Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

'தமிழ்நாடு' பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா!


Recommended Posts

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா!

12CHVCM-EDIT1-ANNA

 

நில அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய நிகழ்வு அது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக.

இறங்கிவந்த அரசு

தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தது திமுக.1961 ஜனவரி 30 அன்று சோஷலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆளுங்கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்ட மன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. குறிப்பாக, தமிழரசு கழகத்தினர் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று குரலெழுப்பினர்.

அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறு கோரினார் முதலமைச்சர் காமராஜர். இது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மூன்று நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுவதற்குச் சம்மதித்தது. ஆனால், அந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர்.

கம்பனும் சேக்கிழாரும்

இப்படி மாநில அளவில் ‘தமிழ்நாடு’ கோரிக்கை இருந்த நிலையில், அதனை இந்திய அளவுக்குக் கொண்டுசென்றவர்களுள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா முக்கியமானவர். ஆம், தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரி இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா.

அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை வெகுவாக ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்றுரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்?

கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்?

பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர்,

‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தொடர் முயற்சி

பிறகு, மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகி, பக்தவத்சலம் முதல்வராகியிருந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. 23 ஜூலை 1963 அன்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘தமிழ்நாடு என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்.. மெட்ராஸ் என்றால்தானே புரியும். அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றார்.

அதுமட்டுமல்ல, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும். அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார். அதற்கு எதிர்வினை ஆற்றிய திமுக, “கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது, எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. ஒரு நாட்டுக்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?” என்று கேட்டது.

வாதங்கள் வலுவாக எடுத்துவைக்கப்பட்டபோதும் சட்ட மன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. ஆக, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்விகண்ட நிலையில்தான் 1967-ல் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.

பெயர் சூட்டினார் அண்ணா!

1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்டவேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே என்று யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், தமிழ்நாடு என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா உச்சரிக்க, மூன்று முறையும் ‘வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் முதலமைச்சர் அண்ணா.

அதோடு, ‘‘நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது.

அண்ணாவின் மனத்துக்கு நெருக்கமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டதன் பொன் விழாவைத் தற்போது கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு.

- ஆர்.முத்துக்குமார்,

எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’

தினமணி

 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜே.ஆர். ஜெயவர்த்தனா கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு யூலை இனப்படுகொலை . 1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய நான்கு உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் போட்டியிட்டார்கள். இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலைப் புறக்கணிக்கும் படி தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டனர். அவர்களுடைய புறக்கணிப்பு மிகதத் திவிரமாக இடம்பெற்றது. மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர்களும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள்.  தேர்தற் புறக்கணிப்பு 98% வெற்றிபெற்றது. இதைத்தெடர்ந்து அப்போதைய ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடைய அரசாங்கம் தமிழ்ப் பிரதேசங்களில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தது. தமிழ் பேசும் மக்கள் நாடாளுமன்ற மிதவாத அரசியற் தலைமையை நிராகரித்து தமிழ் தேசியவாதத்தை முழுமையாக நேசிக்கின்ற ஓர் தலைமைத்துவத்தை தெரிந்தெடுத்தமை சிங்கள ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவே இருந்தது. இதனால் ஜே.ஆர். ஜெயவர்த்தனா கறுப்புக் குடைகளைக் கண்டு மிரளும் கட்டாக்காலி மாடுகளைப் போல மிரண்டார்.   தனது படைகளைக் கட்டவிழ்த்துவிட அவர்கள் கந்தர்மடம் பகுதிகளில் வீடுகளை எரித்தனர். பொதுமக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் ஓர் பதட்டமான சூழ்நிலை உருவாகியது. இந்தச் சம்பவங்கள் விரிவுபெற்று வவுனியாவிற்கும் பரவியது. அங்கும் கடைகள் எரிக்கப்பட்டன. இது பின்னர் திருகோணமலைக்கும் பரவியது. 1983ம் ஆண்டு யூன் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் திருமலையில் எங்கோ ஒரு தமிழ்க் கிராமத்தில் தமிழ் மகன் சிங்களவரால் வெட்டிப் படுகொலை செய்யப்படுகின்ற நிகழ்ச்சி மிகவும் சர்வசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. இந்நிலையில் திருகோணமலைப் படுகொலைக்கு எதிராக 1983ஆம் ஆண்டு யூலை மாதம் 01ம் திகதி தமிழீழ விடுதலை அணி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியம் உள்ளிட்ட ஆறு அமைப்புக்களால் கடையடைப்பு முழு அளவில் நடத்தப்பட்டன. இந்தக் கடையடைப்பு நடைபெற்ற தினத்தன்று மாலை இரண்டு  மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த யாழ்தேவி தொடருந்து கோண்டாவிலில் வைத்து சில தீவிரப் போக்குடைய இளைஞர்களால் தீ மூட்டி எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தக் கதவடைப்பை ஒழுங்குபடுத்திய வைத்திய கலாநிதி எஸ்.ஏ.தர்மலிங்கம் அவர்களும் சுதந்திரன் நாளேட்டின் ஆசிரியர் கோவை மகேசன் அவர்களும் யாழ்ப்பாணம் காவற்றுறையினராற் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் இருவரும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சுதந்திரன் தமிழ் நாளேடும் மற்றும் சற்றடே றிவியூ (Saturday Review) ஆங்கில நாளேடும் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டன. அந்த அச்சகங்கள் சீல் வைத்துப் பூட்டப்பட்டன. அதே ஆண்டு யூலை மாதம் இருபத்து மூன்றாம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றின்போது பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடைய அரசாங்கம் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஊடாக தீவிரமாகப் பரப்புரை செய்தது. தமிழ்ப் புலிகள் பதின்மூன்று சிங்கள பௌத்த இராணுவத்தினரை யாழ்ப்பாணத்தில் கொன்று விட்டார்கள் என ஜே.ஆர் இனவாதப் பரப்புரையைத் தூண்டிவிட்டார். இறந்த இராணுவத்தினரது உடல்களை யாழ்ப்பாணத்திலேயே அடக்கம் செய்துவிட இராணுவத்தினர் விரும்பியபோதும் அப்போதைய வர்த்தக அமைச்சர் அத்துலத் முதலியும் ஜே.ஆரும் அந்தப் பதின்மூன்று இராணுவத்தினரதும் உடல்களை கொழும்புக்கு எடுத்து வந்து சிங்கள மக்கள் மத்தியில் காட்சிப்படுத்திய பின்னர் பொறளை கனத்தை மயானத்தில் அடக்கம் செய்ய விரும்பினார்கள். இறந்த பதின்மூன்று இராணுவ சிப்பாய்களையும் கனத்தையில் அடக்கம் செய்யப்படும் என்று ஜே.ஆர் அரசு மிகப்பெரும் அளவில் விளம்பரப்படுத்தியதால் கனத்தையில் பல ஆயிரக்கணக்கான சிங்கள இனவாதிகள் குழுமினார்கள். இருபத்துநான்காம் திகதி மாலையே பொறளையில் இருந்த சைவ உணவகம் ஒன்று தாக்கப்பட்டது. அன்று இரவு இக்கலவரம் மருதானை, கொட்டாஞ்சேனை, வத்தளை, நீர்கொழும்பு எனப் பரவியது. மறுநாள் யூலை இருபத்தைந்தாம் திகதி இச் சம்பவம் மேலும் விசாலிப்படைந்தது. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, தெகிவளை, மொறட்டுவ, பாணந்துறை என கொழும்பின் தமிழர்கள் வாழும் எல்லாப் பகுதிகளுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் இரண்டு நாட்களில் கொழும்பில் வாழ்ந்த பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இதனால் பம்பலப்பிட்டி சென். பீற்றர்ஸ் கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி எனப் பல பாடசாலைகளில் இலட்சக் கணக்கான தமிழர்களுக்காக அகதி முகாம்கள் திறக்கப்பட்டன. வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்.   இக்கால கட்டத்தில் வெலிக்கடையில் ரெலோ இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, தேவன், ஜெகன் மற்றும் வவுனியா காந்திய இயக்கத்தைச் சேர்ந்த வைத்தியர் இராஜசுந்தரம் போன்றவர்களும் இங்கு சிறைவைக்கப்பட்டிருந்தனர். குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது ஆற்றிய உரை நாளேடுகளில் பிரசுரிக்கப்பட்டபோது, அது ஜனாதிபதி ஜே.ஆர், அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்கா, சிறில் மத்தியூ போன்ற அமைச்சர்களுக்குப் பெரும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் கிளறியது. இதனால் சிறைச்சாலையில் வைத்து இவர்களது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டமும் போடப்பட்டது. இதற்கென கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட கொலைகாரப்படை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலைகாரப் படைக்குத் தாய்லாந்து விமானத்தைக் கடத்திச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சேபால ஏக்கநாயக்கா தலைமை தாங்கினார். யூலை மாதம் இருபத்தைந்தாம் திகதி காலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு காமினி திசநாயக்காவும், அத்துலத்முதலியும் சென்று தமிழ்ச் சிறைக் கைதிகளைக் கொள்ளுமாறு பச்சைக்கொடி காட்டிவிட்டுச் சென்றார்கள். அன்று மாலையே குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட முப்பத்தைந்து தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றவோ, கொலை வெறியர்களான சிங்களக் கைதிகளைத் தடுக்கவோ சிறைச்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக யூலை மாதம் இருபத்தேழாம் திகதி மேலும் பதினேழு சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். மொத்தமாக இரு தினங்களிலும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஐம்பத்திரண்டு சிறைக்ககைதிகள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முன்பாக யூலை மாதம் இருபத்துநான்காம் திகதி திருநெல்வேலி, கந்தர்மடம் போன்ற இடங்களில் ஐம்பத்தொரு அப்பாவிப் பொதுமக்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் கல்விமான் கலா.பரமேஸ்வரன், ; அவரது மாமனார் சரவணமுத்து ஆகியோரும் உள்ளடங்குவர். இதைவிட நாடுபூராகவும் வெடித்த இச் சம்பவத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள். பல ஆயிரக் கணக்கான தமிழர்கள் காடையர்களுடைய தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள், கட்டடங்கள், வணிக நிலையங்கள் திரைப்பட அரங்குகள் தரைமட்டமாக்கப்பட்டன. தமிழர் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொழும்பில் பிரபல தொழிலதிபர் வை.ஏ.எஸ்.ஞானம், மகாராஜா நிறுவனம், கே.குணரட்ணம் எனப் பல நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின. ரேப்பியா என்ற நிறுவனம் இச் சம்பவத்தில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாவிற்கு மேல் தமிழர்களுடைய சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டதென மதிப்பீடு செய்தது. இந்தச் சம்பவத்தின் போது ஜே.ஆர் ஜெயவர்த்தனா எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1983ஆம் ஆண்டு யூலை மாதம் இருபத்தேழாம் திகதி ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய ஜே.ஆர் பாதிக்கபட்ட தமிழ் மக்களுக்கு எந்தவித அனுதாபமும் தெரிவிக்காமல் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அசம்பாவிதங்கள் சிங்கள மக்களது இயல்பான மன உணர்வுகள் எனக் கருத்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து யூலை மாதம் இருபத்தொன்பதாம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் கொழும்புக்கு வந்துவிட்டார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டது. அன்றைய தினம் மேலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். கல்விமான் அருமைநாயகம் என்பவர் நுகேகொடையில் தனது வீட்டைப் பார்க்கப் போனபோது வெட்டிக் கொல்லப்பட்டார். கொழும்புப் புறக்கோட்டை காஸ்வேக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை செய்த தமிழ் இளைஞர்கள் பாதுகாப்புத் தேடி அந்நிறுவனத்தின் கூரைமீது இருந்தபோது அவ்வழியாக வந்த விமானப்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத ஜே.ஆர்ஜெயவர்த்தனாவுடைய அரசு 1983ஆம் ஆண்டு ஆவணி மாதம் நான்காம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் போராட்டத்தை நசுக்குவதற்காக 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன்படி தனிநாடு கேட்டுப் போராடுதல், அதற்கு ஊக்கமளித்தல், உதவி செய்தல் என்பன போன்ற விடயங்கள் பாரதூரமான தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.             மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.     https://www.thaarakam.com/news/5f86d94e-0b61-4729-9348-efa3b31860d6  
  • 27.07.1975 அன்று தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கிய தேசியத்தலைவர். புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக  தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார். புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975  ஜூலை  27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பா  கார்ச் சாரதியை மடக்கி, அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.   இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான பயணத்தில்  தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.   முக்கிய குறிப்பு :   1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு  என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். 1974ஆம் ஆண்டு சனவரி பத்தாம் திகதி இறுதி நாளாகக் கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்வாக அறிஞர்கள் தமிழின் பெருமைகளையும், பண்பாட்டின் பெருமையையும் பற்றிப் பேசினார்கள். மக்கள் உணர்வோடு கைதட்டி உற்சாகப்படுத்தினர்.  இறுதியாகத் தமிழகப் பேராசிரியர் “நைனா முகமது” பேசிக் கொண்டிருக்கும் போது    சிங்கள பேரினவாத அரசு மற்றும் அல்பிரட் துரையப்பா   இணைந்து பிறப்பித்த உத்தரவில் யாழ். உதவி காவற்துறைமா அதிபர் சந்திரசேகரா தலைமையில்  மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியதுடன், துப்பாக்கியாலும் சுட்டார்கள். இச் சம்பவத்தில் ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர்.  அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவிக் காவற்றுறை அத்தியட்சகர்  சந்திரசேகரா பின்னர் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் காவற்றுறை அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார். புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது.   https://www.thaarakam.com/news/54d4fff0-cdc6-4c33-afb0-7252b59bf091
  • ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவருக்கும் ஆகஸ்ட் 9 வரை விளக்க மறியல் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி, அவரின் தந்தை மற்றும் சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்த தரகர் உள்ளிட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் 48 மணி நேரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்பின்னர் இன்று அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களை 9 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான்ன் மரணம் தொடர்பில் மற்றுமொரு பிரேத பரிசோதனையை நடத்துமாறும், அதற்காக புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டியெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். http://www.samakalam.com/ரிஷாட்டின்-மனைவி-உள்ளிட்/    
  • பதினாறும் நிறயாத பருவ மங்கை Yanai Paagan T. M. Soundararajan K. V. Mahadevan       பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை பதினாறும் நிறையாத பருவ மங்கை
  • சந்திரகுப்த சாணக்யா ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். சி. சாச்சி (எஸ். சி. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.