Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

'தமிழ்நாடு' பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா!


Recommended Posts

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா!

12CHVCM-EDIT1-ANNA

 

நில அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய நிகழ்வு அது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக.

இறங்கிவந்த அரசு

தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தது திமுக.1961 ஜனவரி 30 அன்று சோஷலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆளுங்கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்ட மன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. குறிப்பாக, தமிழரசு கழகத்தினர் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று குரலெழுப்பினர்.

அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறு கோரினார் முதலமைச்சர் காமராஜர். இது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மூன்று நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுவதற்குச் சம்மதித்தது. ஆனால், அந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர்.

கம்பனும் சேக்கிழாரும்

இப்படி மாநில அளவில் ‘தமிழ்நாடு’ கோரிக்கை இருந்த நிலையில், அதனை இந்திய அளவுக்குக் கொண்டுசென்றவர்களுள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா முக்கியமானவர். ஆம், தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரி இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா.

அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை வெகுவாக ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்றுரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்?

கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்?

பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர்,

‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

தொடர் முயற்சி

பிறகு, மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகி, பக்தவத்சலம் முதல்வராகியிருந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. 23 ஜூலை 1963 அன்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘தமிழ்நாடு என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்.. மெட்ராஸ் என்றால்தானே புரியும். அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றார்.

அதுமட்டுமல்ல, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும். அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார். அதற்கு எதிர்வினை ஆற்றிய திமுக, “கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது, எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. ஒரு நாட்டுக்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?” என்று கேட்டது.

வாதங்கள் வலுவாக எடுத்துவைக்கப்பட்டபோதும் சட்ட மன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. ஆக, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்விகண்ட நிலையில்தான் 1967-ல் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.

பெயர் சூட்டினார் அண்ணா!

1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்டவேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே என்று யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், தமிழ்நாடு என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா உச்சரிக்க, மூன்று முறையும் ‘வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் முதலமைச்சர் அண்ணா.

அதோடு, ‘‘நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது.

அண்ணாவின் மனத்துக்கு நெருக்கமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டதன் பொன் விழாவைத் தற்போது கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு.

- ஆர்.முத்துக்குமார்,

எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’

தினமணி

 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின் மின்னம்பலம்2021-09-25   4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக மக்களை ஏமாற்றுகிறது என எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் கூறி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “மக்களாகிய நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், திமுகவின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். நான் அதை வெளியிட்டபோது, தலைவர் கருணாநிதி பாணியில் 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்' என்று சொன்னேன். 505 வாக்குறுதிகளைத் தந்தோம். அவற்றில் பெரும்பாலானவற்றை 4 மாதங்களில் நிறைவேற்றி விட்டோம். கொரோனா நிவாரண நிதி ரூ.4000, ஆவின் பால் லிட்டருக்கு விலை ரூ.3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி, மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டப்பேரவையில் தீர்மானம், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றுதல், குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் 'ஸ்மார்ட் கார்டு', அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு உள்ளிட்ட 20 வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார். மேலும், சட்டப்பேரவை விவாதங்களை முழுமையாகக் கவனித்தவர்களுக்கு நான் சொல்வது முழு உண்மை என்பது தெரியும் என்று கூறிய அவர், ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும், எனது பதிலில் இரண்டு வாக்குறுதிகளும், நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும், அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும், இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதோடு, தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல். இப்படி இடம்பெற்றவர்களுக்குக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டியது இல்லை. அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் - பெண் ஓதுவார் நியமனம். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு., திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை. தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான சமூக நீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிக்கப்படாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம். இப்போது அறிவித்ததுபோல மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்குப் பட்டியல் போட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான். நீங்கள் உத்தரவிடுங்கள் உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.   https://minnambalam.com/politics/2021/09/25/17/202-Promises-fullfilled-Chief-minister-Stalin  
  • நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி மின்னம்பலம்2021-09-25   அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (செப்டம்பர் 24) இரவு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் சந்தித்தபோது இருவரும் சரளமாக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருந்தது உலகம் முழுதும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரதமர் நரேந்திர மோடியை மாலை வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருபெரும் நாடுகளின் தலைவர்களின் நகைச்சுவையால் வெடிச்சிரிப்புகள் ஜொலித்தன. பைடன் பேசுகையில், "எனக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால் நான் 1972 இல் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் பதவியேற்பதற்கு முன், மும்பையில் பைடன் என்ற நபரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவரை அதன் பின்னால் நான் தொடர முடியவில்லை என்று சொன்னேன். அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவில் ஐந்து பிடன்கள் இருப்பதாக என்னிடம் இந்திய பத்திரிக்கைகள் தெரிவித்தன, "என்று சொல்லி சிரித்தார் பைடன். இந்த கருத்துக்கு பிரதமர் மோடி சிரித்தார். அமெரிக்க அதிபர் தொடர்ந்தார், "அப்புறம் கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக ஜார்ஜ் பைடன் இருப்பதை நான் கண்டுபிடித்தேன்” என்று மீண்டும் சிரித்தவர், “கடைசியில் அந்த ஜார்ஜ் பைடன் ஒரு இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். என்னால் அவரையும் அதன் பின்னால் கண்காணிக்க முடியவில்லை. அதனால் இந்த சந்திப்பு எனக்கு அவற்றை அறிந்துகொள்ள உதவும் ” என்றவர் மோடியைப் பார்க்க அரங்கமே சிரித்தது. அதன் பின்னர், “ நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு வலுவாகவும் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். நாம் இருவரும் எவ்வித சவால்களையும் இணைந்தே சந்திப்போம்” என்றார் பைடன். இதன் பின் பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் பிடென் குடும்பப்பெயர்களைப் பற்றி பேசினீர்கள். நீங்கள் அதை என்னிடம் முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அது தொடர்பான ஆவணங்களை சேகரிக்க முயன்றேன். இப்போது கூட நான் சில ஆவணங்களுடன் வந்திருக்கிறேன். ஒருவேளை அந்த ஆவணங்கள் உங்களுக்கு ஏதேனும் பயன் தரக்கூடும்" என்று ஜோக் அடித்தார். வழக்கமாக இது போன்ற முக்கிய தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டும் என்பதை ஏற்கனவே தயார் செய்து ஸ்க்ரிப்ட் ஆக வைத்திருப்பார்கள். அதைத் தாண்டி தலைவர்கள் வேறு எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் அந்த மரபுகளை உடைத்து இந்தியா பற்றிய தனது நினவைலைகளை நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். மோடியும் அவருக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து மகிழ்ச்சியின் அளவைக் கூட்டினார்.   https://minnambalam.com/politics/2021/09/25/19/joe-biden-modi-joint-press-meet-much-laughter-five-bidens-india  
  • குடைச்சல் புத்தருக்குத்தான் எங்களுக்கில்லை ஐயா. புத்தம் சரணம் அல்லா என்று கடவுளை வணங்கவேண்டிய நிலைக்கும் சிங்களம் வந்திட்டுது.
  • சுவர்களில் இருப்பவர்களின் தியாகங்களால் நாங்கள் இன்று சிறந்த உணவுகளை பாரிஸில் உண்ணுகின்றோம் என்று தோத்திரம் சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்கலாம்🤭
  • நீங்கள்தான் அந்த சாபக் கேடு. ஆயுதப்போராட்டமும் பலரை வேதனைக்குள்ளாக்கியது. அதற்கு தலைமைதாங்கிய தற்குறிகள் பற்றிய உங்கள் கருத்தை உலகறியும்.   என்ன செய்வதாக திட்டம்? உங்களால் யாழ் களத்தில் ஒப்பாரி வைப்பதை தவிர வேறெதுவுமே செய்ய முடியாது. மானமுள்ள தமிழனானால், சவால்விட்டு செய்துகாட்டுங்கள் பார்க்கலாம். ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் லாயக்கானவர்கள் தமிழினத்தின் சாபக்கேடு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.