Archived

This topic is now archived and is closed to further replies.

நியானி

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு

Recommended Posts

வணக்கம்,

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு

இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும். அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருத்துக்களத்திலும் முகப்பிலும் இக் கருத்துக்கணிப்பானது காண்பிக்கப்பட்டபோது பங்குபற்றத் தவறியவர்கள் கூடிய  விரைவில் பங்குபற்றி உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கருத்துக்கணிப்பில் எந்தத் தெரிவைக் கிளிக் பண்ணாமல் விடலாம் என்று தெரியவில்லை. அனேகமாக எல்லாமே ஒத்துப்போகின்றனவே.

கருத்துக்கணிப்பை வைத்து ஆராய என்ன இருக்கின்றது? யாழ் களத்தின் நோக்கமே கருத்தாடலை முன்னிறுத்துவதுதானே. அதற்கு கள உறுப்பினர்கள்தானே முன்வரவேண்டும்:cool:

Share this post


Link to post
Share on other sites

நான் எழுதுவது குறைவு, முக்கியமான காரணங்கள் கைத்தொலைபேசி மூலம் தமிழில் எழுதுவது மிகக்கடினமாக இருக்கின்றது. இப்போது சிறிது காலமாக கொஞ்சம் எழுதுகின்றேன் மடிக்கணணியை வேறு தேவைகளுக்கு பாவிப்பதால். முன்பு இரண்டு பெட்டிகள் இருந்தன, கீழ்ப்பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதும்போது மேல்பெட்டியில் தமிழில் வரும். இப்போது தமிழில் எழுதவெளிகிட்டால் அது டொஸ் மோடில் வருவது போல் சொற்கள் சரியாக வருவது இல்லை, அழிகின்றன. ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.

இங்கு பலரும் நண்பர்கள், எனது உண்மையான தனிப்பட்ட கருத்துக்களை கூறி ஒருவரையும் நான் பகைக்கவிரும்பவில்லை, நட்பை இழக்க விரும்பவில்லை. இதனால் ஊர்ப்புதினம், அரசியல் பற்றி ஏதும் கருத்துக்கள் சொல்ல மனம் வருவது இல்லை

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் யாரையும் பகைக்க தேவை இல்லை. சாதாரணமாகவே உங்கள் கருத்துக்களை சட்டென சொல்லும் ஒருவர் அதுவும் கருத்துக்கள் அநாமதேயமாக வைக்கப்படும் (இருக்கும்) எனும் பொழுது ஏன் தயக்கம்???

Quote

ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.


பல  ஆங்கில மொழி விற்பன்னர்கள் உள்ளார்கள். நிர்வாகத்திலும் கூட. எப்படியான மாற்றங்களை யாழ் களம் எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம் என்பது தான் மிக முக்கியமானது. மிக்க நன்றி.

Share this post


Link to post
Share on other sites

கைத்தொலைபேசியில் எழுதுவது பெரிய சிரமமல்ல. ஆனால் எழுதும்போது prediction வந்து சொல்லை மாற்றும்போதுதான் சினம் வரும்.

மற்றும்படி கருத்து வைப்பவரைப் பார்த்து பதில் எழுதுவதும் தவிர்ப்பதும் சரியாகப்படவில்லை. 

Share this post


Link to post
Share on other sites

கைத்தொலைபேசியில் எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் பாவிப்பது சாம்சங்க் நோட்5. 

ஆங்கிலமும், தமிழும் கலந்து கருத்துக்கள் எழுதக்கூடிய பகுதியை கருத்துக்களத்தில் திறந்தால்கூட நல்லது.

கருத்துக்களை வெளிப்படையாக வைக்கலாம் என்று கூறுவது இலகு, செயல்வடிவத்தில் வரும்போதுதான் பிரச்சனை. 

Share this post


Link to post
Share on other sites
On 1/6/2018 at 4:02 PM, நியானி said:

 

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - 

அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது.

நிர்வாகத்திற்கும், கருத்தாளர்களுக்கும் இடையிலே ரகசியம் பேணப்பட்டால் ,இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாத உறுப்பினர்களின் மனசில், கருத்தாடலின் வெளிப்படை தன்மை  சந்தேகத்துக்குரியதொன்றாகிவிடாதா?

அதுஒரு பக்கம் வைத்து , எதிர்பார்ப்பு என்று நீங்கள் கேட்டதால் ஒரே ஒரு எதிர்பார்ப்பு சொல்லலாம் என்று நினைக்கிறேன்..

களவிதிகளை மீறி செயற்பட்டதால் கடந்தகாலங்களில் யாழ் இணையத்தால் தடை செய்யப்பட்டவர்கள்போக..

காலபோக்கிலும்,காலமாற்றத்திலும்,பிற சமூக வலைதளங்களின் பயன்பாட்டினாலும்,வேறு இன்ன பிற காரணங்களினாலும்..

யாழ் ஆரம்பித்த காலத்திலிருந்து இந்நாள்வரை ஒதுங்கியிருக்கும் சக கள உறவுகளை , ஏற்கனவே அவர்களுடன் தொடர்பில் இருக்கும் சமகால கருத்தாளர்களை வைத்தே ஒரு ‘’முன்னாள்’’ உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நடத்தப்படவேண்டும்!

அவர்கள் இங்கு தொடர்ந்து கருத்து எழுத சொல்லி கேட்பதோ எதிர்பார்ப்பதோ அதன் நோக்கமன்றி, கடந்தகால பசுமை நினைவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளும், மனம்விட்டு பேசும் சிறு சந்திப்பாக எடுத்துக்கொள்ளலாம்!

Share this post


Link to post
Share on other sites
On 1/7/2018 at 7:16 AM, கிருபன் said:

இந்தக் கருத்துக்கணிப்பில் எந்தத் தெரிவைக் கிளிக் பண்ணாமல் விடலாம் என்று தெரியவில்லை. அனேகமாக எல்லாமே ஒத்துப்போகின்றனவே.

கருத்துக்கணிப்பை வைத்து ஆராய என்ன இருக்கின்றது? யாழ் களத்தின் நோக்கமே கருத்தாடலை முன்னிறுத்துவதுதானே. அதற்கு கள உறுப்பினர்கள்தானே முன்வரவேண்டும்:cool:

 

முன் வரவேண்டும் என்பது தான் பெரு விருப்பம்..

ஒருவகையில் சமூகங்களை இணைக்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய சமூக வலைத்தளங்களை தனித்தனி தீவுகளாக பிரியும் குணத்திற்கு பயன்படுத்துகின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. தேசீயம் என்ற பொதுத் தன்மை சிதைந்து ஊர்ச் சங்கங்களாக உருமாறி காணாமல் போவது போல் கருத்தாடலின்  பின்னடைவு ஒவ்வொருவருடைய பின்னடைவாகவே இறுதியில் இருக்கும்.

பொதுத் தன்மையை எட்டமுடியாத தோல்விகளுக்கு ஒவ்வொருவரும் காரணமாகின்றோம். எம்மைச்  சுற்றி நாம் போடும் வேலிகள் எமக்கு பாதுகாப்பு என்று எண்ணுகின்றோம் ஆனால் பல ர் சேர்ந்து கட்டும் கோட்டையின் பலத்திற்கு ஒரு வீட்டின்பலம் ஈடாகாது என்பது தனே யதார்த்தம். கருத்துக் களத்தை கைவிட்டது ஒரு பலவீனம் என்பதை உணருவது தவிர்க்க முடியாமல் நிகழும். 

 

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் கருத்துக்கள் கூறியவர்களுக்கும் நன்றி.

ஏலவே குறிப்பிட்டபடி தெரிவுகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, நியானி said:

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் கருத்துக்கள் கூறியவர்களுக்கும் நன்றி.

ஏலவே குறிப்பிட்டபடி தெரிவுகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நியானி  அண்ணை, நீங்கள் கூறிய....  "விரைவில்"  என்பதற்கு...
மூன்று கிழமை,  மூன்று மாதம்... என்பது, ஓகே....
அதை... தாண்ட மாட்டோம், என்று.... நீங்களும்.. எங்களுக்கு உத்தரவாதம் தாருங்கப்பு.  :grin:
(சும்மா... பகிடிக்கு....)  tw_glasses:

Share this post


Link to post
Share on other sites
On 11/01/2018 at 5:08 AM, சண்டமாருதன் said:

கருத்துக் களத்தை கைவிட்டது ஒரு பலவீனம் என்பதை உணருவது தவிர்க்க முடியாமல் நிகழும். 

கருத்துக்களம் கைவிடப்பட்டு விட்டதாகத்தான் தெரிகின்றது.

யாழில் பதியப்படும் பதிவுகளை குத்துமதிப்பாகப் பார்த்தால் அதில் 20 வீதம்தான் கள உறுப்பினர்களின் கருத்தாடல் கருத்துக்கள். மிகுதி எல்லாமே வெட்டி ஒட்டல்கள்தான். அதிலும் ஒரு திரியில் பின்னூட்டமாக வரும் பதிவுகள்கூட வெட்டி ஓட்டல்களாக இருக்கின்றன. இதை நானும் செய்வதுண்டு என்பதையும் ஒத்துக்கொள்கின்றேன்.

நவீனனும் கருத்துக்களத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் மனம் தளராமல் தினமும் நேரத்தைச் செலவழித்து  வெட்டி ஒட்டி 60 - 70 வீதமான பதிவுகளை இட்டு நிரப்பிக்கொண்டு இருக்கின்றார். ஆனால் பெரும்பான்மையான பதிவுகள் பூச்சியமான பின்னூட்டங்களுடன் கருத்தாடலே இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன.

யாழில் இருந்த பல மாற்றுக் கருத்தாளர்களையும் ஒதுக்கியும் அல்லது ஒதுங்கச் செய்ததும் ஒரு குறைபாடே.

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

கருத்துக்கணிப்பு முடிவுகள்

Poll_1.jpg

 

Poll_2.jpg

 

Poll_3.jpg

 

Poll_4.jpg

 

Poll_5.jpg

 

Poll_6.jpg

 

 

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, கிருபன் said:

 

யாழில் இருந்த பல மாற்றுக் கருத்தாளர்களையும் ஒதுக்கியும் அல்லது ஒதுங்கச் செய்ததும் ஒரு குறைபாடே.

கருத்தாளர்கள் ஒதுங்குவது குறித்து சில விசயங்கள் முரணாகவே உள்ளது. யாழில் அல்லாது ஏனைய இணையங்களில் ,  அரசியல் சார்ந்த காணொளிள் விமர்சனங்களில் நான் அதிகம வாசிப்பது பின்னூட்டங்களையே. எனது வாசிப்பின் எழுபது வீதத்துக்கு மேலானவை பின்னூட்டங்களை வாசிப்பதே. அந்த அனுபவத்தில் இருந்து பார்கையில் யாழின் கருத்து மோதல்கள் மட்டுறுத்தல்களுக்கு உட்பட்டு கண்ணியமாகவே நடந்துள்ளது. ஆனால் எதிர்க்கருத்தை முன்வைக்கும் ,  ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலை என்பது அறிவுபூர்வமாக அன்றி உணர்ச்சிகரமாகவே இருக்கின்றது. ஆரம்பகாலத்தில் சில எதிர்க்கருத்துக்கள் அவை முன்வைக்கப்பட்ட விதம் கருத்தைக் கடந்து தனிமனித தாக்குதல் சாயலை கொண்டிருக்கும் போது அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்கும் சிக்கல் இருந்தது. ஒருவிதமான பயம் ஏற்படும். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் நான் இங்கு எனது அடயாளத்தை நிலைநாட்டவோ தக்கவைக்கவோ எனது ஆழுமைகளை பாதுகாக்கவோ கருத்தாடலில் ஈடுபடவில்லை. அவைகளை எல்லாம் இழந்து தானே பரதேசீயாக புலத்தில் இரண்டாம் பிரஜயாக வாழ்கின்றேன் என்று சிந்திக்கும் போது தனிமனித தாக்குதல் என்பது என்னைப் பாதிக்கவில்லை.  ஆயுதம் வைத்திருப்பவன், அதிகாரம் வைத்திருப்பவன், விமர்சனம் செய்பவன்,  அவமரியாதை செய்பவன் என்று அனைத்துக்கும் பயந்து ஓதுங்க முற்பட்டால்  இவ்வுலகில் எனக்கு இடமில்லை.  எனக்கென்று ஒரு தனி உலகை கட்டியெழுப்பி அதில் என்னை நானே சிறையில் வைப்பதிலும் உடன்பாடில்லை. நட்பு எதிரி விருப்பு வெறுப்பு இன்றி கருத்தாடல்களோடு பங்குபெற்றி பயணிப்பது ஆரோக்கியமாகவே உள்ளது.

ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் குறித்து எனது அனுபவத்தோடு ஒட்டிய தனிப்பட்ட கருத்து இது. 

Share this post


Link to post
Share on other sites
Quote

நட்பு எதிரி விருப்பு வெறுப்பு இன்றி கருத்தாடல்களோடு பங்குபெற்றி பயணிப்பது ஆரோக்கியமாகவே உள்ளது.

இதைத்தான் நானும் விரும்புகின்றேன். ஆனால் உணர்ச்சிபூர்வமாகமே எதையும் எடுத்துக்கொள்பவர்கள் உள்ள இடத்தில் சிலவேளைகளில் உராய்வுகள் வந்து எல்லை மீறியதும் உண்டு. 

மேலுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்தால் கருத்துக்கள் வைப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் குறைவாகவும், ஆனால் கருத்துக்களை வாசிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் செய்திகளை வாசிக்க வருவதை விட அதிகமாகவும் உள்ளனர். இது யாழில் கருத்தாடலின் முக்கியத்துவத்தையும் தேவையையும் காட்டுகின்றது. ஆனால் நீண்ட கருத்தாடல் திரிகள் அண்மைக்காலத்தில் வந்ததில்லை!

Share this post


Link to post
Share on other sites
On 1/8/2018 at 1:29 AM, கலைஞன் said:

நான் எழுதுவது குறைவு, முக்கியமான காரணங்கள் கைத்தொலைபேசி மூலம் தமிழில் எழுதுவது மிகக்கடினமாக இருக்கின்றது. இப்போது சிறிது காலமாக கொஞ்சம் எழுதுகின்றேன் மடிக்கணணியை வேறு தேவைகளுக்கு பாவிப்பதால். முன்பு இரண்டு பெட்டிகள் இருந்தன, கீழ்ப்பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதும்போது மேல்பெட்டியில் தமிழில் வரும். இப்போது தமிழில் எழுதவெளிகிட்டால் அது டொஸ் மோடில் வருவது போல் சொற்கள் சரியாக வருவது இல்லை, அழிகின்றன. ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.

இங்கு பலரும் நண்பர்கள், எனது உண்மையான தனிப்பட்ட கருத்துக்களை கூறி ஒருவரையும் நான் பகைக்கவிரும்பவில்லை, நட்பை இழக்க விரும்பவில்லை. இதனால் ஊர்ப்புதினம், அரசியல் பற்றி ஏதும் கருத்துக்கள் சொல்ல மனம் வருவது இல்லை

நீங்கள் என்ன வகைக் கைத்தொலைபேசி பாவிக்கிறீர்கள்?

ஐபோன் ஆயின் அதில் தமிழ் இருக்கிறது.

Settings-general-keyboard -keybord-select language (tamil)

done.

பின்னர் keybordஇல் உள்ள உலகப்படத்தைத் தெரிவு செய்வதன் மூலம் ஆங்கிலம்,தமிழ் என மாற்றலாம்.சாம்சும் வகைப் போனுக்கு sellinam என்னும் செயலியைத் தரவிறக்கவும்

 

Share this post


Link to post
Share on other sites

நான் பாவிப்பது சாம்சங்க் நோட். ஆம் ஐபோனில் தமிழில் எழுதத்தெரியும். இப்போது பயன்படுத்துவது கூழிழ் இந்திக் கீபோர்ட். செல்லினம் பாவித்து பார்க்கின்றேன், நன்றி புலவர்!

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்: நிலைப்பாட்டை மாற்றிய உலக சுகாதார நிறுவனம் ARUN SANKAR / Getty கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. ’’நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ள இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் துணி மாஸ்கை அணியும்படி அறிவுறுத்தப்படுகிறது’’ என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா வைரஸுக்கான தொழில்நுட்ப நிபுணர் டாக்டர் மரியா வென் கேர்கோவி. REUTERS மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ மாஸ்க்கை அணிய வேண்டும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வைரஸ் பரவத்தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டதட்ட 4 லட்சம் பேர் இறந்துள்ளனர். ’’மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என்கிறார் மரியா. அதே சமயம், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் என்றும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘’மாஸ்க் மட்டுமே கோவிட் 19 வைரஸிடம் இருந்து உங்களை பாதுகாக்காது’’ என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?  முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்  கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?    ’’மாஸ்க் அணிய மக்களை ஊக்குவிப்பது, அவர்களிடையே ஒரு போலியான பாதுகாப்பை உண்டாக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் நினைத்தனர். ஆனால், மாஸ்க் அணிவதால் தொற்று பரவுதல் குறையும் என்ற ஆராய்ச்சி முடிவை இப்போது அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது’’ என்கிறார் பிபிசி அறிவியல் பிரிவு செய்தியாளர் டேவிட் ஷுக்மென் தங்களுக்கு கொரோனா இருப்பதற்கான அறிகுறி தெரிவதற்கு முன்பே பலருக்கு அந்த தொற்றைப் பரப்பிவிடும் ஆபத்து அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ’’பொதுப்போக்குவரத்து, கடைகள், அகதிகள் முகாம்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சிரமம் என்பதால், தொற்று பரவால் தடுக்க துணியால் தயாரிக்கப்பட்ட மாஸ்கை அணிய உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது’’ என்கிறார் ஷுக்மென். 60 வயதைக் கடந்தவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மாஸ்க் அணிய வேண்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது என்கிறார் ஷுக்மென்.   https://www.bbc.com/tamil/global-52948564  
    • Black Lives Matter ஊர்வலங்களுக்கு சிட்னி, அவுஸ்திரேலியாவில் தடை         கொறோணாவைரஸ் தொற்று காரணம் சிட்னி, அவுஸ்திரேலியா: இந்த வார இறுதியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த Black Lives Matter ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு, கொறோணாவைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, சிட்னி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் திணைக்களம் இத் தடையைக் கோரியிருந்தது. ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையையும், பல அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிசாரின் கரங்களில் மரணமடைவதையும் கண்டிப்பதுடன், அமெரிக்காவில் நடைபெறும் ஆர்ப்பாட்டக்களுக்கு ஆதரவாகவும், பல்லாயிரக் கணக்கான மக்கள் இவார இறுதியில் கூடுவதற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். இருப்பினும், இத் தடையையும் மீறித் தாம் தமது ஆர்ப்பாட்டங்களை நடத்தியே தீருவோம் என அவர்கள் சூளுரைத்துள்ளார்கள். அவுஸ்திரேலியாவில், ஏப்ரல் முதல், 7,200 கொறோணாவைரஸ் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தாலும், அரசு அதை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. கடந்த ஒரு வாரமாக நியூசவுத்வேல்ஸில் ஒரு தொற்றுக்களும் அறிவிக்கப்படவில்லை. “நோயை ஒழிப்பதற்கு ஒவ்வொருவரும் தம்மாலியன்ற அளவுக்கு தியாகங்களைச் செய்து ஒத்துழைத்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமைகளை விட உடல் நலம் மிக முக்கியமானது” என நீதிபதி டெஸ்மண்ட் ஃபாகன், இத் தீர்ப்பின்போது தெரிவித்தார். “இது எங்களது பூமி. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் எமது ஆர்ப்பாட்டத்தைஹ் செய்தேயாகுவோம்” எனக் கூறுகிறார் லட்டோநா டங்கே. அவரது மகன் 2015 ஆம் ஆண்டு பொலிஸ் தடுப்புக்காவலில் மரணமாகியிருந்தார். “எமது சுகாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு, உணர்வுகளை வெளிப்படுத்த நாம் வேறு வழிகளைப் பார்ப்போம். தயவு செய்து ஊர்வலத்துக்குப் போகாதீர்கள்” என அவுஸ்திரேலிய பிரதமர் மக்களைக் கேட்டுள்ளார். சிட்னி, பிரிஸ்பேன், பேர்த், கான்பரா நகர்களில் ஏற்கெனவே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. மெல்போர்ண் பொலிசார் ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளரிடம் அவற்றைக் கைவிடும்படி கேட்டுள்ளார்கள். அதே வேளை பிரிஸ்பேந், அடிலேட் பொலிசார் ஊர்வலத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். 1991 முதல், 432 அவுஸ்திரேலிய சுதேசிகள் பொலிஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர். https://marumoli.com/black-lives-matter-ஊர்வலங்களுக்கு-சிட்னி/?fbclid=IwAR1_WrcYpG-yLUgiPVbg16_-fkwJcb9DVdQdtJ5fw1OdOxPNdlBZRBAQqoA