Jump to content

சைக்கிள் ஓட்டுவதால் ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?


Recommended Posts

சைக்கிள் ஓட்டுவதால் ஆண்களின் பாலுறவு ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

GETTY IMAGESபடத்தின் காப்புரிமைசைக்கிள் ஓட்டுவதால் ஆண்களில் பாலுறவு ஆரோக்கியத்திற

சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத்தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனும், நீச்சலடிப்பாளர்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில், இவர்களது பாலுறவு ஆரோக்கியம் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்ற முந்தைய ஆய்வுகளிடம் முரண்படுவதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2,774 சைக்கிள் ஓட்டிகளுடன், 539 நீச்சலடிப்பாளர்களும், 789 ஓடுபவர்களும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். பலவித கேள்விகள் மூலம் அவர்களது பாலுறவு ஆரோக்கியம் குறித்து சோதிக்கப்பட்டது.

இந்த மூன்று குழுவினருக்கும் பாலுறவு ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் பாதையின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

''சைக்கிள் ஓட்டுவது பெரும் இதய நன்மைகளை அளிக்கும்'' என்கிறார் ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பெஞ்சமின் பிரையர். இவர் கலிஃபோர்னியா-சான் பிரான்ஸிஸ்கோவின் பல்கலைக்கழகத்தின் சிறுநீரக துறையை சேர்ந்தவர்.

''உடல் எடை அபாயங்களில் இருந்து, சைக்கிள் ஓட்டிகள் வெகு தொலைவில் இருப்பார்கள்.'' எனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42676541

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கவர்ச்சியான கருத்துதான் இருந்தாலும் சொல்லி தொலைக்கவேண்டும்...இறுக்கமான உள்ளாடைகள் அணியாது சைக்கிள் சீட்டில் இருந்து அடிக்கடி மேலெழுந்து உதைத்து உதைத்து வண்டி ஓட்டினால், விதைகள் அடிக்கடி உரசுவதால்,முட்டிமோதுவதால் ஏற்படும் பாதிப்பில் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு என்று நினைக்கிறேன்!   இது ஒன்றும் களவிதிகளை மீறி ஆபாசமா பேசவில்லை,அறிந்ததை சொன்னேன். தவறு என்றால் தயவு செய்து நீக்கிவிடவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kupa_zpsoqv1qvra.jpg

நான் உப்புடி ஒண்டைத்தான் வீட்டைலை வைச்சு அப்பப்ப உழக்கிறன்......ஏதும் அப்பிடி இப்பிடி பிரச்சனை வரும் எண்டுறியள்?:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.