருக்கத் தெரியாதா? மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளத் தெரியாதா? அங்கு உடைந்த கல்லிலும் இருப்பார் இல்லையா? அந்தக் கட்டடங்கள் எல்லாம் அரசியல்வாதியின் பேராசையால் ரியல் எஸ்டேட்டாக மாறிவிடக் கூடாது என்கிறேன். பகுத்தறிவது என்றால் பக்தியே இல்லாமல் தொலைத்துக் கட்டுவதல்ல. பக்தி என்ற பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகாமல் காவல் நிற்பதே ஆகும். `கறுப்புச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்.’
12p12.jpg
`‘நிலையான அரசு இல்லை என்பதைப் பயன்படுத்திக்கொண்டு கமல் உள்ளே வருகிறான்’’ என்கிறார்கள். ஆமாம், அந்த நிலைத்தன்மை இல்லை என்பதால்தான் வருகிறேன். வேறு எந்தச் சமயத்தில் வருவது? காமராஜர் இருக்கும்போது ‘நகருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று வருவோமா? அண்ணா இருக்கும்போது, ‘போதும்போதும் காஞ்சிபுரம் ஆண்டது. அடுத்து பரமக்குடி வரட்டும்’ என்போமா? அப்படிச் சொல்லத் தைரியம்தான் வருமா? ஏன் இப்போது சொல்கிறோம்? ‘இதுக்கு யார்வேணும்னாலும் ஆட்சி பண்ணலாம் போலிருக்கே’ என்கிற லெவலுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள். ஆம், எனக்கான கம்பளத்தை விரித்ததே இவர்கள்தான். ‘நான்’ என்றால் நான் மட்டுமா வருகிறேன். நான் தனியாக வந்துவிட முடியுமா? இது தனியாக வரும் குரலே இல்லை. `ஓஹோ! அப்ப தேர்தலில் குதி. களத்தில் இறங்கு. கமலுக்கு எத்தனை ஓட்டுகள் விழுகிறது என்று எண்ணிப் பாருங்கள்’ என்கிறார்கள். கண்டிப்பாக எண்ணுவோம். ஆனால், அந்த ஓட்டு எனக்கு விழுகிறதா இல்லையா என்பது பிரச்னையல்ல. யாருக்கு விழாது என்பதை அடித்துச்சொல்வேன், மக்களின் கோபத்தை நானும் உணர்வதால் சொல்வேன்.

‘பிளாக் டவுன்’ என்று ஒரு மூலையில் வெள்ளையர்கள் ஒதுக்கிய  இடம்தான் பிற்பாடு, கோட்டையருகே சந்தையானது. பிற்பாடு கோட்டை தமிழகத் தலைமைச்செயலகமானது. தற்போது கோட்டையின் ஊழல் புகை படிந்து மறுபடியும் பிளாக் டவுனாகிவிட்டது நம்ம ஊர். கோட்டையைச் சுற்றி வங்கிகளின் உயர்மாடிக் கட்டடங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், அதன் மதிப்பு குறைந்து வெகுநாளாகிவிட்டன. சொத்து மதிப்புப்படி பார்த்தால்கூட டவுனில் சொத்து இருப்பதைவிட ஓ.எம்.ஆரில் இருந்தால்தான் பெரிய விலை. இந்நிலை தொடர்ந்தால் இதேபோல தமிழகத்துக்கே வேல்யூ குறைந்துவிடும் என்பதே பலரின் கருத்து.

இப்போது எல்லா கம்பெனி களும் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. அவை நம் வாழ்வாதாரங்கள். நாம் வெறும் கார் கம்பெனிகள். அவையும் பெட்ரோல், டீசல் கார் கம்பெனிகளாக இங்கு வைத்துக்கொண்டு இருக்கிறோம். ஒருவேளை அக்கம்பெனிகள் திரு.ட்ரம்ப்பின் அறிவுரை கேட்டு பெட்ரோல், டீசல் கார் தயாரிக்கும் நிறுவனங்களாகவே இருந்தால், சென்னை டெட்ராய்ட் போல் தொழிலாளர்களின் ஆவிகள் நடமாடும் இடமாகிவிடும். வேறு காரணங்களால் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் அப்படி ஆனதை நாம் இங்கு பார்த்திருக்கிறோம். அப்படி பல தொழிற்சாலைகள் மாற ஆரம்பித்தால், தமிழகமே பாழுங்கிணறாகிவிடும். அதற்கான எல்லா ஆயத்தங்களையும்  இன்றைய அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

 முக்கியமாக இன்று நம் வாழ்வாதாரங்கள் பலவற்றில் கைவைத்துவிட்டார்கள். குறிப்பாகச் சுற்றுச்சூழலில். உங்களுக்குத் தேவையான கறிகாயை மயிலாப்பூரில் இன்று ஓடிக்கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகில் மிதந்துவந்து ஒருவர் விற்றால் வாங்குவீர்களா? ஆனால், நான் என் சின்ன வயதில் எங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுடன் சென்று வாங்கியிருக்கிறேன். இன்றுபோல் அன்றும் காலில் ஈரம் ஒட்டும். ஆனால், அது சகதி நரகல் அல்ல. அந்தக் கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்க் கரைகள் எல்லாம் அன்று ஏழைகள் வாழும் இடமாக மட்டுமே இருந்தன. இன்றுபோல் வாக்கு வங்கிகளாக மாறாத காலம்.

கிராமங்கள் இதைவிட மோசம். முன்பு சென்னை டு பரமக்குடி பயணமானால் சாலையை ஒட்டி நீளமான நிலங்களும் மரங்களுமாக பச்சைப்பசேல் என இருக்கும். ஆனால், இன்று தரிசு நிலங்கள். அவற்றில் வெவ்வேறு பெயர்களில் ரியல் எஸ்டேட் போர்டுகள். அங்கு தரிசில் மிருகங்களைப்போல் காற்றில் நடமாடிக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக் குப்பை. பார்க்கும்போதே பகீர் என்று இருக்கிறது. இது நம் தவறு. நம்மை ஆள்பவர்களின் தவறு. ஆனால், கேரளாவில் விவசாய நிலங்களைப் பாதுகாக்க என்னென்ன வேலைகள் செய்துகொண்டிருக்கிறோம் என முதல்வர் பினராயி விஜயன் என்னிடம் பட்டியலிட்டார். ‘நல்ல ஐடியாவாக இருக்கிறதே’ என ஆசையாகவும், ‘ஓ இப்படியெல்லாம் கூடச் செய்யலாமா’ என ஆச்சர்யமாகவும், ‘இங்கு அப்படி எந்த முயற்சிகளும் நடக்கவில்லையே’ என ஆதங்கமாகவும் இருந்தது.

12p10.jpg

மத்திய அரசாங்கத்தார் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். நல்ல யோசனை. ஆனால், எனக்கு அது போதாது. எனக்கு ஸ்மார்ட் டவுன், ஸ்மார்ட் வில்லேஜ் வேண்டும். அங்கிருந்து மக்கள் வெளியே வர ஆசைப்படாத அளவுக்கு அவை ஸ்மார்ட்டாக இருக்கவேண்டும். இன்றைய தேதியில் உலகத்தொழில் நுட்பத்தின் துணையிருந்தால், அறிவுக்காக, பொழுதுபோக்குக்காக நீங்கள் கிராமங்களை விட்டு வரவேண்டிய அவசியமே இல்லை. கிராமத்தில் குடியிருப்போரிடம் எங்கு குடியிருக்கிறீர்கள் என்று கேட்கும்போது, ‘நகரத்துக்கு வெளியில’ என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கும் அளவுக்கான ஸ்மார்ட் கிராமங்கள் வேண்டும். ‘அன்றாடங்காய்ச்சிகள்தான் சென்னையில் இருப்பார்கள். ஓரளவுக்கு வசதியானவர்கள் கிராமத்தில் இருப்பார்கள்’ என்று நினைக்கும் அளவுக்கு எல்லாதுறைகளுமே கிராமங்களை நோக்கிப் போகவேண்டும். நான் ஒன்றும் புதிதாக எதையும் சொல்லவில்லை. ‘கிராமங்கள்தான் நம் பலம். அதை வளப்படுத்தி வலிமைப்படுத்த வேண்டும்’ என்று கிழவனார் காந்தி சொன்னதைத்தான் சொல்கிறேன்.

விவசாயம் எனக்குத் தெரியாத சப்ஜெக்ட். தெரிந்துகொள்ள தொடர்ந்து விவசாயிகளுடன் மணிக்கணக்கில் உரையாடிக் கொண்டிருக்கிறேன். என்னைவிடக் குறைவான கோபத்தில் அவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அடக்கிவைத்த கோபம் (Stored anger). அது வெடித்தால் நடப்பதே வேறு. எந்த அரசும் தாங்காது. அப்படி ஒரு கோபம்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் குமுறுகிறது. ‘இனி விவசாயமே வேண்டாம்’ என்று அனைவரும் பர்கர், பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டு இருக்க முடியுமா? ஆறுகளை இணைப்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். முதலில் அதில் தண்ணீர் இருக்கிறதா என்று பாருங்கள். இருக்கின்ற நீரை பேராசையினால் பிறருக்கு இல்லாமல் பண்ணுவதைத் தடுத்து, பகிர்ந்துண்ண அரசுகள்தான் வழிசெய்யவேண்டும். தண்ணீரை உறிஞ்சுபவர்களைக் கண்டிக்கவேண்டும்.

‘மருந்துக்கு வேணும்னா வேப்பிலையைக் கொஞ்சமாப் பறிச்சுக்க. அதுக்காக மரத்தையே வெட்டிச் சாய்க்கிறதா’ என வைய வேண்டாமா? ‘நீரைப்பொறுத்தவரை இங்கு இலைக்காக முழு மரத்தையும் வெட்டிச் சாய்க்கும் அநியாயம்தான் நடந்துகொண்டிருக்கிறது. குளிக்கும் இடம் குளம், ஏர் உழவுக்கு உதவுவது ஏரி, கண் வழி மாயும் என்கில் அது கண்மாய், ஊருக்குக் குடிநீராய்ப் பயன்படும் இடம் ஊருணி... இப்படி நுண்ணுணர்வோடு பெயர்வைத்து வாழ்ந்தவரை நகர் நோக்கி ஓடி வரவைத்தது யார் தவறு?

இலவசமாகத் கொடுத்தால் மதிக்க மாட்டார்கள் என்று மக்களை ஏசுவது போன்ற ஓர் அவமானம் நமக்கு உண்டோ? ஒருவகையில் சரிதான். இலவசமாகக் கிடைப்பதைக் கேள்வி கேட்கவும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நான் இதே அடையாற்றில் 2015 பெருமழையில் டிவி, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறிகள் மிதப்பதைப் பார்த்தேன். இலவசமாக வந்தது இலவசமாகப் போய்க்கொண்டிருந்தது; செயற்கையாக வந்ததை இயற்கை கொண்டுபோனது என நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் ஓட்டுக்காகக் கொடுத்தது. ஆட்களும் அந்த இலவசங்களுமாக ஆற்றில் போனபோது காப்பாற்ற அரசு உடனே ஏன் வரவில்லை என்பதை யோசித்தோமா? அந்தப் பெருமழையைப் பற்றி ஏன் முன்னதாக எச்சரிக்கவில்லை என்று கேட்டால் ‘தண்டோரா போட்டோம்’ என்றார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில் தண்டோரா போட்டார்களாம். இப்படியான ஆயிரமாயிரம் தவறுகளில் எதை நான் குறிப்பிட்டுக் காட்டுவது? அதையெல்லாம் மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் இவர்களின் மூலதனம்.

 அந்த மூலதனத்தை இவர்களுக்கு நாம் இனி வழங்கக்கூடாது!

- உங்கள் கரையை நோக்கி!


12p5.jpg

மாற்றி யோசி!

சென்னை பெசன்ட் நகர்ப் பக்கம் போகும்போதுதான் அந்த ‘ஐயமிட்டு உண்’ குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்தேன். வீட்டில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியைப்போல் இருமடங்கு இருந்தது. ஒருபுறம் குளிர்சாதனப் பெட்டி. மறுபுறம் நாம் உடைகள் வைக்கும் தடுப்பறைகள் கொண்ட பீரோ. குளிர்சாதனப் பெட்டியில் பழங்கள், உணவுகள் என நிறைந்திருந்தன. மறுபுறம் நிறைய துணிகள், காலணிகள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. விசாரித்தேன். வியந்தேன்.
12p4.jpg
திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின். பல் சீரமைப்பு மருத்துவர். தன் வீட்டில் மிஞ்சும் ஒன்றிரண்டு பேர் சாப்பிடும் அளவு உணவை தன் அபார்ட்மென்ட் அருகே நடைபாதையில் அமர்ந்திருக்கும் மூதாட்டி ஒருவருக்குத் தொடர்ந்து கொடுத்துவந்திருக்கிறார். திடீரென ஒருநாள் அந்த மூதாட்டியைக் காணவில்லை. ‘அந்த மிஞ்சிய உணவை என்ன செய்வது’ என்று யோசித்தவர், ‘நம் அபார்ட்மென்ட்டில் உள்ள மற்ற வீடுகளில் இப்படி உணவு மிச்சமானால், அவர்கள் என்ன செய்வார்கள்? நம் அபார்ட்மென்ட்டிலேயே மொத்தம் 180 வீடுகள் உள்ளன. அப்படி எல்லா வீடுகளிலும் மிச்சமாகும் உணவைச் சேகரித்து அவற்றை ஒரு பொது இடத்தில் வைத்து ஏழைகளுக்கு விநியோகித்தால் என்ன?’ என்று சிந்தித்திருக்கிறார்.. பகிர்ந்து உண்ண வழிசெய்யும் இந்தச் சிந்தனையும் பகுத்தறிவுதான்.

‘அப்படிச் சேகரித்த உணவை தன் கைப்பட விநியோகிக்காமல் தேவையானவர்களே தேவைப்படும் நேரத்தில் எடுத்துக்கொள்ளும்படி செய்யலாம்’ என வாசித்து அறிந்திருக்கிறார். முன்பு பகுத்தறிந்தார், இப்போது வாசித்தறிந்தார். அப்படி அமைத்ததுதான் ‘ஐயமிட்டு உண்’ என்ற இந்த ‘சமுதாய குளிர்சாதனப் பெட்டி’. இது அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகிறதாம். ‘இப்படி எங்க ஏரியாவிலும் அமைக்கலாம்’ என்று இப்போது 200 தன்னார்வலர்கள் ஐஷாவுடன் கரம்கோத்திருக்கிறார்கள். மேலும், ‘இப்படி ஒரு நிகழ்ச்சியில் 100 பேர் சாப்பிடும் அளவுக்கான உணவு மிஞ்சிவிட்டது. அங்கு எடுத்துவரலாமா’ என்றும் கேட்கத்தொடங்கி, இதனால் பல வயிறுகள் பசியாறி வருகிறதாம்.

குப்பை பொறுக்குபவர்கள், கிடைக்கும் வேலையைச் செய்பவர்கள்... இப்படி அந்தக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தொடர்ந்து உணவு எடுப்பவர்கள் அனைவரும் சாமானியர்களே. ‘எங்களுக்கு மாசம் 9 ஆயிரம் கிடைக்குது. அதுல முக்கால்வாசி சாப்பாட்டுக்கே செலவு பண்ணிட்டிருந்தோம். இப்ப இங்க சாப்பாடு கிடைக்கிறதால மிச்சமாகும் அந்தப் பணத்தைவெச்சு எங்க பசங்களை பக்கத்துல உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்க்கலாம்னு இருக்கோம்’ என்கிறார்களாம்.

18 மணி நேரம் வேலை செய்யும் ஒரு கால்டாக்ஸி டிரைவரின் கையில் அன்று காசு இல்லை. தாகம். பெசன்ட் நகர் 3வது நிழற்சாலையில் உள்ள இந்தக் குளிர்சாதனப்பெட்டியைப் பார்த்திருக்கிறார். ‘பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டவர், பிறகு ஐஷாவை அலைபேசியில் அழைத்து, ‘தாய் மாதிரி இருக்கீங்க’ என்றாராம்.

ஆம், நமக்கு ஐஷா போன்றோர்தான் தாய். அரசு செய்ய வேண்டிய வேலையை ஐஷா போன்ற உண்மையான அம்மாக்கள்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள் ஐஷா.


12p7.jpg

வரும்முன் காப்போம்!

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். அம்மா, அப்பா சொல்கிறார்கள் என்று எதையும் அப்படியே கேட்காதீர்கள். மாதா, பிதா, குரு, தெய்வம்... கும்பிட்டுக்கொள்ளுங்கள். ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்கவேண்டும். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள். கல்யாணத்திற்கு மாத்திரம், ‘அந்தப் பெண்ணைத்தான் கட்டிக்குவேன்’ என்று அடம் பிடிக்கிறீர்களே, அதே அளவு காதல், வாழ்க்கை லட்சியத்தில், கொண்ட கொள்கையில் இருக்க வேண்டாமா? லட்சியங்களைக் காதலியுங்கள்.
12p6.jpg
‘காதலே வேண்டாம்’ என்று சொல்லவில்லை. அதைக் கேலி செய்யவும் இல்லை. ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலைத் தவிர வேறு நினைவில்லாமல் இருக்கிறீர்கள். ‘கல்யாணம் பண்ணிவைக்கலைனா, நாங்க ஓடிப்போயாவது கல்யாணம் பண்ணிப்போம்’ என்று சொல்வதில் உள்ள உத்வேகத்தை உங்களின் இலக்கில் வையுங்கள். இலக்குதான் முக்கியம். அதற்குக் கல்வி, விவசாயம், விஞ்ஞானம், சினிமா, அரசியல் என்று எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி தன் இலக்கில் மையல் கொண்டு அதில் உச்சம்தொட்டு சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாகத் தன்னைச் செதுக்கிக்கொண்ட சிலரை வாரம் ஒருவராக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தன் ஓய்வூதியப் பணம் முழுவதையும் தானம் செய்த பாலம் கல்யாணசுந்தரம், மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட மாற்றுத்திறனாளி ஆயக்குடி ராமகிருஷ்ணன், தமிழகத்தில் விஷுவல் கம்யூனிகேஷன் கல்விக்கு வித்திட்ட ‘விஸ்காம்’ காட்ஃபாதர் எளியவர் லயோலா கல்லூரிப் பேராசிரியர் ராமு என... இவர்களில் உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான இப்படிப்பட்ட பெரியவர்களும் இருப்பார்கள்; அறிமுகமாகாத இளைஞர்களும் வருவார்கள். இப்படிப்பட்டவர்களை வாரம் ஒருவராக அறிமுகப்படுத்துகிறேன். வாருங்கள் இலக்கு நோக்கி நகர்வோம்...


12p9.jpg

பாருங்கள்... படியுங்கள்!
12p8.jpg
‘ஸ்பார்ட்டகஸ்’. வரலாற்றைத் தொடர்ந்து வாசிப்பவன், திரைத்துறையை நேசிப்பவன் என்ற அடிப்படையில் இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். இது எடுக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1970-களில்தான் எனக்கு அறிமுகமானது. ‘ஏதாவது பழைய படம் பார்க்கலாம்’ என்று நினைத்துப் பார்த்த பழைய படம். ஆம் என்னைப் புதிய மனிதனாக்கிய பழைய படம். அந்தப் படம் பற்றிய சிந்தனை, அந்த வரலாறு பற்றிய வாசிப்பு... என்று என்னுள் வேறொரு உலகம் திறந்தது. அந்தக் கதைநாயகன், என் வரலாற்றுக் கதாநாயகன் ஆகிறான்.

ஆம். அந்த அடிமை ஸ்பார்ட்டகஸ் வென்றிருந்தால், ஜீசஸ் க்ரைஸ்ட் வேறு பேசியிருப்பார். அவர் வேறு பேசியிருந்தால், கார்ல் மார்க்ஸ் வேறு புத்தகம் எழுதியிருப்பார். அவர் வேறு புத்தகம் எழுதியிருந்தால், இது வேறு உலகம். அந்த ஓர் அடிமையின் புரட்சி தோற்றுப்போனதால், நாம் ஓராயிரம் வருடங்கள் பின்தங்கிவிட்டோம். அடுத்து அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தை எரித்ததனால் இன்னும் 500 ஆண்டுகள் பின்தங்கிவிட்டோம். ‘அதை எரிக்காமல் இருந்திருந்தால் 500 ஆண்டுகளுக்கு முன்பே சந்திரனுக்குப் போயிருப்போம்’ என்கிறார்கள். ஆம், இப்படி கல்வியையும் மக்களின் எழுச்சியையும் அசிங்கமாகக் கட்டுப்படுத்திவிட்டோம் என்றால், அதைவிடப் பெரிய வீழ்ச்சி வேறெதுவும் கிடையாது. அதற்கு சோக உதாரணம் ஸ்பார்ட்டகஸ். வெற்றி, தைரியம், இழப்பதற்கு ஏதுமில்லை... இப்படியான பொதுவுடமை வாசகங்களுக்கு முழுப் பொழிப்புரை ‘ஸ்பார்ட்டகஸ்’.

இந்த வரலாற்றை எழுதியவர் ஹோவர்ட் ஃபாஸ்ட். இதற்குத் திரைக்கதை எழுதியவர் டால்டன் ட்ரம்போ. இவரை அமெரிக்காவே இப்போது பெரிய ஹீரோவாகக் கொண்டாடுகிறது. என் உதவி இயக்குநர்களுக்கு நான் எப்போதும் பரிந்துரைக்கும் படம். இப்போது உங்களுக்கும். பாருங்கள், அதைப்பற்றிப் படியுங்கள்!

https://www.vikatan.com

தொடரும்.....

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2

கமல்ஹாசன்

 

ரு வாரமாகக் கடும் காய்ச்சல். வழக்கமான காய்ச்சல்தான். சென்னை நகரவாசிகளுக்குப் பழகிப்போன காய்ச்சல். இங்கு சாதி மத பேதமின்றி அரசாங்க உதவியுடன் தவறாமல் வருடா வருடம் விநியோகிக்கப்படுவது தொற்று நோய்தான். கோடீஸ்வரனாகவே இருந்தாலும், சாக்கடைக்கு ஒன்றரை கிலோமீட்டர்தாண்டி வாழ்ந்துவிடமுடியாத அளவுக்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஊழல் மாநகர் சென்னை. இது அரை நூற்றாண்டுக் காலமாய்ப் பெருகிவரும் மாசு. இன்று சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினால் இதைச் சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை வருவதற்கே 20ஆண்டுகளாகும். நிற்க.

சாக்கடையாற்றின் (பழைய அடையாறு) அருகே  செவாலியே சிவாஜி அவர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் நண்பர் ரஜினி அவர்கள் பேசியதற்கான என் விளக்கம். இது, ‘ரஜினிக்குக் கமல் சூளுரை’ பாணி விளக்கம் அல்ல. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவரும் அப்படி எடுத்துக்கொள்ளமாட்டார். ஏனெனில் எங்களுக்குள் உள்ள  நட்பு,  மூன்றாமவர் புகுந்து கெடுத்துவிட முடியாத புரிதல். ‘வாங்க ரஜினி, வாங்க கமல்’ என அறிமுகமாகி,  காலப்போக்கில் ‘வா... போ...’ என்று நெருங்கி,  இன்று மீண்டும் ‘வாங்க... போங்க’வில் வந்து நிற்கிறோம். அப்படியென்றால் இருவருக்குமான அந்த ‘வா போ’ இணக்கம் இப்போது இல்லையா என்று கேட்டால், அப்படி அல்ல. இருவரும் ஒருவர்மீது மற்றவர் கொண்ட மரியாதையால்... பிற்காலத்தில் பெரிய மனிதர்களாக மாறக்கூடும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்துகொண்டு ஆயத்தமானது, இந்த வயதை எட்டியபின் திரும்பிப்பார்த்தால் எங்களுக்கே வியப்புதான்.

8p1.jpg

தற்போது, மணிமண்டப விழா மேடைக்கு வருகிறேன்.  ‘`இதை நீங்கள் அவரை அலைபேசியில் அழைத்தே பகிர்ந்திருக்கலாமே’’ எனப் பலருக்குத் தோன்றலாம்.  விளக்கம் பொழிப்புரையெல்லாம்  எங்களுக்குத் தேவையில்லை; இந்த விளக்கம் புரியாதவருக்கானது. அதனால் இங்கே பகிர்கிறேன். ‘`சிவாஜி சார் சினிமாவுல மட்டும் அல்ல. அரசியல்லயும் அவருடைய ஜூனியர்ஸுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கார். தனிக்கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நின்னு அவருடைய தொகுதியிலேயே அவர் தோத்துப்போயிட்டார். அரசியல்ல வெற்றியடையணும்னா சினிமா, பேர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தா போதாது. அதுக்கு மேல ஒண்ணு ஏதோ இருக்கணும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்குச் சத்தியமா தெரியாது. கமல்ஹாசன் அவர்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தாலும் எனக்குச் சொல்லமாட்டார்.  ‘நீங்க என் திரையுலக அண்ணன்.  நான் உங்க தம்பி. என்கிட்ட சொல்லணும்’னு கேட்டா, ‘நீ என் கூட வா. சொல்றேன்’ என்கிறார்.’’ இதுதான் அன்று  ரஜினி அவர்கள் மேடையில் சுருக்கமாகப் பேசியதன் சுருக்க வடிவம்.
8p9.jpg
எனக்கு இதில் சில கேள்விகள் எழுகின்றன. இதை மக்களிடம் பகிர்தல் கடமை என்பதால் பதிகிறேன். அரசியலில் வெற்றி என்றால் என்ன? தனிக்கட்சி தொடங்கி, அடுத்து வரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, பெரும்பான்மையான இடங்களில் வென்று, முதல்வராகவோ, பிரதமராகவோ ஆவதா? அதையே வெற்றியாக வைத்துக்கொண்டாலும் அந்த வெற்றிக்கான அர்த்தம் என்ன? வெற்றிபெறவைத்த மக்களை, கையேந்த விடாமல் சுயமரியாதையுடன் வாழவைப்பதுதானே? ஆனால், இங்கு  அரைநூற்றாண்டு வெற்றிகளை வைத்து, கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் எத்தனை பேரை மேம்படுத்தியிருக்கிறோம்? சிலர் மேம்பாடு அடைந்திருக்கிறார்கள் என்பீர்கள். நான் பெரும்பான்மையான மேம்பாட்டைக் கேட்கிறேன். ஆனால், அப்படி யாரும் மேம்பாடு அடைய வில்லை என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். அப்படியெனில் அவர்களின் வெற்றி என்பதே அர்த்தமற்றுப்போகிறது என்றுதானே பொருள். இந்த வகையான வெற்றியை யார் பெற்றிருந்தாலும், அப்படி ஒரு வெற்றி தேவையே இல்லை என்பதே என் கருத்து.

ஆனால், உண்மையான வெற்றி எது என்று சொல்லவா? அரசியலில் இருந்தும் தேர்தலில் போட்டியிடாத கிழவனார் காந்தி, பெரியவர் பெரியார் இவர்களின் வெற்றிதான் காலா காலத்துக்கும் நிலைத்திருக்கும் வெற்றி. நீங்கள் சொல்லும் வெற்றியாளர்கள் எத்தனையோ பேரை மக்கள் மறந்தும் காலப்போக்கில் மறுத்துமிருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் போட்டியிட்ட திரு. அம்பேத்கர் கண்டது தோல்வியல்ல, ஒரு மாபெரும் சரித்திரத்தின் ஆரம்பம். ஆனால், இவர்கள் மூவரையும் மறக்கவோ மறுக்கவோ முடியுமா? இவர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். மதவாத சக்திகளுடன் இங்கு மல்லுக்கட்டுவது யார்? நீங்கள் சொல்லும் வெற்றியாளர்களா? பெரியார் தந்த பகுத்தறிவுதானே  அவர்களிடமிருந்து நம்மைக் காக்கிறது.  இந்த மூவர் வரிசையில் யோசிக்காமல் சேர்க்கவேண்டிய இன்னுமொரு பெயர், ஆர்.நல்லக்கண்ணு. சுருக்கமாக தோழர் ஆர்.என்.கே. இவர் நின்ற தேர்தல்களில் ஒன்றில்கூட வென்றதே இல்லை. ஆனால், இந்த வயதிலும் பொதுநல வழக்கு, மக்கள் மேம்பாடு என்று பயணித்துக்கொண்டே இருக்கிறாரே, எதற்கு... நீங்கள் சொன்ன வெற்றியை மக்கள் அவருக்குத் தருவார்கள் என்றா? அவர் தன்னையும் வென்று மக்கள் மனங்களையும் வென்று வெகுநாள்களாகிவிட்டன. மக்களுடன்  ஆத்மார்த்தமாக உரையாடும் அவரின் அந்த அன்புதானே அரசியலின் உண்மையான வெற்றி. என்னைப் பொறுத்தவரை ‘அரசியல் வெற்றி’ என்பது இதுதான். பேரவை உறுப்பினர், முன்னவர், பின்னவர், முதல்வர் ஆவதெல்லாம்  அந்த வெற்றியை உறுதிப்படுத்தத் தேவையான கூடுதல் சமாசாரங்கள்தான். 

காந்தியைப் பற்றிப் பேசும்போது இங்கே இன்னொரு விஷயத்தையும் பேசிவிடுகிறேன். ஊரே கூடி ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. `‘ஊழல்... ஊழல்னு கமல் சொல்றான். எங்க, அவனை நிரூபிக்கச் சொல்லுங்க பார்ப்போம்’’ என்கிறார்கள். அதையெல்லாம் நிரூபித்து, ஒருவர் ஜெயிலில் இருக்கிறார், இன்னொருவர் ஜெயில் வாசம் தப்பி, காலமாகிவிட்டார்.

8p2.jpg

நான் இப்போது சொல்லவருவது குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களின் படத்தை அரசாங்க அலுவலகங்களில் வைப்பதைப்பற்றி. திரு.ஸ்டாலின் தொடங்கிப் பலரும் எதிர்ப்பு தெரிவித்த ஒரு செயல் அது.

என் அளவில் யோசித்ததில், அவர்களது ஆட்சி, அவர்கள் அம்மா. அவர் படத்தை வைத்துக்கொள்ளட்டும். ஆனால், தயவுசெய்து எங்கள் காந்தி படத்தை மட்டும் அங்கே வைக்காதீர்கள், எடுத்துவிடுங்கள். ஏனெனில், அதற்கு உடந்தையாக இருந்தோம் என்பதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள், ஏதோ காந்தியும் உடந்தை என்பதைப்போல அவர் படத்தை வைத்திருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை.

அடுத்து இன்னொரு விஷயம், ‘`மாநில அரசைக் குறைகூறும் நீங்கள், இவர்களை ஆட்டுவிக்கும் மோடியைப் பற்றியோ, மத்திய அரசைப்பற்றியோ குறை சொல்ல மாட்டேங்குறீங்க...’’ இது என் மீது வீசப்படும் வசவு. இதை ஏன் வசை என்கிறேன் என்றால், விமர்சனம் என்பது ஒருவனை, ஓர் அரசை, ஓர் அமைப்பைத் திருந்தச் சொல்வது. ஆனால், வசவு என்பது அவனை, அரசை, அமைப்பைக் காயப்படுத்த வீசப்படும் கற்கள் போன்றது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைத்து அதைப்பற்றியே பேசி, அதை உண்மையாக்க முயலும் அயோக்கியத்தனம். அப்படித்தான் என் தாடையில் திரு. மோடி தாடியை ஒட்டும் முயற்சியும் நடக்கிறது.

‘`கறுப்புச் சட்டையை நீ போட்டுக்க. இப்போதைக்கு இதுவா நடிச்சிக்க’’ என்று டெல்லியிலிருந்து சொல்கிறார்களாம். அதனால நான் கறுப்புச் சட்டை போட்டிருக்கிறேனாம். என்னை நோக்கி இப்படி ஒரு  குற்றச்சாட்டு. காந்தியைக்கூட பிரிட்டிஷாரின்  கூலி  என்று   சொன்னவர்கள்தானே இவர்கள். அதனால் இவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இவர்களின் பலவீனத்தை மத்திய அரசு மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அவ்வளவு ஏன், இடைத்தரகர்கள் எல்லாம் பயன்படுத்துவார்கள். அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இது மாநில உரிமைக்கே பேராபத்து. அப்படியென்றால் இங்கே பலமான அரசு அமைய வேண்டும். அதற்கு முதலில் இவர்கள் போக வேண்டும்.

நான் சொல்வதை நன்றாக யோசித்துப்பாருங்கள். மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசுடனான பிணக்குகள் உண்டு. ஆனால், அவர்கள் மத்திய அரசுடன் இந்தளவுக்குத் தொடர்பற்றுப் போய்விடவில்லை. ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேச சந்திரபாபு அவர்கள் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்  அல்லர். ‘சாமி கும்பிடுகிறார்கள்’ என்பதுதான் அவர்களுக்குள் உள்ள ஒரே ஒற்றுமையே தவிர, மற்றபடி மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள். அவர்கள் மையத்துடன் எப்படி இணக்கமான தொடர்பு வைத்திருக்கிறார்கள் பாருங்கள். மற்றபடி அவர்களுக்குள் விவாதங்கள் நடக்கின்றன. கேட்கவே வேண்டாம், கேரளா நேரெதிர். ஆனால், மாநிலத்துக்கு வேண்டியவற்றை அழுத்திப்பேசி வாங்கிவிடுகிறார்கள்.

8p3.jpg

இப்படி நேரடியான, நேர்மையான தொடர்பு இருந்திருந்தால் இந்தளவுக்குத் தொட யோசிப்பார்கள். ஜெயலலிதா அம்மையார் இருந்தபோதுகூட மத்திய அரசுடனான தொடர்பு நேர்மையாக இருந்ததில்லை. ஆனால், ஏன் அவர்கள் இப்போதுபோல் அப்போது தொடவில்லை. ஏனெனில் பயம். ‘என்னத்துக்கு வம்பு’ என்ற பயம். இன்று அந்த அம்மையாரும் இல்லை, அவர்களுக்கு பயமும் இல்லை. ‘அப்படித் தொட்டாலும் ஒன்றும் சிக்காது’ என்று சொல்ல இங்கு உள்ளவர்களில் நேர்மையாளர்களும் இல்லை. இங்கு ஆள்பவர்கள் ஒவ்வொருவரும் தன் ஆதியையும் அந்தத்தையும் அவர்களிடம் அடகு வைத்துவிட்டு இங்கு  நாடகமாடி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தவறு என்றால், இவர்களை ஆட்டுவிக்கும் அவர்கள் சரியா என்று கேட்டால் ‘சரியில்லை’தான். ‘மாட்டுக்கறி’ முதல் ‘மதச்சார்பு’ வரை பல விஷயங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை நான்  விமர்சித் திருக்கிறேன். ஆனால் ‘இல்லவே இல்லை’ என்பார்கள் வசை பாடுபவர்கள். பரவாயில்லை. நான் கறுப்புச் சட்டை போட்டதால் என் கரியர் முழுவதும், நாற்பது வருடங்கள் மக்கள் அறிய என் இறை மறுப்பைச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அதனால் எனக்கு 10 ரூபாய் லாபம் என்று யாராவது சொல்லட்டும்? அதற்கு வாய்ப்பு உண்டா? இந்த யுகத்தில் இப்படிப் பேசுவதில் இருக்கக்கூடிய நஷ்டங்கள்தான்  எனக்கு அதிகம். இருந்தாலும் விடாமல் பேசுகிறேன் என்றால், ஏதோ நான் நம்புகிறேன் என்றுதானே அர்த்தம். ‘இதுதான் என் வாழ்க்கை முறை’ என்று எனக்குத் தெரிந்த அளவில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.  வேறு யாரையும் ‘இப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு. ஊரைவிட்டே துரத்திவிடுவேன்’ என்ற தொனியில் பேசியிருக்கிறேனா?
8p6.jpg
அதேபோல இந்து மதம் குறித்த என் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு, ‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். மற்ற மதங்களைப் பற்றி எந்த விமர்சனமும் நீங்கள் செய்வதில்லையே’ என்று கேட்கிறார்கள். இந்த மதம் என் நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு மற்ற மதங்கள் கெடுப்பதில்லை என்பதால்தான் இதை விமர்சிக்கிறேன். சதுர்வர்ணம் பிரித்தது கிறித்தவமோ இஸ்லாமோ இல்லையே. அதற்கான குறைகளைத்தான் சாடினேன்; சாடுகிறேன்; சாடிக்கொண்டே இருப்பேன்.

அடுத்து, அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வரவேண்டும் என்பது உலகத்தில் தொடர்ந்து நடந்துவரும் முயற்சிதான். எல்லா விஷயங்களிலும் அதற்கு எதிர்ப்புக்குரல் சொல்லி ப்ரொட்டெஸ்ட் பண்ணுபவர்கள்தான் ப்ராட்டெஸ்ட்டென்ட்.  அவர்களே பெரிய பக்தர்கள். ஆனால், பகுத்தறிவாளர்கள் அந்தக் கேட்டகிரியில் கிடையாது. நாங்கள் வேறு. யுவால் ஹராரே தன் ‘சேப்பியன்ஸ்’ நூலில், மனிதக் கூட்டுறவுக்கு ஒரு புராணம், மித்தாலஜி வேண்டியிருக்கிறது’ என்கிறார். ஒரு காவியம், ஒரு கதை தேவைப்படுகிறது என்கிறார். இல்லாத, மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்லும்போது இன்னும் உத்வேகத்தோடு மக்கள் கூடுகிறார்கள். அதை நம்புகிறார்கள். ‘மழைக்காக யாகம் பண்ணுவோம். அனைவரும் வாருங்கள்’ என்றால் வருகிறார்கள். ‘மரம் நட வாருங்கள்’ என்று அழைத்தால், ‘எப்ப நட்டு, அது எப்ப முளைச்சி...’ என்ற எண்ணத்தில் தயங்கி மயங்குகிறார்கள். 

‘ஜஸ்டிஸ் ஃபார் ஆல். அதாவது அனைவருக்கும் சம நீதி என்று சொல்வதே உட்டாலக்கடி’ என்று அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறார் யுவால் ஹராரே. ஆனால், அதை நம்பித்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று சொன்னால் நம்புகிறார்கள். ‘அது எப்படி அப்படி இருக்க முடியும். இது நடக்கவே நடக்காது’ என்று தெரிந்திருந்தும் அந்தக் கருத்துக்காக உயிர்த்தியாகம் பண்ணவும் பலர் தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில்தான் ‘ஒரு குடையின் கீழ்’ என்பது எங்கேயோ நமக்குப் பிடித்திருக்கிறது. இல்லையென்றால், அவர்களால் இவ்வளவு பெரிய குடையை விரித்திருக்கவே முடியாது. ஆனால், இந்தப் பெரிய குடைப்பெரும்பான்மைக்கு எதிராக, எப்போதும்  குரல்கள் எழுந்துகொண்டேதான் இருக்கும். அந்தக்குரல் எங்கிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல. அக்ரஹாரத்திலிருந்துகூடக் கடும் எதிர்ப்புக்குரல் வந்திருக்கிறது என்பது வரலாறு.

8p4.jpg

டெல்லி பற்றி இன்னொரு விஷயத்தையும் சொல்லத் தோன்றுகிறது. இங்கு யார் வந்தாலும் சென்ட்டரைப் பகைத்துக்கொள்கிறார்கள். ‘அது நாம் வைத்த வட்டம்... என்னுடைய பார்லிமென்ட்’ என்ற எண்ணம் இங்கு வந்தாக வேண்டும். அடுத்து, எந்தக் கட்சி வந்தாலும் யாராக இருந்தாலும் டெல்லி என்பது ஒரு விதேசம் என்று நினைக்கக்கூடாது. லாகூர், அதற்கடுத்து டெல்லி என்ற நினைப்பு கூடாது. கராச்சி, டெல்லி என்ற இரண்டு தலைமையகங்கள் இருக்கின்றன என்று அவர்களைப் பற்றிய அந்நிய எண்ணமோ, பய நினைப்போ கூடாது.  ‘டெல்லி, நார்த் இண்டியன்ஸ் நடத்தும் இடம்’ என்கிற  எண்ணம் இங்குள்ள பெரும்பான்மைக்கு இருக்கிறது. ஆனால், ‘டெல்லி, நான் நடத்தும் இடம். நீங்கள் நடத்தும் இடம்’ என்ற எண்ணம் வரவேண்டும். அதனுடன் சுமுகமான உறவு இருந்தே ஆகவேண்டும். நீங்கள் சித்தாந்தத்தில் வேறுபடுங்கள். ஆனால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கவேண்டும். அது அடிபட்டுப்போனதால்தான் இவர்கள் அங்கே போய் ‘பெப்பே’ என்று வார்த்தைகளின்றி  வழிந்துவிட்டுத் திரும்பி வருகிறார்கள். அதனால், அவர்களும் இவர்களை எடுப்பார் கைப்பிள்ளைபோல் இடது கையால் டீல் செய்கிறார்கள்.  இதனால்தான் இவர்களைப் பின்னணியில் இருந்து அவர்கள் நடத்துகிறார்கள் என்கிறோம். மீண்டும் சொல்கிறேன், இவர்களைக் காசும், அரசியல் அதிகாரமுமுள்ள யார் வேண்டுமானாலும் நடத்தலாம்.  இவர்களை துட்டும் அதிகாரமும் நடத்துகின்றன.

பிரேக்கிங் நியூஸ் பரபரப்பில் நாம் அனிதாவை மறந்துவிட்டோம். அடுத்த வருட ‘நீட்’ பற்றிய கவலைகள் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. அடுத்த வருட அனிதாக்களை  நீட்டுக்கு எப்படித் தயார் செய்யப்போகிறோம்? இல்லை, நீட்டே இல்லாமல் செய்யப்போகிறோமா என்பது பற்றி எந்தப் பேச்சும் எங்கும் இல்லை. ஆனால், இன்று எங்கெங்கு காணினும் அந்த ஐந்து நாள் பரோல் பற்றிய பேச்சுகள்தான்.

நீங்கள் ஜி.எஸ்.டிக்குக் கொடுத்த முன்னேற்பாடும் முன்னறிவிப்பும் முக்கியத்துவமும் ‘நீட்’டுக்கும் கொடுத்திருக்க வேண்டாமா? ஒன்றுமே தெரியாத மூன்று தலைமுறையாகப் படிப்பறிவு மறுக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை 1,176  மதிப்பெண் வாங்குகிறது என்றால் அவளுக்கு ‘நீட்’ கஷ்டமாகிவிடுமா என்ன? அந்தப் பிள்ளையிடம், ‘இதற்கு இப்படிப் படிக்க வேண்டும்’ என்று நீங்கள் வழிமுறை சொல்லியிருந்தால் ‘படிக்கமாட்டேன்’ என்றா சொல்லியிருப்பாள்? அதற்குத்தானே அந்தப்பிள்ளை தயாராக இருந்தாள். ஆனால், அதைப்பற்றி நீங்கள் அவளிடமும் எங்களிடமும் முன்பே உரையாற்றியிருக்க வேண்டும். திடீரென உயிர்க்கொல்லி மருந்துபோல அதை எங்கள்மீது தெளிக்கக்கூடாது.

‘நீட்’ மட்டுமல்ல, இந்த நாட்டின் கல்வியையே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அது பெரும் கனவு. ‘நிறைய புத்தகம் படித்தால் நிறைய அறிவு’ என்று எங்கள் பிள்ளைகளை பயமுறுத்துகிறார்கள். அதை நான் மறுக்கிறேன். அடுத்து, அனைவரையும் சகலகலா வல்லவனாக்கும் முயற்சியை வெறுக்கிறேன். அவர்களுக்கு ஆர்வம் இல்லாத பாடத்தில், துறையில் வல்லமை வரவே வராது. போதும் பொறியாளர்கள். உலகத்தில் இத்தனை லட்சம் பொறியாளர்கள் தேவை என்றால், அவ்வளவு தேவைகளையும் விஞ்சி தமிழ்நாடே கூடுதல் பொறியாளர்களைத் தயாரித்து வைத்திருக்கிறது.

அப்படியிருக்கையில் எப்படி வேலை கிடைக்கும்? எனக்குத் தெரிந்து ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான ஆர்வமும் உழைப்பும் இருக்கும். அதை மனதில்வைத்து அவர்களுக்கான தனித்திறனை மேம்படுத்தச் சிறப்புப்பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதற்கு வருடக்கணக்கில் நாள்கள் தேவைப்படாது. தனித்தனியாக வைத்துப் பண்ணிவிடமுடியும். உதாரணத்துக்கு, நான் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கட்டடங்கள். ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான வீடுகள். உள்ளே லட்சக்கணக்கான குடிநீர், குளியல் குழாய்கள். ஆனால், இங்கு நன்கு பயிற்சிபெற்ற பிளம்பர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எடுப்பார் கைப்பிள்ளைகளாக அந்த வேலைகள் கதறிக்கொண்டு காத்திருக்கின்றன.

இன்று முடிவெட்டிக்கொள்ளாத ஆள்கள் யாராவது இருக்கிறார்களா? ‘எனக்கு நானே முடிவெட்டிக் கொள்கிறேன்’ என யாரும் செய்வதில்லை. ஆறு கோடிப் பேருக்கு முடிவெட்டியாக வேண்டும் என்றால், இது எவ்வளவு பெரிய தொழில். அந்த வேலையை நானும் செய்திருக்கிறேன். ஆனால், அதைச் செய்ய இன்று ஆள் இல்லை. எனக்குத் தெரிந்த சிலர் மாதம் லட்ச ரூபாய் சம்பளத்தில் எல்லாம் அந்த வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் இதே சம்பளத்துக்கு ஆட்கள் தேவை. ஆனால், பயிற்சிபெற்றவர்கள் இல்லை என்கிறார்கள்.

8p7.jpg

கிராமத்தில் எத்தனையோ இளைஞர்கள் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, ‘அதற்கேற்ற வேலை கிடைத்தால்தான் போவேன்’ எனக் காத்திருக்கிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும் செய்வதில் தவறில்லை. ஆனால், நான் சொல்வது குலத்தொழிலை அல்ல. ‘எங்கப்பா செஞ்சார், அதுக்காக நான் செய்கிறேன்’ என்று செய்யாதீர்கள். அது வேறுவழி. அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பரம்பரைத்தொழிலில் இஷ்டம் இருந்தால் செய்யுங்கள். அப்படிப்பார்த்தால் நான் வக்கீலாக வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், புரோகிதம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவற்றில் எனக்கு ஆர்வம் இல்லை.

சில கலைத்தொழிலாளர்களை ஊருக்குள் விடாமல் மந்தைவெளிகளில் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த வம்சத்துக்குள்போய் நான் சேர்ந்துகொண்டேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ‘இவ்வளவு சம்பளம் கொடுத்தா நாங்ககூடத்தான் சந்தோசமா வருவோம்’ என்று சிலர் கேலி பேசலாம். நான் வரும்போது அவ்வளவு கொடுக்கவில்லையே. `அரங்கேற்றம்’ படத்தில் 60 நாள்கள் வேலைக்குப் போனேன். சம்பளம் 500 ரூபாய். நான் சேர்ந்த புதிதிலும் கூத்தாடி என்றுதானே கேலி பேசினார்கள். சினிமா உலகிலிருந்து பல முதல்வர்கள் வந்தபிறகும் அப்படித்தானே பேசுகிறார்கள். பேசுபவர்கள் பேசட்டும், தொழிலில் அவமானமே கிடையாது. ‘தெர்மாகோல்’ தொழில்நுட்ப வாதிகள்  தொழில் சார்ந்த பயிற்சிப்பட்டறைகள் இதுவரை எத்தனை நடத்தியிருக்கிறார்கள்? 

ஆனால், இவை எவற்றையும் மனதில் கொள்ளாமல் அதே கூவத்தூர் மனநிலையிலேயே இவர்கள் இருப்பது எங்கு கொண்டுபோய் விடும் தெரியுமா? ‘ஓ அப்படித்தான் போலிருக்கு உலக நடப்பும். இனி இதில் என்ன அடிச்சு எடுக்க முடியுமோ எடுக்கலாம்’ என மக்களும் நினைத்துவிட்டால், நாம் எப்படிப்பட்ட கூட்டமாக மாறுவோம். நான் என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

‘இதை நேற்றே ஏன் பேசவில்லை’ என்கிறார்கள். பேசியிருக்கிறேன். அன்று என்னைவிடப் பெரிய குரல்கள் இருந்ததால் அந்தச் சத்தம் போதவில்லை. ஆனால், இன்று என்னைப்போல் பல குரல்கள் சேர்ந்து கேட்கும்போது, அவை ஒரே பெரிய குரலாக உங்களுக்குத் தெரிகிறது. அதற்கு உங்களால் பதில் பேச முடியாத நிலையில் இருக்கிறீர்கள். அதனால், கேள்விக்கு மறுப்பு சொல்வதை விட்டுவிட்டு, ‘இவன்ட்டல்லாம் போய்...’ என்று தரம்தாழ்ந்து சத்தம் போடுகிறீர்கள். எம்.ஜி.ஆர் எந்தக் காலகட்டத்திலாவது தரம்தாழ்ந்து பேசியிருக்கிறாரா? அதேபோல், அண்ணாவும் சரி. தரம்தாழ்ந்து பேசுபவர்களை அதட்டுவார்கள். அந்தத்தன்மைகள் குறைந்துகொண்டே வருகின்றன.

‘`அம்மா செத்துப்போனதுல இருந்து இந்த ஆட்சி வேண்டாம் வேண்டாம்னு இந்தாளு சொல்லிக்கிட்டே இருக்கார்’’ என்கிறார்கள். நான் மட்டுமா சொல்கிறேன், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் சொல்கிறது. அவர்களுக்குக் காதுகொடுத்திருந்தால், அண்ணாயிசத்தைப் படித்திருந்தால், இந்நேரம் நீங்கள் ஆட்சியை விட்டு இறங்கியிருப்பீர்கள். ‘அண்ணாயிசமா’ என்று உங்களில் பலர் அதிர்ச்சியாவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

‘குடும்பத்துடன் பார்க்கவேண்டிய அனைவரையும் மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படம்...’ என்ற அறிவிப்பு சினிமா போஸ்டர்களில் இருக்கும். ஆனால் படம், குடும்பத்துடன் பார்க்க முடியாதவாறு இருக்கும். டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்த்து முடித்தபிறகு ‘ஏன் அப்படிச் சொன்னீர்கள்’ என்று கேட்கமுடியாது. இ்ன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கை விளக்கங்கள், தேர்தல் அறிக்கைகள் அப்படித்தான் உள்ளன.

8p5.jpg

ஆனால், எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வின் கொள்கை விளக்கத்தை ‘அண்ணாயிசம்’ என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார். அதில் மொழி, அரசியல், பொருளாதாரம், நெசவாளர், விவசாயம்... எனப் பல துறைகளுக்குமான தங்களின்  அரசியல் கொள்கைகளைக் குறிப்பிட்டிருந்தார். அவர் அதை வெளியிடும்போது, ‘இது பத்தவே பத்தாது’ எனச் சொல்லி அண்ணாயிசத்தைக் கிண்டலடித்தனர். முக்கியமாக, கிண்டலடித்தவர் சோ. ஒருவேளை அது வக்கீல் மொழியில் இல்லாமல் பாமர மொழியில் இருந்ததால்கூட அது கிண்டலுக்கு உள்ளாகியிருக்கலாம். 395 ஷரத்துகளுடன் கூடிய இந்திய அரசியலமைப்பைப் படிக்கும்போது அவர் வெளியிட்டது சின்ன புத்தகம்தான். ஆனால், அவருக்கு நிறைய ஆசைகள் இருந்தன என்பதை அண்ணாயிசத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.  நடக்கும், நடக்காது, இயலும், இயலாது எனப் பல விஷயங்களை அதில் ஆசைப்பட்டுச் சொல்லியிருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் எதையுமே அவருக்குப் பிறகு வந்தவர்கள் கடைப்பிடிக்கவில்லை. கட்சியின் கொள்கை விளக்கப்புத்தகம் வேர்க்கடலை மடிக்கும் பேப்பர் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆசையைக்கூட நிறைவேற்றுவதற்கான முயற்சியை எடுக்கவில்லை, தற்போதைய ஆட்சியாளர்கள்.

அதில் குறிப்பிட்டிருக்கும் ஒரு முக்கியமான கொள்கை விளக்கக் குறிப்பை அவர் வார்த்தைகளிலேயே சொல்கிறேன்...

‘மக்களாட்சித் தத்துவத்தில் மக்களே இறுதி எஜமானர்கள். அவர்களால் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ அல்லது அதுபோன்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற எல்லா அமைப்பு முறைகளிலும் மக்கள் பிடிப்பு இறுதியானது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்போது, அல்லது மேற்கொள்ளப்பட்ட கடமைகளிலிருந்தோ, பொறுப்புகளிலிருந்தோ வழுவிவிடும்போது அவர்களைத் திருப்பி அமைக்கின்ற உரிமை, அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதற்கு வழிவகை செய்யத்தக்க முறையில் இன்றைய அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் தேவை என்று அண்ணா தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.’

அதாவது, தாங்கள் தேர்ந்தெடுத்த ஓர் எம்.எல்.ஏ, ஓர் எம்.பி-யின் மீது  அவருக்கு வாக்களித்த மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால், அவரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை. அப்படியென்றால் டாஸ்மாக், நீட், ஹைட்ரோ கார்பன், குடிநீர்த் தட்டுப்பாடு... இப்படி எங்கெங்கு காணினும் போராட்டம், ஆர்ப்பாட்டம். கூடவே ஊழல், குதிரை பேரம்... என்று ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட, எம்.ஜி.ஆரின் பெயரைச்சொல்லி ஆட்சி நடத்தும் இவர்கள் ‘அண்ணாயிச’த்தின்படி இந்நேரம் ஆட்சியைத் துறந்திருக்க வேண்டும்.

‘எம்.ஜி.ஆர் சொன்னதற்கு இப்ப என்ன வேல்யூ, அவர்தான் இல்லையே’ என்று கேட்கலாம். அவர் உருவாக்கி வைத்த கட்சி இருக்கிறதே. அவரின் பெயரைச் சொன்னால் வீறுகொண்டு எழுபவர்கள் யாரும் கட்சிப் பொறுப்புகளில், ஆட்சியில் இல்லாமலிருக்கலாம். இவர்களை எழுந்து உட்காரவைக்கக்கூடிய விஷயம் பதவியும் பதவிமூலம் வரக்கூடிய பொருளும் என்று மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

இந்தச் சோகத்தை, துரோகத்தை அவர்களின் கூடாரத்துக்குள் போய்த்தான்  பேசியாக வேண்டும். அந்தக் கூடாரத்தை எந்த உலோகத்தை வைத்துச் செய்திருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அது எஃகாக இருந்தாலும் சரி, இரும்பாக இருந்தாலும் சரி, எதில் கட்டியிருந்தாலும் அதை உருக்கி வேறொரு அரசியல் கருவி செய்துவிடவேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது. அதை மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைச் சொல்ல நீ யார் என்று கேட்கும் ஆட்சியாளர்களுக்கு என் பதில்: நான் மக்களில் ஒருவன், அவர்களே நான்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்!”

 

`ட்விட்டர் அரசியல் செய்கிறார்’ என்று என்னைப்பற்றிச்  சிறு கிண்டல் ஒன்று பரவலாக உள்ளது. 20-ம் நூற்றாண்டில் சர்வாதிகார மன்னர் ஆட்சியில் புரட்சிக் குரல்கள் எப்படிச் சிறு பத்திரிகைகள் மூலம் சேதி  பரப்பி, பெரும் புரட்சிகள் உருவாயினவோ அவற்றுக்கு நிகரான, ஏன், அதையும்விட வலிமையான ஊடகமாக வலைதளம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இந்த உண்மையைப் பழைமைவாதிகள்கூடப் புரிந்துகொண்டுவிட்ட நேரம் இது.

அமெரிக்காவில் 29 வயது இளைஞர் கோடி ரட்லட்ஜ் வில்சன் (Cody Rutledge Wilson) என்பவர் இணையதளத்தில் 3டி பிரின்டரின்மூலம் யார் வேண்டுமானாலும் தயாரிக்கக்கூடிய, ஒரு தோட்டா  மட்டுமே  கொண்ட  கைத்துப்பாக்கியைப் பிரசுரம் செய்தார். அமெரிக்க அரசு முயன்றும் தடுக்கவியலாமல் இன்றும் Pirate Bay-ல் நிலவுகிறது, உலவுகிறது `லிபரேட்டர்’ என்ற பெயர் கொண்ட அந்தக் கைத்துப்பாக்கி. தன்னை `ரகசிய அராஜகவாதி’ (Crypto Anarchist) என்று அழைத்துக்கொள்ளும் திரு. கோடி  வில்சன்  லட்சம்  துப்பாக்கிகளுக்கான செயல்திட்டத்தை வலையில் விரித்து விவரித்துள்ளார். இது நடந்தது 2013-ல். தற்போது  இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் விற்றுக் கொண்டிருக்கிறார். அரசால்  தடுக்க முடியவில்லை. இலட்சக்கணக்கில் விற்கும் கோடி வில்சனின் துப்பாக்கிகளின் எண்ணிக்கை கோடிகளை நெருங்க வெகுநாளாகாது.

8p1.jpg

இது நிலவரம். இப்போது சொல்லுங்கள், ட்விட்டரையும் வலைதளத்தையும் புரட்சிக்கு உதவாத திண்ணைபேசிகளின் ஊடகம் என்று ஒதுக்கிவிட முடியுமா?

ஒருசிலர் அதைத் திண்ணையாகவும்,  இன்னும் சிலர் கக்கூஸாகவும் பயன்படுத்துகின்றனர். புதிதாகக் கெட்டவார்த்தை கற்ற பள்ளி மாணவன் அதை யார்மீதாவது பிரயோகப்படுத்த முற்பட்டு முடியாமல், அதை கக்கூஸ் சுவரிலாவது எழுதி அழகு பார்ப்பான். முடிந்தால் ஆசிரியர்களது கழிப்பறையிலும் இன்னொரு பிரதியை ஏற்படுத்திப் புரட்சி செய்வான். அப்படிப்பட்ட ஆரம்பப் புரட்சியில் அறைகுறையாய் ஈடுபட்ட, கக்கூஸ் வீரர்களின் கரங்களுக்கு வலுச்சேர்த்த கரங்களில் எனதும் ஒன்று. இதை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள முடியாத அசட்டுப் புரட்சி.  `இதைச் செய்திருக்க வேண்டாமே’ எனத் தோன்றும் வயது வருவதற்குள் பள்ளியில்  படிப்பே  முடிந்துவிட்டது.
8p2.jpg
கக்கூஸ் புரட்சியாளர்களின் சகோதரர்கள் ட்விட்டரிலும் முளைத்திருக்கிறார்கள். நான் விமர்சிப்பது அவர்களுடைய கருத்துகளையல்ல. முகமும் விலாசமும் தெரியாது என்ற காரணத்தினால் மட்டுமே தைரியமாய்ப் பேசும் தன்மை எத்தகையது? விலாசம் கண்டுபிடிக்க முடியாது என்பதனால் மட்டும் குற்றங்கள் புரியலாமா? இதற்குத் தன் முகத்தையும் விலாசத்தையும் பகிரங்கமாய் அறிவித்து அராஜகம் செய்யத்துணியும் திரு.கோடி வில்சனின் வீரம் மெச்சத்தக்கதே. அப்படிப்பட்ட  ட்விட்டர் போராளி அல்லவா பல்க வேண்டும். அது தேவையும்கூட. முகநூல், ட்விட்டர் வீரர்கள் மொட்டைமாடியில் நின்றுகொண்டு கீழே தெருவில் போகும் பாதசாரிகளின் தலையில் துப்பிவிட்டு ஒளிந்துகொள்ளும் சிறுபிள்ளைத்தன மில்லாமல், தைரியமாய் அநீதிகளை விமர்சிக்கும் வீரர்களாக வேண்டும். அதுவே மெச்சப்படும்.

நேர்மையான என் விமர்சகர்கள் நிறைய பேர் என் நண்பர்களானதையும், நான் அவர்கள் விமர்சனத்தை ஏற்று என்னைத் திருத்திக் கொண்டபோது அவர்களே என் ரசிகர்களாக மாறியதையும் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனத்தை எள்ளளவும் குறைக்கத் தேவையில்லை. தரம் குறையாமல் அதைச் செய்வது நல்லது. ரயில் நிலையத்தில் கத்திகளை வீசிப் பயணிகளை மிரட்டியவர்கள் கண்டிப்பாய் வீரர்கள் அல்ல. சுய சந்தோஷத்திற்காகப் பிறரை மிரட்டி விளையாடுவது சிறுபிள்ளைத்தனம் கூட இல்லை,  பொறுப்பின்மை; மனிதநேயமின்மை. பிடிபட்டவுடன் அவர்கள் கதறிய கதறலே அவர்கள் மனோபலத்தின் சான்று.

30 வருடங்களுக்கு முன்னால் பாரதப் பிரதமரை நேரில் சந்திக்கச் சென்றேன். குறைகூறி அழ, சினிமாக்காரர்களுடன் நானும் சென்றிருந்தேன். அது ட்விட்டர் இல்லாத காலம். மும்பையில் மதக்கலவரம் வெடித்துக் கைமீறிப் போயிருந்த நேரம் அது. பிரதமர் திரு. நரசிம்மராவ் அவர்கள் சற்று பட்டும்படாமலும் பாரபட்சமாகவும் பேசியதாக, சந்திக்கச் சென்றிருந்த பலருக்கும் தோன்றியது. என் கேள்வியின் கூர்மையை மரியாதைக்குறைவு எனத் தவறாகப் புரிந்துகொண்ட பிரதமர், நான் கேள்வியை முடிப்பதற்குள் கோபத்தில் முகத்தைத்  திருப்பிக்கொண்டார்.

மதியாத வாசலை மிதித்துவிட்ட சங்கடத்தில் கைகூப்பி, மதியா வீட்டை விட்டு விடைபெற்று வெளியேறினேன். அன்று பலருக்கும் நான் பிரதமரையே அவமானப்படுத்திவிட்டதாகத் தோன்றியது. உண்மையில் அன்று அவமானப்பட்டது நானோ அவரோகூட இல்லை, அவமானத்துக்கு உள்ளானது இந்தியாவின் பன்முகத்தன்மை.  அன்று ட்விட்டர் இல்லாத குறையை, இந்தச் சம்பவம் குறித்து ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரை நீக்கியது.

8p3.jpg

மத்திய அரசு, மாநில அரசு என்ற பாகுபாடில்லாமல், இந்தியாவின் அற்புதப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் போதெல்லாம் என் குரல் எழும் என்பதே உண்மை. ஆனால், சற்றும் கண்ணியம் குறையாத குரலாக அது இருக்கவேண்டும் என்று மெனக்கெடுபவன் நான்.  என்பால் பிழை இருப்பின்  பகிரங்கமாக மன்னிப்பு கோரவும் நான் தயங்கியதில்லை.

சமீபத்திய உதாரணம் இதோ...

பணமதிப்பு நீக்கம் (Demonitisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும்,  பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

கொஞ்சநாள் கழித்து, டிமானிட்டைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.

தற்போது `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்.

திரு.காந்தியால் அதைச் செய்யமுடிந்தது.  இன்றும் அது சாத்தியம்தான். சற்றே பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் முயலின் மூன்று கால் இரண்டு காலாகக் குறைந்தால்... யாரோ நம்மை மாட்டுக்கறி சாப்பிடத் தடை செய்துவிட்டுத் தாங்கள் முயல்கறி சாப்பிடுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

சமீபத்தில் சினிமா ஃபிலிம் பாதுகாப்புப் பயிலரங்கிற்காக நியூயார்க்கில் உள்ள  `மியூஸியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்’-டிலிருந்து தெல்மா ராஸ்  என்பவர் சென்னைக்கு வந்திருந்தார். சென்னை விமானநிலையத்தில்  விசா பேப்பர் சரியாக இல்லை என்று அதிகாரிகள் ராஸிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘பேப்பர்கள் சரியாகத்தானே இருக்கின்றன’ என ராஸ் வாதம் செய்ய,  அனுமதி மறுப்பதற்கு அந்த இமிகிரேஷன் அதிகாரி வியத்தகு காரணம் ஒன்றும் சொன்னாராம்.

8p6.jpg

அம்மையார் தெல்மா ராஸ் அணிந்திருந்த ஆடை இந்தியக் கலாசாரப்படி ஆபாசமாக இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகச் சொல்லியிருக்கிறார். தெல்மா ராஸ் டெல்லிக்கு அனுப்பப்பட்டு அல்லல்பட்டு, கடைசியாக மத்திய மந்திரியின் தலையீட்டால்  திரும்ப வர யத்தனித்து,  சென்னை வந்து சேர்ந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில்  தாஜ்மஹால்  பெயர்  விடுபட்டதுபோல் இதுவும் ‘பன்முகத்தன்மை இழந்துவரும்’ நாட்டில் மக்களை பயமுறுத்தும் அறிகுறிதான். போன வாரக் கட்டுரையில் நான் சொன்ன `ஒரே குடையின் கீழ் ஒரே மொழி பேசும் ஒரே மதம் கொண்ட இந்தியா’ எனும் கனவு, அது கனவாகவே இருக்கும். நடைமுறையில் சாத்தியப்படாது.’ என் போன்ற பல கோடி இந்தியர்கள் அக்கொடும் கனவை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள். மக்களின் தெய்வங்கள் இனியும் பல்கும்.

பாமரனின் ஆன்மிகத்திற்கு மதாச்சாரிகள் தேவையில்லை. அவனாச்சு அவன் தெய்வமாச்சு.  நாத்திகர்கூட இந்தப் பாமரனைக் கடியாது கனிவாக மனம்மாறச் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. இந்தப் பாமரனின் பக்தி அவனது தனிப்பட்ட விஷயம். அவன் பக்தி அமைதியாக இடைத்தரகரின்றி நடக்கிறது. அவனையும் வழிப்பறி செய்து பணம் பறிக்கும் மட்டரக ஆன்மிகம் தெருத்தெருவாய் உலவத்தான் செய்கிறது. அதன் அடையாளம், கோயிலைவிடக் கொஞ்சமே சிறிதாக இருக்கும் உண்டியல். அதைப் பார்த்ததுமே புரிந்துகொள்ளலாம், அந்த ஆன்மிகத்தில் மூலப் பொருள் காசுதான் என்று. அதைவிட நாத்திகம் பேசுவதே மேல்.

இந்தக் குமட்டல் கோபம் எனக்கு சமீபத்தில் வந்ததன்று; பழையது.  `ஹேராம்’ படத்தின் இறுதியில் ஜூனியர் சாகேத் ராம் பேசும் ஒரு வசனம் வரும். ``ரிலீஜியன் அண்ட் பாலிட்டிக்ஸ் ரொம்ப டேஞ்சரஸ் கலவை. செக்ஸ் வயலன்ஸ் மாதிரி’’ என்று.

`பாரத் தேஷ்’, விமர்சனங்களை மதியாது அக்கலவையை ஆர்வத்துடன் செய்துகொண்டிருக்கிறது. சாமானிய பாதசாரிகள், பாமரர்களை அதற்கு பலியாகாமல் பாதுகாக்கவேண்டியது பகுத்தறிவாளர்களின் கடமை மட்டுமல்ல, நேர்மையான பக்தன் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவர்களின் கடமையும்கூட!

- உங்கள் கரையை நோக்கி!


பரிந்துரைக்கிறேன்!

‘பிக்பாஸ்’  நிகழ்ச்சியின் இறுதிநாளன்று அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் என் சார்பில் மூன்று புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்ந்தேன். புத்தகங்களைப் பரிசாகத் தருவதும், பெறுவதும் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று.  நானறிந்த சில நல்ல புத்தகங்களை என் சகோதர சகோதரிகளுக்குக் கொடுப்பதன்மூலம் பல கோடித் தமிழர்களால் கொண்டாடப்பட்ட அந்த நிகழ்ச்சியின் நிறைவன்று மனநிறைவோடு நான் செய்த விஷயம் இறுதித் தொகுப்பில் ஏனோ இடம் பெறவில்லை. ஆனந்த விகடன் மூலம் அந்த முக்கியமான புத்தகங்களை மீண்டும் பரிந்துரைக்கிறேன்.

முதல் புத்தகமான Yuval Noah Harari எழுதிய Seppiens பற்றி, சென்ற வாரம் சொல்லியிருந்தேன். அதுதவிர இன்னும் இரண்டு தமிழ்ப் புத்தகங்கள். என் ஆசான்களில் ஒருவராக நான் மதிக்கும் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. புதினம் படிக்கும் தமிழ் வாசகர்கள் அனைவரும் தவறவிடக் கூடாத படைப்பு. ஏற்கெனவே படித்தோர் இன்றும் வியப்பதைக் கண்டிருக்கிறேன். இதுவரை படிக்காதோரும் அந்த வியப்பை அடைய விரும்புகிறேன்.

 

8p4.jpg

‘நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதேயாகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.’
8p5.jpg
முன்னுரையில் மேற்கண்ட வரிகள் மூலம் முதிரா வயதிலும் என்னை ஈர்த்த ஜெயகாந்தன், புத்தகத்தின் உள்ளே படைக்கப்பட்ட `ஹென்றி என்னும் மனிதனாக மாறிவிட மாட்டேனோ’ என்று என்னை ஏங்கச் செய்தார். உங்களுக்கும் அந்த எண்ணம் தோன்றச் செய்வார்.

அடுத்து, நான் அன்றைக்குப் பரிசாக அளித்த மற்றொரு புத்தகம், நான் எழுதிய ‘ஹேராம்’ திரைக்கதைப் புத்தகம். அதை நான் எழுதியதால் மட்டும் வழங்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் படித்தே ஆக வேண்டிய புத்தகமாக அதைக் கருதியதால் தெரிவு செய்தேன். எழுதியவனும் நானாக இருப்பதால் எனக்கது பெருமைதான். அந்தப் பெருமையை எனக்களித்த அக்கதைக்கும், எனக்கும் நாயகனான மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக் கிழவனை இன்னும், வரவிருக்கும் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!

 

 

மெரிக்க ஃபார்மா கம்பெனிகளின் கைக்கூலியைப்போல் என்னைச் சித்திரிப்பது அரசியல் பித்துக்குளித்தனம். காழ்ப்போ பொறாமையோ, காசு வாங்கிவிட்ட விசுவாசமோ எனக்கில்லை. மானுடச் சேவை எனப் போற்றப்படும் கல்வி, மருத்துவம், அரசியல் இவையனைத்தையும் கண்மண் தெரியாது வியாபாரமாக மாற்றிவிட்ட கயவர்கள்பால் மாளாக் கோபமுண்டு எனக்கு.

அலோபதிபால் அசைக்க முடியாத நம்பிக்கையோ, மற்ற ஆசிய மருத்துவ முறைகள்பால் வெறுப்போ உள்ளவன் அல்ல நான். 21 வயதுமுதல் 12 வருடங்களாக அல்சர் எனப்படும் குடல் புண்ணால் அவதிப்பட்டவன் நான். அலோபதி மருந்துகளை நம்பி 12 வருடங்கள் காத்திருந்தேன். மருந்துகளின் பெயர்களும் வீரியமும் மாறி மாறி வந்தவண்ணமிருந்தன. வலி போனபாடில்லை. இது நோயல்ல, பிணி. வாழ்நாள் முழுக்கவும் அனுபவிக்க வேண்டியதுதான் என்றது அலோபதி விதி. அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கும்படி அறிவுரைகள் தந்தனர். நானும் தயாரானேன். வலி என்னைத் தயார்ப்படுத்திவிட்டது என்பதே உண்மை.

8p1.jpg

 

அதற்கும் ஒரு வருடம் முன்பாக கேரளம் சென்றபோது என் நண்பர் ஒருவரின் கேரள நாட்டு வைத்தியர் எனக்கு வாழைக்காய்ப் பொடி தந்தார். நிவாரணம் தேடி அலைந்த எனக்கு ஒரு Placebo Effect-ல் வலி குறைந்ததுபோல் ஒரு மனமாயை. உடல் பருமன் கூடியதே அன்றி வலி மீண்டும் குடலைக் கலக்கியது. திருநெல்வேலிக்கு  ஒரு கார் ஷோரூம் திறப்பு விழாவிற்கு வலியோடு சென்று திரும்பிய என்னுடன், ஒரு டாக்டர் அம்மையார் பிரயாணம் செய்தார். நான் பல மாத்திரைகள் விழுங்குவதைப் பார்த்த அவர், நலம் விசாரித்தார். விரைவில் அறுவை சிகிச்சைக்குத் தயார் ஆகிக்கொண்டிருப்பதைச் சொன்னேன். தயவுசெய்து அறுவைசிகிச்சை வேண்டாம் என்றதோடு நிறுத்தாமல், என்னை அடுத்த  நாள் பரிசோதித்தார்.

 

 தான் அலோபதி படித்திருந்தாலும் தற்போது ஆயுர்வேத ஆராய்ச்சியில் முழுமையாக  ஈடுபட்டிருப்பதையும் சொன்னார். அறுவை சிகிச்சை, அலோபதி மாத்திரைகளுக்கு மாற்றாக ஒரு பத்தியமும் சொன்னார். மாட்டுப்பால் சார்ந்த பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்கச் சொன்னார். ஒரு வாரம் பூசணிக்காய்ச் சாறு குடிக்கச் சொன்னார். அவர் அறிவுரைப்படி செய்தேன், பக்க விளைவுகள் ஏதும் இருக்காது என்ற நம்பிக்கை இருந்ததனால். ஒரே வாரத்தில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போடும் தைரியம் வந்தது. ஒரே மாதத்தில் வலி மறந்தே போனது. இது நடந்து 29 வருடங்கள் ஆகின்றன. இன்றுவரை அல்சர் திரும்பவில்லை.

 இப்போதுவரை நான் பாலை உணவில் சேர்ப்பதில்லை. எப்போதாவது மோர், அதுவும் சமீபமாகச் சேர்த்துக்கொள்கிறேன். இதனால் பால் வியாபாரிகள் என்பால் கோபப்படத் தேவையில்லை. என்  அனுபவத்தின்மூலம் நான் சொல்ல வருவது எல்லோரும் பாலைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல. சிலருக்கு, பால் உடலுக்கு ஒவ்வாத விஷயமாகிறது என்பதே. இதை lactose intolerance என்று அலோபதி சொல்கிறது. உணவே மருந்தாக வேண்டும் என்ற கூற்றை நம்புபவன்தான் நான். ஆனால், அதைப் பிரித்தறியும் பகுத்தறியும் வைத்தியரும் வேண்டும் என்று வலியுறுத்துபவன்.
8p2.jpg
சரியான ஆதாரங்கள் இல்லாமல் திடீர் வைத்தியர்களாகுபவர்கள் அபாயமானவர்கள். அவர்கள் அலோபதிக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, வேறு வைத்திய முறைகளுக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, மருந்து விநியோகம் வரைமுறையின்றித் தனிமனிதர்கள் தண்ணீர்ப் பந்தல் போல் வைத்து அளவின்றி விநியோகம் செய்வது ஏற்புடையதல்ல. அதனாலேயே நிலவேம்புக் கஷாய விநியோகத்தை வைத்தியர் துணையின்றி நாமே விநியோகம் செய்ய வேண்டாம் என்று என் நற்பணி இயக்கத்தாரிடம் வேண்டிக்கொண்டேன்.

அலோபதி ஃபார்மாக்கள் உலக அளவில் செய்யும் பல ஊழல்கள் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன. எந்த நோயையும் பூரணமாய் குணப்படுத்திவிடும் மருந்துகளில் மேற்கத்திய ஃபார்மாக்கள் ஆர்வம் காட்டாததன் காரணம் எல்லையற்ற பேராசைதான். மேற்கத்திய ஆராய்ச்சி மையங்கள் சில வெளியிடும் எல்லாத்தகவல்களையும் நம்பிவிட முடியாது. காரணம், அந்த ஆராய்ச்சிமையங்களுக்குப் பல ஃபார்மா கம்பெனிகளே பண உதவிகள் செய்கின்றன என்பதுதான்.இதனால், பச்சைப் பொய் சொல்லாவிடினும், இந்த ஆராய்ச்சி மையங்கள் சொல்லாமல் விட்டுவிடும் உண்மைகள் பொய்களைவிட அபாயம் விளைவிக்கும். எத்தகைய மருத்துவமாயினும் மக்கள் விழிப்புடன் கேள்விகேட்டு, தேவையென்றால் மட்டுமே மருந்துகளை உட்கொண்டால் போதும்.

காய்ச்சல் வராதிருக்க முன்னேற்பாடாக, தேவையற்ற மருந்துகளை உண்பதை தயவாய்த் தவிர்க்கவும். நீரிழிவு நோய் (Diabetes) இல்லாதவர்கள் எதற்கு இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்? சில மருந்துகள் வரும்முன் காக்காது. இதுவே என் கருத்து.

சரி, மூன்று வாரமாக 30, 40 வருட முனகல்களை முனகியாகிவிட்டது. குறைகளையும் கொள்ளைகளையும் பட்டியலிட்டுப் பிரயோஜனமில்லை. ஆவன செய்வோம் என்ற அதிகாரிகளின் குரல் நம்மை சாந்தப்படுத்தாது. `ஆவன ஆகும்போது ஆகும்’ என்று காத்திருந்தது போதும். ஆகவேண்டியதையெல்லாம் அவசர சிகிச்சையாகச் செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆயுதப் புரட்சி ஒரு புராதன வழி. ஆள்சேதமும் அதிகமாகக்கூடும். அதைவிட நவீன முயற்சிகள்மூலம் சமுதாய சாதனைகள் செய்து காட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகிவிட்டது.

பழைய பெரியவர்களை அப்படியே நகலெடுக்காமல் அவர்களின் கருத்துகளை வடிகட்டி இன்றைய உலகுக்கு ஏற்றபடி வடிவமைத்துக்கொள்ள சிற்பிகள் தயாராகிவிட்டனர். அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்ளானவர்கள். அவர்கள்பால் எனக்குப் பெருநம்பிக்கை உண்டு. என் வாழ்க்கையில் பெருமையாக நான் நினைத்துக்கொள்ளும் சிந்தனைகள், லட்சியங்கள் எல்லாம் இந்த வயது வரம்புக்குள் எனக்கு ஏற்பட்டவைதாம். அனுபவமும் வயதும் கூடக் கூட அச்சிந்தனைகளை, லட்சியங்களை மற்றவருக்கும் புரியும்படி வார்த்தைப்படுத்தும் பக்குவம் அல்லது நயம் வந்திருக்கலாம்.

8p3.jpg

ஆகவே, இளைஞர் படை ஒன்று காத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்துவிட்டது. வரும் நவம்பர் 7-ம் தேதி அவர்களுடன் தொடர்புகொள்ளத் தடையில்லாமல் உரையாடும் வழி ஒன்றை ஏற்படுத்தி அறிவிக்கவுள்ளேன். அவர்களுடன் அளவளாவுவதற்கல்ல; பாசறைகள், பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தி ஆகவேண்டிய காரியங்களுக்கான செயல்திட்டம் தீட்ட. திறமையாளர்கள், படிப்பாளிகள், உழைப்பாளிகள் அனைவரையும் சாதிவரையறைகள் தாண்டி ஒன்றுகூட வைக்கும் சங்கநாதம் தனியே தேவையில்லை. அது ஏற்கெனவே நம் மனங்களில் ரீங்கரிக்கத் துவங்கி நாள்கள் பல ஓடிவிட்டன.

இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல் திட்டங்கள் தீட்ட. திட்டங்களுடன் நான் கூட்ட நினைப்பது வெறும் தொண்டர் கூட்டத்தை மட்டுமல்ல; தலைவர்களின் பெருங்குழுவை. இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். தியாகமாக நினைத்து வருபவர்கள் எதையோ இதற்காக இழப்பது போன்ற உணர்வுடன் வந்து எம்மைத் தேவையில்லாமல் கடன்படச் செய்வார்கள். தமிழகத்திற்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நம்மால் முடியும், என்னால் முடியும். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும்.
8p5.jpg
நமது இயக்கத்துடன் சேர்ந்து பணி செய்யப் பல இயக்கங்கள் தயாராக உள்ளன. அவர்களுடன் பேசியதில் வந்த புரிதலும் அடக்கமும், நாம் அவர்களுடன் சேர்ந்து பணி செய்து தமிழகத்திற்கு பலம் சேர்க்கவேண்டும் என்பதே. உதாரணமாக, இரண்டு வருடங்களாக இயங்கிவரும் அறப்போர் இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும், நீக்கும் இயக்கம். இதற்குப் பின்னால் வெறும் வீரம் மட்டுமல்ல... அயராத துப்பறிவும் புலனாய்வும் தீராத்தேடலும் இருக்கின்றன.

உதாரணத்திற்கு... சென்னை, எழும்பூர்க் கண் மருத்துவமனையின் இயக்குநர் கையும் களவுமாய்ப் பிடிபட்ட தொலைபேசி உரையாடலின் தொகுப்பு. ஒலிப்பதிவு செய்த அறப்போர் இயக்கத்திற்கு நன்றி.

நாம்  தொடர்பில் இருக்கவும், நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்கவும் சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பு, வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்.

`இந்த வாரம் எழுத அதிகமில்லையா... என்ன இப்படிச் சுருக்கிவிட்டீர்கள்?’ எனக் கேட்கலாம். அதற்கான பதில் கேள்விகளாய் வரும். நானே பேசிக்கொண்டிருப்பதைவிட, கேள்விகளுக்குப் பதில் சொல்ல யத்தனிப்பது ஒரு விதத்தில் கொள்கை விளக்கமாக மாற வாய்ப்புண்டு. ஒத்த சிந்தையுள்ள பல நண்பர்களும், மாற்றுச் சிந்தைகளைக் கொண்ட சில தோழர்களும் கேள்வி மாலையைத் தொடுக்கத் துவங்குவார்கள். அவர்களின் கேள்விகளுக்கு இணையாகவோ அல்லது அத்தரத்தையும் விஞ்சியோ கேள்விகள் கேட்க நீங்களும் முற்படலாம். அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரம் முதல் நீங்களும் நானும் உரையாட, என் புயல் நம் புயலாகும். வாருங்கள், நியாயத்தூள் கிளப்புவோம்!

- உங்கள் கரையை நோக்கி!


தொடரட்டும் அறப்போர்!

மீபத்தில் ஓர் ஆடியோ உரையாடல் கேட்கக் கிடைத்தது. பார்வைக் குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநரைப் பொறிவைத்துப் பிடித்திருக்கிறார்கள். அந்த ஸ்டிங் ஆபரேஷனைத் தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கிறது. அதில், பிடிபட்ட அந்த மருத்துவமனை இயக்குநரும் ஒரு சாமானியரும் பேசிக்கொள்கிறார்கள். அந்த உரையாடலில் இருந்து...

சாமானியர்: “டைரக்டர் மிஸ்டர் ஸ்ரீதர் சார்...”

ஸ்ரீதர்: “யெஸ் டெல் மீ...”

சாமானியர்: “அறப்போர் இயக்கம் நடத்துன ஸ்டிங் ஆபரேஷன்ல மாற்றுத்திறனாளி ஒருத்தர்ட்ட லஞ்சம் வாங்கினீங்கள்ல...”

ஸ்ரீதர்: “நான் ஏன் லஞ்சம் கேக்கப்போறேன்?”

சாமானியர்: ``அதான் வீடியோல கிளியரா இருக்கே..உங்களுக்கு மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லையா? இவ்வளவு பெரிய பதவியில இருந்து பிச்சை எடுக்குறீங்களே? உங்களுக்குத்தான் எங்க வரிப்பணத்துல இருந்து சம்பளம் கொடுக்குறோமே? அப்புறம் எதுக்கு இந்த பிச்சை?”

ஸ்ரீ)தர்: ``நீங்க என் ரூமுக்கு வாங்க. அது கிளினிக்கல் சொசைட்டி மீட்டிங் ஃபண்டுக்காக வாங்கினது.”

சாமானியர்:  ``நான் ஏன் அங்க வரணும்? நீங்க லஞ்சம் வாங்கும்போது எடுத்த வீடியோவை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்”

ஸ்ரீதர்: “இந்தமாதிரிலாம் பேசாதீங்க. ரெசிப்ட் வேணும்னா கேளுங்க தர்றேன். எவ்வளவு பேருக்கு ஆப்பரேஷன் பண்ணிட்டு இருக்கிறோம்.’’

சாமானியர்: “அதுக்குதான் நாங்க சம்பளம் தர்றோமே. உங்களை பதவியில இருந்து எடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்போறோம்.”

ஸ்ரீதர்: ``அதெல்லாம் எதுவும் பண்ணாதீங்க... கோபப் படாம பேசுங்க. நீங்க அதுக்கு ரெசிப்ட் வாங்கிக்கோங்க.”

சாமானியர்:  “அந்த மாற்றுத்திறனாளி, ‘200 ரூபாய்... காசு இல்லை’னு சொல்றார். நீங்க, ‘ஏடிஎம் கார்டுல எடுத்துட்டு வா. இல்லைனா ஃப்ரெண்டுகிட்ட வாங்கிட்டு வா’னு சொல்றீங்க. ஹாஸ்பிட்டல் வெளிலயே பிச்சை எடுக்குறாங்கள்ல. அவங்களோட சேர்ந்து நீங்களும் பிச்சை எடுங்களேன். மக்கள் இப்பதான் கோபப்பட ஆரம்பிச்சிருக்காங்க. இது இதோட நிக்காது.”

உரையாடல் கட் ஆகிறது.

இந்த ஸ்டிங் ஆபரேஷன் செய்தது யார் என்று விசாரித்தேன். ‘அறப்போர் இயக்கம்’ என்றார்கள். இந்த இயக்கத்தை 2015-ல்், ஊழலை எதிர்க்கக்கூடிய 25 முதல் 30 பேர் சேர்ந்து ஆரம்பித்திருக்கிறார்கள். நீதியும் சமத்துவமும் உள்ள சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம். என் நோக்கமும் அதுதான் என்பதால் இந்த வாரம் அவர்களை நான் பரிந்துரைக்கிறேன்.

இந்த ஜனநாயகம், மக்கள் பங்கெடுக்கும் உண்மையான ஜனநாயகமாக, தொடர்ந்து கேள்விகள் கேட்கக்கூடிய ஜனநாயகமாக மாறும்போதுதான் இது உண்மையான மக்களாட்சியாக மாறும். அதைநோக்கி இவர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள். மிக முக்கியமாக, இவர்கள் லஞ்சம் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்குகிறார்கள். அடுத்து நீர்நிலைகள் பாதுகாப்பில் பங்கெடுக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றி மிகப்பெரிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்கிறார்கள்.  தவிர ஒரு துறையை எடுத்துக்கொண்டு அதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை கொண்டுவருவதற்கான வழிகளை மேற்கொள்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களில்... மிகப்பெரிய ஊழல்களைத் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், குட்கா வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் சிபிஐக்கும் தகுந்த ஆதாரங்களுடன் புகார் தந்து ஊழலை வெளியே கொண்டுவந்திருப்பது. சின்ன லெவலிலும் அரசு மருத்துவமனைகளில் மக்களைப் பங்கெடுக்கவைத்து சமூகத் தணிக்கை செய்து...லஞ்சம் வாங்கக்கூடியவர்களை ஸ்டிங் ஆபரேஷன் செய்து கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார்கள். இப்படி இதுவரை 15 ஸ்டிங் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் லஞ்சம் வாங்கி சிக்கிய வீடியோ. இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் தந்திருக்கிறார்கள். இதில் சுகாதாரத்துறை செயலர், விசாரணை கமிட்டி அமைத்து விசாரித்து, எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குநரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள்.

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டியது முக்கியம். அதற்காக லோக் ஆயுக்தாவுக்கான மாதிரி சட்ட வரைவு கொண்டுவந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் அதைச் சேர்க்க வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்சி மட்டும் அதைச் செய்யவில்லை. அது எந்தக் கட்சி என நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இப்படித் தொடர்ந்து இயங்கும் அறப்போர் இயக்கத்தைப் பரிந்துரைப்பதில் பெருமை கொள்கிறேன்.


8p4.jpg

பி.கு. அடுத்தவாரம் முதல் கேள்வியைக் கேட்டு தூள்கிளப்ப இருக்கிறார்  கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது!”

கமல்ஹாசன்
 

 

“வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்றார்கள் அன்று. இன்று தமிழகத்தில், வடசென்னை தேய்கிறது; இதனால் ஒட்டுமொத்த சென்னையும் மூழ்கப்போகிறது. ஆம், அதற்கான ஒரு சோறு உதாரணம், எண்ணூர். என் ஊராக இருந்த ஊரை மண்ணூராக்கும் வேலைகள் பாதிக்கும்மேல் நடந்து முடிந்துவிட்டன. இந்த நெய்தல் நிலத்தைப் பாலை நிலமாக்கும் வேலைகளை அரசுகளே செய்கின்றன என்பதுதான் அச்சம்கொள்ள வைக்கிறது.

p8g.jpg

p8a.jpg

நண்பர், சமூக ஆர்வலர், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, மேட்டுக்குடி மட்டுமே சொந்தம் கொண்டாடிவரும் கர்னாடக இசையைக் குப்பம்நோக்கிப் பாயவைப்பவர். அதன்வழி சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமனுடன் இணைந்து சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் ஏற்படுத்தும் வீரிய விழிப்பு உணர்வு மிக முக்கியமான ஒன்று. அதன் ஒரு பகுதியாக இவர்கள் தயாரித்து வெளியிட்ட  ‘புறம்போக்கு’ என்ற பாடல் காட்சி ஆவணப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். அதன்பிறகே எண்ணூரின் பாதிப்பை உணர்ந்தேன்.

இந்தப் பாடல் காட்சியைப் பார்ப்பதற்கு முன்புவரை ‘அங்க நிறைய ஃபேக்டரீஸ் இருக்கு’ என்ற அளவே p8b.jpgஎனக்கு எண்ணூர் பற்றித் தெரியும். தவிர, நான் அந்தப்பக்கம்போய்  20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்பதையும் ஒளிவுமறைவு இல்லால் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த மக்களுக்கும் மண்ணுக்கும் செய்துள்ள இடைஞ்சல்கள், சென்னையின் ஒரு பகுதியே தண்ணீரில் மூழ்குவதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வேதனையுற்றுதான் கொசஸ்தலை ஆறு பற்றியும் அது அரசால் ஆக்கிரமிக்கப்படுவது பற்றியும் ட்விட்டரில் பதிந்திருந்தேன். எண்ணூரை நேரில் சென்று பார்த்து அந்த வலி உணரவேண்டும் என்ற உந்துதலால் நானும் நித்தியானந்த் ஜெயராமனும் கடந்த சனிக்கிழமை அதிகாலையிலேயே எண்ணூர் புறப்பட்டோம்.

நித்தியானந்த் ஜெயராமன்... நான் சொல்லித்தான் அவர் பெருமையடைய வேண்டும் என்பது இல்லை. ஏற்கெனவே மக்களிடம் சென்றுசேர்ந்துவிட்டவர். ஆனாலும் இவரைப்பற்றி இங்கு குறிப்பிடவேண்டியது என் கடமை. சூழலியல் செயல்பாட்டாளர்; அமெரிக்காவில் படித்தவர்; சர்வதேச ஊடகவியலாளர்களுடன் பணி செய்தவர்; சூழலியல் கூட்டங்களில் பங்கெடுக்கக் கண்டங்கள் தாண்டிப் பயணிப்பவர். 1990-களில் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி வயல்வெளிகளில் புற்றுபோல் படர்ந்த இறால் பண்ணைகள் போகப்போக மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கின. அவை பற்றிச் செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு, ‘எழுதினால் மட்டும் போதுமா’ என்ற எண்ணம் ஏற்பட்டு, மக்கள் போராட்டங்களில் கரம்கோத்துக் களச்செயல்பாட்டாளராக மாறியவர்.

நர்மதை ஆற்றுக்கான போராட்டம், கொடைக்கானலில் விஷம் பரப்பிய யூனிலீவர் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், போபால் போராட்டம் என்று எல்லைகள் தாண்டி அலைபவர். உயர்த்தப்பட்ட கடற்கரைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பெசன்ட் நகர், ஊரூர்க் குப்பம் மக்களுடன் இணைந்து களத்தில் நின்றார். இப்போது எண்ணூர்க் கடல் படுகையைக் காக்கும் போராட்டத்தில் மீனவ மக்களுடன் இணைந்து களத்தில் நிற்கிறார். அதைப் பற்றி எழுதியும் இயங்கியும் வருகிறார்.

இனி, எண்ணூர்ப் பயணத்துக்கு வருகிறேன். ஆழ்வார்பேட்டையிலிருந்து கிளம்பி வடசென்னையை நோக்கிச் சென்ற பயண இடைவெளியில் எண்ணூர் பற்றிச் சொல்லத் தொடங்கினார் நித்தியானந்த்.

“சென்னையின் வடக்கிலிருக்கும் பகுதி எண்ணூர். அங்கு வங்கக் கடலில் கலக்க ஆர்ப்பரித்து வருகின்றன கொசஸ்தலை ஆறும், ஆரணி ஆறும். இவை கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியைத்தான் ‘எண்ணூர்க் கடற்கழி’ (Ennore Creek) என்றழைக்கிறோம். இந்தச் சிற்றோடை 16 கிமீ நீளம், 6,500 ஏக்கர் பரப்பளவு எனப்  பரந்து விரிந்திருக்கிறது. நீர்ச்சூழலியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. பெரு வெள்ளங்களின்போது வெள்ள நீர், ஊருக்குள் புகாமல் தடுக்கும் அரண் இந்தக் கடற்கழி. சுனாமி போன்ற பேரலைகளின்போதும், மிக முக்கிய அரணாகச் செயல்படக் கூடியது. இவ்வளவு உயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை வழக்கம்போல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அப்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களோ, அரசியல்வாதிகளோ அல்ல, அனைத்துமே அரசு நிறுவனங்கள்.

காமராஜர் துறைமுகம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், வள்ளூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் ஆகிய அரசு சார் நிறுவனங்கள் இந்தப் பகுதியின் உயிர்ச்சூழலைக் கெடுக்கும்விதமாக, கடற்கழி ஆக்கிரமிப்பு தொடங்கிச் சாம்பல் உள்ளிட்ட கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பது வரை பல தீஞ்செயல்களைச் செய்துவருகின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதி மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது” என்றவர், என்முன் எண்ணூரின் வரைபடத்தை விரித்துவைத்து மேலும் விளக்கினார். 

“இந்த ஆக்கிரமிப்புக்காக மிகப்பெரிய தவற்றைச் செய்திருக்கிறது தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம் (Tamilnadu State Coastal Zone Management Authority). உங்களை, என்னை, நம்மை ஏமாற்றியிருக்கிறது இந்த ஆணையம். உயர் அலை எழும் பகுதியை ஒட்டியிருக்கும் 500மீ தூர கடற்கரை மற்றும் கடலின் அருகே இருக்கும் சிற்றோடைகள், கடற்கழிகள் ஆகியவற்றின் 100மீ தூர கரையை ‘கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலம்’ (Coastal Regulation Zone - CRZ) என்று சொல்கிறார்கள். இந்தப் பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தைக்கொண்டு இதை CRZ 1, CRZ 2, CRZ 3 மற்றும் CRZ 4 என நான்காக வகைப்படுத்துகின்றனர். இதில் நம் எண்ணூர் CRZ 1-ன் கீழ் வருகிறது. அதாவது, மிகவும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.

இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து மீனவமக்களுடன் இணைந்து போராடி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, ஜேசு ரத்தினம் எனும் சூழலியலாளர் மூன்று வருட தொடர் போராட்டத்துக்குப் பிறகு,
2009-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எண்ணூர்ப் பகுதியின் CRZ - 1 வரைபடத்தைக் கேட்டு வாங்கினார். அது 1996-ல் வடிவமைக்கப்பட்டு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம்.

இந்த நிலையில் அதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அதே எண்ணூர் வரைபடத்தை இந்த வருடம் (2017) நான் கேட்டு வாங்கினேன். அதைப் பார்த்ததும் எங்களுக்குப் பேரதிர்ச்சி. அதில் 16 கிமீ நீளமுள்ள ‘எண்ணூர்க் கடற்கழி’யைக் காணவில்லை. கடற்கழி இல்லாத இந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்துதான் காமராஜர் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதியளிக்கிறது, தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம்.

ஏற்கெனவே, அனுமதியே இல்லாமல் 1090 ஏக்கர் பரப்பளவை காமராஜர் துறைமுகம் ஆக்கிரமித்துள்ளது. இப்போது மீண்டும் ஆயிரம் ஏக்கர் விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. இவர்கள் ஆக்கிரமித்திருப்பது முழுக்கவே 6,500 ஏக்கர் பரப்பளவிலிருந்த எண்ணூர்க் கடற்கழிப் பகுதியைத்தான். ஒரு மிக நீளமான ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் கழிவுகளைக் கொட்டி, பூர்வகுடிகளை வேறுபகுதிக்கு விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படி, ஒரே இடத்தின் வரைபடம்... 2009-ல் கடற்கழி இருக்கிறது, 2017-ல் இல்லை. இது எப்படிச் சாத்தியமானது?! இந்தக் கேள்விக்குத்  தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம் ஒரு பதில் அளித்தது. அதாவது, `1997-ல் எண்ணூர்ப் பகுதியில் ஹைட்ரோகிராபர் (HydroGrapher) எனச் சொல்லப்படும் நீர்ப்பரப்பு வரையாளரைக் கொண்டு, இடத்தை அளந்து புது வரைபடம் வரையப்பட்டது. இதற்கு மத்திய அரசின் அங்கீகாரமும் பெறப்பட்டது’ என்றது.

`எதன் அடிப்படையில் இந்த வரைபடம் மாற்றியமைக்கப்பட்டது, எந்த ஹைட்ரோகிராபர் இதை ஆராய்ச்சி செய்தார் போன்ற விவரங்கள் வேண்டும்’ என்று தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மத்திய அரசு எந்த ஹைட்ரோகிராபரையும் அனுப்பவில்லை, புதிய வரைபடம் எதையும் அங்கீகரிக்கவில்லை’ என்று பதில் அளித்தனர். அப்படியென்றால், 1997-ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வரைபடம் முற்றிலும் பொய் என்பது உறுதியானது” என்கிறார். 

கார் வடசென்னையை நெருங்கிவிட்டது என்பதை கார்க் கண்ணாடிக் கதவைத் தாண்டி நாசியைத் தொட்ட மண்ணின் மனம் உணர்த்தியது. வாய்க்கால்போல் சுருங்கிய கொசஸ்தலை ஆறு, அவற்றில் சாம்பல் போர்த்திய மேடுகள், அவற்றை லாரிகளில் அள்ளிக்கொண்டிருக்கும் பொக்லைன் எந்திரங்கள், அனல்மின் நிலையங்கள் கக்கும் நிலக்கரிச் சாம்பல் கழிவுகளை எடுத்துச்சென்று ஓரிடத்தில் குவிக்கக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர்க் குழாய்கள் என அந்த நெய்தல், ஒரு பரந்துவிரிந்த பாலையாகக் காட்சியளித்தது. கொசஸ்தலை ஆற்றை அதன் கரையில் நின்று பார்க்கையில், நாம் கூவத்தைக் குப்பை கொட்டும் சாக்கடையாக்கியதுபோல், கொசஸ்தலையைச் சாம்பல் மேடாக்கி விட்டார்கள் என்பதை உணர முடிந்தது.

p8c.jpg

‘ஆற்றிலிருந்து கடலுக்கும் கடலிலிருந்து ஆற்றுக்கும் ஆறு மணிநேரத்துக்கு ஒருமுறை நீர் மாறிமாறிப் பாயும் அந்த முகத்துவாரப் பகுதி, அந்தத் தொழிற்சாலை மாசுகளால் அதன் இயல்பை இழந்து வெகுநாளாகிவிட்டது’ என்கிறார் நித்தியானந்த்.

கொசஸ்தலை என்பது ஆந்திரத்துக்கும் சென்னைக்கும் பழவேற்காடு வழியாகப் பண்டமாற்றம் செய்யப் பாலமாக இருந்த நதி. அங்கிருந்து அரிசியும் இங்கிருந்து உப்பும் எனப் பண்டங்களையும் பண்பாடுகளையும் பரிமாறிக்கொள்ளப் பயன்பட்ட நதி. அது இன்று தூர்ந்துபோய் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கும் சிறுசிறு குட்டைகளாகவும், கன்னி வாய்க்கால் போல ஓடிவருவதையும் காணச் சகிக்கவில்லை. இது மீன் வளம் மிக்க நதி. பல அடி ஆழம் இருந்த இந்த நதி இன்று சாம்பல் கழிவுகளால் முழங்கால் அளவுக்குத் தூர்ந்து போய்விட்டது. அதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை அதிக குதிரைத்திறன்கொண்ட இன்ஜின்வைத்துத் தள்ளிக்கொண்டும் படகுகளை நடு ஆற்றுக்குக் கைகளில் தூக்கிக்கொண்டும் போய்க்கொண்டி ருக்கிறார்கள்.

காரில் கடக்கையில் கழிவு நீர்க் குழாய்களிலிருந்து சாம்பல் கழிவுகள் கசிந்து ஆற்றில் கொட்டுவதையும் பார்க்க முடிந்தது. அந்தக் கழிவுநீர்க் குழாய்களைப் பின்தொடர்ந்தால் அதிலிருந்து கொட்டப்படும் சாம்பலைச் சேகரிக்கும் செப்பாக்கம் என்ற இடத்தில்போய் நின்றது. அதை தூரமாக இருந்து பார்க்கும்போது பரந்துவிரிந்து கிடக்கும் அலைகளற்ற அமைதியான ஏரி போலத் தோற்றமளித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை படர்ந்துகிடக்கும் இந்தச் சாம்பல் கழிவுகளை எப்படி, எப்போது அகற்றப்போகிறார்கள் என்ற மலைப்பு என்னுள் ஏற்பட்டது. மேலும், இப்படிச் சேகரித்து வைத்திருக்கும் சாம்பல் கழிவுகளும் மீண்டும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுக் கொசஸ்தலையில் கலக்கிறது.

அந்தச் சாம்பல் மேட்டுக்கிடையில் பாதி மூழ்கிய ஒரு கட்டடம். அதைக்காட்டிய அந்த ஊர்ப் பெரியவர், ‘அதுதான் சார் சால்ட் கொட்டாய். அன்று இங்கிருந்த உப்பளங்களில் இருந்து உப்புகளை அந்தக் கட்டடத்தில்தான் சேகரித்து வைத்து எடுத்துச்செல்வோம்’ என்றார். உப்பளங்களும் வயலும் வாழ்வுமாக இருந்தவர்கள் இன்று அரசுகளாலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. அந்தச் சாம்பல் மேட்டிலிருந்து கீழே இறங்கிவந்தால், இடம்பெயர்ந்தவர்கள்போகச் செப்பாக்கத்தில் மீதி இருந்த மக்கள் சூழ்ந்துகொண்டனர். அவர்களில் பலரின் முகங்களில் கவலையும் கண்ணீரும்.

‘லேசா மழை பெஞ்சாலே தண்ணி சூழ்ந்துக்குது. ராத்திரி, பகல்னு எப்பவும் கொசு... உப்பைக் கரைச்சுவிட்டமாதிரி வர்ற தண்ணி அவ்வளவு கரிப்பு. இங்க பாருங்க, கைகாலெல்லாம் உப்புப்பூத்துக் கிடக்கு’ என்று கைகால்களைக் காட்டுகின்றனர். ஒரு மூதாட்டி சொன்னதுதான் கண்ணீர் வரவைத்தது. ‘முன்ன எங்களைச் சுத்தியும் உப்பளங்களா இருக்கும். ஆனா, குடிக்கக் கிடைக்கிற தண்ணி உப்பா இருக்காது. ஆனா,  இன்னைக்கு அந்த உப்பளங்கள் இல்லை. ஆனாலும் குடிக்கிற தண்ணியில, சாப்பிடுற சாப்பாட்டுல எல்லாமே உப்பும் சாம்பலும்தான் கலந்திருக்கு’ என்கிறார். உடலையும் மனதையும் நசுக்கும் இந்தச் சூழலால் முக்கால்வாசி மக்கள் சொந்த இடங்களைக் காலிசெய்துவிட்டு அவர்களாகவே வெளியேறி விட்டனர். இருக்கும் குறைந்த குடும்பங்களையும் அவர்களாகவே வெளியேறவைக்கும் வேலைகளை அரசுகளே செய்துவருகின்றன.

“நன்னீரும், கடல் நீரும் கலக்கும் இதுபோன்ற முகத்துவாரப்பகுதி, பல்லுயிர்ச்சூழலுக்கு மிகமிக முக்கியத்துவமான நிலம். வெள்ளத்தின்போது, ஆற்று நீர் கடலோடு சென்று கலப்பதிலும், கடல் அலைகள் வரும்போது அவற்றை உள்வாங்கிக்கொள்வதிலும் முகத்துவாரப்பகுதி முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு கடல் நீர் மற்றும் ஆறு ஆகிய இரண்டும் சந்தித்துக்கொள்வதால், நீரின் உப்புத்தன்மை குறைந்து ஒரு புதிய சூழலியல் மண்டலம் உருவாகும். இதனால், பல உயிரினங்கள் இந்தப் பகுதியில் இனப்பெருக்கம் செய்ய வரும். ஆனால், இந்தப் பகுதி பாதிக்கப்பட்டால் பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ந்து மனிதர்கள்வரை அனைவருக்குமே பாதிப்புகள் ஏற்படுகின்றன” என்கிற நித்தியானந்த் ஜெயராமன், எண்ணூரில் கட்டப்பட்டிருக்கும் ‘பெருஞ்சுவர்’ பற்றியும் சொல்கிறார்.

“அத்திப்பட்டுப் புதுநகர். இது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரித் தொகுதியைச் சேர்ந்த ஊர். வட சென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டபோது, அங்கு வசித்த மக்களை வெளியேற்றி இங்கு குடியமர்த்தினர். 2015 டிசம்பரில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது, வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளைத் தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றியது எண்ணூர் முகத்துவாரப் பகுதி. ஆனால், இப்போது அத்திப்பட்டுப் புதுநகரில், சமீபத்தில் பெய்த ஒருநாள் மழைக்கே முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதற்குக் காரணம் இந்த ஆக்கிரமிப்புகள்தான். அதில் இங்கு தேங்கியுள்ள நீர், இந்த மக்கள் சொல்லும் ‘பரவல்’ என்கிற கடற்கழியில் வடிய அத்திப்பட்டுப் புதுநகர் ரயில்நிலையம் அருகே கீழே சுரங்கத்தில் இரண்டு ஓட்டைகள் அமைத்துள்ளார்கள். அதன் வழியாக அது பரவல் (Natural Flood Plain) பகுதியை அடையும். ஆனால், தேங்கியிருக்கும் நீரின் அளவையும், அது பரவலுக்குப் பாய்வதற்கான அந்த வழியையும் பார்த்தால் இதில் எப்படி, அவ்வளவு நீர் வடியும் என்ற கேள்வி மிக யதார்த்தமாக எழும். மேலும், அந்த நீர் வழிகளிலும் அடைப்புகள். அதனால் நீர் வடிய வழியில்லாமல் இந்த மக்களின் குடியிருப்புகளில் தேங்கிவிடுகிறது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகாமலிருக்க அவை ஒரு பெருஞ்சுவரைக் கட்டியுள்ளன. அந்தப் பெருஞ்சுவரைப் பார்க்கிற எந்தச் சாமானியனுக்கும் அதிர்ச்சியாக இருக்கும். தேங்கும் நீர் பெருஞ்சுவர் கட்டியிருக்கும் அந்த நிறுவனங்களுக்குள் புகாது. ஆனால், இந்தப் பக்கம் இருக்கும் மக்களின் குடிசைகளுக்குள் புகும்” என்கிறார்.

p8d.jpg

இங்கு சிலருக்கு இன்னொரு குதர்க்கமான கேள்வி எழலாம், இவர்கள் ஏன் நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் குடியிருக்கிறார்கள்? காரணம், இவர்கள் எல்லோரும் நெய்தல் நிலத்தின் பிள்ளைகள். 1990 -களில் வடசென்னை அனல்மின் நிலையம் கட்டப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்துவந்தவர்கள். அந்த நிறுவனம் கட்டப்படுவதற்காக அரசாங்கம் இவர்களை அங்கிருந்து இந்தப் பகுதிக்கு இடம்பெயர வைத்தது. அன்று அவர்கள் உப்பளம் போட்ட, மீன் பிடித்த, படகோட்டிய இடங்களில்தான் இன்று அரசின் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நீர் வழித்தட ஆக்கிரமிப்பை சூழலுக்கு எதிரான விஷயமாக மட்டுமே பார்க்க முடியாது. இது ஒரு தலைமுறையின் வீழ்ச்சியும்கூட. உப்பளங்களும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் இல்லாததால், அவற்றை நம்பிச், அவற்றைச் சார்ந்து செய்து வந்த தொழில்களிலிருந்து விலக்கப்பட்டு, இன்று கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

துறைமுகங்கள், அனல்மின்நிலையங்கள் முக்கியம்தான். துறைமுகம் கையாளும் பொருள்கள், அனல்மின் நிலைய மின்சாரம் அனைத்தும் மக்கள் சேவைகளுக்குத்தானே? அப்படி இருக்கையில் அரசுகளே முறையான அனுமதி இன்றிக் கடற்கழிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யலாமா? எண்ணூர்க் கடற்கழியில் கலக்கப்படும் சாம்பல் கழிவுகளைச் சுத்தப்படுத்தி, இனி கொசஸ்தலை கடற்கழியில் கழிவுகள் கலக்கப்படாமல் அந்த நீர் நிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

கொசஸ்தலை ஆறு, நொடிக்கு 1,25,000 கன அடி நீரை வெளியேற்றுகிறது. இது அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் ஒருங்கிணைந்த நீர் வெளியேற்றும் ஆற்றலைவிட அதிகம். 2015-ல் அடையாற்று வெள்ளத்தையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. எண்ணூரில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், சென்னையின் முக்கியப் பகுதிகள் ‘நீர்க் கல்லறையாக’ மாறும் வாய்ப்புகள் அதிகம். இன்று, இந்த நாள், இந்த நிமிடம் நாம் நலமாக இருக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. நாளை, நாளை மறுநாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு, அடுத்த நூற்றாண்டு வாழும் நம் சந்ததிகள் நலமாக வாழ வேண்டும் என்பதை மனதில் வைத்து, அரசு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

p8e.jpg

அங்கிருந்து புறப்படும்போது நித்தியானந்த் சொன்ன வார்த்தைகள் மனதில் அறைகின்றன. ‘`இந்த ‘பரவல்’ மழை இல்லாத சமயங்களில் காய்ந்து கிடக்கும். ஏரி என்பதே மழை இல்லாத சமயங்களில் தண்ணீருக்காக ஏங்கி நிற்பதுதானே. அப்போது, ‘காய்ந்துதானே கிடக்கிறது’ என்று எண்ணி ரியல் எஸ்டேட் போட்டுவிடலாம் என நினைக்கக்கூடாது. தண்ணீருக்கு நினைவு அதிகம். அது எந்த இடத்தில் இருந்ததோ அந்த இடத்துக்கு மீண்டும் திரும்பி வரும். அப்படி வரும்போது நீங்கள் அங்கு லைசென்ஸ் வாங்கி ஆக்கிரமித்திருந்தாலும் அதற்குத் தெரியாது. ஏனெனில், இந்தச் சட்டம், லைசென்ஸ் அனைத்தும் மனிதர்களுக்குத்தானே தவிர, இயற்கைக்கு இவை எதுவும் பொருந்தாது” என்றார்.

மக்களுக்காக மக்களாட்சி செய்கிறோம் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இதுபோன்ற சூழலியல் செயற்பாட்டாளர்களின் வார்த்தைகளுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள், உங்களின் அகோரப் பசிக்கு எங்களைக் காவுகொடுத்துவிடாதீர்கள்!

- உங்கள் கரையை நோக்கி!


கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன்

கேள்வி: ``நீங்கள் பல முனைகளில் பயனுள்ள தலையீடுகள் செய்வதில் மகிழ்ச்சி. சீர்திருத்தத்திலும் மாற்றங்களிலும் தமிழ்நாட்டின் பல இயக்கங்களின் சரித்திரத்தை நீங்களும் உணர்ந்தவரே.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டையும் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல சமூகங்கள் ஊக்கத்திற்கும் உத்வேகத்திற்கும் தமிழகத்தை எதிர்பார்த்திருக்கின்றன. எனினும், சமீபகாலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவதன்மூலம் திராவிடப் பண்பாட்டை  பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இது பற்றிய உங்கள் கருத்து என்ன?’’


பதில்:

``என் முயற்சியும் இலக்கும் தாங்கள் அறிந்ததே. தமிழகத்தின் திராவிடப் பாரம்பர்யம் சமீப காலத்தையது அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் தொட்டுத் தொடர்வது. 1000 வருடங்களுக்கு முன்னால் திரு.ராமானுஜரின் சமூகப் புரட்சி ஓர் அடையாளம், ஒரு முக்கியத் தருணம் என்றுகூடச் சொல்லலாம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பழைய பதிப்புகளில் `திராவிட வேத சாகரம்’ என்றிருக்கும். அரசியலில் திராவிட இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்த வேளையில் அதை ஒருவேளை பதிப்பகத்தார் நீக்கினார்களோ என்னவோ. தாங்கள் குறிப்பிட்டதுபோல் பெரியாரின் இயக்கம் கேரளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே அவருக்கு ஆரம்பக் காலத்தில் கொடுக்கப்பட்ட `வைக்கம் வீரர்’ என்ற பட்டம். அப்பெயர் கேரளத்திலும் தமிழகத்திலும் பிரபலம்.

p8f.jpg

என்றும் இன்றும் சுபிட்சத்துடன் கூடவே அசட்டுத் துணிச்சலும் வரும் என்பதற்கு அடையாளமே உலகெங்கும் ஃபாசிசத்தின்பால் சிலருக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு. உலகையே வலக்கைப் பக்கம் திரும்ப வைக்கும் அம்முயற்சி வெல்ல வாய்ப்பில்லை. அவை ஒரு தற்காலிக ஃபேஷன், சிகையலங்காரம் போல ரொம்பகாலம் நீடிக்காது என்பதே என் நம்பிக்கை. சமூகம் சமச்சீர் அடைவதில் கலக்கம்கொள்ளும் பழைய தலைமுறையினர் (அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலைமுறையினர்), இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழைமைவாதத்தை, சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீனத் தேன் தடவித்தர, திணிக்க முயற்சி செய்கின்றனர். கலாசாரம், பண்டிகைகள், இறைவழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழைமையைப் பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களில் உள்ள வலதுசாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும் எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடுதழுவிய ஒரு சீரழிவாகவே நான் பார்க்கிறேன்.

நான் நாத்திகன் அல்லன், பகுத்தறிய முற்படுபவன். நாத்திகன் என்ற பெயர்க்குறிப்பு ஆத்திகர்கள் செய்தது. அவர்கள் எனக்கு நாமகரணம் செய்வதை நான் விரும்பவில்லை. நாத்திகன், பகுத்தறிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று வாதம் செய்பவர்கள் இவ்விரண்டு நிலைகளையும் பகுத்தறியாத ஒரு பக்கவாதக்காரர்கள். இருவேறு கருத்துகளை ஆராய்ந்து நிஜத்தை நெருங்க ஆவலுற்றிருப்பவரே பகுத்தறிவோர். அவர்களின் எண்ணிக்கை தானாகவே கூடிவிடும்.

விஞ்ஞானமும் ஞானமும், முன்னேற்றத்தின்பால் மனித குலத்திற்கே உள்ள ஈர்ப்பும், பகுத்தறிவுவாதிகளின் எண்ணிக்கையை எதிர்ப்பாளர்களையும் மீறிக் கூட்டியே தீரும். இந்த உலக நியதி தன்னிச்சையாய்ச் செயல்படக் காத்திராமல்  தமிழகத்தைப் பாதுகாக்கும் பணியில் இளைஞர் சமுதாயம் இறங்கிவிட்டது. பழையன கழியும், புதியன புகும். பழைய கலாசாரத்தில் போற்றப்பட வேண்டிய மேற்கோள்களைக் காட்டாமல் அவற்றை மறைத்தும் மறந்தும் செயல்படுகின்றனர், பழைமைவிரும்பிகள். விவசாயத்தை அழித்து நிலத்தடி வாயுக்களை வர்த்தகம் செய்ய முயற்சிசெய்வதும், புராணக் கதைகளைச் சரித்திரமாக்க முயற்சிசெய்வதும் இவர்கள் காலகாலமாகச் செய்யும் அயராத் தீய பணிகள்.

முன்பெல்லாம் அமைதியாக நடந்த பல பண்டிகைகளில் ஆர்ப்பாட்டம் அதிகமாகி, பக்தியையும் தாண்டிய வர்த்தகமாக அவை மாறிவருகின்றன. இதைத் தமிழக மக்கள் பல ஆண்டுகளாகக் கவனித்துவருகிறார்கள். ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்துவரும் வேளையில் இத்தலைமுறையினர் உலவும் நவீனத்தளங்களிலும் பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமாக் கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.

முன்பெல்லாம் இத்தகைய இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். `எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நம்பிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும். மாறாது நடப்பது மாற்றம் மட்டுமே. எத்தனை பேர் முயன்று அதைப் பின்னோக்கித் தள்ளினாலும். சுழலும் இவ்வுலகின் ஈர்ப்பு அதை முன்னோக்கித் தள்ளிவிடும். மீண்டும் தமிழகம் சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாகும் நாள் வெகுதொலைவிலில்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய்க் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துகள்.

நன்றி பல
அன்புடன்,
கமல்ஹாசன்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

கமல்ஹாசன்  
 
 
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன்என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2என்னுள் மையம் கொண்ட புயல்! - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்!”என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!என்னுள் மையம் கொண்ட புயல்! - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது!”என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை!”என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்!என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்!”என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”
 

 

டந்த வாரத்துக் கட்டுரை பற்றி இரு விளக்கங்கள். ஒன்று, மதம் குறித்து நான் பேசியது. அதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடினத் தொனி இருப்பதாக வடநாட்டு ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் தீவிரவாதம் என்றால் அவர்கள் ‘டெரர்’ என்று அடிக்கிறார்கள். முன்புதான் நாம் `சதக் சதக்’, `ரத்தம் சொட்டச் சொட்ட’, `கத்தி குத்தக் குத்த...’ என்று செய்திகளைப் பரபரப்பாக்கி எழுதுகிறோம் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது நாம் அதிலிருந்து மாறிக் காலங்கள் பல ஆகின்றன. ஆனால் அந்த ‘சதக்’கை இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். அவர்களின் டி.ஆர்.பி பரபரப்பிலும் எனக்கு ஒன்றே ஒன்று பிடித்திருந்தது. தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ‘ஒரு வார இதழில் வந்த...’ என்று இழுத்தபோது, அவர்கள் ‘ஆனந்த விகடனில் வந்த’ என்று வெளிப்படையாகச் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு முன்னேற்றம். ரஜினி என் பெயரைச் சொல்வதோ, அவரைப்பற்றி நான் சொல்வதோ தவறில்லையே. அதேபோல்தான் இதுவும்.

p10b.jpg

விஷயத்துக்கு வருகிறேன். நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் p10c.jpgஅதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை.  கிறிஸ்து பிறந்த யூதேயாவில் புரட்சி ஏற்பட்டது. அதில் பொந்தி பிலாத்துவினுடைய ஆட்சியை எப்படியாவது ஆட்டிவிடவேண்டும் என்கிற ஆர்வம் யூதர்களுக்கு இருந்தபோதுகூட இயேசுவின் நல் சீடர்களாக இருந்தவர்கள் அந்த வன்முறை வேண்டாம் என்று தடுத்ததாகத்தான் நமக்குச் செய்திகள் வருகின்றன. பைபிளைத் திருத்தம் செய்ய எத்தனை முறை முற்பட்டாலும் அதில் இருக்கும் உண்மை இன்னும் பிரகாசமாகத்தான் இருக்கிறது.  இப்படி எல்லா மதங்களும் அன்பையும்,  அமைதியையும்தான் போதிக்கின்றன.

p10a.jpg

அடுத்து இன்னொரு விளக்கம். எண்ணூர்க் கழிமுகத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்துப் பேசியபோது நித்தியானந்த் ஜெயராமன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு என்னை அழைத்தார். ‘ஐயய்யோ சார், என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது உங்கள் பெருந்தன்மை. ஆனால் ‘இது நான் மட்டும் செய்யும் சாகசம்’ என்ற தொனியில் அமைந்துள்ளது. இதன் பின்னால் பலர் இருக்கிறார்கள் என்பதே உண்மை’ என்று பதறினார். ‘ஏன் எங்களின் பெயர்களை விட்டீர்கள்’ என்று மற்ற சூழலியலாளர்கள் கேட்காததும், தன் பெயர் மட்டும் வந்ததை நினைத்து நித்தியானந்தம் பதறுவதும்தான் அவர்களின் குணம்.

ஆனால், அந்தக் குணத்தை உணராது, நமக்காக வீதியில் நின்று குரல் கொடுப்பதற்கென்றே பிறந்தவர்கள் என்று நினைத்து, அவர்களைக் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறோம். ‘அவர்கள் நம்மவர்கள்’ என்ற எண்ணம் நமக்கு இல்லாததால்தான் அரசு அவர்கள்மீது தைரியமாக வழக்குத் தொடுக்கிறது, கைது செய்து உள்ளே தள்ளுகிறது. ஆனால், அவர்கள்தாம் நாம் கரையேற, நம்மைக் கரைசேர்க்க உதவும் கலங்கரை விளக்கங்கள். ஆமாம், அந்தக் கலங்கரை விளக்கங் களோடுதான் இன்று நான் கைகோத்துள்ளேன். இந்தச் சமூகம் மேம்பட அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனையெத்தனை திட்டங்களை வைத்துள்ளார்கள் என்று நினைக்கையில் அவர்கள் எனக்கு ஆதர்சமாக மாறிப்போகிறார்கள்.

இந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரல்களைப் பெருங்குரலாக மாற்ற வேண்டும் என்ற என் பேராசையின் வெளிப்பாடே நான் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி. (Mobile App)  ஆம், கல்லா கட்டும் கறைபடிந்த ஆட்சியாளர்களை வெளுத்து, துவைத்து, தூய்மைப்படுத்தி மக்களுக்குச் செயல்பட வைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இதில் சமூகச் செயற்பாட்டாளர்களும் என் லட்சக்கணக்கான நற்பணி இயக்கத்தாரும் இணைந்து இருப்பார்கள். லஞ்ச லாவண்யங்களை, அரசின் பாராமுகங்களை... இதில் நீங்கள் பட்டியலிடலாம். இந்தச் செயலி வழி இணைந்திருப்பவர்கள் உங்களின் குறைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எடுத்துவைத்து நீதிபெற உதவி செய்வார்கள்.

‘அந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களை உங்கள் இயக்கத்துடன் இணைக்கப்போகிறீர்களா’ என்று சிலருக்கு மட்டும் சில கேள்விகள் எழும். அவர்கள் என் ரசிகர்கள் அல்லர், நான் அழைத்ததும்  வந்து என்னுடன் இணைந்துகொள்ள. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரிந்துவைத்துள்ளதால் இயல்பாக இணக்கமாக எங்களால் இயங்க முடிகிறது. அந்தவகையில் நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இணைந்துள்ளோம். அதனால் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் முதற்கட்டமாக எங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அருண் கிருஷ்ணமூர்த்தி ஆறு, ஏரி, வாய்க்கால், குளம்... என நம் பாரம்பர்ய நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை என் நற்பணி இயக்கத்தாருக்குத் தருவார். அதை எங்கள் இயக்கத்தார் நம் தமிழக மக்களுக்கு மடைமாற்றுவார்கள். மக்களும் இயக்கத்தாரும் தங்கள் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை அரசின் ஒப்புதலுடன் மேற்கொள்வார்கள். ஓராண்டுக்குள், ஈராண்டுக்குள், மூன்றாண்டுக்குள்... சீரமைக்கும் நீர்நிலைகளைப் பொறுத்து இப்படி டார்கெட் ஃபிக்ஸ் செய்துகொள்வோம். இதற்கு, கோடிகளில் பணம், பொக்லைன் போன்ற முரட்டு இயந்திரங்கள் தேவை என்று எண்ணம் வேண்டாம். சாதாரண மண்வெட்டிகளும் சாமானிய மக்கள் செல்வங்களுமே போதுமானவை.

இப்படிச் செய்வதன்மூலம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சென்னை மக்கள் மழை வந்தால் மகிழலாம். ஆம், அந்த மழை மக்களை வதைக்காமல் பொருளாதாரத்தை வீணாக்காமல் நீரும் வீணாகாமல் அந்தந்த நீர்நிலைகளில் சேகரிக்கப்படும். இப்படி எளிய வார்த்தைகளைக் கோத்துச் சொல்வதால் இது ஏதோ இன்று தொடங்கி நாளை முழுமையடையும் திட்டம் என்று எண்ணிவிடாதீர்கள். ‘இன்னைக்கு விதைபோட்டுட்டு நாளைக்கே பழம் சாப்பிடணும்னு நினைச்சா முடியுமோ’ என்ற என் பட வசனத்தையே துணைக்கு அழைக்கிறேன். இது எங்களின் நீண்டகாலக் கனவு. ஆனால் சாத்தியமாகக்கூடியது.

அடுத்து, அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். `மை சன் இஸ் எ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் இன் அமெரிக்கா’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதுபோல், ‘என் மகன் கிராமத்துல விவசாயம் பண்றான்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் காலத்தை நோக்கி விவசாயத்தை நகர்த்தும் முனைப்பில் இருக்கும் போராளி.

சம்பா, குருவை என்று காலம் பிரித்துச் சாகுபடி செய்துகொண்டிருந்த விவசாயிகளை, சாகும்படி செய்தது யார் குற்றம்? காலங்காலமாகக் கொடுக்கும் இடத்தில் இருந்த இவர்களைக் கையேந்தும் இடத்துக்குத் தள்ளியது யார்? இனி வருங்காலம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாகவும், இவர்களை மீண்டும் கொடுக்கும் இடத்தில் அமரவைப்பதாகவும் இருக்கும். அதற்கான முனைப்புதான் எங்களின் இந்த இணைப்பு.

அடுத்து, ‘அறப்போர்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பார் ஜெயராமன். இவருடைய அணியின் பணிகள், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு நிகரானவை. இந்த ‘அறப்போர்’ இயக்கத்தை 2015-ல் ஊழலை எதிர்க்கக்கூடிய 25 முதல் 30 பேர் சேர்ந்து கட்டமைத்திருக்கிறார்கள். மக்கள் பங்கெடுக்கும் உண்மையான ஜனநாயகமாக, தொடர்ந்து கேள்விகள் கேட்கக்கூடிய ஜனநாயகமாக மாறும்போதுதான் இது உண்மையான மக்களாட்சியாக மாறும். அதைநோக்கி, இவர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள்; மக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றி மிகப்பெரிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்கிறார்கள். நீதியும் சமத்துவமும் உள்ள சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம். என் நோக்கமும் அதுதான் என்பதால் இவர்களுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்.

இவர்களின் முக்கியமான கருவி, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பாமரர்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்கிறார்கள். ஆம், நமக்குக் கிடைத்த முதல் சுதந்திரத்தை நாம் யார் யாரிடமோ அடகு வைத்துவிட்டோம். அடகு வைத்த அந்தச் சுதந்திரத்தை மீட்க இந்தச்  சட்டம் ஒரு மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படும். இந்தச் சட்டத்தைக் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இயற்றிய அரசு, அதைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் வேதனை. ‘அரசு வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டும்’ என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம். ஆனால், இருட்டில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அரசு நடைமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமே இருட்டில்தான் கிடக்கிறது என்பதே நிதர்சனம்.

p10d.jpg

அரசு, அரசு உதவி பெறும் அனைத்து அமைப்புகளும் இந்தச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இவற்றிலிருந்து உங்களுக்கு ஒரு தகவல் தேவை என்றால், நீங்கள் மனு செய்த குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்தத் தகவல் உங்களுக்குத் தரப்படவேண்டும். இல்லையென்றால் மேல்முறையீடு செய்யலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் தகவல் ஆணையத்துக்குச் சென்று தகவல் பெறலாம். இதுதான் நடைமுறை. ‘எப்படித் தகவல் பெறலாம், எப்படித் தகவல் தரலாம்’ என்ற இந்த நடைமுறையை மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், ‘எந்தெந்தச் சட்ட நுணுக்கங்களை மேற்கோள்காட்டி எப்படியெல்லாம் தகவல்களைத் தராமல் இருக்கலாம்’ என்ற அடிப்படையில் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிகிறேன்.

மேலும், ஒரு நீதிமன்றத்தைப்போல் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கவேண்டிய தகவல் ஆணையமும் பூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு தன்னை வெளிப்படுத்தத் தயங்குகிறது. இப்படி வெளிப் படைத்தன்மைக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையே இவர்கள் பூட்டிவைத்துள்ள அவலம் இங்கு மட்டுமே சாத்தியம். அந்தப் பூட்டை அறப்போர் இயக்கத்தார் போன்ற சிலர் முட்டி மோதி உடைக்கத் தொடங்கி அவலங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இந்தச் சட்டம் பற்றியும், அதன்மூலம் மேற்கொள்ள வேண்டிய நற்பணிகள் குறித்தும் என் இயக்கத்தாருக்கு இவர்கள் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவார்கள். இதன்மூலம் எளிய மக்களின் கரங்கள் வலுப்படும். ஊழல்கள் அம்பலப்படும். நாளடைவில் உண்மையான மக்களாட்சி மலரும்.

`இப்படி அரசைக் கேள்விகேட்டுக்கொண்டே இருக்கிறாயே... உன் நோக்கம்தான் என்ன?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களைப் பதில் சொல்லும் இடத்தை நோக்கி நகர்த்துவது. அதன் மூலம் அவர்களைச் செயல்பட வைப்பது. இதுதான் எங்களின் நோக்கம். ‘இல்லையில்லை... இதன்மூலம் பதிலளிக்கும் இடத்தை நோக்கி நீ நகர முயற்சி செய்கிறாய்’ என்ற சிலரின் சந்தேகப்பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. முடிந்தால் செய்யுங்கள்; இல்லையேல் எங்களையாவது செய்ய விடுங்கள். ஆம் ‘செய் அல்லது செய்ய விடு’ என்கிறேன். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?

- உங்கள் கரையை நோக்கி!


“பயப்பட வெறுக்கிறேன்!”

படம்: ஜெ.வேங்கடராஜ்

ருத்துவம் மற்றும் அதன் துணைப் படிப்புகளைக் கற்றுத்தரும், சென்னைப் புறநகரில் உள்ள `செட்டிநாடு ஹெல்த் சிட்டி’யின் கலைவிழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அந்த மாணவர்களுடன் உரையாடினேன். அதன் தொகுப்பு:

 “கடந்த 50 வருடங்களில், உங்கள் ரசிகர்களிடமிருந்து கிடைத்த மறக்கமுடியாத விமர்சனம், ரியாக்‌ஷன் என்ன?”

 “நிறைய. பட்டியலிட்டால்  நேரம் போதாது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய விமர்சனங்களால், அன்பால் என்னை நெகிழ்த்துகிறார்கள். ஒன்றைச் சொல்லலாம். `விஸ்வரூபம்’ படப் பிரச்னைகளின்போது பல்வேறு அமைப்புகள், நபர்கள் என்னை மனரீதியாக, பணரீதியாக நெருக்கினார்கள். என் வீடு என் கையை விட்டுச் செல்லும் சூழல்கூட ஏற்பட்டதை ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டேன். சில ரசிகர்கள், தங்கள் வீட்டுப் பத்திரத்தை சாவியுடன் அனுப்பி, ‘என் வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.

நான் கோபத்தில்தான் அரசியல் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். அல்ல. நான் உங்களுக்கு, மக்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த அன்பு, உறவுகளிடம்கூடக் கிடைக்காதது. உறவுகள் வீட்டைப் பங்குகொள்ள நினைப்பார்கள். என் ரசிகர்கள், வீட்டைக் கொடுக்க நினைத்தார்கள். அதிலும் ஒருவர், தன் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டால், அவருக்கு வீடில்லாத நிலை. அப்படியும் கொடுக்கத் தயாரானார்.”

p10f.jpg

“உங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவர்கள். நீங்கள் மருத்துவராக வேண்டும் என நினைத்ததுண்டா? அந்த வாய்ப்பு இப்போது உங்கள் முன் இருந்தால் டாக்டர், ஆக்டர் இரண்டில் எதைத் தேர்வு செய்வீர்கள்?”

 “நான் ரொம்பவும் பேராசைக்காரன். நான் இரண்டுமாக இருக்க விரும்புவேன். இரண்டுமே சமமான முக்கியத்துவம்கொண்டவைதாம். ஆனால் ஒன்று...  டாக்டர்கள் நினைத்தால், முழு முயற்சி செய்து பயிற்சி பெற்றால் நடிகராக முடியும். நடிகர்கள், டாக்டராவது சாத்தியமில்லை.”

 “உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் வெற்றிகரமான சம்பவம், தோல்வியில் துவண்ட சம்பவம் எது? தோல்வியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

 “சக்சஸ் என்பது என்ன? ஒரு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் செய்வதா... இல்லை. என் வாழ்நாளுக்குப் பிறகும் பேசப்படும் படம்தான் வெற்றி. நான் இருக்கும்போதே, என் படைப்பு மறக்கப்படுமானால் அதுவும் எனக்குத் தோல்வியே. தோல்வி என்பது, ஒரு விஷயத்தை எப்படிச் செய்யக்கூடாது என்று நமக்குக் கற்றுத்தருகிறது. எடிசன் சொன்னதுதான். `ஒரு பல்ப் எப்படிச் செய்யப்படக்கூடாது என்பதற்கான 1001 வழிகள் எனக்குத் தெரியும்’ என்றார்.’’

“உங்களிடம் உள்ளதில், நீங்கள் பெருமைப்படும் பண்பு என்ன?”

“இத்தனை வருட வாழ்வுக்குப் பிறகும் ஓர் ஆணாக இன்னும் என்னிடம் அன்பும், கண்ணீரும் நிறைய இருக்கின்றன. அதற்காகப் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், பெண்களிடம் ஆண்களைவிட அதீத அன்பும், அதிக கண்ணீரும் இருக்கின்றன. அந்த விஷயத்தில் நான் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறேன்.”

 “நீங்கள் 20 வருடங்களுக்கு முன்பே உடலுறுப்பு தானம் செய்தவர். அப்போதே எப்படி அப்படி ஒரு சிந்தனை வந்தது... ஏதாவது சம்பவத்துக்குப் பிறகு அது நடந்ததா?”

“வாழ்க்கை. ஆம், வாழ்க்கை என்பதும் ஒரு சின்னச் சம்பவம்தானே. அதுவரையிலான என் வாழ்வுதான் தானம் செய்யலாம் என்பதைக்  கற்றுக்கொடுத்தது. ‘உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், உங்கள் உறவினர்கள் உங்கள் உடலை சொர்க்கத்துக்கு அனுப்ப நினைப்பார்கள். எதற்காக இந்த உடலுறுப்பு தானம்’ என்று என் நண்பர்கள் இதைக் கொஞ்சம் கிண்டலாகக் கேட்டார்கள். “என் உடலில் 15 மீட்டர் தோல் இருக்கிறது. ஏழு தொழுநோயாளிகளுக்கு அதைச் செருப்பாக்க முடிந்தால், இங்கேயே இருக்கிறது சொர்க்கம்” என்றேன். எதற்காக வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளுங்கள். ‘மருத்துவப்படிப்புக்குச் செய்யவேண்டும்’ என்று முன்னுதாரணமாக இருக்க ஆசைப்பட்டுச் செய்தேன்.

அதையும் மீறி, நாம் பார்க்காத, எப்படி இருக்கும் என்று தெரியாத சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்க இப்படி அலையும் கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை. அதை யாரும் பார்த்துவிட்டு வந்து, ‘நல்லா இருக்கு’ என்று சொல்லவும் இல்லை. எந்த ரியல் எஸ்டேட்காரரும் சுற்றிக்காட்டவும் இல்லை. நான் அந்த இடத்துக்குப் போக அலையவில்லை. அவ்வளவுதான். ‘என் உடல் மண்ணுக்கு’ என்பார்கள். அதை ஏன் மண்ணுக்குக் கொடுப்பானேன்.. அதனால் உங்களுக்குக் (மருத்துவத்திற்கு) கொடுக்கிறேன்.”
 
 “மருத்துவர்களைத் தவறாகவே சித்திரித்து நிறைய படங்கள் வருகின்றன. அதனாலேயே நாங்கள் (மருத்துவர்கள்) நிறைய கேலிகளையும் கேள்விகளையும் எதிர்கொள்கிறோம். மிகவும் வருத்தமாக உணர்கிறோம். உங்கள் கருத்து என்ன?”

 “வருத்தப்படாதீர்கள். என்னிடம் ஓர் அரசியல்வாதி `அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல்வாதிகள் என்கிறீர்களே... நடிகர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்றால்  நீங்கள் வருத்தப்படமாட்டீர்களா?’ என்று கேட்டார். `என்னைச் சொல்லவில்லை; அது நானாக இருக்காது என்ற தைரியம் எனக்கு இருக்கிறது. உங்களுக்கும் அது இருக்க வேண்டும்’ என்றேன். எல்லாத்துறைகளிலும் பேராசையின் காரணமாகப் பழுதுபட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவராக நீங்கள் இருக்கக்கூடாது என்று முயற்சிசெய்ய ஆரம்பித்தாலே போதும். உங்கள் துறைக்கே கெட்டபெயர் வாங்கித்தரும் அந்தக் கேவலமான சிறுபான்மையை நீங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டும்.”

 “பெரிய தலைவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மக்கள் பாதிக்கப்பட்டார்கள். உங்கள் உடல்நலத்தை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?”

 “புகைபிடிப்பதை விட்டுவிட்டேன், படங்களிலும்கூட. நான் புகைபிடிக்க ஆரம்பித்தது, ‘சிவாஜி சார் மாதிரி ஸ்டைலாகப் பிடிக்க வேண்டும்’ என்றுதான். அது எனக்குப் பின்னாலும் தொடரக்கூடாது என்று நிறுத்திவிட்டேன். என்னைவிட, என்னை நேசிப்பவர் யாரும் இருக்க முடியாது. ஆக, நான் நேசிக்கும் என்னைப் பாதுகாப்பது என் கடமையும்கூட.”

 “உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் என்ன?”

 “பயம் பற்றிய பயம்தான். ஒருநாள் எதற்காகவாவது பயப்படுவேனோ என்று சிந்திக்கவே பயமாக இருக்கிறது. பயப்பட வெறுக்கிறேன். பயத்தை எதிர்கொண்டு வெல்ல நினைக்கிறேன்.”

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை!”

கமல்ஹாசன்
 

 

 

 

சென்னை, தஞ்சை, மன்னை, பெங்களூரு உள்பட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 187 இடங்களில் வருமானவரிச்சோதனை. ‘அரசியல் காழ்ப்பு உணர்ச்சியே இதற்குக் காரணம்’, ‘பழிவாங்கும் நடவடிக்கை’, ‘இது வழக்கமான அரசு நடைமுறை. மத்திய-மாநில அரசுகளுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’... இப்படிப் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள். ‘நாங்கள் காந்தியின் பேரன்கள் கிடையாது’ என்று அவரும் ஒப்புக்கொண்டு விட்டார். அது மக்களுக்கும் தெரியும். இந்த ரெய்டு எதற்கு என்பதும் அவர்களுக்குப் புரியும்.

p10b1.jpg

வரி,வழக்கு விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் வரிகட்டுவதைப் பற்றிச் சில p12b1.jpgவிஷயங்கள் பேச வேண்டும். ‘சரியாக வரி கட்டுகிறேன்’ என்று  நான் ஏன் மார்தட்டிக்கொள்கிறேன்? கட்டாதவர்களை ஏன் குறை சொல்கிறேன்? பாமர மக்களுக்கு இது புரியாமல்கூடப் போகலாம். ஏனெனில், அவர்கள் கட்டபொம்மன் காலத்திலிருந்து மீண்டு வராமல் இருப்பதற்கான வழிகளை அரசியல்வாதிகள் சிலபேர் செய்து வைத்திருக்கிறார்கள். வரி கேட்பவர்கள் தவறான ஆட்கள் என்பது போலவும், கடனுக்கும் கந்துவட்டிக்கும் வரிக்கும் கொஞ்சமே வித்தியாசம் இருப்பதுபோலவும் பாமரனை நினைக்கவைத்துவிட்டார்கள். அதை நான் மறுதலிக்கிறேன்.

‘வரி கட்டமாட்டேன்’ என்று கட்டபொம்மனிடமிருந்து வந்த எதிர்க்குரல்கூட, வந்தேறிகள் நம்மை ஆண்டபொழுது வந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கவேண்டும். அதைக்கூட அவர்களுக்குள் இருந்த ஒருமாதிரியான வியாபாரச் சண்டையாகத்தான் நான் பார்க்கிறேன். ‘இந்திய நாடு, இது என் ஊர் என்ற முழுக் கணிப்பு அவர்களுக்கு வந்திருக்க அப்போது வாய்ப்பே கிடையாது. ஏனெனில், அப்போது அவர்கள் தங்களுடைய குறுகிய நிலங்களை எல்லாம் பெரும் மாகாணங்களாகவும், குறுநில அரசுகளாகவும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அதனால்தான் சுதந்திரத்துக்கு முன் 56 நாடுகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அப்போது அவர்கள் சண்டைபோட்டதுகூட, தேசத்துக்காகவா அல்லது ‘நான் ராஜா, என்னையே நீ வரி கேட்கிறாயா?’ என்ற அந்தக் கோபமா என்பது இன்னும் பிடிபடாத விஷயமாகத்தான் இருக்கிறது. நம் சொற்றொடரில் நாட்டின் பெருமை பேசும்போது இவர்களை சுதந்திரப்போராட்ட வீரர்களாக ஆக்கிக் காட்டியதில் பிசகும் இல்லை.

p12a1.jpg

ஆனால், அவர்கள் இந்த இந்தியா என்ற நாட்டை அப்போது கண்டிருக்க முடியாது. ஆனால், அதை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட சிலர் இருந்தனர். அதில் மருதநாயகம் முக்கியமானவராக எனக்குத் தோன்றியது. அதையும் சில வரலாற்று ஆய்வாளர்கள் மறுதலிக்கலாம். ‘நீங்கள் எடுக்கும் சினிமா என்பதற்காக மருதநாயகத்துக்கு மட்டும்தான் அது புரிந்திருக்குமா?’ என்றும் சிலர் கோபித்துக்கொள்வார்கள். ஆனால், அவர் பானிபட் யுத்தம் போன்ற பல போர்களைப் புரிந்துவைத்திருந்த ஆள். ஹைதர் அலியும் இவரும் பானிபட் யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள். வெவ்வேறு யுத்தங்களில் கூலிப்படையாகப்போய் வெவ்வேறு அணிகளில் இருந்தவர்கள். ஒரு பறவையின் பார்வையில் அவர்களுக்கு இந்த நாட்டைப்பற்றிய புரிதல் இருந்தது. ஆனாலும் இப்போதிருக்கும் வரைபடமாக இந்த நாட்டை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வாய்ப்பே கிடையாது. சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு, இனி இங்கே தனித்தனிப் பகுதிகளாக ஆட்சி செய்யமுடியாது என்று உணர்ந்து, இந்தியாவின் ராணியாக விக்டோரியாவை அறிவித்த பிறகுதான் பிரிட்டிஷாருக்கே இந்தியாவின் முழுப்படமும், வியாபாரமும் புரிய ஆரம்பிக்கிறது.

பிறகு வியாபார நலன் கருதியும், சௌகர்யம் கருதியும் இந்த வரைபடத்தை ஒரு குடையின்கீழ் கொண்டு வருகிறார்கள். அதன்பிறகு ரூபாய் நோட்டை இங்கேயே அச்சடிக்கலாம் என்ற முடிவை பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்கிறது. அது நம் சுதந்திரத்துக்கே இடையூறாக இருக்கக்கூடும் என்ற பதற்றம் காந்தியாருக்கு வருகிறது. அதனால்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸுக்கு எதிர்க்குரல் ஒன்று இருந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து ‘ஃபிக்கி’ என்கிற ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி என்ற அமைப்பை அவர் ஆரம்பித்துவைக்கிறார். அதனால்தான் ஃபிக்கியில் நான் இன்று இருக்கிறேன். ‘அனைவரின் தேவைக்கும் இயற்கை நல்கும். ஆசைக்கு நல்கவே முடியாது.’ இது ஃபிக்கியைத் தொடங்கிவைக்கும்போது காந்தி சொன்னது.

ஏனெனில், அப்போதும்கூட வரி கட்டுவதில்  சின்னத் தயக்கம் இருந்தது. அதுவும் தவறுதான். ஏனெனில், சாலை, பள்ளிக்கூடம் என்று  அரசு வேலைகள் நடக்கும் இடத்தில் வரி கட்டவேண்டியது முக்கியம். ஆம், பிரிட்டிஷ் அரசாங்கத்திலேயே வரி கட்டாமல் இருந்தது தவறு. ஏனெனில், அவன் தந்த சாலை வசதிகளையும் வாங்கிக்கொண்டு, வரியும் கட்டாமல், ‘இது சரியில்லை’ என்று புகார் மட்டுமே தந்துகொண்டிருந்தது என்னைப் பொறுத்தவரை தவறே. ஆனால் இன்று இது என் நாடாக, இந்தக் குடியின் அரசாக மாறிய பிறகு, வரிகட்டாமல் இருப்பது குற்றம். தவறு என்பதுகூடக் கிடையாது, மிகப்பெரிய தேசத்துரோகம்.

ஆனால், அதை அப்படி யாரும் சொல்லித்தருவதும் இல்லை என்பதே பிரச்னை. அவ்வளவு ஏன், ‘அதைப்பற்றி ரொம்ப அழுத்தாதீர்கள்’ என்று அரசியல்வாதிகள்கூடச் சொல்கிறார்கள். அழுத்தினால், ‘மக்களிடம் இருந்து பறிக்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். இது பறிப்பது அல்ல. ‘செலவுக்கு வைத்துக்கொள்’ என்று பள்ளிக்கூடம் போகும் குழந்தைக்கு அம்மா காசு கொடுப்பதுபோல நாம் அரசுத் துறைகளிடம் கொடுக்கிறோம். அதைக் கொடுத்தேயாகவேண்டும்.

இன்று ‘மெர்சல்’ திரைப்படத்தில்கூட சிங்கப்பூர், லண்டன் பற்றியெல்லாம் வசனங்கள் வருகின்றன. லண்டனில் மொத்த மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் மிகச்சரியாக வரி கட்டியே தீருகிறார்கள். அதுவும் இங்கு உள்ளதைவிட அங்கு அதிக வரி. அப்படிச் சரியாகக் கட்டினால்தான் அவ்வளவு வசதிகளை நாம் இங்கு எதிர்பார்க்க முடியும். நீங்கள் சுண்டைக்காய் பணத்தைக் கொடுத்துவிட்டு, பூசணிக்காய் வேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால், நாம் அதைத்தான் பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

‘நீ ஒருத்தன் சரியா வரிகட்டுவதால் ஏதாவது மாறுமா?’ என்று கேட்டால் புரட்சியோ, போராட்டமோ... அந்த ஒருவனின் தனிக்குரலில் இருந்துதான் தொடங்குகிறது. பிறகு அந்தக் குரல் இரண்டாகும். பிறகு அதுவே பல்கிப் பெருகும். தேர், எந்த ஒருவனின் பலத்தினால் நகர்கிறது. நம்புகிறவன், ‘உள்ளே இருக்கும் சாமி’ என்பான். விஷயமும் இயற்பியலும் தெரிந்தவன், ‘அது நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது’ என்பான். ‘நான் ஒருத்தன் இழுக்கலைனா என்ன’ என்று நினைத்துவிட்டால் பிறகு தேர் எப்படி நிலைக்கு வரும், உற்சவ மூர்த்தி எப்படி உள்ளே போவார்? ‘தேர் இழுக்க மாட்டேன்’ என்று ஒருவர் ஒதுங்கிச்சென்றால், ‘தெய்வக்குத்தம்டா, நாசமாப்போயிடுவ’ என்று சொல்கிறவர்கள், அதையே வரி கட்டும் விஷயத்தில் யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்களே, ஏன்? ‘நாம கட்டுற வரியைத்தான் அரசியல்வாதி திருடிக்கிறாரே, பிறகெதுக்கு வரி?’ என்பார்கள். அவன் வரி கட்டினாலும், கட்டாமல் விட்டாலும் திருடுவான். அவனைத் திருடாமல் பண்ண வேண்டியதற்கான முன்னெச்சரிக்கை என்பது வேறு. ஆனால், வரி கட்டவேண்டியது நம் கடமை.

 கோயிலுக்கு நேர்ந்துகொண்டு நாம் காசு போட்டு ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தி, அதில் நம் பெயரைக் கொட்டை எழுத்தில் பொறித்துவைக்கிறோம். அந்தமாதிரி நாம் கட்டும் வரியில் நம் பெயர் பொறிக்கவில்லை என்றாலும், நம் நாட்டின் முன்னேற்றப்படிகளில் கண்டிப்பாக நம் பெயர் பதிந்தே தீரும். பொதுவாக வரியை எதிர்க்கும் அறிஞர்கள், அது இல்லாமல் அரசை நடத்த நம்பகமான வழி ஒன்றைச் சொல்லுங்கள். 90 சதவிகிதம் சூப்பர் டாக்ஸ் போட்டுக்கொண்டிருந்தபோதும் ஏய்த்தீர்கள். பிறகு 40, 33, 30 சதவிகிதங்களாகக் குறைத்தபோது நியாயமாகக் கட்டியிருக்க வேண்டுமல்லவா? ஆனால், குறைத்தாலும் ஏய்க்கிறீர்கள் என்றால், எதை வைத்து நாட்டை நடத்துவது என்று கேட்க மாட்டார்களா? அரசியல்வாதி ஆன பிறகு இப்படிப் பேசுகிறேன் என்று தயவுசெய்து நினைக்கவேண்டாம். அதற்கும் முன்பே இதை உணர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

p12c1.jpg

அவர்கள் எனக்கு சீனியர்கள், பெரிய நடிகர்கள். பெயர்கள் சொல்ல மாட்டேன். ‘பாத்ரூமில், டைல்ஸுக்குள் ஒளித்து வைத்திருந்த கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது’ என்று நான் பார்த்து வியந்த நடிகர்களைப் பற்றியெல்லாம் அப்போது செய்திகள் வரும். ‘எதற்கு அப்படிப் பணத்தை  ஒளித்து வைக்கின்றனர்? அது அவர்கள் பணம்தானே?’ என்று, நான் சிறுவனாக இருந்தபோது தோன்றும். கேட்பேன். ‘வரி கட்டலைடா’ என்பார்கள். ‘வரி கட்டலைனாலும் அது அவங்க பணம்தானே’ என்பேன். ‘டேய், வரி கட்டணும்டா’ என்று எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்வார்கள். ‘நேரில் பார்க்கும்போது அவ்வளவு கண்ணியவான்களாகத் தெரியும் இவர்கள், வரியைக் கட்டிவிட வேண்டியதுதானே’ என்று நினைப்பேன். ‘ரொம்ப ஜாஸ்தி.. கட்டினா, செலவுக்கே இருக்காது போலிருக்கிறது. பாவம்’ என்றெல்லாம் நினைத்துக்கொள்வேன். இந்த எண்ணம் எனக்கு மாறுவதற்கே பல ஆண்டுகள் ஆகின.

இதற்கிடையில், ‘நாங்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கொள்கிறோம். நீங்கள் ஏதாவது வைத்திருந்தீர்கள் என்றால், இந்தப்பக்கமாகக் கொண்டுவந்து வைத்துவிடுங்கள். `தப்புப்பண்ணிட்டேன், மன்னிப்பு’ என்று எதுவுமே நீங்கள் கேட்க வேண்டாம். ஆறு மாதங்கள் டைம் கொடுக்கிறோம். வரி கட்டிவிடுங்கள்’ என்று அறிவிப்பு வரும். எவ்வளவு பெரிய பதற்றச் சூழலில் அரசாங்கம் இருந்திருந்தால் அந்தமாதிரியான சலுகை கொடுப்பார்கள் என்று தோன்றும். எந்த அரசாக இருந்தாலும் சரி, சிந்தாந்தத்தின்படி நமக்குப் பிடிக்காத அரசாகக்கூட இருக்கட்டும். ஆனால், அரசாங்கம் நடத்தவேண்டுமா, வேண்டாமா? அரசு நியாயமாக நடத்தப்படவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதற்கு அவர்களுக்கு நியாயமான பணம் வேண்டும் இல்லையா? அந்த நியாயமான பணத்தை யார் யார் கொடுக்கிறார்கள்?

வரிகொடுக்கும் இந்தச் சிறுபான்மைக்குப் பல இடைஞ்சல்கள் என்ற குரல்களும் கேட்கின்றன. என்ன இடைஞ்சல் என்பதைக் கண்டு ஆய்ந்து அறிந்து அதை அகற்றுவதற்கான வேலைகளைப் பார்க்கவேண்டுமே தவிர, `வரியே கட்ட மாட்டேன்’ என்று சொல்வது தவறு. உங்கள் வருவாயை மீறி, தவறாக வரி போட்டிருந்தால் தவறு என்று அரசு மீது வழக்கு தொடருங்கள். சட்டத்துக்கு உட்பட்ட ஆர்ப்பாட்டம்கூடச் செய்யலாம்.  ஆனால், வரி கட்டவேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள்  நினைக்கக் கூடாது. இந்த அரசுக்காக நான் பேசவில்லை. சலுகை கொடுப்பவர்கள் நல்ல அரசியல்வாதி என்று நினைத்துவிட்டால், நம்மைவிடப் பெரிய ஏமாளிகள் வேறு யாருமே இருக்க முடியாது. ‘வரி இல்லாமல் பண்ணுகிறேன்’ என்று சொன்னால் எதைவைத்து நாட்டை நடத்தப்போகிறாய் என்று கேட்க வேண்டும். அந்த விழிப்பு இல்லையென்றால் வேறு நாடுகளுக்கேகூட நம் நாட்டை விற்றுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவ்வளவு கொடுமையான அரசியல் இங்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கடந்த வாரம் நான் அறிவித்த ‘மைய்யம் விசில்’ செல்போன் செயலி பற்றி ஒரு தகவல். ‘இந்த ஆப் சமாசாரங்கள் எல்லாம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே போய்ச்சேரக்கூடியது. எல்லோர் கைகளிலுமா போன் இருக்கு’ என்று சிலர் கேட்கிறார்கள். இந்த ஆப் என்பது என் முயற்சிகளில் ஒரு துளி. ருசி பார்க்கப் பதார்த்தத்தின் ஒரு முனையை மட்டுமே உங்களுக்குக் கிள்ளிக் கொடுக்க முடியும். கடையில் உள்ள மொத்தப் பதார்த்தத்தையும் சாம்பிள் பார்க்க இப்போதே கொடு என்றால், கொடுக்க மாட்டேன். ஏனென்றால், மொத்தத்தையும் சாப்பிட்டுப் பார்க்கிறேன் என்று நீங்கள் கொண்டுபோய்விட்டீர்கள் என்றால், நான் என்ன செய்வது?

அரசியலில் பல நுணுக்கங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, போனில் உள்ள மெக்கானிசம் தெரிந்துகொண்டு நாம் அதை வாங்குவதில்லை. அது என்னென்ன செய்யும் என்றுதான் கேட்கிறோமே தவிர, உள்ளே சர்க்யூட்டுகள் எப்படியெப்படிப் போகின்றன என்று பார்ப்பதில்லை. அதேபோல ரயிலில் ஏறுகிறோம் என்றால், அது எங்கே போகிறது, எங்கெங்கு நின்று செல்லும் என்பதைப் பார்த்துவிட்டுத்தான் அதில் ஏறுகிறோமே தவிர, ரயில் இன்ஜின் எப்படி வேலை செய்கிறது என்று புத்தகத்தைப் படித்துவிட்டு ஏறுவது இல்லை. அதேபோல இந்த ஆப் மூலம் மக்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று சொல்லலாமே தவிர, இந்த ஆப் எப்படி இயங்குகிறது என்பதை முழுவதும் விளக்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். தவிர, இந்த ஆப் என்பதை மட்டுமே நம்பி நாங்கள் அரசியலில் இறங்கவில்லை. இன்னும் அடுத்தடுத்துப் பல செயல்கள் உள்ளன.

ஒரு சின்னப் பொறி பற்றிக்கொண்டு எரிகிறது. நான் சொன்னதிலிருந்து ஏதோ பின்வாங்கிவிட்டேன் என்று  நினைக்க வேண்டாம். ‘கமலின் தீவிர ரசிகன்’ என்பதை, ‘டெரர் ஃபேன்’ என்றா மொழிபெயர்ப்பீர்கள்? நான் சொன்னதை  ‘ஹிந்து டெரர்’ என்று மொழிபெயர்த்ததும் அப்படித்தான். இந்த வார்த்தைப் பிரயோகம் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிரணியில் நிற்கும் காங்கிரஸின் பிரயோகம். நான் தீவிரவாதம் பரவி வருகிறது என்றுதான் சொன்னேனே தவிர, அவர்கள் ஆங்கிலப்படுத்திய வார்த்தையை நான் பிரயோகிக்கவில்லை. ஆனால், நான் சொன்ன கருத்தில் மாற்றம் கிடையாது. வழக்கு போடும் அளவுக்கு இது ஒரு குற்றமும் இல்லை. உடனே ‘குற்றவாளி அப்படித்தான் சொல்லுவான்’ என்பார்கள். இது குற்றமே இல்லை என்பதுதான் என் வாதம். நான் சொன்னதை மீண்டும் படித்துப்பார்க்க யாருக்குமே நேரம் இல்லை. ஒருமுறைகூடப் படிக்காத வம்பர்கள் இனிமேலும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

ஆனால், மதத்தையும் தீவிரவாதத்தையும் சேர்த்துப் பேசவே கூடாது என்ற ஒரு புதுச் சட்டத்தைச் சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எண்ணெய்யும் தண்ணீரும்போல மதமும் அதுவும் சேராத ஒரு கலவை என்கிறார்கள். ஆனால், பேராசை அல்லது மதமோதானே உலகத்தில் ஏற்படும் கலவரங்களுக்கு முக்கியமான காரணங்கள்? இது கமல்ஹாசன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இங்கு, ‘மதம், கலவரம், வன்முறையைப் பற்றிச் சேர்த்துப் பேசக்கூடாது’ என்று சொல்ல உலக மதங்கள் எதற்குமே அருகதை கிடையாது. ‘ஜைன மதத்தைப்பற்றி அப்படிச் சொல்ல முடியாது’ என்று யாராவது சொன்னால், அதிலும்கூடக் காலஹாச்சாரி என்ற ஒரு போராளி சமணர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் படித்தது, அது நிஜமா பொய்யா என்று தெரியாது. சரித்திரத்தில்கூட நிறைய மிகைப்படுத்திப் பொய்கள் சொல்லப் பட்டுள்ளன.

இப்போது நான் சொல்ல வருவது, இந்து மதம் என்பது மூத்த சமுதாயம். மற்றவர்களுடன் ஒப்பிட்டு யார் உசத்தி, யார் தாழ்த்தி என்பது பற்றிப் பேசவில்லை. எண்ணிக்கையில் இவர்கள் கூடுதலானவர்கள். அண்ணனின் பொறுப்பு இவர்களுக்கு. அப்படியிருக்கையில், ‘நான் பெரிது... நான் பெரிது’ என்று சொல்லும்போது மனதும்  அந்தளவுக்குப் பெரிதாக இருக்கவேண்டும். மற்றவர் அனைவரையும் அரவணைக்க வேண்டும். மற்றவர்கள் தவறு செய்தால்கூடத் திருத்தவேண்டும். தண்டிக்கும் பொறுப்பை நாம் நீதிமன்றங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அது அதைச் செய்தால் போதுமானது. ‘யார் தவறு செய்தாலும் அதற்கான தண்டனை உண்டு’ என்பதை உணர்த்தத்தானே கண்களை மூடிக்கொண்டு நீதித்தராசுடன் இருக்கும் அந்த அம்மாவைக் குறியீடாக நிறுத்தி யிருக்கிறோம்.

p12d1.jpg

நடுநடுவே நீதிதேவதை ஒரு கண்ணை மாத்திரம் திறந்து, ‘யார்’ என்று பார்த்துத் தீர்ப்பு வழங்கக் கூடாது. ‘இது நடக்கிறதா’ என்று கேட்டால், ‘ஆம், இல்லை’ என்பதை மக்களே சொல்வார்கள். அதை நான் சொன்னால் மும்பையில் இருந்தோ, ஆந்திராவில் இருந்தோ வழக்கு போடுவார்கள். நானும் வக்கீல் மகன் என்பதால், போகலாம்தான். பல நீதிமன்றங்கள் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். படித்திருந்தால்தான் நீதிமன்றங்கள் பார்க்க முடியும் என்பதுபோய், படிக்காமலேயே கோர்ட் பார்ப்பதற்கும் வாய்ப்புகள். இதில் அவமானப்பட ஒன்றுமே இல்லை. ‘கோர்ட்டுக்கு இழுத்துவிட்டார்களே. அலைச்சல் வருமே’ என்கிறார்கள். நான் மக்களைத் தேடிப் பிரயாணத்தை ஆரம்பித்து விட்டேன். அதில் ஒரு பகுதியாகத்தான் இதை எடுத்துக்கொள்வேன். வாரணாசி போகணும் என்றால் போய்வருவேன். `ஹேராம்’ படத்துக்காகப் பல நாள்கள் அங்கு சுற்றியிருக்கிறேன். நல்ல நகரம். அதையும் பார்த்துவிட்டு நீதிமன்றத்தையும் பார்த்துவிட்டு வரலாம். கூப்பிட்டால் போய்தான் வரவேண்டும். அங்குபோய் அவர்கள் மொழியில் பேசக்கூடிய அறிவை எனக்கு என் வாத்தியார்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த மொழியில் என் மக்களுடன் பேசுவேன். ஏனெனில், அவர்களும் என் மக்கள்தானே.

ஆனால், இதற்கு முன்பாகப் பல பேட்டிகளில் இதைவிடக் கடுமையாகப் பேசியிருக்கிறேன்.ஆனந்த விகடனில்கூட அப்படிப் பலமுறை பேசியிருக்கிறேன். ஆனால், நான் கடவுளர்களைத் தாக்குவேனே தவிர, எந்த நேரத்திலும் மதங்களைத் தாக்க மாட்டேன். ஏனெனில், அவை மனிதர்களால் ஆனவை. ‘ஒருவிஷயம் சொல்கிறார். பிறகு அதற்கு விளக்கமும் சொல்கிறார்’ என்பார்கள் சிலர். ஆமாம், புரியவில்லை என்றால் சொல்லித்தானே ஆகவேண்டும். ஆனால், நம் சட்டம், நீதியின் மீதான நம்பிக்கை எனக்கு இன்னும் அழியாமல் இருக்கிறது. அங்கும் நியாயம் பார்க்கும் ஆட்கள் பலர் இன்னமும் இருக்கிறார்கள். அதனால்தான் சக்கரம் கழன்றுவிழாமல் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. நியாயம் வழங்கப்படும் என்று நம்புகிறேன். வழங்கப்படவில்லை என்றால் வாதாடுவோம்.

ஏழைகளுக்கு எம்.ஜி.ஆர் நிறைய கொடுத்தார் என்கிறார்கள். இருக்கலாம். அன்று ஒரு வள்ளலை நோக்கிப் பல ஏழைகள் இருந்தனர். ஆனால், இன்று நான் ஒரு ஆள் 10 ஏழைகளுக்குக் கொடுப்பேன் என்றால்... என்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் வள்ளல்கள்; ஆம், சும்மா வந்தவர்களை வள்ளல்களாக மாற்றியிருக்கிறேன். அதுதான் எனக்கான பெருமை. இதுவரை என் நற்பணி மன்றத்தார் தங்களின் சொந்தப்பணம் 30 கோடி ரூபாய்க்கும் மேல் சேர்த்து நற்பணி செய்துள்ளார்கள். ‘கமல் எவ்வளவு பெரிய பணக்காரர்’ என்று என்னைப் பார்த்து வியக்கும் இடத்தில் இருப்பவர்கள், நற்பணி மன்றம் ஆரம்பித்த இந்த 37 ஆண்டுகளில், பணமாக 30 கோடி ரூபாய் நற்பணி செய்துள்ளார்கள். ஆனால், தனிப்பட்ட என்னால் அவ்வளவு கொடுக்க முடியாது என்பதே உண்மை.

இதைத்தவிர அவர்கள் தானமளித்த பல லட்சம் லிட்டர் ரத்தத்துக்கு நீங்கள் பண மதிப்பே போட முடியாதே. உடல்தானத்துக்கு விலையே கிடையாதே. கண்தானத்தை எந்த பட்ஜெட்டில் அடக்குவீர்கள்? இது பணத்தின் கணக்கில் வராது. மனத்தின் கணக்கில் வரும். ஆனால், அந்தப்பணத்தில் ஒரு கட்சி நடத்த முடியாது. அதற்கு அதையும்விட அதிகமாக வேண்டும். மக்கள் கொடுப்பார்கள். ரசிகர்கள் அதை மக்களிடம் எடுத்துச்சொல்லும் பிரசாரகர்களாக மாறக்கூடும். அதிலும் எல்லோருக்கும் அந்தத் திறமை இருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஏனெனில், சிலர் செயல்வீரர்களாக இருப்பார்கள்; பேச்சு வராது. தி.மு.கவினர் அற்புதமாகப் பேசும்போது காமராஜருக்கு அந்தளவுக்குப் பேச்சு வராது. அதனால்தான் அவருக்குக் கர்ம வீரர், செயல் வீரர் என்ற பெயர்கள் எல்லாம் இருந்தன.

அந்தமாதிரியும் என் கூட்டத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைமட்டுமே செய்யத்தெரியும். செய்ததைக்கூடச் சொல்லிக்காட்டத் தெரியாது. பெருந்தன்மை காரணமாக, என்ன செய்தோம் என்பதைப் பெரிதாகத் தம்பட்டம் அடிக்காதீர்கள் என்று நான் சொன்னது இன்று, ‘என்ன செய்திருக்கிறார் மக்களுக்கு’ என்ற கேள்வியாக எங்களுக்கே திரும்புகிறது. ஆனாலும், இதெல்லாம் செய்தோம் என்று பட்டியல் போடுவதற்கே வெட்கமாக இருக்கிறது. நாங்கள் அப்படியே பழகிவிட்டோம். அவர்களுக்குக் கணக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காகப் பட்டியல் போடுவதாக இல்லை.

இந்தச் சமயத்தில், ‘கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்’ என்று நான் சொன்னதை ‘ரசிகர்கள் கொடுப்பார்கள்’ என்று சொன்னதாக ஊடகங்களில் செய்தி சொல்கிறார்கள்.

இப்படி விளக்கம் சொல்வதிலேயே என்னைத் தாமதப்படுத்துகிறார்கள். இருந்தாலும் என் நற்பணி இயக்கத்தாரும் மக்களும் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த விளக்கம். எனக்குக் கடிதங்கள், பணம் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், இப்போது வாங்கினால் சட்டவிரோதம். அவற்றை வாங்கிச் சும்மா வைக்கவும் கூடாது. அதனால், திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறேன், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில். இதனால், வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை; முன்வைத்த காலைப் பின்வைக்கிறேன் என்றும் எடுத்துக்கொள்ளக் கூடாது. சரியான கட்டமைப்பு இல்லாமல் இந்தப் பணத்தைத் தொடக் கூடாது. இந்தப்பணம் என்னுடையது என்று நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். அதற்குள் செலவாகிவிட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக்கொள்கிறேன்.

p12e1.jpg

நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகிவிட்டது. இன்னும் பெயர் வைக்க வேண்டும்; ரிஜிஸ்டர் பண்ணவேண்டும்; அவ்வளவே. ஆனால், கட்டமைப்புகள், முன்னேற்பாடுகள், தளம் சரியாக அமைய வேண்டும். ஏனென்றால், எனக்குப் பின்னாலும் இது சரியாக நடக்க வேண்டிய இயக்கம். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்யாமல் போனால், இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறுபடிகள் என் இயக்கத்துக்கும் நடக்கும். தனக்குப்பின் என்ன என்பதை யோசிக்காமலேயே விட்டுவிட்டுப்போன பல தலைவர்களால் கட்சிகளுக்கு ஏற்பட்ட கொடுமை நமக்கும் ஏற்படும். அது இங்கு நடக்கக் கூடாது. ஆம், நான் என் சீட்டை இன்றே காலி பண்ணப்போவதைப் பற்றிப் பேச ஆரம்பித்துத்தான் கட்சியையே தொடங்குகிறேன். ஏனெனில், இது சீட்டைப்பற்றிய, சீட்டை நோக்கிய நகர்வு கிடையாது. தமிழகம் நல்ல தமிழகமாக வர, வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

 

 

 

p10c.jpg

ரியலூர் அனிதா மரணித்த சமயத்தில் ஆறுதல் சொல்லவும் உதவி செய்யவும் என் நற்பணி இயக்கத் தோழர்களை அங்கு அனுப்பி வைத்திருந்தேன். அதற்குp10b.jpg நன்றி தெரிவிக்க அனிதாவின் அண்ணனும் அப்பாவும் என்னை வந்து சந்தித்தனர். ‘இரண்டு நாளா உறவுக்காரங்க மாதிரி கூடவே இருந்தாங்க சார்’ என்றனர். நன்றி சொல்ல அவசியம் இல்லை என்றாலும், அது அவர்களின் பெருந்தன்மை.

அது கண்கலங்கவைத்த சந்திப்பு. ‘இப்ப என்ன தம்பி பண்ணிட்டிருக்கீங்க’ என்று அனிதாவின் அண்ணனிடம் விசாரித்துக்கொண்டிருந்தேன். ‘நான் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகிட்டிருக்கேன். இன்னொரு சகோதரர் எம்.எஸ்ஸி முடிச்சிருக்கார்’ என்றார். ‘என்ன கனவு, என்ன பண்ணணும்னு நினைக்கிறீங்க’ என்றேன். ‘அனிதா பேர்ல ஒரு லைப்ரரி வைக்கணும் சார்’ என்றார். என் 60 வயதில் இப்போது நான் நிறைவேற்றத் துடிக்கும் கனவை இந்த இளம் வயதில் அந்த சகோதரர் தூக்கிச் சுமக்கிறார். ‘எனக்கிருக்கும் அதே கனவு. சேர்ந்து பண்ணுவோம்’ என்றேன். 

 ‘கல்விதான் ஆதாரம். பொருளாதார, சமூகச் சுதந்திரத்தைக் கல்வியால் மட்டுமே பெற முடியும்’ என்பது பெரியவர்களின் கருத்து. அப்படி தனக்குக் கிடைக்காத அந்தக் கல்வியை ஒரு கூலித்தொழிலாளி, தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார். எவ்வளவு பெரிய கனவுடன் அந்தக் குடும்பத்தை அவர் வழிநடத்திவருகிறார் என்பது நம் அனைவருக்குமான பெரும் பாடம். அந்த மனிதர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார் என்பது அவர்களின் குடும்பத்தைப் பார்த்தால் தெரிகிறது.

என் அலுவலகத்தில் நடந்த அந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்னிடம் காட்டினார்கள்.  ஒரு  கூலித் தொழிலாளி, ஒரு கல்வியாளர், எட்டாம் கிளாஸையே எட்டிப்பிடிக்கக் கஷ்டப்பட்ட கமல்... இப்படித்தான் அந்தப்படம் என் பார்வையில் பதிந்தது. அனிதாவுக்குக் கிடைத்த வாய்ப்புகள் அவரின் அப்பா காலத்தில் கிடைத்திருந்தால் அவரும் இன்று கல்வியாளர்தான். பள்ளியிலிருந்து நின்று, வெவ்வேறு வேலைகள் பார்த்து, சினிமாவுக்கு வந்த பிறகு மனம் சோர்ந்து, ‘செத்துப்போயிட்டா பரவாயில்லை’ என்று, தனியாக இருந்த பல நாள் நான் யோசித்ததுண்டு.

ஆனால், அந்த யோசனையை வளரவிடாமல் மடைமாற்றம் செய்து, வாழவேண்டும் என்ற ஆசையை இந்த உலகமும் அப்போதைய என் சூழலும்தாம் கற்றுத்தந்தன. ஆனால், ‘செத்தா பரவாயில்லை’ என்ற ஒரு சூழல் அனிதாவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சூழலை, கண்டிப்பாக அவரின் குடும்பம் உருவாக்கியிருக்காது. ஏனெனில், அனிதா அந்த வீட்டின் குலசாமி. ஆனால், மரணத்தை நோக்கித் தள்ளிய அது தவறான, மன்னிக்கப்பட முடியாத புறச்சூழல்.

இந்தச் சூழலில், பள்ளியிலிருந்து இடைநின்ற என்னைப் பல்வேறு விதமான ஆசிரியர்கள் எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துவந்தனர் என்பதைச் சொல்லலாம் என நினைக்கிறேன். ‘அப்படி இருந்த இவனே, இன்னைக்கு இப்படி வந்திருக்கான்னா, நாம கண்டிப்பா முன்னுக்கு வரலாம்’ என்ற நேர்மறை எண்ணத்தை விதைக்கும் என்பதால் இதைச் சொல்ல விழைகிறேன். மற்றபடி இது தன்னடக்கமோ, சுய விளம்பரமோ இல்லை.

p10a.jpg

நான் பிறந்து வளர்ந்தது, தமிழ் தமிழ் என்று குரல் கேட்டுக்கொண்டிருந்த காலகட்டம். ஆனால், அப்போது என்னை ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்த்து விட்டனர். நான் குழந்தையாக இருந்த அந்தச் சமயத்தில் என்னையும் சாருஹாசனின் மூத்த மகளையும் பார்த்துக்கொள்ள ஓர் ஆங்கிலோ இந்தியன் அம்மாவை வேலைக்கு அமர்த்தி யிருந்தனர். அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் உரையாட வேண்டிய சூழல். வீட்டில் பேசும் தமிழும் பிராமண மொழிதான்.

அந்தச் சமயத்தில் சண்முகம் அண்ணாச்சி நாடகக்குழுவில் சேர்ந்ததும் நான் தேடிப்போகாமல் யதேச்சையாக நடந்ததுதான். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். வீட்டில் புழங்கும் ஆங்கிலமும் பூஜையில் உச்சரிக்கும் சம்ஸ்கிருதமும் மட்டுமே தெரியும். ஆனால், அண்ணாச்சியிடம் போனபிறகுதான் அதே பக்தி, தமிழ்வழியானது. கோயில்களுக்குப் போகும்போது, ‘பாடு கமல்’ என்பார். ‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசி என்  உள்ளங்கவர் கள்வன்...’ என்று அந்தந்தக் கோயில்களுக்கேற்ற பாடல்களைப் பாடுவேன்.

‘குழந்தைகள் நாடகம்’ போடவேண்டும் என்று நினைத்துப் போட்டவர் அன்று அண்ணாச்சி ஒருவர்தான். குழந்தைகளைவைத்து ஒரு தொழில்முறை நாடகம் போடவேண்டும் என்பதே ஒரு வித்தியாசமான எண்ணம்தானே. அப்படி வெவ்வேறு ஊர்களுக்குப் பிள்ளைகளை அழைத்துச்செல்வார். அவர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் அப்போது டிராமாவில் நடித்துக்கொண்டிருந்தனர். பள்ளிக்கூடம் போய்விட்டு வந்ததும் நேராக அண்ணாச்சியின் `அவ்வையகம்’ போய்விடுவேன். குளிக்கவும், தூங்கவும்தான் எல்டாம்ஸ் சாலை வீட்டுக்கு வருவேன். பகவதி அண்ணாச்சி பிள்ளைகளுடனே வளர்வேன். சமைத்துக்கொண்டிருக்கும்போதே பாதி வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடும் சுதந்திரத்தைத் தந்த வீடு.

அங்கு நடிக்கும்போது இருந்த சூழல், சுற்றி இருந்த நாடகக் கலைஞர்களின் பேச்சு, நகைச்சுவை... இவையெல்லாம்தான் எனக்கு ஆரம்பத்தில் தமிழார்வம் வரக் காரணம். அதுவும் அண்ணாச்சியே முக்கியமான முன்னுதாரணம். அவர் குரல் உயர்த்துவது, கோபப்படுவது அனைத்துமே ஏதோ ஸ்ருதியில் பாடுவதுபோல் இருக்கும். ‘எப்போதுமே ஒரு மனிதன் எப்படி அப்படி இருக்க முடியும்’ என்று வியப்பாக இருக்கும். அங்கு அண்ணாச்சியினுடைய நூலகம் ஒன்று இருந்தது. 10 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. ‘இதையெல்லாம் படிச்சிட்டுதான் அண்ணாச்சி இந்தளவுக்கு கம்பீரமா இருக்கார்’ என்று அந்த வயதில் ஆர்வமும் ஆசையுமாக அவ்வை இல்லத்தையே சுற்றிவருவேன்.  அண்ணாச்சிக்குப் பிறகு அவ்வளவு புத்தகங் களையும் காமராஜர் பல்கலைக்கழக்கத்துக்குக் கொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி. காரில் அந்த வழியாகக் கடக்கையில் அதன் கட்டடத்தைப் பார்த்தால் இப்போதும் தொண்டைக்குழி அடைக்கும். என் பிரதர் இன் லாவும்  அட்வகேட் ஜெனரலாக இருந்தவருமான பராசரன்தான் என்னை ஆசையாய் அங்கு சேர்த்து விட்டார். ஒருமுறை காலை அறுத்துக்கொண்டேன், இன்னொரு முறை மாடியிலிருந்து விழுந்துவிட்டேன்... என்று எனக்கு அங்கு சிறிதும் பெரிதுமாக ஓரிரு விபத்துகள். அவை என் தவறல்ல. அவை ரௌடியிசத்திலும் வராது. ஆனால், பள்ளியின் நற்பெயருக்கு ஏதேனும் களங்கம் வந்துவிடுமோ என்று பயந்த நிர்வாகம், ‘இந்தப் பையனை இங்கு வைத்துக் கொள்வது ஆபத்து. அழைத்துச்சென்றுவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டனர்.

p10d.jpg

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

அந்தச் சமயத்தில்தான் என் அம்மா எங்களுக்கு உறவாக இருந்த ஒருவரிடம் கெஞ்சிக்கூத்தாடி புரசைவாக்கத்தில் எம்.சி.டி.எம் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்குதான் எனக்கு இன்னொரு சண்முகம்பிள்ளை கிடைத்தார். அற்புதமான தமிழ் ஆசிரியர். ஒருமுறை என்னை அழைத்தவர், ‘தம்பி, தமிழார்வம் உன் இயல்பிலேயே இருக்கு. நீ ஒரு தங்க மலர். தங்கமா இருந்து என்ன் பிரயோஜனம்? மலர்னா அது மணக்கவேண்டாமா? மணக்க வேண்டும் என்றால் நீ படிக்க வேண்டும்’ என்றார். அது எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவர்தான் மணிமேகலையை முதலில் படிக்கச்சொன்னவர்.

ஆனால், அங்குதான் ‘இந்த எஜுகேஷன் சிஸ்டம் சரியில்லை. படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் போய்விடலாம்’ என்று ஐவன் மார்ஷல் என்கிற சைனீஸ் பையன், விஜய் கோவிந்த் என்கிற மலையாளி, கமல்ஹாசன் என்கிற நான் ஆகிய மூவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். அது அந்த வயதுக்கே உரித்தான கோபம்.  9-ம் வகுப்புத் தேர்வை எழுத ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் பேசிவைத்து பேப்பரைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். ‘இதெல்லாம் வேஸ்ட். ஆந்திரா மெட்ரிக் எழுதிட்டு அப்படியே காலேஜ் போயிடலாம்’ என்று குறுக்குவழியில் மூவரும் முடிவு செய்திருந்தோம். ஆனால், ‘ஒன்பதாம் வகுப்பு இடை நின்ற வனாகவே வாழ்க்கை முழுவதும் தொடரப்போகிறோம்’ என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பிறகு நாங்கள் திட்டமிட்டபடி ஒரு டுட்டோரியலில் கல்வியைத் தொடர்ந்தோம். ஆனால், என்னுள் தமிழும் இறங்கவில்லை, மற்ற பாடங்களும் ஏறவில்லை. இதற் கிடையில் சண்முகம் அண்ணாச்சி நாடகக் கம்பெனியை மூடிவிட்டார். அதனால் அவ்வையகம் செல்வது நின்றது. மேலும் பக்தி மார்க்கத் திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்து கொண்டிருந்த சமயம் என்பதால் தமிழுடனான தொடர்பும் விடுபட ஆரம்பித்தது.

ந்தச் சமயத்தில், கிளாஸிகல் டான்ஸ் கற்றுத்தரும் ஆசிரியர் ஒருவர் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த அறைக்கு வாடகைக்கு வந்தார். ‘வீட்டிலேயே டான்ஸ் வகுப்புகளை நடத்திக்கொள்கிறேன்’ என்றார். ‘வீட்டிலேயே நடன வகுப்பு. நீயும் சும்மாதான் இருக்கிறாய்’ என்று அம்மா என்னையும் அதில் சேர்த்து விட்டார். அப்படித்தான் எனக்கு  பரதம் அறிமுகம் ஆனது. அந்த நடன ஆசிரியர் ஒருநாளைக்கு நான்கு பேட்ச் என்று பிரித்து வகுப்பெடுப்பார். நான் அந்த  நான்கு பேட்சுகளிலும் ஆடுவேன். இந்தத் தொடர் பயிற்சியால் எனக்கு பரதம் எளிதாக வந்தது.

‘எனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுத்துவிட்டேன். நீயும் நன்றாக ஆடுகிறாய். அரங்கேற்றம் பண்ணலாம். ஆனால், நான் கற்றுத்தந்தது என்னளவில்தானே தவிர, கற்றுக்கொள்ள எல்லையில்லை. அடுத்து வேறொரு நல்ல ஆசிரியரை நானே பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவரே வேறொரு மாஸ்டரை அழைத்து வந்தார். ஒரு வாத்தியார் இப்படிச் சொல்லவே மாட்டார். ஆனால், அவர் சொன்னார், செய்தார். அடுத்து குல்கர்ணி என்ற ஒருவர் கதக் கற்றுத்தர வந்தார். பிறகு கொஞ்ச நாள் குச்சுப்புடி கற்றுக்கொண்டேன். பிறகு வடநாட்டு நடன வகைகள். இப்படி வீட்டில் இசையொலி கேட்டுக்கொண்டே இருக்க என்னைத் தேடி வந்த ஆசிரியர்களும் முக்கியமான காரணம். அதன் வழிவந்த இதர மொழிப் பாடல்களால் தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேற்றுமையும் ஒற்றுமையும் தமிழின் தனித்தன்மையும் புரிந்தது. பாரதியின் `யாமறிந்த மொழிகளிலே’ என்னும் வரியின் அர்த்தம் அனுபவத்தால் உணர்ந்தேன்.

நடன நிகழ்ச்சி ஒன்றுக்காக மகாராஷ்டிரா போய் காலை உடைத்துக்கொண்டேன். ஸ்டேஜில் இருந்த விளக்கு  நடனத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று அதை தூரமாகத் தள்ளி வைக்கும்போது அதிலிருந்து எண்ணெய் சிந்தியிருக்கிறது. அதைக் கவனிக்காமல் காலை வைக்க, வழுக்கி விழுந்து காலில் சரியான அடி. ஃப்ராக்சர். ‘டான்ஸை விட்டுவிடுவதுதான் பெட்டர்’ என்றார்கள். ‘என்னடா இது இப்படி ஆகிவிட்டதே’ என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் அம்மை போட்டுவிட்டது. வழக்கமாக அம்மைக்கு மருத்துவமனையில் சேர்க்கமாட்டார்கள். ஆனால், அன்று என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டதால் தான் இன்று முகத்தில் தழும்புகள் இல்லாமல் இருக்கிறேன். அதிலிருந்து வெளியே வந்து மறுபடியும் இன்னொரு முறை அம்மை. பிறகு குணமாகி மீண்ட சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வேலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கீழ் தளத்தில் இருந்த அம்புலி சலூனில் கொஞ்ச நாள் முடிதிருத்துநராக இருந்தேன். பிறகு அங்கிருந்த லாண்டரிக் கடை ஒன்றில் அயர்ன் பண்ணும் வேலையும் பார்த்தேன். அம்மாவுக்குத் தெரிந்தால் கடையை காலி பண்ணச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து ஒரு கட்டத்தில் அவர்களே கடைக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

நான் படிக்கவில்லை என்ற வருத்தம் என் அப்பாவுக்கு இருந்தது. அதனால் என்னை மட்டும் சென்னை வீட்டின் மொட்டைமாடி அறையில் தங்கவைத்துவிட்டு, வீட்டின் மற்ற அனைத்து போர்ஷன்களையும் வாடகைக்கு விட்டுவிட்டு, அம்மாவை அழைத்துக்கொண்டு பரமக்குடி சென்றுவிட்டார். அந்த மாடி போர்ஷன் அறையிலும் கொஞ்சமே கொஞ்சமாக, படுக்க மட்டுமே இடம் இருக்கும். மற்ற இடங்களில் சட்டி சாமான்கள் என்று பழைய பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குளியலறை கிடையாது. கீழே உள்ள தரைத்தளத்தில்தான் குளியலறை. இது, வேண்டுமென்றே பண்ணிய ஏற்பாடாகத்தான் எனக்குத் தெரிந்தது. ஓடிவந்துடுவான் என்று நினைத்தனர். ஆனால், நான் போய் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சென்டரில் வேலைக்குச் சேர்வேன் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

எல்டாம்ஸ் சாலையில் வீட்டுக்கு எதிரே நடந்துபோனால் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சென்டருக்குள் போய்விடலாம். அதனால்தான் அம்மாவும் நம்பி அங்கு விட்டார்கள். மாதம்  120 ரூபாய் ஊக்கத் தொகை. அங்கு கிறித்துவப்பாடல்களைத் தமிழாக்கம் பண்ணுவார்கள். பார்வதி ராமநாதன் போன்ற பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். அங்கு அடிக்கடி பட்டிமன்றம் நடக்கும். வெவ்வேறு ஊர்களுக்குப் போய் இயேசுநாதர் வேடம் போட்டுக்கொண்டு சிலுவையைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறேன்.

அந்தச் சமயத்தில்தான் ‘அன்னை வேளாங்கண்ணி’ என்ற படத்தை அங்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தை திரு. தங்கப்பன் மாஸ்டர் தயாரிக்க இருந்தார். அவர் நடன ஆசிரியரும்கூட. அந்தப் படத்துக்கு ஒரு டான்ஸ் அசிஸ்டென்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தார். அப்படித்தான் அவரிடம் சேர்ந்தேன். அந்த வகையில் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் மையத்துக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும். அங்கு இருந்த சுவிசேஷ முத்து, ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்துக்கு வசனம் எழுதிய டி.தாசன் என்ற சங்கிலித்தொடர் தொடர்புகள்தான் ஆர்.சி.சக்தியையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது.

சக்திதான் என் தமிழைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார். ‘இங்கிலீஷ்ல பேசினா பெரிய கொக்கா? இங்கிலாந்துக்குப் போனீன்னா அந்த ஊர்ல பேசுற பாஷை அவ்வளவுதானே?’ என்பார். அப்படிப் பேசிப்பேசியே எனக்குத் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவர் திரு. சுப்பு ஆறுமுகத்திடம் இருந்தவர். தி.மு.க தொண்டராகவும் மாறியவர். அதனால் ‘தீ பரவட்டும்’ போன்ற நிறைய புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் அப்போது தீவிர நாத்திகர். இந்த நாத்திகம் வீட்டில் சாருஹாசன் அண்ணனிடமிருந்தும் தாய்மாமாவிடமிருந்தும் வந்தது. அது சக்தி மூலமாகத் தொடர்ந்தது. அப்போது சக்தியும் நானும் பெரியாரின் கூட்டங்களுக்குச் செல்வோம்.

p10e.jpg

ஒருவேளை தமிழ்நாடு, கேரள எல்லைக்குள் இருந்ததால்தான் இது வந்திருக்கும் என நினைக்கிறேன். வடஇந்தியா, பெங்களூருவில் இருந்திருந்தால் இதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். எதுவும் பேசலாம் என்ற தமிழகச் சூழலும் பெரியாரைப் படித்துக் கற்றதும்தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன். நான் பெரியார் பக்தனோ, தாசனோ, நேசனோ கிடையாது. அவரின் ரசிகன். ‘இவ்வளவு சுதந்திரம், பேச்சுரிமையை எனக்குக் கொடுத்தது இந்தாளுதான்’ என்கிற எண்ணம். சிலருக்கு அவர்  முரடரோ என்று தோன்றலாம். ஆனால், வளையாத நெம்புகோல்போல் அந்த உறுதி தேவையாகவும் இருந்தது.

ப்படி என் வாழ்க்கையில் வந்த வாத்தியார்கள் அனைவரும் எனக்கு வந்து வாய்த்தவர்கள்தாம். நானாகப்போய்த் தேடிக்கிடைத்தவர்கள் இல்லை. பெரியாரைக்கூட யாரோ அவரின் கூட்டங்களுக்கு என்னைக் கூட்டிக்கொண்டுபோய்தான் அறிமுகப் படுத்தினார்கள். இன்று பள்ளி கல்லூரிகளில் வாங்கும் கேப்பிடேஷன்  ஃபீஸ்களை நினைத்துப் பார்க்கையில், சம்பளமும் கொடுத்துப் படிப்பும் கொடுத்த என் வாத்தியார்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பாலசந்தர், மாடியில் குடியிருந்த அந்த டான்ஸ் மாஸ்டர், ஆர்.சி.சக்தி... இவர்கள் யாருமே காசுப் பரிமாற்றத்துக்காகக் கற்றுக்கொடுத்தவர்கள் கிடையாது.

ஆனால், நான் தேடிப்போய் விரும்பி ஒரு மனிதரைக் கண்டுபிடித்தது என்று பார்த்தால் அது காந்திதான். காந்தியுடனான உறவை அற்புதமான சந்திப்பு என்பேன். முதலில் பெரியாரின் விமர்சனம்மூலம் அறிமுகமாகி, அம்பேத்கரின் விமர்சனம்மூலம், ‘ஆமாம், அந்த ஆள் தப்புதான் போலிருக்கிறது’ என்று முடிவுக்கு வந்து, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் காந்தி விமர்சனங்களை உள்வாங்கி... இந்தியாவைக் கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததைப் போல, நான் இவர்களின் வழியாக காந்தியைக் கண்டறிந்தேன் என்றே சொல்லலாம். 

இந்த மக்களைச் சென்றடைவதற்கான யுக்தியைத் தன் வாழ்முறையாகவே மாற்றிக் கொண்டவர் காந்தி. அவர் நல்லவர், கெட்டவர் என்பதைப்பற்றி நான் பேசவில்லை. அறிவும் யுக்தியும் அவரின் விரோதிகளைக்கூட அவரைப் பாராட்டவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கின. காந்தியாரின் மகன் இஸ்லாத்தில் சேருகிறார். அப்போது முஸ்லிம் லீக், ‘உங்கள் மகனே எங்கள் மதத்தில் சேர்ந்துவிட்டார்’ என்பதுபோல ஒரு தந்தி அனுப்புகிறது. ‘‘அதில் என்ன எனக்கு நஷ்டம்’’ என்ற தொனியில் பதில் கடிதம் எழுதிவிட்டுக் கடந்து போவதெல்லாம் அசாத்தியமான மனிதரால் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.

ன்று சினிமாவில் என் ஆரம்ப காலகட்டங்களில் எனக்கு ஆசானாக இருந்து தமிழ் கற்றுத்தந்தவை சினிமாக்கள்தான். அதுவும் குறிப்பாக கண்ணதாசன், கலைஞர், சிவாஜி சார் ஆகியோர் வழி வந்த சினிமாக்கள். நான் கற்றுக்கொண்ட தமிழ் முழுவதும் இவர்களிடமிருந்து செவி வழி வந்ததுதான். சில உதாரணங்களுடன் சொல்கிறேன். அது சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் அதிகமாக விற்றுக்கொண்டிருந்த காலம். அதன் மூலம்தான் அனைவரின் பாடல்களும் எனக்கு வந்தடைந்தன. ‘கைராசி’ படத்தில் ‘அன்புள்ள அத்தான் வணக்கம். உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்’ என்று கண்ணதாசன் எழுதியிருப்பார். ‘ஆயிழை’ என்றால் ‘பெண்’ என்ற அர்த்தத்தைச் சொல்லிக்கொடுத்தது கண்ணதாசன்தான். இப்படிப் பாடல் புத்தகமே என் பாடப் புத்தகங்கள் ஆயின.

‘ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப் போல...’ என்று அர்த்தம் பொதிந்த வரிகளை அறிமுகப்படுத்தியதும் இந்த சினிமாதான். ‘அனார் அனார் மறைந்துவிட்டாயா... என் மாசற்ற ஜோதிமலையே... பெண்ணின் பெரும்பொருளே/பேரழகின் பிறப்பிடமே/என் கண்ணில் படாமல் உன் கட்டழகைக் கல்லறைக்குள் மறைத்து விட்டார்களா மாபாவிகள். காதலுக்கோர் எடுத்துக் காட்டே, கவிஞர்களின் தொடுத்திட இயலா கற்பனை ஆரமே...’ இப்படி எங்கு போகிறது என்றே தெரியாத கவிதையா, உரைநடையா என்று சொல்லமுடியாத மயக்கும் தமிழைக் கலைஞரிடமிருந்தும் அதைப் பேசி நடிக்கும் அந்தக் கலையை சிவாஜி சாரிடமிருந்தும் கற்றேன் என்றால் அது மிகையில்லை.

ப்படி நான் சோர்ந்து கிடந்த தருணங்களில் எல்லாம் யார்யாரோ என்னை மாணவனாக ஏற்றுக்கொண்டு வழிநடத்தி உந்தித் தள்ளி இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படியெனில் ‘கமல்’ என்பவன் தானாகவே வளர்ந்து வந்த ஒருமை அல்லன். அவன் பன்மை. இப்படிப் பலரால் பலம் சேர்க்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பன்மை. இப்படியான புறச்சூழல் அனிதாவுக்கு அமையாததுதான் வேதனை. அந்தச் சூழல் வாய்க்கப்பெற்ற நான் அனிதாக்கள் போன்ற மகள்களுக்கு நண்பனாகவோ, ஆசிரியனாகவோ இருக்க வேண்டியது என் கடன் என்பதை உணர்கிறேன். அப்படியே இருப்பேன் என்ற உறுதியையும் வழங்குகிறேன்.

என்னை இன்னும் செதுக்கிய சில ஆசான்கள் பற்றி அடுத்தவாரமும் தொடர்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

 

 

கமல்ஹாசன்

 

p10c.jpg

ரியலூர் அனிதா மரணித்த சமயத்தில் ஆறுதல் சொல்லவும் உதவி செய்யவும் என் நற்பணி இயக்கத் தோழர்களை அங்கு அனுப்பி வைத்திருந்தேன். அதற்குp10b.jpg நன்றி தெரிவிக்க அனிதாவின் அண்ணனும் அப்பாவும் என்னை வந்து சந்தித்தனர். ‘இரண்டு நாளா உறவுக்காரங்க மாதிரி கூடவே இருந்தாங்க சார்’ என்றனர். நன்றி சொல்ல அவசியம் இல்லை என்றாலும், அது அவர்களின் பெருந்தன்மை.

அது கண்கலங்கவைத்த சந்திப்பு. ‘இப்ப என்ன தம்பி பண்ணிட்டிருக்கீங்க’ என்று அனிதாவின் அண்ணனிடம் விசாரித்துக்கொண்டிருந்தேன். ‘நான் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகிட்டிருக்கேன். இன்னொரு சகோதரர் எம்.எஸ்ஸி முடிச்சிருக்கார்’ என்றார். ‘என்ன கனவு, என்ன பண்ணணும்னு நினைக்கிறீங்க’ என்றேன். ‘அனிதா பேர்ல ஒரு லைப்ரரி வைக்கணும் சார்’ என்றார். என் 60 வயதில் இப்போது நான் நிறைவேற்றத் துடிக்கும் கனவை இந்த இளம் வயதில் அந்த சகோதரர் தூக்கிச் சுமக்கிறார். ‘எனக்கிருக்கும் அதே கனவு. சேர்ந்து பண்ணுவோம்’ என்றேன். 

 ‘கல்விதான் ஆதாரம். பொருளாதார, சமூகச் சுதந்திரத்தைக் கல்வியால் மட்டுமே பெற முடியும்’ என்பது பெரியவர்களின் கருத்து. அப்படி தனக்குக் கிடைக்காத அந்தக் கல்வியை ஒரு கூலித்தொழிலாளி, தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார். எவ்வளவு பெரிய கனவுடன் அந்தக் குடும்பத்தை அவர் வழிநடத்திவருகிறார் என்பது நம் அனைவருக்குமான பெரும் பாடம். அந்த மனிதர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார் என்பது அவர்களின் குடும்பத்தைப் பார்த்தால் தெரிகிறது.

என் அலுவலகத்தில் நடந்த அந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்னிடம் காட்டினார்கள்.  ஒரு  கூலித் தொழிலாளி, ஒரு கல்வியாளர், எட்டாம் கிளாஸையே எட்டிப்பிடிக்கக் கஷ்டப்பட்ட கமல்... இப்படித்தான் அந்தப்படம் என் பார்வையில் பதிந்தது. அனிதாவுக்குக் கிடைத்த வாய்ப்புகள் அவரின் அப்பா காலத்தில் கிடைத்திருந்தால் அவரும் இன்று கல்வியாளர்தான். பள்ளியிலிருந்து நின்று, வெவ்வேறு வேலைகள் பார்த்து, சினிமாவுக்கு வந்த பிறகு மனம் சோர்ந்து, ‘செத்துப்போயிட்டா பரவாயில்லை’ என்று, தனியாக இருந்த பல நாள் நான் யோசித்ததுண்டு.

ஆனால், அந்த யோசனையை வளரவிடாமல் மடைமாற்றம் செய்து, வாழவேண்டும் என்ற ஆசையை இந்த உலகமும் அப்போதைய என் சூழலும்தாம் கற்றுத்தந்தன. ஆனால், ‘செத்தா பரவாயில்லை’ என்ற ஒரு சூழல் அனிதாவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சூழலை, கண்டிப்பாக அவரின் குடும்பம் உருவாக்கியிருக்காது. ஏனெனில், அனிதா அந்த வீட்டின் குலசாமி. ஆனால், மரணத்தை நோக்கித் தள்ளிய அது தவறான, மன்னிக்கப்பட முடியாத புறச்சூழல்.

இந்தச் சூழலில், பள்ளியிலிருந்து இடைநின்ற என்னைப் பல்வேறு விதமான ஆசிரியர்கள் எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துவந்தனர் என்பதைச் சொல்லலாம் என நினைக்கிறேன். ‘அப்படி இருந்த இவனே, இன்னைக்கு இப்படி வந்திருக்கான்னா, நாம கண்டிப்பா முன்னுக்கு வரலாம்’ என்ற நேர்மறை எண்ணத்தை விதைக்கும் என்பதால் இதைச் சொல்ல விழைகிறேன். மற்றபடி இது தன்னடக்கமோ, சுய விளம்பரமோ இல்லை.

p10a.jpg

நான் பிறந்து வளர்ந்தது, தமிழ் தமிழ் என்று குரல் கேட்டுக்கொண்டிருந்த காலகட்டம். ஆனால், அப்போது என்னை ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்த்து விட்டனர். நான் குழந்தையாக இருந்த அந்தச் சமயத்தில் என்னையும் சாருஹாசனின் மூத்த மகளையும் பார்த்துக்கொள்ள ஓர் ஆங்கிலோ இந்தியன் அம்மாவை வேலைக்கு அமர்த்தி யிருந்தனர். அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் உரையாட வேண்டிய சூழல். வீட்டில் பேசும் தமிழும் பிராமண மொழிதான்.

அந்தச் சமயத்தில் சண்முகம் அண்ணாச்சி நாடகக்குழுவில் சேர்ந்ததும் நான் தேடிப்போகாமல் யதேச்சையாக நடந்ததுதான். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். வீட்டில் புழங்கும் ஆங்கிலமும் பூஜையில் உச்சரிக்கும் சம்ஸ்கிருதமும் மட்டுமே தெரியும். ஆனால், அண்ணாச்சியிடம் போனபிறகுதான் அதே பக்தி, தமிழ்வழியானது. கோயில்களுக்குப் போகும்போது, ‘பாடு கமல்’ என்பார். ‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசி என்  உள்ளங்கவர் கள்வன்...’ என்று அந்தந்தக் கோயில்களுக்கேற்ற பாடல்களைப் பாடுவேன்.

‘குழந்தைகள் நாடகம்’ போடவேண்டும் என்று நினைத்துப் போட்டவர் அன்று அண்ணாச்சி ஒருவர்தான். குழந்தைகளைவைத்து ஒரு தொழில்முறை நாடகம் போடவேண்டும் என்பதே ஒரு வித்தியாசமான எண்ணம்தானே. அப்படி வெவ்வேறு ஊர்களுக்குப் பிள்ளைகளை அழைத்துச்செல்வார். அவர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் அப்போது டிராமாவில் நடித்துக்கொண்டிருந்தனர். பள்ளிக்கூடம் போய்விட்டு வந்ததும் நேராக அண்ணாச்சியின் `அவ்வையகம்’ போய்விடுவேன். குளிக்கவும், தூங்கவும்தான் எல்டாம்ஸ் சாலை வீட்டுக்கு வருவேன். பகவதி அண்ணாச்சி பிள்ளைகளுடனே வளர்வேன். சமைத்துக்கொண்டிருக்கும்போதே பாதி வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடும் சுதந்திரத்தைத் தந்த வீடு.

அங்கு நடிக்கும்போது இருந்த சூழல், சுற்றி இருந்த நாடகக் கலைஞர்களின் பேச்சு, நகைச்சுவை... இவையெல்லாம்தான் எனக்கு ஆரம்பத்தில் தமிழார்வம் வரக் காரணம். அதுவும் அண்ணாச்சியே முக்கியமான முன்னுதாரணம். அவர் குரல் உயர்த்துவது, கோபப்படுவது அனைத்துமே ஏதோ ஸ்ருதியில் பாடுவதுபோல் இருக்கும். ‘எப்போதுமே ஒரு மனிதன் எப்படி அப்படி இருக்க முடியும்’ என்று வியப்பாக இருக்கும். அங்கு அண்ணாச்சியினுடைய நூலகம் ஒன்று இருந்தது. 10 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. ‘இதையெல்லாம் படிச்சிட்டுதான் அண்ணாச்சி இந்தளவுக்கு கம்பீரமா இருக்கார்’ என்று அந்த வயதில் ஆர்வமும் ஆசையுமாக அவ்வை இல்லத்தையே சுற்றிவருவேன்.  அண்ணாச்சிக்குப் பிறகு அவ்வளவு புத்தகங் களையும் காமராஜர் பல்கலைக்கழக்கத்துக்குக் கொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி. காரில் அந்த வழியாகக் கடக்கையில் அதன் கட்டடத்தைப் பார்த்தால் இப்போதும் தொண்டைக்குழி அடைக்கும். என் பிரதர் இன் லாவும்  அட்வகேட் ஜெனரலாக இருந்தவருமான பராசரன்தான் என்னை ஆசையாய் அங்கு சேர்த்து விட்டார். ஒருமுறை காலை அறுத்துக்கொண்டேன், இன்னொரு முறை மாடியிலிருந்து விழுந்துவிட்டேன்... என்று எனக்கு அங்கு சிறிதும் பெரிதுமாக ஓரிரு விபத்துகள். அவை என் தவறல்ல. அவை ரௌடியிசத்திலும் வராது. ஆனால், பள்ளியின் நற்பெயருக்கு ஏதேனும் களங்கம் வந்துவிடுமோ என்று பயந்த நிர்வாகம், ‘இந்தப் பையனை இங்கு வைத்துக் கொள்வது ஆபத்து. அழைத்துச்சென்றுவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டனர்.

p10d.jpg

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

அந்தச் சமயத்தில்தான் என் அம்மா எங்களுக்கு உறவாக இருந்த ஒருவரிடம் கெஞ்சிக்கூத்தாடி புரசைவாக்கத்தில் எம்.சி.டி.எம் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்குதான் எனக்கு இன்னொரு சண்முகம்பிள்ளை கிடைத்தார். அற்புதமான தமிழ் ஆசிரியர். ஒருமுறை என்னை அழைத்தவர், ‘தம்பி, தமிழார்வம் உன் இயல்பிலேயே இருக்கு. நீ ஒரு தங்க மலர். தங்கமா இருந்து என்ன் பிரயோஜனம்? மலர்னா அது மணக்கவேண்டாமா? மணக்க வேண்டும் என்றால் நீ படிக்க வேண்டும்’ என்றார். அது எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவர்தான் மணிமேகலையை முதலில் படிக்கச்சொன்னவர்.

ஆனால், அங்குதான் ‘இந்த எஜுகேஷன் சிஸ்டம் சரியில்லை. படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் போய்விடலாம்’ என்று ஐவன் மார்ஷல் என்கிற சைனீஸ் பையன், விஜய் கோவிந்த் என்கிற மலையாளி, கமல்ஹாசன் என்கிற நான் ஆகிய மூவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். அது அந்த வயதுக்கே உரித்தான கோபம்.  9-ம் வகுப்புத் தேர்வை எழுத ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் பேசிவைத்து பேப்பரைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். ‘இதெல்லாம் வேஸ்ட். ஆந்திரா மெட்ரிக் எழுதிட்டு அப்படியே காலேஜ் போயிடலாம்’ என்று குறுக்குவழியில் மூவரும் முடிவு செய்திருந்தோம். ஆனால், ‘ஒன்பதாம் வகுப்பு இடை நின்ற வனாகவே வாழ்க்கை முழுவதும் தொடரப்போகிறோம்’ என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பிறகு நாங்கள் திட்டமிட்டபடி ஒரு டுட்டோரியலில் கல்வியைத் தொடர்ந்தோம். ஆனால், என்னுள் தமிழும் இறங்கவில்லை, மற்ற பாடங்களும் ஏறவில்லை. இதற் கிடையில் சண்முகம் அண்ணாச்சி நாடகக் கம்பெனியை மூடிவிட்டார். அதனால் அவ்வையகம் செல்வது நின்றது. மேலும் பக்தி மார்க்கத் திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்து கொண்டிருந்த சமயம் என்பதால் தமிழுடனான தொடர்பும் விடுபட ஆரம்பித்தது.

ந்தச் சமயத்தில், கிளாஸிகல் டான்ஸ் கற்றுத்தரும் ஆசிரியர் ஒருவர் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த அறைக்கு வாடகைக்கு வந்தார். ‘வீட்டிலேயே டான்ஸ் வகுப்புகளை நடத்திக்கொள்கிறேன்’ என்றார். ‘வீட்டிலேயே நடன வகுப்பு. நீயும் சும்மாதான் இருக்கிறாய்’ என்று அம்மா என்னையும் அதில் சேர்த்து விட்டார். அப்படித்தான் எனக்கு  பரதம் அறிமுகம் ஆனது. அந்த நடன ஆசிரியர் ஒருநாளைக்கு நான்கு பேட்ச் என்று பிரித்து வகுப்பெடுப்பார். நான் அந்த  நான்கு பேட்சுகளிலும் ஆடுவேன். இந்தத் தொடர் பயிற்சியால் எனக்கு பரதம் எளிதாக வந்தது.

‘எனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுத்துவிட்டேன். நீயும் நன்றாக ஆடுகிறாய். அரங்கேற்றம் பண்ணலாம். ஆனால், நான் கற்றுத்தந்தது என்னளவில்தானே தவிர, கற்றுக்கொள்ள எல்லையில்லை. அடுத்து வேறொரு நல்ல ஆசிரியரை நானே பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவரே வேறொரு மாஸ்டரை அழைத்து வந்தார். ஒரு வாத்தியார் இப்படிச் சொல்லவே மாட்டார். ஆனால், அவர் சொன்னார், செய்தார். அடுத்து குல்கர்ணி என்ற ஒருவர் கதக் கற்றுத்தர வந்தார். பிறகு கொஞ்ச நாள் குச்சுப்புடி கற்றுக்கொண்டேன். பிறகு வடநாட்டு நடன வகைகள். இப்படி வீட்டில் இசையொலி கேட்டுக்கொண்டே இருக்க என்னைத் தேடி வந்த ஆசிரியர்களும் முக்கியமான காரணம். அதன் வழிவந்த இதர மொழிப் பாடல்களால் தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேற்றுமையும் ஒற்றுமையும் தமிழின் தனித்தன்மையும் புரிந்தது. பாரதியின் `யாமறிந்த மொழிகளிலே’ என்னும் வரியின் அர்த்தம் அனுபவத்தால் உணர்ந்தேன்.

நடன நிகழ்ச்சி ஒன்றுக்காக மகாராஷ்டிரா போய் காலை உடைத்துக்கொண்டேன். ஸ்டேஜில் இருந்த விளக்கு  நடனத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று அதை தூரமாகத் தள்ளி வைக்கும்போது அதிலிருந்து எண்ணெய் சிந்தியிருக்கிறது. அதைக் கவனிக்காமல் காலை வைக்க, வழுக்கி விழுந்து காலில் சரியான அடி. ஃப்ராக்சர். ‘டான்ஸை விட்டுவிடுவதுதான் பெட்டர்’ என்றார்கள். ‘என்னடா இது இப்படி ஆகிவிட்டதே’ என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் அம்மை போட்டுவிட்டது. வழக்கமாக அம்மைக்கு மருத்துவமனையில் சேர்க்கமாட்டார்கள். ஆனால், அன்று என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டதால் தான் இன்று முகத்தில் தழும்புகள் இல்லாமல் இருக்கிறேன். அதிலிருந்து வெளியே வந்து மறுபடியும் இன்னொரு முறை அம்மை. பிறகு குணமாகி மீண்ட சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வேலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கீழ் தளத்தில் இருந்த அம்புலி சலூனில் கொஞ்ச நாள் முடிதிருத்துநராக இருந்தேன். பிறகு அங்கிருந்த லாண்டரிக் கடை ஒன்றில் அயர்ன் பண்ணும் வேலையும் பார்த்தேன். அம்மாவுக்குத் தெரிந்தால் கடையை காலி பண்ணச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து ஒரு கட்டத்தில் அவர்களே கடைக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

நான் படிக்கவில்லை என்ற வருத்தம் என் அப்பாவுக்கு இருந்தது. அதனால் என்னை மட்டும் சென்னை வீட்டின் மொட்டைமாடி அறையில் தங்கவைத்துவிட்டு, வீட்டின் மற்ற அனைத்து போர்ஷன்களையும் வாடகைக்கு விட்டுவிட்டு, அம்மாவை அழைத்துக்கொண்டு பரமக்குடி சென்றுவிட்டார். அந்த மாடி போர்ஷன் அறையிலும் கொஞ்சமே கொஞ்சமாக, படுக்க மட்டுமே இடம் இருக்கும். மற்ற இடங்களில் சட்டி சாமான்கள் என்று பழைய பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குளியலறை கிடையாது. கீழே உள்ள தரைத்தளத்தில்தான் குளியலறை. இது, வேண்டுமென்றே பண்ணிய ஏற்பாடாகத்தான் எனக்குத் தெரிந்தது. ஓடிவந்துடுவான் என்று நினைத்தனர். ஆனால், நான் போய் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சென்டரில் வேலைக்குச் சேர்வேன் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

எல்டாம்ஸ் சாலையில் வீட்டுக்கு எதிரே நடந்துபோனால் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சென்டருக்குள் போய்விடலாம். அதனால்தான் அம்மாவும் நம்பி அங்கு விட்டார்கள். மாதம்  120 ரூபாய் ஊக்கத் தொகை. அங்கு கிறித்துவப்பாடல்களைத் தமிழாக்கம் பண்ணுவார்கள். பார்வதி ராமநாதன் போன்ற பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். அங்கு அடிக்கடி பட்டிமன்றம் நடக்கும். வெவ்வேறு ஊர்களுக்குப் போய் இயேசுநாதர் வேடம் போட்டுக்கொண்டு சிலுவையைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறேன்.

அந்தச் சமயத்தில்தான் ‘அன்னை வேளாங்கண்ணி’ என்ற படத்தை அங்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தை திரு. தங்கப்பன் மாஸ்டர் தயாரிக்க இருந்தார். அவர் நடன ஆசிரியரும்கூட. அந்தப் படத்துக்கு ஒரு டான்ஸ் அசிஸ்டென்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தார். அப்படித்தான் அவரிடம் சேர்ந்தேன். அந்த வகையில் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் மையத்துக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும். அங்கு இருந்த சுவிசேஷ முத்து, ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்துக்கு வசனம் எழுதிய டி.தாசன் என்ற சங்கிலித்தொடர் தொடர்புகள்தான் ஆர்.சி.சக்தியையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது.

சக்திதான் என் தமிழைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார். ‘இங்கிலீஷ்ல பேசினா பெரிய கொக்கா? இங்கிலாந்துக்குப் போனீன்னா அந்த ஊர்ல பேசுற பாஷை அவ்வளவுதானே?’ என்பார். அப்படிப் பேசிப்பேசியே எனக்குத் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவர் திரு. சுப்பு ஆறுமுகத்திடம் இருந்தவர். தி.மு.க தொண்டராகவும் மாறியவர். அதனால் ‘தீ பரவட்டும்’ போன்ற நிறைய புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் அப்போது தீவிர நாத்திகர். இந்த நாத்திகம் வீட்டில் சாருஹாசன் அண்ணனிடமிருந்தும் தாய்மாமாவிடமிருந்தும் வந்தது. அது சக்தி மூலமாகத் தொடர்ந்தது. அப்போது சக்தியும் நானும் பெரியாரின் கூட்டங்களுக்குச் செல்வோம்.

p10e.jpg

ஒருவேளை தமிழ்நாடு, கேரள எல்லைக்குள் இருந்ததால்தான் இது வந்திருக்கும் என நினைக்கிறேன். வடஇந்தியா, பெங்களூருவில் இருந்திருந்தால் இதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். எதுவும் பேசலாம் என்ற தமிழகச் சூழலும் பெரியாரைப் படித்துக் கற்றதும்தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன். நான் பெரியார் பக்தனோ, தாசனோ, நேசனோ கிடையாது. அவரின் ரசிகன். ‘இவ்வளவு சுதந்திரம், பேச்சுரிமையை எனக்குக் கொடுத்தது இந்தாளுதான்’ என்கிற எண்ணம். சிலருக்கு அவர்  முரடரோ என்று தோன்றலாம். ஆனால், வளையாத நெம்புகோல்போல் அந்த உறுதி தேவையாகவும் இருந்தது.

ப்படி என் வாழ்க்கையில் வந்த வாத்தியார்கள் அனைவரும் எனக்கு வந்து வாய்த்தவர்கள்தாம். நானாகப்போய்த் தேடிக்கிடைத்தவர்கள் இல்லை. பெரியாரைக்கூட யாரோ அவரின் கூட்டங்களுக்கு என்னைக் கூட்டிக்கொண்டுபோய்தான் அறிமுகப் படுத்தினார்கள். இன்று பள்ளி கல்லூரிகளில் வாங்கும் கேப்பிடேஷன்  ஃபீஸ்களை நினைத்துப் பார்க்கையில், சம்பளமும் கொடுத்துப் படிப்பும் கொடுத்த என் வாத்தியார்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பாலசந்தர், மாடியில் குடியிருந்த அந்த டான்ஸ் மாஸ்டர், ஆர்.சி.சக்தி... இவர்கள் யாருமே காசுப் பரிமாற்றத்துக்காகக் கற்றுக்கொடுத்தவர்கள் கிடையாது.

ஆனால், நான் தேடிப்போய் விரும்பி ஒரு மனிதரைக் கண்டுபிடித்தது என்று பார்த்தால் அது காந்திதான். காந்தியுடனான உறவை அற்புதமான சந்திப்பு என்பேன். முதலில் பெரியாரின் விமர்சனம்மூலம் அறிமுகமாகி, அம்பேத்கரின் விமர்சனம்மூலம், ‘ஆமாம், அந்த ஆள் தப்புதான் போலிருக்கிறது’ என்று முடிவுக்கு வந்து, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் காந்தி விமர்சனங்களை உள்வாங்கி... இந்தியாவைக் கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததைப் போல, நான் இவர்களின் வழியாக காந்தியைக் கண்டறிந்தேன் என்றே சொல்லலாம். 

இந்த மக்களைச் சென்றடைவதற்கான யுக்தியைத் தன் வாழ்முறையாகவே மாற்றிக் கொண்டவர் காந்தி. அவர் நல்லவர், கெட்டவர் என்பதைப்பற்றி நான் பேசவில்லை. அறிவும் யுக்தியும் அவரின் விரோதிகளைக்கூட அவரைப் பாராட்டவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கின. காந்தியாரின் மகன் இஸ்லாத்தில் சேருகிறார். அப்போது முஸ்லிம் லீக், ‘உங்கள் மகனே எங்கள் மதத்தில் சேர்ந்துவிட்டார்’ என்பதுபோல ஒரு தந்தி அனுப்புகிறது. ‘‘அதில் என்ன எனக்கு நஷ்டம்’’ என்ற தொனியில் பதில் கடிதம் எழுதிவிட்டுக் கடந்து போவதெல்லாம் அசாத்தியமான மனிதரால் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.

ன்று சினிமாவில் என் ஆரம்ப காலகட்டங்களில் எனக்கு ஆசானாக இருந்து தமிழ் கற்றுத்தந்தவை சினிமாக்கள்தான். அதுவும் குறிப்பாக கண்ணதாசன், கலைஞர், சிவாஜி சார் ஆகியோர் வழி வந்த சினிமாக்கள். நான் கற்றுக்கொண்ட தமிழ் முழுவதும் இவர்களிடமிருந்து செவி வழி வந்ததுதான். சில உதாரணங்களுடன் சொல்கிறேன். அது சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் அதிகமாக விற்றுக்கொண்டிருந்த காலம். அதன் மூலம்தான் அனைவரின் பாடல்களும் எனக்கு வந்தடைந்தன. ‘கைராசி’ படத்தில் ‘அன்புள்ள அத்தான் வணக்கம். உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்’ என்று கண்ணதாசன் எழுதியிருப்பார். ‘ஆயிழை’ என்றால் ‘பெண்’ என்ற அர்த்தத்தைச் சொல்லிக்கொடுத்தது கண்ணதாசன்தான். இப்படிப் பாடல் புத்தகமே என் பாடப் புத்தகங்கள் ஆயின.

‘ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப் போல...’ என்று அர்த்தம் பொதிந்த வரிகளை அறிமுகப்படுத்தியதும் இந்த சினிமாதான். ‘அனார் அனார் மறைந்துவிட்டாயா... என் மாசற்ற ஜோதிமலையே... பெண்ணின் பெரும்பொருளே/பேரழகின் பிறப்பிடமே/என் கண்ணில் படாமல் உன் கட்டழகைக் கல்லறைக்குள் மறைத்து விட்டார்களா மாபாவிகள். காதலுக்கோர் எடுத்துக் காட்டே, கவிஞர்களின் தொடுத்திட இயலா கற்பனை ஆரமே...’ இப்படி எங்கு போகிறது என்றே தெரியாத கவிதையா, உரைநடையா என்று சொல்லமுடியாத மயக்கும் தமிழைக் கலைஞரிடமிருந்தும் அதைப் பேசி நடிக்கும் அந்தக் கலையை சிவாஜி சாரிடமிருந்தும் கற்றேன் என்றால் அது மிகையில்லை.

ப்படி நான் சோர்ந்து கிடந்த தருணங்களில் எல்லாம் யார்யாரோ என்னை மாணவனாக ஏற்றுக்கொண்டு வழிநடத்தி உந்தித் தள்ளி இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படியெனில் ‘கமல்’ என்பவன் தானாகவே வளர்ந்து வந்த ஒருமை அல்லன். அவன் பன்மை. இப்படிப் பலரால் பலம் சேர்க்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பன்மை. இப்படியான புறச்சூழல் அனிதாவுக்கு அமையாததுதான் வேதனை. அந்தச் சூழல் வாய்க்கப்பெற்ற நான் அனிதாக்கள் போன்ற மகள்களுக்கு நண்பனாகவோ, ஆசிரியனாகவோ இருக்க வேண்டியது என் கடன் என்பதை உணர்கிறேன். அப்படியே இருப்பேன் என்ற உறுதியையும் வழங்குகிறேன்.

என்னை இன்னும் செதுக்கிய சில ஆசான்கள் பற்றி அடுத்தவாரமும் தொடர்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்!

கமல்ஹாசன்
 

 

 

 

p8aa_1511853600.jpg

ன்னும் சில ஆசிரியர்கள் பற்றி அடுத்த வாரமும் சொல்கிறேன் என்று கடந்த வாரம் முடித்திருந்தேன். அதில் ஒரு திருத்தம். ‘சில’ என்பது தவறான பதம். ஏனெனில், நம்மைக் கடந்து செல்லும் சக மனிதர் p8b_1511853556.jpgஒவ்வொருவரும் நமக்கான ஆசிரியர்தான். அப்படிக் கடக்கையில் என்னிடம் சில விஷயங்களை விதைத்துச் சென்றவர்கள், இன்னும் விதைத்துக் கொண்டிருப்பவர்கள்... இப்படிப் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி ஓரிரு வாரங்கள் பேசலாம் என நினைக்கிறேன். இவை, ‘இப்படியாக நானே ஓர் ஆசிரியராக வளர்ந்து நிற்கிறேன்’ என்ற பெருமிதத்துக்காகச் சொல்லப்படுபவை அல்ல. நான் எப்போதும் என்னை ஒரு மாணவனாகத் தக்கவைத்துக்கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையை உணர்த்தவே இவற்றைப் பகிர்கிறேன்.

நடன உதவியாளராக தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்தபோது எனக்கு 16 வயதிருக்கும். மலையாளப் படங்களில் பணிபுரிய அவருடன் முதல்முறையாகக் கேரளாவுக்குச் சென்றிருந்தேன். அந்த நாள்கள் இன்னும் எனக்குள் பசுமையாக நினைவில் உள்ளன. உணவு, உடை, கலாசாரம், சூழல் என நம்மில் இருந்து முற்றிலும் வேறாக இருந்ததைப் பார்த்ததும் ஏதோ வெளிநாடு ஒன்றுக்கு வந்ததைப்போன்ற ஓர் உணர்வு. ‘ஒருகாலத்தில் ஒரே நாடாக வாழ்ந்திருக்கிறோம். தமிழ் பேசியிருக்கிறோம். ஆனால், இன்று எப்படி முழுமையாக மாறுபட்டு இருக்கிறது’ என்று பெரிய ஆச்சர்யம்.

அங்கு நாங்கள் மேரிலேண்ட் சுப்ரமணியம்பிள்ளை அவர்களின் இடத்தில் வேலைசெய்துகொண்டிருந்தோம். ஓய்வான நேரங்களில் கேரளாவைச் சுற்றிப்பார்க்கக் கிளம்புவோம். அப்போது அங்கே ஒரு பொதுக்கூட்டம். ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். திக்கித் திக்கிப் பேசும் அவரின் பேச்சைக் கேட்கையில் எனக்கு பயங்கரச் சிரிப்பு வந்தது. ஆனால், கூட்டத்தில் ஒருவர்கூட சிரிக்காமல், அவரின் பேச்சை ஆமோதிப்பதைப்போல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். சென்னையில் கண்ணதாசன், ஜெயகாந்தன் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். தி.மு. கழகத்தைச் சேர்ந்த கலைஞர் போன்றோரின் பேச்சின் வீரியம் எனக்குத் தெரியும். காங்கிரஸ்காரராக இருந்த ஈ.வி.கே. சம்பத் பரமக்குடியில் பேசியதை எங்கள் அப்பா ரெக்கார்டு செய்து சென்னையில் எங்களுக்குப் போட்டுக்காட்டியிருக்கிறார்.

அப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு வளர்ந்த எனக்கு அந்தத் திக்குவாய்ப் பேச்சு பயங்கர ஆச்சர்யம். ‘இவர் யார்’ என்று விசாரித்தேன். ‘இவர்தான் காம்ரேட் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்’ என்றார்கள். அப்போது தான் ஈ.எம்.எஸ் எனக்கு அறிமுகமாகிறார். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் ஈ.எம்.எஸ்-ஸிடம், ‘உங்களுக்கு எப்போதுமே இந்தத் திக்கு உண்டா’ என்று பேட்டிப் பளபளப்புக்காக, குறும்பாக அந்தக் கேள்வியைக் கேட்கிறார். அவருக்கு ஈ.எம்.எஸ் சொன்ன பதில் இதுதான், ‘இல்லைங்க, பேசும்போது மட்டும்தான்.’ இப்படித் தன் நகைச்சுவையும் எளிமையுமாக எனக்குள் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை விதைத்த காம்ரேட் ஈ.எம்.எஸ் இன்றும் எனக்கு ஆகச்சிறந்த ஆசான். 

p8a_1511853619.jpg

அந்தத் தாக்கம்தான் என்னை ‘தாஸ் கேபிடல்’ படிக்கத் தூண்டியது.அன்று சஃபையர் திரையரங்குக்கு எதிரே ‘சோவியத் எக்ஸ்போர்ட்’ என்று ஒரு புத்தகக்கடை இருக்கும். இந்தப்பக்கம் அமெரிக்கத் துணைத்தூதரகம், அந்தப்பக்கம் சோவியத் எக்ஸ்போர்ட் என்று நல்ல புத்தகங்களைப் போட்டி போட்டுக்கொண்டு விற்பார்கள். அங்கு மூன்று ரூபாய்க்கும் நான்கு ரூபாய்க்கும் புத்தகங்கள் கிடைக்கும். அப்படித்தான் நான் `தாஸ் கேபிடல்’ புத்தகத்தின் மூன்று வால்யூம்களையும் மொத்தம் 12 ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதுவும் ஆங்கிலத் தொகுப்பு. அதை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளேன் என்பது எனக்கான பெருமை. லெனினின் எழுத்துகளும் அப்படித்தான் அறிமுகமாகின. ‘நாம பள்ளிப்படிப்பையே முடிக்கலை’ என்கிற பதற்றம்தான் காசு வரும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கக் காரணம் என நினைக்கிறேன்.

சினிமாவும் அரசியலும் தொட்டுக்கொண்டே இருப்பதை ஏதோ மாபாதகச் செயல்போலச் சித்திரிக்கிறார்கள். ஆனால், ஒன்றின் சுதந்திரத்தில் மற்றது தலையிடாது. எப்போது விலகி இருக்கவேண்டும் எப்போதெல்லாம் நெருங்கிவர வேண்டும் என்பதைப் புரிந்து, அறிந்து இருந்தால் அது ஒன்றும் தவறில்லை. தமிழகத்தில் அந்தச் சூழல் இன்றுவேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால், அன்று அந்தச் சூழல் இங்கும் இருந்தது. சாருஹாசன் திமுக, அப்பா காங்கிரஸ் என்று இரு குரல்களும் வீட்டிலேயே கேட்டுக்கொண்டிருந்த காலகட்டம் உண்டு. சாருஹாசன் பரமக்குடியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் நண்பர்களுடன் கூடி அரட்டை அடிப்பார். நானும் அண்ணனுடன் போய்விடுவேன். இன்னொரு பக்கம் அப்பாவைப் பார்க்க பக்தவத்சலம், காமராஜர், கக்கன் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு பெரிய மனிதர்கள் என்பது  அப்போது எனக்குத் தெரியாது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முக்தா சீனிவாசன் அவர்கள் எடுத்த, ‘சினிமா பைத்தியம்’ என்ற ஒரு படத்தைப்பார்க்க காமராஜர் வந்திருந்தார். அந்தப் படத்தில் நானும் நடித்திருந்தேன். படத்தில் சிவாஜி சார் திருப்பூர் குமரனாக கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தார். காமராஜர் அதைப்பார்க்கத்தான் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னைப் பார்த்தவர், ‘என்ன நீ முடிவே பண்ணிட்டியா’ என்றார். ‘ஆமாங்கய்யா இப்ப ஓரளவுக்கு நடிக்கக் கூப்பிடுறாங்க’ என்றேன். உடனே பக்கத்தில் உள்ளவர்களிடம், ‘யாரு தெரியும்ல, நம்ம பரமக்குடி சீனிவாசன் பையன்’ என்றார். பிற்பாடு சண்முகம் அண்ணாச்சி நாடகங்களைப் பார்க்க எம்.ஜி.ஆர் வருவார். நான் சிறுவனாக இருந்தபோது அவர் அன்பளித்த தங்கம் பதித்த முத்துமாலையை நீண்டநாள் வைத்திருந்தேன். வளர்ந்த பிறகு அதை அவரிடமே காட்டி மகிழ்ந்திருக்கிறேன். இப்படி இங்கு கலையும் அரசியலும் கலந்தேதான் வளர்ந்தன. அது எனக்குக் கெடுதலாகவும் தெரியவில்லை, நல்லதாகவும் தோன்றவில்லை. சென்னையில் சூடு, ஊட்டியில் குளிர் என்பதுபோல் அது ஒரு சூழல்.

எம்.ஆர்.ராதா அண்ணனின் நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். அவர் தன் நாடகங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை அடித்து விட்டார் என்றால் ஒட்டுமொத்த ஏரியாவும் பதற்றமாகிவிடும். ‘இப்படியெல்லாம் சொல்கிறாரே, மொத்த நாடக் கொட்டகையையும் கொளுத்தி விடுவார்களே’ என்று பார்ப்பவர்களே பதறுவார்கள். இப்படி ராதா அண்ணன் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய மனிதர். சிவாஜி,
எம்.ஜி.ஆரே அவரைப்பார்த்தால், ‘அண்ணே வணக்கம்’ என்று சொல்லும்போது நாங்கள் எம்மாத்திரம். அவரிடம் நானும் நெருங்கியதில்லை. ஆனால், அவர்மீது மாறாத மரியாதை உண்டு. ‘நேத்துகூட ராதா அண்ணனைப் பார்த்தேன்’ என்று சொல்லி சக நடிகர்கள் சந்தோஷப் படுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவுக்கும் அவர் தேனாம்பேட்டையில் தெருவில் நடந்துபோகும்போது பார்த்திருப்பார்கள். அவ்வளவுதான்.

சமீபத்தில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஐக் என் உதவியாளர். இவர் ராதா அண்ணனின் பேரன். ஐக்கின் அம்மா திருமணத்துக்கு நான் போயிருந்தேன். அந்தச் சமயம் ராதா அண்ணன் ஜெயிலிலிருந்து வந்திருந்தார். நான் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டேன் என்பது அவருக்குத் தெரியும். என் அருகில் வந்தவர், ‘பாலேவூ ஃபான்ஸே’ என்று கேட்டார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ஃப்ரென்ச் கத்துக்கிட்டேன், ஜெயில்ல’ என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறைக்கூடத்தையே கல்விக் கூடமாக நினைத்த அவரின் மனம் எப்படிப்பட்டது என்று பாருங்கள். கற்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் சூழல் அதுவாகவே அமையும் என்பதற்கு இவர்கள் எல்லாம் உதாரணங்கள்.

p8c_1511853646.jpg

ங்கைவிட மலையாள, மேற்கு வங்க சினிமாக்களில் அரசியல் இன்னும் வீரியமாகத் தொட்டுக்கொண்டு இருக்கும். ‘இவன் என்ன எதற்கெடுத்தாலும் கேரளா, வங்கம் என இடதாகவே பேசுகிறான்’ எனச் சிலர் நினைக்கலாம். அவர் களிடமிருந்து நாம் கற்கவேண்டிய உதாரணங்கள் அப்படித்தான் சொல்கின்றன. அவற்றில் ஓர் உதாரணம்... கேரளத்தில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு திரைப்படம், ‘லெஃப்ட், ரைட்’. அதில் நடை, உடை, பாவனை என அப்படியே பினராயி விஜயன் அவர்களை நகலெடுத்திருந்தார்கள். ‘நீங்கள் படம் பார்த்தீங்களா? அதில் தோழரை தவறா சித்திரிச்சிருக்காங்க’ என்று அங்கிருந்து பேசினர்.  ‘பார்த்தேன். ஆனால் ஐயாவிடம் ரியாக்ட் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இது குரல். விமர்சனங்களை அனுமதிப்பதுதான் உங்கள் தனித்துவம். அதற்கு நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ‘ராஜன் பறைஞ்ச கதா’ என்று எமர்ஜென்சியின்போது கொலை ஒன்றைப் பற்றி ஒரு படம் எடுத்தார்கள். அந்த தைரியம் உள்ள ஊர். இப்போது அதைக் கெடுத்தது  இந்த மாதிரியான ஓர் அமைப்பாக இருக்கக்கூடாது’ என்றேன். விட்டுவிட்டார்கள். நான் சொன்னதால் அவர் விட்டுவிட்டார் என்றில்லை. கேட்டார்கள் சொன்னேன். அவரும் அதைப் புரிந்துவைத்திருந்தார். இதுதான் அவர்களின் பெருந்தன்மை.

ஆர்.சி.சக்தி என் 16-வது வயதில் கொஞ்சம் தாமதமாகக் கேட்ட நாத்திகக் குரல். ஆனால், அதற்கு முன் சாருஹாசன், எங்கள் மாமா ஜி.சீனிவாசன் என்று என் ஏழெட்டு வயதில் இருந்தே இந்த எதிர்க்குரல்கள் எனக்குள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஆனாலும், அருகில் இருந்த ஆத்திக சமாஜத்துக்குப்போய் கிருபானந்த வாரியாரின் கதைகள் கேட்பது பிடிக்கும். கதை சொல்வதுதான் பிற்பாடு என் தொழிலாகப்போகிறது என்பது எனக்கு அப்போது தெரியாது. மூன்று மணிநேரம் முழுக் கதையையும் கேட்கும் பிள்ளைகள் அரிது என்பதால் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ‘இதுக்கென்ன பதில்’ என்று கேள்வி கேட்பார் வாரியார். கையைத்தூக்கி பதில் சொன்னால் உடனே ஒரு புத்தகம் பரிசாகக் கொடுப்பார். அப்படி நான் பல புத்தகங்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறேன். அவை என் தமிழ் வளர்ச்சிக்கும், கதை சொல்லும் திறனை  வளர்த்துக்கொள்ளவும் பேருதவியாக இருந்தன. பிற்பாடு அது என் தொழிலுக்கே உபயோகமாக இருந்தது என்பது நிதர்சனம்.

பிறகு நான் வளர்ந்து ஆரம்பக்கட்ட நடிகனாக இருந்தபோது கோயில் கட்ட நிதி திரட்டியபடி வீடு வீடாக வந்துகொண்டிருந்தார் கிருபானந்த வாரியார். அப்படி என்னிடம் வந்தவர், ‘நீங்க, யார், இப்ப என்னவாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அன்று என்னிடம் விபூதி வாங்கிய நீங்கள் இன்று வேறுமாதிரி பேசலாம். ஆனால், இருவரும் அன்பைத்தான் பேசுகிறோம். அந்தவகையில் கட்டும் கோயிலுக்கு நீங்கள் நிதி உதவி பண்ணணும்’ என்றார். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அன்று ஒரு படத்துக்கான என் மொத்தச் சம்பளமே 18 ஆயிரம் ரூபாய்தான். பிறகு இந்த விஷயம் கேள்விப்பட்டு என்னிடம் பேசிய சாருஹாசன், ‘என்னடா, பேசுறது ஒண்ணாவும் செய்யுறது வேறொண்ணாவும் இருக்கு’ என்றார். ‘அவர் என்னவேணும்னாலும் கட்டிக்கட்டும். ஆனால், அவர் எனக்குள் தமிழ்க் கோயில் கட்டினவர். அதற்காகத்தான் கொடுத்தேன்’ என்றேன்.

ப்படி எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கதைசொல்லி, பாலகிருஷ்ண சாஸ்திரிகள். இவர் மௌலியின் அப்பா என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆறேழு வயதில் தொடங்கி, கிட்டத்தட்ட பதின்மூன்று வயதுவரை தொடர்ச்சியாக இவர் சொன்ன கதைகளைக் கேட்டிருக்கிறேன். அது பீம்சிங் சாரின் இடம் என நினைக்கிறேன். பக்கத்திலேயே பீம்சிங் சாரின் வீடும் இருக்கும். பெரிய திடலாக இருக்கும் அந்த இடத்தை, அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குக் கொடுத்திருந்தார். அங்கு நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் ஹரிகதா காலட்சேபம் முக்கியமானது.

தினமும் மாலை அங்குபோய் உட்கார்ந்துவிடுவேன். வெற்றுடம்புடன் அமர்ந்து நான்கைந்து பக்கவாத்தியக் கலைஞர்களுடன் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லுவார். சிரிப்பு, அழுகை... என அனைத்தையும் தன் குரலிலேயே கொண்டுவருவார். ஏதோ கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுவதுபோன்ற அழுகையைத் தன் குரலிலேயே கொண்டுவருவதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கும். சம்ஸ்கிருதத்தில் சொல்லி, அதற்குத் தமிழில் அர்த்தம் உணர்த்தி... இப்படி ஒவ்வொரு கதையையும் காட்சியையும் விவரிக்கும்போது சினிமா பார்க்கும் உணர்வைத் தரும். அதற்குப் பின் உள்ள அவரின் அசாத்திய சாதகத்தை நினைத்து இப்போதும் வியக்கிறேன்.

அவர், இன்றைய ஸ்டேட் வங்கி என்று அழைக்கப்படும் அன்றைய இம்பீரியல் வங்கியில் உயரதிகாரி.  ஒருமுறை அவர் அலுவலகம் போகும் கோட்சூட் காஸ்ட்யூமை மௌலி சார் என்னிடம் காட்டியபோது வியப்பாக இருந்தது. அங்கு கோட்சூட் போட்ட வங்கி அதிகாரி, இங்கு வெற்றுடம்புடன் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு கதைசொல்லி... அது வேறு, இது வேறு என்று தோன்றும் ஓர் உருவ மாற்றமாகவே எனக்குப் பட்டது. அது, மிகவும் ஆச்சர்யமான டிரான்ஸ்ஃபர்மேஷன்.

இன்னும் சொல்லப்போனால் மௌலி சாரே எனக்கு ஆச்சர்யம்தான். பட்டை பட்டையாக விபூதி, குடுமியுடன் ஒரு பையனாக இருப்பார் என்று நினைத்தால் கிட்டத்தட்ட பாலசந்தர் சார் பேசும் விஷயங்கள் எல்லாவற்றையுமே அவரின் நாடகங்களில் தைரியமாகப் பேசக்கூடியவர். அவரின் இளைய சகோதரர், கிரேஸி மோகன் ட்ரூப்பில் டைரக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். அவை மேடை நாடகம் என்றாலும் மிகவும் வித்தியாசமான, எடுத்தெறிந்த ஹியூமர் இல்லையா? கிரேஸிமோகன் பேசுவது, ‘ஃப்ளைட் 172’-ல் மௌலி சார் எழுதியவை எல்லாம் நல்ல முன்னோடி ஹியூமர். துறுதுறுவென வரக்கூடிய காட்சிகளாக நன்றாக இருக்கும். இப்படி நாங்கள் ஒருவரை மற்றவர் முதுகில் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருப்போம். அவை நியாயமான பாராட்டாகத்தான் தோன்றும்.

ன்னோர் ஆச்சர்யமான விஷயம், என் வாழ்க்கையில் பிற்பாடு நடந்தது. ‘ஹேராம்’ படத்துக்குக் கிடைத்ததிலேயே முக்கியமான பாராட்டு Philip Lutgendorf என்பவரின் பாராட்டு. அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகப் பேராசிரியர். இவர் `ஹேராம்’ படத்தைப் பாராட்டி மிக அற்புதமான நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். இவரைப்பற்றி எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள். முதல் ஆச்சர்யம், அவர் `ஹேராம்’ படத்தைப் புரிந்துகொண்டு எழுதிய அந்தக் கட்டுரை. ‘இதெல்லாம் சிலருக்குப் புரியாது. இது என் சந்தோஷத்துக்கு’ என நினைத்து எடுத்ததை மிகமிக நுணுக்கமாகப் பிடித்து அவர் எழுதியிருந்தது, என் திரைக்கதையை அவர் வரிவரியாகப் படித்ததைப்போல் இருந்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘என்னென்ன பிடித்தது’ என்று பேச ஆரம்பித்து, நீண்ட நட்பாக இன்றும் தொடர்கிறது.

அவர் தன் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டரில் திரைப்படப் பிரிவு மாணவர்களுக்கு ‘ஹேராம்’ படத்தைப் பாடமாக நடத்திக்கொண்டிருப்பதாகச் சொன்னார். அது பெருமையாக இருந்தது. இதேபோல் ஐரா பாஸ்கர் என்ற பெண்மணி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் ‘ஹேராம்’ படத்தைப் பாடமாக நடத்தினார்கள். அவர்களும் ஆச்சர்யம்தான். ஆனால், அவர்  ஓர் இந்தியர். அவர்களுக்கு `ஹேராம்’ புரிந்ததே எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அதில் இருக்கக்கூடிய புராண இதிகாசங்கள் பற்றிய புரிதல், அது வெறும் நையாண்டி மாத்திரம் அல்ல; கீமாயணம் மாதிரி நையாண்டி அல்ல ஹேராம். அழுத்தமான கோபம். அதை இங்கு ஒருவரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டவர் பிலிப் என்கிற எங்கோ இருக்கும் பேராசிரியர் என்பதுதான் எனக்கு ஆச்சர்யம். 

அவரைப் பற்றிய இரண்டாவது ஆச்சர்யம், ‘இதைப்படித்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று ஒரு புத்தகம் தந்தார். திறந்து பார்த்தால், ‘ஹரிகதா காலட்சேபம் எப்படிச் செய்வது’ என்பதற்கான விளக்கவுரை. இதுபோன்ற கதைகள் கேட்டிருக்கிறேனே தவிர, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் கிறித்தவருக்கு எப்படி இப்படி ஒரு தேடல்?  பிறகு, ‘இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது. சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை, படித்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று மௌலி சாரிடம் கொடுத்தேன். அந்தப் புத்தகம் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் படுக்கையின் அருகேயே கடைசிவரை இருந்ததாம். படித்துக்கொண்டிருந்திருக்கிறார். ‘அந்தப்புத்தகம் திரும்ப வேணுமா’ என்று மௌலி கேட்டார். `அந்தப்புத்தகம் அங்குதான் இருக்கவேண்டும். அதை வைத்துப்படிக்க எனக்கு அருகதை இருக்கிறதா என்று தெரியாது. அவரிடமே இருக்கட்டும்’ என்றேன். இரண்டு பக்கங்கள் படித்துவிட்டுத் தூக்கிப்போடாமல் அவர் கடைசிவரை படித்துக் கொண்டிருந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதில் எனக்குப் பெருமை. என்னமோ நான்தான் பிலிப் என்பது போன்ற ஒரு சந்தோஷம்.

கிருபானந்தவாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள்போக அப்போது மதுரம் அத்தை என்பவரிடம் தினமும் கதை கேட்பேன். ஆஸ்திக சமாஜத்தில் போய்க் கதை கேட்கவில்லை என்றால் அத்தையிடம் கேட்டுக்கொண்டிருப்பேன். புனைகதை. அந்தமாதிரி ஒரு புராணமே இருக்காது. 60, 70 நாள்கள் கதை சொல்ல வேண்டும் என்றால் அவரும் எங்குதான் போவார். இதெல்லாம்தான் என் சூழல்.

இன்று என் வீட்டிலேயே அனைவரும் தேடித்தேடி வாசிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரிய அண்ணன் சாருஹாசனைப் பார்க்கப்போனால், ‘அந்தப் புத்தகம் படிச்சியா, இந்தப்புத்தகம் படிச்சியா’ என்று அண்ணியார் விசாரிப்பார். ‘அது என்ன புத்தகம், பதிப்பகம் என்ன’ என்று குறிப்பெடுத்துக்கொள்வார். 75 வயதுக்குமேல் ஆகிறது. ஆனால், ‘முந்திமாதிரி படிக்கவே முடியறதில்லை’ என்று குறைப்பட்டுக்கொள்வார். நாத்திகர் தாய் மாமா இப்போது ஆத்திகர். கொடைக்கானலில் இருக்கிறார். ‘ராமானுஜரைப்பற்றி நல்ல வாழ்க்கை வரலாறு கிடைச்சா எனக்கு அனுப்புங்க’ என்கிறார். சாருஹாசன் போல் உள்ளவர்களும் இருக்கிறார்கள். மாமாவைப் போல் மாறியவர்களும் இருக்கிறார்கள். இந்தக்குரல் எங்கள் வீட்டிலேயே கேட்டுக்கொண்டிருப்பதால் எனக்கு இது மகா பாவமாகவோ, பெரிய சாதனை நிலையாகவோ தோன்றவில்லை. ஆனால், என்னைப்பார்த்து இந்து விரோதி என்றால், சிரிப்பாகத்தான் இருக்கிறது. நான் பிராமண விரோதியாகவும் இருக்கமுடியாது, இந்து விரோதியாகவும் இருக்க முடியாது, தலித் விரோதியாகவும் இருக்க முடியாது. ஏனெனில், என் குடும்பம், நட்பு, சூழல் அப்படிப்பட்டவை.

ந்தத் தேடலின் வழி வந்ததுதான் ‘மருதநாயகம்.’ ஒருமுறை பிரிட்டிஷ் ராணுவத்துடன் போருக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அவசரப்பட்டுக் கோட்டைக் கதவை அடைத்துவிடுவார்கள். அதனால் மருதநாயகத்தின் படையில் இருந்த ஒரு மலையாளி வீரர் பிரிட்டிஷ் படையிடம் மாட்டி இறந்துவிடுவார். வெளியே வெள்ளைக்காரர்கள் போருக்காகக் காத்திருக்க, கோட்டைக்குள்ளே கலகத்துக்கான ஒரு சூழல் இருக்கும். ‘கதவடைத்தது முஸ்லிம்கள் வேண்டுமென்றே செய்த வேலை. அதனால் எதிர்த்தரப்பில் ஓர் ஆளை பலிகொடுத்தே ஆகவேண்டும்’ என்பார்கள் மலையாளிகள். `கொன்றது பிரிட்டிஷ் படை. ஆனால், எங்கள் தரப்பில் ஓர் உயிர் போனால் அவர்கள் தரப்பிலிருந்தும் ஓர் உயிர் போகவேண்டும்’ என்பார்கள் முஸ்லிம்கள். 

p8d_1511853672.jpg

அப்போது ஒரு வசனம் வரும். ‘நான் மகாராஜா. எனக்குப் போருக்கு ஆள் வேண்டும். ஆளுக்கு ஓர் ஆள் என்றால் இரண்டு பேரை என்னால் தரமுடியாது. வேண்டுமென்றால் ஒரே ஆள்தான் தரமுடியும்’ என்பான் மருதநாயகம். ‘அது நியாயமே கிடையாது’ என்று எதிர்க்குரல்கள் ஒலிக்கும். உடனே தன் கத்தியை உருவி வைத்துவிட்டு, ‘ஒரே ஆளைக் கொடுக்கிறேன். உங்களுக்கு 10 நொடி அவகாசம்’ என்று தன் கழுத்தைக் காட்டி, ‘இதற்குள் ஓர் இந்துவும் இருக்கிறான். ஒரு முஸ்லிமும் இருக்கிறான். இதை முடித்துவிட்டுப் போங்கள். உங்கள் பகை முடியும்’ என்று குனிவான். அவனது மொட்டைத் தலையைப் பார்க்கும்போதுதான் அவன் இஸ்லாத்துக்கு மாறிவிட்டான் என்ற முழு விவரம் மற்றவர்களுக்குத் தெரியும்.

‘நமாஸுக்குக் குனியும்போது நான் சரியான இஸ்லாத் எண்ணத்தில்தான் இருப்பேன். ஆனால், மீனாட்சி கோயிலை அண்ணாந்து பார்க்கும்போது எனக்குள் பழைய ஞாபகம் வரத்தான் செய்யும்’ என்று மருதநாயகம் பேசுவதாக இந்தப்படத்திலேயே இன்னொரு வசனம் எழுதியிருப்பேன். இப்படி நான் எழுதிய அந்த வசனத்தை எனக்குள் விதைத்தது என் வாசிப்பும், சூழலும்தானே தவிர வேறென்ன? எப்படி ஒரு தாஜ்மஹால் பார்க்கும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு போக முடியாதோ, மதுரை மீனாட்சி கோயிலைப் பார்க்கையில் கீழே குனிந்துகொள்ள முடியாதோ அப்படித்தான், இதிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது. ஏனெனில், இதுதான் நம் கலாசாரம்.

னால், இந்தப் பழைமையின் பெருமையையும் கலாசாரத்தையும் மொழியையும் சரியாக உள்வாங்கிக்கொள்ளாத இன்னும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.  திடீரென்று ஒரு வருடம் அமெரிக்கா போய் வந்தவர்களிடம் பேசிப்பாருங்கள், தமிழ் தெரியாதவர்கள்போல் நடிப்பார்கள். அதேபோல ஐந்து ஆண்டுகள் வடஇந்தியாவில் இருந்துவிட்டு வந்தவர்கள், அனைத்துக்கும் ‘அச்சா அச்சா’ என்பார்கள். அதாவது, தமிழ் மறந்துபோகிற அளவுக்கு அவர்களுக்கு அவ்வளவு நன்றாக இந்தி வருமாம். அதேபோல பிராமணப் பெண்கள் பலர், ‘ஷாப்ட்டேளா’ என்று ‘சா’ வரவேண்டிய இடங்கள் அனைத்திலும் ‘ஷா’ போட்டுப் பேசுவார்கள். சம்ஸ்கிருதத்தில் பேசிப்பேசி ‘சா’வெல்லாம் `ஷா’வாகிவிட்டது என்று சொல்ல விரும்பும் விஷயம்தான். இது உள்ளிருக்கும் நிஜத்தை மறைக்கக் காட்டிக்கொள்ளுதல்தான். ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.

 ‘ஆசிரியர்கள் என்று ஆரம்பித்து மதம், மொழியில் வந்து முடிக்கிறேன்’ என்று நினைக்கிறீர்களா? இவற்றைவிட சிறந்த ஆசான் வேறென்ன இருக்க முடியும்?

ஒரு நடிகன் ஒரு படத்தில் நடிப்பது என்பது சாதனையாகப் பார்க்கப்படும் இந்தச்சூழலில் நண்பனும்  இசை ராட்சசனுமான ஒருவருடன் நான் 100 படங்கள் பயணப்பட்டிருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய பயணம்? அந்த இசை ராட்சசன் பற்றியும், மேலும் பல ஆசான்களைப் பற்றியும் அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

கமல்ஹாசன்

 

p8c_1512453679.jpg

ஆர்.சி.சக்தி, என் கையில் பேனாவைக் கொடுத்து, ‘நீ எழுத்தாளன்’ என்று என்னை நம்ப வைக்க, நானும் நம்பி ஆரம்பித்துவிட்டேன். கிராமத்திலிருந்து வரும் பணக்காரரை சினிமா எடுக்கவைத்து p8b_1512453689.jpgஇழுத்துவிடுவார்களே, அப்படி நானும் ‘எழுத்தாளன்’ என்று நம்பி கலர்கலராக பேனா வாங்கியதுதான் மிச்சம். அப்படி எழுதுவதற்காக மட்டுமே நான் படிக்க ஆரம்பித்தேன். நமக்குள் தோன்றும் எண்ணங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால், அவை ஓரிடத்தில் தேங்கி நிற்கும் குளமாக இருக்கிறதே, ஓடவேண்டாமா? ஓடவேண்டும் என்றால் இன்னோர் ஆற்றுடன் கலந்தால்தான் முடியும். ஓடையாக ஓரிடத்தில் நின்றால் யாராவது கழுவிவிட்டுச் சென்றுவிடுவார்கள். நதியோடு கலந்தால்தான் நமக்குப் பெருமை என்பது போகப்போகப் புரிந்தது. ஆனால், சீக்கிரமே புரிந்துவிட்டது என்பதுதான் பெரிய நன்மை. அதைப் புரியவைக்க மிகப்பெரிய ஊக்கியாக இருந்த எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி சொல்கிறேன்.

ட்சி, இலக்கு, எண்கள்... இவை முழுவதும் ஆர்.சி.சக்தி மூலமாக எனக்குக் கிடைத்தவை. ‘அவை மாத்திரம் போதாது’ என்று சொல்லி, தமிழிலேயே வந்த சில முக்கியமான புத்தகங்களைக் கொடுத்தது சில நண்பர்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் எனக்கு அறிமுகமானவர் சுஜாதா. எனக்கு முன்பே எங்கள் வீட்டில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். என் அண்ணன்மார்களைப் போல் வீட்டுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்கும் பிராமணப் பிள்ளைகளில் அவரும் ஒருவர். எல்டாம்ஸ் சாலையில் அவர்களுக்கு இருந்த ஒரே புகைப்போக்கி, எங்கள் வீட்டின்  மொட்டைமாடி. அப்போது அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஆனால், இவர்தான் சுஜாதா என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. ஆனாலும், அவரைச் சின்ன வயதில் இருந்தே தொடர்ந்து படிப்பேன். ஏனெனில் எங்கள் அக்கா, சுஜாதாவின் ரசிகை. அந்த வயதில் தி.ஜானகிராமன் ரொம்பவே ஹெவி. அதனால் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும்.

சுஜாதா அப்போது தினமணிக் கதிரில் ‘சொர்க்கத் தீவு’ என்றொரு கதை எழுதிக்கொண்டு இருந்தார். அதன் மூலக்கதையைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில், ‘இதுதான் அந்தக்கதை’ என்று சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்திவிட்டோம். உடனே அவர் கோபித்துக்கொண்டு அந்தத் தொடரையே நிறுத்திவிட்டார். ஆனால், எங்களுக்கு அதை நிறுத்திய சந்தோஷம் கொஞ்சநாள்களே இருந்தன. பிறகு ‘எங்கோ ஒரு சாயல் இருந்ததற்காக நல்லா எழுதிட்டு இருந்த மனிதரை நிறுத்தவைத்து விட்டோமே’ என்று வருந்தினேன். பிற்பாடு அதை அவரிடம் சொன்னபோது,  ‘`அடப்போடா பித்துக்குளி... உனக்கு பயந்து நிறுத்திய நான் பெரிய பித்துக்குளி’’ என்று சிரித்தார். 

p8a_1512454071.jpg

பிறகு சுஜாதா பெங்களூரில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் குடியிருந்தபோது அவரைப் பார்க்க அடிக்கடி செல்வதுண்டு. இயக்குநர் பி.வி.காரந்த்தைப் பார்த்துவிட்டு சுஜாதாவையும் பார்த்துவிட்டுத் திரும்புவேன். அப்படி என்னுடன் சுஜாதா வீட்டுக்கு வந்த அன்றைய இயக்குநர்கள் இன்று அங்கு சீனியர் இயக்குநர்களாக இருக்கிறார்கள். பி.எஸ்.ரங்கா உட்பட பல இயக்குநர்கள் தங்களுடைய மோட்டார் பைக்கில் என்னை ஏற்றிக்கொண்டு போய் சுஜாதா வீட்டில் விட்டுவிட்டு ‘இரண்டு மணிநேரம் கழித்து வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள்.  அப்போது சுஜாதாவுடன் இருந்த நாள்கள், அவர் எழுதப்போகும் நாவலைப் பற்றி சொன்னவை என, சென்னை வந்த பிறகும் நண்பர்கள் வட்டத்தில் அவரைப் பற்றிய பேச்சே ஒரு வாரம் ஓடும். ‘அவர் அப்படிச் சொன்னார், நான் அதற்கு இப்படிச் சொன்னேன்’ என்று அங்கு பேசிக்கொண்டிருந்ததைச் சொல்வதே மிகப்பெரிய சந்தோஷம். இப்படி பெங்களூரு செல்லும் பழக்கம், பிறகு அங்கு நடக்கும் சினிமா விழாக்களுக்குச் சென்று படங்கள் பார்ப்பதுமாகத் தொடர்ந்தது. அனந்து சாரும் நானும் வண்டி எடுத்துக் கொண்டு அங்கு போய், குறைந்தபட்சம் 10 படங்களாவது பார்த்துவிட்டுத் திரும்புவோம். ஏனெனில் இங்கு அந்தப் படங்கள் காணக்கிடைக்காதவை. இப்படி தேடித்தேடி சினிமா பார்ப்பதும் அவ்வளவு இஷ்டம்.

சுஜாதா பற்றிய விவரங்களை எம்.எஸ்.பெருமாளிடம் சொல்வேன். எம்.எஸ்.பெருமாள், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் எழுத்தாளர். அவரின் சுஜாதா பற்றிய விமர்சனங்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ‘என்ன அவ்வளவு பெரிய எழுத்தாளரை இப்படித் தூக்கிப்போடுகிறார்கள். சுஜாதாவையே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களே’ என்று தோன்றும். அதெல்லாம் எனக்கு மிக வியப்பாக இருக்கும். ‘இதுதான் சரி, இவையெல்லாம் தவறு’ என்ற அவர்களின் விமர்சனத் தோரணையும் என் எழுத்துக்கு உந்துதலாக இருந்தது.

இந்த எம்.எஸ்.பெருமாள்தான் எனக்கு தி.ஜானகிராமன் போன்ற சில எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தவர். அந்த 18 வயதுதான் தி.ஜாவைப் படிக்க சரியான வயதும்கூட. அதற்கு முன் அவரை வாசிக்க முயற்சி செய்திருந்தால் சில சங்கேதங்கள் புரியாமல் போயிருக்கும். ‘மோகமுள்’, ‘மரப்பசு’ புரிவதற்கெல்லாம் அந்த வயதாவது வந்திருக்கவேண்டும். அதேபோல இந்திரா பார்த்தசாரதி அவர்களின், ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ போன்ற நாவல்கள் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவை. அவரைப் போன்றே நான்கைந்து பக்கங்கள் எழுதிப்பார்த்துவிட்டு, பிறகு வெட்கப்பட்டு நிறுத்தியதெல்லாம் உண்டு.  

‘அவள் ஒரு தொடர்கதை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இரண்டு எழுத்தாளர்கள் செட்டுக்கு வந்து பேட்டி எடுத்தார்கள். அந்தப் பேட்டியை, படப்பிடிப்பு சூழல்களைச் சொல்லி இடதுசாரித் தன்மையுடன் எழுதியிருந்தார்கள். செட்டில் இயக்குநர், நடிகர்கள் போன்றோர் சுகமாக இருப்பதுபோன்றும், லைட் பாய்ஸ் வியர்க்க விறுவிறுக்கக் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். ‘உங்களை செட்டுக்குள்ள விட்டா, நாங்க என்னமோ இங்க பலபேரை அடிமைத்தனம் பண்றமாதிரி எழுதியிருக்கீங்க. இங்க எல்லாவிதமான வேலைகளும்தான் இருக்கு’ என்று பாலசந்தர் சார்க்கு பயங்கரக் கோபம். அவர் மனம் வருத்தப்பட்டுச் சொன்னவை எல்லாம் என் காதில் விழுந்து கொண்டிருந்தன. அந்தப்பேட்டியை எழுதியவர் வேறு யாருமல்லர், பாலகுமாரன்தான். பிற்பாடு அவரே பாலசந்தர் சாரிடம் உதவி இயக்குநராகச் சேருவார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பிறகு பாலகுமாரன் மூலமாக விஸ்வநாதன் என்கிற சுப்ரமணிய ராஜு பழக்கம். நாங்கள் செருப்பு தேய எல்டாம்ஸ் சாலையில் நடந்தபடி பேசிய கதைகளை நினைத்துப்பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. சமயத்தில் வீடு வந்து சேர்ந்தபிறகும்கூட வீட்டுக்குள் போனால் சாப்பிடக் கூப்பிடுவார்கள், வேறு வேலைகள் இருக்கும்... பேச்சு சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடும் என்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திட்டு அதுமேலேயே அமர்ந்து மணிக் கணக்கில் பேசிக்கொண்டிருந்த நாள்கள் உண்டு. அடுத்து ஜெயபாரதி, கொஞ்சநாள் கழித்து ருத்ரய்யா. அதன்பின்னர் வண்ணநிலவன், இப்படிப் பலபேர். பிறகு நானாகத் தேடிப்போய் முகவரி கண்டறிந்து கிருஷ்ணவேணி டாக்கீஸ் பக்கத்தில் அசோகமித்திரன் சாரைச் சந்தித் ததும், பிறகு தொடர்ந்து சந்தித்துப் பேசியதும் மறக்க முடியாத நினைவுகள்.

புவியரசு, என்னைத் தேடி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். வானம்பாடி கவிஞர். பல ஆண்டு களுக்கு முன்பே அவரின் பேரனுக்கு என் பெயரை வைக்கும் அளவுக்கு அதிதீவிர ரசிகர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆரம்ப கமல்ஹாசனுக்கு நானே ரசிகன் கிடையாது. ‘நல்லாதான் நடிக்கிறோமோ’ என்று சந்தேகத்துடனேயே என்னைப் பார்த்துக்கொண்டு இருந்த நாள்கள் அவை. ஆனால், அவர் என்னை அப்படி ரசிப்பார். அவர்மூலமாக ‘அமர காவியம்’ என்ற தலைப்பில் மொத்த சினிமாவையும் கவிதை நடையில் எழுதவேண்டும் என்று உட்கார்ந்து எழுத ஆரம்பித்து விட்டோம். ‘இரண்டுபேர் போதாது’ என்று ஞானக்கூத்தனை அழைத்துவந்தோம். பிறகு மகுடேசுவரனையும் கூப்பிட்டோம். மகுடேசுவரனுக்கு நான் ரசிகன் என்பது அவருக்கும் தெரியும்.

p8d_1512454086.jpg

தில் நான் கூப்பிட்டு நடக்காமல் போன விஷயங்களும் உண்டு. ‘ஜெயந்தன் நாடகங்கள்’ என்ற தலைப்பில் தொகுத்த ஜெயந்தனை எப்படியாவது சினிமாவுக்குக் கூட்டி வரணும் என்று விரும்பி அழைத்துவந்தோம். ஒருநாள் அலுவலகத்தில் வந்தமர்ந்தவர், ‘இந்தச் சூழல் எனக்கு சரிவராது தம்பி’ என்று சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டார். அவரையெல்லாம் இழுக்கமுடியவில்லை. ஆனால், என் முதல் சினிமா தயாரிப்புக்காக மிகவும் ஆர்வமாக வந்து, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக அமர்ந்து கதைபேசிய எழுத்தாளர் சாண்டில்யன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ போல் ஒரு பீரியட் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் சிங்கீதம் சீனிவாசராவ், நான்,  அவர் என்று பேசிக்கொண்டிருந்தோம். படத்தின் பெயர், `சிந்துபாத்.’ சரித்திரப் புனைவுடன் பண்ணவேண்டும் என்ற விருப்பத்தில் பண்ணிக்கொண்டிருந்தோம். சிந்துபாத் கேரக்டரில் நான் நடிப்பதாக இருந்தது. அது அற்புதமான அனுபவம். ஆனால், அந்தப் படமே எடுக்கப்படவில்லை. சாண்டில்யனுடன் தினமும் சந்திப்பு நடந்த  மூன்று நான்கு மாதங்களை நான் இழந்தவாய்ப்பு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவையெல்லாம் இன்றைய கமலுக்கான அஸ்திவாரங்கள் என்பது போகப்போகத்தான் நானே உணர்ந்தேன். அன்று அவர்கள் கதை புனைவதையும் பேசுவதையும் அருகிலிருந்து கண்ட எனக்கு அவை இன்னும் பிரயோஜனமாக உள்ளன.

காலகட்டங்கள் கடந்து பிற்பாடு ரா.கி.ரங்கராஜன் வந்தார். இவர் பல பெயர்களில் குமுதத்தில் எழுதுகிறார் என்பது தெரியும். இவரிடம் எனக்கு நிறைய வருத்தங்கள்கூட உண்டு. நிறைய கிசுகிசுக்கள் எழுதிவிடுவார். இருந்தாலும் அவரின் எழுத்து எனக்குப் பிடிக்கும் என்பதால் அவருடன் தொடர்ந்து பேசுவேன். ஒருமுறை, `‘உங்களுக்கு எந்த எழுத்தாளர் பிடிக்கும்’’ என்றார். ஜெயகாந்தனில் தொடங்கி, பலபேரைப் பட்டியலிட்டேன். `‘குமுதம் படிப்பேளா’’ என்றார். ``படிப்பேன் சார்’’ என்று சொல்லிவிட்டு, `‘அதில் மோகினினு ஒரு அம்மா ரொம்பப் பிரமாதமா எழுதுறாங்க’’ என்றேன். ‘`ம்ம்... அதென்ன அவங்கமேல அவ்வளவு பிரியம்’’ என்றார். `‘ரொம்பப் பிடிக்கும் சார். ‘அடிமையின் காதல்’னு ஒரு கதை. ஆச்சர்யமா இருக்கும். கடைசியில் ‘காஞ்சிபுரத்தான் கொடி கோட்டையில் பறந்தது’ என்று எழுதி முடிப்பாங்க. பிறகு அடுத்த மூணு வாரத்துல அண்ணா முதல்வரா வந்துட்டார்’’ என்றேன். ‘`ஓ... அப்படியா’’ என்று ஆச்சர்யமாகக் கேட்டார். ‘`அந்த அம்மா யார் சார்’’ என்றேன். சிரித்தபடி, `‘நான்தான் அந்த அம்மா’’ என்றார். ஆச்சர்யமாக இருந்தது.

‘மகாநதி’க்கு வசனம் எழுத அவரை அழைத்து வந்தேன். ‘`இந்தா பாருங்க. இதெல்லாம் அப்படி இருக்கக்கூடாது. நீங்கள் இந்த வசனம் சொல்லப்படாது” என்று சண்டை போடுவார். ‘தெனாலி’ பட வேல், அவரிடமிருந்து காப்பி அடித்த விஷயம். அவரின் கையில் எப்போதும் வேல் ஒன்று இருக்கும். `‘என்னத்துக்கு சார் இப்படி ஒரு கம்பி வேல். குத்திடப்போகுது’’ என்றால், ‘`தைரியத்துக்கு கமல்’’ என்பார். ஆனால், அவர் வைணவர். இப்படி வைணவம் டு சைவப் பயணம்தான் அவர்கள் பகுத்தறிந்த தூரம். அதற்கு அவர் சொன்ன கதை நன்றாக நினைவிருக்கிறது. அவருடைய அப்பா கொஞ்சம் கோபக்காரர். அதனால் அடிக்கடி அடிவிழுமாம். அப்படி அவர் அடிக்க வரும்போது அவரிடமிருந்து தப்பித்து ஒளிந்துகொண்டது முழுக்க சைவக்கோயிலில் தானாம். ‘அதனாலயே பக்தி வந்துடுச்சு போலிருக்கிறது’ என்றார். ‘பயபக்தி போலிருக்கிறது’ என்றேன். சிரித்துவிட்டார். அவருடன் செலவிட்டவை மிகவும் சந்தோஷமான நேரங்கள். 

டுத்து ஞானக்கூத்தன். அற்புதமான விஷயங்களை நிகழ்த்திக்காட்டியவர். அவருடன் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். ‘ஹேராம்’ சமயத்தில் கூடவே இருந்தார். என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேட்டுக்கொள்வேன். நான் கவிதை எழுதினால், அதை அவர் திருத்துவதையே நம் அனைவருக்குமான பாடமாக எடுத்துக் கொள்ளலாம். அவரை, ‘அம்மா’ என்பதா, ‘அப்பா’ என்பதா... ஆனால், அந்த ஸ்தானத்தில் இருந்து அன்பு, பிரியம் கலந்து கடமைபோல் கலை செய்வார். அதேபோல்தான் புவியரசும். இருவரும், ‘அடித்துத் திருத்துகிறேன்’ என்று வாத்தியார் வேலை பார்க்கவே மாட்டார்கள். இத்தனைக்கும் ஒருவர் நிஜமாகவே வாத்தியார். கவிதை சொன்னால், `‘அதை இன்னொரு வாட்டி நீங்களே படிங்க. மாறும் பாருங்க’’ என்பார் புவியரசு. அது, ‘`அதுல ஏதோ தவறு இருக்கிறது’’ என்று சொல்லும் விஷயம், அவ்வளவுதான். ஆனால், இருவரும் அதில் உள்ள கருத்தை முதலில் எடுத்துக்கொள்வார்கள். இருவரும், தமிழ் சரியாகக் கற்கவில்லை, இலக்கணம் கற்கவில்லை என்ற என் பயத்தை எடுத்து வெளியே வைத்துவிட்டனர்.

ங்கொன்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் எழுதும் கவிதை, உரைநடை அனைத்துக்கும் தாளம்தான் இலக்கணம். பரதநாட்டியம், மிருதங்கம் கற்றுக்கொண்டதால் அந்த ஜதியை மனதில் வைத்தே எழுதுவேன். என்னைப் பொறுத்தவரை இலக்கணம், தாளம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் போலிருக்கிறது. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில், இந்த இரண்டு கணிதங்களும் எங்கோ ஒரு புள்ளியில் இணைவதாக எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்த கணிதத்தில் நான் கணக்கு போடுகிறேன். இதைச் சொல்வதில் வெட்கம் கிட்கம் எதுவும் எனக்குக் கிடையாது. புலவன் செருக்கும் எனக்குக் கிடையாது. ஏனெனில் நான் ஒரு நாட்டுப்பாடகன்.

அப்படி நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்தேன். அதில், ‘பெருங்கவி நகர்கையில் சிறுகவி சாவான். எனக்கு நகரவும் பயமில்லை. சாகவும் பயமில்லை’ என்று எழுதியிருந்தேன். அதேபோல்தான் ஒரு நாட்டுப்பாடகனுக்கு, ‘கண்ணதாசன் உன்னைவிட நன்றாக எழுதியிருக்கிறார்’ என்றால், அவன், ‘யார் கண்ணதாசன்’ என்று கேட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்தளவுக்கு தமிழ் தெரியாமல் இருக்கக்கூடியவன்தான் அவன். அந்தமாதிரியான ஓர் ஆளாகத்தான் என்னை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

ஏதோ ஒரு சந்தோஷத்தில் அது வந்துவிடுகிறது. இல்லையெனில் எங்கோ ஒரு நாட்டுப்பாடகன், ‘தண்ணி தெளிச்சாப்போல் தோளிலே தேமல் ரெண்டு’ என்று எழுதிய வரி, அவன் எவ்வளவு பெரிய பொற்காசு பெற்ற கவிஞனாக இருக்கவேண்டும் என்று யோசித்துப்பார்ப்பேன். அவன் எங்கோ கிராமத்தில் உட்கார்ந்து எழுதிவிட்டுக் காணாமல் போய்விட்டான். அதைப்போன்ற பெயர்தெரியாத கவிஞனிடமிருந்து எடுத்ததுதான் ‘இஞ்சி இடுப்பழகா.’ ஆம், அது அவனுடைய காயினேஜ்தான். இந்த உவமை நமக்குத் தோணவே தோணாது. ‘இஞ்சி இடுப்பழகா எண்ணத் தலையழகா எழுத்தாணி மூக்கழகா மஞ்சச் சரவிளக்க மறக்க மனங்கூடுதில்லையே’ இது நாட்டுப்பாடல். இது நம் எல்லோருக்கும் சொந்தம். அது சினிமாவில் வந்ததால் பாப்புலர் ஆனது. ஆனால், அதை எழுதிய அந்த ஆள், எந்த ஜில்லாவில் எங்கு தப்பு தட்டிக்கொண்டிருந்து காணாமல் போனானோ தெரியாது.

ந்தச் சூழல்களில் நான் இருக்கும்போது திடீரென ஒருநாள் சுந்தர ராமசாமி வந்திருந்தார். ‘உங்க இரண்டு பேரையும் பேசவைத்துப் பார்க்கணும்’ என்று ஞானக்கூத்தன் அழைத்து வந்திருந்தார். எங்கள் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு அது. ‘இங்க வாங்க, நீங்களும் வந்து உட்காருங்க’ என்று ஞானக்கூத்தனை சோபாவுக்கு அழைக்கிறேன். ‘இல்ல நீங்க பேசுங்க’ என்று சொல்லிவிட்டு சு.ரா-வுக்குப் பின்னால் அவரின் நிழல்போல் நின்றிருந்தார் ஞானக்கூத்தன். நாங்கள் இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதைப் பதிவு பண்ணாமல் போய்விட்டேன். ஏனெனில், எனக்குத்தோன்றும் கேள்விகள் அனைத்தையும் அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

 “ `ஒரு எழுத்தாளனாக நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?’- ஒரு திரைக்கதை எழுத்தாளனாக நான் இதைக்கேட்கிறேன். ஏனெனில் எனக்கு அந்த டெக்னிக் வேண்டும். இந்தக் கேள்வியை லைட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது பேட்டியல்ல. இன்னொருவருக்குச் செய்யும் தானம்’’ என்றே ஆரம்பித்தேன். அவர் சொன்ன சில விஷயங்கள் எனக்கு ஆச்சர்யம். ‘`எழுதும்போது ரெஃபரன்ஸுக்கு நிறைய படிப்பீர்களா’’ என்றேன். `‘இல்லில்ல... எழுதும் போது நான் படிப்பதே இல்லை. குழம்பிடும். நான் என்ன எழுத வர்றேன் என்பதுபோய், என்னைவிட நல்லா எழுதி இருந்தால் அதைப்பிடித்தே தொங்கிக்கொண்டிருப்பேன். அதனால எனக்கு என்ன வேணும்னு தோணுதோ அதைமட்டுமே யோசித்துக் கொண்டிருப்பேன். எழுதும்போது படிப்பு குறைஞ்சே போயிடும்’’ என்றார்.

டுத்து ஜெயகாந்தன். ‘`கமலுக்கு என்னைத் தெரியும்’’ என்பார். அவர் அப்படிச் சொல்வது தன்னைத் தாழ்த்திக்கொண்டு அல்ல. ‘சினிமாக்காரன் ஒருவனுக்கு ஜெயகாந்தனை உணரமுடிகிறதே’ என்ற சந்தோஷம். அவர் என்னிடம் பிரியமாக இருப்பார். அவரை நான் எந்தளவுக்கு ஆராதிக்கிறேன் என்பது அவருக்கே தெரியும். ஏனெனில் அவருடன் நெருக்கமாக இருந்த  பலர்  என்னிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜ்கமல் கண்ணன் உட்பட சிலர் ஜெயகாந்தனை, ஏதோ அவருடன் படித்தவர்போல், ‘ஜே.கே’ என்றுதான் கூப்பிடுவார்கள். அவரும், ‘ கூப்பிடத்தானய்யா பெயர்’ என்பதைப்போலக் கடந்துபோவார். எனக்கு வியப்பாக இருக்கும். நற்பணி மன்ற நிகழ்ச்சி, சினிமா என்று எதற்கு அழைத்தாலும் வந்துவிடுவார். அது அவர் தன் ரசிகனுக்குத் தரும் உச்சபட்ச சந்தோஷம் என்றே நினைக்கிறேன். `மும்பை எக்ஸ்பிரஸ்’ பார்க்க எங்கள் அலுவலகத்துக்கே வந்துவிட்டார். ‘`எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே. ஆனா எனக்குப் பிடிச்சிருந்தா ஆபத்தாச்சே, பதற்றமா இருக்கு’’ என்றார். ‘அமானுஷ்ய பலம்’ என்பார்களே, இவர்களுடன் பேசிவந்ததால் எனக்குக் கிடைத்ததை அப்படிச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

ப்படி எத்தனை பேரைச் சொல்லுவேன். ‘இந்தாளு பேசுறதை நீ கேட்கணும்’ என்று மேடையில் இருந்த இவரை விளித்து அருகில் இருந்த சுஜாதா என்னிடம் சொல்லி அறிமுகமானவர்தான், கு.ஞானசம்பந்தம். அந்த முதல் சந்திப்பில் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது. நான் ‘விருமாண்டி’ பண்ணும்போது, ‘`இது மதுரைக்களம். நீங்களும் என்னுடன் இருக்கணும்’’ என்றேன். உடன் இருந்து உதவிகள் செய்தார். ஒருநாள், ‘`இதுல நீங்க நடிக்கிறீங்களா?’’ என்று கேட்டேன். ‘`இது மாடு புடிக்கிற படம். என்னால நடிக்க முடியாது’’ என்றார். `‘மாட்டை நான் பிடிக்கிறேன். மைக்கை நீங்க பிடிங்க’’ என்று சொல்லி ஜல்லிக்கட்டுக்கு வர்ணனை பண்ணும் கேரக்டரில் அவரை நடிக்கவைத்தேன்.

p8e_1512454115.jpg

பிறகு தொடர்ந்து ஓரிரு படங்களில் நடித்தவர், ஒருநாள் என்னிடம் மிக முக்கியமான கேள்வியைக் கேட்டார். அது பலருக்கும் பயனளிக்கக்கூடிய கேள்வி என்பதால் அதை இங்கே பதிவிடுகிறேன். அவரும் இதைச் சில பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ‘`ஒரு கேரக்டர்ல நடிச்சிட்டிருக்கும் போது கைய என்ன பண்றது” என்றார். ‘`நீங்க மேடையில பேசிட்டிருக்கும் போது கைய என்ன பண்ணுவீங்க” என்றேன். அதற்கு அவர், ‘`எனக்குக் கை இருக்குறதே மறந்துபோயிடும்’’ என்றார். ‘`அதுதான் முக்கியம். நீங்க அந்த கேரக்டரா மாறிட்டீங்கனா கையைப்பற்றிக் கவலையே படமாட்டீங்க’’ என்றேன். நடிப்பு என்பதால் எனக்குத் தெரிந்ததை அவரிடம் சொன்னேன். அதேபோல் என் தமிழ் ஆசான்களில் அவரும் ஒருவர். வேறொருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது, ‘`உங்களுக்கும் எனக்கும் என்ன சார் சம்பந்தம்” என்று கேட்டார். ‘`ஞானசம்பந்தம்’’ என்றேன். சிரித்துவிட்டார்.

ஆமாம், இந்த ஞானத் தேடல்தான் எங்களை இணைத்திருக்கிறது. இன்றுவரை நாங்கள் இருவரும் வெளியே போனால் இருவேறு புத்தகங்களை வாங்கிவந்துவிடுவோம். அதில் ஒன்றை நான் வைத்துக்கொண்டு இன்னொன்றை அவரிடம் கொடுத்துவிடுவேன். இருவரும் படித்த பிறகு புத்தகங்களை மாற்றிக் கொள்வோம். அப்படி அவரிடம் நான் கடைசியாகத் தந்த புத்தகம் ஜெயமோகன் எழுதிய ‘அறம்’. ஜெயமோகன் எந்தமாதிரியான மயக்கத்தில் எழுதுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவரைப் படிப்பவர்களுக்கும் அதே மயக்கத்தைத் தரக்கூடிய எழுத்து. நாம் எழுதும்போது நம்மையே வியக்கவைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த வரிகள் வந்து விழும். அதை, சிலர் தெய்வாம்சம் என்பார்கள். சிலர் கற்பனை வளம் என்பார்கள். நான் அதை ‘இன்னர் பேஷன்’ என்பேன். நமக்குள் இருக்கும் அதைக் கொஞ்சம் தூண்டிவிடவேண்டும், அவ்வளவுதான். ஜெமோவின் ‘கொற்றவை’ படித்துவிட்டு நானும் ஞானசம்பந்தமும் அப்படி சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

ப்படி நண்பர்களுடன் அன்று தெருவில் பேசத்தொடங்கிய கதைகள், இன்று அலைபேசியிலும் சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்கின்றன. இந்த நேரத்தில் சினிமாக் கதை பேச நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போடுவதை நினைத்துப்பார்க்கிறேன். ஆனால், அது ஏன் ரூம் போட்டு பந்தா பண்ணுகிறோம் என்பது பிற்பாடு புரிந்தது. ஏனெனில், இப்படி அள்ளிக் கொடுத்தால் அதைச் சிதறடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். தர்மாஸ்பத்திரி போல இலவசமாகக் கொடுத்தால் அதை மதிக்காமல் காசுகொடுத்து வைத்தியம் பார்க்கக்கூடிய வேறு மருத்துவமனையைத் தேடிப்போவார்களே அப்படி. ஆனால், அன்று தெருவில் தொடங்கி இன்று இப்படிப் பல தொழில்நுட்பச் சாதனங்கள் மூலம் எனக்குள் கதைகளைப் பதியவைத்தவர்களுக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்.

இப்படியான என் இலக்கியச் சந்திப்புகளைப் பார்த்துவிட்டு அன்று சினிமாவில் இருந்த சிலர், ‘என்னது இது, இவனுக்கு சினிமாவில் மார்க்கெட் நல்லாதானே இருக்கு. ஆனால், இவன் ஏன் யார்யாரோ பெயர் தெரியாத எழுத்தாளர்களை எல்லாம் தேடிப்போய்ப் பார்க்கிறான்’ என்று கிண்டலடிப்பார்கள். ஆனால் அதுதான் எனக்கு இஷ்டம்.

40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். சென்னை அண்ணாசாலை எல்.எல்.ஏ கட்டடத்தில் ‘சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் பாலம் சரியாக அமைய வில்லை’  என்ற கருத்தை மையப்படுத்திப் பேசக்கூடிய ஒரு கூட்டம். ‘இதைப்பேசணும், அதைப்பேசணும்’ என்று பாலகுமாரனும் சில நண்பர்களும் என் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று என்னை, பின்னால் இருந்து இயக்கிய அந்தக் கருத்தரங்கை நினைத்துப் பார்க்கிறேன். 40 ஆண்டுகள் கடந்தும் அப்படிக் கூட்டம்கூட்டிப் பேசவேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது  என்பதுதான் கவலையளிக்கக்கூடிய ஆச்சர்யம்.

‘`நான் என்ன வாலியா, வாலி பாலா? ரெண்டு பேரும் மாறிமாறி எத்துறீங்க’’ என்ற வாலி சாரின் கோபம், லிப் ஸிங்க்- கத்திச் சண்டை என்று ஒருவரிடம் மற்றவர் கற்ற சிவாஜி-எம்ஜிஆர் புரிதல், ரஜினியை இன்ஃபுளுயன்ஸ் செய்த சிவாஜி... என் வாத்தியார்கள் பற்றி அடுத்த வாரமும் தொடர்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்!

கமல்ஹாசன்

 

p8aa_1513060671.jpg

மிழைப்போல் மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் என் ட்ராக் ரெக்கார்டுகள் எனக்குப் பெருமைp8c_1513060584.jpg தருபவை. மலையாள சினிமா நண்பர்களைப்போல் அங்குள்ள நல்ல எழுத்தாளர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அதில் மூத்தவர் டி.பத்மநாபன், கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, சீனியர் எழுத்தாளர் பால் சக்காரியா போன்றோர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள். அதேபோல் நாவலாசிரியரும் இயக்குநருமான பத்மராஜனும் நானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. பலமுறை தமிழ் சினிமாவுக்கு அழைத்தும், `‘நாம் எழுதாத ஒரு பாஷையில் ‘எழுத்தாளன்’ என்று எப்படி சொல்லிக்கொண்டு வரமுடியும்’’ என்று தமிழ் சினிமாவுக்கு வராமல் போனவர். இதேபோல, காலமாகிவிட்ட லோகிததாஸையும் ஆரம்பத்திலேயே கூப்பிட்டேன். அவரும் அப்போது வரவில்லை. அவர்கள் வந்திருக்கலாம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.பட்டாம்பூச்சியை அழுத்திப் பிடித்தால் அதன் கலர் கையில் ஒட்டுமே தவிர, பூச்சி இறந்துவிடும். அதுபோல அவர்களை ரொம்பவும் வற்புறுத்தி அழுத்திப்பிடிக்கவும் முடியாது என்பதால் அவர்களை நான் கட்டாயப்படுத்தவில்லை.

என் தன்னம்பிக்கை, வித்தியாசமான சினிமா சிந்தனைகள் இரண்டும் மலையாள சினிமா எனக்குத் தந்த மிகப்பெரிய தானம். அவர்கள்தாம் என்னை முதலில் ஹீரோவாக்கினார்கள் என்ற நன்றிக்கடனுக்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்பார்கள். ஆனால், அது இல்லாமலும் இருக்காது. ஏனெனில், இங்கு என்னை பாலசந்தர் சாரைத்தவிர வேறு யாரும் மதிக்கவே இல்லை. சின்னச்சின்ன பிட் ரோல்களுக்குக் கூப்பிடுவார்கள். இல்லையென்றால், ‘`தம்பி, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா, அவங்க நடிக்கட்டும். நீ ஏன் குறுக்க குறுக்க போற’’ என்பார்கள்.

ஆனால், என்னை மனிதனாக மதித்து, நான் சொல்வதையும் கேட்டு, துணை எழுத்தாளனாகத் தன்னுடன் சேர்த்துக்கொண்டது சங்கரன் நாயர். ‘`பிரமாதமா சொல்றான்யா இந்தப்பையன். நீ சொல்லு கமல்’’ என்றவர், ஒரு கட்டத்தில், `‘கமல் சொல்வதுதான் சரி’’ என்று என் 19 வயதில் என்னை நம்பிய 40 வயதுக்காரர். அவருடைய ‘விஷ்ணு விஜயம்’ படத்தில் நடிக்கக் கதை கேட்க உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சந்தித்தோம்.படத்தின் கதையை அவர் சொல்லும்போதே, அதனுடைய மூலம் எது என்று சொன்னேன். அப்படியே அமைதியாக என்னைப் பார்த்தவர், ‘`அதெல்லாம் படிச்சிருக்கீங்களா’’ என்றார். `‘கொஞ்சம் படிப்பேன் சார்’’ என்றேன். ‘`எங்களுக்கு 19 வயசுப்பையன் வேணும்னு கேட்டோம். நிஜமாலுமே உங்களுக்கு 19 வயசுதானா” என்றார். ‘`ஆமாம் சார்’’ என்றேன். ‘`இல்ல, நான் நிர்ணயம் பண்றேன். உங்களுக்கு 35 வயசு’’ என்றவர், ‘`இருந்தாலும் நீங்க என்னைவிட இளையவர். கம் அண்ட் ஜாயின் மீ ஃபார் ஸ்டோரி டிஸ்கஷன்” என்றார்.

p8a_1513060697.jpg

படம்: ஜி.வெங்கட்ராம்

அதிலிருந்து ‘விஷ்ணு’ என்று அந்த கேரக்டரின் பெயரிலேயே கூப்பிட ஆரம்பித்துவிட்டார் சங்கரன் நாயர். அடுத்த படத்துக்கு என்ன கதை பண்ணலாம் என்று ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது, ‘`தமிழில் ‘உணர்ச்சிகள்’னு ஒரு படம் பண்ணிட்டிருக்கோம். அதைக் கொஞ்சம் மாற்றிப் பண்ணினால் இங்கு சரியாக இருக்கும்’’ என்றேன். ‘`பண்ணலாமே’’ என்றார். சக்தி அண்ணனிடம் சொல்லி `உணர்ச்சிகள்’ பட ரைட்ஸை வாங்கித்தந்தேன். சக்தி அண்ணன் அப்போது கொஞ்சம் பணக்கஷ்டத்தில் இருந்தார். அவருக்குப் பணம் வாங்கித்தந்தால் உதவியாக இருக்குமே என்று,  ‘உணர்ச்சிகள்’ கதையைக் கொஞ்சம் மாற்றி மலையாளத்தில் எடுத்தோம்.

அதுதான் அங்கு மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ராசலீலா.’ அந்தப் படத்துக்கான டைட்டில் கார்டில், ‘கதை’ என்று பெயர் போட்டுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அங்கோ, ‘அந்தக்கதை என்னுடையது’ என்று மூன்று  பேர் சண்டை போட்டுக்கொண்டார்கள். உடனடியாக நானும் ஆர்.சி.சக்தி அண்ணனும் அங்குபோய் ‘`இது நாங்க இரண்டுபேரும் சேர்ந்து எழுதின கதை’’ என்று சொல்லி சமாதானப்படுத்திய பிறகு எல்லோரும் அமர்ந்து விருந்து சாப்பிட்டு வந்தோம். வரும்வழியில், ‘`எங்கேயோ தெருவில் உட்கார்ந்து உருவாக்கின கதை, இன்னிக்கு அதுக்கான மரியாதையைப் பாருங்க’’ என்று பேசிச் சிரித்துக்கொண்டே வந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

சங்கரன் நாயருடன் அடுத்த படம்   ‘மதனோத்ஸவம்’. இன்றும் மலையாளத்தில் பெரிதாகப் பேசப்படக்கூடிய படம்.  போகப்போக   காட்சியமைப்பு உட்பட அனைத்திலும் சுதந்திரமாக விட்டார். ‘`அவன் வரட்டும். அவன் வராம பண்ணினா நல்லா இருக்காது. வந்த பிறகு பண்ணுவோம்’’ என்று எனக்காகக் காத்திருப்பார். பல சமயங்களில், ‘`அந்தப்பகுதியை நீயே எடுத்துடு’’ என்பார். அவர் ஒருபக்கமும் நான் வேறு பக்கமும் இரண்டு கேமராக்களுடன் ஷூட் செய்துகொண்டிருப்போம்.

இந்தச் சமயத்தில், சங்கரன் நாயர்போல தமிழில் தன் உதவியாளர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடிய இயக்குநர் பாரதிராஜாவைக் குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இயக்கியவர், என் நண்பர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. கலையை மறைத்துவைக்க நினைக்காத நல்ல மனிதர். மணிவண்ணன், பாக்யராஜ் போன்றோர் எல்லாம் அவர்வழி வந்தவர்கள்தாம். ஆனால், செட்டில் அவர்கள் நாணிக்கோணி நிற்பதைப் பார்க்கும்போது, ‘என்ன இப்படிக் கொண்டாடுறார். ஒருவேளை உறவுக்காரர்களா இருக்குமோ’ என்றெல்லாம்கூட நினைத்ததுண்டு.

மலையாள சினிமாவில் என்னை அரவணைத்த முக்கியமான இன்னோர் இயக்குநர் சேதுமாதவன் சார். அவர் என் சிறுவயதிலேயே என்னை இயக்கியிருக்கிறார். அவரின் முதல் படத்தில் நான் குழந்தை நட்சத்திரம். பிற்பாடு அவரின் ‘கன்னியாகுமரி’யில் நடிக்கும்போது, ‘`இன்னொரு மலையாளப் படத்துக்குக் கூப்பிடுறாங்க, போகலாமா’’ என்று ஆலோசனை கேட்டேன். ‘`இதெல்லாம் என்ன கேள்வி. நீ போ. உனக்கு டான்ஸ் தெரியும். கதை எல்லாம் பண்ற. நம்பிப் போ. மதிப்பாங்க. நானும் சொல்றேன்’’ என்றார். அவர் அன்று என்ன சொன்னாரோ எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்து நான் போகும்போது அவர்கள் காட்டிய மரியாதையே வேறுமாதிரி இருந்தது.

  ஐ.வி.சசியிடமும் அதே அன்புதான். ‘`ஏய் கமல், நீ ஸ்டன்ட்காரனைக் கூட்டிட்டுப்போய் அதை எடுத்திட்டு வந்துடு. நான் அதுக்குள்ள இங்க க்ளைமாக்ஸுக்கு ரெடி பண்ணிட்டிருக்கேன். மதியம் 2 மணிக்குள்ள வந்து, நீயும் க்ளைமாக்ஸ்ல கலந்துடணும்’’ என்பார். `ஈட்டா’ உட்பட சில படங்களில் அப்படி இருவரும் வேலை செய்திருக்கிறோம்.

சோமன், கிட்டத்தட்ட கூடப்பிறந்த அண்ணன் மாதிரி. அப்போதெல்லாம் கேரளாவுக்குப் படப்பிடிப்புக்குப் போனால், எங்கு ரூம் போட வேண்டும், எந்தெந்த நாள் படப்பிடிப்பு என்பது உட்பட அனைத்தையும் பார்த்துக்கொள்வார். ‘`ஏய், அந்த ஹோட்டல் சரியில்லை. என்கூட ரூம் போடச்சொல்லிட்டேன்’’ என்பார். ஒரே கட்டில்தான் என்றால், ‘`நான்லாம் ஏர்ஃபோர்ஸ். உனக்கு அதெல்லாம் சரியா வராது. நீ சொகுசு, சிவிலியன்’’ என்று சொல்லி என்னை பெட்டில் படுக்கச்சொல்லிவிட்டு அவர் தரையில் படுத்துக்கொள்வார்.

இப்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அந்தந்த மொழிக்கலைஞர்களுடன் அவரவர்களின் மொழிகளில்தான் பேசுகிறேன். அது அப்படியே பழக்கமாகிவிட்டது. இது,  ஏமாற்று வேலையல்ல. எனக்கான ஒருவிதமான பயிற்சி. அப்படிப் பேசும்போது மலையாளிகளிடம் தமிழில் பேசிவிட்டால், ‘`நீங்கள் எதுக்கு தமிழ்ல பேசணும்’’ என்று ஆச்சர்யப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் என்னை அவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க விரும்பாதவர்கள். அதேபோல, `‘மலையாளம் எனக்கு எழுத வராது’’ என்றால், ‘`அப்படியா? அது எப்படி இருக்க முடியும்?” என்று நம்ப மறுப்பார்கள். இப்படி அவர்களின் ஆளாகவே பார்க்கவைத்த கேரளத் திரைத்துறைக்கு நான் திரும்பத் திரும்ப நன்றி சொல்ல அதுதான் காரணம்.

p8b_1513060725.jpg

இன்னும் சொல்லப்போனால் கன்னட ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் கிரிஷ் கர்னாட், பி.வி.காரந்த் உட்பட பலர் எனக்கு நல்ல பழக்கம். பி.வி.காரந்த்தை வைத்து ‘அம்மா வந்தாள்’ டைரக்ட் பண்ண வேண்டும் என்று ஆசை. ‘`அப்படியென்றால், தஞ்சாவூரில் ஏதாவது ஒரு வீட்டில் இரண்டு மாதங்கள்  தங்க வையுங்கள். எந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு அந்தச் சூழல் புரியணும். அதுக்கு அங்க தங்க அனுமதி வாங்கிக்கொடுங்க’’ என்றார். பிறகு அது நடக்கவில்லை. ஆனால் ‘அம்மா வந்தாள்’ அப்புவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை, கற்பனை இருந்தது. பிறகு, நடுத்தர வயதைக் கடந்ததும், வேறுவிதமான அப்புவாக அதை ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் மாற்றிக்கொண்டேன்.

தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை எனக்கிருக்கும் ட்ராக் ரெக்கார்டு வியப்பானது. தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்கள், மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்கள். ஆனால், தெலுங்கில் வெறும் 16 படங்களே நடித்துள்ளேன். அவற்றில் 12 சூப்பர் ஹிட். அதிலும் தெலுங்கு சினிமா சரித்திரத்தைச் சொல்லும்போது ‘சங்கராபரண’ பட வரிசையில் ‘மரோசரித்திரா’, ‘சாகர சங்கமம்’, ‘சுவாதி முத்யம்’ போன்ற என் ஆறு படங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. `இப்படி மிகப்பெரிய பெயரை நமக்குத் தந்திருக்கிறார்களே’ என்று எனக்கே வியப்பாக இருக்கும்.

இப்படி மலையாள, தெலுங்கு, கன்னட சினிமாக் கலைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை நம்முடன் இங்குதான் இருந்தனர். இப்போதுதான் புலம் பெயர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் தனியே சென்று தனித்தனி இண்டஸ்ட்ரியாக இயங்குவதில் அவர்கள் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால், அதை நமக்கான இழப்பாகத்தான் நான் நினைக்கிறேன். ஒருமுறை என்னிடம், ‘நேஷனல் சினிமா எங்கிருக்கிறது’ என்று கேட்டார்கள். ‘சென்னையில்’ என்றேன். ஆம், அதை விட்டால் கொல்கத்தாவைச் சொல்வேன். மும்பையை நேஷனல் சினிமா என்று சொல்லமாட்டேன். அவர்கள் இந்தி, மராட்டி சினிமா எடுப்பவர்கள் மட்டுமே. ஆனால் நாம், ‘சந்திரலேகா’வை இந்தியில் எடுத்தோம். ஏவிஎம், பட்சிராஜா, நாகிரெட்டியின் விஜயவாஹினி போன்ற ஸ்டுடியோக்கள்  இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களை எடுத்தார்கள். சிட்டாடல் ஃபிலிம்ஸ் மலையாளத்திலிருந்து வந்து இங்கு ‘விஜயபுரி வீரன்’ போன்ற படங்கள் பண்ணினார்கள்.

p8d_1513060773.jpg

அப்படி எல்லா மொழிகளுக்குமான சினிமா சென்னையிலிருந்து போய்க்கொண்டிருந்தது. அத்தனை இந்திய மொழிகளிலும் சினிமா எடுத்த ஒரே கம்பெனி என்ற சாதனையைப் படைக்க வேண்டும் என்பதற்காக ஒரியா உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் சினிமா எடுத்த ராமாநாயுடுவையும் ‘வசந்த மாளிகை’  படத்தையும் நம்மால் பிரித்துப் பார்க்க முடியுமா? இப்போதும் தெலுங்குக்காரர்களுக்கு தாம் எங்கிருந்து பிரிந்து வந்தோம் என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் எல்லை கடந்துவந்து அவர்களால் ‘பாகுபலி’ செய்ய முடிகிறது. அந்த எல்லையைக் கடந்ததால்தான் இன்றும் ‘சந்திரலேகா’வை நினைத்து நாம் மார்தட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால், மும்பையை அப்படிச் சொல்லமுடியாது. அதனால்தான் நேஷனல் சினிமா சென்னையில் இருக்கிறது என்றேன்.

நாகேஷ் சார், எல்லோரையும் போல் என்னையும் வியக்கவைத்த கலைஞன். நீங்கள் கவனித்திருந்தால் அப்போது எல்லா கிராமங்களிலும் சிவாஜி சார், எம்ஜிஆர் மாதிரி ஓரிருவர் இருப்பார்கள். சமயங்களில் பெயரேகூட அதுவாக இருக்கும். அதன்பிறகு ரஜினி சார் மாதிரியும், என்னை மாதிரியும் அதே ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு பலர் வந்திருக்கலாம். ஆனால், எல்லாத் தெருவிலும் வெவ்வேறு வண்ணங்களில் தோளைக் குலுக்கிக்கொண்டு, நடந்து வரும்போது காலை இடறிவிட்டுக்கொண்டு ஒரு நாகேஷ் இருப்பார். ஒரு காமெடியனுக்கு அப்படி அமைவது ரொம்பக் கடினம். அதனால் அவரை பலபேருக்கான வாத்தியார் என்று சொல்லலாம். தோளைக் குலுக்கி இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தாலே நாகேஷ் என்று சொல்வதுபோல், அவரை அறியாமல் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர். அது ஒரு சிக்னேச்சர். `பந்தநல்லூர் பாணி’ என்று பரதநாட்டியத்தில் சொல்லுவதுபோல் அது நாகேஷ் பாணி.

சிவாஜி சாரும் அப்படித்தான். பல நாடக நடிகர்கள், மேடையில் சினிமாவில் ஒரு கவிதையை எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேசி நடிக்கவேண்டும் என்பதற்கான வாத்தியார். ஒரே வாத்தியார் என்றுகூட தைரியமாகச் சொல்லலாம். ஒருமுறை, ‘`இந்த லிப் சிங்க் எனக்குக் கஷ்டமாக இருக்கு  கணேசா.  மனப்பாடம் பண்ணினாலும்கூட உதைக்கிறமாதிரி இருக்கு. அது எப்படி நீ சரியா பண்ற’’ என்று சிவாஜி சாரிடம் எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு இவர், ‘`கையெல்லாம் பெருசா நீட்டி பண்ணிட்டேன்னா வாயைப் பார்க்கமாட்டாங்க’’ என்று சொன்னாராம். அதேபோல, ‘`அந்த ஸ்டன்ட் காட்சியில் என்ன டெக்னிக்’’ என்று எம்.ஜி.ஆரிடம் சிவாஜி சார் கேட்பதும் உண்டாம். இப்படி ஒருவரைப் பற்றி மற்றவர்  கேட்பது, விசாரிப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.

p8e_1513060804.jpg

ஒருவரின் ஸ்டைலில் மற்றவர் எப்படி இன்ஃபுளூயன்ஸ் பண்ணியிருக்கிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஒருமுறை, நான் நடிகர் திலகத்தைப் பேட்டி எடுக்கும்போது, ‘` `யாரடி நீ மோகினி’ பாட்டுக்கு ஆடின டான்ஸ் ஸ்டைலை நீங்கள் எங்கிருந்து பிடித்தீர்கள்’’ என்று கேட்டேன். ‘`அது நான் இல்லை. ஹீரா லால்னு ஒரு டான்ஸ் மாஸ்டர். அற்புதமான கலைஞர். அவர் சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணினேன்’’ என்றார். அடுத்தநாள் டான்சர்ஸ் யூனியனிலிருந்து எல்லோரும் ஆளுக்கொரு மாலையுடன் வந்து, ‘`பேட்டி படிச்சோம் சார். யார் சார் இப்படிச் சொல்லுவாங்க’’ என்று  அவரின் காலில் விழுந்து வணங்கி நன்றி சொன்னார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்த ‘யாரடி நீ மோகினி’ பாட்டிலிருந்து ஒரு நடிகர் தன் முழுக் கரியரையே அமைத்துக்கொண்டார். நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்தப்பாட்டை பார்த்தீர்கள் என்றால் பின்னால் வரப்போகிற ரஜினி சாரின் சாயல் அதில் தெரியும்.

p8f_1513061136.jpg

அதேபோல ‘மனோகரா’ படத்தைப் பாராட்டும்போதெல்லாம் சிவாஜி சார், எல்.வி.பிரசாத் பற்றிச் சொல்லாமல் இருக்கவே மாட்டார். எல்.வி.பிரசாத் அவர்களை ஸ்டுடியோ ஓனர், ‘ஏக் துஜே கேலியே’ படத் தயாரிப்பாளர் என்ற அளவே பலர் நினைத்துக்கொண்டிருப்போம். நானும் அப்படி நினைத்திருந்தேன். ஆனால், சிவாஜி சார், சிங்கீதம் சார் போன்றோர் சொல்லித்தான் அவரின் படங்களைப் பார்த்து அவரை மனதில் ஏற்றிக்கொண்டேன். அந்த மரியாதையில்தான் அவரை நடிக்கக் கூப்பிட்டேன்.  அவரும்   வந்து   நடித்துக்கொடுத்தார். ஒருமுறை அவரின் மகன் ரமேஷ்ஜி, ‘`எங்க அப்பாவுக்கு ஆயுளை நீட்டிவிட்டதே அந்த நடிப்புதான். திடீரென்று நடிக்கும்போது உற்சாகமாகிவிட்டார். டைரக்ட் பண்ணும்போது, ஸ்டுடியோ வாங்கும்போது இல்லாத சந்தோஷம்... நடிக்கவந்ததும் திரும்பி வந்துவிட்டது. அதுக்காக தேங்க்யூ கமல்’’ என்று கைகொடுத்தார்.

நான் என் அலுவலகத்தில் அப்போது நாகேஷ் சாரின் போட்டோ மட்டுமே வைத்திருப்பேன். ஒருமுறை, ‘`இதென்னா நீ இவன் போட்டோவை மட்டும் வெச்சிருக்க’’ என்றார் வாலி சார். அதற்கு நான் என்ன பதில் சொன்னேன், வாலி சார் என்ன சொன்னார் என்பதுமட்டும் அல்லாமல், கிட்டத்தட்ட என்னுடைய 100 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுடனான பயணம் பற்றியும் சொல்கிறேன், அடுத்த வாரம்!

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...

கமல்ஹாசன்  
 

கமல்ஹாசன்படம்: அருண் டைட்டன், ஓவியம்: ம.செ.,

 

p8c_1513683350.jpg

‘விஸ்வரூபம்-2’  பட இறுதிக்கட்ட சிஜி, சவுண்ட் வேலைக்காக அமெரிக்காவில் இருக்கிறேன். நாளொன்றுக்கு 15  மணி நேரத்தையும் தாண்டிய பரபர பணி. ஆனால், 20 மணிநேரம் ஒதுக்கினால்தான் p12b_1513683367.jpgமுடிக்க முடியும் என்று கூடுதல் நேரம் கேட்கிறது தொழில்நுட்பம். படத்துக்குக் கிடைக்கப்போகும் பாராட்டுகளை நினைக்கும்போது பணிச்சோர்வு மறந்து உத்வேகம் கொள்கிறேன். ஏனெனில், பாராட்டு மட்டும்தான் எங்களுக்குத் திருப்தியளிக்கும் உச்சபட்ச ஊதியம்.

என்னை வளர்த்தெடுத்தவர்கள், இந்தப் புள்ளிக்கு நகர்த்தி வந்தவர்களில் ஒருசிலரைப் பற்றி, கடந்த சில வாரங்களாகக் குறிப்பிட்டு வருகிறேன். ‘சினிமா, இலக்கியம்... என்று இவ்வளவு ஆளுமைகளைக் கடந்து வந்திருக்கிறீர்களா’ என்று இன்றைய இளைஞர்களிடமிருந்து பெருவாரியான வரவேற்பு. ‘என்ன, பர்சனல் ஃப்ளாஷ்பேக் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள், அரசியல் என்னாச்சு’ என்ற விமர்சனங்களையும் பார்க்க முடிந்தது.

ஆனால், இத்தனை நாள்களாக ஆளும் அரசின்மீது எத்தனையோ விமர்சனங்கள் வைத்தேன். அவற்றில் ஒரு விமர்சனத்துக்குக்கூட அவர்களிடம் பதில் இல்லை. ‘அவனுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆதாரம் காட்டச் சொல்லுங்க’ என்று, நான் ஏதோ துப்பறிவாளன் போலவும், இதுதான் என் வேலை என்பதுபோலவும் தொடர்ந்து சொல்லிவந்தனர். ‘ஆதாரமின்றிப் பேசினால் சட்டம் பாயும். எதிர்வினைகளைச் சமாளிக்க வேண்டிவரும்’ என்றெல்லாம்கூடச் சொன்னார்கள். எதிர்வினை என்பது சட்டத்தின்படி நடக்கக்கூடியதா அல்லது சட்டத்துக்குப் புறம்பான ரௌடியிசமா? ஆனால், அது எதுவாக இருந்தாலும் சந்திக்கத் தயார் என்றுதானே வந்திருக்கிறேன். இல்லையெனில், நமக்கேன் வம்பு என்று நானும் இருந்திருக்கலாம்,  இல்லையா?

அன்று என்னிடம் கேட்ட ஆதாரம், இன்று ஊருக்கே தெரிந்துவிட்டது. அதுவும் பெயர்வாரியாகப் பட்டியல் போட்டுக் கைப்பட எழுதிய டைரி ஆதாரம். ஆனால், இதையும் ஏதோ மளிகைக்கடைக் கறிகாய் ரசீதுபோல் அனைவரும் மறந்து கடந்துபோய்க்கொண்டிருப்பதுதான் அநியாயம். அதுவும் சாதாரண மனிதனுக்குக்கூடத் தெரிந்த உண்மை, மறுக்கப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது என்பது பேரநியாயம்.

p12a_1513683387.jpg

‘எல்லாவிதமான தளங்களிலும் ஊழலை நிரப்பிக்காட்டுவோம்; எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்கிற அகந்தை, அலட்சியம், அநியாயம் நல்லதல்ல. ‘அனைவரும் ஒரே குரலாகக் கூடி  நியாயத்தைப் புரியவைத்த இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டங்களைப்போல் பேச வேண்டிய நேரமிது’ என்று நான் சொல்லி ஆண்டுகள் ஓடிவிட்டன. சட்டமும் தெய்வம் மாதிரியான ஒன்றுதான், நின்றுதான் கொல்லும் போலிருக்கிறது. வாய்மை வெல்லும் என்பதற்கு எத்தனை முறை, `வெல்லாது, வெல்லாது’ என்று நிரூபிக்க முயற்சி செய்வீர்கள்? ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று என்னைப்போன்றோர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

நிற்க. இந்த அரசியல் தவிர, சொல்ல நிறைய நல்ல விஷயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான், வாலி-நாகேஷ் நட்பு. நான் என் அலுவலகத்தில் நாகேஷ் சாரின் புகைப்படம் மட்டுமே வைத்திருப்பேன். ஒருமுறை, ‘இதென்ன நீ இவன் போட்டோவை மட்டும் வெச்சிருக்க’ என்றார் வாலி சார். ஏதோ வையப்போகிறாரோ என்று நினைத்து, ‘`இல்லண்ணே, ரொம்பப் பிடிக்கும்’’ என்றேன். ‘`இருக்காதா பின்ன. இல்ல... உனக்கு இவனை அவ்வளவு நல்லா தெரியுமா என்பதற்காகக் கேட்டேன்’’ என்றார். ‘`உங்களவுக்குத் தெரியாதுண்ணே’’ என்றேன். ‘`ஆமாம். அந்தளவுக்குத் தெரியும்னு சொன்னா உனக்கும் எனக்கும் தகராறாயிடும்’’ என்று சொல்லிவிட்டு `‘அவன் சாமான்யமான கலைஞன் இல்லடா. கேரம்போர்டுனா அடுத்தடுத்து எல்லாக் காயின்களையும் பத்து நிமிஷத்துல போட்டுட்டு ஸ்ட்ரைக்கரைக் கையில கொடுத்துட்டுப் போயிடுவான். பாட்மின்டனும் அப்படி விளையாடுவான். நல்லவேளை, கவிதை எழுத நான் உற்சாகப் படுத்தலை. இல்லைனா அதையும் எழுதிச்தொலைச்சிருப்பான். அவனென்ன, டான்ஸ் கத்துக்கிட்டானா? ஒண்ணும் கிடையாது, போவான், என்னமோ படிப்பான். அவன் விருப்பப்பட்டான்னா அது அவனுக்கு வரும். அவன் சரஸ்வதி’’ என்றார்.

பிறகு அதை நாகேஷிடம் சொல்லி, ‘`உங்களை என்ன அவர் அப்படித் தூக்குறார்?’’ என்றேன். ‘`சும்மாடா. ரெண்டு பேரும் ஒரே டீயை மாத்திமாத்திக் குடிச்சிட்டுக் கிடந்தோம். அந்த அன்புல ஏதோ பேசுறான். அதையெல்லாம் நம்பிடாத’’ என்றார். அப்படி ஆரம்பகாலங்களில் ஒரே டீயைக் குடித்துக்கொண்டிருந்தவர்களே வளர்ந்தபின்னர் பகையாளிகளாக நிற்பார்கள். ஆனால், அதே அன்போடு இருப்பதற்கு எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்பதற்கு இவர்களே ஆகச்சிறந்த உதாரணங்கள்.

வாலி சாரை என்ன வார்த்தைகளில் பாராட்டினாலும் அது அவரின் உயரத்துக்கும் குணத்துக்கும் குறைவு. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துக்காக ஒரு பாடல் எழுதினார். படித்தேன். இயக்குநரான சிங்கீதம் சாரிடம் ‘`இது நல்லா இல்லைனு அவர்ட்ட சொல்ற தைரியம் எனக்குக் கிடையாது. நீங்க சொல்றமாதிரி சொல்லி வேற எழுதி வாங்குங்க’’ என்றேன். அவர் சொன்னதும், வாலி சார் வேறொன்றை எழுதிக்கொடுத்தார். என்னதான் இருந்தாலும் சிங்கீதம் சார், தெலுங்குதானே. ‘`இன்னொண்ணு எழுதித் தந்திருக்கார். ஓகேவா இது’’ என்றார். கவிதையாக நன்றாக இருந்தது. ஆனால், அந்த சிச்சுவேஷனுக்கான பாட்டாக வரும்போது ஏதோ ஒரு விஷயம் குறைந்ததாக நினைத்தேன். “`எனக்குத் தமிழ் தெரியலை. கமல்கிட்ட கேட்டுக்கங்க’னு சொல்லிடுங்க” என்றேன்.

அப்போது நான் ஹேமமாலினி அம்மாவின் வீட்டில் தங்கியிருந்தேன். வாலி சார் விறுவிறுவென வீட்டுக்கே வந்துட்டார். ‘`ஏன்டா நீயும் டைரக்டரும் என்னை என்னடா நினைச்சுட்டிருக்கீங்க. நான் வாலியா, வாலி பாலா? ரெண்டு பேரும் அங்கயும் இங்கயும் மாறிமாறி எத்துறீங்க. உங்களுக்கு என்னதான்டா வேணும். நான் கடா கடாங்கிறேன். நீ ஒழக்கப் பால், ஒழக்கப்பால்ங்கறே... என்னதான்டா எதிர்பார்க்குற’’ என்றார். ‘`இல்லண்ணா, எனக்கு வேணும்...’’ என்று தயங்கினேன். `‘என்ன தளை சரியில்லைங்கிறியா, சீர் சரியில்லைங்கிறியா?’’ என்றார் செல்லக் கோபத்துடன். அவரின் அந்தக் கோபம் எனக்கு எப்போதும் பிடிக்கும். ஏனெனில், அது தமிழ்க்கோபம்.

`‘அதெல்லாம் பேசலை. நீங்க கடாவா இருந்தா என்ன, எரும மாடா இருந்தா என்ன? எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. எனக்கு முட்டுது. எனக்குத் தெரியும். நான் உங்கள்ட்ட அதுக்கு முன்ன இதே இடத்தில் இருந்து நிறைய வாங்கியிருக்கேன். இந்தக் கடையில் அது ஸ்டாக் இல்லைனா நம்பமாட்டேன். எப்ப ஸ்டாக் வரும்னு கேட்பேனே தவிர, வேற கடைக்குப் போகமாட்டேன்’’ என்றேன். சிரித்தவர், ‘`கண்ணதாசனா இருந்தா இப்படியெல்லாம் தொந்தரவு பண்ணுவியா?’’ என்றார். `‘அவரையும் பண்ணியிருக்கேனே’’ என்றேன். ‘`இப்படிச் சொல்லிக்காட்டினா, நான் மசிஞ்சிருவேன்னு நினைக்கிற’’ என்றவர், ‘`சரி சரி... உனக்கு இதுல என்ன குறை’’ என்றார். ‘`இல்லண்ணா, மறக்க முடியாத பாட்டா வரவேணாமா? நீங்க எழுதி சாதாரண சோகப்பாட்டா வந்தா போதுமா’’ என்றேன். அதன்பிறகு அவர் எழுதித்தந்ததுதான் ‘`உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே  ஞானத்தங்கமே.’’

பிறகு அந்தப் பாட்டுக்கு விருதுகள் பல வந்தன. அதையும் சொல்லிக்காட்டியவர், `‘கோவிச்சுண்டு எழுதாம இருந்திருக்கலாம். ஆனால், அவார்டு கிடைக்காமல் போயிருக்கும். ஆனால் அவார்டை வெச்சுண்டு நாக்கா வழிக்க முடியும்? பணம் கொடுத்த. அதுவும் மூணுவாட்டி எழுதினதுக்கும் பணம் கொடுத்துட்ட’’ என்றார். எப்போதாவது அவரின் பாடல்களில் நான் சில வரிகளை மாற்றுவேன். ராஜா சில வரிகளை மாற்றுவார். அப்படி ஒருமுறை நாங்கள் இருவரும் மாற்றியபோது, ‘`அப்பா டேய், நீங்க ரெண்டு பேரும் செல்ஃப் ஷேவிங்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறம் என்னை எதுக்குடா பொட்டியைத் தூக்கிட்டு வரச்சொன்னீங்க’’ என்றார். இப்படி போகிற போக்கில் சிந்திச் சிதறும் அவரின் அனுபவங்கள், கவிதைகளைவிட பிரமாதமாக இருக்கும்.

p12c_1513683406.jpg

இளையராஜா அவர்களைப் பற்றிப் பேசுவதாக ஓரிரு வாரங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். ‘அதைச்சொல்லலாம், இதைச்சொல்லலாம்’ என்று உலகின் பல்வேறு முனைகளிலிருந்தும் நண்பர்கள் குறிப்புகளை எடுத்துக்கொடுக்கிறார்கள். நான் அவரை மறந்திருந்தால்தானே நினைவுபடுத்த அந்தக் குறிப்புகள் தேவை. கங்கை அமரன்தான் இளையராஜா என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த ஆரம்ப நினைவிலிருந்து தொடங்குகிறேன்.

நீண்டநாள் வரை, இவரின் இயற்பெயர் எனக்குத் தெரியாது. முதலில் எனக்கு அறிமுகமானவர் கங்கை அமரன் அவர்கள்தான். மேடைக் கச்சேரி ஒன்றில், ‘`யார்னு தெரியுதா, பாவலர் பிரதர்ஸில் இருந்தவர். இவரோட அண்ணன்தான் பாவலர் வரதராஜன். கேள்விப் பட்டிருக்கீங்கில்ல?’’ என்று கேட்டு, கங்கை அமரனை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ‘`ஓகே இவர்தான், ‘அன்னக்கிளி’க்கு இசையமைத்த இளையராஜா’’ என்று நானாகவே நினைத்துக்கொண்டேன். ஏனெனில், அவர்கள் அந்தளவுக்கு எனக்கு முன்பின் தெரியாதவர்கள்.

இளையராஜா, ‘அன்னக்கிளி’யைத் தொடர்ந்து ‘16 வயதினிலே’ படத்துக்கு இசையமைக்கப்போகிறார். அந்தச் சமயத்தில் சென்னை ஃபிலிம் சேம்பரில் நடைபெற்ற ‘அன்னக்கிளி’ வெற்றிவிழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். விழா, ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது. நான் மேடைக்குச் சென்றேன். ‘`ஒரு புதுப்புயல் வந்திருக்கிறது. இளையராஜா என்னும் அந்தப் புயல் அடுத்து உங்களுடன் பேசுவார்’’ என்று அறிவிக்கிறார்கள். அப்போது நான் இளையராஜா என்று நினைத்துக்கொண்டு கங்கை அமரனைப் பார்க்கிறேன். ‘ஏன் இன்னும் இவர் பேச எழாமல் உட்கார்ந்திருக்கிறார். ஒருவேளை, அழைத்தது கேட்கவில்லையோ’ என்று நினைத்துக்கொண்டு, ‘வாங்க, பேசுங்க’ என்பதுபோல் அமரிடம் கையால் சைகை செய்கிறேன்.

அதற்குள் அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னோர் இளைஞர் எழுந்து செல்கிறார். `இவரையும் எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே’ என்று எனக்குள் யோசனை ஓடிக்கொண்டே இருக்கிறது. ‘ஆமாம், இவர் நம் சலீல் சௌத்திரியிடம் கிடார் வாசித்துக்கொண்டிருந்தவர்’ என்று டக்கென நினைவு வந்தது- ‘ஓ... இவர்தான் இளையராஜாவா’ என்று நாக்கைக் கடித்துக்கொண்டேன். பிறகு அவரைச் சந்தித்தபோது, ‘நீங்க யாருனு தெரியாதுங்க. மன்னிக்கணும்’ என்றேன். ‘அதனாலென்ன, பரவாயில்லை’ என்றார். 

இளையராஜா பற்றி ஒரு சம்பவம் சொல்வார்கள். அது எனக்கு மிகவும் பிடித்த சம்பவம். நான் அப்போது பயங்கர பிஸி. எந்தளவுக்கு என்றால், என் பட பூஜைக்குப்போவதற்குக்கூட நேரம் இருக்காது. கேரளாவின் எங்கோ ஓரிடத்தில் மலையாளப் படப்பிடிப்பில் இருப்பேன். ‘16 வயதினிலே’க்கு முன் 1975-ம் ஆண்டில் மட்டும் தமிழ், மலையாளம் இரண்டிலும் சேர்த்து, கிட்டத்தட்ட என் 22 படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தன. அப்படி வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்டுடியோவிலேயே படுத்துத் தூங்குவேன். அப்போது இவரைப்பற்றி ஸ்டுடியோக்களில் பேசிக்கொள்வார்கள்.  `‘தெரியுமா, ‘அன்னக்கிளி’ மியூசிக் டைரக்டர், முதல்நாள் பூஜை அன்னிக்கு, ஒன், டூ, த்ரீனு சொன்னார். கரன்ட் கட் ஆகி விளக்கெல்லாம் அணைஞ்சிடுச்சு. அப்படி ‘பூஜை அன்னிக்கு விளக்கு அணைஞ்சுபோன’ அவரைத்தான் கமலோட ‘16 வயதினிலே’ படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க’’ என்று கிசுகிசுப்பார்கள். இந்த மூடநம்பிக்கைக்கு சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன? நான் குதர்க்கவாதி என்பது தெரிந்தும், சமயத்தில் இதை என்னிடமே சொல்வார்கள். `‘அப்ப நல்லதுதானே, அவர்தான் நமக்கு வேணும்’’ என்பேன்.

‘16 வயதினிலே’ பாடல்கள் ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தபோது, வெவ்வேறு பட வேலைகளுக்காக வெவ்வேறு ரெக்கார்டிங்கில் நானும் ஏ.வி.எம் ஸ்டுடியோவில்தான் இருப்பேன்.  திரு.பாலசந்தர் அவர்களிடமும் திரு. அனந்துவிடமும், ‘`நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அதை இல்லைனு மறுக்க முடியாது. ஆனால், இது புது ஒலியா இருக்குங்க. கூடவே அந்த ஆளின் எனர்ஜி... அவரோட இயக்கமே ரொம்ப வித்தியாசமாக இருக்கு’’ என்பேன். `‘யோவ், என்னய்யா, சும்மா சும்மா இளையராஜா, இளையராஜாங்கற...’’ என்று பாலசந்தர் அவர்கள் ராஜாவை விசாரிக்க ஆரம்பித்தார். ‘`என்னது, ராஜாவை அவருக்குத் தெரியாதா?’’ என்று அதிராதீர்கள். அது இன்றைய சமூக வலைதளக் காலமல்ல. தகவல்கள் கொஞ்சம் மெதுவாகத்தான் பரவும். ஆனால், அதன்பிறகு அவரைப்பற்றிப் பேசுவதற்குத் தேவையே இல்லை என்கிற அளவுக்கு அவருக்குப் புகழ் வந்து சேர்ந்தது.

அப்போது, ‘ஏன் எப்போதும் தபேலாவைப் போட்டு உருட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப்போன்ற சத்தங்கள் நம் படங்களில் வந்தால் எப்படி இருக்கும்?’ நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனெனில், எப்போதோ ஒருமுறைதான் பாலசந்தர் சார் படங்களில் எம்.எஸ்.வி-க்கே வாய்ப்பு கொடுப்பார்கள். அப்படித்தான் மகாதேவன் அவர்களுக்கும். அந்த வாய்ப்புகளிலும் அவர்களுடைய திறமையைக் காட்டும் படங்கள் அரிதாகவே அமையும். அது எல்லாப் படங்களிலும் அமைந்துவிடாது. இது நடிகர் திலகம் அவர்களுக்கும் பொருந்தும். `‘போதும் போதும். நல்லா ஓடிட்டு இருக்கிற வியாபாரத்தில் புதுசா பண்றேன்னு ஏன் காரியத்தைக் கெடுக்குறீங்க? மாடுன்னா வண்டியில பூட்டினா நேரா வீடுபோய்ச் சேரவேணாமா? எதுக்கு நடுவுல இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்கணும்? நுகத்தடிக்கு மரியாதையே இல்லாத ஆளா இருக்கியேப்பா’’ என்பார்கள்.

ஆனால், இதில் முண்டியடித்துக் கதவுகளை எல்லாம் உடைத்துக்கொண்டு வந்தவர் இளையராஜா. ஆமாம், அந்தச் செக்குமாடாக இருப்பதை மறுத்து ஓட முற்பட்டவர்களில் இளையராஜா முதன்மையானவர். அவர் மக்கள் இயக்கத்தின் வழி வந்தவர் என்பதால், எளிய இந்தியனுக்கும் புரியும் வகையிலும் வியாபார ரீதியிலும் வெற்றிபெறக்கூடிய பாடல்களை அமைத்தார். ஆமாம், அவரின் பாடல்களில் ஒரு கிராமத்தானுக்கு வேண்டிய எளிமையும் ஓர் இந்தியனுக்கு வேண்டிய திமிரும் இருந்தது. அவர் ஓர் அகில உலக இந்தியர். அந்தக் குணம்தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு மனிதர் எப்படி இந்தியா முழுமைக்குமான இசையைத் தருகிறார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இசையின் அடிப்படை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு அது வியப்பாகவும் இருக்கும்.

‘யார் இந்தப் பையன்’ என்று கேட்டவர்கள் எல்லாம், ‘சார்’ என்று சொல்லும் வயது ராஜாவுக்கு வந்துவிட்டது. இருந்தாலும், தான் கற்ற இசை போதாது என்று நினைத்தாரா, கற்றது கைம்மண் அளவு என்று நினைத்தாரா என்று எனக்குத் தெரியாது. கர்னாடக சங்கீத வகுப்புக்குப் போவார். அந்தக் காலகட்டத்தில் ``வாங்க, எக்ஸர்சைஸ் பண்ணலாம்’’ என்று அவரை அழைப்பேன். என்னுடன் பீச்சுக்கெல்லாம் வருவார். ‘`எங்குபோயிட்டு ஆறரை மணிக்கு வர்றீங்க’’ என்றால், ‘`பாட்டு கிளாஸுக்குப் போயிட்டு வர்றேன்’’ என்பார். எனக்கு வியப்பாக இருக்கும். `இவர்ட்ட போய் நாம் பாடம் படிக்கலாம்னு நினைக்கும்போது இவர் வேறு ஒருவரிடம் இசை வகுப்புக்குப் போகிறாரே’ என்ற வியப்பு. உச்சத்தில் இருந்த அந்தச் சமயத்தில் இரவு 11 மணிக்கு வேலையை முடித்துவிட்டு அதிகாலை நாலரைக்கு எழுந்து ஐந்து மணிக்கு டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் கர்னாடக சங்கீத வகுப்புக்குப் போவார். அவர் இவரை மிகப்பெரிதாக மதிக்கும் கலைஞர். டிவிஜியும் இவருக்கு ஆகச்சிறந்த ஆசான். ‘ராஜபார்வை’யில் அவரை ஓர் ஆலாபனை பாடவைத்தார். ‘அந்திமழை’ பாடலில் வரும் மிருதங்க தொனியும் அவருடையதுதான். அவை இரண்டையும் அந்தப் பாடலில் எனக்கு அமைத்துக்கொடுத்தவர் ராஜாதான்.

என் 100வது படம், நான் தயாரிக்கும் முதல் படம் ‘ராஜபார்வை’க்காக ராஜாவுடன் கம்போஸிங். அப்போது ஒரு டியூன் போடுகிறார். ‘இது ஓகே’ என்றேன். அப்போது சிங்கீதம் சார், ‘இருங்க, அப்படி கொடுத்ததும் வாங்கிட்டு வந்துடக்கூடாது. நாம இன்னும் கேட்கணும்’ என்றார். உடனே கிடுகிடுவென ஒன்பது டியூன்கள் போட்டார். பிறகு, ‘நான் புறப்படட்டுமா’ என்று, வேறு வேலையாகப்போய்விட்டார். அதாவது மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு ஒரு டியூன் என அந்த ஒன்பது டியூன்களுக்கும் அவர் எடுத்துக்கொண்டது, வெறும் அரைமணி நேரம்தான். சிங்கீதமும் நானும் அந்த ஒன்பது டியூன்களையும் இரவு முழுக்கத் தூங்காமல் திரும்பத் திரும்பக் கேட்டோம். காலையில் சிங்கீதம் போன் செய்து, ‘நீங்க சொன்னதுதான் சரி. அந்த முதல் டியூனே நல்லா இருக்கு. அதில்தான் ரீங்காரம் இருக்கு’ என்றார். அவர் ஓரளவுக்கு இசையறிந்தவர். படங்களுக்கு இசையமைப்பும் செய்திருக்கிறார்.

இப்படி இளையராஜாவுக்கு இசை எளிமையாக இலகுவாக வந்துவிடும். உதிர்த்துவிட்டுப் போய்விடுவார். அதைவைத்துக்கொண்டு நாம் வருடக்கணக்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘இது வேண்டாம்’ என்றால், மல்லுக்கட்ட மாட்டார். அடுத்தடுத்து என்று போய்விடுவார். அப்படி நானும் அவருடன் போயிருந்தால் ‘அந்திமழை’ எங்களுக்கு இல்லாமலேயே போயிருக்கும். இப்படி அவரின் டியூன்களைப் பிடித்து வைத்துக்கொண்டால்தான் உண்டு. இல்லையென்றால், அது வெவ்வேறு ரூபங்களில் மாறி அவரின் வெவ்வேறு படங்களில் துண்டு துண்டாகப்போய்விடும். ஆமாம், அற்புதமான அந்த டியூன்கள் வேறு கமர்ஷியல் படங்களுக்கு விறகாகிவிடும். அற்புதமான சந்தனமரத்தின் வாசம் நமக்குப் புரியாவிட்டாலும், அவர் அதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் வெட்டிக்கொடுத்துவிடுவார். ஆமாம், கமர்ஷியலோ கதைப்படமோ, வருவதைப் பகிர்ந்தளித்தபடி போய்க் கொண்டே இருப்பார்; ஒளித்துவைக்கவே மாட்டார்.

‘இல்லைங்க, ஒவ்வொரு டியூனையும் அப்படி விட்டுடக் கூடாது’ என்பேன். அவரின் பட ரீரெக்கார்டிங்கை எல்லாம் நினைவுவைத்துக் கொண்டு, ‘`இந்த ரீரெக்கார்டிங்கையே பாட்டா போடலாம்ங்க’ என்பேன். ‘`அப்படியா, போட்டா போச்சு” என்று தயாராவார். ‘ராஜாவிடம் பேசமுடியாது, கோபக்காரர்’ என்பார்கள். ஆனால், எனக்கு அப்படித் தெரிந்ததே இல்லை. பாரதிராஜாவுக்கு அவர் என்ன சுதந்திரம் கொடுத்திருந்தாரோ, அதே அளவு சுதந்திரம் எனக்கும் தந்திருந்தார். ஆனால், அவர்கள் வாடாபோடா நண்பர்கள். நான் ஆரம்பத்திலிருந்தே ‘சார்’ என்று அழைத்துவந்தவன்.  உறவு வலுத்துவிட்டதால் மரியாதையைக் குறைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாதே.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது, அந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் நானே சொந்தமாகத் தயாரித்து, இயக்குவதாக முடிவு செய்திருந்தேன். ‘இசையமைப்பாளர்’ என்று பேச்சு வந்தபோது, ‘`என்னங்க எப்பப் பாரு ராஜா, ராஜானு அவர் பின்னாடியே போயிட்டிருக்கீங்க. கொஞ்சம் வித்தியாசமாத்தான் பண்ணிப்பாருங்களேன். அவரைப் பாருங்க, அந்த மியூசிக் டைரக்டரோட போயிட்டார். இவர் அவரோட போயிட்டார்’’ என்று பலரையும் உதாரணங்களாகக் காட்டினார்கள். ‘ஆமாம், காலத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் இல்லையா’ என்று நினைத்துக்கொண்டு, நானும் வேறொரு இசையமைப்பாளரைத் தேடிப் போனேன்.

p12d_1513683423.jpg

படம் உதவி: ஞானம்

அவர் அறிமுகம்தான், ஆனால் பெரிய இசை மேதை. ஆரம்பத்தில் பேசும்போது, ‘`என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன்’’ என்றார். `அவர் அப்படிச் சொன்னதற்காக நாம் என்ன அவருக்கு ஆயிரங்களிலா கொடுத்துவிடப்போகிறோம், 15 லட்சம் தரலாம்’ என்று மனதில் நினைத்திருந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு 15 லட்சம் என்பது பெரிய தொகை. பாடல்கள் கம்போஸ் செய்து ஷூட்டிங்குக்காக ரஃப் ரெக்கார்ட் கொடுத்தார். அதைவைத்துப் பாடல் காட்சிகள் உட்பட ஒட்டுமொத்தப் படத்துக்கான ஷூட்டிங்கையும் முடித்துவிட்டேன்.

ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் ரெக்கார்டை அவரிடம் கேட்டபோது, `‘எனக்கு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும்’’ என்றார். அப்போதெல்லாம் யாருக்கும் அவ்வளவு சம்பளம் கொடுப்பது கிடையாது. என்னாலும் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘`பணத்தைத் தந்தால்தான் இசையைத் தருவேன்’’ என்றார். போகப்போக இழுபறியாகிவிட்டது. ஓரளவுக்குமேல், மரியாதை கெட்டுப்போய்விடும் என்று நினைத்து, ‘பரவாயில்லை,  எனக்கு லாபம் என்று வைத்திருந்த தொகையை இழக்கிறேன். வேறு இசையமைப்பாளரிடம் போய்விடலாம். புதிதாகப் பாடல்களை ரெக்கார்ட் செய்து பிறகு அதைவைத்து ரீஷூட் செய்யலாம்’ என்றேன்.

“யாரை வெச்சுப் பண்றது. ராஜாட்ட போக முடியாது.  நீங்க அவரை விட்டுட்டு வேற ஆள்ட்ட போயிருக்கும்போது மறுபடியும் எப்படி அவர்ட்ட போக முடியும்’’ என்கிறார் சந்திரஹாசன். ‘`அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் போவேன்’’ என்று சொல்லிவிட்டு, ராஜாவிடம் போய் அமர்ந்தேன். கூனிக்குறுகித்தான் உட்கார்ந்திருந்தேன். என் பிரச்னையைப் புரிந்து அவர் அன்று செய்தது, திரையிசை உலகில் மிகப்பெரிய சாதனை என்பேன். அந்தப்பட இசைக்கோப்பினையே பல்கலைக்கழகங்களில் தனிப் பாடமாக வைக்கவேண்டும் என்று பரிந்துரைப்பேன்.

அது என்ன படம், அதில் ராஜா அப்படி என்ன சாதனை செய்தார் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்!”

 

 

p8c_1514277483.jpg

முழுப்படத்தையும் முடித்துவிட்டு ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் இசையைக் கேட்டால், ‘ஒரு கோடிp28aa_1514277531.jpg ரூபாய் கொடுத்தால்தான் கொடுப் பேன்’ என்றார் அறிமுக இசையமைப்பாளரான அந்த இசைமேதை. ‘வேறு வழியில்லை, ராஜாவிடம் போவோம்’  என்றேன். ‘வேறு ஒருவரிடம் போய்விட்டு வந்ததால் அவர் பண்ணுவாரா என்பது சந்தேகம்’ என்றார்கள். ‘பண்ணுவார், நான் போவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன். ‘என்ன’ என்று கேட்டார் ராஜா. ‘தப்புப் பண்ணிட்டேன். இந்த மாதிரியெல்லாம் ஆகிப்போச்சு’ என்று என் குறைகளைச் சொன்னேன்.

வேறு நபராக இருந்திருந்தால், ‘செம மேட்டர் சிக்கிடுச்சு’ என்று  நினைத்துக்கொண்டு, ‘எனக்குத் தெரியும்...’ என்று எதிராளியைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்குவார்கள். இல்லையென்றால், ‘இல்லல்ல... எனக்கு வேறு வேலைகள் இருக்கு’ என்று சொல்லித் தவிர்ப்பார்கள். ஆனால் ராஜாவோ,  ‘`சரி, அதை விடுங்க. இப்ப என்ன பண்ணப்போறீங்க?’’ என்று நேராக பிரச்னைக்குள் வந்தார். ‘`பாட்டெல்லாம் ஷூட் பண்ணிட்டேன்’’ என்றேன்.  ‘`அப்ப அந்தப் பாட்டை யெல்லாம் திரும்ப எடுக்க எவ்வளவு செலவாகும்?’’ என்றார். ‘`அதைப்பற்றி இப்ப பேசவேணாம். நாம அந்தப் பாடல்களைப் புதுசா கம்போஸ் பண்ணி ரெக்கார்ட் பண்ணுவோம். அதைவெச்சு நான் புதுசா ஷூட் பண்ணிக்கிறேன். எவ்வளவு குறைவான பட்ஜெட்டில் இதைப் பண்ண முடியும்னு  நீங்க சொல்லுங்க’’ என்றேன்.

p28a_1514277650.jpg

‘`எனக்கு என்ன கொடுப்பீங்க?’’ என்றார். ‘`என்னங்க இந்த நேரத்துல இப்படிக் கேக்குறீங்க. தப்புப் பண்ணிட்டேன்னு சொல்லிட்டுதானே வந்திருக்கேன். தண்டனைக்கு இது நேரமில்லையே’’ என்றேன். ‘`அதெல்லாம் பேசப்படாது. பாட்டைப்பூரா எடுத்தீங்கன்னா என்ன செலவாகுமோ அந்தச் செலவை எனக்குக் கொடுங்கன்னா கேக்குறேன்?’’ என்றார். ‘`என்னங்க, இப்ப பண்ண மாட்டேங்குறீங்களா, என்ன சொல்றீங்க?’’ என்றேன். ‘`மாட்டேன்னு எங்க சொன்னேன். உங்களுக்கு அந்தச் செலவே இல்லாம பண்றேன். எனக்கொரு ஐடியா வந்துடுச்சு’’ என்றார்.

‘`என்ன?’’ என்று கேட்டேன். ‘`ஏற்கெனவே எழுதிய பாடல்கள், நீங்க எடுத்த வீடியோ காட்சிகள் எதையும் மாத்த வேணாம். அப்படியே இருக்கட்டும். அந்த வரிகளுக்கும் காட்சிகளுக்கும் பொருந்துறமாதிரியான இசையை நான் கம்போஸ் பண்ணித் தர்றேன். திரும்ப ஷூட் பண்ண வேணாம். எனக்கு என்ன கொடுக்குறீங்களோ கொடுங்க. அதைப்பற்றிக் கவலையில்லை. நான் செஞ்சுகாட்டுறேன்’’ என்றார் உறுதியுடன்.

‘`என்னடா இது, கிணறுவெட்ட வேறு பூதம் கிளம்புதே, தப்பாயிடுமோ’’ என்ற பயம் எனக்கு. ஒருமாதிரி தயக்கத்துடன், `‘அது பரவாயில்லைங்க.  என்னைக்   காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மியூசிக்கை நாம கம்மிபண்ணிடக்கூடாது. எல்லாம் ஹிட் சாங்கா வரணும். நீங்க போடுறபடி போடுங்க. செலவானா பரவாயில்லை. நான் ஷூட் பண்ணிக்கிறேன்’’ என்றேன். ‘`அப்படின்னா என் மேல நம்பிக்கை இல்லைனு எடுத்துக்கலாமா’’ என்றார். ‘`ஐயய்யோ... அப்படியில்லைங்க’’ என்று அவசர அவசரமாக மறுத்தேன். ‘என்னமோ நடந்துடுச்சு. இனிமேலாவது நண்பர் சொல்வதைக் கேட்போம்’ என்று நினைத்துக்கொண்டு, ‘`நீங்க சொல்றதுமாதிரியே கம்போஸ் பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பிறகு, என்னை அழைத்துக் காட்டினார். ‘இது உண்மைதானா, மேஜிக்கா, இசையில் இப்படியெல்லாம் நிகழ்த்த முடியுமா?’ என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆம், ‘ஹேராம்’ படத்தில் அத்தனை ஹிட் பாடல்களும் ஏற்கெனவே எழுதி, ஷூட் பண்ணின காட்சிகளுக்குப் புதிதாக இசையமைக்கப் பட்டவை. அதே வரி, அதே சொற்கட்டு. ஆனால், இசையும் ராகமும் வேறு. ராஜா வழி வந்தவை.

அதில் ஒரு காட்சியில், இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ய, பெண் பார்க்க ஹீரோ வந்திருப்பான். அவள், மிகவும் இளம் வயது பெண். ‘வைஷ்ணவ ஜன தோ...’ என்று காந்தியாருக்கு மிகவும் பிடித்த பாடலை அந்தப் பெண் பாடுவாள். அதில் ஓர் இடத்தில், ‘`ஸ்ருதியை ரொம்ப மேல எடுத்துட்டா பிசிறி நாறப்போகுது’’ என்று ஒரு விதவை ஐயங்கார் பாட்டி சொல்வார். அதனால் அவள் சரியாகப் பாடவேண்டுமே என்கிற பதற்றத்துடன் அனைவரும் கேட்டுக் கொண்டிருப் பார்கள். அவர் மேல் ஸ்தாயியில் பாடும் இடம் வரும்.  எல்லோரும் பதறி, பிறகு, ‘நல்லா பாடிட்டா’ என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். பின், அந்தப் பெண் பாடியபடியே தன் குடும்பத்தினரை கர்வமாகத் திரும்பிப் பார்ப்பாள். இதுதான் காட்சி. அந்தக் காட்சியையும் ஏற்கெனவே படமாக்கிவிட்டோம்.

அந்தக் காட்சியைக் காட்டி, ‘`இதுக்கு எப்படிப் பண்றது? சரியா உச்சஸ்தாயி போகவேண்டிய இடத்தில் உச்சஸ்தாயி போகணும். எப்படிப் பண்ணலாம்னு எனக்குப் புரியலை’’ என்றேன். ‘`என்ன வேணும் சொல்லுங்க’’ என்றார் ராஜா. ‘`மொத்தக் கதையும் நார்த் இண்டியாவுல நடக்குது. ஆனால், இதுமட்டும் சென்னையில் நடக்கும் காட்சி. அதனால இதுமட்டும் தென்னிந்தியத் தன்மையோட இருக்கணும்’’ என்றேன். ‘`அவ்வளவுதானே’’ என்றவர் உச்சஸ்தாயி போவதுபோல் மூன்று டியூன்கள் போட்டார். அதற்கும் 30 நிமிடங்கள்தான். எனக்கு அந்த மூன்றுமே பிடித்திருந்தன. ‘`நானே சூஸ் பண்றேன்’’ என்று மூன்றில் அவர் தேர்ந்தெடுத்த பாடல்தான் படத்தில் வந்தது.

இப்படி வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில், ‘`எல்லாம் சரி, உங்க வேலைகளை முடிச்சுக்கிட்டீங்க. எனக்கு ஒரு பாட்டுப் போட இடமில்லாம பண்ணிட்டீங்களே’’ என்றார். ‘`இதுவே பெரிய சாதனை. அதென்ன பெரிய விஷயம்’’ என்றேன். `‘இல்ல, எனக்கு ஒரு இடம் இருக்கு’’ என்றார். `‘ஒரு இயக்குநரா பார்க்கும்போது, இதுல இன்னொரு பாட்டுக்கான இடம் இல்லையே. தவிர இன்னொரு பாட்டு ரொம்ப ஜாஸ்தியாயிடும், வேண்டாங்க’’ என்றேன். `‘ஐயா, இருக்கிற இடத்துல நான் போட்டுக்குறேன். நீங்க சும்மா இருங்களேன்’’ என்றார். ‘`எங்க?’’ என்றேன். ‘`அவர் பாங்கு குடிச்சிட்டு வர்ற அந்த இடம். இயக்குநரா நீங்க அதை ரீரெக்கார்டிங்கா நினைச்சிருந்தீங்க. நானும் அது ரீரெக்கார்டிங்தான்னு சொல்றேன். ஆனா, அதையே பாட்டா போட்டுக்கொடுக்குறேன்’’ என்றார். ‘`நல்லாருக்குமானு பாருங்க’’ என்றேன் அரைமனதாக.

அப்படி அவரே முடிவு செய்து, கம்போஸ் பண்ணி அவரே எழுதியதுதான், ‘`இசையில் தொடங்குதம்மா’’ என்ற பாடல். முன்பெல்லாம் பாட்டுப்போட்டிகளில் தன் திறமையைப் பார்வை யாளர்களுக்குக் கடத்த, ‘சிந்தனை செய் மனமே’, ‘ஒருநாள் போதுமா’ போன்ற பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது, ‘ஒருநாள் போதுமா’ பாடலை அதைப் பாடிய பாலமுரளி சாருக்கும் பெரிய வீணை வித்வான்களுக்கும் பாடிக்காட்டியிருக்கிறேன். அப்படி இன்று தனக்குப் பாட வரும் என்பதை நிரூபிப்பதற்காக, பாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் பாடிக்காட்டும் ஒரு ஐக்கானிக் பாடலாக ‘இசையில் தொடங்குதம்மா’ பாடல் அமைந்திருக்கிறது. இதன்மூலம் பிரபல இந்துஸ்தானி பாடகர் அஜய் சக்கரவர்த்தி அவர்களின் நட்பையும் ராஜா எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.

p28b_1514277673.jpg

‘`பணம், உழைப்பு, நாள்கள்... என்று இந்தளவுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாரே’’ என்று சந்தோஷம். அவரை பதிலுக்கு சந்தோஷப்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில்  ‘ஹேராம்’க்கான பின்னணி இசையை புதாபெஸ்ட் கொண்டுபோய் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து ரீரெக்கார்டிங் செய்வது என்று முடிவு செய்தேன். புதாபெஸ்ட் அழைத்துச் செல்லும்போது அவருடன் வந்தவர்கள் அனைவருக்குமே அந்த வடிவம், தொழில்முறை அனைத்தும் புதிதாகவும் வேறாகவும் இருந்தன. ஆனால், அவர்களை ஒன்று சேர்த்தது இசை மட்டுமே. அங்கேயும் வேட்டிகட்டிக் கொண்டு, குளிருக்குக் குல்லாவெல்லாம் போட்டுக்கொண்டு வந்து நின்ற ராஜாவை, அங்குள்ளவர்கள் ‘`இவரா கம்போஸர்?’’ என்பதுபோல் பார்த்தனர்.

அவர்களின் முகத்தில், ‘`இந்தியாவுல இருந்து ஏதோ வந்திருக்காங்க. அவங்களுக்கும் பண்ணணுமே’’ என்ற சலிப்பு தெரிந்தது. ‘`இது சரியில்லை, அது சரியில்லை’’ என்றார்கள். ராஜாவை வைத்துக்கொண்டு அவர்கள் அப்படிப் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. ‘`காசு கொடுத்து வந்திருக்கோம். எங்க ஆளுக்கு இது இது வேணும்னு கேட்கிறார். அதைச் செஞ்சுகொடுக்க வேண்டியது உங்க வேலை. ஏன் இவ்வளவு சலிப்பு’’ என்று அவர்களை அதட்டினேன்.

ஆனால், அவர்கள் திறமையான இசைக்கலைஞர்கள். தியேட்டரை நம்புபவர்கள். ஒருவருக்கொருவர் பேப்பர் கொடுப்பதில் ஏதோ ஒரு பிசகு நடந்திருக்கிறது என்பது தெரிந்தது. நான் அதட்டியதால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சற்று இறுக்கமாகவே வேலையை ஆரம்பித்தனர். பிறகு இவர் கொடுத்த பேப்பரை அங்கிருக்கும் இசைக்கலைஞர்களின் முன் வைத்ததும் அதை அவர்கள் 10 நிமிடங்கள் கவனித்தனர். பின்,  ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு அங்கிருக்கும் கண்டக்டர், பேட்டனைத் தட்டி, ‘ரிகர்சல் பார்க்கலாம்’ என்று உற்சாகத்துடன் அந்தக் குச்சியை ஆட்டியவுடன் இசைக்கலைஞர்கள் அனைவரும் அந்த இசையைப் புரிந்துகொண்டு ஒரே சமயத்தில் இசைத்தபோது எனக்குப் புல்லரித்துவிட்டது. `ராஜா என்ன பண்ணுகிறார்’ என்று திரும்பிப்பார்த்தால், அவரின் கண்களில் கண்ணீர்.

ஏனெனில், குழுவில் உள்ள எல்லோருக்கும் சொல்லிப் புரியவைத்து அந்த ஒலியை வரவழைக்க அவர் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அரைநாளாவது ஆகும். ஆனால் பத்தே நிமிடங்களில் புதாபெஸ்ட்டில் அவர்கள் அதை வாசித்ததும், ‘இது என்ன இசை’ என்று யாரோ போட்ட இசையைக் கேட்பதுபோல் நின்ற இளையராஜாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதை யாரோ ஒருவர் போட்டோ எடுத்ததாகவும் நினைவு. ‘`யாரோ போட்டமாதிரி நீங்க என்னங்க இப்படி ரசிக்கிறீங்க. உங்க மியூசிக்தாங்க’’ என்றேன். அதன்பிறகு அங்கிருந்த இசைக்கலைஞர்கள் ராஜாவிடம் நடந்துகொண்ட முறையே வேறாக இருந்தது. சென்னையில் அவர் வரும்போது எப்படிச் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்று வணக்கம் சொல்லி வழிவிடுவார்களோ அப்படி புதாபெஸ்டிலும் அடுத்தநாள் ரெக்கார்டிங்குக்காக வந்தவரை, ‘மேஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ... மேஸ்ட்ரோ’ என்று அழைத்து ஒதுங்கி வழிவிட ஆரம்பித்தனர். இப்படி ‘ஹேராம்’ படம் மூலம் ராஜா, இசையில் வேறொரு அனுபவத்தைத் தந்தார். அதனால்தான், இசையமைப்பாளர்களாக ஆசைப்படுபவர்களுக்கு `ஹேராம்’ பட இசை ஒரு மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் என்றேன்.

`` ‘ஹேராம்’ படத்தில் நடந்த இந்த விஷயத்தை ஊர் ஃபுல்லா தண்டோரா போட்டுச் சொல்லணும்ங்க’’ என்று நான் சொன்னபோது,  ‘`அதெல்லாம் பண்ணக்கூடாது. ரொம்பத் தற்பெருமையா இருக்கும்’’ என்றார் ராஜா. நானும் சில பேட்டிகளில் இதைச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் செய்த சாதனையை ஒவ்வொரு வரியாகப் போட்டுக் காட்டி, எது எதுவாக மாறியது என்று சொன்னால்தான் புரியும். அதாவது கிட்டத்தட்ட காளமேகம் புலவர் ஒரு பாட்டுக்கு  இரண்டு  அர்த்தம்  வருவதுபோல் சிலேடைப் புலமையால் பாடுவார் என்பார்களே, அப்படி இசையில் பல்வேறு அர்த்தங்கள் கண்டறியும் இசைக் காளமேகம் இவர்.

இப்படி நிறைய சம்பவங்கள் உள்ளன. ‘விருமாண்டி’யில் நடந்த இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். பாடல்கள் தவிர, அந்தப் படக் காட்சிகள் அனைத்தையும் ஷூட் செய்துவிட்டு வந்து படத்தை அவருக்குப் போட்டுக்காட்டினேன். ‘`என்ன கமல், இப்படி வெட்டுக் குத்தா இருக்கு. ஓலமே கேக்குதே’’ என்றார். ‘`வெட்டுக்குத்தைப் பற்றிச் சொல்லும்போது ஓலம் தன்னால வரத்தானே செய்யும்’’ என்றேன். `‘உங்க மூடு அப்படி இருக்கிறதால இப்படியான படங்கள் எடுக்குறீங்களா’’ என்றவர், ‘`காமெடிப் படங்கள் எடுங்க’’ என்றார். ‘`எடுக்கலாம். இது எனக்கு ஆசையா இருக்கு’’ என்றேன். ‘`சரி, முடிவு பண்ணிட்டா பண்ணிட வேண்டியதுதான். வாங்க’’ என்றபடி கம்போஸிங்குக்கு வந்தார்.

ஒரு ட்யூன் வந்தது. ‘`பிரமாதமா இருக்குங்க. இதுக்கு ஒரு நல்ல கவிஞரை வெச்சு எழுத வைக்கணும்’’ என்றேன். ‘`அதெல்லாம் நீங்க சொல்லப்படாது’’ என்றார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அமைதியாக இருந்தேன். ‘`சரி, இப்ப என்ன பண்றீங்க. இங்க உட்கார்ந்து இந்த ட்யூனுக்குப் பாட்டு எழுதிக்கொடுத்துட்டுப் போங்க’’ என்று ஒரு பேப்பரை என் கையில் திணித்துவிட்டு, தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். ‘`என்னங்க விளையாடுறீங்களா, நான் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் போகணும்’’ என்றேன். `‘அதெல்லாம் தானா வரும். போங்க, எழுதுங்க’’ என்றார்.  ‘`எனக்கிருக்குற டென்ஷன்ல முதல்வரியே வராது. முதல் வரியையாவது சொல்லுங்க. அதுல இருந்து புடிச்சிக்கிட்டு எழுதுறேன்’’ என்றேன். ‘`சொல்லட்டுமா’’ என்றவர், ‘`உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல...’ என்று பாடலாகவே பாடியவர், ‘போங்க, இப்ப எழுதிக்கொடுங்க’ என்றார். ஆமாம், அந்த முதல் வரி இளையராஜா அவர்களுடையது.

பிறகு அந்தப் பாடல் ரெக்கார்டிங். ஸ்ரேயா கோஷல் தன் வசீகரிக்கும் குரலில் அழகாகப் பாடியிருந்தார். ‘உங்களுக்கு நீங்கதான் பாடுறீங்க’ என்றார் ராஜா. ‘`ஏங்க அவங்க நல்லா பாடியிருக்காங்க. விட்டுடலாமே’’ என்றேன். ‘`இல்ல, நீங்க பாடுங்க’’ என்றார். சமயத்தில் சிலர், அழகான பாட்டை பெரிய ஆர்க்கெஸ்ட்ரா போட்டு ‘ஜங்கர ஜங்கர’ என்று சத்தம் எழுப்பிக் கெடுத்துவிடுவார்கள். ஆனால் ராஜா, அந்தப் பாட்டுக்கு சத்தம் கூட்டாமல் வெறும் ஆறு இன்ஸ்ட்ருமென்ட்டுகள் மட்டுமே வைத்து  ஒலி கோத்தார். அந்த ஆறுமே ஒன்றோடொன்று பிசிறில்லாமல் தனித்தனியாகக் கேட்கும். என் டீமில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று என்னைப்போலவே ராஜாவுக்குத் தெரியும். எங்களுக்குப் பிடித்ததை, விருப்பமானதை அதில் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்.

அப்போது சந்தானபாரதியின் தம்பி சிவாஜி சின்னமுத்து என்னுடன் இருந்தார். ‘` `காட்டு வழி காளைகள்...’னு வர்ற இடத்துல காளைகளோட கழுத்துமணிச் சத்தம் சேர்த்தா நல்லா இருக்கும். அந்த பெல் சத்தங்கள் பதிவு பண்ணின வீடியோ ரெக்கார்டிங் என்கிட்ட இருக்கு. அதைக்கேக்குறீங்களா’’ என்றார் ராஜாவிடம். `சேர்த்தா கண்டிப்பா நல்லா இருக்கும். வாங்குய்யா அதை’ என்றார். வீடியோ கேமராவிலிருந்து வந்த சவுண்டை ட்ரீட் பண்ணி, அதைப் பாட்டுக்கு நடுவில் எடுத்துப் போட்டுக்கொண்டார். அது, அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

 சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக் கண்கலங்கக்கூடிய அந்த இளகிய மனதுதான் அவரின் இசையையே பெரிதாக்குவதாக எனக்குத் தோன்றும். ‘விருமாண்டி’யில் மற்ற பாடல்களை முத்துலிங்கம் சார் எழுதினார். அதில் ஒன்று, அப்பத்தாவைப் பற்றிப் பாடும் ஒப்பாரிப் பாடல். ‘மாடவிளக்கை யார் கொண்டுபோய் தெருவோரம் ஏற்றினா? மல்லிகைப்பூவை யார்கொண்டு முள்வேலியில் சூட்டினா?’ என்ற பாடல். அதில், ‘ஆறாக நீ ஓட, உதவாக்கரை நான்’ என்று ஒரு வரி எழுதியிருந்தார்.  அதைப் படித்துவிட்டு ராஜாவும் நானும் நேருக்குநேர் பார்த்து, ‘உதவாக்கரைனு வையிறதுக்கான அர்த்தத்தை இதுநாள்வரையிலும் நாம சரியா புரிஞ்சுக்கலையே’ என்று பேசிக்கொண்டிருந்தோம்.

p28c_1514277695.jpg

அப்போது ராஜாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. முத்துலிங்கத்தின் கைகளைப்பிடித்தபடி பாராட்டினார். அந்த நெகிழ்வு எனக்கு ராஜாவிடம் மிகவும் பிடிக்கும். அந்த நெகிழ்வு இல்லாத எந்தக் கலைஞர்களும் பணி ஓய்வு பெற்றுவிடலாம். இந்தச் சின்னச்சின்ன விஷயங்களை ரசிக்க முடியாதபோது அவர்கள் எல்லோருமே ஒருமாதிரி வெறுத்து சக்கையாகிவிட்டார்கள் என்றே அர்த்தம். எங்களை எளிதாக அழவெச்சிடலாம். ‘உதவாக்கரை’னு ஒரு வார்த்தைக்காக இப்படியா கொண்டாடுவது’ என்றால், கொண்டாடத்தான் வேண்டும். அந்தமாதிரியான சின்னச்சின்னக் கொண்டாட்டங்களில்தான் இளையராஜாபோன்ற ஒருவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடிந்தது. இதேபோல எத்தனை சின்னச்சின்னக் கொண்டாட்டங்களுக்கு அவர் தன் இசையின் மூலம் காரணமாக இருந்திருப்பார்?

வாலி சாரின் கோபம் தமிழ்க்கோபம் என்றால், ராஜாவினுடையது இசைக்கோபம். அவரின் ரெக்கார்டிங்  தியேட்டர் போகும்போது, ‘பட்டர் என்ன பண்றார்?’ என்று கேட்டுவிட்டுதான் உள்ளே போவேன். ஆமாம், ராஜா, அபிராமிபட்டர் மாதிரி. டக்கென ‘போடா’ என்று சொல்லிவிடுவார்.  அதைக்கேட்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். காதலியாக இருந்தால் இன்னொரு முறை சொல்லக் கேட்டு ரசிக்கலாம். இவர் ராஜாவாயிற்றே, கேட்டுவிட்டு அப்படியே ஓடிவந்துவிட வேண்டும்.

p28d_1514277709.jpg

ஆனால், அது செல்லக்கோபம்தான். வாலி சாருக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தருபவர் இல்லை என்பேன். நான்கூட சமயங்களில் வாலி சாரை எதிர்த்துப் பேசுவேன். வாதாடுவேன். ஆனால் இவர், ‘ஏங்க சும்மாயிருங்க. அவர்ட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாது. பெரிய மனுஷன் சொல்றார். கேட்டுட்டுப் போறதைவிட்டுட்டு, அவர்ட்டபோய் வாக்குவாதம் பண்றீங்க. நாமதான் பொறுமையா இருந்து வாங்கணும். இருங்க, நான் வாங்கித்தர்றேன்’ என்று என்னை சீனில் இருந்து ஓரங்கட்டிவிட்டு, எனக்காக அவர் வேலை செய்வார். ஒருமுறை பிரகாஷ்ராஜ், ‘உங்கப் பேச்சை எடுத்தால் அவருக்குக் கண் பளபளக்குதுங்க’ என்றார். உண்மைதான், இது இருவருக்குமான மியூச்சுவல் புரிந்துணர்வு.

எனக்கு அவரைத் தெரியும் என்பதையும் தாண்டி அவர் எனக்கு உறவாகவே மாறிவிட்டார் என்பதே எனக்குப்பெருமை. இளையராஜா என்கிற கலைஞனை நண்பராக்கி, பிறகு என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டவன். சந்திரஹாசன் அவர்களின் இழப்புக்குப் பிறகு, `அவரின் இடத்தை நாங்கள் நிரப்புகிறோம்’ என்று என்னுடன் நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இளையராஜா. ஆம், சந்திரஹாசன் அவர்களின் இடத்தை நான் அவருக்குத் தந்திருக்கிறேன்.

இத்தனை ஆண்டுக் காலப் பயணத்தில்... எத்தனையோ பிசகுகள் நேர வாய்ப்புள்ள துறை. இருவருமே கோபக்காரர்கள். காசு, கருத்துவேறுபாடு... என்னென்னமோ இருக்கின்றன.  நான் பகுத்தறிவு பேசுகிறவன். அவர் மிகத் தீவிர ஆன்மிகவாதி. ஆனாலும் அவரிடம் பேசும்போது என் கருத்தை அடக்கிவாசித்ததே கிடையாது. ஆனால், அதற்கு இருவருமே இடம்கொடுக்காத அளவுக்கான அன்பு எங்கோ அனைத்தையும் பூசிமெழுகிவிட்டது.

எப்படி பாலசந்தர் சார், சிவாஜி சார், கண்ணதாசன், வாலி, நாகேஷ், ஜெயகாந்தன்...  பற்றிப் பேசும்போதெல்லாம் சந்தோஷத்தில் நெஞ்சு விம்முமோ, அப்படி இவரைப்பற்றி அழாமல் பேசுவது சிரமம். இவர்தான் இளையராஜா என்று தெரியாமல் ஆரம்பித்ததில் இருந்து, சின்ன கேசட் கடைகளில் இவரின் படத்தைப் போட்டு தமிழகமே கொண்டாடிக்கொண்டு இருப்பது கடந்து, அவருடனான என் 100 படங்கள், மொத்தமாக அவரின் ஆயிரம் படங்கள்... என்று அவரின் பயணத்தைப் பார்க்கையில் ஏதோ இவரை நானே கண்டறிந்ததுபோலவும் இசை கற்றுக்கொடுத்துக் கூட்டிவந்ததுபோலவும் எனக்கு அவ்வளவு பெருமை.

ஒரு விஷயம் சொல்லட்டுமா, 30 வருடம் முன்பு கேட்டு இருந்தாலும் இதையேதான் பேசியிருப்பேன். அன்று அப்படிப் பேசியிருந்தால், ‘இன்னும் படம் பண்ண வேண்டியிருக்கு. அதனால் காக்கா பிடிக்கிறான்யா’ என்றெல்லாம் நினைத்திருப்பார்கள். அதனால் 30 வருடங்கள் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்கிறேன். ஆம், எங்கள் ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும் என்பது எனக்கு அப்போதே புரிந்திருந்தது. அதைத்தான் எனக்கான பெருமையாக நினைக்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 14 - "ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்!”

 

 

 

p10h_1514876069.jpg

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, 1_1514876151.jpgவிலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூடச் சொல்லமாட்டேன்.  ஊழல் என்பது, பூசி மெழுகுவது போன்ற ஒரு விஷயம். இது அனைவரும் அறிந்த, ஊரறிய நடந்த குற்றம். இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

‘முதல்வர் தொடங்கி போர்ட்ஃபோலியோவில் கடைசிக்கட்ட அமைச்சர்வரை ஒவ்வொருவரும் இத்தனை வாக்காளர்களுக்கு, தலைக்கு இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று தொகை நிர்ணயித்து அதைக் கச்சிதமாகச் செயல்படுத்தியும் காட்டியதற்கான ஆதாரம் ஊடகங்களில் வெளியானது. அதனால் நின்ற இடைத்தேர்தல் மீண்டும் நடப்பதற்குள் ஆட்கள், அணிகள், சின்னங்கள் இடம்மாறினர்.p10b_1514876100.jpg

நின்ற தேர்தல் மீண்டும் நடந்தபோது, ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த (!) சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று... ஆர்.கே. நகரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருதரப்பும் விலை நிர்ணயித்தன. தங்களின் தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சையை, ‘தங்களின் தேவைகளைத் தீர்க்க வந்த தேவன் வந்துவிட்டான்’ என்று பொத்தானை அழுத்தி, தங்களுக்குத் தாங்களே உலைவைத்துக்கொண்டுள்ளனர் ஆர்.கே.நகர் வாசிகள்.

p10a_1514876088.jpg

இந்த வெற்றியில் பலருக்கும் எழும் கேள்விகள்போல் எனக்கும் பல கேள்விகள். கேட்கிறேன், பதிலிருந்தால் பகிருங்கள். முதல் கேள்வி. என்னைவிட அதீத அரசியல் அறிவுள்ள சாமிகள், ஆசாமிகள் எல்லாம் ‘அடடா, ஒரு கலியுக வரதன் வந்துவிட்டார். ஒரு கல்கி அவதாரம் வந்துவிட்டது, இதுவரை நிகழாதது நிகழ்ந்துவிட்டது’ என்று பாராட்டுகிறார்கள். ‘நாங்கள் பார்க்காத சிறைக்கூடங்களா, ரெய்டுகளா’ என்ற சுயேச்சையின் பதிலில் மயங்கிய என் ஊடக நண்பர்கள்கூட, ‘என்ன ஒரு நெஞ்சுரம், என்ன ஓர் ஆளுமை, இன்னொரு தலைவர் கிடைத்துவிட்டார்’ என்றும் போட்டிபோட்டுக்கொண்டு பாராட்டுகிறார்கள். சில அரசியல் அறிஞர்களும்,  ‘ஆஹா... இவைதாம் வெற்றிக்கான வியூகங்கள்’ என்றும் பட்டியல்போட்டுப் பாராட்டுகிறார்கள். அவற்றில், ‘இருபதாயிரம் ரூபாய் அமவுன்ட்டுக்கான டோக்கனா இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா’ என்ற பார்புகழும் பாராட்டும் குறிப்பிடத்தகுந்தது.

இப்படி ஆகப்பெரிய அவமானம் எந்தப் புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பதுதான் எனக்குப் பிடிபடாத கேள்வி. இதுதான் புதிய புரட்சி என்றால், இன்றைய தேதி வரையிலும் நாம் பிரிட்டிஷின் காலனி ஆதிக்கத்திலேயே வாழ்ந்திருக்கலாமே, எதற்கு அந்தப் பழைய சுதந்திரப் புரட்சி? ‘ரோடு போடுறான், ரயில் விடுறான். அது போதும் சார் நமக்கு. வைரம்தானே... கோகினூர் வைரம்தானே... சுரண்டிக்கொண்டு போகட்டும். நாம அவன் தர்ற ரோடு, ரயில்களை வெச்சுக்கிட்டு  அடிமைகளா வாழ்ந்துட்டுப் போயிடலாமே’ என்கிற அதே பழைய குணாதிசயம் நல்லதா?  அன்றைய ரயில், ரோடுகள்... இன்றைய 20 ரூபாய் டோக்கன்களாக மாறி நிற்கின்றன. கோகினூர் வைரம் போன்ற நம் ஜனநாயகம் சுரண்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆமாம், அன்றைய கிழக்கிந்திய காலனியை ஒத்த நிலைமைக்குத்தான் தமிழகம் மறுபடியும் வந்திருக்கிறது. இதைச்சொன்னால், ‘இந்த வேகம், அந்த வியூகத்துக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீர்கள் சார்’ என்று, குற்றத்தையே என் தகுதியின்மையாக மாற்றப் பார்க்கிறார்கள் சில நண்பர்கள். 

அடுத்த கேள்வி, அந்த தேவதூதனைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் மக்களுக்கு... உங்கள் உள்ளம் எவ்வளவு அழகான உலகம். உங்களின் அன்பும் அதன் வெளிப்பாடான நெகிழ்வும் என்ன செய்யும் என்பதைச் சென்னை வெள்ளத்தில் உங்களின் உதவிகள் மூலம் இந்த உலகத்துக்குக் காட்டினீர்களே, அப்படிப்பட்ட நீங்கள்தாம்  இன்று 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளீர்கள். இது பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா? உங்களிடத்தில் மனிதம் இல்லாமல் இல்லை. ஆனால், வறுமை உங்களின் மனிதம் மறைத்து அந்தப் புள்ளியை நோக்கி நகர்த்துகிறது. உங்களின் வறுமையை இல்லாமல் செய்ய, உங்களின் நேர்மையான வாக்குகள்தாம் ஒரே ஆயுதம். இந்த ஆயுதம் வேண்டுமானால் நீங்கள் பெற்ற டோக்கன்களைப்போல் இன்ஸ்டன்ட் இன்பம் அளிக்காமல் இருக்கலாம். ஆனால், நேர்மையாகச் செலுத்தும் உங்களின் வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத் தரும் என்பதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அடுத்து, ஒட்டுமொத்தத் தமிழக வாக்காளர்களுக்கான கேள்வி. ஆறாயிரம் கொடுத்த பின்பும் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு இல்லையே என்று சுயேச்சைக்குத் துணைபோன கறுப்பு ஆடுகளைக்  கண்டுபிடித்து, கட்சியை விட்டு நீக்குகிறார்களாம் ஆளுகிறவர்கள். இந்தத் திருடன்-திருடன் விளையாட்டை எப்போது முடித்துக்கொள்வதாய் உத்தேசம் திருவாளர்களே? இந்தத் திருடன் - திருடன் விளையாட்டை எப்போது முடிவுக்குக் கொண்டுவரப்போகிறீர்கள் வாக்காளர்களே?

p10c_1514876176.jpg

நிற்க. இதைப்பற்றியெல்லாம் உடனுக்குடன் கருத்து சொல்லும் களமாக இருந்த ட்விட்டருக்கு நீ ஏன் விடுமுறை விட்டாய்’ என்று கேட்கிறார்கள். ‘ஒன்றன்பின் ஒன்றாக தமிழகத்தில் எத்தனை விஷயங்கள் நடக்கின்றன. அவற்றைப்பற்றி எல்லாம் கருத்து சொல்லாமல் அமெரிக்காவில் ‘விஸ்வரூபம்-2’ வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்னமாதிரியான மனிதர் இவர்’ என்கிறார்கள். ட்விட்டரில் அடிக்கடி அரசியல் பற்றிக் கோபப்பட்டுக் கீச்சிக்கொண்டிருப்பது  மட்டுமே என் வேலையன்று. ஆமாம், அந்தக் கோபத்தை வெறும் கோபமாக மட்டுமே வைத்திருப்பதிலும் அர்த்தமில்லை. அதைக் கட்டுப்படுத்தி, விவேகத்தோடு செயலாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது இனி அதிகம் பேசிப் பயனில்லை.

தவிர சமீப தமிழக நடப்புகள் பற்றிப் பேச என்ன இருக்கிறது? கவிதைகளுக்குப் பொழிப்புரை சொல்லலாம், களங்கங்களுக்கு எப்படிப் பொழிப்புரை சொல்லமுடியும்? அதனால்தான் பொழிப்புரையை நிறுத்திவிட்டேன்.  ‘இவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்’ என்பதையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு மட்டுமே இருப்பதில் அர்த்தம் இல்லை.

தவிர அதற்குக் காரணமான மக்களையும் நான் எவ்வளவுதான் திட்ட முடியும்? நானும் அறுபதைக் கடந்துவிட்டேன். அப்படியெனில் ஜனத்தொகையில் பெரும்பான்மையோர் என் தம்பிகள், என் பிள்ளைகள். அவ்வளவு ஏன், பேரன்கள்கூட இருக்கலாம். இந்த வயதில்போய் நான் அவர்களைத் திட்டிக்கொண்டிருக்க முடியுமா? நான் திட்டுவதற்கும் அவர்களைக் குறைகூறிப் பேசுவதற்கும் கரகோஷம் செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக என் மக்களை இழிவுபடுத்திப் பேசிக்கொண்டே இருக்க முடியுமா?

நான் யாரைப்பற்றிப் பேசினால் என்ன, அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசினால் என்ன, எந்த சாமியைப் பற்றிப் பேசினால் என்ன, தமிழ்சாமியாக இருக்கும்பட்சத்தில்... எந்தச் செல்வத்தைப்பற்றிப் பேசினால் என்ன, அது தமிழ்ச்செல்வமாக இருக்கும்பட்சத்தில்... இவர்களெல்லாம் என் மக்களைச் சார்ந்தவர்கள்தானே, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், என்ன மொழி பேசுகிறார்கள்... அதே மொழியில் அவர்களைத் தொடர்ந்து திட்டுவது எனக்கும் அவமானமில்லையா? திரும்பத் திரும்பச் சொல்லிக்காட்டி அவர்களைத் திட்டித் திருத்தமுடியாது. திருத்தி மேம்படுத்த வேண்டும். அதைத்தான் நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

இனி செயல்படவேண்டியது மக்களுடைய வேலை. அதற்கு நான் ஊக்கியாக இருக்கலாம். ‘நாங்கள் எந்தப் பாதையில் நடப்பது என்று தெரியவில்லை’ என்று அவர்கள் சொன்னால் நான் பாதையைக் காட்டலாம். அதே பாதை கொஞ்சம் கரடுமுரடாக இருக்கிறதே என்றால் நான் அவர்களுக்குச் செருப்பாகலாம். இவ்வளவுதான் நான் பண்ண முடியும்.

p10d_1514876218.jpg

ஏனெனில், இவற்றைப்பற்றி மீம்ஸ் போட்டு, ட்வீட் போட்டுக் கிண்டலடிக்கவேண்டிய நேரங்கள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆம், மக்கள் செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைச் சொல்கிறேன். வேண்டும் என்றால் வைத்துக்கொள்ளுங்கள், வேண்டாம் என்றால் தூக்கிப்போட்டுவிடுங்கள். நான் முக்கியமல்லன். நம்மையும்விடப் பெரியது ஜனநாயகம். அதை மதிக்கத் தெரியவேண்டும். அதை மதிக்கவில்லை என்றால் இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கும் இவ்வளவு வலிமையான அரசியலமைப்பு பண்ணியிருப்பதற்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

ஏனெனில், நமக்குப் பக்கத்து நாடுகளில் எல்லாம் நம்மைப்போல் இருக்கக்கூடாது, வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக நம் சாயலில் சற்றே வித்தியாசமான அரசியலமைப்பைப் பண்ணிக்கொண்டார்கள். அதற்கு பாகிஸ்தான், சில ஆப்பிரிக்க நாடுகளை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் இன்றும் தள்ளாடாமல் எத்தனை சோதனைகள் வந்தாலும் நிமிர்ந்து நிற்கும் ஜனநாயகமாக நாம் நிலைத்து நிற்கிறோம். அந்த அரசியலமைப்பு அதிசயத்தை என்னால் வியக்காமல் இருக்கவே முடியாது.

அதேநேரத்தில், இதுதான் ஜனநாயகம், இப்படித்தான் நடக்கும், இவ்வளவுதான் என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். ஜனநாயகம் என்பது பிழையாப் பெருமையுள்ள ஓர் அரசியல் சித்தாந்தம் கிடையாது. அப்படி இருந்திருந்தால் அந்த ஜனநாயகம் மூலமாகத்தான் ஹிட்லர் பதவிக்கு வந்தார். இதே ஜனநாயகத்தைப் பயன்படுத்திதான் எமர்ஜென்சி இங்கே கொண்டுவரப்பட்டது. ஆதலால் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.  ஏனெனில், இந்த அபாயத்தை உணராமலும் இருக்கமுடியாது.

இப்படி எவ்வளவு சொல்லிப் புலம்புவது. ட்வீட் பண்ண என் கைகள் துடிக்கின்றன. கோபத்தில் வந்த வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்வார்கள் என்பதால் என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்கிறேன். இப்போது நான் செய்துகொண்டிருப்பது எல்லாம், என் சினிமா வேலைகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதுதான்.

p10e_1514876241.jpg

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக்கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ என்று சொல்வதை அமெரிக்காவில் மிகப்பெரிய சோகமாகப் பார்க்கிறார்கள். என் முடிவை மாற்றி சினிமாப்பக்கமே என்னை மீண்டும் மடைமாற்ற, எல்லோரும் என்னையும் என் கலையையும் வியந்து வியந்து பேசுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள நல்ல தொழில் வாய்ப்புகளைப் பட்டியலிடுகிறார்கள். ‘இங்கே வந்துவிடுங்கள்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், எனக்கப்படித் தோன்றவில்லை. பரமக்குடியில பிறந்த பையன், எப்படி சென்னைக்கு வந்தேனோ அப்படித்தான் இந்த சினிமா டு அரசியல் பயணத்தைப் பார்க்கிறேன்.  அவ்வளவுதான். ஆனால், என்னமாதிரியான அரசியல், எப்படிப்பட்ட அரசியல் என்பதெல்லாம் முக்கியமே கிடையாது. அரசியலுக்கு வரும் அவலத்துக்கு என்னைமாத்திரமன்று, தமிழக மக்களையும் ஆளாக்கிவிட்டார்கள். இப்போது எல்லோரும் வந்துதான் ஆகவேண்டும்.

‘எல்லோரும் அரசியலுக்கு வரும்போது, நானும் வருவேன்’ என்று பழைய பேட்டிகளில் பலமுறை சொல்லியிருந்தேன். அதையேதான் மறுபடியும் சொல்கிறேன். எல்லோரும் வரவேண்டிய சமயம் வந்துவிட்டது. எல்லோரும் அரசியலில் புகுந்து நல்லுணர்வோடு, நேர்மையோடு செயல்படவில்லை என்றால், உங்களுக்கு நிகழப்போகும் விபத்துகள், அபாயங்கள் எல்லாவற்றுக்கும் நீங்கள் தகுதியானவர்கள். `நீ என்ன பெரிய ரிஷியா, சாபம் கொடுக்குற’ என்று கேட்கலாம். சாபம் கொடுக்கவில்லை, வரும்முன் சொல்கிறேன்.

தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது. ‘அடிமை ஒருவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறான், அவனைத் தூங்கவிடு’ என்று சொல்லும்போது கலீல் ஜிப்ரான், ‘இல்லையில்லை, அவனை எழுப்பி, சுதந்திரத்தைப்பற்றிச் சொல்லிக்கொடு’ என்பார். இன்று தமிழக மக்கள் அப்படித்தான் தூங்குவதுபோல் நடிக்கிறார்கள். அவர்களை என்ன பண்ணியாவது துயிலெழுப்பி, ‘நடிக்காதே, வா... இது உன்னுடைய வேலையும்தான்’ என்று கூட்டிக்கொண்டு போகவேண்டிய வேலையில் அவனுக்கு முன்னதாக எழுந்த சக மனிதர்கள், சக தோழர்கள் அனைவருக்கும் பங்குண்டு. இந்த முயற்சியில் தோற்றாலும் வெற்றிதான். ஏனெனில் அது முதல் நகர்வாக இருக்கும்.

p10f_1514876259.jpg

எல்லா நேரங்களிலும் ரூபாய் வெல்வது என்பது நடக்காது. ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டு வாழமுடியாது. என்னுடைய ஆதங்கமும் அவமானமும் தாங்கொணாதது. மண்ணில் தலைபுதைக்கும் நேரம் இதுவன்று. எழுந்து தலையைச் சிலுப்பிக்கொண்டு எல்லாத் தமிழ் மக்களும் ஒருவரை ஒருவர் எழுப்பிவிடவேண்டும். ஒரு அறிவாளி இன்னோர் அறிவாளியைப்பார்த்து, ‘‘அவர்கள் ஏழைகள். அவர்களின் அறிவு மட்டம் அவ்வளவுதான்’’ என்று சொல்வதெல்லாம் அசிங்கம். அவர்களின் அறிவுமட்டத்தை உயர்த்த வேண்டும். அவன் அவ்வளவு அறிவிலி கிடையாது. அவர்களுடைய வறுமை, அந்தத் தவறுகளையெல்லாம் செய்ய வைக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்கச்செய்வதற்கு, திருடர்கள் திருடுவதை இல்லாமலேயே போகவைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் அள்ளிக்கொண்டு இருந்ததில் 50 சதவிகிதம் குறைத்துக்கொண்டால் தமிழகம் முன்னேறிவிடும்.

ஓட்டுக்கு லஞ்சமாக மக்களுக்குக் கொடுக்கக்கூடிய பணத்தை மக்களுக்கு அவர்கள் அர்ப்பணித்தாலே போதும், தமிழகத்தின் பாதி சோகங்கள் தீர்ந்துவிடும். இதுதான் நிஜம். அது எல்லோருக்கும் தெரிந்த நிஜம்.  அது தெரிந்திருந்தும், நம் வீட்டில் ஒரு ஏசி, ஃபிரிட்ஜ்  தவறான வழிகளில் கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் சுயநலம், அது பக்கத்து வீட்டை, பக்கத்து ஊரை மட்டும் கெடுக்காது, உன்னையும் கெடுக்கும்.

ஆம், ஓட்டப்பம் வீட்டைச்சுடும். இதற்குமேல் ஓட்டுக்குப் பெரிய அர்த்தம் சொல்ல முடியாது.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்!”

 

 

 

 

 

p126f_1515580574.jpg

முழுநேர அரசியல்வாதியாகப்போகிறேன் என்றதும் திசையெங்கிலுமிருந்து விசாரிப்புகள், விமர்சனங்கள், கேள்விகள்... அவற்றில் சிலவற்றுக்கு இந்த வாரம் பதிலளிக்கலாம் என்று இருக்கிறேன்.

‘`ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி விமர்சனம் வைக்கும் நீங்கள் ஏன் அதில் பங்கெடுக்கவில்லை’’ p126e_1515580599.jpgஎன்கிறார்கள். அது எப்படிப் போகும் என்ற வியூகம் உணர, பெரிய அரசியல் அறிவு தேவையில்லை. இன்றைய சூழலில் அது எப்படித் தொடங்கி எப்படி முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவிதமான எதிர்பார்த்த விபத்து. அது, நிகழப்பார்த்தோம் என்பதுதான் நமக்கான அவமானம். அந்த அவமானத்தைக் காலாகாலத்துக்கும் தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இதை நான் சொன்னதற்காக ஒரு தனிப்பட்ட மனிதர், தனிப்பட்ட கட்சி கோபித்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மொத்தமாக எல்லோரும் கோபித்துக்கொள்ள வேண்டும், வருத்தப்பட வேண்டும். வேண்டுமானால் என்மீது கோபித்துக்கொள்ளுங்கள். வருத்தம் இல்லை. ஆனால், யாராவது நினைவுபடுத்தவேண்டும் இல்லையா? ‘அப்படித்தாங்க நடக்கும்’ என்ற மெத்தனம் எங்கு கொண்டுபோய் விடும்?

‘கையைக் கழுவிவிட்டு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதைக் கிண்டலடித்துக்கொண்டிருந்தால் எப்படி வியாதி குணமாகும்? ‘`எங்க ஊர்ல தண்ணியே இல்லை. எங்குபோய்க் கையக்கழுவுறது? ஆறு வேற தூரமா இருக்கு. பைப்லயும் தண்ணி வரமாட்டேங்குது. ஏதோ போங்க. இல்லைனா நீங்க கையக்கழுவிட்டு எனக்கு ஊட்டி விடுங்க’’ என்று என் விமர்சனத்துக்கு வீம்புபிடித்தால் எப்படி? நோயை நீங்கள் உணவாக உட்கொண்டபடியிருந்தால் எப்போது குணமாவீர்கள்?

ஆமாம், நடந்த அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்வதன்மூலம் நான் என்னையே அவமானப்படுத்திக்கொள்கிறேன்.

ஆர்.கே.நகரில் குடியிருந்து டோக்கன் வாங்கியிருந்தால்தான் அசிங்கமா? வெளியில இருந்து அது நிகழப் பார்த்துக்கொண்டு இருந்தேனே, அந்தக் குற்றவுணர்வு எனக்கும் உண்டே. அதைத் தடுக்க என்ன செய்தோம். அதில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்களின் முயற்சி என்ன ஆனது? இதை அடிக்கோடிட்டுக் காட்டவேண்டிய ஊடகங்கள் ஓரளவுக்குச் செய்தன. ஆனால், இன்னும் செய்ய வேண்டும். ஏனெனில், ஊடகங்கள் என்பது மக்களின் மனசாட்சி. ஆனால், அவையும் சேர்ந்து உளறிக்கொட்டினால் ஒருவிதமான தீர்க்கமுடியாத நோயாக மாறிவிடும். அதை நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டும் என்பதே என் விமர்சனத்தின் உள்ளர்த்தம்.

p126a_1515580619.jpg

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். அதற்கு எதிர்க் கருத்து சொல்லாமல், உருவ பொம்மை எரிப்பு, வழக்கு என்று சென்றனர். அவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நற்பணி மன்றத்தாரையும் ‘தலைமையின் அனுமதியின்றிச் செய்யாதீர்கள்’ என்கிறீர்கள். ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அனுமதியளிக்காத இதுவும் சர்வாதிகாரம்தானே?’’ இப்படியும் சொல்கிறார்கள் சிலர்.

இதில் சர்வாதிகாரம் ஒன்றும் இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்தவேண்டியது என் கடமை. தேவையின்றி அந்த 500 பேரைச் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்றால் அவர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது; இந்த ஆர்ப்பாட்டத்தினால் சாதிக்கப்போவது என்ன; மக்களுக்கு என்ன லாபம்? இவையே என் கேள்வி. சிறை செல்லாமல் எப்படி நாம் வளர முடியும் என்கிறார்கள். நான் ஒரு கருத்து சொன்னேன். அதற்கு அவர் பதில் கருத்து சொல்லியிருக்கிறார் என்ற அளவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு பேருக்குள் முடியும் இந்த விஷயத்தில் நாம் மக்களை ஈடுபடுத்தவேண்டியதில்லை. இந்தப் பிரச்னையே ஆக்கபூர்வமான விவாதமாக வடிவெடுக்கும்போது, அப்போது கலந்துபேசி, கூட்டங்கள் நடத்திக் கருத்துகளைச் சொல்லலாமே தவிர, நேர் செய்யும் வெற்றுக் கூச்சல், வெட்டி பந்தா தேவையற்றது.

“ஏகப்பட்ட தயாரிப்புகள்... சந்திப்புகள்... ஆலோசனைகள்... கட்சி தொடங்கும் திட்டம் எப்படிப் போய்ட்டிருக்கு’’ என்று கேட்கிறார்கள். இப்படிக் கேட்பது, படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே, ‘`என்ன கதை?’’ என்று கேட்பதற்கு சமம். ‘`ஜேம்ஸ் பாண்டு படம் மாதிரி பண்றோம். த்ரில்லர், காமெடி, சமூக சிந்தனை அதிகம் உள்ள படம்...’’ இப்படியெல்லாம் சொல்லலாம். ஆனால், ‘`இதில் உங்கள் தோற்றம் என்ன? முகத்தில் ஒரு வடுவோடு வரப்போவதாகப் பேச்சு இருக்கிறதே’’ என்ற கேள்விக்குப் பதில் சொன்னால் முழுக்கதையும் சொல்லிவிட்டதாக ஆகிவிடுமே. சொல்வதைப்பற்றி ஒன்றும் இல்லை. இதில் ரகசியமும் இல்லை. பிரகடனத்துக்காகத்தான் இவ்வளவு பிரயத்தனங்களும்.

ஆனால், சினிமாவில் நாம் எடுத்து முடிப்பதற்குள் வேறொருவர் எடுத்து ரிலீஸ் பண்ணிவிடுவார்களே என்ற பயம். இங்கேயும்கூட அது நடக்க வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டி இருக்கிறது. அதனால் சொல்வதை மிகச்சரியாகச் சொல்லவேண்டும். சொல்லிவிட்டுத் திருப்பி வாங்கவேண்டிய நிலைமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிசகு நடந்தால், தவறு நடந்துவிட்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டு, மாற்றித் திருத்திக்கொள்ளவேண்டும். அந்த வேலைகள்தான் போய்க்கொண்டிருக்கின்றன. 

‘`மய்யம் விசில் செயலி ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்றீர்களே, என்ன ஆனது’’ என்கிறார்கள் வேறு சிலர். இது, ``விஸ்வரூபம்-2, எந்திரன்-2 எப்ப ரிலீஸ்’’ என்று கேட்பதுபோல் இருக்கிறது. அதனால், ரிலீஸ் தேதி சொல்லிவிட்டேன் என்பதற்காக சினிமாபோல் எப்படியாவது கொண்டுவந்து சேர்த்துவிடவேண்டும் என்பது கிடையாது. இது, ‘`பொங்கலுக்குக் கொடுக்குறேன்னு சொன்னீங்க. இன்னும் கரும்பே கொடுக்கலையே’’ என்பதுபோன்ற விஷயம் கிடையாது. சிலருக்கு இது கரும்பாகக்கூட இருக்காது, கசக்கும் மருந்தாக இருக்கும். அதனால் இதை ஜாக்கிரதையாகப் பண்ணவேண்டும், இதில் நேர்மை இருக்கவேண்டும். நல்லவிதமாக வேலை செய்யவேண்டும். வேறு தவறுகள் வந்துவிடக்கூடாது.

ஏனெனில், இதுபோன்ற விஷயங்களைப் பலமுறை முயற்சிசெய்து பார்த்தவன் நான். அதனால் எப்படிச் செய்யக்கூடாது என்பதில் எனக்கு நிறைய நல்ல அனுபவங்கள் உண்டு. அதனாலேயே சரியாகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தொழில்நுட்ப ரீதியாக எல்லாம் சரியாக அமைந்தால்தான் ரிலீஸ் பண்ண முடியும். சினிமா போன்று இதுவும் தொழில்நுட்பம் சார்ந்ததுதான். ஆனால், அது பொழுதுபோக்கு. இது மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இந்த அத்தியாவசியத்தைப் போட்டிக்காக அவசரப்படுத்த முடியாது.

p126b_1515580643.jpg

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போல் போட்டிபோட இது வியாபாரமில்லை. அதையும்தாண்டி முக்கியமான மக்கள் சேவைக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி. அதை மிகச்சரியாகப் பண்ணவேண்டியது கடமை. அதற்கான எல்லா டெஸ்டிங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இதை வெளியில் விட்ட பிறகு ஒவ்வொருவராகப் பிழைகளைச் சொல்லச் சொல்லத் திருத்துவதைவிட, அதற்கு முன்னரே திருத்திக்கொண்டு பிறகு மக்களிடம் கொண்டுபோனால், உடனடியாகப் பயன்பாட்டுக்கு வரும். இது பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லைதான். ஆனால், சயின்ஸ் சம்பந்தப் பட்டிருப்பதால் அறிவார்ந்த கூட்டம், ஆராய்ச்சியை அதிகப்படுத்தி சரியாகக் கொண்டுவந்து சேர்த்தால்தான் பிரயோஜனப் படக்கூடிய கருவியாக இருக்கும். அதற்காகத்தான் இந்தத் தாமதம்.

‘`நண்பர்கள் பகைவர்களாவார்கள். எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?’’ - இது பெரும்பாலானோர் கேட்கும் முதன்மையான கேள்வி. இதற்கான பதிலை, என் வாழ்க்கையிலிருந்தே எடுத்தாள்கிறேன். நான் நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததும் சக நடன மணிகளின் பாராட்டும் பொறாமையும் ஒருங்கே வர ஆரம்பித்தன. ‘`என்னைவிட நல்லா ஆடுறானா, எவன் அவன்’’ என்று பல நடனமணிகள் அன்று கேட்டதும் காதுக்கு வந்தன. அந்தக் கோபம், பொறாமைக்கூட ஒருவிதமான பாராட்டுதான் என்று எடுத்துக்கொண்டு கடந்துவிடவேண்டும்.

‘`நான் எப்போதும் நடனமணிதான், உங்களைத் தோற்கடிக்க வந்த நடனமணி’’ என்று நினைத்துக்கொண்டிருந்தால், ‘`இந்த வருட டிசம்பர் சீசனில் ஆர்.ஆர். சபா, மியூசிக் அகாடமி,  கிருஷ்ணகான சபாவில்  எப்போது சான்ஸ் தருவார்கள்’’ என்று சதா நேரமும் அந்தப்போட்டியிலேயே காலத்தைக் கடத்தியிருப்பேன். அடுத்த கட்டமாக சினிமாவில் நடன உதவியாளராக, உதவியாளனாக, இயக்குநரின் உதவியாளனாக, சினிமா எழுத்தாளனாக, நடிகனாக, பிறகு ஆசைப்பட்ட சினிமாவை எடுக்க முற்படும் தயாரிப்பாளனாக என்று... இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்திருக்கவே முடியாது.

இப்படி உயர்மட்டம் என்பதை அடைவதற்கு எல்லோரும் போன அதே பொதுவழி என்பதும் இல்லவே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் வந்து சேர்வார்கள். அரசியலையும் அப்படித்தான் பார்க்கிறேன். தவிர போட்டி, பொறாமை வந்துவிடும் என்பதற்காக முன்னேறாமலேயே இருக்கமுடியுமா? அதுவும் நான் பேசுவது என் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமா? போதும் என்ற மனமே பொன் செய்யும். உண்மைதான். ஆனால் ‘இது போதும்’ என்று நினைத்திருந்தால் இந்த உலகமே தொழில்மயமாகியிருக்காது; வளர்ந்திருக்காது. தவழ்ந்துகொண்டிருந்த நாம் எழுந்து நடைபோடும் குரங்காக மாறியிருக்க மாட்டோம், நடைபோட்டது போதாது என்று சக்கரத்தைக் கண்டுபிடித்திருக்க மாட்டோம். விசை, திசை, வேகம் அறிந்திருக்க மாட்டோம். அண்ணாந்து பார்த்து, பறவையைக் கண்டு விமானம் செய்திருக்க மாட்டோம்.

ஆம், இவற்றை நிகழ்த்திய அந்தக் காலகட்டங்களின் தொடர்ச்சியும் அதன் அடுத்தடுத்த கட்டங்களும்தாம் என் பேராசை. அதுவே என் கொள்கை. அது வெல்லலாம், வெல்லாமலும் போகலாம்.
தவறில்லை.அதைநோக்கிய பயணம்தான் என் அரசியலாக இருக்கும். ஆனால், இந்தப்பயணத்தில் நண்பர்களைப் பகைவர்களாக்கி, அந்தப் பகையைப் பெரிதாக்கி, அதை விளம்பரமாக்கி, அதை வியாபாரமாக்கி, அதன்மூலம் என் இருப்பை நிலைநிறுத்தி... இப்படி வழக்கமான பாரம்பர்யத்தில் வரும் அரசியல்வாதியாகத் தொடர எனக்கு விருப்பம் இல்லை. அப்படி ஒரு தலைமையின் கீழ் தொடரவும் இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை.

‘`இது என் கொள்கை. இது, அதன் கீழ் வரும் திட்டம். செயல்படுத்துகிறேன். தவறா, எடுத்துச்சொல்லுங்கள், திருத்திக்கொள்கிறேன்...’’ என்று நெகிழும் தன்மையுள்ள ஓர் ஒருங்கிணைப்பாளனாக இருக்கவே விருப்பம். இதை, மூத்த முன்னோர்கள், நண்பர்களுக்குள்ளும் தொடர முயல்வேன். ஆனால், அவர்களைச் சுற்றியுள்ளோரின் அகோரப் பசிக்கும் மீடியாக்களின் தினப்படி தீனிக்கும் இரையாகி, நம் பேச்சுக்கு, கருத்துக்குத் தவறான பொழிப்புரை சொல்லப்பட்டு, வேறாக மொழிபெயர்க்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டால்... அதற்கு நாம் பொறுப்பல்லர்.

p126c_1515580667.jpg

‘`அரசியல் அறிவிப்புக்கு என்னென்னமாதிரியான எதிர்வினைகள் வருகின்றன’’ என்கிறார்கள். ஏகப்பட்ட எதிர்வினைகள். இவை, என் மகள் ஸ்ருதி கேட்டவை. ‘`அப்ப, எங்க கமல்ஹாசன் என்ன ஆவார், எனக்குத் தெரிஞ்ச என் அப்பா என்ன ஆவார்?’ என்றார். `‘அவர் அப்படியேதாம்மா இருப்பார். கொஞ்சம் நரைகூடிட்டா அப்பா இல்லைனு  சொல்லிடுவியா’’ என்றேன். ‘`என்னை உனக்கு அப்பாவாகத் தெரியுமா, உலக நாயகனாகத் தெரியுமா? அதே அப்பாவாகத்தான் எப்பவுமே இருப்பேன்’’ என்றேன்.

``நான் ஆரம்பிக்கும்போது உலக நாயகன் என்ன, உள்ளூர் நாயகன்கூட கிடையாது. ‘அந்தப் பையன் பேர் என்னப்பா’ என்றுதான் என்னைத் தேடினார்கள். பிறகு வளர வளர வேறுவேறு பட்டம் கொடுத்தார்கள். அவை பறந்து போரடித்துவிட்டது என்றதும், அந்தப் பட்டத்தை இறக்கிவிட்டு வேறுபட்டம் ஏற்றினார்கள். புதுக்காற்று அடிக்க அடிக்க புதுப்பட்டங்கள் வந்து சேர்ந்தன. அவ்வளவுதான். அதைப்போய் சீரியஸா எடுத்துக்காதம்மா.’’ என்றேன்.

‘`நீங்க கலைஞன் என்பது முக்கியமில்லையா’’ என்றார் ஸ்ருதி விடாமல். ‘`அது மாறவே மாறாது. இப்ப கலைஞரைப் பார்க்கலையா’’ என்றேன். மலேசியாவில் சொன்னதையே திரும்பவும் சொல்கிறேன். ‘`உங்களின் வசனங்களிலேயே உங்களுக்கு ரொம்பப் பிடித்தது எது’’ என்று கேட்டார்கள். எனக்கு நடிக்கத் தெரியும் என்பதை உணர்த்த அந்த ஜாம்பவான் பேசிய வசனத்தைப் பேசிக்காட்டியவன் நான். பிறகு அவரே, நான் எழுதிய ‘விதை நான் போட்டது’ வசனத்தைப் பேசினார். இந்த முழுவட்டப் பிரயாணம்தான் கலைஞனாக எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

‘இனி’ என்றதற்கான பதிலே என் அரசியல் பயணம். ‘`என்ன செய்யப்போற, என்ன கொள்கை’’ என்று கேட்பார்கள். கேட்கிறார்கள். அது என்னையும் தாண்டி வாழும் மேனிஃபெஸ்டோவாக இருக்கவேண்டும் என்பதே என் பேரவா. ஏனெனில், அது தன்னையும் தாண்டி இருக்கவேண்டும் என்ற சிந்தனையுள்ளவர்கள்தாம் கட்சியையே ஆரம்பிக்கவேண்டும் என்பது என் கருத்து. ஒரு தலைமுறையுடன், இரண்டு தலைமுறையுடன் போகக்கூடிய கட்சியாக இருந்தால் மிகக்குறுகிய காலகட்டத்துக்குத் தற்காலிகமாக ஆரம்பிக்கப் படும் பைபாஸாகத்தான் நினைக்கவேண்டும். பைபாஸிலேயே பாலம் கட்டி முடிக்கவேண்டும் இல்லையா, கடலே ஆர்ப்பரித்தாலும் பாம்பன் நிற்கிறதில்லையா? அந்தமாதிரி கட்டவேண்டும். அதற்கு எத்தனை நாள் ஆகும் என்பதை மக்களே புரிந்துகொள்வார்கள். நான் தாமதப்படுத்துவது, சந்தேகத்தினாலோ பயத்தினாலோ அல்ல. சிரத்தையினால்.

“எங்களை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்?’ இது பொதுவாக மக்கள் கேட்கும் கேள்வி. மறதிதான் உங்களை ஏய்ப்பவர்களின் மூலதனம். அதனால் வல்லாரை வஸ்துக்களை வழித்துத் தின்னாவது அரசியல் நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள். கழுத்தளவு தண்ணீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களே டிசம்பர் மழையை மறந்துவிட்டார்களே. அவர்களுக்குக்கூட முன்னெச்சரிக்கை செய்யவேண்டியதாக இருக்கிறதே. அவதிப்பட்டவர்களுக்கே அப்படியென்றால், மற்றவர்களுக்கு?

அப்படி, கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துள்ளன. அதிலும் 2017-ல் ஏகப்பட்ட மாற்றங்கள், மல்லுக்கட்டுகள். அதில் பலவற்றை ஊடகங்கள் அவ்வப்போது ஊட்டிக்கொண்டே இருந்தன. அவர்கள் அப்படி ஊட்டிய அந்தத் துரித உணவுகளை அவர்களும் மறந்துவிட்டனர். அவர்கள் மேலும் மேலும் திகட்டத் திகட்ட ஊட்டிய செய்திகளால் மக்களையும் மறக்கடிக்கச் செய்துவிட்டனர். முன்பு செய்திகள் அபூர்வமாக வரும். அப்படி வருபவையும் வாரத்துக்கு ஒருமுறைதான் புதிதாகும். ஆனால், இன்று கடற்கரையில் போய் நின்றால் அடிக்கும் காற்றைப்போல் நாம் வெளியே வந்தாலே கேட்காமலேயே நம்மீது செய்திகள் கொட்டப்படுகின்றன. அதுவும் மணிக்கொருமுறை அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன.

ஆங்கிலத்தில் துர் சொப்பனங்களை `நைட் மேர்’ என்பார்கள். அது நினைவிருக்கும். ஆனால், அற்புதமான சந்தோஷக்கனவுகள், காதல் கனவுகள் நினைவிருக்காது. ஏனெனில், தினமும் கண்டுகொண்டே இருப்பதால். அதனால் நமக்கு துர் சொப்பனங்கள் மட்டுமே நினைவில் உள்ளன. அவை மேலும் மேலும் அதிகரிக்கும்போது அபாயங்களையே மறந்துவிடுகிறோம். ஆகவே, செய்திகளைப் பொழுதுபோக்காகக் கடந்துவிடாமல் அதன் பின் உள்ள அரசியலைப் பகுத்தறியப் பழகுங்கள். அவ்வளவுதான்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

 

ழைய கடமை ஒன்று, புதிய கடமை இன்று... இப்படி என் முன்னால் இரு கடமைகள். ஆம், சமூகத்தை நோக்கிய என் பயணத்தை நான் கடமையாகத்தான் நினைக்கிறேனே தவிர வாய்ப்பாகக்கூடக் கருதவில்லை.  எப்படியிருந்தாலும் வேறொரு ரூபத்திலாவது இது நிகழ்ந்திருக்கும். ஆனால், இன்னும் முனைப்போடு இறங்கிச் செய்வதுபோன்ற சூழல் இப்போது கனிந்துள்ளது. 

அதன் முதல் படியாக மக்களைச் சந்திக்கப் பயணம் கிளம்புகிறேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி. இந்தப் பயணத்தை எங்கிருந்து தொடங்குகிறேன் என்று சொல்வதற்கு முன், சின்ன முன்கதைச் சுருக்கம் சொல்ல விழைகிறேன்.

p104c_1516192390.jpgஎங்கள் அப்பா சீனிவாசன், வழக்குரைஞர். அப்போது அவர் ராமநாதபுரம் உட்பட இரண்டு சமஸ்தானங்களுக்கான சட்ட வல்லுநர். அதனால் அங்குள்ள அரண்மனைவாசிகளுடன் அவருக்கு நல்ல நட்பு. இப்போது உள்ளதுபோல் அப்போதும் அது புயல், மழைக்கெல்லாம் வாய்ப்பில்லாத பகுதி. ஆனால், 1954-ல் அங்கு பெரிய புயல், மழை. அதில் மருத்துவமனை உட்பட ராமநாதபுரமே வெள்ளத்தில் மிதந்திருக்கிறது.

அந்த மழை நாளில்தான் அம்மாவுக்குப் பிரசவ வலி. நீர் சூழ்ந்த வீடு, மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது ஆரோக்கியமான சூழலாக இருக்காது என்பதால் அம்மாவுக்கு அங்குள்ள அரண்மனையில் வைத்துப் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். இதன்மூலம் நான் பிறந்தது ராமநாதபுரத்தில், முதல் இரண்டாண்டுகள் வரை வளர்ந்தது மட்டுமே பரமக்குடியில் என்ற தகவலைப் பதிவு செய்கிறேன். இந்த விவரம் அறிந்த ராமநாதபுரத்துக்காரர்கள், ‘என்னங்க, பிறந்த ஊருக்கு வரமாட்டேங்குறீங்க’ என்று அழைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆமாம், நான் கடைசியாக ராமநாதபுரத்துக்குச் சென்றபோது எனக்கு வயது 22. எங்கள் பாட்டி, அதாவது அப்பாவின் அம்மா ராமநாதபுரத்தில்தான் இருந்தார். அப்போது அவருக்கு 99 வயது. ‘`செஞ்சுரி அடிச்சிடுவீங்களா பாட்டி’’ என்றேன். ‘`இங்க வா, உன்னை அடிக்கிறேன்’’ என்றார். ‘தசாவதாரம்’ படப் பாட்டிக்கு அவர்தான் ரெஃபரென்ஸ். அந்தப்பட மேக்கப்மேனுக்கும் அமெரிக்கச் சிற்பிகளுக்கும் அவரின் படத்தைக் காட்டி, ‘`இந்த மாதிரி வேணும்’’ என்று அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்.

இப்படி நான் பிறந்ததும் அரண்மனை, சென்னையில் வளர்ந்ததும் அரண்மனையில்தான். ஆம், சென்னையில் இப்போது நான் உள்ள ஆழ்வார்பேட்டை வீடு ஒருகாலத்தில் திவாகர் ராஜா அவர்களின் வீடு. அவர், ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உறவுக்காரர். இதுவும் அப்போது அரண்மனைதானாம். பிறகு இந்த வீட்டை ராஜமன்னார் செட்டியார் என்பவரிடம் திவாகர் ராஜா விற்றுவிட்டார்.

பிறகு இந்த வீட்டின் மேல்தளத்துக்கு நாங்கள் வாடகைக்குக் குடிவந்தோம். ராஜமன்னாரின் மகன் சிவக்குமார் எனக்கு மூத்தவர். ஒரே பள்ளியில் படித்த பால்ய நண்பர்கள். அவர் நன்றாகப் படிக்கும் பிள்ளை, நான் சுமாராகக்கூடப் படிக்காத பிள்ளை என்பதுதான் இருவருக்குமான வித்தியாசம். எங்கள் அம்மா எவ்வளவு ருசியாக சமைத்தாலும் அவர்கள் வீட்டு ரசம் அவ்வளவு ருசிக்கும். ராஜி மாமி எனக்காகக் கிண்ணத்தில் ரசம் எடுத்து வைத்திருப்பார். இப்படி ரசத்தை மட்டுமன்று பாசத்தையும் பரிமாறிக்கொள்ளும் ஒரே குடும்பம்போல் பழகி வந்தோம்.

p104d_1516192408.jpg

திடீரென ஒருநாள், ‘`இந்த வீட்டைக் கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா’’ என்று அப்பா ராஜமன்னாரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரும், ‘`நீங்கள் கேட்டா கொடுத்துடுறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி திடீரென்று வாங்கியதுதான் இந்த வீடு. இது என்னுடைய வீடாக இருக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். குடும்பத்துக்குள் கருத்துவேறுபாடு வந்தபோதுகூட, ‘`இந்த வீடு கமலுக்குத்தான் போக வேண்டும்’’ என்று முடிவு செய்தார். அதற்காக அப்பா, சகோதரர்கள் உட்பட இந்த வீட்டில் அவர்களுக்கான பங்குகளை  எனக்கு விற்றனர். ‘`எப்ப எனக்குப் பணம்  கொடுக்குற’’ என்று நச்சரித்து அதட்டி பணத்தை வாங்கியவர் பிறகு, அதை நான்காகப் பிரித்து எங்களுக்கும், மீதியை உறவினர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

கடமையை முடித்துவிட்டவராக, `‘நான் தனியாவே இருந்துக்குறேன்’’ என்று இங்குதான் இருந்தார். அவர் இருக்கும்போது, வீட்டை மாற்றியமைக்கக்கூட யோசிப்பேன். ஏனெனில், லேசாக இடித்தால்கூட, ‘வெளியே போ’ என்று சொல்லும் சமிக்ஞையாக அவர்    எடுத்துக்கொள்வரோ என்ற தயக்கம். அதனால் அவர் இருந்தவரை இந்த வீடு முழுவதையும் அவருக்கே ஒதுக்கியிருந்தேன்.

ஒருமுறை, நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘மய்யம்’ பத்திரிகையில் சரிகா அவர்களை விட்டு அப்பாவை ஒரு பேட்டி எடுக்கவைத்தேன். அது, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட பேட்டி. அப்போது ராசி அழகப்பன் போன்றோர் உடன் இருந்தனர். `‘நீங்கள் காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’’ என்ற கேள்விக்கு, ‘`பார்த்திருக்கிறேன். அவர் பரமக்குடிக்கு வந்த இருமுறையும் சந்தித்திருக்கிறேன்’’ என்றார். அதுவே எனக்கு வியத்தகு செய்தியாக இருந்தது.

‘`அவர் முதல்முறை வரும்போது நான் சிறுவன். இரண்டாவது முறை வரும்போது நான் வக்கீலாகிவிட்டேன். முதல் சந்திப்பில் ஒரு வாணலியைக் கையில் நீட்டியபடி நடந்தார். அதில் எல்லோரும் சில்லறைக் காசுகளைப் போட்டனர். அப்போது என் கையில் ஒரு ஓட்டைக் காலணா மட்டுமே இருந்தது. அதைப் போட்டுவிட்டு அவரின் முழங்கையிலிருந்து முன்கை வரை ஒரு தடவு தடவினேன். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. 

ஆனால், நான் வக்கீலான பிறகு காந்தியின் அருகில் போகமுடியவில்லை. அவரை, தள்ளி நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களெல்லாம் நனைந்து விட்டது. ‘காலணா போட்டு விட்டு அன்று கையைத் தொட்டதற்குப் பதிலாகக் காலைத் தொட்டிருக்கலாம். இவரைப் பார்த்ததும் அன்று ஒன்றுமே தோணாமல் போய்விட்டதே. இந்தக் கிழவன் நம்மை ஏமாற்றிவிட்டாரே என்று தோன்றியது’’ என்றார்.

காந்தியின் மீது, காந்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த விடாப்பிடியான பிடிப்பு அப்பாவுக்குக் கடைசி நாள் வரை இருந்தது. டிரினிட்டி நர்ஸிங் ஹோமில் அவரைச் சேர்த்திருந்தோம். தினமும் போய்ப் பார்ப்போம். அன்று பட்டுச்சட்டை வேட்டி கொண்டு போயிருந்தேன். அந்தத் துணி உடுத்தி அவரை நான் பார்த்ததே கிடையாது. அவர் அணிந்தது அனைத்துமே கதராடைகள்தாம். ‘`என் சந்தோஷத்துக்காக இன்னைக்கு ஒருநாள் மட்டும் இதைப் போட்டுக்கங்க. போட்டுவிடச் சொல்றேன்’’ என்றேன். ‘`முடியாது’’ என்பதுபோல் தலையை ஆட்டினார்.  `‘உங்க பையன் சந்தோஷத்துக்குத்தானே கேக்குறேன்’’ என்றேன். ஆக்சிஜன் குழாயை வாயிலிருந்து எடுக்கச் சொன்னவர், ‘`எனக்கு வசதி இருந்தும் நான் கதர் போட்டுக்குறேன். ஆனா, வசதி இல்லாம, கதருக்குக்கூட வழியில்லாம இருக்கிறவங்க இங்க ஏகப்பட்டபேர் இருக்காங்க. முதலில் அவங்க எல்லோரும் பட்டுச்சட்டை வாங்கி உடுத்திக்கிற அளவுக்கான வசதியைக் கொடு, பிறகு நான் போட்டுக்குறேன்’’ என்றார்.  கண்கலங்கிவிட்டேன். ஆம், அவர் அணிந்த கதர், தன்னால் இயலாததாலோ, காந்திக்குக் காட்டுவதற்காகவோ போட்டுக்கொண்டது அல்ல. அது எளிமையின் அடையாளம். சுதந்திரப்போரின் அடையாளம். அகிம்சையின் அன்றைய ஓர் உன்னதக் கேடயம்.

இப்படி அப்பாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கூடவே ராமநாதபுரமும் சேர்ந்தே நினைவுக்கு வருவது உண்டு. தவிர நான் மிகவும் மதிக்கும் மனிதர் கலாம் அவர்கள் அதே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். அட்வகேட் ஜெனரல் பராசரன் அவர்களின் மாமனார் என் சொந்த சித்தப்பா. அதாவது என் அப்பாவின் தம்பி. அவருக்கு அப்துல் கலாம் அவர்களின் குடும்பம் மிக நெருக்கம்.

ஜெயகாந்தன் அவர்களை என் வாழ்க்கையில் மொத்தமாக ஏழெட்டுமுறைதான் சந்தித்திருப்பேன். ஆனால், என் மிக முக்கியமான ஆளுமைகளில் அவரும் ஒருவர். அதேபோலதான் சிவாஜி சாரை நான் அடிக்கடி சந்தித்துப் பேசியதாக ஒரு தோற்றம் உண்டு. இதேபோல்தான் பாலசந்தர் சாரிடமும். ‘`இந்த உறவு எந்தக் காரணத்தைக்கொண்டும் முறிந்துவிடக்கூடாது’’ என்கிற பதற்றத்தால், ‘`கமல் ஏன் வரலை’’ என்று கேட்பதுபோல் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. இப்படி கலாம் அவர்களுடனும் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால், ஆக்கப்பூர்வமான எண்ணங்களால் இணைந்திருந்தோம்.

கலாம் அவர்களின் ப்ரொஃபைல் பெரிதாவதற்கு முன்பே, ஒரு சயின்டிஸ்டாக அவரைப்பற்றி சுஜாதா அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் ஜனாதிபதியான பிறகு ஊரே அவரைப்பற்றி பேச ஆரம்பித்தது.‘நம்ம கலாம் எளிமையான மனிதர்’ என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஒருமுறை விமானப் பயணத்தில் அவருடன் இரண்டரை மணிநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எல்லா நல்ல, பெரிய மனிதர்களைப் பற்றியும் பாதிதான் வெளியில் வரும். என்னதான் விளம்பரப்படுத்தினாலும் சிறப்பான, சொல்லாத குணங்கள் எவ்வளவு கொட்டிக்கிடக்கின்றன என்று தெரியும். அதை நான் அன்று கலாம் அவர்களிடம் கண்டேன்.

அதற்குப்பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவருடைய வீட்டுக்கு வரச்சொல்லி அவரின் குடும்பத்தார் பலமுறை என்னை அழைத்திருக்கின்றனர். அன்று அப்படிப் போகவேண்டிய வாய்ப்புகளை எல்லாம் இழந்து விட்டேன். ஆனால், இம்முறை நானாக ஏற்படுத்திக்கொண்டாவது செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆம், அங்கிருந்து, அவரின் இல்லத்திலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்க வேண்டும் என நினைக்கிறேன்.

``அங்குபோய் என்ன செய்யப்போகிறீர்கள்?’’ என்று சிலர் கேட்கலாம். கலாம் அவர்களுக்குப் பல கனவுகள் இருந்தன. அதேபோன்ற கனவுகளைக் கொண்டவர்களில்  நானும் ஒருவன். நல்ல தமிழகத்தை விட்டுச் செல்லவேண்டும் என்ற கனவுதான் அவருக்கு. அதே எண்ணம்தான் எனக்கும். அதை நோக்கித்தான் நகர்கிறேனே தவிர விமர்சனம் பண்ணிக்கொண்டே இருப்பது மட்டுமே என் முழுநேர வேலையன்று. மக்களின் மேம்பாடுதான் என் நோக்கம்.

p104a_1516192370.jpg

‘`கமல்,  சோ மாதிரி ஒரு தேர்ந்த விமர்சகர்’ என்று என்னை அடையாளப்படுத்துகிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டும் இல்ல, இறங்கி வேலை செய்ய வந்தவன். நான் ஒரு நடனக் கலைஞன், நான் சுப்புடு அல்ல. அதற்காக அவர்களை  நான் கிண்டலடிப்பதாக நினைக்கவேண்டாம். அதுவேறு, இதுவேறு. நான் மக்களின் தெண்டன். அதுதான் என் முதல் அடையாளம். மக்களின் விமர்சகன் அல்ல. மக்கள் பண்ணும் தவறுகளில், எனக்கும் பங்கு இருக்கிறது. அதேபோல் அவர்கள் கொள்ளும் வெற்றிகளில் பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

வரி கட்டுவதில் முதல் இடம்  மகாராஷ்டிராவுக்கும் இரண்டாவது இடம் தமிழகத்துக்கும் இருக்கிறது. ‘`இங்க வரி வசூல் பண்ணிட்டு அதை வடநாட்டு முன்னேற்றத்துக்கு பிரிச்சு கொடுக்குறாங்க’’ என்று சிலர் சொல்கிறார்கள். கூட்டுக் குடும்பம் என்றால் அப்படித்தானே இருக்கும். அண்ணன் சம்பாத்தியத்தை வேலையில்லாத தம்பிகளுக்கு பகிர்ந்தளிப்பது நம் வழக்கம்தானே. அதை நான் குறைசொல்லவில்லை. ஆனால், அண்ணன் கொடுக்கிறார் என்பதால் ஏமாளி என்று நினைத்து அவரை பட்டினிப்போட்டுவிடக்கூடாது. இந்தப் பகிர்தல் சமீப காலமாக சரிவர நடக்காததுபோன்ற எண்ணம் எனக்கு உள்ளது.

அதற்கு முக்கியமாக, நாம் உணரவேண்டியது, திராவிட இயக்கம் ஏதோ கெட்ட வார்த்தை போன்று சொல்கிறார்கள் சிலர். வேறுசிலரோ, அதைத்தவிர வேறு எதையும் பேசமாட்டோம் என்கிறார்கள். இது இரண்டுமே விமர்சனத்துக்கு உரியதுதான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரம் அல்ல. நாடு தழுவியது. அதில் மிகப்பெரிய சரித்திரமும் ஆந்த்ரோபாலஜியும் இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. உங்கள் சாயலில் என்னால் பீகாரில் ஓர் ஆளை காட்ட முடியும். அதற்குக் காரணம் திராவிடம் என்பது அங்கிருந்து வருகிறது. அதற்காக அதை அழிக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேவையின்றி தலையில் தூக்கிவைத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. அது நம் அடையாளம்.

அதை தென்னிந்தியா முழுவதும் கொண்டாடினால் இப்போது நாம் சொல்லும் இந்த பாரபட்சங்கள் இல்லாமல் போய்விடும். ஒட்டுமொத்தமாக  ஒருங்கே  ஒலிக்கும் கோரஸாக இங்கிருந்து டெல்லிவரை பேச முடியும். சந்திரபாபு நாயுடு அவர்களும், பினராயி விஜயன் அவர்களும், சந்திரேசேகர ராவ் அவர்களும், சித்தராமையாவும் திராவிடர்கள்தான். தமிழன் மட்டும்ததான் திராவிடன் என்று உரிமை கொண்டாட வேண்டியது இல்லை. சந்தோஷமாக வெவ்வேறு மொழி பேசுபவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். இது என் கருத்து. இந்தக் கருத்து இன்னும் வேர் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை. அப்படி நினைக்க ஆரம்பித்தால் நமக்கு பல பலங்கள் கூடும்.

p104b_1516192345.jpg

தென்னாடுடைய சிவன் என்பதில் எந்த அவமானமும் இல்லையே. எல்லா ஊர்களிலும் இருக்கிறான் என்கிற பெருமைதான் தெரிகிறது. திராவிடமும் அப்படித்தான், சிவன்போல. அதற்காக தமிழையோ மற்ற மொழிகளையோ கரைத்து ஒன்றாக்கிவிடவேண்டும் என்று சொல்லவில்லை இனம், தன்மானம், சுயமரியாதை, மொழிப்பற்று அப்படியே இருக்கவேண்டும். அதை மாற்றவேக்கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். அதைத்தான நேருவும் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார். அந்த வேற்றுமையை மாற்றிவிடக்கூடாது.

இதை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுர மண்ணிலிருந்து இந்தப் பயணத்தை பிப்ரவரி 21-ம் தேதியிலிருந்து தொடங்கலாம் என்று இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று, பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் போய்க்கொண்டிருக்கிறேன்.

``இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா?” என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு. குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அவர்களுடையது நல்ல மனம். அவை மாறிவிடாமல் இருக்கவேண்டும் என்பதே என் அவா. அதைநோக்கிய பயணம்தான் இது.  உங்களின்  ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோத்திடுங்கள். களத்தில் சந்திக்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!


https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான்!

 

கமல்ஹாசன்படம்: ஜி.வெங்கட்ராம்

 

p12aa_1516688848.jpg

`மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ம் தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே.’ ஆம், இந்தப் பயணத் திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இதுதான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, p12aaa_1516688857.jpgஅவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப்பெயரை வைத்துள்ளோம்.  ‘சஸ்பென்ஸை ஆரம்பத்திலேயே உடைத்துவிட்டீர்களே, இதைக் கட்டுரையின் கடைசியிலாவது சொல்லியிருக்கலாமே’ என்று வாசகர்கள் பலர் நினைக்கலாம். சஸ்பென்ஸ், சர்ப்ரைஸ்... சினிமாவுக்கு வேண்டுமானால் பயன்படலாம். நிஜத்தில், களத்தில் மக்கள் பணியாற்ற வந்தபிறகு அனைத்தையும் நேர்படப் பேசிவிடுவதுதானே நல்லது. 

`‘கலைஞன் என்பதால்தான் பயணத்திட்டத்துக்கு சினிமாப்பெயரா’’ என்று கேட்கலாம். இன்று யாருடையதாகவோ உள்ள தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு பிரதேசமாக மாற்றிக்காட்டுவதற்கான எங்களின் கனவே இந்த ‘நாளை நமதே’. ‘`நேற்று, இன்றெல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள்’’ என்று சிலருக்குத் தோன்றலாம். ‘`செய்வதை, சொல்லாமலேயே செய்திடலாமே’’ என்றும் சிலர் நினைக்கலாம்.

ஆனால், சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனெனில், நான் ஏதோ திட்டமே இல்லாமல் விமர்சிக்க மட்டுமே வந்தவன் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கான பதில்தான்  இந்த மீள்பார்வை. கடந்த 37 ஆண்டுகளாகச் செய்து குவித்த உதவிகளைப் பற்றிய மீள்பார்வை. அப்போது எனக்கு 23 வயசு. ரசிகனாக இருந்தவனிடம், ‘நாங்களெல்லாம் உங்கள் ரசிகர்கள்’ என்று வந்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, ‘ரசிகர்களா... எனக்கா...’ என்று அதிர்ந்தேன். சிறிதும் பெரிதுமான உதவிகளைச் செய்யச்சொல்லி அவர்களை ஒருங்கிணைத்தேன். ஒரு புள்ளியில், ‘ரசிகர்கள் என்ற பெயரில் அவர்களின் மனித மணிநேரங்கள் வீணாகக்கூடாது’ என்று முடிவெடுத்தேன்.

p12a_1516688876.jpg

என் ஒவ்வொரு ரசிகரும் வள்ளலாக உருவெடுத்தது அந்தப் புள்ளியில்தான். இன்று கொடுப்பதில் பில்கேட்ஸுக்கும் என் நற்பணி நாயகர்களுக்கும் வித்தியாசமே இல்லை என்பேன். இன்னும் சொல்லப்போனால், `தான் சேர்த்தது அனைத்தும் தனக்குப்பிறகு  தானத்துக்கு’ என்கிறார் பில்கேட்ஸ். ஆனால், இருக்கும்போதே அள்ளி அள்ளிக் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் என் நற்பணி நண்பர்கள்.

நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன்போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டு அதை அப்படியே நகலெடுத்து என் மன்றத்தின் நற்பணிகளாக மடைமாற்றினேன். ரத்ததானம், கண்தானங்கள் எல்லாம் அப்படித் தொடங்கியவைதாம். ஒருகட்டத்தில் அந்த கிளப்புகளே வியந்து,  ‘இங்கு  வந்து செயல்படுத்துங்கள்’ என்று அழைக்கும் அளவுக்கு தானத்தில் உச்சம் தொட்டோம்.

அடுத்தகட்டமாக, ‘உங்கள் ஊரில் என்ன பிரச்னைகள்’ என்று மக்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். ‘தெரு விளக்கு சரியாக எரியவில்லை’ என்பது தொடங்கி, ‘தெருவே இல்லை’ என்பது வரை விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அப்படி வந்ததில் ஒன்றுதான், ‘சாக்கடை அடைத்துக்கொள்வதால் அதைக் கடந்து பிள்ளைகளால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதைச் சரிசெய்து தரமுடியுமா’ என்ற ஒரு வேண்டுகோள்.

நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்த நற்பணி மன்ற நிர்வாகிகள், ‘இடுப்பளவு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யணும்’ என்றும் ‘பிள்ளைகள் போக அதன்மீது பாலம் கட்டணும்’ என்றும் இருவேறு யோசனைகளை முன்வைத்தனர். ‘பாலம் கட்டுகிறோம் என்று அணில் விளையாட்டு விளையாட முடியாது. அணிலும் வராது. மனிதர்கள் நாம்தான் செய்யவேண்டும்’ என்றேன். அடுத்தடுத்த நாள்களில் வந்த சம்பந்தப்பட்ட நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி ஒரு போட்டோவைக் காட்டி, ‘அந்தச் சாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டோம்’ என்றார்.

p12b_1516688890.jpg

இடுப்பளவு சாக்கடையில் வரிசையாக கழிவுகளை ஏந்திய பக்கெட்டுகளுடன் நின்ற நற்பணிக் காட்சியைப் பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன. பக்கெட்டில் அள்ளி வீசியே அந்தச் சாக்கடையைச் சுத்தம் செய்த அவர்களின் சகிப்புத்தன்மை கொண்ட அந்த நற்பணி நடந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. வாழ்க்கையில் பார்த்த, பாதித்த அந்த விஷயத்தைத்தான் ‘நம்மவர்’ படத்தில் பயன்படுத்திக்கொண்டேன். வழக்கமாக சினிமாவை மக்கள் வாழ்க்கையில் பிரதிபலிப்பார்கள். நாங்கள் செய்ததை சினிமாவில் பயன்படுத்திக்கொண்டோம்.

நண்பர்களின் இத்தகைய நற்பணி என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றன. அந்த வரிசையில் என் கண், உடலுறுப்புகளை என் மகள்களைக்கொண்டு தானத்துக்கு எழுதித்தரவைத்தேன். மகள்களை எழுதித்தரவைத்ததற்கு அன்று நடந்த ஒரு நிகழ்வுதான் காரணம். பெயர் சொல்ல விரும்பவில்லை, நான் சொன்னதைக் கேட்டுக் கண்தானம் செய்துவிட்டார் நற்பணி மன்ற நண்பர். ஆனால், அகால மரணமெய்தியவரின் கண்களை தானமளிக்க அவரின் தாய் ஒப்பவில்லை. ‘பிள்ளையே போச்சு, இப்ப கண்ண வேற தோண்டுறீங்களே’ என்று சொல்லியிருக்கிறார். என்னென்னமோ சொல்லிப்பார்த்தார்கள். நேரம் போய்க்கொண்டே இருந்தது. எனக்குத் தகவல் சொன்னார்கள். வண்டி எடுத்துக்கொண்டு விரைந்தேன். ஏனெனில், விழிப்பு உணர்வு பெரிதாகாத அந்தச் சமயத்தில் தானத்தை இழந்தால் அதன்மீதான நம்பிக்கை போய்விடும் என்பதால்தான் அந்தப் பதற்றம்.

‘உன்மேல எவ்வளவு பிரியமா இருந்தான். அந்தப் புள்ளையே போச்சே. அவனை உன்னால திருப்பித்தர முடியுமா?’ என்றார் அந்தத் தாய். ‘வேறொரு கண் வெச்சிடுவாங்கம்மா’ என்றேன். ‘அது பார்க்கிற கண் இல்லையே’ என்றார். ‘அதன்மூலம் வேறொருத்தர் பார்ப்பாரும்மா’ என்றேன். ‘என் பிள்ளையைத் திருப்பித் தருவியா’ என்றார் திரும்பத்திரும்ப. ‘கொடுத்துட்டா...’ என்றேன். அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். ‘அந்தக் கண்ணுக்குப் பதிலா வைக்கப்போறதும் போலிக் கண்தான். அதேபோல உங்களுக்குக் கிடைக்கப்போறதும் நிஜப்பிள்ளை இல்லை. நான் இருக்கேன். ஆமாம், எனக்குக் கண்களைக் கொடுங்க, நான் உங்களுக்குப் பிள்ளையா இருக்கேன்’ என்றேன். கட்டிப்பிடித்துக்கொண்டு கதறியவர், மகனின் கண்களை தானமளிக்கச் சம்மதித்தார்.

அன்று நான் சொன்ன அந்த சந்தோஷ வார்த்தையில் உருகிய அந்தத் தாய், அதே அன்பில், ‘என் பிள்ளை அங்க எப்படி இருக்கான்’ என்று இன்றும் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார். அந்தத் தாய், ‘செலவுக்குக் கொடு’ என்றோ, ‘என் பிள்ளை என்றாயே, என்ன உதவி பண்ற’ என்றோ இதுநாள்வரை கேட்டதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், பெரும் செல்வந்தனைவிட ஒரு ரூபாய் மட்டுமே வைத்துள்ள ஏழை, தைரியமாக அதிலிருந்து 25 பைசாவை எடுத்துத் தந்தான், தந்துகொண்டே இருக்கிறான். அதைக் கற்றுத்தந்தது என் நற்பணி மன்றத்தார்தாம். அப்படிப்பட்ட ஏழை வள்ளல்களால் கட்டமைக்கப் பட்டதுதான் என் நற்பணி இயக்கம்.

இப்படி அடுக்கடுக்கான தேவைகளும், எங்களுக்கான கனவுகளும் நிறைய உண்டு. அதை நோக்கிய பயணத்தில் அங்கும் இங்குமாக நின்று நிறைய செய்துகொண்டிருந்ததை இப்போது நடுவில் மையத்தில் நின்று செய்யப்போகிறோம். ஆமாம், நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக, எங்கள் பானையில் எவ்வகைச்சோறு இருக்கிறது என்பதைப் பதம் பார்ப்பதற்கு ஏதுவாக முதல்கட்டமாகச் சில கிராமங்களைத் தத்தெடுக்கவிருக்கிறோம். ஒரு சோறு பதம்போல இது, நாங்கள் செய்துகாட்டும் எங்களுடைய செயல்திறனுக்கான அடையாளத் திட்டம்.

இது என் நம்பிக்கை மட்டுமன்று, எங்களுள் விதைக்கப்பட்ட நம்பிக்கை. இந்தியாவின் பலம் கிராமங்களில்தான் இருக்கிறது என்று காந்தியார் விதைத்தது. நகரத்தை நோக்கிப் புலம்பெயர்பவர்கள் எல்லாம் தேவைக்காகத்தான் நகர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகள் அவர்களைச் சென்றடையும்பட்சத்தில், அவர்கள் நகரம் நோக்கி நகரமாட்டார்கள். அப்படிப்பட்ட   முன்மாதிரி கிராமங்களை நிஜமாகவே உருவாக்கிக்காட்டுவதற்கான முனைப்புதான் இது.

ஆனால், ‘மாவட்டத்துக்கு ஒன்று, மாநகராட்சிக்கு ஒன்று’ என்று ஏகப்பட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அகலக்கால் வைக்கப்போவது இல்லை. முதலில் ஒரே ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் ஹார்வேர்டு பல்கலைக்கழத்துக்குப் பயணமாகும் நான், அங்கு பேசப்போவதும் இதைப்பற்றித்தான். ஆம், நான் போவதே, திறமைகளைச் சேர்க்கத்தான். அவர்களை என் தமிழகக் கிராமங்களை நோக்கி அழைக்கப்போகிறேன். எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. ஆனால், அந்த உதவி நமக்கு அதி அவசியம். நிச்சயம் ஆர்வத்துடன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆனால், அந்த ஆர்வம் இங்குள்ள அரசியல்வாதிகளிடம் போய்விட்டது என்றே நினைக்கிறேன். ஆகம வழிபாட்டுமுறை போல், ‘இப்படித்தான் இதைப் பண்ணவேண்டும்’ என்பதுபோல் இறுகிப்போய்விட்டார்கள். அதனால்தான் ‘ஐ வில் சேலஞ்ச் தி ஸ்டேட்ஸ்கோ’ என்று சொல்லியிருக்கிறேன். இதை மாற்றியே ஆகவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கிராமத்திலிருந்து தொடங்குவது, காந்தியாருக்குச் செய்யும் மரியாதை என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு எப்போதுமே மரியாதை இருக்கிறது. இது நாட்டுக்குச் செய்யும் மரியாதை. ஏனெனில், கிராமங்களில்தான் நம் பலமிருக்கிறது. நகரங்களில் புற்றீசல்போல் எல்லோரும் ஓரிடத்தில் அடைந்துகொண்டு  க்யூ கட்டுவது மட்டுமே மிச்சமிருக்கிறது.

சரி, கிராமத்தானுக்கு என்ன வேண்டும்? ‘ஏழு கடல் கடந்து வண்டுக்குள் இருக்கும் அரக்கனின் உயிர்’ என்று சொல்லும் பழங்கதைபோல் காடுமலை கடந்து ஏழு மலை தாண்டிப் போய்க் கற்கும் ஒரு பொருள்தான் கல்வி என்ற நிலைமாறி நவீனக் கல்வி கிடைக்க வழிவகை செய்யவேண்டும். பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்கன் பள்ளியிலும் பிரிட்டீஷ் கல்விக் கூடங்களிலும் சேர்க்கிறார்களே அந்தக் கல்வியை நம் கிராமங்களுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இதற்கான முன் விதைகளை காமராஜர் போன்றோர் விதைத்துவிட்டார்கள். அவ்வளவு ஏன் ஜஸ்டீஸ் பார்ட்டி காலத்திலேயே அந்த விதை விதைக்கப்பட்டுவிட்டது. அதை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நான் மூத்தோர்களைப் பார்த்து வியந்தும் நிற்க முடியாது; வரப்போகும் இளைஞர்களைப் பார்த்து இகழவும் முடியாது. அவர்களின் அறிவையும் இவர்களின் பலத்தையும் சேர்த்து கிராமத்துக்குள் பாய்ச்ச வேண்டும்.

p12c_1516688905.jpg

அடுத்து நல்ல குடிநீர் வேண்டும், சுற்றம் சுத்தம் சுகாதாரம் வேண்டும், கலைநயம் கொண்ட பொழுதுபோக்கு வேண்டும், வெளியேபோய் ஊர் திரும்ப நல்ல போக்குவரத்து வசதி வேண்டும், நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும்.... இப்படி அரசாங்கம் செய்யத் தவறியதை நாங்கள் செய்யப்போகிறோம். ஆம், ‘முற்றம் கோணல்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை. ஆடிக்காட்டு என்றால் ஆடிக்காட்ட வேண்டும். இப்போது நாங்கள் ஆடிக்காட்டப்போகிறோம். முதலில் ஒரு கிராமம். அதை மேம்படுத்துவதன் மூலம் கிடைக்கும் அனுபவப் பாடத்தைக்கொண்டு அடுத்தடுத்த கிராமங்களில் பணி முடிக்கப்போகிறோம்.

இந்த ‘நாளை நமதே’வுக்கான முதல் கிராமத் தேடலுக்காகச் சென்ற நம் குழுவினர், ``ஒவ்வொரு கிராமமுமே அந்த முதல் கிராமத்துக்கான `லட்சணங்களுடன்’ இருக்கின்றன’’ என்று அதிர்ச்சி சொன்னார்கள். ‘`அரசுப் பள்ளிக்கூடங்கள் பெயரளவுக்கே இயங்குகின்றன. மொத்த மாணவர்கள் 200 பேர் என்றால், தற்போதைய ஸ்ட்ரென்த் 50க்கும் குறைவே. ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகள் ஏராளம். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. முக்கியமாக, தமிழாசிரியர்கள் இல்லை’’ என்றார்கள். மொழிப்பாடம் கற்றுத்தரத் தமிழாசிரியர்கள் இல்லாமல் எதிர்காலத் தமிழகத்தை எப்படிக் கட்டமைக்கப்போகிறோம் என்ற கவலை எனக்கு. அரசு, அரசியல் மேல் நம்பிக்கை இல்லாமல் மனம் தளர்ந்து, ‘விதி, இறைவனிட்ட பிச்சை’ என்று மக்கள் சோர்ந்து உட்கார்ந்திருப்பதை உணர முடிகிறது.

மடிக்கணினியையும் கைப்பேசியையும் சாப்பிட முடியாது. ஆனால், அவைதாம் பலருக்கும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. மடிக்கணினி கொடுத்துவிட்டதாலேயே அறிவு வந்துவிடும் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அதை இயக்குவதற்கே தனி அறிவு வேண்டுமே. அது ஒரு கருவிதானே. மீன் இருக்கும் இடம் வேறு, தூண்டில் இருக்கும் இடம் வேறு எனும்போது அதைக்கொண்டுபோய்ப் போட்டு எப்படி மீன் பிடிக்கவேண்டும் என்பதைக் கற்றுத்தந்தால்தானே அவன் சுயமரியாதையுடன் சுயமாக வாழ்க்கை நடத்த முடியும்.

இவற்றையெல்லாம் மாற்றி அமைத்துக்காட்டிவிட்டால், ஒருவேளை கோபப்பட்டு, ‘ஓஹோ, ஒரு தனிமனிதனாக, தன் நற்பணி அமைப்பை வைத்துக்கொண்டு முன்மாதிரி கிராமமாக மாற்றிக்காட்டியிருக்கிறான். நாம் சர்வ வல்லமை பொருந்திய அரசு. அவனைவிட மேன்மையாகச் செய்துகாட்டுவோம்’ என்று களத்தில் இறங்கி அரசு செயல்பட்டு வென்றால், என் பணி முடிந்தது என்றே நினைத்துக்கொள்வேன். அதைவிடுத்து ட்வீட் போட்டுக்கொண்டிருப்பதில் அர்த்தமே கிடையாது. ட்விட்டரில் போட்டுப்பார்த்துவிட்டேன். ட்வீட் மழையே பொழிந்துவிட்டேன். ஆனால் பெய்வது, தோல் கனத்தில் அவர்களுக்கு உறைக்கவே இல்லை. அப்படியிருக்க நான் மழை பொழிந்து என்ன பயன்? அதனால்தான் களம்காணத் தயாராகிவிட்டேன். அதற்கான முயற்சிதான் இந்த ‘நாளை நமதே.’

ஆம், நாளை நிச்சயம் நமதே. களத்தில் சந்திப்போம், கரம் கோப்போம், தமிழகம் காப்போம்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல!” - கமல் அரசியல்

 

கமல்ஹாசன்படம்: க்ளிக்கர்ஸ் சந்தோஷ் குமார்

 

p108b_1517392755.jpg

ற்பணி மன்றத்தாருடன் கடந்த 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். அவர்களின் ஆற்றலை நானறிவேன். ஆனால், சமீப காலங்களாக மாணவர்கள் என்னுடன் செய்யும் விவாதம் வியக்கவைக்கிறது. இது, அவர்கள் அறிந்ததை நானும் நானறிந்ததை அவர்களும் இரு தரப்பும் அறிந்ததை இந்தச் சமூகத்துக்கும் கடத்தும் ஆகச்சிறந்த கற்றல். இந்தக் கலந்துரையாடலில் பின்பற்றும் ஒரு முறையைத்தான் என் புதுப்பயணத்திலும் பின்பற்றவிருக்கிறேன்.

 ‘`அந்தக் கற்றல் கலந்துரையாடலை விகடனில் சொல்லப்போகிறேன்’’ என்றதும், `‘ஒன்று, மற்ற கட்சியினர் பின்பற்றுவார்கள். அடுத்து, அந்தக் கூட்டங்களில் குழப்பங்களை விளைவிப்பார்கள். அதனால் சொல்லாதீர்கள்’’ என்கிறார்கள் நண்பர்கள்.  நல்லனவற்றை, நற்பணிகளை எடுத்தாள்வதில் தவறும் இல்லை, குற்றமும் இல்லை. அப்படி எங்கள் மன்றத்தாரின் நற்பணிகளைப் பார்த்துத் தங்கள் பாதையை வடித்துக்கொண்ட, அதையே வாழ்க்கையாக்கிக்கொண்ட பலரை  நானறிவேன். அவையெல்லாம் பெருமையல்ல, என் கடமை. 35 வயதில் ‘தேவர் மகன்’ படத்தில் நானெழுதிய ‘விதை நான் போட்டது’ என்ற வசனத்தையே இந்த 63வது வயதில் துணைக்கு அழைக்கிறேன்.

ஆம், தலைவர்கள் பேச, அதைத் தொண்டர்கள் கேட்க... என்றுள்ள வழக்கமான இன்றைய அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலிருந்து விலகி, எங்கள் பொதுக்கூட்ட மேடைகளைக் கலந்துரையாடல்  களங்களாக  மாற்றப்போகிறோம். கூட்டம், கூடுதல் என்பது இருதரப்புக்கும் பயனுள்ள இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். இப்போதுள்ள ஒருவழிப்பாதை ஒழிந்துபோகட்டும் என்று சொல்லவில்லை. எனக்கும் தனியாக நின்று பேசவும் கலந்துரையாடவும் பிடிக்கும். ஆனால், தான் ஒருவன் மட்டுமே பேசி மற்றவர்கள் அனைவரையும் கேட்கவைக்கும் அளவுக்கான விஷய ஞானம் எனக்கு இன்னும் வாய்க்கப்பெறவில்லை என்பது என் கருத்து. பிப்ரவரி 21-ல் இருந்து தொடங்கவுள்ள கூட்டங்களை அப்படித்தான் வகுத்துள்ளோம்.

p108a_1517392770.jpg

அதற்காக... கேட்க, பதிலளிக்க ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மக்களை மேடையேற்றிவிட முடியாது. கேள்விகேட்க முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி முன்பதிவு செய்துள்ளவர்கள் கேள்விகளைக் கேட்பார்கள். நான் பதிலளிப்பேன். என்னிடம் பதிலில்லாதபட்சத்தில், பதிலறிந்தவர்கள்  சொல்வார்கள். என் ஐயங்களை, கேள்விகளை நானும் கேட்பேன். எதிர்க்கட்சியினரையும் எதிரியாக நினைப்போரையும் சாடுவது மட்டுமே பொதுக்கூட்ட மேடை என்றும், அதுதான் இன்றைய தொலைக்காட்சி விவாதங்களின் கருப்பொருள் என்றும் ஆகிவிட்ட இந்தச் சூழலில், அந்தப் பொதுக்கூட்டங்களுக்கான மாண்பை மீட்க வேண்டும். அது நம் கடமை என்பது என் எண்ணம். இதன்மூலம் மக்களும் அவர்களின் பிரதிநிகளும் பயனுற வேண்டும் என்பது என் அவா. இது ஏதோ நான் புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் இதற்குக் காப்புரிமை கோர விரும்பவில்லை. இது பெரியார் போன்ற நம் முன்னோர் அளித்த கொடைமுறை.

ஏற்கெனவே நம் கால்களை நனைத்த நீர், கால் எடுத்து மீண்டும் வைப்பதற்குள் கால் மைல் தூரம் கடந்திருக்கும். இதைத்தான் ஒரே ஆற்றில் இருமுறை கால் நனைக்க முடியாது என்பார்கள். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இதை நாம் நேரம், காலத்துக்கும் சொல்லலாம். விவேகமுள்ளதும் அற்றதுமான இந்த வேகச் சூழலில் யாராவது தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவோம் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? கிரைண்டர்களும் மிக்ஸிகளும் இலவசமாக வீட்டுக்கு வரும் என்று நினைத்திருப்போமா? அந்த வரிசையில் மதுவையும் அத்தியாவசியப் பட்டியலில் சேர்த்து டோர் டெலிவரி என்ற பெயரில் வீட்டுக் கதவைத் தட்டும் என உணர்ந்திருப்போமா? பாம்பு சட்டையை உரிப்பதுபோல் இவற்றைக் கண்டும் காணாமல் நாமும் கடக்கப் பழகிவிட்டோம்.

இனப்படுகொலை என்பது அதிகார துஷ்பிரயோகத்தால் துப்பாக்கியால் சுட்டுத்தான் நிகழ்த்தப்படவேண்டும் என்பதில்லை. உதாசீனத்தால்கூட அது நிகழ்த்தப்படலாம். அதுதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயி தற்கொலைகளை மறந்தோம். அந்தச் சாவு உங்கள் வீட்டுக்கு வரும்போதுதான் வலி புரியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சாபம் தந்த பிறகும் சவமாகச் சரிந்து கிடந்து கடக்கும் வித்தை பழகினோம்.
கல்வித் தரம் குறைகிறது, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும் குறைகிறது, ஓராசிரியர் பள்ளி என்பதுபோல் ஒரு மாணவர் பள்ளி என்று வரும் சூழல் வெகுநெருக்கத்தில் இருக்கிறது என்ற உண்மை உணர்ந்தும் வழக்கமாகவே இருக்கப் பழகினோம். மணலைத் தோண்டி எடுத்து விற்று, ஆற்றுப் படுகைகளை எல்லாம் படுபயங்கரப் பள்ளத்தாக்குகளாக மாற்றும்போதும் யாருக்கோ நடப்பதுபோல் பாராமுகம் காட்டினோம். ஆனாலும் அரசு பரிபாலனம் சரிவர நடக்கவில்லை, இதற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்கிறோம்.

1957 வரை பத்து ஆண்டுகள் சுதந்திரப் போராட்ட மனநிலையில் அதே ஒழுங்கோடு இயங்கி வந்த அரசு அடுத்த அரைநூற்றாண்டுக் காலம் தடம் மாற யார் காரணம்? நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நாம் நம் கடமையை மறந்தோம் என்பதற்கான நினைவூட்டல். வாக்களிப்பதை   ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் சடங்கு என மனம் மாறியதால் வந்த வேதனை இது. இவற்றைத் தான் மாணவர்களுடனான கலந்துரையாடலில் உணர்த்தி வருகிறேன்.

p108c_1517392784.jpg

நீ என்ன பெரியாரா, கலந்துரையாடல் நடத்த என்று கேட்கலாம். மனித குலம் தன்மானத்தோடு வாழ, தான் முன்னத்தி ஏராக இருப்போம் என்று தன் சிறு பிராயத்தில் பெரியார் நினைத்திருப்பாரா? காஞ்சியில் இருக்கும்போது அண்ணாதான் அறிந்திருப்பாரா? நாடகம் நடத்திக்கொண்டு இருக்கும்போது எம்.ஜி.ஆர்தான் எண்ணியிருப்பாரா? திருவாரூரில் முரசொலிக்கு எழுதிக்கொண்டு இருக்கும்போது தான் கலைஞராவோம் என்பது அவருக்குத் தெரியுமா? இப்படி ஒருவருக்கொருவரை வழித்தடமாகக் கொண்டு வந்ததைப்போல் நம் இளைஞர்களிலிருந்து தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதே என் பேரவா. ஆம், அவர்கள்தாம் என் தலைவர்கள், நான் அவர்களை ஒருங்கிணைக்கும் பிரதிநிதி மட்டுமே.

நான் சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்கிற தோற்றத்தை உண்டாக்க, சிலர் முயற்சி செய்கிறார்கள். இந்து விரோதி என்கிறார்கள் சிலர். வீட்டிலேயே பக்தர் சந்திரஹாசனை வைத்துக்கொண்டு நான் எப்படி இந்து விரோதியாக இருந்திருக்க முடியும். என்னிடம் வேலை செய்த டிஎன்எஸ் என்கிற பெரியவர் பூஜை புனஸ்காரங்கள் என்று அலுவலகத்தையே ஆலயமாக்கி பக்தியில் திளைப்பவர், மிகப்பெரிய திறமையாளர். அவரை எப்படி நான் விரோதியாகப் பார்க்க முடியும். அவ்வளவு ஏன், சுயமாக சிந்திக்கும் வயது வரும்வரை என் பேச்சைக் கேள். அதன்பிறகு உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றேன், மகள் ஸ்ருதியிடம். ஆனால் இன்று அவள் தீவிர பக்தை. அதற்காக அவளை நான் வெறுக்க முடியுமா? அது அவரவர் ஏற்றுக்கொண்ட வழிமுறை. நான் இந்து விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன். நான் யாரின் விரோதியும் அல்ல. என் நற்பணி மன்றத்தாரிடமும் இதையேதான் பின்பற்றுகிறேன்.

காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களையும் சமமாக பாவித்து என் ஆசானாக ஏற்று வழிநடக்கிறேன். இதற்கு என் வாழ்க்கையில் இருந்தும் என் சினிமாக்களில் இருந்தும் தொடர்ந்து உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே  இருப்பதில்  விருப்பமில்லை. இப்படிச் சொல்வதால் வாக்கரசியலுக்காகக் கமல் மாற்றிப் பேசுகிறார் என்று சிலர் விதண்டாவாதம் பேசலாம். இது வாக்கரசியல் அல்ல, பகுத்தறிவுப் புலம்பல்.

இதைத்தான் 2000-ம் ஆண்டில் தெனாலி படப்பிடிப்புக்காகக் கொடைக்கானல் கார்ல்டன் ஹோட்டலில் தங்கியிருந்தபோது கவிதையாக எழுதினேன். உங்களின் மீள்பார்வைக்காக அது...

பகுத்தறிந்தார் புலம்பல்
______________________

கிரகணாதிக்ரணங்கட்கு அப்பாலுமே _ஒரு
அசகாய சக்தியுண்டாம்

ஆளாளுமதை ஆய்ந்து பலவுரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காதாம்

அதைப்பயந் ததையுணர்ந் ததைத்துதிப் பதுவன்றி
பிறிதேதும் வழியில்லையாம்

விளைகின்ற வினையெல்லாம் முன்செய்த தென்றது
விதியொன்று செய்வித்ததாம்

அதைவெல்ல முனைவோரை சதிகூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்

குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேர்க்கும் திருமூலமாம்

குஷ்ட குஹ்யம் புற்று சூலை மூலம் என்ற
குரூரங்கள் அதன் சித்தமாம்

புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புது ஜென்மம் தந்தருளுமாம்

கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதிசேர்க்குமாம்


"ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாடலாம்

நேர்கின்ற நேர்வெல்லாம் நேர்விருக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்

பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணிதந்தது காக்குமாம்

நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி
அல்குலின் சினை சேர்த்ததும்

அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்

பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்

பிள்ளையின் கறியுண்டு பக்தருக்கருளிய
பரிவான பர பிரும்மமே

உற்றாரு, முறவினரும் கற்று கற்பித்தவரும
உளமாரத் தொழுசக்தியை

மற்றவர் வய்யு பயங்கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்

ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி – அறிவை
ஆத்திகச் சலவையுஞ்செய்

கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று
கற்பூர ஆரத்தியை

தையடா ஊசியிற்தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு

உய்தடத் தந்ததை உதாசீனித்தபின்
நய்வதே நன்றெனின் நய்.

இந்திய அரசியலமைப்பின் உத்தேச வரைவை காந்தியார் அவர்களின் முன் வைத்தபோது, படித்துப் பார்க்கிறேன் என்று சொல்வதற்கு முன், சாமானியன்கூட இதன்மூலம் நியாயம் பெற முடியும்தானே என்று கேட்டாராம். ஆம், நம் அரசியலமைப்பு அப்படித்தான் இருக்கிறது. அப்படியான ஒரு கொள்கையைத்தான் எங்களின் கட்சிக்குக் கட்டமைக்கவேண்டும் என்கிற முனைப்போடு கூட்டங்கள் நடத்தி, கொள்கை விளக்கங்கள், விவாதங்கள் செய்துவருகிறோம்.

அது சில விஷயங்களில் இறுகியும் சில விஷயங்களில் இளகும் தன்மையுடனும் இருக்கவேண்டும் என நினைக்கிறோம். ஏனெனில், இசங்கள் என்பது அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றாற்போல், மக்களின் தேவையுணர்ந்து மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

அன்றைய தினம் நன்றாக நினைவிருக்கிறது, ராஜேஸ்வரி திருமண மண்டபம். பக்கத்து இருக்கையில் எம்ஜிஆர். அன்று அவர் உச்சநட்சத்திரம். நான் வளரும் கலைஞன். ஆனால், நம்பிக்கையளிக்கும் நாயகன் என்று பேரெடுத்துவிட்டேன். ``நீயெல்லாம் வரணும், தாண்டிப்போகணும்’’ என்றார்.  ``உங்களவுக்குப் பெரிய படங்கள் பண்ணுவது சிரமம்’’ என்றேன். ``என்னையெல்லாம் படியா நினைச்சு படிப்படியா ஏறி, தாண்டிப்போகணும்’’ என்றார். அது ஓர் உரையாடல்தான். ஆனாலும் தன்னைப் படியாகக்கொண்டு தாண்டிப்போவதை அவர் ரசிக்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம்.

அவரை நான் தாண்டிப்போகவில்லை, வேண்டுமானால் சினிமாவில் நான் முதல் மாணவனாக இருக்கலாம். அரசியலில் கடைக்குட்டியாகக்கூட இருக்கலாம். ஆனால் மாணவன். மக்களிடமிருந்து கற்று அவர்களுக்கே திரும்பச் செய்யவேண்டும் என்று நினைக்கும் மாணவப் பிரதிநிதி. உங்களின் பிரதிநிதியாக பிப்ரவரி 21-ம் தேதி நேரில் சந்திக்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல!” - கமல் அரசியல்

 

கமல்ஹாசன்படம்: க்ளிக்கர்ஸ் சந்தோஷ் குமார்

 

p108b_1517392755.jpg

ற்பணி மன்றத்தாருடன் கடந்த 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். அவர்களின் ஆற்றலை நானறிவேன். ஆனால், சமீப காலங்களாக மாணவர்கள் என்னுடன் செய்யும் விவாதம் வியக்கவைக்கிறது. இது, அவர்கள் அறிந்ததை நானும் நானறிந்ததை அவர்களும் இரு தரப்பும் அறிந்ததை இந்தச் சமூகத்துக்கும் கடத்தும் ஆகச்சிறந்த கற்றல். இந்தக் கலந்துரையாடலில் பின்பற்றும் ஒரு முறையைத்தான் என் புதுப்பயணத்திலும் பின்பற்றவிருக்கிறேன்.

 ‘`அந்தக் கற்றல் கலந்துரையாடலை விகடனில் சொல்லப்போகிறேன்’’ என்றதும், `‘ஒன்று, மற்ற கட்சியினர் பின்பற்றுவார்கள். அடுத்து, அந்தக் கூட்டங்களில் குழப்பங்களை விளைவிப்பார்கள். அதனால் சொல்லாதீர்கள்’’ என்கிறார்கள் நண்பர்கள்.  நல்லனவற்றை, நற்பணிகளை எடுத்தாள்வதில் தவறும் இல்லை, குற்றமும் இல்லை. அப்படி எங்கள் மன்றத்தாரின் நற்பணிகளைப் பார்த்துத் தங்கள் பாதையை வடித்துக்கொண்ட, அதையே வாழ்க்கையாக்கிக்கொண்ட பலரை  நானறிவேன். அவையெல்லாம் பெருமையல்ல, என் கடமை. 35 வயதில் ‘தேவர் மகன்’ படத்தில் நானெழுதிய ‘விதை நான் போட்டது’ என்ற வசனத்தையே இந்த 63வது வயதில் துணைக்கு அழைக்கிறேன்.

ஆம், தலைவர்கள் பேச, அதைத் தொண்டர்கள் கேட்க... என்றுள்ள வழக்கமான இன்றைய அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலிருந்து விலகி, எங்கள் பொதுக்கூட்ட மேடைகளைக் கலந்துரையாடல்  களங்களாக  மாற்றப்போகிறோம். கூட்டம், கூடுதல் என்பது இருதரப்புக்கும் பயனுள்ள இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். இப்போதுள்ள ஒருவழிப்பாதை ஒழிந்துபோகட்டும் என்று சொல்லவில்லை. எனக்கும் தனியாக நின்று பேசவும் கலந்துரையாடவும் பிடிக்கும். ஆனால், தான் ஒருவன் மட்டுமே பேசி மற்றவர்கள் அனைவரையும் கேட்கவைக்கும் அளவுக்கான விஷய ஞானம் எனக்கு இன்னும் வாய்க்கப்பெறவில்லை என்பது என் கருத்து. பிப்ரவரி 21-ல் இருந்து தொடங்கவுள்ள கூட்டங்களை அப்படித்தான் வகுத்துள்ளோம்.

p108a_1517392770.jpg

அதற்காக... கேட்க, பதிலளிக்க ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மக்களை மேடையேற்றிவிட முடியாது. கேள்விகேட்க முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி முன்பதிவு செய்துள்ளவர்கள் கேள்விகளைக் கேட்பார்கள். நான் பதிலளிப்பேன். என்னிடம் பதிலில்லாதபட்சத்தில், பதிலறிந்தவர்கள்  சொல்வார்கள். என் ஐயங்களை, கேள்விகளை நானும் கேட்பேன். எதிர்க்கட்சியினரையும் எதிரியாக நினைப்போரையும் சாடுவது மட்டுமே பொதுக்கூட்ட மேடை என்றும், அதுதான் இன்றைய தொலைக்காட்சி விவாதங்களின் கருப்பொருள் என்றும் ஆகிவிட்ட இந்தச் சூழலில், அந்தப் பொதுக்கூட்டங்களுக்கான மாண்பை மீட்க வேண்டும். அது நம் கடமை என்பது என் எண்ணம். இதன்மூலம் மக்களும் அவர்களின் பிரதிநிகளும் பயனுற வேண்டும் என்பது என் அவா. இது ஏதோ நான் புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் இதற்குக் காப்புரிமை கோர விரும்பவில்லை. இது பெரியார் போன்ற நம் முன்னோர் அளித்த கொடைமுறை.

ஏற்கெனவே நம் கால்களை நனைத்த நீர், கால் எடுத்து மீண்டும் வைப்பதற்குள் கால் மைல் தூரம் கடந்திருக்கும். இதைத்தான் ஒரே ஆற்றில் இருமுறை கால் நனைக்க முடியாது என்பார்கள். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இதை நாம் நேரம், காலத்துக்கும் சொல்லலாம். விவேகமுள்ளதும் அற்றதுமான இந்த வேகச் சூழலில் யாராவது தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவோம் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? கிரைண்டர்களும் மிக்ஸிகளும் இலவசமாக வீட்டுக்கு வரும் என்று நினைத்திருப்போமா? அந்த வரிசையில் மதுவையும் அத்தியாவசியப் பட்டியலில் சேர்த்து டோர் டெலிவரி என்ற பெயரில் வீட்டுக் கதவைத் தட்டும் என உணர்ந்திருப்போமா? பாம்பு சட்டையை உரிப்பதுபோல் இவற்றைக் கண்டும் காணாமல் நாமும் கடக்கப் பழகிவிட்டோம்.

இனப்படுகொலை என்பது அதிகார துஷ்பிரயோகத்தால் துப்பாக்கியால் சுட்டுத்தான் நிகழ்த்தப்படவேண்டும் என்பதில்லை. உதாசீனத்தால்கூட அது நிகழ்த்தப்படலாம். அதுதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயி தற்கொலைகளை மறந்தோம். அந்தச் சாவு உங்கள் வீட்டுக்கு வரும்போதுதான் வலி புரியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சாபம் தந்த பிறகும் சவமாகச் சரிந்து கிடந்து கடக்கும் வித்தை பழகினோம்.
கல்வித் தரம் குறைகிறது, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும் குறைகிறது, ஓராசிரியர் பள்ளி என்பதுபோல் ஒரு மாணவர் பள்ளி என்று வரும் சூழல் வெகுநெருக்கத்தில் இருக்கிறது என்ற உண்மை உணர்ந்தும் வழக்கமாகவே இருக்கப் பழகினோம். மணலைத் தோண்டி எடுத்து விற்று, ஆற்றுப் படுகைகளை எல்லாம் படுபயங்கரப் பள்ளத்தாக்குகளாக மாற்றும்போதும் யாருக்கோ நடப்பதுபோல் பாராமுகம் காட்டினோம். ஆனாலும் அரசு பரிபாலனம் சரிவர நடக்கவில்லை, இதற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்கிறோம்.

1957 வரை பத்து ஆண்டுகள் சுதந்திரப் போராட்ட மனநிலையில் அதே ஒழுங்கோடு இயங்கி வந்த அரசு அடுத்த அரைநூற்றாண்டுக் காலம் தடம் மாற யார் காரணம்? நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நாம் நம் கடமையை மறந்தோம் என்பதற்கான நினைவூட்டல். வாக்களிப்பதை   ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் சடங்கு என மனம் மாறியதால் வந்த வேதனை இது. இவற்றைத் தான் மாணவர்களுடனான கலந்துரையாடலில் உணர்த்தி வருகிறேன்.

p108c_1517392784.jpg

நீ என்ன பெரியாரா, கலந்துரையாடல் நடத்த என்று கேட்கலாம். மனித குலம் தன்மானத்தோடு வாழ, தான் முன்னத்தி ஏராக இருப்போம் என்று தன் சிறு பிராயத்தில் பெரியார் நினைத்திருப்பாரா? காஞ்சியில் இருக்கும்போது அண்ணாதான் அறிந்திருப்பாரா? நாடகம் நடத்திக்கொண்டு இருக்கும்போது எம்.ஜி.ஆர்தான் எண்ணியிருப்பாரா? திருவாரூரில் முரசொலிக்கு எழுதிக்கொண்டு இருக்கும்போது தான் கலைஞராவோம் என்பது அவருக்குத் தெரியுமா? இப்படி ஒருவருக்கொருவரை வழித்தடமாகக் கொண்டு வந்ததைப்போல் நம் இளைஞர்களிலிருந்து தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதே என் பேரவா. ஆம், அவர்கள்தாம் என் தலைவர்கள், நான் அவர்களை ஒருங்கிணைக்கும் பிரதிநிதி மட்டுமே.

நான் சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்கிற தோற்றத்தை உண்டாக்க, சிலர் முயற்சி செய்கிறார்கள். இந்து விரோதி என்கிறார்கள் சிலர். வீட்டிலேயே பக்தர் சந்திரஹாசனை வைத்துக்கொண்டு நான் எப்படி இந்து விரோதியாக இருந்திருக்க முடியும். என்னிடம் வேலை செய்த டிஎன்எஸ் என்கிற பெரியவர் பூஜை புனஸ்காரங்கள் என்று அலுவலகத்தையே ஆலயமாக்கி பக்தியில் திளைப்பவர், மிகப்பெரிய திறமையாளர். அவரை எப்படி நான் விரோதியாகப் பார்க்க முடியும். அவ்வளவு ஏன், சுயமாக சிந்திக்கும் வயது வரும்வரை என் பேச்சைக் கேள். அதன்பிறகு உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றேன், மகள் ஸ்ருதியிடம். ஆனால் இன்று அவள் தீவிர பக்தை. அதற்காக அவளை நான் வெறுக்க முடியுமா? அது அவரவர் ஏற்றுக்கொண்ட வழிமுறை. நான் இந்து விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன். நான் யாரின் விரோதியும் அல்ல. என் நற்பணி மன்றத்தாரிடமும் இதையேதான் பின்பற்றுகிறேன்.

காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களையும் சமமாக பாவித்து என் ஆசானாக ஏற்று வழிநடக்கிறேன். இதற்கு என் வாழ்க்கையில் இருந்தும் என் சினிமாக்களில் இருந்தும் தொடர்ந்து உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே  இருப்பதில்  விருப்பமில்லை. இப்படிச் சொல்வதால் வாக்கரசியலுக்காகக் கமல் மாற்றிப் பேசுகிறார் என்று சிலர் விதண்டாவாதம் பேசலாம். இது வாக்கரசியல் அல்ல, பகுத்தறிவுப் புலம்பல்.

இதைத்தான் 2000-ம் ஆண்டில் தெனாலி படப்பிடிப்புக்காகக் கொடைக்கானல் கார்ல்டன் ஹோட்டலில் தங்கியிருந்தபோது கவிதையாக எழுதினேன். உங்களின் மீள்பார்வைக்காக அது...

பகுத்தறிந்தார் புலம்பல்
______________________

கிரகணாதிக்ரணங்கட்கு அப்பாலுமே _ஒரு
அசகாய சக்தியுண்டாம்

ஆளாளுமதை ஆய்ந்து பலவுரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காதாம்

அதைப்பயந் ததையுணர்ந் ததைத்துதிப் பதுவன்றி
பிறிதேதும் வழியில்லையாம்

விளைகின்ற வினையெல்லாம் முன்செய்த தென்றது
விதியொன்று செய்வித்ததாம்

அதைவெல்ல முனைவோரை சதிகூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்

குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேர்க்கும் திருமூலமாம்

குஷ்ட குஹ்யம் புற்று சூலை மூலம் என்ற
குரூரங்கள் அதன் சித்தமாம்

புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புது ஜென்மம் தந்தருளுமாம்

கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதிசேர்க்குமாம்


"ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாடலாம்

நேர்கின்ற நேர்வெல்லாம் நேர்விருக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்

பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணிதந்தது காக்குமாம்

நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி
அல்குலின் சினை சேர்த்ததும்

அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்

பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்

பிள்ளையின் கறியுண்டு பக்தருக்கருளிய
பரிவான பர பிரும்மமே

உற்றாரு, முறவினரும் கற்று கற்பித்தவரும
உளமாரத் தொழுசக்தியை

மற்றவர் வய்யு பயங்கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்

ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி – அறிவை
ஆத்திகச் சலவையுஞ்செய்

கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று
கற்பூர ஆரத்தியை

தையடா ஊசியிற்தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு

உய்தடத் தந்ததை உதாசீனித்தபின்
நய்வதே நன்றெனின் நய்.

இந்திய அரசியலமைப்பின் உத்தேச வரைவை காந்தியார் அவர்களின் முன் வைத்தபோது, படித்துப் பார்க்கிறேன் என்று சொல்வதற்கு முன், சாமானியன்கூட இதன்மூலம் நியாயம் பெற முடியும்தானே என்று கேட்டாராம். ஆம், நம் அரசியலமைப்பு அப்படித்தான் இருக்கிறது. அப்படியான ஒரு கொள்கையைத்தான் எங்களின் கட்சிக்குக் கட்டமைக்கவேண்டும் என்கிற முனைப்போடு கூட்டங்கள் நடத்தி, கொள்கை விளக்கங்கள், விவாதங்கள் செய்துவருகிறோம்.

அது சில விஷயங்களில் இறுகியும் சில விஷயங்களில் இளகும் தன்மையுடனும் இருக்கவேண்டும் என நினைக்கிறோம். ஏனெனில், இசங்கள் என்பது அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றாற்போல், மக்களின் தேவையுணர்ந்து மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

அன்றைய தினம் நன்றாக நினைவிருக்கிறது, ராஜேஸ்வரி திருமண மண்டபம். பக்கத்து இருக்கையில் எம்ஜிஆர். அன்று அவர் உச்சநட்சத்திரம். நான் வளரும் கலைஞன். ஆனால், நம்பிக்கையளிக்கும் நாயகன் என்று பேரெடுத்துவிட்டேன். ``நீயெல்லாம் வரணும், தாண்டிப்போகணும்’’ என்றார்.  ``உங்களவுக்குப் பெரிய படங்கள் பண்ணுவது சிரமம்’’ என்றேன். ``என்னையெல்லாம் படியா நினைச்சு படிப்படியா ஏறி, தாண்டிப்போகணும்’’ என்றார். அது ஓர் உரையாடல்தான். ஆனாலும் தன்னைப் படியாகக்கொண்டு தாண்டிப்போவதை அவர் ரசிக்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம்.

அவரை நான் தாண்டிப்போகவில்லை, வேண்டுமானால் சினிமாவில் நான் முதல் மாணவனாக இருக்கலாம். அரசியலில் கடைக்குட்டியாகக்கூட இருக்கலாம். ஆனால் மாணவன். மக்களிடமிருந்து கற்று அவர்களுக்கே திரும்பச் செய்யவேண்டும் என்று நினைக்கும் மாணவப் பிரதிநிதி. உங்களின் பிரதிநிதியாக பிப்ரவரி 21-ம் தேதி நேரில் சந்திக்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா?”

 

 

கமல்ஹாசன்

 

p10c_1517896615.jpg

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவர்களுடன் ஒவ்வொரு முறையும் உரையாட நேரும்போதெல்லாம் மொழி, கலாசாரம், கலை, கிராமங்களுடனான பழைய நினைவுகள்... இப்படி அவர்களின் தமிழக நேசத்தை உணர முடியும். Absence make the heart grow fonder என்று ஆங்கிலத்தில் p10b_1517896628.jpgசொல்வார்களே, அப்படி இங்குள்ளவர்களைவிடப் புலம்பெயர்ந்தவர்கள் தமிழகம்மீது உணர்வோடு இருப்பது புரியும். நாடு கடந்தும் நாட்டைப் பற்றிய சிந்தனையிலேயே வாழும் அந்த நம்மவர்களின் உணர்வு, இன்று தமிழ்நாட்டுக்குள் இருக்கும் தமிழர்களுக்கும் வந்துவிட்டது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டின் புகழ், எங்கோ தள்ளிப்போய்விட்டது என்கிற பதற்றம். அதனால், இங்குள்ள, புலம்பெயர்ந்த தமிழர்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் யோசிக்க ஆரம்பித்திருப்பது நல்ல தொடக்கம்.

தமிழ்நாட்டின் மீதான இந்தப் பாசத்தையும் பற்றையும் செயலாக மாற்ற வேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான என் வேண்டுகோள். அதைப்பற்றிப் பேசுவதற்குத்தான் நான் இப்போது அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஹார்வேர்டு மட்டுமல்ல, எங்கெல்லாம் பேச முடியுமோ, அங்கெல்லாம் போய் என் குரலை அவர்களுக்கு எட்டவைப்பேன்.

அவர்களின்பால் எனக்கு நிறைய நம்பிக்கை. காரணம் சினிமா விஷயமாக வெளிநாடு போகும்போது ‘ஏதாவது செய்யணும். நீங்க ஏன் இதைப்பற்றி ஒரு படம் எடுக்கக்கூடாது’ என்பார்கள். இப்படி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என்னுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்த நிறைய புலம்பெயர்ந்த தமிழர்களை எனக்குத் தெரியும். ‘தமிழகத்துக்கு நல்லது செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்காதா’ என்று அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

P10A_1517896600.jpg

நிறைய மலையாளிகள் கேரளாவிலிருந்து வேலைதேடி வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அது ஒரு சிறிய மாநிலம். மக்கள்தொகை பெருகும்போது அவர்கள் புலம்பெயர வேண்டிய அவசரமும் அவசியமும் இருக்கிறது. வேலைவாய்ப்புகள் எங்கெங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் போவது என்பது அவர்களுக்குப் புதுப்பழக்கம் இல்லை. கேரளாவின் பிரதான வருமானமே, இப்படிப் புலம்பெயர்ந்த கேரளிகள்மூலம் கிடைப்பதுதான். பஞ்சாப் சர்தார்களும் அப்படித்தான். சுதந்திரத்துக்கு முன்பே சென்னைக்கு வந்து மொழி தெரியாத ஊரில் தொழில் தொடங்கி நம் கண்ணெதிரே பெரிய நிறுவனங்களைக் கட்டமைத்துக் காட்டியிருக்கிறார்கள்.

இப்படித் திரைகடலோடி திரவியம் தேடுவதும் நாடு விட்டு நாடு போய் வியாபாரம் தொடங்குவதும் தமிழர்களுக்கும் புதிதல்ல.  ஆனால், அவர்கள் அங்கிருந்து பணத்தைக் கொண்டுவருவதைவிட முக்கியமானது, தங்களுடைய அறிவை இங்கு கொடுக்க வேண்டும், அதைப்பற்றிதான் நான் ஹார்வேர்டில் பேசப்போகிறேன். அங்கு அறிவுப்பிச்சை கேட்கத்தான் போகிறேன். அவர்களின் அந்த அறிவுப் பங்களிப்பு, நம்மை இன்னும் பலமுள்ளவர்களாக மாற்றும். ஐடியாவை வைத்துதானே சினிமா உட்பட அனைத்திலும் காசு பண்ணிக்கொண்டிருக்கிறோம். அப்படி அவர்கள் நல்ல ஐடியாக்களுடன் வரும்பட்சத்தில் காசுபணமெல்லாம் கண்டிப்பாக பின்னால் தானாகவே வந்து சேரும்.

‘இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று அவர்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும், பாய்ந்து அதை ஏற்றுக்கொண்டு நம் மாநிலத்துக்குத் தோள்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுதாக இருக்கிறது. அவர்கள் நமக்குத் தரும் அறிவுப்பிச்சை என்ன என்று தெரியாமல், ‘இதைத்தான் அவர்களிடம் கேட்கப்போகிறேன்’ என்று இப்போதே என்னால் அவசரக்கோலம் போட்டுவிட முடியாது. அவர்களிடம் நான் கேட்ட அறிவுப்பிச்சை, அதற்கு அவர்கள் அளித்த பதில்... அதை அடுத்த வாரம் பகிர்கிறேன்.

எண்ணூர் அனல் மின் நிலையக் கழிவுகளைப் பார்க்க நாம் போய்வந்ததும், அந்த மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மக்களுடன் பேசினார். அப்போதே நான் அந்த ஆட்சியருக்கு நன்றி சொன்னேன். அது நல்லதுதான். ஏனெனில், ‘நாங்கள் மட்டும்தான் நல்லவை செய்வோம்’ என்று இதற்கு உரிமைப்பட்டயம் எதுவும் கிடையாதே. ‘`நம் ஊரில் கொள்கைக்கும் திட்டத்துக்குமே ஒரு குழப்பம் இருக்கிறது சார்’’ என்றார் நண்பர் ஒருவர். அவர் சொல்வது சரியானது. நல்லது செய்யவேண்டும் என்பது கொள்கை. இப்படியும் செய்யலாம், அப்படியும் செய்யலாம் என்று போடுவது திட்டம். திட்டங்களைச் செயல்படுத்தும் முறை மாறும்போது கொள்கை மாறிவிட்டதாகப் பலரும் பதறுகிறார்கள். மக்களுக்கு எது நல்லதோ அந்த நலத்திட்டங்களை நல்லவற்றுக்காகச் செய்ய வேண்டும் என்பதை ஆங்கிலத்தில் Guiding Principles என்பார்கள். அந்தக் கொள்கை எல்லோர்க்கும் பொதுவானது, அது எனக்கு மட்டும் சொந்தம் என்று சொல்லமுடியாது. எங்கள் கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட திட்டங்களின் மினியேச்சர் மாடல்தான்  இந்த கிராமத் தத்தெடுப்பு.

கிராமங்களை நோக்கிப்போகிறோம் என்ற குரல் பரவலாகக் கேட்க ஆரம்பித்ததும், நாம் தத்தெடுக்க எத்தனிக்கும் கிராமங்களை எல்லாம் அரசு அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்காக நம் ஆட்கள் யாரும் பதற்றப்படவில்லை, ஆனால், ‘நாம போயிட்டு வர்ற கிராமங்களுக்கெல்லாம் நம்மை ஃபாலோ பண்ணி அதிகாரிகள் வந்து பார்வையிட்டுட்டுப் போறாங்க சார்’ என்று எனக்குச் சுட்டிக்காட்டினார்கள். இதுவரை அதிகார வர்க்கத்தின் பார்வை படாத கிராமங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளோம் என்பது நல்லதுதானே. போராட்டம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் இன்றி நல்லவற்றை நிகழ்த்திக்காட்டியிருக்கிறோம் இல்லையா, அந்த வகையில் சந்தோஷம்.

p10d_1517896680.jpg

படம்: ப.சரவணக்குமார்

வேலை நிறுத்தம் என்றதும் சமீபத்தில் நடந்துமுடிந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நினைவுக்கு வருகிறது. நியாயமாகத் தங்களுக்கு வந்து சேரவேண்டியவை சேரவில்லை என்று ஆராய்ச்சிமணி அடித்ததற்குத் தண்டனை பெற்றிருக்கிறார்கள். அதைத் தந்தது அரசு என்பதைவிட, அதில் ஒரு முதலாளித்தனம்தான் தெரிகிறது. வேலைநிறுத்தம் செய்த ஏழு நாள்களுக்கான கூலியை நிறுத்தியது ரொம்பவே அதிகப்படியான தண்டனை. ஏற்கெனவே பென்ஷன் கொடுக்காமல் வைத்திருந்ததால் பலரின் வாழ்க்கை கெட்டுப்போய்விட்டது. இப்போது வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ஏழு நாள் சம்பளப் பிடிப்பு என்பது அநியாயம். அவர்கள் நல்ல உழைப்பாளிகள். எப்படியானாலும் அதை உழைத்துச் சம்பாதித்துவிடுவார்கள். ஆனால், தொழிலாளர்கள் அவ்வப்போது அடிக்கும் ஆராய்ச்சிமணிகளுக்கு அரசு அவ்வப்போது செவிசாய்த்திருந்தால் இந்த வேலை நிறுத்தமே நடந்திருக்காது, பொதுமக்களும் நம் தொழிலாளர் தோழர்களும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

இதுமாதிரியான விஷயங்களை அரசு அறிவுபூர்வமாக அணுகி, அதற்கான தீர்வுகளைக் கண்டறியலாம். இதையும் நாங்கள் மனதில் வைத்து அறிஞர்கள், விஞ்ஞானிகள் என்று பலரையும் சந்தித்து, அவர்களின் உதவியை நாடப்போகிறோம். ‘நீ யார் அதைச் செய்ய’ என்று கேட்டால், என் பெயர் தமிழன். இதைச் செய்யவில்லையென்றால் வாய்ச்சொல் வீரனாகிவிடுவேன். இப்படியான சிக்கல்களுக்கான தீர்வையும், புதுத்திட்டங்களின் வரவையும் உருவாக்கவேண்டும் என்பது என் மிகப்பெரிய அவா.

‘மாற்றுக்கட்சிகளிலிருந்து உங்கள் கட்சியில் சேர நிறைய பேர் அணுகுகிறார்கள் என்கிறார்கள். அப்படி p10e_1517896700.jpgயாரெல்லாம் உங்களிடம் பேசிவருகிறார்கள்?’ - போகும் இடமெல்லாம் இந்தக் கேள்வியும் என்னைத் துரத்துகிறது. ஆமாம், பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘தண்ணீரில் காலை விட்டால் குளிருமோ’ என்று அப்படியும் இப்படியுமாகப் பதம் பார்ப்பவர்களின் பெயர்களையெல்லாம் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்கள்பணி செய்ய இது ஒரு வாய்ப்பு என்று நினைத்து வருபவர்களும் இருக்கிறார்கள். ``இதை இப்படிச் செய்ய வேண்டும்’’ என்று என்னுடன் வாதாடுபவர்களும் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். ‘`அப்படிச் செய்தால் நல்லதுங்க. அப்படிச் செய்யலைனா நல்லதில்லைங்க’’ என்கிறார்கள் பலர். சந்தோஷமாக இருக்கிறது. அந்தமாதிரியான விவாதங்களுக்கெல்லாம் நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம் என்பதே எங்களின் தனிச்சிறப்பாக நினைக்கிறேன். `‘எனக்கு, நீங்க என்ன பண்ணப்போறீங்கனு சொல்லுங்க. ஆமாம், கொள்கைவிளக்கம் சொல்லுங்க. பொறுப்பைப் பற்றிக் கவலை இல்லை. என்ன வேலை கொடுத்தாலும் செய்கிறேன்’’ என்று சொல்லும் பலரைச் சந்திக்கிறேன். அது மனதுக்கு இதமாகவும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் உள்ளது.

ஆனால், நாங்கள் புதுச்சமையல் பண்ணிக்கொண்டிருக்கும்போது கறைபடிந்த அந்தக் கைகளையும் கொண்டுவந்து பாத்திரத்தில் ஒட்டிவிட்டுப் போய்விடுவார்களோ என்ற தயக்கமும் எங்களுக்குண்டு. அப்படிக் கறைபடிந்த கைகள் யாருடையவை என்று பார்க்கவேண்டும். அதற்காக, ஒரு கட்சியில் எல்லோருமே அப்படி இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பெல்லாம் பாராட்டப்படாமல், இன்னும் சொல்லப்போனால்  தண்டிக்கப்பட்டும் ஒதுக்கிவைக்கப்பட்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வந்தால் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், ‘நல்ல தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும்’ என்ற எண்ணம் கொண்ட அனைவருமே என் சகோதரர்கள்தாம். ‘எக்கேடுகெட்டால் என்ன’ என்று நினைப்பவர்கள் நம் விரோதிகள். தமிழர்களை மதிக்காத அப்படிப்பட்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.

ஆனால், மாற்றுக்கட்சித் தலைவர்களிடமிருந்து இந்த `என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடருக்கும், புதிய கட்சி அறிவிப்புக்கும் நிறைய பின்னூட்டங்கள். ‘முன்வைத்த காலைப் பின்வைத்துவிடாதீர்கள்.’ - இது, முதன்முதலில் வந்த பின்னூட்டம். சொன்னவர், கேரள முதல்வர் பினராயி விஜயன். என்ன அரசியல் சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்டுத் தெளிவு கொள்கிறேன். தவிர, இங்குள்ள மாற்றுக்கட்சித் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் பேசுவது, ‘`என் கட்சியில் சேருகிறீர்களா?’’ என்று கேட்பதற்காக அல்ல. அவர்களின் நல்ல அரசியல் அனுபவத்தை நான் பெறவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து உரையாடுகிறேன். அவர்களும், ‘`இது தெரியாமத்தான் வந்தாயா அரசியலுக்கு’’ என்று கேட்பதில்லை. ஆனால், இதைவிட மக்களைப் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி, பதவிக்கும் வந்து ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்கள் இங்கே பலபேர் இருக்கிறார்கள்.

‘`மக்களிடமிருந்து நிதி பெற்று இவர்கள் எப்படி கட்சி நடத்தப்போகிறார்கள்’’ என்று சில அரசியல் கட்சியினர் எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களும் அதைத்தானே பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆமாம், வேறுவழியில் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள், ‘இதுதான் கணக்கு’ என்று ரசீதுடன் சொல்லிவிட்டுப் பண்ணலாம் இல்லையா? நாங்கள் கேட்டால் அள்ளிக்கொடுப்பான் ஏழை. ஏனெனில், கொடுப்பது கடமை என நினைப்பவன் அவன். சம்பாதிப்பதில் பாதியைக் கொடுத்துவிடுவான். அவ்வளவு ஏன், சினிமா என்கிற கேளிக்கைக்கே அவ்வளவு செலவு செய்பவர்கள் அவர்கள்தாமே. ஒரு கூலித்தொழிலாளர் ஆர்வமாக சினிமா பார்க்கும் அளவுக்குப் பணக்காரர்கள் பார்ப்பதில்லை.

தங்களுக்குப் பிடித்த நடிகருக்காக ஒருநாள் கூலியை அப்படியே அள்ளிக் கொடுத்துவிடுகிறவர்கள் தனக்குப்பிடித்த தமிழகத்துக்காக என்னவெல்லாம் செய்யக்கூடும்? அவர்களின் இதயத்தைத் தொட்டால் வள்ளல்களாகிவிடுவார்கள். ஆனால், அவர்களின் தலையிலேயே நீங்கள் கைவைத்த பிறகு, ‘`நீ திருடன், என்கிட்ட இருந்துதானே திருடுற. அப்படின்னா அதில் எனக்கும் கொஞ்சம் கொடு’’ என்று அவர்கள் கைநீட்டத் தொடங்கிவிட்டனர். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

‘நீ என்ன, மக்களையே வையுற’ என்று சிலர் கோஷம் போடுகிறார்கள். என் தம்பியை, என் அண்ணனை, என் பிள்ளைகளை நான் அறிவுரை சொல்லாமல் வேறு யார் சொல்வார்கள்? நானும் எல்லா அறிவுரைகளையும் கேட்டுக்கொள்பவன்தானே? ‘`இந்த சினிமா பிடிக்கலை’’ என்று நீங்கள் சொன்னால், ‘`ஓ.கே. இனிமேல் அந்தமாதிரியான படங்கள் எடுக்கலை’’ என்கிற முடிவுக்கு வருகிறேன்தானே. அந்த முடிவுதானே கலையையே வடிவமைக்கிறது. அப்படி உங்களால் நானும், என்னால் நீங்களும் முழுமையான வடிவம் பெறும் ஒரு கற்றல் முறையாகத்தான் இதைப் பார்க்கிறேனே தவிர, இது வேறல்ல.

p10e_1517896714.jpg`‘பிப்ரவரி 21-ஐ நோக்கிய பயணம் எப்படி இருக்கிறது?’’ என்று பலரும் பல தரப்பிலிருந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எல்டாம்ஸ் சாலை வீடு கட்சி அலுவலகமாகியும், கலைஞன் கமல் அரசியல் மாணவனாகியும் வெகுகாலமாகிவிட்டது. ஏனெனில், நன்கு படித்தவர்களெல்லாம், ‘ஐயய்ய எதுக்குங்க அரசியல்’ என்று அது ஏதோ வெட்கப்படக்கூடிய தொழில்போல செய்துவிட்டார்கள். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? காந்தி, பெரியார், அம்பேத்கர், ராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ்... இது, இப்படி எத்தனை பெரியமனிதர்கள் இருந்த இடம். ஆனால், இதை ஏன் இப்படி திடீரென நடுத்தெருவில் விட்டுவிட்டோம் என்றுதான் புரியவில்லை.

‘நான் சத்தியாகிரக மூவ்மென்ட்டில் இருந்தவன்’ என்று என்றோ நடந்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் கிழவனார்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு கிழவனார் எங்கள் அப்பா. நாட்டுக்காக உழைக்கும்போது அந்தப்பெருமை இருந்தது. இந்தியத் துணியாக இருக்கவேண்டும் என்கிற ஆர்வத்தில், கோர்ட்டுக்குப் போகும்போது, அதிக விலையாக இருந்தாலும் காதியில் கோட்டு தைத்துப்போட்டுக்கொண்டு போனவர் அவர். அதில் அவருக்கு அளவில்லாப்பெருமை இருந்தது. அந்தப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும்.

‘`நீங்களும் ரஜினியும் கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதா?’’  -  படி இறங்கினாலே எங்கள் இருவரையும் சேர்த்தே துரத்துகிறது இந்தக் கேள்வி. இதற்கு ரஜினி சார், ‘`காலம் பதில் சொல்லும்’’ என்று சொல்லியிருந்தார். ‘`அதையே வழிமொழிகிறேன்’’ என்று நான் சொன்னேன். உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். நான் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவரும் கட்சியை அறிவிக்க வேண்டும். இருவரும் கொள்கை விளக்கங்கள் சொல்ல வேண்டும். அது பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். அதனால், இது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. தவிர, அது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்.

``அடுத்த படம் எப்படி இருக்கும். இதுதான் கதையாமே’’ என்று படப்பிடிப்பில் இருக்கும் எங்கள் படங்களுக்குப் பத்திரிகைகளில் வெவ்வேறு கதைகள் வரும். ‘`நல்லா இருக்குங்க. ஆனால், இதை எடுத்தால் வேறு படம்தான் எடுக்கணும். ஆனால் நான் எழுதியிருக்கும் கதை வேறு’’ என்று சொல்லியிருக்கிறேன். அதேபோல்தான் இதற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவரவர்களின் மனதில் ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு எது நல்லது என்பதைக் கொள்கைதான் முடிவு செய்யும். அதை விடுத்து, பெயர்களை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்க முடியாது. இது சினிமாவுக்கான நட்சத்திரத் தேர்வுபோல் கிடையாது. அதுவேறு; இதுவேறு.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

 

 

கமல்ஹாசன்

 

p10c_1518523212.jpg

ந்த வாரம், உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன், ‘ஒரே ஒரு கிராமத்திலே...’ பாணி கதை. அனைத்துத் தமிழகக் கிராமங்களுக்கும் பொருந்தக்கூடிய கதை. ஒரு தமிழகக் கிராமம். அதில் ஒரு விவசாயக் குடும்பம். ஆடு, மாடு, கோழி, வீட்டுக்குப் பின்னால் கொல்லை, வயல்வெளி, குளம், வாய்க்கால்சூழ் வாழ்க்கை. தன்னிறைவான குடும்பம். அதிகாலை எழுந்து வேப்பங்குச்சியில் பல் துலக்கி, நீராகாரம் அருந்தி, சூரியன் உதிக்கும் முன்பே வயல் வேலைக்குச் செல்லும் குடும்பத் தலைவன்.

p108b_1518523229.jpg

அவனை வயலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகையில் ஆடு, மாடுகளை அவிழ்த்துவிட்டு, சாணம் அள்ளி, கூட்டிச் சுத்தம்செய்து, கோழிகளைத் திறந்துவிட்டுக் குடாப்பைச் சுத்தம் செய்து, பிறகு தோப்புக்குச்சென்று விறகெடுத்து... என பரபரப்பாக இருக்கும் குடும்பத்தலைவி. வயல், தோப்பில் இருந்து நேராக ஆற்றுக்குச் சென்று சிலுசிலுவென ஓடும் சுத்தமான ஆற்றுநீரில் குளித்தெழுந்து வீட்டுக்கு வந்து பழைய சோற்றைத் துவையலுடன் சேர்த்துண்டு வாழும் மகிழ்வான இணையர்.

மனைவி கருவுறுகிறாள். பத்திய வைத்தியம். வீட்டிலேயே பிரசவம். ஆண் குழந்தை பிறக்கிறது. அடுத்தடுத்த பிரசவங்களும் வீட்டிலேயே நடக்கின்றன. வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, அக்கம்பக்கத்தார்... குழந்தைகளைப் பராமரிப்பதில் பிரச்னைகள் இருக்கவில்லை. குழந்தைகள் வளர்கின்றனர். கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சேர்க்கிறார்கள். ஆசிரியர்கள், ஆத்திசூடியையும் அறநெறியையும் தங்களின் அனுபவத்துடன் சேர்த்துப் பாடமெடுக்கிறார்கள்.

p108a_1518523244.jpg

விவசாயம் நன்றாக நடக்கிறது. வசதி வாய்ப்பு வருகிறது. குடும்பம் பெரிதாகிறது. குடிசையை இடித்துவிட்டு, மாட்டு வண்டியில் ஆற்று மணல் அள்ளி, மண்ணுடன் குழைத்துச் சற்றே பெரிய வீடாக்குகிறார்கள். இந்தச்சூழலில் புற அழுத்தங்களால் அரசின் விவசாயக் கொள்கை மாறுகிறது. ‘அமோக விளைச்சல்’ என்ற ஆசைகாட்டி, விவசாயிகள் பாரம்பர்ய விவசாயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன விவசாயத்துக்கு மாறும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நெல் என்றால் நெல்லை மட்டுமே பயிரிடு, கரும்பென்றால் காலம் முழுவதும் கரும்பையே நடு... ரசாயன உரமிடு... தங்க முட்டையிடும் வாத்தை அரசுடன் சேர்ந்து அறுவடை என்கிற பெயரில் அறுக்கத் தொடங்குகிறான் விவசாயி. நாளாக நாளாக மண் மலடாக்கப்படுகிறது. விளைச்சல் குறைகிறது. விவசாயம் பொய்க்கத் தொடங்குகிறது. இதற்கிடையில் பக்கத்து மாநிலங்களுடனான தண்ணீர் தாவா, காலம் மாறிப் பெய்யும் சமயங்களில் பொய்க்கும் பருவமழை... நீரின்றி  வெடிக்கின்றன நிலங்கள். பொதி மணலால் நிறைகின்றன ஆறுகள். ஒருகாலத்தில் நீந்திச் சென்று கடந்த அக்கரை, கால்கள் அசரக் கடக்க முடியாத அளவுக்கான தொலைதூரமாக மாறுகிறது.

சோர்வடையும் விவசாயி, வரவு-செலவு கணக்கைப் பார்க்கத் தொடங்குகிறான். ‘வாழ்வதற்கு விவசாயம் ஏற்ற தொழிலல்ல’ என்ற முடிவுக்கு வரவழைக்கப்படுகிறான். கோட்டைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த விதைநெற்களை விற்க ஆரம்பிக்கிறான். நெற்களைச் சேமித்துவைக்கப் பயன்படுத்திவந்த குதிர்களை உடைக்கிறான். பத்தாயங்களைப் பிரித்துச் சட்டங்களாக விற்கிறான்.

இவன் சோர்வடையும் சமயம் பார்த்து, வேறு சிலர் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். வெளியூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய பூமியைக் குறைவான விலைக்கு வாங்கிக் கூறுபோடுகின்றன. விவசாய நிலங்கள் முடியும் இடத்தில் தொடங்கும் சிறு நகரங்கள், கிராமங்களை நோக்கி உள்ளே வருகின்றன. அங்கு புதிய நகர்களை நிர்மாணிக்கிறார்கள். நகர்கள் பெருக, கிராமங்கள் சுருங்குகின்றன. ‘தினமும் டவுன் பள்ளிக்கு நடந்துபோய்வரச் சிரமமாக இருக்கிறது. அதனால் டவுனை ஒட்டிய புதிய நகரிலேயே இடம்வாங்கிச் செல்லலாம்’ என வயல்சூழ் வாழ்க்கையில் இருந்து, கட்டடங்கள் சூழ் நகர் வாழ்க்கையை நோக்கி நகர்கிறான் விவசாயி. பொக்லைன் இயந்திரங்கள்மூலம் மணல் அள்ளிக்கொட்டி, வாங்கிய வயல்வெளியை மட்டப்படுத்தி, வீடெழுப்புகிறான்.

ஆறுகள் அள்ளப்பட்டு அந்த மணலை வைத்து அரசியல்வாதிகளும், திடீர்ப் பணக்காரர்களும்  மாவட்டங்களின் புறநகர்ப் பகுதியெங்கும் பொறியியல் கல்லூரிகளை எழுப்புகிறார்கள். நதிகள், மணலற்றுக் கழியாகின்றன. விவசாயியின் வாழ்வாதாரத்தின் மீது எழுப்பப்பட்ட கல்லூரிகளில் வயல்வெளிகளை விற்ற பணத்தை வைத்துத் தன் மகனையும் மகள்களையும் சேர்க்கிறான் விவசாயி. அதே கல்லூரியில் கடந்தாண்டு பட்டம்பெற்ற சீனியர் மாணவன், ஜூனியர் மாணவர்களுக்கு ஆசிரியர் ஆகிறான். தான் மனப்பாடம் செய்ததை விவசாயிகளின் பிள்ளைகளின் மனதுக்கு மடைமாற்றுகிறான். அதனால் அந்தப் பிள்ளைகள் விஞ்ஞானிகளாகவும் மாறமுடியாமல், விவசாயிகளாகவும் இருக்கமுடியாமல், தமிழும் முழுமையாகக் கற்காமல், ஆங்கிலமும் அறியாமல் ஏதேதோ ஆகிறார்கள். 

இப்படி ஆதாரமாக இருந்த விவசாயம், லாபமற்ற தொழில் என்று அடுத்தடுத்த தலைமுறையால் கைவிடப்பட்டதால் ஆதரவின்றிக் கிடக்கிறது. உலகுக்கு உழவைக் கற்றுக்கொடுத்த மூத்த குடி, கையேந்தி நிற்கவேண்டிய சூழல். விவசாயம், அவற்றின் உப தொழில்கள்... எண்ணற்றவை உள்ளன. ஆனால், அவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படாமலேயே முழுமையாகக் கற்பிக்கப் படாமலேயே நாட்டு மருத்துவம்போல் அழிந்து வருகிறது.

இதுதான் கிராமப்புறங்களில் இன்றைய விவசாயத்தின், விவசாயிகளின் நிலை. ஊக்கப்படுத்த வேண்டிய வேளாண்மைத் துறையோ, அதிகாரிகளை முடுக்கிவிட்டு, ‘இத்தனை லட்சம் ஹெக்டேர் சம்பா சாகுபடி...’, ‘வறட்சி, வெள்ள நிவாரணம் இத்தனை கோடி’ என்று  ஆவணங்களில் மட்டுமே ஆட்சி செய்துகொண்டு இருக்கின்றன. தன்னிடம் உள்ள உழவுக்குத் தேவையான கருவிகளைக் கழட்டிப்போட்டுக் காயலான் கடையாக்கி, இப்படி ஒரு துறை இருக்கிறதா என்று கேள்விகேட்கும் வகையில் வைத்துள்ளது வேளாண்மைப் பொறியியல்துறை.

இன்னொருபுறம் மக்கள் இடம்பெயராமல் இருக்கக் கிராமப்புறக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அரசு, பொதுக்கழிப்பிடம், சமுதாய நலக்கூடம், நூலகம், ரேஷன் கடை... என்று டெண்டருக்காகவே கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் காரைபெயர்ந்து அரசின் லட்சணங்களை, அலட்சியங்களைப் பறைசாற்றிக்கொண்டு நிற்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுக்கழிப்பிடங்களைப் பெரியபெரிய பூட்டுபோட்டுப் பூட்டி வைத்திருப்பதில் உள்ள அரசியல் என்ன என்பதுதான் என் மிகப்பெரிய சந்தேகம். பொதுவான இடத்தில் உள்ள கழிப்பிடங்களைப் பயன்படுத்த மக்கள் சங்கோஜப்படுகிறார்கள் என்றால், ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கி ஊக்கப்படுத்தலாமே? அப்படி மானியங்கள்மூலம் அனைத்து வீடுகளிலும் ஏற்கெனவே கழிப்பிடங்கள் இருந்தால் பிறகெதற்குப் பூட்டிய பொதுக்கழிப்பிடங்கள்?

p108c_1518523260.jpg

அரசின் கல்வித்துறையோ, தான் நடத்தும் கிராமப்புறப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் போட்டிபோடுகின்றன. கட்டடங்களும் ஆசிரியர்களும் மாணவர்களை எதிர்நோக்கி அநாதையாகக் காத்துநிற்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இருக்கும் கொஞ்சநஞ்ச மாணவர்களையும் ‘இதற்கு என்ன அர்த்தம், இதைப் படிப்பதால் என்ன பயன்’ என்று சொல்லாமலேயே ‘(A+B)2 ஃபார்முலா சொல்லிக்கொடுத்துத் தலைதெறிக்க ஓட வைக்கிறார்கள். ஆமாம், இன்றைய மாணவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லித்தந்தால் அது அவனின் வாழ்க்கைக்கு எந்தளவுக்குப் பயன்பெறும் என்று சொன்னாலொழிய மற்றவை அவனுக்குத் தேவையற்றவையே. இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், செயல்முறை கற்றல் இல்லை என்றால், அந்தந்தந்த வருடப் பாடத்தை மனனம் செய்து, அந்தந்த வருடம் தேர்வில் தேறி, வருடாவருடம் வாழ்வில் தோற்பான். வெற்றிக்கான வாழ்க்கைக் கல்வியை என் கிராமத்தானுக்கு, என் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு எப்போது கற்பிக்கப்போகிறோம்?
போதாததற்குப் பல மாணவர்களுக்கு, என் விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக நிற்பது சாதி. தேர்தல் பாதைப் பயனுக்காக அதைப் பாதுகாத்து வேறு வருகிறார்கள். அதனால் சாதி மறக்க, தொழில் கற்க, தன் திறமையை உலகறிய வைக்க... பெரு நகரம் நோக்கி இடம்பெயர வேண்டிய நெருக்கடி நம் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு. அப்படி இடம்பெயரும் நாம், மந்தைபோல் பெரும் ஜனத்திரளில் மூச்சுமுட்டப்  பயணிக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகக் கிராமம் மறக்கிறோம்.

நம்முடைய இந்த மறதி ஆள்பவர்களுக்கும் வசதியாகிவிட, அவர்களும் தாங்கள் பயனுற கிராமம், விவசாயத்துக்கான திட்டங்களைப் போட்டுவிட்டு அவற்றைச் செயல்படுத்த வசதியாய் மறக்கின்றனர். ஊழலில் திளைக்கின்றனர். அரசியலே தீங்கு என இளைய சமுதாயத்தாரை எண்ண வைக்கின்றனர். கூடவே, நம் ஒற்றுமையில் வேற்றுமையை ஏற்படுத்தவேறு முனைகின்றனர்.

இப்படி, அரை நூற்றாண்டுக்கான கேள்விகளைக் கேட்டுவிட்டு நான் ஓய்ந்துபோவேன் என்று நினைத்தார்கள். இவர்களை நானறிவேன் என்பதால், என் கேள்விகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கிவிட்டேன். அதன் முதல்படிதான் என் அமெரிக்கப் பயணம். புலம்பெயர்ந்த தொழில்முனைவோருடன் கலந்துரையாடல், அவர்களின் அறிவை, தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தல், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் உரை... என இந்தப் பயணத்தை என் கிராமங்களை நோக்கியதாகவே அமைத்துக்கொண்டேன்.

கலிஃபோர்னியா மாகாணம், சனிவேலில் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளும் தொழில்நுட்பமான ப்ளூம் பாக்ஸைக் கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரைச் சந்தித்தேன். ஸ்ரீதர், அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தின் தலைவராக இருந்து, மார்ஸ் ஆக்ஸிஜன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்தமான ஆக்ஸிஜன் தயாரிக்கும் திட்டத்துக்குத் தலைமை தாங்கி, அதற்கான பிரத்யேகக் கூடமும் உருவாக்கியவர். நாசா, மார்ஸ்-2011 திட்டத்தைக் கைவிட்டதும், இவர் ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டார். இதுவே ப்ளூம் எனர்ஜி உருவாகக் காரணம்.

p108d_1518523274.jpg

அந்த ப்ளூம் பாக்ஸ் தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தோம். இது எதிர்காலத்துக்கான திட்டம். ‘`தமிழ்நாடும் இந்த மாதிரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதன்மை நுகர்வராக மாறும் எதிர்காலத்தை என்னால் கணிக்க முடிகிறது’’ என்கிறார் ஸ்ரீதர். இதேபோல் பேராசிரியர் கஸ்தூரி ரங்கனுடனான சந்திப்பும் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்தது.

மாவட்டம்தோறும் ஒரு கிராமம் தத்தெடுப்பது, ஆகப்பெரும் லாபம் தரக்கூடிய விவசாயம், அந்தச் சூழலை மாசுபடுத்தாத, அதையொட்டிய தொழிற்சாலைகள்... என்று கிராமத்தை வளர்த்தெடுக்கும் என் எண்ணத்தையும் அதை நோக்கிய என் அரசியல் பயணத்தையும் அறிந்த புலம்பெயர்ந்த நண்பர்கள், அதற்குப் பல வகைகளிலும் உதவிக்கரம் நீட்டுவோம் என்று உறுதியளித்துள்ளனர். அதில் ஒரு நண்பர்,  ‘`உலக நாயகன், உள்ளூர் நாயகனாகிறார்’’ என்றார். ``அந்த உள்ளூர் நாயகர்களால்தான் நான் உலக நாயகனாக அறியப்படுகிறேன்’’ என்றேன்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், உழவின்றி உலகம் உண்டா? உழவனின்றி உழவு உண்டா? ஆனால், மணலைத் தோண்டியெடுத்த ஆற்றுக்குள், பொறியியல் கல்லூரி கட்ட தோண்டிய கடைக்கால் குழிகளுக்குள், ரியல் எஸ்டேட் ஃப்ளாட் கற்கள் புதைக்கத் தோண்டிய பள்ளங்களுக்குள்... உழவையும் உழவனையும் போட்டுப் புதைக்க முயன்று கொண்டிருக்கிறோம். இந்த அரசியல்வாதிகளும் கற்றுத் தேர்ந்த அதிகாரிகளும் நினைத்தால் நம் பாரம்பர்யத்தையும் இன்றைய தொழில்நுட்பத்தையும் இணைத்துப் பிணைத்து அடுத்தகட்ட வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தலாம். மக்கள் ஆசையாசையாய் வாழ விரும்பும் பூலோகச் சொர்க்கங்களாகக் கிராமங்களைத் தரம் உயர்த்தலாம். ‘`அந்தக் கிராமத்திலா, அங்க ஃப்ளாட் கிடைப்பதெல்லாம் கஷ்டம்பா’’ என்று பேசும்வகையில் அந்த மண்ணையும் மனிதர்களையும் விலை மதிப்பில்லாதவர்களாக உயர்த்தலாம்.

ஆம், அதைநோக்கிய தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் பயணம் தொடங்கிவிட்டது. உழவுக்கு வந்தனை செய்யும் படை, ‘நாளை நமதே’ என்று கூறிப் புறப்படத் தயாராகிவிட்டது. ஆர்வம் உள்ளவர்கள், நல்லுள்ளம்கொண்டவர்கள் இணைக.  விருப்பமில்லாதவர்கள் எங்களுக்கு வழிவிடுங்கள். நாங்கள் நிகழ்த்திவிட்டு உங்களை வந்தடைகிறோம். உங்களைப் பிறகு இணைத்துக்கொள்கிறோம். ‘நாளை நமதே’.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்!”

 

 

 

p10_1519197181.jpg

ந்த வார ஆனந்த விகடன் இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது நான் கட்சி தொடங்கியிருப்பேன். மதுரையில் மாநாடு முடிந்திருக்கும். அந்தச் செய்திகளை நீங்கள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் கண்டிருப்பீர்கள். அந்தப் புகைப்படங்களுடன்கூடிய கட்டுரையாக இந்த வாரத் தொடரை எழுத வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால், நாம் தேர்ந்தெடுத்த தேதி அதற்கு இடம்கொடுக்கவில்லை. மாநாட்டுப் புகைப்படங்கள், அதன் சுவாரஸ்யங்கள், அதில் நான் பேசியதற்கான பின்னூட்டங்கள், அதற்கு என் பதில் என... அவற்றைத் தொடரின் இறுதிப் பகுதியான அடுத்தவாரம் பகிர்கிறேன்.

மூத்த அரசியல் தலைவர்கள், நண்பர்களுடனான என் சந்திப்பு பற்றி இந்த வாரம் பகிர விழைகிறேன். ‘`அடிக்கடி உங்களைப்பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்’’ என்றார், எனக்கும் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் அவர்களுக்குமான பொது நண்பர். ‘அப்படியென்றால் அவரை சந்திக்கலாமா’ தயக்கத்துடன்தான் கேட்டேன். உடல்நலக்குறைவால் ஓய்வில் இருப்பவரை ஒரு போட்டோ எடுத்துக்கொள்வதற்காக நாம்போய் தொந்தரவு செய்யக்கூடாதே என்ற தயக்கம்தான். உடனே தன் அலைபேசியை எடுத்து சேஷன் அவர்களின் வீட்டுக்கு அழைத்தார். ‘மாலை 4 மணி’ என்று உடனடியாக நேரம் முடிவு செய்யப்பட்டு அன்றே நடந்தது அந்தச் சந்திப்பு.

உட்கார்ந்திருந்தார். எனக்காகத்தான் எழுந்து உட்கார்ந்திருந்தார் என்பது புரிந்தது. நான் போய் அமர்ந்ததும், சிறிதுநேரம் என்னை அப்படியே பார்த்துக்கொண்டேயிருந்தார். ‘`உடம்புதான் இப்படி, ஆனால் மூளை நல்லா வேலை செய்யுது’’ என்று சைகையில் சொல்லிச் சிரித்தார். ‘`எங்களுக்கு அது தெரிஞ்சதுதானுங்களே சார்’’ என்றேன். ‘`வயசாகிடுச்சு. உடம்புக்கு முடியலை. இல்லைனா நானும் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன்’’ என்றார். ‘`எனக்கு இந்த வார்த்தையே போதும். நான் உங்களிடம் வாழ்த்து கேட்க வந்தேன். நீங்கள் ஒருபடி மேலே போய்விட்டீர்கள். ரொம்ப நன்றி’’ என்றேன்.

p10a_1519197204.jpg

சில நிமிடங்களுக்குப்பிறகு, ‘`சில வேலைகள் செய்துகொண்டிருக்கிறேன். நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க’’ என்றேன். அப்போது வடமொழியில் ஒரு ஸ்லோகம் சொன்னார். அவரளவுக்கு அதில் எனக்குப் பாண்டித்தியம் கிடையாது. சொல்லி முடித்தவுடன்,  ‘`தர்மத்துக்குத் தமிழ்ல என்ன அர்த்தம்’’ என்று கேட்டார். ‘அறம்’ என்றேன். ‘`அந்த அறம் பிசகிடாமப் பார்த்துக்கங்க’’ என்றவர், ‘`எல்லோரும் பட்டம் கொடுக்குறதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்குறேன்’’ என்றார். நிமிர்ந்து அமர்ந்தேன். ‘`அறம் வளர்த்த நாயகன்’’ என்றார். ‘`சரிங்க சார்’’ என்றேன்.

‘`உங்களுக்கு வேறு என்ன தேவை என்றாலும், சந்தேகம் வந்தாலும் தயங்காமல் கேளுங்கள். திரும்பவும் சொல்றேன், எனக்கு மூளை நல்லாவே வேலை செய்யுது’’ என்றார். ‘`ஆமாம்... ஆமாம்... அது இன்னும் அதே பழைய ஆள்தான்’’ என்று ஆமோதித்தார் அருகில் இருந்த அவரின் மனைவி. பிறகு அவர் ரசிக்கும் சினிமாக்கள் பற்றிப் பேசத்தொடங்கினார். அவர் நன்றாக மிருதங்கம் வாசிப்பார். ‘` ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் மிருதங்கம் வாசிச்சதுல இருந்து உன்னைப் பார்த்துட்டிருக்கேன்’’ என்றார். தவிர அவர் பேசும் மொழி, ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் வரும் காமேஷ்வரனின் மொழி. ‘`அதேபோல்தான் வீட்டில் பேசிக்கொள்வோம் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது’’ என்று சொன்னார். வாழ்த்து பெற்று வெளியே வந்தேன்.

‘‘ஒரே சாதி. அதற்காக நடந்த சந்திப்பா?’’ என்று கேட்டார் வெளியே சூழ்ந்திருந்த நிருபர்களில் ஒருவர். பிறகு, சிலர் அப்படியும் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். சேஷன் அவர்களைக் கொச்சைப்படுத்த இதைவிடப் பெரிதாக வேறெதும் தேவையில்லை. அவரை நான்போய்ப் பார்த்தது அதற்காக அல்ல. சாதிக்காகப் பார்க்கிறேன் என்றால் சாருஹாசனை அல்லவா போய்ப் பார்த்திருக்க வேண்டும்?

சந்திரஹாசன் அவர்கள் இருந்திருந்தால், நான் அரசியலுக்குப் போகிறேன் என்று தெரிந்ததும் கோபித்துக்கொண்டு போயிருப்பார். அப்படிப் போயிருந்தாலும் நான் அவரைப்போய்ப் பார்த்திருப்பேன். அப்படி நல்லவர்கள் என் குடும்பத்திலும் இருக்கிறார்கள். என் குடும்பத்தில் இல்லையே என்று பொறாமைப்படும் அளவுக்கு வெளியிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்தான் டி.என்.சேஷன். மாற்றத்துக்கான முதல் விதையாக இருந்தவரை சந்தித்ததில் எனக்குப் பெருமை.

p10b_1519197233.jpg

அடுத்து, நல்லகண்ணு ஐயா அவர்களைச் சந்தித்தேன். நான் அவரைப் பார்த்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே இருக்கிறது. அந்த குணநலத்துக்காகத்தான் அவரைப்போய்ப் பார்த்தேனேதவிர, அரிவாள் சுத்தியலுக்காகவோ, அரிவாள் கதிருக்காகவோ அவரைப் பார்க்கவில்லை. அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். `‘இது கலியுகம். முத்திடுச்சு. இப்பவும் நேர்மையா இருக்க முடியுமா?’’ என்று சொல்லும் இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து காட்டுகிறார். ‘`எவ்வளவு முத்தினாலும் தெளிவாக இருக்கலாம்’’ என்பதற்கு இவர் எவ்வளவு பெரிய உதாரணம். இயங்காமலேயே எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பதில் எவ்வித சிரமும் இல்லை. ஆனால், இவர் இயங்கியும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டே இந்த நேர்மையையும் எளிமையையும் கடைப்பிடிக்கிறார் என்பதுதான் இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

‘மொழியை எப்படி அளந்து பேசுவது?’ இது, அன்று அவரிடம் கற்ற மற்றொரு முக்கியமான பாடம். விருந்தோம்பல் செய்கிறேன் என்று தேவையற்ற முகஸ்துதி கூறவில்லை. என் அரசியல் பயணம் பற்றிக் கூறினேன். ‘`அதெல்லாம் பேசுவோம். நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள், செய்யப்போகிறீர்கள் என்று பார்த்துவிட்டு விமர்சனம் சொல்கிறேன்’’ என்றார். எவ்வளவு பெரிய முதிர்ச்சி. பிறகு அவர் எனக்கொரு புத்தகம் கொடுத்தார். நான் அவருக்கு என் ‘ஹேராம்’ திரைப்படத்தின் திரைக்கதைப் புத்தகத்தைத் தந்தேன். ‘`உங்களுக்குப் படிக்கப் பிடிக்கும்னு தெரியும். தமிழில் நீங்க படிக்காத புத்தகம் குறைவு. ஆனால், படிக்க நீங்கள் இந்தப்பக்கம் வந்திருக்க மாட்டீர்கள்’’ என்றேன். ‘`இல்லையில்லை... எப்போதாவது சினிமா பார்ப்பேன்’’ என்றார். ‘`அதற்காகத்தான் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தேன். இது நானே எழுதினது. இன்றைய காலகட்டத்தின் விமர்சனமாக அன்றைக்கு எடுத்த படம்’’ என்று சொல்லி, தந்தேன்.

‘`நல்லபடியா போய்வாருங்கள்’’ என்றார். அவர் அங்கு வரவேண்டும் என நினைத்தேன். அவரின் சக்தியை முழுவதும் தன் கொள்கைக்காக வைத்திருக்கவேண்டும் என நினைப்பவர். அதைக் கொஞ்சம் நாம் பிய்த்து எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நினைத்துதான் கேட்கவில்லை. சந்திக்க அனுமதி கொடுத்ததே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். மதுரை மாநாட்டில் நான் சொல்லும் வார்த்தைகளும் செய்யப்போகும் செயல்களும்தான் அவருடைய பாராட்டையோ, விமர்சனத்தையோ எனக்குப் பெற்றுக்கொடுக்கும். அதுதான் எங்களுக்குள் நாங்கள் முடிவு செய்துகொண்டது.

இந்த ஆசான்களைப் பார்ப்பதற்கு முன்பே, நண்பர் ரஜினி சாரை சந்தித்துவிட்டேன். அப்போது, சென்னைப் புறநகர், பூந்தமல்லியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்தத் தளத்துக்கு அருகிலேயே தன் ‘காலா’ படப்பிடிப்பில் அவர் இருந்தார். ‘`சந்திக்கலாமா, அதுவும் ரகசியமாக’’ என்று கேட்டேன். ‘`எங்கு வரலாம்’’ என்று பேசிவிட்டு, தனியாக காருக்குள் அமர்ந்து பேசினோம். நான் எடுத்த முடிவு, மற்றவர்களுக்குத் தெரியும்முன் அவருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகவே அந்தச் சந்திப்பு. ‘`அப்படியா, எப்ப முடிவெடுத்தீங்க?’’ என்று ஆச்சர்யமாகக் கேட்டார். ‘`மனதளவில் முடிவெடுத்து ரொம்பநாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான்’’ என்றேன்.

p10c_1519197252.jpg

‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக்கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக்கொண்டதில் முக்கியமான விஷயம். ஆம், ‘`ஒருவேளை எதிரும்புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்துவிடக்கூடாது. அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும்’’ என்றேன். ‘`அஃப்கோர்ஸ் கமல்’’ என்றார் அவர். முடிவெடுத்திருப்பதைச் சொல்ல அன்று சந்தித்தேன் என்றால், `‘கட்சி கட்டப் புறப்படுகிறேன்’’ என்று சொல்ல இப்போது சந்தித்தேன். ‘`வரலாமா’’ என்று கேட்டேன். ‘`சாப்பிட்டிட்டிருக்கேன். முடிச்சிடுறேன் வாங்க’’ என்றார். ஆனால், நான் போகும்போது சாப்பிட்டுக்கொண்டுதானிருந்தார். ஆம், அவ்வளவு சீக்கிரம் போய்விட்டேன். அதே புரிதலோடுதான் இருக்கிறோம், பேசுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

‘`ஆமாம்... நீங்ககூட உங்க ரசிகர்கள்கிட்ட, ‘ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசினீங்கனா எனக்குப் பொல்லாத கோபம் வரும்’ என்று சொன்னீர்கள் என்று கேள்விப்பட்டேன்’’ என்றார். ‘`ஆமாம், வசவு அரசியல் நமக்குத் தேவையில்லை. நீங்களும் அப்படித்தான் இருக்கணும் என்று நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா, நீங்க கண்டிப்பா அப்படித்தான் இருக்கீங்கனு தெரியும். இல்லாத அரசியல் மாண்பை நாம் இருக்கச்செய்ய வேண்டும். நாமளாவது அதைச் செய்வோம்’’ என்றேன். ஆமாம், நாங்கள் நினைத்திருந்தால் வாடாபோடா நண்பர்களாகவே இருந்திருப்போம். ‘நாங்கள் அப்படி இல்லை’ என்று  25 வயது இளைஞர்களாக இருக்கும்போதே முடிவு செய்துவிட்டோம்.

அரசியலைப் பற்றி பேச்சு திரும்பியது. ‘`எவ்வளவு பெரிய ஆட்கள் இருந்த இடம்’’ என்றார். ‘`நாமெல்லாம் ரொம்பச் சின்னவங்க என்று நீங்கள் நினைத்தால்கூட மக்கள் அதையெல்லாம் விரும்புகிறார்கள். அதற்குக் காரணம், யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம். அதற்குப் பெயர் வெற்றிடம் இல்லை. தாளாத பசியும் தாக்கமும். நமக்கும் கடமை இருக்கிறது. நான் ஆரம்பிச்சிடுறேன்’’ என்றேன். வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

அன்று இரவே, திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தேன். அவர் என் தமிழாசான். மாறாத அன்பும் மரியாதையும் அவர்மீது உண்டு. அந்தச் சந்திப்புக்கு ஸ்டாலின் அவர்கள்தான் ஏற்பாடு செய்தார். என்னை வரவேற்று அழைத்துச்சென்றார். என் அரசியல் பயணத்தை கலைஞரிடம் சொன்னேன். அவரின் சிரிப்பின் மூலம் என்னை வாழ்த்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். என் நண்பரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் அவர்களை மறுநாள் காலை சந்தித்தேன். கண்டதும் கட்டியணைத்துக்கொண்டார். ‘`நீங்கெல்லாம் வரணும்’’ என்றார். `‘ `கமல், ரஜினியைவிட அரசியலில் நான் சீனியர்’ என்று நீங்கள் சொன்னதாகப் படித்தேன். உண்மைதானே, அந்த சீனியரிடம் வாழ்த்து பெறவே வந்தேன்’’ என்றேன். ரசித்துச் சிரித்தார். அதே விஜியாகத்தான் இருக்கிறார் என்பதுதான் நண்பரின் பலம்.

p10e_1519197279.jpg

அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். அவர் இப்போது தூத்துக்குடியில் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இருக்கிறார். சென்னை வந்ததும் சந்திப்பார் என நினைக்கிறேன். ‘`நீங்கள் என்ன இடதுசாரிகளுடன் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்களே’’ எனக் கேட்கலாம். நான் சந்திரபாபு நாயுடு அவர்களுடனும் தொடர்பில் இருக்கிறேன். `‘நீங்க வர்றீங்களா?’’ என்று கேட்டேன். ‘`நான் சொல்கிறேன்’’ என்றார். அவரின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது. அதனால் அவருக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் இடது, வலது பார்க்கவில்லை. நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் அனைவரையும் மையத்தில் இருந்து பிரதிபலிக்க விரும்புகிறேன். அந்த மையத்தில் இருப்பதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். ஒரேயடியாக இடதாகவோ, வலதாகவோ சாய வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.

‘`கிராமத்தைத் தத்தெடுக்கிறேன்’’ என்று ஏதோ இவர்தான் சக்கரத்தைக் கண்டுபிடித்தவர் போல் பேசுகிறார். திடீரென்று அரசியல் கட்சியினரை சந்திக்கிறார். `என்னய்யா குழப்படி பண்ற’ என்று சிலருக்குத் தோன்றலாம். நான் புதிதாகக் கண்டுபிடிக்கும் அரசியல் விஞ்ஞானி இல்லை. நல்ல மாண்புகளை மீட்டெடுக்க முயற்சிசெய்யும் சாதாரணக் குடிமகன். அன்பினால் எங்கள் தோழர்கள் ‘தலைவன்’ என்று சொல்லலாம். ஆனால் உங்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்துகொடுக்கும் ஊழியன். ‘``என்னை பி.எம் ஆக்காதீர்கள். சௌக்கிதாராக்குங்கள்’’ என்றார் மோடி. இன்று பலபேர் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், நான் தலைவனே இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். ஆம், தலைமை எதற்கு, ஒரு சி.இ.ஓ போல் இருந்தால் போதுமே.

அதேபோல், ஓர் இசத்துக்குள் மாட்டிக்கொண்டு, ‘உங்கள் கொள்கை இதாச்சே, அதனால் இந்தக் கட்டத்துக்குள் நீங்கள் காலை வைக்கக்கூடாது’ என்று அசட்டுப் பாண்டி விளையாடிக்கொண்டு இருக்கக்கூடாது. நமக்கு அடி சறுக்காமல் இருக்க என்னெல்லாம் செய்யவேண்டுமோ அதைச்செய்ய வேண்டும். எல்லா இசங்களும் சமூகத்தைத் திருத்தி அமைக்கச் செய்யப்பட்டவையே. அனைத்துமே வெற்றிபெற்ற இசங்கள் என்று சொல்ல முடியாது. எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுதிய ஒரு  புத்தகம், உலகெங்கிலும் உள்ளவர்களுக்குப் பொருந்தும் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், ஈராயிரம் வருடங்களுக்கு முன் சாக்ரடீஸின் டெமாக்ரஸியும் இன்று ட்ரம்ப்பின் டெமாக்ரஸியும் ஒன்றுதான் என்றால் அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும். அது வேறு ஜந்து, இதுவேறு மிருகம்.

ரோமில் இருந்து சீசரைக் கொன்றவர்களும் ஒரு ரிபப்ளிக்தான். கிராம்வெல் மேக்னகார்ட்டாவில் தொடங்கியது ஒருவகையான டெமாக்ரஸி. அதைத் திருத்தி நம் இந்திய அரசியலமைப்பாக முந்நூற்று சொச்சம்   ஷரத்துகளிடம்  நாம் பண்ணிக்கொண்டதும் ஒரு டெமாக்ரஸிதான். ஆனால் நாம் வித்தியாசப்பட்டோம். பக்கத்தில் இருக்கும் நாடுகளிலும் டெமாக்ரஸி என்று நினைத்துதான் ஆரம்பித்தனர். ஆனால், வழி சரியாகக் கேட்டுக்கொள்ளவில்லை. திசைமாறி எங்கெங்கோ போய்விட்டார்கள். அப்படி நாம் திசைமாறிப் போகாமல் இருக்க முக்கியமான காரணம் என்று அம்பேத்கரையும் அல்லாடி கிருஷ்ணசாமி அவர்களையும் சொல்லாமல் இருக்க முடியாது. இதிலிருந்தே நம் ஊர் எப்படி இருந்தது என்று புரிகிறதல்லவா?

p10d_1519197294.jpg

‘அரசியலமைப்பில் இருக்கும் செக்யூலர் என்கிற வார்த்தையை நீக்க வேண்டும். நீக்கச்செய்வோம்’ என்று சிலர் உறுதிமொழி எடுக்கும் வீடியோ யூ டியூப்பில் வருகிறது. அரைநூற்றாண்டுக்குள் எப்படி இப்படி மாறிப்போனது? தேர்தல் ஓட்டு வேட்டைக்காக இவ்வளவு தியாகம் செய்யலாமா? இது போரைவிட மோசமானதாக இருக்கிறதே? பண்டைய போரில் இருட்டிவிட்டது என்றால் போரிடுவதை நிறுத்திவிடுவதும், ப்ராஃபட் மொகமத், போருக்கு நடுவே போரை நிறுத்திவிட்டுத் தொழுகைக்குச் சென்றதும் என்று அந்தப் போரில் இருந்த தருமம்கூட இல்லாமல், எந்நேரமும் வெட்டும் குத்தும், யார் செத்தாலும் பரவாயில்லை என்கிற இந்த அரசியல், மாற்றப்படவேண்டும் என்பதுதான் என் ஆசை.

காவியைக் கொச்சைப்படுத்துகிறார் கமல்ஹாசன் என்கிறார்கள். அது தவறு. அந்தத் தியாகத்துக்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் தேசியக்கொடியிலேயே அதுக்கான இடம் இருக்கிறது. ஆனால், கொடி முழுவதும் அதுவாகப் பரவிவிடக்கூடாது என்கிறேன். மற்றவர்களுக்கான இடமும் மரியாதையும் கொடுப்போம். அதுதானே நாம் எடுத்துக்கொண்ட உறுதிமொழி. அரசியலமைப்பிலும் அதுதானே குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் சுதந்திரத்துக்குப்பிறகு பிறந்ததால் இவர்கள் ஒரே குடும்பம் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்குள் என்ன வேறுபாடு இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருந்து ஒரே இலக்குக்காகப் போராடியிருக்கிறார்கள். காந்தியாரிடம் இந்திய அரசியலமைப்பை எடுத்துச்செல்லும்போது அம்பேத்கர் போகாமல் இருந்திருப்பாரா? அப்படிப் போகவில்லை என்றால்கூட இதை அம்பேத்கர்தான் தலைமையேற்றுச் செய்துகொடுத்திருக்கிறார் என்பது காந்தியாருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? காந்தியின் கடும் விமர்சகர் என்பது ஞாபகம் இருக்காதா? இருந்தாலும் அந்த வேற்றுமைகளை எல்லாம் தூக்கிவைத்துவிட்டு நாடு ஒன்றை மட்டுமே இலக்காகக்கொண்ட அந்தப் பெரிய மனிதர்களிடம் கற்றுக்கொண்ட பாடங்களை எல்லாம் தொலைத்துவிடக் கூடாது.

அதை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் ஒரு போஸ்ட்மேனாக என் பயணத்தைத் தொடங்குகிறேன். நாளை நமதே, நல்ல மனிதம் படைப்போம் வாருங்கள்.

- உங்கள் கரையை நோக்கி!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை!”

 

 

‘என்னுள் மையம் கொண்ட புயல்’ கருவாகி,  ‘மக்கள் நீதி மய்யம்’ -ஆக உருவாகியிருக்கிறது. மதுரையில் கடைவிரித்தேன். வாரியணைக்க ஆயிரமாயிரம் கரங்கள் வந்ததில் அளவில்லா ஆனந்தம். அது, சினிமாக் கலைஞனுடன் புகைப்படம் எடுக்க வந்த கூட்டமன்று; புதிய தமிழகம் காணவேண்டும் என்ற ஆவலில் புறப்பட்டு வந்த படை. கலாம் இல்லத்தில் தொடங்கி, மதுரை மைதானத்தில் முடித்த அந்த முழுநாளை என் எஞ்சிய மொத்தக் காலத்துக்குமான எரிபொருள் என்பேன். புது அரசியல்வாதி என்பதால் அந்த வரவேற்பில் மதிமயங்கிச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். காரணம், அது கூட்டப்பட்ட கூட்டமன்று; அழைக்காமல் வந்த அன்பலை!

பரமக்குடியில் சாலையோரக் கூட்டத்தில், தள்ளாத வயதில் கைகளை உயர்த்தி, ‘அப்பு, என்னைத் தெரியுதா?’ என்று கத்தியபடி அலைபாய்ந்துகொண்டிருந்த பெரியவரின் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு அருகே அழைத்தேன். மீண்டும்,  ‘அப்பு என்னைத் தெரியுதா?’ என்றவரின் கண்கள் நனைந்திருந்தன. ‘நான்தான்ப்பு ராமசாமி’ என்றார். என்னைத் தூக்கி வளர்த்த ராமசாமி என்ற பெரியவர் என்பது நினைவுக்கு வந்தது. ஏனெனில், நான் பரமக்குடியிலிருந்து சென்னைக்குப் புறப்படும்போது மூன்று வயது. அவரைப் பார்த்ததும் எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன. அவரைக் காருக்குள் இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டேன். ‘நீ என்னைக்கும் எனக்கு அப்புதான்’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். கட்டியணைத்துக் கொண்டார். 

p100c_1519799674.jpg

அந்த ராமசாமி என்னைத் தூக்கி வளர்த்தார் என்றால், ஈரோட்டு ராமசாமியோ என்னை வழிநடத்திக் காத்தார். அப்படி என் வளர்ச்சியில் சாதனையாளர், சாமானியர் என்று ஒவ்வொரு தமிழனின் பங்கும் இருக்கிறது. அதை  அவர்களுக்குத் திருப்பித் தரவேண்டிய தருணம் இது. அந்த அன்பின், கடமையின் வெளிப்பாடே என் பயமற்ற இந்தப் பயணம். 

மாநாட்டுக்கு முன், ‘ உங்களை அசைக்க முடியாது. ம்ம்... புறப்படுங்கள்’  என்று சொன்னவர்கள்கூட, ‘கமல், கொள்கைனு எதுவும் சொல்லலையே’ என்று கேட்கிறார்கள். இது அவர்களுக்கான பதில். கொள்கை என்பது வேறு, திட்டம் என்பது வேறு. திட்டத்தின் பட்டியலே கொள்கை என்று நினைக்கிறார்கள். அது தவறு.  மக்கள் நலம், தமிழகத்தின் வளம். இவைதாம் கொள்கை என்று வைத்துக் கொண்டால் இதை நோக்கிய பயணத்தில் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் போடலாம். அந்தத் திட்டங்கள் மாறும்போது கொள்கை மாறி விட்டதாகப் பதறவேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் நலம், தமிழக வளம் பற்றிய எங்களின் பார்வையைப் பதிகிறேன். முதலில் கிராமம்.  ‘மய்யம்’ என்றதும் டெல்லி என்று நினைக்கக் கூடாது. ஆம், மய்யத்தை நகர்த்த வேண்டும். விளிம்பருகில் கொண்டுபோனால் அதுவே மய்யமாகிவிடும். குளத்தில் கல்லெறியும் இடத்திலேதானே வட்டம் பெருகும். அந்தக் கல்லிடும் இடம் கிராமமாக இருக்க வேண்டும். அதை உணர்த்தும் வகையில் மாவட்டத்துக்கு ஒன்றென முதல்கட்டமாக நாங்கள் போகவுள்ள எட்டு மாவட்டங்களில் எட்டு கிராமங்களைத் தேர்வு செய்துள்ளோம். அதோடு இது முடிந்துவிடாது. அதன் வீச்சு அக்கம்பக்கக் கிராமங்களுக்கும் பரவும்.

இது முதல்கட்டம். எங்கள் சமையல் எப்படியிருக்கிறது என்று பார்க்க, அதன் சுவைகாட்ட ஒரு திறன் கணிப்பு. ‘இவர்களிடம் நம்பிக் கொடுக்கலாம்’ என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைக்க அவர்களுக்கு நாங்கள் காட்டும் மாதிரி. கிராம மேம்பாடு என்பது எங்கள் கொள்கை. அங்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டங்கள். இதேபோல் ‘விவசாய மேம்பாடு’ என்ற கொள்கையின்கீழ் பல திட்டங்கள் வைத்துள்ளோம். விவசாயத்தில் பல வகையான சோதனைகள் செய்யும் நண்பர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உயர்மட்டக்குழுவில் உள்ள அருணாசலம் பொறுப்பு. அவருக்கு விவசாயி என்றே பெயர் வைத்துவிட்டோம்.

அடுத்து கல்வி, வேலைவாய்ப்பு. முதலில் கல்வி. தரமான கல்வி என்பதே கொள்கை. அது கடைநிலை வரையிலும்போய்ச் சேர வேண்டும். எந்த ஊரில் இருந்து படித்தாலும் நல்ல படிப்பு என்ற நிலை வேண்டும். நாம் உலகத்தில், வேறு மாநிலங்களில் வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்கு நாம் தரத்தை உயர்த்திக்கொண்டே இருந்தால்தான் தமிழனின் மரியாதை உலகளவில் உயரும். வேலைக்குச் செல்லும் இடங்களில் நல்ல உத்தியோகம் கிடைக்க வேண்டும். நிறைய பேரைப் படிக்கவைத்தோம் என்பதைவிட நிறைய பேரை நல்ல படிப்பு படிக்கவைத்தோம் என்பதுதான் முக்கியம்.

வழக்கமாக, ‘அரசாங்க ஊழியர், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவந்தால் பள்ளிகளின் நிலை உயரும்’ என்கிறார்கள். அதுவும் ஒரு வழி. அவர்களாக விரும்பி வந்து சேரும் அளவுக்கு அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும். அதைப் பண்ணவும் முடியும் என்பது என் எண்ணம். இப்படி அரசுக் கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்த வேண்டும் என்ற கொள்கையை நோக்கிய ஏகப்பட்ட திட்டங்கள் கைவசம் உள்ளன.

முதலில் இங்கு இரண்டு விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்மீது படக்கென  இந்தி மாதிரி நீட் தேர்வைத் திணித்துவிட்டுப் போய்விட்டார்கள். ‘நாடே அதைத் தழுவும்போது நாமும் தழுவிக்கொள்ளலாமே’ என்கிறார்கள் சிலர். அது தவறு. ஏற்கெனவே இருந்த சேர்க்கைமுறையில் மருத்துவம் படித்த எங்கள் மாணவர்களின் மூலம்தான் தமிழகம் மருத்துவத்தில் உயரிய தரத்தை அடைந்துள்ளது. அதுவும் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களே இங்கு வந்து வைத்தியம் பார்த்துச்செல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறோம். பிறகெதற்கு எங்கள் வருங்கால மருத்துவர்களைச் சோதிக்க நீட்?  ஆம், ‘நீட்’டுக்கு ஆதரவு இல்லை என்பதே ‘மக்கள் நீதி மய்யத்தின்’ நிலைப்பாடு.

இதேபோல் நம் கல்வியின் தரத்தையும் வளத்தையும் நமக்கேற்றபடி உருவாக்கிக்கொள்வதே சரி. அதற்குக் கல்வி மத்தியப் பட்டியலில் அடைக்கப்படுவது தவறு. அது எங்களுக்கு இடைஞ்சல். தயவுசெய்து மத்திய அரசு, கல்வியில் பின்தங்கி இருக்கும் மாநிலத்தில் இதுபோன்ற விஷயங்களை நீட்டி முழக்கி அவர்களை மேல்நோக்கிக் கொண்டுவரட்டும். முன்னோக்கி உள்ள எங்களைப் பின்னுக்கு இழுத்துச் சென்றுவிடாதீர்கள்.

p100_1519799647.jpg

அடுத்து வேலைவாய்ப்பு. இன்ஜினீயரிங்,  மருத்துவம் என்று எல்லோரும் ஓரிடத்தை நோக்கி ஓடும் மனநிலை மாறவேண்டும். ஊரில் அனைவரும் தென்னந்தோப்பு மட்டுமே வைத்திருந்தால் மாம்பழத்துக்குப் பக்கத்து மாநிலத்தின் உதவியைத்தான் நாடவேண்டியிருக்கும். அப்படித்தான் இருக்கின்றன வேலைவாய்ப்பை நோக்கிய நம் கல்வி முறை. உலகத்தில் ஒரு வருஷத்துக்கு 9 லட்சம் இன்ஜினீயர் தேவை என்றால், அவர்களை நாம் ஒரு மாநிலத்திலிருந்துமட்டுமே உருவாக்கிவருகிறோம். ‘என் பிள்ளையைப் படிக்கவைத்துவிட்டேன்’ என்பதைக் கடமைமாதிரி பண்ணுவதுதான் அதற்குக் காரணம். சாதி முதல் அவர்களின் சாதனை நோக்கிய ஆர்வம் வரை எதையும் நாம் அவர்களைக் கேட்டுச் செய்வதில்லை.

மதுவிலக்கு என்கிறார்கள், பிறகு மறுபடியும் மதுவைக் கொண்டுவருகிறார்கள். இது என்ன விளையாட்டு என்றே தெரியவில்லை. ஆனால், பள்ளிக்கூடம் பக்கமெல்லாம் டாஸ்மாக் கடையைத் திறந்தே தீருவேன் என்று இந்த விளையாட்டை இப்படி விளையாடுவதுதான் கவலை தருகிறது. ‘எங்களுக்கு இரண்டு பெரிய மது தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை விற்க அவுட் லெட்டுகள் தேவை’ என்பதற்காகக் கடைகளைத் திறக்க, இது கார் விற்பது போன்ற வேலையன்று. பெண்களின் ஓட்டுகளை வாங்கப் ‘பூரண மதுவிலக்கு’ என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது என்பதே என் கருத்து. அப்படிப் பண்ணினால் அந்தக் கள்ளினால் வரும் கொடுமைகளைவிட பெரியதான கொலைகள் பல நடக்க ஆரம்பிக்கும்.

பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால் மாஃபியா ஒன்று உருவாகும். உலக சரித்திரத்தில் நடந்து பார்த்திருக்கிறோம். இது ரேஸ் போல இல்லை. சூதாட்டத்தை நிறுத்தலாம். ஆனால் இதை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதைக் குறைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆனால், இவ்வளவு கடைகள் தேவையில்லை. அதுவும் ஊருக்கு ஊர் விரவிக்கிடக்க வேண்டுமா என்பதுதான் என் கேள்வி. போஸ்ட் ஆபீஸ் தேடிப்போக வேண்டியிருக்கிறது. ஆனால், டாஸ்மாக் தேடவேண்டியதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

இப்படியான கொள்கைகள், அவற்றின் கீழ் வரும் ஏகப்பட்ட திட்டங்கள் அனைத்தையும்  நாங்கள் தத்தெடுக்கவுள்ள கிராமங்களில் நிகழ்த்தப்போகிறோம். இந்தமாதிரி கிராம மேம்பாட்டுக்கு அரசு இடைஞ்சல் பண்ணினால் எங்கள் மேடையை அவர்கள் வலுப்படுத்துகிறார்கள் என்றே அர்த்தம். உதவி பண்ணினால் எங்கள் மேடையில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தாம் இருக்கின்றன.

p100a_1519799621.jpg

சரியில்லை என்ற எண்ணத்தில்தானே நான் அரசியலுக்கு வந்தேன். அப்படி வந்த என்னைத் தோற்கடிக்க அவர்களுக்கு உள்ள ஒரே வழி, அனைத்தும் சரியாக வேண்டும். அப்படி நல்லது செய்தால் என் வாதமே உடைந்துபோய்விடும். அந்த நாளைத்தான் நான் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். அதற்காக இலவசம் கொடுப்பது சரியே வராது. ‘பசிக்கிறது’ என்றால், ‘வீட்டுக்கு வா, விருந்து வைக்கிறேன். ஆனால் அடிக்கடி வராதீர்கள்’ என்று சொல்வதுபோல் இருக்கின்றன உங்கள் இலவசங்கள். ஆனால், தினப்பசிக்கு மீன்பிடிக்க, விவசாயம் செய்ய, பழம் பறித்துத் தின்ன என்று... நிரந்தர ஏற்பாட்டுக்கு வழி பண்ணித்தர வேண்டும். அதைச் செய்யத்தான் நான் கிராமம் நோக்கி நடக்கிறேன்.

இதற்காக ஹார்வர்டில் ஒன்று, உள்ளூரில் ஒன்று என இரண்டு குழுக்களை அமைத்துள்ளோம். இந்த இரண்டு வல்லுநர் குழுவில் உள்ளவர்களும் எங்கள் கட்சியில் சேராத பொதுவானவர்கள். எங்கள் திட்டங்களைச் சோதித்துப்பார்த்து, இது சரி, அது தவறு என்று எங்கள் பாதைகளை வடிவமைக்க உதவுவார்கள். உள்ளூரில் நாங்கள் அமைத்துள்ள வல்லுநர் குழுவில் சமூக  அந்தஸ்தும், மக்கள் ஆதரவும் பெற்ற நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள்.  ‘தலையைக் கொடுத்துவிட்டு தப்பிக்கவியலாது’ என்பதால், இவர்கள்  தங்களைக் காப்பாற்றிக்கொள்வதோடு எங்களையும் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இவர்களின் அறிவாயுதத்துடன், எங்களின் படையை முடுக்கிவிட்டுள்ளோம். வளமான தமிழகத்துக்கான விதையை விதைத்துள்ளோம். ‘மக்கள் நீதி மய்யம்’ நிச்சயம் இலக்கை அடையும். தமிழகம் சிறக்கும்.

- நிறைந்தது.

எழுத்தாக்கம்: ம.கா.செந்தில்குமார்


“ஸ்ரீதேவி என் தங்கச்சி!”

ன்று, மணமக்களைப் பார்க்கும்போது ‘கமல் - ஸ்ரீதேவிமாதிரி இருக்காங்கல்ல!’ என்பார்கள். காதல் பாட்டு பாடுவதும் கட்டியணைப்பதுமாக எங்களைப் பார்த்திருப்பார்கள். அந்தக் கனவைக் கலைக்கக்கூடாது என்பதால் நாங்கள் இருவருமே அந்த உண்மையை மறைத்தோம். இனிமேல் எனக்கு மார்க்கெட் கெட்டுப்போகாது என்பதால் அந்த உண்மையை தைரியமாகச் சொல்லலாம். ஆமாம், பண்டிகைக் காலங்களில் கிருஷ்ணர்-ருக்மணி வேஷம் போட்டு அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் பார்க்கலாம். ‘யாரது’ என்று ருக்மணியைக்காட்டி கிருஷ்ணனிடம் கேட்டால், ‘என் தங்கச்சி’ என்பான் அந்தச் சின்னப்பையன்.இதேபோல்தான் முருகன்-வள்ளி வேஷங்களும்.  கதைப்படி இருவரும் கணவன்-மனைவி. ஆனால், வேஷம்போட்டுக்கொண்டிருப்பவர்களோ அண்ணன்-தங்கை. அப்படி அண்ணன்-தங்கைபோல்தான் நானும் சதேவியும். ‘உங்களை அப்படி ஒரு ஜோடியா கொண்டாடிட்டிருக்கிறப்ப இதெல்லாம் வெளியில போய்ச் சொல்லாதீங்க’ என்பார்கள்.

p100b_1519799590.jpg

முதல் மூன்று படங்களில், ‘ஐயய்ய, மறுபடியும் ஸ்ரீதேவி ஜோடியா’ என்ற நிலையில்தான் இருந்தேன். அவரும் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், ‘வெற்றி ஜோடி’ என்று ஆன பிறகு எங்களை யார் கேட்டது. ‘நீங்க, அவங்க’ என்று அவர்களே ஃபிக்ஸ் பண்ணிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் எல்லா ஹீரோக்களுக்குமே அவருடன் நடிக்கும் ஆசை வந்தது.

அப்போது நான் சிறுவன். என்னை நம்பி பாலசந்தர் சார் பெரிய வேலையைக் கொடுத்துவிட்டார். ஆமாம்... செட்டில் ஸ்ரீதேவிக்கு நான் காட்சிகளைச் சொல்லிக்கொடுப்பேன். ‘`ஷாட் ரெடியாகிடுச்சு, சீக்கிரம். அப்படி இல்லை, இப்படி...’’ என்று தலையில் குட்டிவிடுவேன். இப்படியெல்லாம் பண்ணக்கூடாது’ என்று பிறகுதான் உணர்ந்தேன். அப்போதே ஸ்ரீதேவி என்னை ‘`சார்’’ என்றுதான் அழைப்பார். அந்தளவு மிரட்டி வைத்திருந்தேன் என்றுகூடச் சொல்லலாம்.

`‘நான் நடிச்ச அந்தப் படம் பார்த்தீங்களா சார்’’ என்பார். `‘நல்லாவே இல்லை’’ எனும் என்னிடம், ‘`என்ன நல்லா இல்லை’’ என்று விமர்சனம் தெரிந்துகொள்வார். நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னால்கூட அப்படி ஆழமாக மனதில் ஏற்றிக்கொள்வார். என் நடிப்பில் பாலசந்தர் சாரின் சில மேனரிசங்கள் இருப்பதுபோல், எங்கள் இருவரின் நடிப்பையும் உற்று கவனித்தால்,   அண்ணன்-தங்கைபோல்தான் இருப்போம். அவரின் நடிப்பில் என் சாயல் தெரியும். அப்படி கிரகித்துக்கொள்ளும் தன்மை உள்ளவர்.

இத்தனைக்கும் ஸ்ரீதேவிக்குப் பள்ளிப்படிப்பு குறைவு. தமிழ் மட்டும் பேசிக்கொண்டிருந்த பெண். வீட்டில்கூட தெலுங்கு சுமாராகத்தான் பேசுவார். ஆனால், தெலுங்கு சினிமாவுக்குப் போகும்போது சுத்தமாகத் தெலுங்கு பேசக்கற்றுக்கொண்டார். இந்திக்குப்போகும்போது முதல் இரண்டு படங்களுக்கு அவருக்கு டப்பிங் பேசியது ரேகா. ‘`ஏன் நீ பேசலை’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். `‘பயமா இருக்கு சார். ஆக்சன்ட் சரியா இருக்கணும்ல’’ என்பார். ஆனால், மூன்றாவது படத்தில் சொந்தக்குரலில் பேசிவிட்டார். நான் கடைசியாகப் பார்க்கும்போது இங்கிலீஷில்தான் பேசினார். ஆனால் இங்கிலீஷ் சரியாகப் பேச வராத காலத்திலிருந்தே என்னைத் தெரியும் என்பதால், என்னிடம் இங்கிலீஷில் பேசும்போது வெட்கப்பட்டு வெட்கப்பட்டுதான் பேசுவார்.

இரண்டு மாதங்களுக்கு முன் பிறந்தநாள் விழாவுக்காக  அவரின்  வீட்டுக்குப் போயிருந்தோம். எல்லோரும் சாப்பிட்டபடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். வேறு ஒருவரைத் தேடி நடந்தேன். வீட்டின் ஒரு மூலையில் தனியாகத் தன் மகளை வைத்துக்கொண்டு ஏதோ நான்கு வயதுக் குழந்தையைக் கொஞ்சுவதுபோல் கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிக் கொஞ்சிக்கொண்டிருந்தார். கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதைப் பார்த்ததும் இருவருமே வெட்கப்பட்டு நாணிக்கோணி நின்றனர். ‘`ஜமாய்ங்க ஜமாய்ங்க’’ என்றபடி நகர்ந்தேன். அன்று அதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

அதைப் பார்த்ததும் ஸ்ரீதேவியை அவரின் அம்மா கொஞ்சுவதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ரீதேவிக்கு அவரின் அம்மாதான் சாப்பாடு ஊட்டிவிடுவார். ‘தாயில்லாமல் நானில்லை’ படத்தில் அவர் எனக்கு ஹீரோயின். ஆனால், தன் மடியில் உட்காரவைத்து அம்மா ஊட்டிவிடுவார். ‘`இறக்கிவிடுங்க அவளை’’ என்பேன். `‘பாவம்பா’’ என்பார் அவரின் அம்மா. ``இப்ப ஓ.கே. நாற்பது வயசுல?’’ என்பேன். `‘நான் நாற்பது வயசுலயும் இப்படித்தான் ஊட்டிப்பேன்’’ என்பார் ஸ்ரீதேவி. ‘`உனக்கு ஓகே. அவங்க இருக்கணும்ல’’ என்றேன். உடனே ஸ்ரீதேவிக்குக் கண் கலங்கிவிட்டது. அவரை சமாதானப்படுத்துவதுபோல், ‘`நான் இல்லைனா என்னப்பா, கட்டிக்கப்போறவன் உட்காரவெச்சு ஊட்டுவான்’’ என்றார் அவரின் அம்மா. அந்த  அம்மா இறந்துபோனபோது ஸ்ரீதேவி என் கையைப் பிடித்துக்கொண்டு அழுதார். ஸ்ரீதேவியின் அம்மா சொன்னதுபோல்தான் அவரை போனியும் பார்த்துக்கொண்டார். எங்குபோனாலும் கூடவே நிற்பார்.

நானும் ஸ்ரீதேவியும் முதலில் எங்கு சந்தித்தோம் என்று நினைவில் இல்லை. குழந்தை நட்சத்திரமாகப் பார்த்திருப்போம். பாலசந்தர் சார் செட்டில் பார்த்ததுதான் நினைவிலிருக்கிறது. ஸ்ரீதேவி இருக்கும்போது  இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், உடனே அவருக்கு போன்போட்டு, `‘இப்படிக் கேட்கிறார்கள், நாம் முதலில் எப்போது பார்த்தோம்’’ என்று கேட்டிருப்பேன். ஏனெனில், அவருக்கு அது நினைவிருக்கும். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பதையெல்லாம் நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். உழைத்து உழைத்து ஸ்ரீதேவியானார். ஸ்டைல், பேச்சு, நடை, உடை அனைத்துமே மாற்றிக்கொண்டார். எவ்வளவு பெரிய முனைப்பு. ஓவியம் நன்றாக வரைவார். பிறகு பாட்டுகூடக் கற்றுக்கொண்டார். கற்றுக்கொண்டால் அனைத்தும் வந்துவிடும் என்ற நம்பிக்கை.

அவருக்கு இன்ஜெக்ஷன் என்றால் பயம். ‘தாயில்லாமல் நானில்லை’ சமயத்தில் ஆஸ்பத்திரி செட்டில் கையில் ஊசியுடன் வரும் என்னையும் பார்த்தாலே பயந்து தன் அம்மா பின்னால் ஒளிந்துகொள்வார். அதையும் பார்த்தவன், இன்று இதையும் பார்க்க வேண்டியிருக்கிறதே என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

`மூன்றாம் பிறை’ படத்துக்குக் கவிஞர் சரியான பாடல் எழுதிக்கொடுத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. இன்று அந்தப்பாடல் அனைவரின் காதுகளிலும் ரீங்கரிக்கிறது. ஊரே அவருக்கு அதைத் தாலாட்டாகப் பாடுகிறது. `நீயில்லாமல் எது நிம்மதி’ என்று அவரின் உடலுக்கருகில் நின்று பாடலாம். பல சீனியர் நடிகைகள் எனக்கு போன் செய்து அழுது தீர்த்துவிட்டார்கள். அது நியாயமும்கூட, ஒரே குடும்பம்தானே.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.