Jump to content

ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா? #HerChoice


Recommended Posts

காதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா, தவிக்கும் இளம்பெண் #HerChoice

முன்னோட்டம்: பெற்றோர் தன்னை கைவிட்ட நிலையில் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கை மற்றும் அன்பை எவ்வாறு கையாள்வது?

#HerChoice அப்பா-அம்மா விட்டுப்பிரிந்த சிறுமிபடத்தின் காப்புரிமைBBB

சுவையற்ற உணவும் பொருந்தாத ஆடையும் போலவே நானும் எதற்கும் பயன்படாமல் இருந்தேன்.

குழந்தையாக இருக்கும்போதே எனது பெற்றோரால் கைவிடப்பட்டவள் நான்.

எனது பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

இல்லை, இல்லை. நான் அனாதை இல்லை. அது மிகவும் வேதனைக்குரியது.

எனது பெற்றோர் உயிரோடுதான் இருக்கிறார்கள்; நான் வாழும் அதே கிராமத்தில்தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேற்று நபர் போல் நடந்துகொள்வார்கள்.

பசி வந்தால் கீச் என்று சிரிப்பேன் அல்லது வீல் என்று அழுவேன்; அப்போது தாலாட்டுப் பாடி என்னை தூங்கவைக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நான் தொட்டிலில் படுத்துக்கொண்டிருந்தபோதே என்னை தனியாக விட்டு விட்டு போக அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

எதையோ இழந்துவிட்டோம் என்று கவலைப்படக் கூட தெரியாத வயது அது. இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கும், அவளுடைய குழந்தைகளைக் பெறுவதற்கும், நான் பிறந்த உடனேயே என் தந்தை என் தாயை விட்டுச் சென்றார்.

பிறகு என் தாயும் என்னை விட்டுச் சென்றார்; அவருக்கும் ஒரு ஆண் மீது காதல் பிறந்தது.

ஆனால் எனக்கு? அன்பு என்றால் என்ன என்று தெரிந்தால் தானே அதை நான் இழப்பதற்கு!

என் தாய்மாமா வீட்டில் நான் பரிதாபத்தோடு வளர்க்கப்பட்டேன். புரிந்து கொள்ளப் போதுமான வயது வந்தபோது அவர்தான் எனக்கு என் பெற்றோரைக் காட்டியவர். சோகம் நிறைந்த கண்களுடன் அவர்களை நான் பார்த்தேன்.

என்னை அருகில் இழுத்து கட்டி அணைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், முகம் தெரியாத ஒரு நபரைப் பார்ப்பது போல் அவர்கள் என்னைப் பார்த்தனர். நான் யாருடைய குழந்தையும் இல்லை என்பது தெளிவதாகத் தெரிந்தது. அதனால் எனது மாமா ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வந்த விடுதியில் என்னைச் சேர்த்தார்.

அங்கு ஒரு முரட்டுத்தனமான அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது குறித்து எனக்கு தெரியாது.

எனது தந்தைக்கும் அவரது இரண்டாம் தாரத்திற்கும் பிறந்த பெண்ணையும் எனது தந்தை நான் வசித்துவந்த அதே விடுதியில்தான் சேர்த்திருந்தார்.

#HerChoice அப்பா-அம்மா விட்டுப்பிரிந்த சிறுமி

ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கும்போது நான் தேவையில்லாதவளாக ஒதுக்கப்பட்டதுதான் நினைவுக்கு வரும். அவள்மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாங்கள் அடிக்கடி பேசிகொள்வோம். நான் யாரென்பது அவளுக்குத் தெரியும். அவளுக்கு நிச்சயம் தெரியும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் இது மிகுந்த வலியைத் தந்தது.

எனது தந்தை அவளை அடிக்கடி பார்க்க வருவதோடு விடுமுறை நாட்களில் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். என்னையும் உடன் அழைத்துச் செல்வாரா என்று நான் மெளனமாகக் காத்திருப்பேன். ஆனால் என்னுடைய காத்திருப்பு எப்போதும் வீணாகிப்போய்விடும்.

அவர் என்னைப் பார்க்கக்கூட மாட்டார். ஒருவேளை அவருக்கு என் மீது அன்பு இருக்கிறதா, இல்லை என்னுடைய சித்தி என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துவர அனுமதிப்பாரா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.

அவர்கள் பார்வையில் படாதபடி நான் தனியாகச் சென்று அழுவேன். மற்ற குழந்தைகளைப் போல் விடுமுறை நாட்களுக்களை நான் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் விடுமுறை என்றால் பணம் சம்பாதிக்க வயலில் வேலை செய்யவேண்டும். இல்லையென்றால் எனக்கு சாப்பாடு கிடைக்காது. சில நேரங்களில் நான் கால்நடைகள் மேய்க்கக்கூட செய்வேன்.

#HerChoice அப்பா-அம்மா விட்டுப்பிரிந்த சிறுமி

நான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் என் தாய்மாமாவின் குடும்பத்திற்கு கொடுத்துவிடுவேன்.

இதற்கு பதிலாக அவர்கள் எனக்கு உணவும் தங்க இடமும் கொடுக்கிறார்கள்; பள்ளிக்கூடம் திறந்த பிறகு பேனா, பென்சில் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் வாங்கிக்கொள்ள சிறிது பணத்தை சேமிக்கவும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இன்னமும் நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். அவர்கள் மீது எனக்கு கோவம் இல்லை.

அவர்களின் அன்பிற்காக நான் ஏங்குகிறேன். பண்டிகைகளை அவர்களுடன் கொண்டாட வேண்டும் என்பது என் கனவு. ஆனால், அவர்களுக்கென ஒரு வாழ்க்கைத் துணையும் தனிக் குடும்பமும் இருக்கிறது.

எனது தோழிகள் சொல்லும் கதைகளை நான் ரசித்துக் கேட்பேன். எனது கனவே அவர்களது விடுமுறைகள் பற்றிதான். எனது தோழிகள்தான் நான் எனது சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் எனது உண்மையான சகோதரிகள்.

அவர்களை முழுவதும் நம்பி எனது உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன்; நான் வாழ்க்கையில் தனியாக எதிர்நீச்சலடித்து சோர்வடைவதைப்போன்று உணரும்போது அவர்கள் என்னை பாசமுடன் பார்த்துக்கொள்கிறார்கள்.

என்னுடைய விடுதிப் பாதுகாவலரைத்தான் எனது உண்மையான தாயாக நினைக்கிறேன். அவரிடம்தான் ஒரு தாயின் அன்பை கண் கூடாக கண்டேன். என்னுடைய சக நண்பர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களின் குடும்பத்தாரை விடுதிப் பாதுகாவலர் அழைப்பார். ஆனால், எனக்கோ அவர்தான் என் குடும்பமே.

அவரால் முடிந்ததை அவர் செய்கிறார். அவர் எனக்கு சிறந்த ஆடைகளை அளிக்கும் தருணத்தை சிறப்பாக உணருகிறேன். ஒருவரால் நேசிக்கப்படும்போது ஏற்படும் உணர்வை என்னால் புரிந்துகொள்ள இயலுகிறது.

ஆனால், ஒருவர் பொதுவாக வாழ்க்கையில் சந்திக்க விருப்பப்படும் சில மகிழ்ச்சிகரமான விஷயங்கள் இல்லாமலும் வாழ்வதற்கு நான் கற்றுக்கொண்டுள்ளேன். உதாரணமாக எனக்கு பிடித்த உணவை சமைத்துத் தருமாறு என்னால் யாரிடமும் கேட்க முடியாது.

நான் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் இந்த விடுதியில் தங்க முடியும்.

படம்

அதன் பிறகு எங்கு செல்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் தாய்மாமா தற்போது எனக்கு உதவமாட்டார்.

எனது பள்ளி கட்டணத்தை கட்டுவதற்கு ஒருவேளை நான் வேலைக்கு செல்லக்கூட நேரிடலாம்.

ஏனெனில், நான் எனது படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். நான் கற்கும் கல்வி மட்டுமே எனது வாழ்க்கையை கட்டமைப்பதற்கான ஒரே வழி. நான் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக விரும்புகிறேன்.

நான் எனது கிராமத்திற்கு சென்றால், திருமணம் செய்து கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்படலாம்.

திருமணத்தையோ அல்லது குடும்பத்தையே நான் வெறுக்கிறேன் என்று இதற்கு பொருளில்லை; நான் முதலில் தன்னிச்சையாக இயங்குவதற்கே விரும்புகிறேன்.

நான் தக்க வயதை அடையும்போது எனக்கான வாழ்க்கைத் துணையை நானே தேர்ந்தெடுப்பேன்.

மேலும், என் வாழ்க்கை துணைவருடன் இணைந்து மிகவும் அழகாக குடும்பத்தை வளர்த்தெடுப்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.

(பிபிசி செய்தியாளர் பத்மா மீனாட்சியிடம் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட தென்னிந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்ணின் உண்மை கதை இது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது)

http://www.bbc.com/tamil/india-42835104

Link to comment
Share on other sites

கணவனை இன்னொருத்தி பறித்துக் கொண்டாள்... என்ன செய்தார் இந்த துணிச்சல் பெண் #HerChoice

கட்டிய கணவர் கைவிட்டதிலிருந்து என் மீது காதல் கொள்ளத் தொடங்கினேன்

பெண்களின் உணர்வுகளை வெளிப்படையாகப் பேசும், பிபிசியின் ஒரு முயற்சியாக வெளியாகிவரும் #Herchoice தொடரின் நான்காவது கதை இது:

ங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம். ன்று இரவு அவர் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் எனது ஒட்டுமொத்த உலகமும் சுக்கு நூறாகிவிட்டதைப் போல் நான் உடைந்து போனேன்.

பதினேழு ஆண்டு கால வாழ்க்கையில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்... மலரும் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்க, எனது பத்து வயது மகளுடன் தன்னந்தனியாக நின்றேன்.

நான் அவரிடம் பலமுறை மன்றாடினேன். ஆனால் அவரோ எங்கள் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டார். எந்தக் காரணமும் சொல்லவில்லை. அவர் மனதில் குற்ற உணர்வு துளியும் இல்லை.

உடன் பணிபுரியும் பெண் ஒருத்தியுடன் அவர் ஆழமான உறவு கொண்டிருந்தது, அவரது நண்பர்கள் மூலம் எனக்குத் தெரியவந்தது.

இதைக் கேள்விபட்டதும் துடித்துப் போனேன். அதற்கு மேலும் உயிர் வாழ விரும்பவில்லை. ஆக்ரோஷத்துடன் அதிக அளவில் விஷத்தைக் குடித்துவிட்டேன். அன்றே நான் இறந்திருக்க வேண்டியது. எப்படியோ பிழைத்துவிட்டேன்.

அவரைத் தாண்டி, எங்கள் திருமண வாழ்வைக் கடந்து, என்னால் எதையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நான் உயிருக்கு உயிராக நேசித்து திருமணம் செய்துகொண்ட எனது கணவரை இன்னொரு பெண்ணுடன் பார்க்க எனக்கு தைரியமில்லை.

நிஜத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது வாழ்க்கைத் துணையை வேறொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ள நான் தயாரில்லை.

 

 

வலியும் பொறாமையும் என்னை சூழ்ந்துகொண்டது. என் கணவர் விருப்பப்பட்டுதான் தேர்வு செய்தார் என்பதையும் மறந்து அவர் வாழ்வில் புதிதாக வந்திருக்கும் அந்தப் பெண்ணை நான் சபித்தேன்.

இவையெல்லாம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை என்று புரிந்துகொண்டேன். பல சம்பவங்கள் என் நினைவுக்கு வந்து இதனுடன் தொடர்புபடுத்த உதவின. அவர் என்னை ஏளனமாக பார்க்கத் தொடங்கினார். நான் ஒன்றும் அவ்வளவு அழகல்ல; போதுமான அளவுக்கு நான் சம்பாதிக்கவும் இல்லை.

'நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருந்தால் நீ எனக்கு கிடைத்திருப்பாய்' என்ற வார்த்தைகள் 'நீ என் வாழ்வில் வந்தது எனது துரதிர்ஷ்டம்' என்று மாறியது. 'நீ மிகவும் அழகாக இருக்கிறாய்' என்பது 'நீ எனக்கு பொருத்தமானவள் அல்ல' என்று மாறிப்போனது.

அவரது நகரத்து காதலியின் முன்னால் நான் நாட்டு பூசணிக்காய் போலத் தோன்றினேன் போலும். திடீரென்று அவர் கண்களுக்கு நான் சரியாக ஒப்பனை செய்துகொள்ளாதது போல் தோன்றியிருகிறது. 'உனக்கு ஆங்கிலம் கூட பேசத் தெரியாது; உனக்கெல்லாம் யார் வேலை கொடுப்பார்கள்?' என்பார். அவருக்குப் பொருத்தமான பெண் நானில்லை என்று தோன்றியது.

கட்டிய கணவர்

மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது முதல் நோய்வாய்பட்டால் சிகிச்சை அளிப்பது வரை அனைத்து வீட்டு வேலைகளையும் நானே பார்த்துக்கொண்டேன். நண்பர்களுடனான சந்திப்பு, விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கெல்லாம் என்னை அழைத்துச் செல்வதை நிறுத்திவிட்டார்.

நான் மிகவும் நேசித்த ஒருவர் என்னை தனியாக விட்டுவிட்டார், என்னை ஒதுக்கிவிட்டார். மெதுவாக எல்லா அன்பும் காணாமல் போனது. ஏதோ தவறு நடக்கிறது என்று தோன்றியது; அதை சரிசெய்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் ஓர் இரவில் அவர் என்னைப் பிரிந்து சென்றார்.

அவர் என்னை விட்டுச் சென்றவுடன் அவர் வேறு வீட்டில் வாழத் தொடங்கினார். நானோ எனது மகள் மற்றும் மாமனார் மாமியாருடன் அதே வீட்டில் தங்கினேன்.

நான் அங்கு இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை; ஆனால் அவர் திரும்ப வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் நான் அங்கு இருந்தேன்.

ஒவ்வொரு முறை கதவைத் தட்டும் சத்தம் கேட்கும்போதெல்லாம் அவராகத்தான் இருக்குமோ என்று ஆவலோடு ஓடிப்போய் கதவைத் திறப்பேன்; ஆனால் தபால்காரனோ அல்லது வேலை ஆட்களோ வந்திருப்பதைப் பார்த்ததும் மனமுடைந்து போய்விடும்.

இதுநாள் வரையில் என்னுடைய வாழ்க்கை அவரைச் சுற்றியே இருந்தது. எனக்கு வயதாகிவிட்டது. இது புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடிய காலமில்லை.

இந்த வாழ்கையைப் பாதுகாக்க நான் போராடவேண்டும் என்று நினைத்தேன்; நான் தனியாகப் போராடினேன். எனது உணர்வலைகளைப் புரிந்துகொள்ள என் மகளுக்கு வயது போதாது. எனது உடல் நலம் சிதைந்துகொண்டே வந்தது; இருப்பினும் அவருடைய தோள்களில் ஓய்வேடுக்கவே நான் ஏங்கினேன்.

அவர் ஏற்படுத்திய காயங்களுக்கு அவரே மருந்தளிக்கமுடியும்; என் மனதிற்கு சிகிச்சை அளிக்க அவர் வேண்டும். அவர் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார். இருப்பினும் நான் போராடினேன்.

என்றோ இறந்துவிட்ட எங்கள் திருமண வாழ்வைக் காக்க, என் வாழ்விலேயே இல்லாத ஒரு நபருக்காகத்தான் நான் போராடிக்கொண்டிருகிறேன் என்பதை உணர எனக்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

இறுதியில் நான் சோர்ந்துபோய்விட்டேன். நீதிமன்றப் படிகள் ஏறி, வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, சட்டரீதியான செலவுகளைச் சமாளித்து சோர்ந்துவிட்டேன். நான் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டேன்.

இதனால் நமது பழமைவாத சமூகத்தில் எந்த மரியாதையும் பெற்றுத்தராத 'விவாகரத்தானவள்' என்ற புதுப் பட்டம் கிடைத்தது; அப்போது எனக்கு 39 வயது. ஒரு வீடு தேடுவதே எனக்கு முதல் சவாலாக இருந்தது. நான் பல கேள்விகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. உங்கள் கணவர் எங்கே? அவர் என்ன வேலை செய்கிறார்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. எனது ஏக்கத்திலிருந்தும் வெளியே வர நான் விரும்பவில்லை. என்னுடைய தோழிகள்தான் இதிலிருந்து வெளிவர எனக்கு உதவினார்கள். அவர்கள் என் வாழ்வில் வந்த தேவதைகள்.

எனக்குள் இருந்த தைரியத்தை ஒன்று திரட்டி கணவனால் கைவிடப்பட்ட பெண் என்று இந்த சமூகம் அழைப்பதை நான் துணிச்சலுடன் ஏற்க என்னை தயார்படுத்தினார்கள். அது அவ்வளவு சுலபமானதல்ல. வெகு சில நாட்களிலேயே அவர் அப்பெண்ணை மணந்துகொண்டார்.

ஒவ்வொரு முறை அவர்களை ஒன்றாகப் பார்க்கும்போதும் எனது காயங்களின் வலி மேலும் அதிகமானது. இந்த நேரத்தில்தான் எனது பெற்றோரும் காலமானார்கள். எனது வாழ்வில் இரண்டு பாகங்கள் மட்டுமே இருந்தன- ஒன்று எனது வேலை, மற்றொன்று எனது மகள்.

கட்டிய கணவர்

எனது வேலையில் அதிக கவனம் செலுத்தினேன்; கார்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தேன். நிறைய படிப்பதிலும், எனது எண்ணங்களை வலைப்பதிவுகளில் அரங்கேற்றுவதிலும், எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கான எழுத்திலும் எனது நேரத்தை செலவழித்தேன்.

எனது கணவருக்காக சமைப்பதற்கு பதிலாக எனது தோழிகளுக்காக சமைத்தேன். விருந்துகள் வைத்தேன், குறுகிய பயணங்கள் மேற்கொண்டு புது நினைவுக் களஞ்சியங்களை உருவாக்க நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.

அவரது பிரிவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அந்த இடங்களில் எனது தோழிகளை வைத்துப் பார்க்க முயற்சித்தேன். அவர்களுடன் நேரில் உரையாடுவது, என்னைச் சுற்றி ஒரு பெரிய உலகம் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

எனது தனிமை, முகநூலில் எனது பதிவுகளுக்குக் கிடைத்த விருப்பங்கள் மற்றும் விமர்சனங்களால் நிரப்பப்பட்டது. எனது குடும்பம்தான் என் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது எனது பிரபஞ்சத்தை விரிவுபடுத்திக்கொண்டேன்.

சமுதாயத்தில் பிறர் போன்ற உரிமைகள் பெறப்படாத குழந்தைகளுக்காக பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் தன்னார்வலராக என்னை இணைத்துக்கொண்டேன்; இது எனக்கு மிகப்பெரிய சக்தியின் பிறப்பிடமாக ஆனது.

நான் சகஜ வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினேன், எனது பலம் எது என்று உணர்ந்தேன்; முனைவர் பட்டம் பெற்றேன்.

என்னிடம் இருந்து எடுக்கப்பட்டதை நான் மீட்டுக்கொண்டேன். வெட்கப்படுவதற்குப் பதிலாக, நான் சமூகக் கூட்டங்கள் மற்றும் திருமணங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

நான் அழகான புடவைகள் கட்டிக்கொண்டு நன்றாக அலங்காரம் செய்துகொண்டேன். விவாகரத்தான ஒரு பெண் எப்போதும் சோகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என் அமைதியான ஆனால் உறுதியான பதில் இதுவே.

என்னைப் பற்றி அவர்களுடைய கணிப்பால் அவர்களது கண்கள் பெரிதாய் விரியும்; ஆனால் அதை நான் எதிர்ப்பதால் என் கண்கள் பிரகாசமாய் ஒளிரும். நான் இன்னொரு வீட்டை உருவாக்கினேன்; மற்ற நாடுகளுக்கு அலுவல்பூர்வ பயணங்கள் மேற்கொண்டேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வேறொரு வேலை கிடைத்தது, என் நகரத்தைவிட்டு வெளியேறவும், வேறெங்காவது இடம் மாறவும் தைரியமான முடிவை எடுத்தேன்.

நான் ஒரு சுதந்திரமான பெண்ணாக மறுபிறவி எடுத்தேன். இன்று எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. தனியாகவும் தைரியமாகவும் என்னால் நடக்க முடியும், இருட்டிலும் கூட....

(பிபிசி செய்தியாளர் பத்மா மீனாட்சியிடம் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட தென்னிந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்ணின் உண்மைக் கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.)

http://www.bbc.com/tamil/india-42845112

Link to comment
Share on other sites

சமூக ஊடகத்தில் பல ஆண்களுடன் நட்பு கொண்ட ஒரு பெண் #HerChoice

ஒரு திருமணமான பெண் எதனால் தனது கணவனிடம் அதிருப்தி அடைவாள்? அவளது எதிர்பார்ப்புகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வாள்? அவளது உண்மைக் கதையை, நவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் பிபிசியின் சிறப்புத் தொடர் #HerChoice.

பெண்கள்

அன்று என்னுடைய முகநூல் பக்கத்தை நான் திறந்தபோது, அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைக் கண்டதும் நான் அதிர்ந்து போனேன். அவர் ஏன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்?

அப்போது எனது கணவர் வீட்டில் இல்லை; நான் தனியாகவே இருந்தேன். இருப்பினும் என்னைச் சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று நான் பயத்துடன் பார்த்தேன். இது அற்பமான ஒரு செயல்! என்னைப் பார்த்து நானே சிரித்துக்கொண்டு அந்த குறுஞ்செய்தியைப் படித்தேன்.

'ஹாய், நான் உன்னுடைய நண்பனாக வேண்டும்' என்றது அந்த குறுஞ்செய்தி.

உதட்டோரம் சிறு புன்னகையுடன், பதிலளிப்பதா அல்லது புறக்கணிப்பதா என்று தெரியாமல் சில நிமிடங்கள் அந்த குறுஞ்செய்தியையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

தெரியாத நபருக்கு நான் ஏன் பதில் அனுப்பவேண்டும்? இதுபற்றி என் கணவருக்குத் தெரிந்தால் என்னவாகும்? அவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார்?

அவரைப் பற்றிய எண்ணம் என்னைக் கோபமடையச் செய்தது. அவருக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை என்பதால், அவரைப் பொறுத்தவரை முகம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து வந்த வெறும் 'ஹாய்' என்ற குறுஞ்செய்தி வேதனைக்குள்ளாகிவிடும்.

 

 

என் வாழ்க்கை வேறு விதமாக இருந்திருந்தால், நான் நிச்சயம் இது போன்ற குறுஞ்செய்தியை நிராகரித்திருப்பேன். ஆனால் நான் மிகவும் கோபமாக இருந்ததால், அந்த மனநிலையில் 'ஹாய்' என்று மறுமொழி அனுப்பிவிட்டேன்.

அவருடைய பெயர் ஆகாஷ். அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் அவரது 'நட்பு வேண்டுகோளை' நான் ஏற்றுக்கொண்டேன்.

ஏதோ சில காரணங்களால் நான் ஒரு விமான பணிப்பெண் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தார். அவரிடம் நான் உண்மையைச் சொல்லியிருக்க முடியும் ஆனால் ஒரு விமான பணிப்பெண்ணாக என்னை அவர் கற்பனை செய்திருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது.

என்னுடைய சிறுவயதுமுதல் என்னிடம் பல பேர் நான் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்; பால் போன்ற நிறம், பாதாம் வடிவத்தில் கண்கள், கூர்மையான அம்சங்கள், நல்ல கட்டான வடிவம் கொண்ட நான் நிச்சயம் அனைவரையும் கவர்வேன் அல்லவா?

பெண்கள்

ஆனால் எனது பெற்றோர் அப்போது இருந்த அவசரத்தில், அவர்களுக்கு முதலில் பிடித்த ஒருவனையே எனக்கு திருமணம் செய்துவைத்தனர். என் கணவருக்கோ, எனது உணர்வுகளிலோ அல்லது என்மீது காதல் கொள்வதிலோ எந்த ஆர்வமும் இல்லை.

எனக்கு கணவராக வருபவர் என்னை எப்போதும் அன்போடு பார்த்துக்கொள்வார், சின்னச்சின்ன ஆச்சர்யங்கள் கொடுப்பார், எப்போதாவது எனக்கு தேநீர் போட்டுக்கொடுப்பார் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தேன்.

ஆனால் எனது கணவர் ஒரு இயந்திரம் போன்றவர். காலையில் விழிப்பார், வேலைக்குச் செல்வார், தாமதமாகவே வீடு திரும்புவார், இரவு உணவு உண்பார் பின்னர் உறங்கச் சென்றுவிடுவார்.

அவர் பிஸியாக இருப்பதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் தன் மனைவியிடம் அன்பாகப் பேச ஒருவருக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அவளைக் கட்டி அணைக்க, அவள் முகத்தை ஆசையோடு பார்க்க எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?

என் கணவருக்கு இது போன்ற எந்த உணர்வும் இல்லை; அவரைப் பொறுத்தவரையில் மனைவிக்குப் பிடித்தவற்றையெல்லாம் செய்வது அவரது அகங்காரத்தைக் காயப்படுத்திவிடும்.

 

 

நாங்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறோம் ஆனால் அதில் எந்தவித காதலும் இல்லை. உண்மையில், நாங்கள் உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் கூட ஈடுபட்டதில்லை.

எவ்வளவு சுவையாக நான் சமைத்தாலும் சரி, வீட்டை எவ்வளவு நேர்த்தியாக நான் நிர்வாகித்தலும் சரி, எனக்கு எந்த பாராட்டும் இதுவரை கிடைத்ததில்லை.

ஆகாஷ் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியதிலிருந்து நான் எனது சிந்தையைத் தொலைத்தேன். அவர் எனது புகைப்படத்தைப் பார்க்க விரும்பினார். இணையம் எனக்கு ஒரு அறிமுகமில்லாத பகுதியாகவே இருந்தது.

எனது முகநூல் பக்கத்தைக் கூட எனது கணவர்தான் உருவாக்கினார். நண்பராக வேண்டும் என்ற வேண்டுகோளை எப்படி ஏற்பது மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்றெல்லாம் அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்.

ஆனால் என்னுடைய பக்கத்தில் எந்த புகைப்படமும் இல்லை. ஏனென்றால் புகைப்படங்கள் திருடப்பட்டு ஆபாச தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக நான் கேள்விப்பட்டதனால் எனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய நான் பயந்தேன்.

பெண்கள்

ஆனால் ஆகாஷ் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். சில நேரங்களில் இது பற்றிய பேச்சைத் தவிர்க்க நான் முயற்சித்தேன்; நான் ஒரு விமான பணிப்பெண் அல்ல என்பதையும் நான் அவரிடம் சொல்லிவிட்டேன்.

என் மறுமொழியை கேட்டும் அவர் என் புகைப்படத்தை பார்ப்பதில் இன்னும் பிடிவாதமாக இருந்தார். ஆனால், என் புகைப்படத்தை நான் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட அது சாத்தியப்பட்டிருக்காது; ஏனெனில் என்னிடம் ஒரு நல்ல புகைப்படம் கூட இல்லை.

அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டிருந்ததுடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்; அடிக்கடி பல்வேறு பார்ட்டிகளிலும் கலந்துக்கொண்டிருந்தார்.

அதுபோன்ற கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளில் பெண்கள் குடிப்பது மற்றும் சிகரெட் பிடிப்பதை பற்றியும் அவர் என்னிடம் கூறியுள்ளார். அவையனைத்துமே எனக்கு புதியவை; அதாவது அறியப்படாத உற்சாகமூட்டும் உலகத்தின் கதவைப் போன்றவை.

 

 

அவரை போன்றே அவரது மனைவியும் அதிக ஊதியம் அளிக்கும் கார்ப்பரேட் நிறுவனமொன்றில் பணிபுரிந்துக்கொண்டிருந்தார். தனது மனைவி ஓய்வின்றி பணிபுரிந்துவருவதாக அவர் என்னிடம் கூறினார்; அவர்களால் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட முடியவில்லை.

"நான் ஏதோவொன்றைப் பற்றி கவலை கொண்டு இருந்தபோது என் மனைவியை கைபேசியில் அழைத்து பேச விரும்பினேன்; ஆனால் அவளோ, தான் அப்போது அலுவலக கூட்டம் ஒன்றில் பிசியாக இருப்பதாகச் சொன்னாள்" என்று ஒருநாள் அவர் என்னிடம் கூறினார்.

என்னை அதே சூழ்நிலையுடன் என்னால் முற்றிலும் தொடர்புபடுத்த முடியும். எங்களது உரையாடல் தினந்தினம் தொடர்ந்தது. அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அதனால், நான் என் வேலைகளை விரைவாக முடித்துவிட்டு, பிற்பகலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஒருநாள் ஆகாஷ் வெப் காமெராவை ஆன் செய்யுமாறு கூறினார். அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக ஆஃப்லைனுக்குச் சென்றுவிட்டேன்.

 

 

அன்றைய தினம் நான் குளிக்கக்கூட இல்லை. அவர் என்னை அப்படியே பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!

இந்நிலையை எப்படி கையாள வேண்டுமென்று தெரியாததால் அவரை நான் தவிர்க்கத் தொடங்கினேன். அதன் பிறகு, பொதுவாக எங்களது உரையாடல் நடக்கும் நேரத்தில் ஆன்லைன் செல்வதையும் தவிர்த்துவிட்டேன்.

இறுதியில் அவர் எனது முகநூல் பக்கத்தை பிளாக் செய்வதற்கு சில நாட்கள் முன்பு வரை இது தொடர்ந்தது. தவிர்க்க முடியாத அந்த சம்பவம் இன்னும் எனது இதயத்தை பிளந்துகொண்டிருக்கிறது.

எங்களுக்குள் எவ்வித உறவும் நிலவவில்லை என்றாலும் அவரது இழப்பு எனது வாழ்க்கையை வெறுமையானதாக மாற்றிவிட்டது.

ஆகாஷைவிட என்மீது எனக்கே அதீத கோபம் ஏற்பட்டது. நான் மற்றவரைச் சார்ந்திருப்பதை போன்று உணர்ந்தேன். ஏன் எனக்கென்று ஒரு தனி தொழிலும், சுதந்திரமான வாழ்க்கையும் இல்லையென்ற கேள்விகள் மேலோங்கின.

எனக்கென்று ஒரு வேலை இருந்திருந்தால் எனது வாழ்க்கையை நான் எனது விருப்பப்படி வாழ்த்திருப்பேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு சில வாரங்கள் நான் முகநூலிலிருந்து விலகியிருந்தேன்.

கண்களிடையே அந்த நிகழ்வுகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்து மனதிற்குள் எதுவுமே இல்லை என்று அர்த்தமில்லை. நாங்கள் ஒன்றாக உரையாடிய நேரங்கள் குறித்த ஞாபகங்கள் என்னைத் தொடர்ந்து ஆட்கொண்டன.

பெண்கள்

நாங்கள் உரையாடியபோது நேரம் பறந்தோடிச் சென்றது. எவ்வித காரணமுமின்றி நாள் முழுவதும் என் முகம் மலர்ந்திருந்தது.

இதுகுறித்து யோசித்துப் பார்க்கும்போதெல்லாம், எனது மெய்நிகர் உறவால் பெரும்பாலும் பயனடைந்தது எனது கணவர் என்றே எனக்குத் தோன்றும்.

என் கணவர் எவ்வித கூடுதல் முயற்சியும் எடுக்காமலேயே நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். எங்களுக்கிடையே நிலவிய வெற்று உறவிலிருந்த இடைவெளியை ஆகாஷ் நிரப்பினார்.

நான் தவறேதும் இழைக்கவில்லை. நான் என் கணவரை ஏமாற்றவில்லை; என் திருமண வாழ்வைத் தாண்டி யாருடனும் உறவு கொள்ளவுமில்லை. நான் உரையாடல் மட்டுமே செய்தேன்.

வெறும் மனைவியாக வாழ்ந்துகொண்டிருந்த எனக்குள் கனவுகளுடனும், ஆசைகளுடனும் இருந்த பெண்ணை அந்த உரையாடல் வெளிச்சம் போட்டு காட்டியது.

நான் அவரை தொடர்பு கொள்ள வேண்டுமா என்ற குழப்ப நிலை சில நாள்களுக்கு நீடித்தது. அதன் பிறகு ஒருநாள், பயனர் கணக்கொன்றை முகநூலில் காண நேரிட்டது. அதிலிருந்தவர் அழகாக இருந்தார். எனக்குள் என்ன நேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை; ஆனால் அவருக்கு நட்பு அழைப்பு விடுத்தேன்.

'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், எதற்காக எனக்கு நட்பு அழைப்பை அனுப்பினீர்கள்' என்று அவர் மறுமொழி அனுப்பினார்.

'ஏன்? திருமணமான பெண்கள் நட்பு வட்டத்தை உருவாக்கக் கூடாதா என்ன?' என்று நான் கேட்டேன். அவ்வளவுதான். அப்போது பேச ஆரம்பித்த நாங்கள் இப்போதுவரை தொடர்பிலிருக்கிறோம்.

அவருடன் எனது நட்பு உருவாக்கம் முடிந்துவிடவில்லை. அதன்பிறகு, சில பிரபலங்களுடன் புகைப்படத்தில் இருக்கும் ஒரு நபரின் கணக்கொன்றை பார்த்தேன்.

அவரது வாழ்க்கையை பற்றி மேலும் தெரிந்துகொள்வது வேடிக்கையாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது. எனவே, அவருக்கு ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பை அனுப்பினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

பிறகு எனது வாழ்க்கை எனக்கு முழுமையானதாகவும் உற்சாகமளிக்கக்கூடியதாகவும் தோன்றியது. அந்நிலையில் நான் கருவுற்றேன். எனது மகள் எனது வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டார். அவள் வந்த பிறகு எனக்கு எதற்கும் நேரமில்லாமல் போனது.

பெண்கள்

என் மகளுக்கு இப்போது மூன்று வயதுதான் ஆகிறது. ஆனால், இதன்பிறகு எனக்கென எந்த தனியுரிமையையும் கொள்வதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

சில நேரங்களில் எனக்கு யாரிடமாவது பேச வேண்டுமென்பதுபோல் தோன்றும். ஆனால், எனது கைபேசியை எடுக்கும் அந்த நொடியில் எனது மகள் ஓடோடி வந்து எனது கைபேசியில் கார்ட்டூன் காணொளிகளைக் காட்டுமாறு கெஞ்சுவாள்.

சில நேரங்களில் இது எனக்கு பெரும் வெறுப்பை உண்டாக்கும். நான் ஏற்கனவே இருந்ததைப்போன்ற பெண்ணாக என்னால் மீண்டும் இருக்க முடியுமா அல்லது ஒருவரின் மனைவியாகவும் மற்றும் தாயாகவும் இருப்பதே என் ஒரே விதியாக இருக்குமோ? என்று எண்ணி வியப்பேன்.

அதனால்தான், எனது மகளுக்கு இதைப் போன்ற சம்பவங்கள் நடக்க விடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். எனது மகளை ஒரு சார்பற்ற நபராக வளர்ப்பேன்; அதனால் அவள் தனது வாழ்க்கையில் அவளுக்குத் தேவையானதை அவளே தேர்வு செய்துகொள்வாள்!

(பிபிசி செய்தியாளர் பிரக்யா மானவால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது)

http://www.bbc.com/tamil/india-42924426

Link to comment
Share on other sites

`என் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், திருமணமாகாமல் பிறந்த குழந்தை...நான் வாழத்துணிந்தது எப்படி?’ #HerChoice

ஓர் உறவு முறிந்த பிறகு, அந்த உறவின் மூலம் கருவுற்றிருப்பது தெரியவந்தால் அவள் என்ன முடிவெடுப்பாள்? உடைந்து போவாளா அல்லது தைரியமாக முடிவெடுப்பாளா? அவளை இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்?

#HerChoice

நவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.

"நாங்கள் காதலில் மயங்கியபோது அவர் என்னோட நாட்டைச் சேர்ந்தவரா, என்னோட சாதியையோ, என்னோட மதத்தையோ சேர்ந்தவரா என்ற உண்மை எல்லாமே எனக்குத் தெரியும். ஆனா அதைப் பற்றிக் கவலைப்படல. எங்களோட லிவ்-இன் உறவு முறிந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, அவரோட குழந்தையை நான் என் வயித்துல சுமக்கத் துவங்கினேன்; ஆமாம், நான் கர்ப்பமாக இருந்தேன்.

என்னோட தோழிகள், நான் பைத்தியமாயிட்டேன்னு நெனச்சாங்க...திருமணமாகாத 21 வயது பெண்ணான நான் எனது வயித்துல வளர்ற குழந்தை எனக்கு வேணும்னு நினைச்சேன்.

நான் எனது அறிவை இழந்துட்டு வர்ற மாதிரி உணர்ந்தேன். ஏதோ தப்பு நடக்கபோவதாக எனது உள்மனசு சொன்னது. ஆனா, உண்மையிலயே எனக்கு நடந்ததைவிடவா மோசமான ஒன்று நடக்கமுடியும்?

நான் முஸ்தஃபாவை சந்திப்போ என்னோட வயசு 19. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து அழைப்பு மையம் ஒன்றில் வேலைல சேருவதற்காக ஒரு பெரிய நகரத்துல நான் அப்பத்தான் குடியேறினேன்.

முஸ்தஃபா ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆப்ரிக்கர்களுக்கே உரித்தான, உயரமான, கருப்பு நிறம். களையான தோற்றம் கொண்டவர். பிறகு என்ன, சொல்லணுங்கற அவசியமே இல்லை. அவர் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டார்.

நாங்கள் நண்பர்களானோம்; உருகினோம். இறுதியில் காதலிக்கத் தொடங்கினோம். விரைவில் ஒன்றாக வாழவும் ஆரம்பிச்சோம்.

நான் ஒரு கிறிஸ்தவப் பெண். அவர் இஸ்லாமியர். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிச்சோம், ஆனா திருமணம் செய்துக்கலாம்னு நினைக்கக்கூட எங்களுக்கு தைரியமில்லை. நாங்கள் எங்களது கனவுலகத்தில் எங்கள் எதிர்காலம் குறித்து சிந்தித்து, திட்டமிடுவதுகூட நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தாதது போலவே தோன்றியது.உறவைக்குலைத்த சந்தேகம்

அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க. எங்களை அடிக்கடி வந்து சந்திப்பார்கள்; காலம் போகப்போக நானும் அவர்களுடனும் நட்பு கொண்டேன்.

சில காரணங்களால் முஸ்தஃபா என்மேல சந்தேகப்பட ஆரம்பிச்சார். அவரது நண்பர்களில் யாரோ ஒருத்தரோட நான் உறவு வெச்சிருக்கறதா நெனச்சாரு. இதனால எங்களுக்குள் பல கருத்துவேறுபாடுகள்.

#HerChoice

மெல்ல மெல்ல அது வெறுப்பா மாறிடுச்சு; தினமும் கூச்சல்... வாக்குவாதம்... ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்துவது என எங்களது நாட்கள் கசப்பாக நகர்ந்தது. இறுதியாக நாங்கள் பிரிஞ்சுடலாம்னு முடிவெடுத்தோம்.

அந்த நேரம் ரொம்ப மோசமான காலகட்டம். நான் பல மணி நேரம் தொடர்ந்து அழுவேன்; அது எனது வேலையையும் பாதித்தது; இதனால் இருந்த வேலையும் போயிடுச்சு.

எனது சொந்த கிராமத்துக்கே திரும்பிப் போயிடலாம்னு முடிவெடுத்தேன். நாங்கள் ஒன்றாக வாழ்ந்த அந்த சின்ன வீட்டை விட்டும் அது தொடர்பான நினைவுகளை விட்டும் நான் வெளியேற விரும்பினேன்;

ஆனா, எனது மாதவிடாய் தள்ளிபோனதும் எனது எல்லா திட்டமும் வீணாப் போயிடுச்சு. அருகில் உள்ள கடை ஒன்றில் கர்ப்ப பரிசோதனை பெட்டியை வாங்கி வந்தேன்; பயந்தது நிஜமாயிடுச்சு. நான் கருவுற்றிருப்பது உறுதியானது. முஸ்தஃபாவால் நான் கருவுறுவது இது இரண்டாவது முறை. முதல் முறை அவர் கட்டாயப்படுத்துனதால நான் கருவைக் கலைத்தேன். ஆனால் இந்த முறை என்னால் நிச்சயம் முடியாது.

நான் முஸ்தஃபாவை தொடர்புகொண்டு என்னை வந்து சந்திக்கும்படி கேட்டேன். நேருக்குநேர் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்; நான் கருவுற்றிருப்பதை அவர்கிட்ட சொன்னேன்.

ஏன் கவனமாக இல்லைனு என்னை அதட்டினார்; கருவைக் கலைக்க நூற்றுக்கணக்கான நியாயங்களைச் சொன்னார்.

'இது என்னுடைய குழந்தைதான்னு நான் எப்படி நம்பறது?' என்று கேட்டார். ஆனா நான் உறுதியா இருந்தேன்; என்னுடைய முதல் குழந்தையை கருவிலேயே கலைத்தபோது, கொலை செய்ததைப் போல் இருந்தது. எனது இரண்டாவது குழந்தையையும் கொல்ற அளவுக்கு எனக்கு துணிச்சல் இல்லை.

என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எனக்கு திருமணமாகவில்லை. நல்ல வேலைகூட இல்லை. எல்லாத்துக்கும் மேல, எனது குழந்தையின் தந்தையும் அதைத் தன்னுடையதாக ஏற்கத் தயாரில்லை.

இப்படி இடிமேல இடி விழுந்தாக்கூட என் மனசுல ஒரு நம்பிக்கை இருந்துச்சு. கடவுள் எனக்கு புது வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்னு தோனுச்சு...

இப்போதுவரை என்னை கவனிக்க என்மீது அக்கறை காட்டறதுக்குனு யாருமில்லை. என் குழந்தையை என்னால நன்றாக வளர்க்கமுடியுமானு எல்லாரும் சந்தேகத்தோடு கேட்டாங்க.

நான் முன்னேறிச் செல்லவேண்டிய பாதை அவ்வளவு சுலபமானது இல்லைங்கறது எனக்குத் தெரியும். ஆனா இப்போ நான் பொறுப்பாக வாழறதுக்கு ஒரு காரணம் இருக்கு.

வயிற்றில் இருக்கும் என்னோட குழந்தைமீது எனக்கு இருக்கற அதீத அன்பு அவனை பத்திரமா இந்த உலகத்துக்குக் கொண்டுவரணுங்கற உந்துதலை எனக்கு ஏற்படுத்திச்சு.

எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருந்துச்சு. கடைசியா, தைரியத்தை வரவழைச்சுட்டு எல்லா விஷயத்தையும் என் குடும்பத்தார்கிட்ட போட்டு உடைச்சுட்டேன்.

அவருடன் எனக்கிருந்த உறவு குறித்து அவங்களுக்குத் தெரியும். ஆனா நான் கருவுற்றிருக்கிறேங்கற செய்தியைக்கேட்டு கொதிச்சுப் போயிட்டாங்க.

திருமணமாகாத தாய் என்ற எனது பட்டத்தை ஏத்துக்கறது கூட அவர்களுக்கு பெரிய கவலையா தெரியலை; ஆனா என்னோட சாதியையோ மதத்தையோ சேராத ஒரு கருப்பு நிற குழந்தைக்கு நான் தாயாகப்போறேங்கறதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்துச்சு.

எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு நான் அவங்களை சமாதானம் செஞ்சேன். ஆனா, இதப் பத்தி பேசறதை அவங்க நிறுத்தலை. இந்த கஷ்டமான நேரத்துல, என்னுடைய தோழி ஒருத்திதான் தேவதை மாதிரி எனக்கு பக்கபலமா இருந்தாள்.

மருத்துவப் பரிசோதனைகளுக்காக நான் மருத்துவமனைக்குப்போக அவள் தனது ஸ்கூட்டியை தருவாள். பிறகு, கடையொன்றில் விற்பனையாளராகவும் வேலைக்கு சேர்ந்தேன்.

இதற்கிடையில முஸ்தஃபா மீண்டும் வந்தார்; இழந்த அன்பைத் திரும்பப் பெற முயற்சி பண்ணினார். ஆனால் நான் எனது முடிவில தெளிவா இருந்தேன்.

#HerChoice

நான் பிரசவித்த நாளில், எனது தோழி என்னை அதே ஸ்கூட்டியில் மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனா. சிசேரியன் மூலம் எனக்கு குழந்தை பிறந்தது. மயக்கம் தெளிந்து நான் கண் விழிச்சுப் பார்த்தப்போ, எனது மகன் என் தோழியின் மடியில தூங்கிட்டிருந்தான்; டாக்டர் என் பக்கத்துல நின்னு என்னைப் பார்த்து சிரிச்சார்.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, எல்லாம் சரியாயிடும்கற நம்பிக்கை எனக்குள் முளைவிட்டது. முஸ்தஃபா அன்று மாலை மருத்துவமனைக்கு வந்தார். எங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சினார்; அவரது நண்பர்களை தொலைபேசியில் அழைச்சு, தான் ஒரு மகனுக்குத் தந்தையான செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்ததும் நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். ஆனா அவரோட குடும்பத்தார் கிட்ட சொல்ற அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை. மறுபடியும் சேர்ந்து வாழலாம்கற எண்ணத்தை அவர் என்கிட்ட வெளிப்படுத்தினாரு.

எங்கள் குழந்தைக்கு ஒரு இஸ்லாமிய பெயர் வைக்கனும்னு அவர் விருப்பப்பட்டார். நான் முடியாதுனு உறுதியா மறுத்துட்டேன். அவனுக்கு ஒரு கிறிஸ்தவ பெயரைத்தான் வெச்சேன். முஸ்தஃபாவை என்னால இதுக்கு மேலயும் நம்பமுடியாது.

சில நாட்களுக்குப் பிறகு எனது தாயும் உறவினரும் என்னோட இருக்க வந்தாங்க. இதற்கு மேலும் நான் தனியாக இருக்கபோவதில்லை. அதற்கு அடுத்த ஆண்டு முஸ்தஃபா அவரோட சொந்த நாட்டுக்குப் போய்ட்டார். திரும்பவேயில்லை.

எனக்கு இப்போ 29 வயசு; என் மகனுக்கு ஆறு வயசு. நான் ஒரு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்துட்டேன், ஆனாலும்கூட எனது மகனை வளர்க்கும்போது, எனக்கு பலமும் தைரியமும் பலமடங்கு அதிகரிக்கறதை என்னால உணர முடியுது.

எனக்கு இன்னும் திருமணமாகலைங்கறதையும் எனது மகன் லிவ்-இன் உறவால் பிறந்தவன் என்பதையும் எல்லார்கிட்டயும் சொல்றதுல எனக்கு தயக்கமே இல்லை. யாராவது அவனோ அப்பாவைப் பற்றிக் கேட்டால் அவனுடைய பெயருக்குப் பின்னால் முஸ்தஃபாவின் பெயரைச் சேர்ப்பதிலும் எனக்கு ஆட்சேபணையில்லை.

நான் எனது வேலை சார்ந்த குறிக்கோளை அடைய கடினமாக உழைச்சுகிட்டிருக்களதால, எனது மகன் இப்போ என் தாயாருடன் இருக்கிறான். நான் இப்போது பார்ட்டிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடிகிட்டிருக்கிறேன். எனது மகனோட வருங்காலத்துக்காக நான் இப்போதிருந்தே சேமிக்கிறேன். அவன் திறமையான உற்சாகமான சிறுவன்.

முஸ்தஃபாவுடனான என்னுடைய உறவு முற்றிலுமாக முடிஞ்சுபோச்சு. ஆனா, எப்பவுமே எனக்கு அது சிறப்பானதுதான். எப்படி வாழணும்கறதை எனக்கு கற்றுகொடுத்த உறவல்லவா அது!

இவை எல்லாத்தையும் கடந்து, ஒரு புது வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கிறேன். திரும்பவும் காதலிக்க, திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனா, எனக்கு இதுல அவசரம் இல்லை. அப்படி நடக்கனும்னு எனக்கு விதிப்பலன் இருந்தா அதுவும் நிச்சயமா நடக்கும்."

(பிபிசி செய்தியாளர் சிந்துவாசினி திரிபாதியால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

http://www.bbc.com/tamil/india-42932328

Link to comment
Share on other sites

என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்? #HerChoice

திருமணமான பெண் ஒருத்தி உறவின்போது வல்லுறவுக்கு ஆளாவது போல் உணர்ந்தால் என்ன செய்வாள்? எல்லாவற்றையும் அவள் கணவன் கட்டுப்படுத்த நினைத்தால் என்னவாகும்? நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மை கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.

என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்?

அந்த இரவு கடந்து போகாததுபோல தோனிச்சு; தலைவலியில நான் துடிச்சுபோனேன்; என்னால அழுகையை நிறுத்த முடியல.

நான் எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியல. நான் திடீரென கண் முழிச்சப்போ என் கணவர் முந்தைய இரவு என்கிட்ட கேட்ட கேள்வியோட என் படுக்கை பக்கத்துல வந்து நின்னாரு.

''நீ என்ன முடிவு பன்னிருக்க? சரின்னு சொல்லபோறியா இல்லன்னு மறுக்கப்போறியா?'' என்று என்கிட்ட கேட்டாரு.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. பேசுவதற்கு கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, '' நீங்கள் ஆபிஸ் போங்க. நான் சத்தியமா சாயங்காலம் உங்களுக்கு ஃபோன் செஞ்சு என் பதில சொல்றேன்'' என்று நான் பயத்தோட முணுமுணுத்தேன்.

''நானே உனக்கு சாயங்காலம் நான்கு மணிக்கு ஃபோன் பண்ணுவேன். எனக்கு பதில் வேணும். நீ சரின்னு சொல்ற பதில் தான் எனக்கு வேணும். அப்படி இல்லைனா தண்டனை வாங்கிக்க தயாரா இரு'' என்று என்னை மிரட்டினார்.

தண்டனைன்னு அவர் சொன்னது ஆசனவாய்வழி புணர்ச்சியைத்தான். அது எனக்கு மிகப்பெரிய வலிய கொடுக்கும்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சிருந்தும் என்னை சித்திரவதை படுத்தும் ஒரு கருவியாகவே அதை அவர் பயன்படுத்தினார்.

அன்று அவரும் அவருடைய அக்காவும் ஆபிஸுக்கு கிளம்பிட்டாங்க. அப்போ நான் மட்டும் தனியா என்னோட எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருந்தேன்.

சில மணி நேரங்களுக்கு அப்புறம் என்னோட அப்பாவுக்கு ஃபோன் பண்ண எனக்கு தைரியம் வந்துச்சு. என் கணவரோட நான் இதுக்கு மேலயும் வாழ முடியாதுன்னு அவர்கிட்ட சொன்னேன்.

என்னோட அப்பா கோபப்படுவாருன்னு நெனச்சேன். ஆனா அவருடைய பதில் எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. '' உன் பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கிட்டு அங்க இருந்து புறப்படு'' என்று அவர் சொன்னாரு.

ஒரு புத்தகம், என்னோட கல்வி சான்றிதழர்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு நான் பேருந்து நிறுத்தத்துக்கு போனேன்.

பேருந்து ஏறியதும் என்னோட கணவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். என்னோட பதில் 'முடியாது' என்பதுதான்; நான் என்னோட வீட்டுக்கு போறேன்.

அதுக்கு அப்புறம் என்னோட மொபைல நான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன். சில மணி நேரத்துல நான் என் வீட்டுக்கு போயிட்டேன்.

என்ன சுத்தி என் குடும்பத்தினர் இருந்தாங்க. எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு மாசத்துல என் கணவன் வீட்டை விட்டு நான் வெளிய வந்துட்டேன்.

என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்?

பட்டப்படிப்பின் இறுதியாண்டுல இருக்கும்போதுதான் என் கணவர் சாஹில முதன்முதலா நான் சந்திச்சேன். அவர் எல்லார்கிட்டயும் ஜாலியா பழகக்கூடிய நபர்.

அவர் கூட இருக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாள்ல நாங்க காதலிக்க ஆரம்பிச்சுட்டோம்.

நாங்க அடிக்கடி ஒண்ணா வெளிய போவோம்; மணிக்கணக்கா ஃபோன்ல பேசுவோம். என்னோட வாழ்க்கையே ரொம்ப சந்தோஷம் நிரம்பியதா இருந்துச்சு.

ஆனா இந்த காதல் வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கல. படிப்படியா எங்களோட உறவுல சமத்துவம் இல்லைனு எனக்கு புரிய ஆரம்பிச்சது. நான் எதிர்பார்த்தது இது கிடையாது.

எங்களோட உறவு எங்க பெற்றோரின் உறவு மாதிரி மாற ஆரம்பிச்சது. இதுல என்ன ஒரே ஒரு வித்யாசம்ன்னா, என் அம்மா என்ன நடந்தாலும் அமைதியா இருப்பாங்க. ஆனா பேசாம என்னால இருக்கமுடியாது.

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என் அப்பா அம்மாவிடம் கத்துவாரு. சில நேரத்துல அம்மாவை அடிச்சுடுவாரு. அப்போ அவங்க அழுவதை தவிர ஒன்னும் செய்யமாட்டாங்க.

எனக்கும் சாஹிலுக்கும் வாக்குவாதம் வந்தா அது ஒரு குழப்பமான சண்டையா மாறிடும். என்கிட்ட நெருங்க எப்பவுமே அவர் வன்முறைய கையாளுவாரு. அதுக்கு நான் மறுத்தால் கூச்சல் போடுவார்.

''நான் உன்ன என்னிக்காவது ஒரு நாள் அடிச்சுட்டா நீ என்ன செய்வ?'' என்று ஒரு நாள் அவர் என்கிட்ட கேட்டது எனக்கு நினைவிருக்கு. இதை கேட்டதும் நான் அதிர்ந்து போனேன். என்னோட கோபத்த கஷ்டப்பட்டு அடக்கிகிட்டு ''அன்றைக்கே உங்கள விட்டு பிரிஞ்சுடுவேன்'' என்று நான் பதில் சொன்னேன்.

அத கேட்ட உடனே அவர் சொன்ன பதில் என்ன மேலும் அதிரவெச்சுது. ''அப்படினா நீ என்ன உண்மையா காதலிக்கல. காதல்ல எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது''.

இது நடந்ததுக்கு அப்புறம் நாங்க ஒரு மாசமா பேசிக்கல.

எங்களுக்கு அடிக்கடி சண்டை வந்தது. பல முறை நான் இந்த உறவை முடிச்சுக்கலாம்ன்னு முயற்சிப்பேன், ஆனா ஒவ்வொருவாட்டியும் அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்பார். அவர விட்டுட்டு போய்டணும்னு நான் நினைப்பேன் ஆனா அத ஏன் என்னால செய்ய முடியலன்னு எனக்கு தெரியல.

இதுக்கு இடையில கல்யாணம் செஞ்சுக்கோன்னு வீட்டிலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்துகிட்டே இருந்தாங்க. இப்போது நான் ஒரு ஆசிரியர் பணியில இருக்கேன். நான் வகுப்புல இருந்து குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது என்னோட பெற்றோர் எனக்கு ஃபோன் பண்ணுவாங்க.

என் கல்யாண விஷயத்த பத்திதான் பேசுவாங்க. ''எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்க? சாஹில கல்யாணம் செஞ்சுக்கலாமே! அவன்மேல் உனக்கு விருப்பம் இல்லைனா உனக்கு பொருத்தமான ஒருத்தன நாங்க பார்த்து சொல்றோம். உன்னோட தங்கச்சிங்கள பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?'' என்று... சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவாங்க.

வீட்டுல ஏதாவது தவறு நடந்தால், நான் ஒரு கல்யாணம் பண்ணாம இருப்பதத்தான் காரணமா சுட்டிக்காட்டுவாங்க. எனக்கு கல்யாணம் ஆகாததுனால என் அம்மாவின் உடல்நிலை சரியில்லாம போயிடுச்சு; என் அப்பாவின் வணிகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுச்சு.

நான் ரொம்ப விரக்தி அடைஞ்சு இறுதியா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். நான் உண்மையில திருமணத்துக்கு தயாரில்ல; தன்னோட நடத்தைய மாத்திக்குறேன்னு சாஹில் பண்ண சாத்தியத்துல எனக்கு நம்பிக்கையில்ல.

என்னோட பயமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் உண்மையாச்சு. அவர் பாடுற பாட்டுக்கு ஆடுற பொம்மையா சாஹில் என்ன ஆக்கிட்டாரு.

எனக்கு கவிதைகள் ரொம்ப பிடிக்கும். என்னோட கவிதைகள முகநூலில் பதிவு செய்வேன். ஆனா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு அவர் என்ன தடுத்துட்டாரு.

நான் என்ன ஆடைகள் போடணும்னு அவரே முடிவுசெய்ய ஆரம்பிச்சாரு. படிக்குற வேலையையும் எழுதுற வேலையையும் இரவுக்குள்ளயே முடிச்சுடணும்ன்னு ஒரு நாள் அவர் என்கிட்ட சொன்னாரு; '' படுக்கைல நீ என்ன திருப்தி படுத்தலனா நான் வேறொரு பெண்கிட்ட போகவேண்டியிருக்கும்'' என்று அன்று இரவு என்கிட்ட சொன்னாரு.

நான் அவரை சந்தோஷப்படுத்துறது இல்ல என்று அவர் சொல்லுவார்; அதோட ஆபாச படங்கள் பார்த்து சில வித்தைகள் கத்துக்கோன்னு எனக்கு அறிவுரை சொல்லுவார்.

பிறகு மும்பைக்குச் சென்றால் ஹீரோ ஆகலாம் நப்பாசையில் அங்க போயிட்டாரு.

என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்?

''நீ இங்கேயே இரு, உன் வேலையை செய், என் செலவுக்கு பணம் அனுப்பு, பின் நான் வீடு வாங்க கடன் வாங்கிக்கொடு'' என்றார் அவர். இதற்குத்தான் நான் 'சரி' சொல்லணும்ன்னு எதிர்பார்த்தார். நான் சரி சொல்லாததுனால அன்று இரவு என்ன படுக்கையில தள்ளி ஆசனவாய் புணர்ச்சிக்கு என்னை வற்புறுத்தினார்.

அவர் எல்லைய தாண்டிட்டார். அன்று காலை நான் அவர விட்டுட்டு போயிட்டேன். நான் நல்ல படிச்சா பொண்ணு. என்னால சம்பாதிக்கவும் தனியா வாழவும் முடியும். சாஹில் வீட்டைவிட்டு நான் வெளிய வந்ததுல இருந்து என் மனசு சோகத்துல மூழ்கிப்போச்சு.

என்னை என் குடும்பமும் இந்த சமூகமும் எப்படி பார்க்கும்ன்னு எனக்கு பயம் வந்துடுச்சு. ஆனா அந்த பயத்தவிட அவர பிரிஞ்ச வலியத்தான் என்னால தாங்கமுடியல.

நான் என் வீட்டுக்கு போனதும் என் தலையெல்லாம் களைந்துப்போய், நான் இரவெல்லாம் அழுததால கண்கள் வீங்கிப்போய் இருந்துச்சு.

புதுசா திருமணமான பெண் ஒருத்தி புகுந்தவீட்டுக்கு போனதுக்கு அப்புறம் முதன்முறையா பிறந்தவீட்டுக்கு வரும்போது அவ்வளவு அழகா இருப்பா.

ஆனா வெளிறிய என்னோட கண்கள பார்த்து எனக்கு ஏதோ பிரச்சனைன்னு என் அக்கம்பக்கத்தாருக்குக் கூட தெளிவா தெரிஞ்சுது.

எல்லாரும் என்னென்னவோ பேச ஆரம்பிச்சாங்க. ''இவ்வளவு கொடூரமான விஷயம் உனக்கு நடந்துருக்கே'' என்று சில பேர் சொன்னாங்க. சிலரோ ''சாஹில் திரும்ப வந்து மன்னிப்பு கேட்டு உன்ன கூட்டிகிட்டு போவார்'' என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினாங்க.

சிலரோ, ஒரு பெண் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படிப்பட்ட முடிவு எடுக்கக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாருக்கும் சொல்றதுக்கு ஏதோ இருந்துச்சு ஆனா யார் என்ன சொன்னாலும் நான் என் முடிவுலயிருந்து மாறுவதாயில்ல.

சாஹிலை விட்டுப் பிரிந்து ஏழு மாசம் ஆச்சு. இப்போ நான் என் வழில போய்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரு கல்லூரியில இடம் கெடச்சிருக்கு; நான் இப்போ படிச்சுக்கிட்டே வேலையும் செய்றேன்.

விவாகரத்துக்கான விதிமுறைகளெல்லாம் இன்னும் முடியாததால நாங்க காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் போய்ட்டு வர வேண்டியதா இருக்கு. நான் காலையில எழுந்துக்கும்போதெல்லாம் அந்த இரவு பற்றிய எண்ணங்கள்தான் வருது. இப்பவும் எனக்கு நிறைய கனவுகள் வருது.

நடந்தத என்னால மறக்கமுடியல. ஆனா அதெல்லாம் மறந்து வாழ்க்கைய தொடர நான் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

காதல் மேலயும் உறவு மேலயும் எனக்கு இருக்குற நம்பிக்கை நிச்சயமா கொறஞ்சிருக்கு, ஆனா இன்னும் முழுசா உடையல.

எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுது. என்ன நானே நேசிக்க ஆரம்பிச்சதும் நான் நிச்சயம் பலமடஞ்சிடுவேன்.

தாமதமாக்காம அவரோட இந்த தவறான நடத்தையை சகிச்சுக்கிட்டு அமைதியா இல்லாம அவரை விட்டு வந்தத நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு.

அதுனாலதான் என்னோட எதிர்காலம், என் நிகழ்காலம் மற்றும் கடந்தகாலத்தவிட நல்லா இருக்கும்ன்னு நான் நம்புறேன்.

(பிபிசி செய்தியாளர் சிந்துவாசினி திரிபாதியால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட மேற்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

http://www.bbc.com/tamil/india-43010064

Link to comment
Share on other sites

திருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா? #HerChoice

திருமணமாகாத பெண் என்றால் குணமில்லாதவளா?

திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற ஒரு பெண்ணின் முடிவால் அவள் குடும்பத்தினர் சங்கடப்படுவார்களா? நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா? இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா? இல்லை தொடர்ந்து போராடுவாளா? நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.

என் தம்பிக்கு மணமகள் தேடுவதற்காக செய்தித்தாளில் திருமண வரன்கள் பக்கத்தில் இருந்த ஒரு விளம்பரத்தையே நான் உற்றுப் பார்த்துகிட்டு இருந்தேன்.

என்னோட உறவினர்களில் ஒருவர் அந்த பெண்ணுக்கு 'திருமணமாகாத அக்கா ஒருவர் இருக்கிறார்' என்ற வரியை சிவப்பு நிறத்துல வட்டமிட்டாங்க.

''அக்காவுக்கு கல்யாணம் ஆகுறவரைக்கும் நம்ம பையனுக்கு ஏத்த பொண்ணு தேடுறதுல நிறைய பிரச்னை வரும்'' என்று அவரு சொன்னாரு.

என் இதயத்துல ஈட்டிய ஏத்தின மாதிரி இருந்துச்சு. அந்த வலிய என்னால தாங்கமுடியல; அழுகைய கட்டுப்படுத்திக்கிட்டேன்.

உள்ளுக்குள்ள கோபம் கொதிச்சு எழுந்துச்சு. அவருக்கு எப்படி இவ்வளவு பிற்போக்கு எண்ணங்கள் தோன்றும்? யாரோ என் கையை கட்டிப்போட்டு வாயை அடைச்சா எப்படி இருக்குமோ அப்படி எனக்கு மூச்சு திணறிச்சு.

நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது என் தம்பியோட கல்யாணதுக்கு எந்த வகைல தடையா இருக்குதுனு சத்தம் போட்டு கத்தனும் போல இருந்துச்சு. ஆனா இந்த சூழ்நிலைல நான் அமைதியா இருப்பதே புத்திசாலித்தனம். நான் அதத்தான் செஞ்சேன்.

என் அப்பாவும் தம்பியும் இதை எதிர்ப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா மத்த உறவினர்கள் மாதிரி அவங்களும் என் உணர்வுகளை அலட்சியப்படுத்திட்டாங்க.

என் அம்மா என்ன எப்பவும் புரிஞ்சுக்குவாங்க; இதை பத்தின பேச்சு வந்தாலே அத நிறுத்த முயற்சிப்பாங்க.

ஆனா அவங்க பையனுக்கு கல்யாணம் ஆகப் போறத நெனச்சு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் கல்யாணத்த பத்தி என் பெற்றோர் கனவு கண்டதெல்லாம் ஒரு காலம்.

நான்தான் மூத்தவ என்ற காரணத்துனால எனக்குதான் முதல்ல கல்யாணம் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி. ஆனா நான் கல்யாணம் பண்ணிக்கல.

இதில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்த நான் என் பெற்றோருக்குக் கொடுக்கல. இதனால கடந்த சில வருஷமா எங்க எல்லாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டதுதான் மிச்சம்.

ஒரு நாள், பள்ளியில என் கூட படிச்ச பழைய நண்பன் ஒருவன் எனக்கு ஃபோன் பண்ணினான். ''நீ கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு எனக்கு தெரியும். ஆனா உனக்கு சில தேவைகள் இருக்கும்னு எனக்கு நிச்சயமா தெரியும். நீ விரும்பினா அந்த தேவைகள பூர்த்தி செய்ய நான் உதவி செய்றேன்'. என்று சொன்னான்.

அவனுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்றும் சொன்னான். இந்த விஷயத்தை பத்தி அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் தெரியக்கூடாது என்பதுதான் அவனோட நிபந்தனை. இத கேட்டதும் நான் அதிர்ந்து போனேன்.

என் தேவைகள் என்னன்னு எனக்கே தெரியல, ஆனா அந்த தேவைகளை பூர்த்தி செய்ய ஓர் ஆண் தேவை என்பது மட்டும் எனக்கு தெரியும். நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது மத்தவங்கள இப்படியெல்லாம் யோசிக்கவைக்கும் என்பதை என்னால பொறுத்துக்க முடியல.

என் பள்ளிக்கூடத்து நண்பன் ஒருவன் இப்படி கேட்பான் என்று நான் நெனச்சுகூட பார்க்கல. அவன் இப்படி கேட்டது எனக்கு கோபத்தை ஏற்படுதல, ஆனா இத பத்தி நெனச்சாலே ரொம்ப வருத்தமா இருக்கு. இத உதவி என்று அவன் சொன்னத நெனச்சா சிரிப்பு தான் வருது.

நான் இதுக்குமேலயும் அவனை நண்பனா நினைக்க விரும்பல. அவனை நேரில் சந்திக்கணும்னு நெனச்சாலே பயமா இருக்கு; அவன்கூட பேசவே தயக்கமா இருக்கு.

நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம தனியா இருக்கறத பத்தி யாருக்காவது தெரியவந்தா என்ன பத்தின அவங்களோட அபிப்ராயமே மாறிப்போயிடுது. இதை தொடர்ந்து காபி குடிக்கவும் மதிய உணவு உண்ணவும் அழைப்பு வந்துவிடும்.

இதெல்லாம் எனக்கு பழகிப்போச்சு. என் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன். எனக்கு பிடிச்சத தேர்வு செய்வேன்; பிடிக்காதத நிராகரிப்பேன். தனியாவே இருக்கணும்னு நான் எடுத்த முடிவுக்காக நான் வருத்தப்படல.

கல்யாணம் செஞ்சுக்கமாட்டேன் என்ற முடிவை நான் முதல் முறை என் அம்மாகிட்ட சொன்னப்போ எனக்கு 25 வயசு. நான் அப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். என்னோட லட்சியப் பாதையில பயணிக்கணும், நிறைய சாதனைகள் செய்யணும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன்.

என் அம்மாவுக்கு எல்லாமே புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். ஆனா அம்மா மத்தவங்க கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம திணறிப்போவாங்க.

'உன் மகளுக்கு எப்போ கல்யாணம்?', 'அவளுக்கு பொருத்தமான வரன் கிடைக்கலைன்னா எங்ககிட்ட சொல்லு. நாங்க பார்த்து சொல்றோம்'. என்னோட வேலைலயும் நான் முன்னேறியதுனால எனக்கு மணமகன் தேடுவது இன்னும் தீவிரமாச்சு'

ஆனா என் பெற்றோரிடம் மத்தவங்க சொன்ன மாதிரி ஓர் ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை பாதுகாப்பா இருக்கும் என்ற காரணத்துக்காக என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.

ஒரு பெண்ணிற்கான சராசரி கல்யாண வயதைத் தாண்டியும்கூட கல்யாணம் ஆகாம அவர்களுடனேயே இருக்கிறேன் என்ற எண்ணம் என் பெற்றோர் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது எனக்கு நல்லா தெரியும்.

திருமணமாகாத பெண் என்றால் குணமில்லாதவளா?

நான் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன் என்பதால் எனக்கு கல்யாணம் பண்ணியே தீரணும் என்ற என் அப்பாவின் நோக்கத்துனால எனக்கு ஒன்றில்லை இரண்டில்லை, பதினைந்து மாப்பிள்ளை பாத்தாச்சு.

அவரோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவங்க எல்லாரையும் நான் சந்திச்சேன்; ஆனா அவர்களில் யாரையும் வாழ்க்கை துணையா நான் தேர்வு செய்யல.

மற்றவர்கள் என்ன பத்தி புறம் பேசுவதை நிறுத்தல. ரொம்ப நாள் மனசுல தேக்கிவெச்ச கோபத்தின் வெளிப்பாடாத்தான் இதை பாக்குறாங்க. நான் 'தற்பெருமை கொண்டவள்', 'சுதந்திரமா இருக்கனும்ன்னு நினைப்பவள்', 'பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவள்' என்றெல்லாம் என்னை குறை சொன்னாங்க.

'முட்டாள்', 'நாகரீகமற்றவள்', 'பிடிவாதக்காரி' என்றெல்லாம் பட்டம் கொடுத்தாங்க. இப்படி செய்வதுனால அவங்களுக்கு என்ன சந்தோஷம் வந்துடப் போகுதுன்னு எனக்கு புரியல.

அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியாதப்போ, என் குணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா என் மனசாட்சி தெளிவா இருக்கு. எந்த நிலைலயும் யாருடனாவது உறவு வைத்துக்கொள்வதிலோ அல்லது லிவ்-இன் உறவில் ஈடுபடுவதிலோ எந்த தப்பும் இல்ல.

இந்த உலகம் எவ்வளவோ முன்னேறியிருக்கு.

எனக்கு எப்போ தோணுதோ அப்போ எனக்கு சுகம் தரும் செயல்களை நான் செய்வேன். பெண்கள் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக்கொண்டது போதும்.

எனக்கு வேண்டியதெல்லாம் நான் சுதந்திரமா இருக்கனும். கல்யாணம் என்பது என் பார்வைக்கு அடிமைத்தனமா தெரியுது. ஒரு பறவை போல சுதந்திரமா வானத்துல பறக்கணும். எனக்கு புடிச்ச மாதிரி என் வாழ்க்கைய வாழணும்.

எனக்கு புடிச்சா ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே இருக்கணும் இல்லைன்னா ஒரு இரவு முழுக்க வெளியிலேயே தங்கிடணும். கிளப்புக்கு, டிஸ்கோவுக்கு, கோயிலுக்கு, பூங்காவுக்கு எங்க வேணும்னாலும் நான் போவேன். வீட்டுவேலைகள் எல்லாத்தையும் செய்வேன் இல்லைனா சமைக்கக்கூட மாட்டேன்.

காலையில மாமியாருக்கு காபி போடணும், கணவருக்கு காலை உணவு சமைக்கனும், குழந்தைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் ..இது போன்ற எந்த கவலையும் எனக்கு கிடையாது.

எனக்கு தனியா இருப்பதுதான் புடிச்சிருக்கு. என்னோட சுதந்திரம் எனக்கு புடிச்சிருக்கு. இது எல்லாருக்கும் புரியும்வரை நான் இதை எத்தன முறை வேணும்னா சொல்லுவேன்.

குழந்தைகள், பெரிய குடும்பம் என்று எல்லாம் இருந்தும் தனியா இருக்கா மாதிரி உணருகிற எத்தனையோ பெண்கள நான் பாத்துருக்கேன்.

ஆனா நானோ எப்போதுமே தனியா இருக்கா மாதிரி உணர்ந்தே இல்ல. எனக்கு குடும்பமும் நண்பர்களும் இருக்காங்க. உறவுகளுக்கு நான் மதிப்பு கொடுக்குறேன்; அது எனக்கு மகிழ்ச்சிய கொடுக்குது.

கல்யாணமாகாத பெண்ணை இந்த சமூகம் பாரமா பார்க்குது. ஆனா நான் எப்பவுமே இந்த சமூகத்துக்கு பாரமில்லை. நான் உலகைச் சுற்றித் திரியறேன். எனக்கு வேண்டிய பணத்த நான் சம்பாதிக்கறேன், அத எப்படி செலவு பண்ணனும்னு நான்தான் முடிவு செய்வேன்.

நான் யாருன்னு என் வேலை மூலம் நிரூபிச்சுருக்கேன். என்னை புகழ்ந்து பல கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கு. கல்யாணமாகாத பெண் என்று என்னை கேலி செஞ்ச செய்திதாள்களெலாம் இப்போ தனியாக வாழும் என்னோட தைரியத்த புகழ்ந்து கட்டுரைகள் எழுதுறாங்க.

என் பெற்றோர் என்ன நெனச்சு பெருமைப்படுறாங்க. என் தோழிகள், வெற்றிக்கு எடுத்துக்காட்டா என்னை அவங்களோட பெண்களுக்கு சுட்டிக்காட்டுறாங்க.

இறுதியில் என் விருப்பத்த பத்தி மத்தவங்க என்ன நெனச்சாங்க என்பது முக்கியமில்லை. நான் எனக்காக ஜெயிச்சேன். எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சேன்!

(பிபிசி செய்தியாளர் அர்ச்சனா சிங்கால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட-மேற்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

http://www.bbc.com/tamil/india-43018571

Link to comment
Share on other sites

திருமணம் ஆகாமல் தாயாக வாழ்வதில் இன்பம் காணும் பெண் #HerChoice

 

திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவெடுத்தபோதிலும் தாயாக வேண்டும் என்று சங்கீதா தீர்மானித்ததேன்?

நவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவரது வார்த்தைகளில்.

her choice

மற்ற குழந்தைங்கள மாதிரி மகிழ்ச்சியான, கவலையில்லாத, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்ன்னு ஆர்வம் இருக்குற ஒரு சின்ன பொண்ணு தான் என்னோட ஏழு வயசு மகள். அவளை சுத்தி நடக்குறத தெரிஞ்சுக்கவும் அவள் வாழ்க்கையை பத்தி தெரிஞ்சுக்கவும் அவளுக்கு ஆர்வம் அதிகம்.

ஆனா, அவள் அடிக்கடி என்கிட்ட கேட்குற கேள்வி, 'அம்மா, எனக்கு ஏன் அப்பா இல்ல?' 'நான் எப்பவும் தனியா இருக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு கல்யாணம் ஆகல; அதனால தான் உனக்கு அப்பா இல்ல' என்று அவள்கிட்ட உண்மையான பதிலத்தான் சொல்லுவேன். இந்த பதில் அவளை முழுமையா திருப்தி படுதலைன்னு நான் நினைக்குறேன்.

தத்தெடுக்கப்பட்ட என்னோட மகள், தாய் மட்டும் இருக்குற தந்தை இல்லாத குடும்பத்துக்குள்ள வந்துருக்கா. ஒரு வேளை அவளுடைய பிஞ்சு மனசு இதனால குழம்பிப்போயிருக்கலாம்.

''அம்மா, ஒரு பொண்ணும் பையனும் வளர்ந்துட்டாங்கன்னா அவங்களுக்கு கல்யாணம் ஆகும். அதுக்கு பிறகு அவங்களுக்கு குழந்தை பிறக்கும்ன்னு நீங்க தானே சொல்லிருக்கீங்க. அப்படின்னா என் அம்மாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும். என்ன பெத்த அம்மா யாருன்னு நமக்கு தெரியாதது போல என் அப்பா யாரு என்பதும் நமக்கு தெரியாது. ஆனா எனக்கு அப்பா இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க'' அப்படின்னு ஒரு நாள், அவ என்கிட்ட சொன்னா. அவளுக்கு அப்போ அஞ்சு வயசிருக்கும்.

அத கேட்டதும் என் கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் வந்துச்சு. ஒவ்வொருவாட்டி அவ கேக்குற கேள்விக்கும் நான் சொல்ற பதில் அவளுக்கு எப்படிப்பட்ட உணர்வைத் தந்திருக்கும்ன்னு அன்னைக்குத்தான் எனக்கு புரிஞ்சுது. அவளுக்கு இது ஒரு சின்ன லாஜிக்தான். அந்த அஞ்சு வயசு பொண்ணு, அவளோட கேள்விக்கு அவளே பதில் கண்டுபுடிச்சுட்டா.

ஆனா என்னோட பதில் போதுமானதா இல்ல. ஒரு தாயாவும் ஒரு மனிதப் பிறவியாவும், இந்த சம்பவம் அவள் மனசுல எப்படிப்பட்ட உணர்வ ஏற்படுத்திச்சுன்னு எனக்கு புரியவெச்சுது.

her choice

'அம்மா, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ..' என்று அவ அடிக்கடி என்கிட்ட சொல்லுவா. நான் கல்யாணம் பணிக்கக்கூடாதுன்னு நினைக்கல….என்னிக்காவது ஒரு நாள் அதுக்கு வாய்ப்பிருக்கு. என்னையும் உன்னையும் நல்லா புரிஞ்சுக்குற நபர் கிடைச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்'.

அவள் வளர்ந்து பெரியவளாகி இதே கேள்வியை திரும்பவும் என்கிட்ட கேட்டா, என் பதில் இதுவாத்தான் இருக்கும். கல்யாணம் பண்ணிக்காம தனியா இருக்குறது எந்த வகையிலயும் எனக்கு வலிய கொடுக்கல. கல்யாணம் ஆகாம, ஒரு ஆணின் துணையும் இல்லாம ஒரு குழந்தைக்குத் தாயா வாழும் இந்த வாழ்க்கைப் பயணம் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு.

நான் ஆண்கள வெறுக்கல; அவங்கள ரொம்பவே மதிக்குறேன். என் மகளும் என்கிட்ட இருந்து இதையேதான் கத்துக்குறா. நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கல, ஏன் தனியா இருக்கவே விரும்புறேன் என்பதுக்கு ஒரு சாதாரணமான காரணம் மட்டும் இல்ல.

இருபது வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு கல்யாண வயசு இருக்குறப்போ எங்க சமூகத்துல பெரும்பாலானவங்க பிஸ்னஸ் செஞ்சாங்க, அதனால ஆண்கள் அதிகமா படிக்கல. படிச்சவங்கன்னு இந்த சமூகத்துல சொல்லப்படுற இளம் ஆண்கள் வெளித் தோற்றத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க.

நல்லா படிச்ச, நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட, என் வெளித் தோற்றத்தை மட்டும் பாக்காம என் அழகான மனச புரிஞ்சுக்குற ஆண்தான் எனக்கு வேணும் நினைச்சேன். இந்த தேடலும் என்ன பத்தி நானே தெரிஞ்சுக்க உதவும் ஒரு பயணமா அமஞ்சுது.

her choice

மஹாராஷ்டிராவுல இருக்குற ஒரு கிராம பகுதியில, நடுத்தர குடும்பத்துலதான் நான் பொறந்தேன். மற்ற இந்திய பெண்களை மாதிரியேதான் என்னையும் எங்க வீட்டுல நடத்துனாங்க. என் விருப்பத்துக்கு அங்க மதிப்பில்ல.

எங்க சமூகத்துல மிகவும் அரிய விஷயமான மேல் படிப்பை என் அப்பா என்ன படிக்கவெச்சாரு. நல்ல சம்பளத்தோட எனக்கு வேலையும் கெடச்சுது. நான் தன்னம்பிக்கை நிறைஞ்ச ஒரு பெண்ணா வாழ்ந்தேன்.

வாழ்க்கை செல்லச் செல்ல ஒரு சுதந்திரமான வாழ்க்கையோட மதிப்பு எனக்கு புரிஞ்சுது. என் வாழ்க்கையில வேற எந்த துணையும் எனக்கு வேணாம்ன்னு தோணிச்சு.

ஒருத்தரோட வாழ்க்கையில மிக முக்கியமான முடிவு யாரை திருமணம் செஞ்சுக்கப்போறம் என்பதுதான். அது என்னோட முடிவா மட்டும்தான் இருக்கனும். என் வாழ்க்கையை மத்தவங்க எப்படி தீர்மானிக்க முடியும்?

ஒரு ஆணோ இல்லை கணவனோ என் வாழ்க்கைத் துணையா வேணும்ன்னு எனக்கு தோணல. அதனால நான் தனியாவே இருக்கேன். ஒருவழியா என் பெற்றோர் சமாதானம் ஆகிடாங்க.

her choice

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தோட ஒரு பகுதியா சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் சார்பா அனாதை குழந்தைகளோடு என் நேரத்தை நான் செலவழிக்க தொடங்கலைன்னா என் வாழ்க்கைல எதுவுமே மாறியிருக்காது. பாடம் எடுப்பது, விளையாடுவது, குழந்தைங்களோட எல்லா நேரத்தையும் செலவிடுவது எல்லாமே எனக்கு அளவிடமுடியாத சந்தோஷத்தை கொடுத்தது. இதுக்காக நான் ரொம்பவே ஏங்கினேன்.

இருந்தாலும் குழந்தைகளுக்கு நான் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாதுன்னு ஒரு வரைமுறை இருந்துச்சு; இந்த எல்லைக்கோடு எனக்கு வலிய கொடுத்துச்சு. அப்போதான் ஒரு குழந்தைய தத்தெடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்துச்சு. ஆனா நான் எடுத்த இந்த முடிவினால பல கேள்விகள் எழுந்துச்சு.

நான் தத்தெடுக்கும் குழந்தை எப்படி எங்க குடும்பத்தோட தன்னை இணைச்சுக்கும்? அந்த குழந்தைக்கு ஒரு நல்ல தாயா என்னால இருக்க முடியுமா? அந்த குழந்தைய என்னால தனியாவே வளர்க்கமுடியுமா?

இது எல்லாமே எனக்கு நானே இரண்டு வருஷமா கேட்டுக்கிட்ட கேள்விகள். ஒரு பெண் குழந்தைய தத்தெடுக்கலாம்ன்னு முடிவு செஞ்ச பிறகும் இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு உறுதியான பதில் கிடைக்கல.

என் தோழிகள்கிட்ட பேசினேன்; பெருமூச்சு விட்டேன், என் மனசுல உருத்திய விஷயங்கள் என்னென்ன என்று எழுதினேன்.

அதுல இடம்பெற்ற முக்கியமான விஷயம் தனியான தாய் என்ற பொறுப்ப பத்திதான். என் பெற்றோர் மற்றும் நண்பர்களோட ஆதரவு இதுல எந்த அளவுக்கு முக்கியம் என்பத நான் உணர்ந்தேன்.

அழகு நிரம்பிய ஆறு மாதமேயான மகிழ்ச்சியின் குவியல், அதாவது என் மகள், எங்க வீட்டுக்கு வந்தப்போ ஒரு திருவிழா மாதிரி இருந்துச்சு. அந்த தத்தெடுப்பு மையத்துல முதலாவதா தத்தெடுக்கப்பட்ட என் மகளை வழியனுப்ப ஐம்பது பேர் அவளை சுத்தி நின்னாங்க.

அவள் எங்க வீட்டுக்கு வந்ததும், என் எல்லா சந்தேகங்களும் மறஞ்சு போச்சு. அவள் மிகவும் விரும்பப்பட்ட பேத்தியா மாறிட்டா. யார் துணையும் இல்லாம தனியான தாயா என் குழந்தைய வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு.

her choice

இறுதியில என் பெற்றோர் வீட்டுலயிருந்து வெளிய வந்து தனியா சுதந்திரமா வாழ ஆரம்பிச்சேன். எனக்கும் என் மகளுக்கும் இடையில உள்ள பிணைப்பு இன்னும் வலுவாச்சு.

நான் அவளோட உண்மையான தாய் இல்ல என்ற நினைப்பு எனக்கு வந்ததே இல்ல. அவளோட அப்பா எங்க என்று மத்தவங்க கேக்குற கேள்விகளுக்கெல்லாம், என் பொண்ணு என்னை மிகவும் நேசிப்பது; நான்தான் உலகிலேயே மிகச்சிறந்த அம்மா என்று அவள் சொல்வதும்தான் பொருத்தமான பதில்.

நான் வேலை செய்யும்போது அவள் என்னை பார்த்தா, இப்போ நீங்கதான் என்னோட அப்பா என்று சொல்லுவா! இது எனக்கு விலைமதிக்கமுடியாத ஒன்னு. தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையோட வாழக்கை அவ்வளவு எளிமையானது இல்ல.

எங்ககிட்ட இந்த சமூகம் கேட்கும் பல கேள்விகள், குறிப்பா சில சமயம் கேட்கப்படும் உணர்ச்சியற்ற கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்கணும்ன்னு நாங்க கத்துக்கிட்டு இருக்கோம்.

என் மகளோட கடந்தகால வாழ்க்கை பத்தி நிறைய பேர் கேட்பாங்க. ஆனா கடந்து போன வாழ்க்கைய பத்தி மத்தவங்க என் தெரிஞ்சுக்கணும்?

her choice

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும், எங்க வாழ்க்கையில சின்ன சின்ன சந்தோஷங்களும் அன்பான தருணங்களும் நிறைஞ்சிருக்கு. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லணும்ன்னா என் தங்கை எங்க வாழ்க்கையை பார்த்து ஈர்க்கப்பட்டு, இப்போ அவளும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கா.

தத்தெடுப்பு என் வாழ்க்கையின் மிக முக்கிய பகுதியா மாறிடுச்சு. பெற்றோரையும் குழந்தைகளையும் தத்தெடுக்கும் வழிமுறைகள பத்தி ஆலோசனை கொடுக்குறேன். என் மகளுக்கு இப்போ பள்ளிக்கூடத்துக்கு போக விருப்பமில்லை அதனால வீட்டுலயே அவளுக்கு பாடங்கள் சொல்லித்தரேன்.

அவள் முடிவுகளை அவளே எடுக்கனும்னு நான் விரும்புறேன். ஏனென்றால் இது என்னோட வாழ்க்கையின் முற்பகுதியில எனக்கு கிடைக்கல; ஆனா இப்போ ஆழமா மதிக்கப்படவேண்டிய ஒன்னு. அவளுக்கு எப்போ பள்ளிக்கூடம் போகணும்ன்னு என்கிட்ட கேட்குறாளோ அப்போ அவளை பள்ளியில சேர்ப்பேன்.

இந்த சுய அடையாளம் தான், என்ன மாதிரியே அவள அவளா வளர அவளுக்கு துணை செய்யும். எனக்கு தனியா இருக்குறதுதான் புடிச்சிருக்கு. ஆனா என் மகளோட நான் இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..!

(புனேவில் வசிக்கும் சங்கீதா பன்கின்வார் என்ற பெண்மணியிடம் பிபிசி செய்தியாளர் ப்ரஜக்தா துலப் நடத்திய நேர்காணலின் அடிப்படையில், திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட கட்டுரை இது)

http://www.bbc.com/tamil/india-43090326

Link to comment
Share on other sites

திருமண உறவாக மலர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணின் லிவ்-இன் உறவு #HerChoice

காதலிப்பது, நம்பிக்கையை உருவாக்குவது, ரிஸ்க் எடுப்பது இவையெல்லாம் மாற்றுதிறனாளி பெண்ணுக்கு மாறுபட்டதா?

நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மை கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்...

லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice

சில சமயம், எனக்கு ஒரு கை இல்ல என்பதையே அவரு மறந்துடுவாரு. ''நீ எப்படி இருக்கியோ அத முதலில் நீ ஏத்துக்கிட்டா உன்ன சுத்தி இருக்குறவங்க உன்ன எளிதா ஏத்துப்பாங்க'' என்று அவர் அடிக்கடி என்கிட்டே சொல்லுவாரு. அவருக்கு உடலில் எந்த குறையும் இல்ல; அவர் ஒரு முழுமையான ஆண். அவரால எந்த பொண்ணையும் சுலபமா தன் பக்கம் ஈர்க்க முடியும்.

ஆனா அவர் என்கூட இருக்குறததான் விரும்பினாரு. கல்யாணம் ஆகாமலே ஒரே வீட்டுல நாங்க ஒன்னா வாழத் தொடங்கி ஒரு வருஷம் ஆகிடுச்சு. கல்யாணம் ஆகாமலேயே ஒன்னா வாழலாம்ன்னு முடிவு எடுக்குறது அவ்வளவு எளிதானது இல்ல.

என் திருமணத்த பத்தின என் அம்மாவின் கவலையத் தணிக்க ஒரு வரன் தேடும் இணையதளத்துல என் சுயவிவரத்த நான் பதிவு செஞ்சதுக்கு அப்புறம்தான் இது எல்லாமே ஆரம்பமாச்சு. எனக்கு இருபத்தி ஆறு வயசானதுனால, இதுதான் கல்யாணம் செய்வதுக்கு சரியான காலம்ன்னு என் அம்மா நெனச்சாங்க.

நான் குழந்தையா இருக்கும்போது ஒரு விபத்துல என் இடது கையை இழந்தேன். அதனாலதான் எனக்கு கல்யாணம் பண்ணுறதுல என் அம்மா மும்முரமா இருக்காங்கன்னு எனக்கு புரிஞ்சுது. ஒருநாள், வரன் தேடும் இணையதளத்துல இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்துச்சு. என்ன தொடர்புகொண்டவர் ஒரு இன்ஜினியர். வேற நகரத்த சேர்ந்தவரா இருந்தாலும் அவரும் என்ன மாதிரியே ஒரு பெங்காலிதான்.

ஆனா என்னால எதுவும் முடிவு பண்ண முடியல. அதனால நான் கல்யாணத்துக்கு தயாரில்லைன்னு அவருக்கு பதில் அனுப்பினேன். 'இருந்தாலும் பரவாயில்ல. நம்ம பேசலாம்' என்று அவர்கிட்ட இருந்து உடனடியாக ஒரு பதில் வந்துச்சு.

நான் ஒரு ஃபிளாட்டுல இரண்டு தோழிகள் கூட தங்கியிருந்தேன். அவர் தேவைக்கு பயன்படுத்திட்டு என்ன ஏமாத்திடுவாருன்னு அவங்க பயந்தாங்க. இதுக்கு முன்னாடியே இரண்டு பேர் என்ன அப்படித்தான் பயன்படுத்த முயற்சி பண்ணாங்க. அடுத்து வரப்போறவரும் அதையே பண்ணிடக்கூடாதுன்னு அவங்க நெனச்சாங்க.

உண்மையில நான் ஒரு புது உறவுக்கு தயாரில்ல. ஆனா தனியா வாழவும் எனக்கு விருப்பம் இல்ல. இந்த காரணத்துனாலதான் நான் அவர்கிட்ட தொடர்ந்து பேசினேன். அவரோட பெயர 'டைம்பாஸ்' என்று என் மொபைலில் சேவ் பண்ணேன்.

ஒரு நாள் நாங்க நேரில் சந்திக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம்.

லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice

எனக்கு ஒரு கை இல்லைன்னு நான் அவர்கிட்ட ஏற்கனவே சொல்லிருந்தும் முதல் முறையா என்ன நேரில் பார்க்க போகும் அவர் என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என்று நான் பயந்தேன்.

அது பிப்ரவரி மாசம்; அன்று லேசான குளிர் இருந்துச்சு. நான் ஆபிசுக்கு போட்டுகிட்டு போகும் உடையில இருந்தேன். ஐலைனரும் லிப்ஸ்டிக்கும் மட்டும்தான் அன்று நான் போட்டுருந்த மேக்கப்.

ரோட்டுல நாங்க பேசிக்கிட்டே நடந்து போயிட்டு இருக்கும்போது எங்களுக்கு இடையில நிறைய விஷயங்கள் ஒத்துப்போனது தெரிய வந்துச்சு. கொஞ்ச நாளில் நாங்க நண்பர்களாகிட்டோம்.

அவர் அதிகமா பேசமாட்டார். ஆனா என்ன ரொம்ப நல்ல பாத்துக்கிட்டாரு. நான் வீட்டுக்கு பத்திரமா போயிட்டேனான்னு பாத்துப்பாரு. அவருக்கு லேட் ஆனாலும் சில சமயம் என்ன வீட்டுல ட்ராப் பன்னிட்டு போவாரு. வேற வழி இல்ல, நான் தனியாத்தான் போய் ஆகணும்ன்னு ஒரு சூழ்நிலை வந்தா ராத்திரி பத்து மணிக்குள்ள வீட்டுக்கு போகணும்ன்னு சொல்லுவாரு.

நான் ஒரு நல்ல மனைவியா இருக்க முடியுமான்னு எனக்கு நிச்சயமா தெரியல. ஆனா ஒரு நல்ல கணவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் எல்லாமே அவர்கிட்ட இருக்கு. எங்க உறவு எதை நோக்கி போய்கிட்டு இருக்குன்னு எனக்கு தெரியல. ஆனா ஒருவருக்கொருவர் இந்த உறவை நேசிக்க ஆரம்பிச்சோம்.

ஒரு முறை எனக்கு உடம்பு சரியில்லாம போனப்போ அவர் எனக்கு மருந்துகள் வாங்கிக்கொடுத்தாரு; அதையும் அவரே ஊட்டிவிட்டாரு. அன்று தான் முதல் முறையா அவர் என் தோளில் கை போட்டுக்கிட்டாரு. அது ஒரு அற்புதமான நாள். அதுக்கு அப்புறம் நாங்க ஒன்னா கை புடிச்சுகிட்டு நடப்போம்; அதாவது என் வலது கைய அவரு புடிச்சுப்பாரு.

சில மாசத்துக்கு அப்புறம், என் ஃபிளாட்டுல என்கூட வசிக்கும் தோழிகளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அந்த ஃபிளாட்டுக்கு என்னால தனியா வாடகை கொடுக்க முடியல. அதே நேரத்துல அவர் குடியிருந்த வீட்டுக்கு பக்கத்துக்கு வீடு காலியாச்சு. உடனே நான் அந்த வீட்டுக்கு குடியேறிட்டேன்.

நெஜத்துல, நாங்க ஒன்னா ஒரே வீட்டுல வாழலன்னு இந்த சமூகத்துக்கு காட்டிக்கத்தான் இப்படி ஒரு திட்டம்.

ஆனா என் அம்மா என்ன பாக்க வீட்டுக்கு வந்தப்போ நாங்க ஒன்னாதான் இருக்கோம்ன்னு கண்டுபுடிச்சுட்டாங்க.

இப்போ ஒருவருக்கொருவர் இன்னும் நெருக்கமாகிட்டோம்.

வீட்டு வேலைகள் எல்லாத்தையும் எந்த கஷ்டமும் இல்லாம நான் செய்வேன் என்பத அவர் கண்கூடா பாத்ததும் என் ஊனத்த பத்தின கவலைகள் எல்லாமே காத்தோட கரைஞ்சுடுச்சு. அதுக்கு அப்புறம் நாங்க வேற வேலைல சேர்ந்தோம்; வீட்டையும் மாத்திட்டோம். இந்த முறை நாங்க தயாராகிட்டோம்.

லிவ்-இன் உறவு, பாலியல் ரீதியான தேவைகள மட்டும் பூர்த்தி செய்வதில்ல, ஒருத்தரோட மனச முழுசா புரிஞ்சுக்கவும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்பது எங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். நாங்க எப்பவும் ஒன்னா ஒத்துமையா இருப்போம், ஒருத்தர ஒருத்தர் ஏத்துக்கிட்டோம் என்பதற்கான அடையாளம் அது. இந்த காரணத்துனாலதான் எங்க மனசாட்சியும் இத ஏத்துக்கிச்சு.

எனக்கும் சரி அவருக்கும் சரி, சமைக்கவே தெரியாது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா நான் எல்லாமே கத்துக்கிட்டேன். என்ன பத்தி எனக்கிருந்த சந்தேகங்களும் தெளிவாச்சு.

நான் ரொமான்டிக்கான பொண்ணா இல்லைனாலும் ஒரு நல்ல மனைவியா இருக்க எல்ல தகுதியும் எனக்கு இருக்குன்னு தெரியவந்துச்சு. அவரும் இத புரிஞ்சுக்கிட்டாரு.

ஆனா அவரோட குடும்பத்தினர் கண்களுக்கு நான் மத்த பெண்கள விட திறமை கொறஞ்சவளா தெரிஞ்சேன். அவர் குடும்பத்துக்கு ஒரே பிள்ளை. என்ன பத்தி அவர் அம்மாகிட்ட அவர் சொன்னப்போ, ''இந்த மாதிரி பொண்ணுகூட நட்பு வெச்சுகுறது தப்பில்ல; ஆனா கல்யாணம் என்ற எண்ணத்தையெல்லாம் மறந்துடு'' என்று சொன்னங்க.

லிவ்-இன் உறவில் இருக்கும் மாற்றுதிறனாளி பெண் #HerChoice

எல்லாரும் ஏன் இப்படி கற்பனை பண்ணிக்குறாங்க? அவங்க எண்ணம் என்ன சுட்டெரிக்க நான் என் அனுமதிக்கணும்? என் வாழ்கையையும் விருப்பங்களையும் நான் ஏன் வரையறை செய்யணும்?

ஒரு சராசரி பொண்ண மாதிரி எனக்கும் கனவுகள் இருக்கு. என்ன நல்லா புரிஞ்சுகுற ஒரு வாழ்க்கை துணை வேணும்ன்னு நானும் ஆசைப்பட்டேன்.

அவரோட பெற்றோர்கிட்ட என்ன ஃபோன்ல பேச வெச்சாரு; ஆனா நான் தான் அந்த ஊனமுற்ற பொண்ணுன்னு அவங்ககிட்ட சொல்லல.

முதலில் என் திறமைகள் பத்தி அவங்க தெரிஞ்சுக்கனும்ன்னு அவர் நினைச்சாரு. என் இடது கையை இழந்ததுல இருந்து, என்னால எல்லா பெண்கள மாதிரி எல்லா வேலைகளையும் செய்யமுடியும்ன்னு நிரூபிக்கவேண்டிய நிர்பந்ததுல இருந்தேன்.

இறுதியா அவங்க என்ன பாக்கவந்தப்போ, இதே பரிசோதனைய செஞ்சு பாத்தாங்க. ஒரு மனைவி செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் நான் செஞ்சத அவங்க கண்கூடா பாத்தாங்க.

காய்கறி வெட்டுவது, சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எல்லாத்தையும் ஒரே கையால என்னால செய்யமுடிஞ்சுது.

என்னோட ஊனம் என் திறமைகளுக்கு தடையில்ல என்பத அவரோட பெற்றோர் புரிஞ்சுகிடாங்க. எங்களுக்கு திருமணமாகி ஒரு வருஷம் ஆன பிறகும் எங்களுக்கு இடையில இருந்த அன்பு இன்னும் அதிகரிச்சுதான் இருக்கு.

என் குறைபாடு, எங்க காதலுக்கோ கல்யாணத்துக்கோ தடைக்கல்லா இல்ல. இப்போ, ஒரு குழந்தைய என்னால நல்ல வளர்க்க முடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு. ஆனா அதுக்கான பதிலும் எனக்குள்ளதான் இருக்கு.

என்ன நானே நம்பினா, நிச்சயம் என்ன சுத்தி இருக்கவங்களும் நான் ஒரு நல்ல தாயா இருக்கமுடியும்ன்னு நம்புவாங்க!

(பிபிசி செய்தியாளர் இந்திரஜீத் கௌரிடம் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது)

http://www.bbc.com/tamil/india-43098628

Link to comment
Share on other sites

10 நாட்களுக்கு மனைவி, தாய் என்ற பொறுப்புகளைத் துறந்த பெண் #HerChoice

நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவர்களது உண்மைக் கதைகளை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்...

#HerChoice

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு என்னைக்காவது போயிருக்கீங்களா?

இந்தியாவிற்கு வடக்குல இருக்கும் இமய மலையில இருக்குற ஒரு தொலைதூர பள்ளத்தாக்குதான் இந்த ஸ்பிட்டி.

மக்கள் தொகை குறைவான, மொபைல் சிக்னலே கிடைக்காத இடம் இது. அதனாலதான் நான் அங்க போனேன். நிம்மதியா, ஒரு சுதந்திர பறவை மாதிரி உணரத்தான் நான் அங்க போனேன்!

நான், என் தோழி, மற்றும் எங்க டிரைவர் மட்டும்தான் அங்க போனோம். அன்று ராத்திரி எங்க டிரைவர் எங்களுக்கு ஒரு பேப்பர் கப்புல நாட்டு சரக்கு ஊத்தி குடுத்தாரு. ஐயோ, என்ன ருசி! அத மறக்கவே முடியாது.

கசப்பான அந்த விஷத்த வாங்கி நாங்க குடிச்சோம்; சும்மா ஒரு சந்தோஷத்துக்காக குடிச்சோம், அவ்வளவுதான். நான் எங்க கார் மேல உக்கார்ந்திருந்தேன்; சில்லுனு வீசிய காத்து என் உடம்புக்கும் மனசுக்கும் அவ்வளவு புத்துணர்வு கொடுத்துச்சு.

முப்பது வயசுல இருக்கும் கல்யாணமான மிடில் கிளாஸ் பொண்ணுக்கு இதெல்லாம் நெனச்சு கூட பாக்கமுடியாத ஒன்னு. தெரியாத மனிதர்களுடன், தெரியாத இடத்துல, என்னுடைய கணவர் மற்றும் வீட்டின் கண்காணிப்புல இருந்து நான் விலகி இருப்பத நெனச்சா என்னாலேயே நம்ப முடியல.

இந்த த்ரில்லுக்காக மட்டும் நான் இத செய்யல. வீட்டைவிட்டு மொபைல் சிக்னலே இல்லாத ஒரு இடத்துக்கு, வருஷத்துக்கு ஒரு வாட்டியோ ரெண்டு வாட்டியோ போறதுல பல ஆழமான காரணங்கள் இருக்கு.

#HerChoice

நானும் என் கணவரும் ஓவியர்கள்; பயணம் செய்யுறது எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான பொழுதுபோக்கு. ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா பயணிச்சா, அவரு என்ன ஒரு பொறுப்பா நினைப்பாரு. எதுல பயணிப்பது, எந்த ஹோட்டலில் தங்குவது, நாள், நேரம், போன்ற எல்லாத்தையும் அவரு தான் முடிவு செய்வாரு.

என் விருப்பத்தையும் பேச்சுக்கு கேப்பாரு; ஆனா ஏற்கனவே அவர் எடுத்த முடிவுகளுக்கு நான் 'ஆமாம்' சொல்லவேண்டியதா இருக்கும்.

நான் ஒரு ஹோட்டலுக்குள்ள போறதுக்கு முன்னாடி அவரு அந்த இடத்த முதல்ல சுத்திபாப்பாரு; அவருதான் முதல்ல மெனு கார்ட கையில எடுப்பாரு. எடுத்து, நான் என்ன சாப்பிட விரும்புறேன்னு கேப்பாரு. ஹோட்டல் கதவ சாத்துறதுல இருந்து எங்க பெட்டி படுக்கைகள தூக்குறவரைக்கும் எல்லாத்துலயும் அவரு தான் முன்னிலை வகிப்பாரு.

நான் அவருக்கு ஒரு பொறுப்பு மாதிரிதான் தெரிஞ்சேன்; அவருதான் எல்லாத்துலயும் முடிவெடுப்பவரு. போதும்டா சாமி! எனக்கு நிச்சயமா ஒரு பிரேக் தேவைப்படுது! என் பையன் பிறந்ததும்தான் நான் இத இன்னும் உணர ஆரம்பிச்சேன்.

என் வேலையும் பயணங்களும் முற்றிலுமா தடை பட்டுச்சு; ஆனா என் கணவர் இதையெல்லாம் பழைய மாதிரி இப்பவும் தொடர்ந்து செய்யுறாரு.

அப்போதான் நான் தனியா பயணம் போகம்னும்ன்னு முடிவு செஞ்சேன். அப்படி நான் போகணும்ன்னா என் கணவர் தனியா வீட்டில இருந்து எங்க பையன பாத்துக்கணும்; அவரும் அதுக்கு சம்மதிச்சாரு.

#HerChoice

அவர் இல்லாத அந்த முதல் பயணம் ரொம்ப திட்டமிட்டதா இருந்துச்சு. இருந்தாலும் அவரு இரண்டு அல்லது மூணு மணிநேரத்துக்கு ஒருவாட்டி மெசேஜ் இல்லனா கால் செஞ்சு நான் போய் சேர்ந்துட்டேனா? டிராபிஃக் அதிகமா இருந்துச்சா? இதை செக் பண்ணியா? அத செக் பண்ணியான்னு கேப்பாரு.

என்னோட பாதுகாப்புல அவரு ரொம்ப அக்கறை செலுத்துறாருன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் ஃபோன் செஞ்சு நான் எங்க இருக்கேன் என்ன செய்யுறேன்னு சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.

என்ன யாரோ பாத்துகிட்டே இருக்கா மாதிரியும், யாரோட கண்காணிப்புலயோ நான் இருக்குற மாதிரியும், என் பயணத்தை யாரோ ட்ரேக் செய்யுற மாதிரியும் இருக்கும்.

அதனாலதான் மொபைல் சிக்னலே இல்லாத இடம் எதுன்னு தேட ஆரம்பிச்சேன். வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் செஞ்சு வீடு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லி, என் கணவர் சாப்பிட்டாரா இல்லையா, என் பையன் ஹோம் ஒர்க் செஞ்சுட்டானா இல்லையா என்றெல்லாம் என் இன்ப பயணத்தின்போது நான் கேட்கவே கூடாதுன்னு முடிவு செஞ்சேன்.

நான் 30 வயதிலிருக்கும், கல்யாணமான, மிடில் கிளாஸ் பெண்; இப்போ நான் ஏழு வயசு பையனுக்கு அம்மா என்பது உண்மைதான். ஆனா அது மட்டும்தான் எனக்கான அடையாளமா? கல்யாணமான ஒரு பெண், விடுமுறை நாட்கள்ல தன்னோட கணவர் கூட மட்டும்தான் வெளிய போகணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?

என் பையனோட பள்ளியில பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு நடந்துச்சு; அப்போ நான் பூட்டானுக்கு சுற்றுப்பயணம் போயிருந்தேன். அதனால என் கணவர் அந்த மீட்டிங்குக்கு போயிருந்தப்போ நடந்த விஷயத்தை என்கிட்ட சொன்னாரு. என் பையனோட நண்பனின் அம்மா என் கணவர்கிட்ட பேசிருக்காங்க.

அவங்க ரெண்டு பேருக்கு இடையில நடந்த உரையாடல் :

'உங்க மனைவி எங்க?' என்றார் அந்த பெண்.

'அவள் ஊருல இல்ல' என்றார் என் கணவர்.

'ஓ .. வேல விஷயமா போயிருக்காங்களா?'

'இல்ல இல்ல .. சும்மா ஒரு இன்பச் சுற்றுலா போயிருக்கா' என்றார் என் கணவர்.

#HerChoice

'ஐயோ! அது எப்படி? உங்கள தனியா விட்டுட்டு போயிட்டாங்களா?' என்று, என்னமோ நான் என் கணவர விட்டுட்டு ஓடி போயிட்டா மாதிரி ஒரு தொனியில அந்த பெண் பேசியிருக்காங்க. என் கணவர் அப்போ சிரிச்சுருக்காரு; அதையும் ஒரு ஜோக்கா என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாரு. ஆனா இது ஒன்னும் எனக்கு ஜோக்கா தோணல.

அதே பெண்மணிக்கும் எனக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு உரையாடல் சில மாசத்துக்கு முன்னாடி நடந்துச்சு. அப்போ

அவரோட கணவர் நீண்ட தூரம் பைக்குல பயணம் போயிருந்தாரு. அத பத்தி அவங்க நிறைய பேர்கிட்ட பெருமையா சொல்லிட்டு இருந்தாங்க.

'அவரு உங்கள விட்டுட்டு போயிட்டாரா? உங்கள தனியா விட்டுட்டா போயிருக்காரு?' என்று அப்போ நான் அவங்ககிட்ட கேக்கலையே. இந்த பெண் மட்டும் இல்ல; ஒரு பெண், கணவர் இல்லாம தன் இன்பத்துக்காக பயணம் செய்யுறது பல பேருக்கு வித்யாசமா தெரியுது; குறிப்பா எங்க குடும்பத்துக்கு.

நான் முதல் முறையா ஒரு பயணம் போக முடிவு செஞ்சது என் மாமியாருக்கு ரொம்ப விசித்திரமா தெரிஞ்சுது. ஆனா நான் ஏன் இப்படி செய்ய விரும்புறேன்னு புரிஞ்சுகிட்ட என் கணவர் அவங்களுக்கு விளக்கம் குடுத்த பிறகு அவங்க இதுக்கு தடை விதிக்கல.

ஆனா என்ன பெத்த தாயே இதை புரிஞ்சுக்க இன்னும் சில நாட்கள் ஆகும் போல. இந்த வாட்டி அவங்ககிட்ட சொல்லாமலேயே நான் கிளம்பிட்டேன். அப்புறம் அவங்க எனக்கு ஃபோன் பண்ணாங்க. 'நீ எங்க டீ போன?'

'நேத்துல இருந்து உனக்கு ஃபோன் பண்ணிகிட்டே இருக்கேன். லைனே கிடைக்கல.' என்று கேட்டாங்க.

' நான் பயணம் செஞ்சுட்டு இருந்தேன் அம்மா'

'என்னது மறுபடியும் பயணமா? எங்க? எப்போ?'

'ஆமா, சும்மா ஒரு மாற்றம் வேணும்ன்னு தோணிச்சு. இந்த வாட்டி கார்லதான் போனேன்' என்றேன்.

'சரி. உன் பையனும் கணவனும் எப்படி இருக்காங்க?' என்று கேட்டாங்க.

'அவங்களுக்கு என்ன? நல்ல இருக்காங்க. ஆனா என் கூட இல்ல. அவங்க வீட்டுல இருக்காங்க'.

'அட கடவுளே! நீயெல்லாம் ஒரு அம்மாவா? அந்த சின்ன குழந்தைய விட்டுட்டு போக உனக்கு எப்படி டீ மனசு வந்துச்சு? அம்மா நம்மள விட்டுட்டு போயிட்டாங்களேன்னு உன் பையன் படும் வருத்தம் அந்த கடவுளுக்குத்தான் தெரியும். சரி, உன் மாமியார் எப்படி இதுக்கு அனுமதிச்சாங்க?' என்றெல்லாம் அடுக்கிகிட்டே போனாங்க.

'அம்மா, என்ன ஒரு கயத்துல கட்டி போடணும்னு நெனைக்குறையா என்ன? என்று நான் கேட்டேன்.

இது எனக்கு புதுசில்ல; ஒவ்வொரு தடவை நான் பயணம் போகும்போதும் இது நடக்கும். அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லன்னு எனக்கு தோணல. ஆனா மத்தவங்க என்ன நெனைப்பாங்களோ என்ற பயம்தான் அவங்களுக்கு பெருசா தெரியுதுன்னு நான் நினைக்குறேன்.

#HerChoice

நான் யார் என்ற தேடுதலுக்காக நான் தனியா போக விரும்புறேன். என் குடும்பத்த பத்தின கவலையும் எனக்கு இருக்கு. அதே சமயத்துல என்ன நானே பாத்துக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு.

இந்த மாதிரி நான் தனியா போகும்போது பொறுப்பு, கடமை ரெண்டுமே என்னுடையதா இருக்கு. நான் பாதுகாப்பாத்தான் இருப்பேன்; நிறைய சாகசங்கள் செய்யவும் விரும்புறேன். சொல்லப்போனா ஒரு வித்யாசமான பெண் நான்.

மதுபானம் கொடுத்த, ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு எங்கள கூட்டிட்டு போன எங்க டிரைவர் ரொம்ப ஸ்மார்ட்டானவரு. அவரு கூட நாங்க ஜாலியா பேசிகிட்டு மது அருந்தினோம். அப்பப்பா! அவரு எவ்வளவு அழகா நாட்டுப்புற பாடல்கள் பாடினாரு தெரியுமா?

போன வருஷம் என் தோழி ஒருத்தி கூட நான் பயணம் போனப்போ, அந்த டிரைவர் எங்களை ஒரு ஹோட்டல்ல இறக்கி விட்டுட்டு, 'உங்களுக்கு நான் வேற ஏதாவது உதவி செய்யணுமா?' என்று கேட்டாரு.

மது கொடுப்பது பத்தியா இல்ல வேற ஏதாவது ஆண்கள ஏற்பாடு செய்வத பத்தியா, இல்ல எத மனசுல வெச்சு அவர் அப்படி சொல்லிருப்பாருன்னு நெனச்சா இப்பவும் எனக்கு சிரிப்புதான் வரும்.

இந்த அனுபவங்களும் இப்படிப்பட்ட மனுஷங்களும்தான் என் நிஜமான உலகம். இந்த அனுபவங்கள்லாம் கிடைக்கணும்னா கல்யாணமான பெண், மனைவி, அம்மா என்ற பட்டதையெல்லாம் சில நாட்களுக்கு நீக்கினா மட்டும்தான் பெற முடியும்!

(பிபிசி செய்தியாளர் அருந்ததி ஜோஷியால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட மேற்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

http://www.bbc.com/tamil/india-43172262

Link to comment
Share on other sites

கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice

நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவர்களது உண்மைக் கதைகளை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் படியுங்கள், அவளது வார்த்தைகளில்...

கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice

இதுக்கு முன்னாடி கூட என் கணவர்கிட்ட நான் பொய் சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் அதுல இருக்குற நல்லது, கெட்டத பத்தி தெரிஞ்சிகிட்டேன்.

ஆனா, இந்த முறை எதோ தெரியாத ஒண்ணுல விழுந்துட்டா மாதிரி ஓர் உணர்வு வந்துச்சு.

அந்தப் பிரச்சனை வேறு மாதிரியானதா இருந்துச்சு. என் கணவர் மது குடிச்சி அதுல பணத்த வீணடிக்குறத நிறுத்தி பணத்த சேமிக்க நான் விரும்பினேன்.

அதனால, நான் வாங்குற சம்பளத்தவிட குறைவான சம்பளத்த வாங்குற மாதிரி அவருகிட்ட சொன்னேன்.

நான் பொய் சொல்றத அவர் கண்டுபிடிச்சிட்டாருன்னா எனக்கு பயங்கரமான அடி காத்திருக்குன்னு எனக்கு தெரியும்.

இத தொடர்ந்து வீங்குன கண்ணும், தொடர்ந்து வலிக்கும் அடிவயிறும், என்னோட முதுகுல தழும்புகளும் ஏற்படும்ணு எனக்கு நல்லாவே தெரியும்.

இப்படியெல்லாம் நடக்கும்னும் தெரிஞ்சிருந்தாலும், நான் நிரந்திர வைப்பா வங்கியில் போட்டு வச்சிருக்குற பணத்த அவரால எடுக்கமுடியாதுன்னு ஒரு நம்பிக்க எனக்கு இருந்துச்சு.

என் மேடம் சொன்னதுனாலதான் அப்படி செஞ்சேன். இல்லனா, என்ன மாதிரியான பட்டிக்காட்டு பொண்ணுக்கு வங்கியில கணக்கு தொடங்கி, அதுல பணத்த போட தெரிஞ்சிருக்குமா?

மேடம் எல்லாத்தையும் விளக்கினதுனாலதான் இன்னைக்கும் நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன். இருந்தாலும் எனக்கு பதற்றமாவே இருந்துச்சு.

இந்த முறை என்னோட உடம்புதான் பணயம் வைக்கப்பட்டுச்சு. இந்த ஆபரேஷன் நடக்கும்போது பெண்கள் இறந்து போறதுக்கு வாய்ப்பு இருக்குதுனு நான் கேள்விப்பட்டிருக்கேன்.

கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சாவது போலதான் இருந்துச்சு. எனக்கு 22 வயசுதான் ஆச்சு, ஆனா பாக்குறதுக்கு 40 வயசு பொண்ணு மாதிரி இருந்தேன்.

என்னோட உடம்பு ஒல்லியாவும், உயிரற்றும் இருந்துச்சு. அதாவது, கிட்டத்தட்ட ஒரு எலும்புக்கூடு மாதிரி இருந்துச்சு.

என்னோட கண்ண சுத்தி கருவளையம் இருந்ததோட, எப்போதும் சோர்வா இருக்கறதுனால என் வயசுக்கான கலை இழந்து என் முகம் காணப்பட்டுச்சு.

நான் நடக்கும்போது, என்னோட முதுகுல கூன் விழுந்தா மாதிரி இருந்துச்சு. இதெல்லாம், வெளிய பாத்தா தெரியுற என் பிரச்னையோட அறிகுறிகள்.

அதோட ரொம்ப அதிகமா என்னோட மனசு உடைஞ்சு போயிருக்கு. ஆனா, அந்த வலிகளோட எதிரொலிப்பு கண்ணீரா மட்டுமே இருந்தது.

ஆரம்பத்துல, இதெல்லாம் நியாயமில்லைன்னு எனக்கு புரியல. எனக்கு 15 வயசுல கல்யாணம் ஆச்சு; அப்புறம் நாங்க நகரத்துக்கு வந்தோம்.

என் கணவர் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும், டைனிங் டேபிளில் சாப்பாடும், படுக்கையில நானும் அவருக்கு தேவை.

வேறும் தேவை அவ்வளவுதான். அவரு என்ன வெறும் உடம்பா மட்டும்தான் பாத்தாரு. என் உணர்வுகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கல.

ஆனா நானும் அவர்கிட்ட எதையும் எதிர்பாக்கல. என் அம்மா எனக்கு எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிருக்காங்க. எல்லாம் தெரிஞ்சும்தான் நான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன்.

எனக்கு முதலில் பெண் குழந்தை பொறந்துச்சு. அப்புறம் எனக்கு முதல் அடி கெடச்சுது. அவரு முதல்வாட்டி மதுபானம் குடிச்சாரு. எல்லா கோபத்தையும் படுக்கையில காட்டினாரு.

பிறகு எனக்கு இரண்டாவது பெண் குழந்தை பொறந்துச்சு. அப்புறம் அவரு வேலைக்கு போறத நிறுத்திட்டாரு.

கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice

அப்போ நான் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். பிறகு எனக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பொறந்துச்சு. அப்புறமும் இது எல்லாமே தொடர்ந்துச்சு.

அவரு என்ன அடிச்சாரு, நான் சேத்து வெச்ச காசுல மது வாங்கி குடிச்சாரு, படுக்கையில என் உடம்ப மட்டும் அனுபவிச்சாரு.

ஆனா நான் அமைதியாவே இருந்தேன். இதுதான் பல பெண்களோட நிலைமைன்னு என் அம்மா முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்காங்க. என் நான்காவது குழந்தைய நான் சுமக்கும்போது எனக்கு இருவது வயசு.

உயிரே இல்லாத என் உடம்பு வீங்கிப்போய் இருந்தத பாத்த என் மேடம், அதாவது நான் வேலை செய்யும் வீட்டின் முதலாளியம்மா ரொம்ப கோபமாகிட்டாங்க. ''உன்னால இன்னொரு குழந்தையை பெத்து எடுக்க முடியுமா? உன் உடம்பு அதுக்கு ஒத்துழைக்குமா?'' என்று கேட்டாங்க.

''அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க'' என்று நான் அவங்ககிட்ட சொன்னேன்.

ஒரு மாடர்ன் பெண்மணிக்கு என் வாழ்க்கை எப்படி புரியும்ன்னு நான் எனக்குள்ளயே நெனச்சுகிட்டேன்.

ஓர் ஆண் குழந்தைய பெத்தெடுக்குறவரைக்கும் என்ன மாதிரி பொண்ணுங்க தொடர்ந்து கர்ப்பமாகுறத பொறுத்துகிட்டுதான் ஆகணும்.

வங்கிக் கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்க அவங்க அறிவுரை சொன்னாங்க அவ்வளவுதான். ஆனா, குடும்ப சுமைகள் பத்தியும், சமூக அழுத்தங்கள் பத்தியும் அவங்களுக்கு விளக்குறது ரொம்பவே கஷ்டம்.

அதனாலதான் எல்லாமே அமைதியா நடக்கணும்ன்னு என் உள் மனசு சொல்லிச்சு. நான் கர்ப்பமாகியிருப்பது யாருக்கும் தெரியக்கூடாது.

எனக்கு ஒரு மகன் பிறந்தா எல்லாமே சரி ஆகிடும்ன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. தினம் தினம் அவரு என்ன அடிக்குறது, மது குடிக்குறது, படுக்கையில என்ன பாடாய் படுத்துவது எல்லாமே மாறிடும் என்று தோணிச்சு.

இந்த வாட்டி நான் நெனச்சா மாதிரியே எனக்கு ஆண் குழந்தை பிறந்துச்சு! நான் படுத்திருந்த ஹாஸ்பிடல் படுக்கை பக்கத்துல நர்ஸ் வந்து இந்த செய்திய சொன்னதும், எனக்கு அழுகையே வந்துடுச்சு.

ஒன்பது மாசமா பலவீனமான என் கர்பப்பையில என் குழந்தைய சுமந்த வலி, 10 மணிநேர சிகிச்சையில அடைந்த சோர்வு எல்லாமே அந்த பிஞ்சு முகத்த பார்த்த நொடியில மறஞ்சு போயிடுச்சு.

ஆனா அதுக்கு அப்புறமும், எதுவுமே மாறல. அந்த கொடுமைகளெல்லாம் மீண்டும் தொடர்ந்துச்சு. நான் என்னதான் தப்பு செஞ்சேன்?

நான் இப்போ ஓர் ஆண் பிள்ளையையும் பெத்தெடுத்துருக்கேன். ஆனா கொடுமை படுத்துறது என் கணவரோட பழக்கமாவே மாறிடுச்சுன்னு அப்போதான் எனக்கு புரிஞ்சுது.

என் உடம்பு ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. மறுபடியும் கர்பமாகிடுவேனோ என்ற பயத்துலயே நான் வாழ்ந்தேன். ஒரு நாள் என் மேடம், கலையிழந்த என் முகத்த பார்த்து ''உன் வாழ்க்கையில ஒரு விஷயத்த உன்னால மாத்த முடிஞ்சா, நீ எத மாத்தணும்ன்னு விரும்புவ?'' என்று கேட்டாங்க.

எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. எனக்கு என்ன வேணும்னு நான் இதுவரைக்கும் நினைச்சதில்ல; யாரும் என்ன கேட்டதும் இல்ல. ஆனா இந்த வாட்டி நான் யோசிக்க ஆரம்பிச்சேன். ஒரு வாரம் கழிச்சு, 'நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் கண்டுபுடிச்சுட்டேன்னு' என் மேடம்கிட்ட சொன்னேன்.

ஆனா அவங்க கேட்டதையே மறந்துருப்பாங்க போல; இருந்தாலும் அவங்க மறந்தா மாதிரி காட்டிக்கல.

"நான் மீண்டும் கர்பமாகக் கூடாதுன்னு நினைக்குறேன்; ஆனா, என் கணவர எப்படி தடுக்குறதுன்னு எனக்கு தெரியல.

நான்கு குழந்தைங்கள வளர்க்கும் அளவுக்கு நம்மகிட்ட காசு இல்லைன்னு பல வாட்டி நான் அவர்கிட்ட சொல்லிருக்கேன்.

ஆனா அவரால ஆசைகள கண்ட்ரோல் பண்ண முடியல. என் உடம்பு ரொம்ப பலவீனமானத அவரு பொருட்படுத்தல. குழந்தைங்கள வளர்க்கும் பொறுப்பும் அவருக்கு இல்ல என்பதால அத பத்தியும் அவரு கவலை படல".

ஒருநாள், மேடம் என்ன கருத்தடை பண்ணிக்க சொன்னாங்க. இது மட்டும்தான் உன் கையில இருக்குன்னு சொன்னாங்க.

ராத்திரி அவரு படுக்கையில செய்வத உன்னால தடுக்க முடியலைனாலும் நீ கர்பமாகாம இருப்பதையாவது இது தடுக்கும் என்று சொன்னாங்க.

கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice

இத பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நிறைய நாட்கள் ஓடி போச்சு. எனக்குள்ள பல கேள்விகளும் எழுந்துச்சு. அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி களைச்சு போன என் மேடம், ஒரு கிளினிக்கின் முகவரிய என்கிட்ட கொடுத்தாங்க.

என்ன மாதிரியே பல பெண்கள அங்க பாத்தேன். இது சீக்கிரமாவும் எளிமையாவும் செய்யக்கூடிய ஆபரேஷன்னும், ஆனா இதுல ஏதாவது தப்பா நடந்தா, உயிருக்கே ஆபத்துன்னும் அவங்க என்கிட்ட சொன்னாங்க. இத பத்தி நான் பல மாசங்கள் யோசிச்சேன்.

இறுதியா, என் கணவர் மற்றும் குழந்தைங்ககிட்ட நான் பொய் சொல்லிட்டு கிளினிக்குக்கு போனப்போ இந்த பயம் எனக்கு தலைகேறிச்சு.

ஆனா நான் ரொம்ப சோர்வா இருந்தேன். எனக்கு பயமும் விரக்தியும் அதிகமாச்சு. இதுல நிறைய ரிஸ்க் இருந்தாலும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியாவது என் கண்ட்ரோலில் இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.

அப்புறம் எனக்கு ஆபரேஷன் நடந்துச்சு. நான் பொய் சொல்லல. நான் அதுல இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆச்சு. நான் ரொம்ப பலவீனமாகிட்டேன்; வலியில துடிச்சேன்.

ஆனா இப்போ எல்லாமே சரி ஆகிடுச்சு. பத்து வருஷம் ஓடி போச்சு. இப்போ எனக்கு 32 வயசு. ஆனா அதுக்கு அப்புறம் நான் கர்பமாகல.

என் கணவரும் இத பெருசா எடுத்துக்கல. மதுபானம் குடிப்பது, என்ன அடிப்பது, என்கூட படுக்கையில சுகம் காண்பது இதுதான் என் கணவரோட வாழ்க்கை. இத விட்டா அவருக்கு வேற எதுவும் பெருசா தெரியாது.

எனக்கு என்ன தேவையோ அத நானே செஞ்சுக்குறேன். வீட்டு வேலைகள் செஞ்சு என் குழந்தைங்கள படிக்க வெக்குறேன்.

என் கணவரவிட்டு நான் போகமாட்டேன்; என் அம்மா எனக்கு எல்லாத்தையும் விளக்கிருக்காங்க. அதுமட்டும் இல்லாம என் கணவரையும் என்னால மாத்த முடியாது. அதனால இது எல்லாமே எனக்கு பழகி போச்சு.

அவரு என்ன வேண்டாம்ன்னு நினைச்சாலும் என்னால என்ன பாத்துக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என் ஆபரேஷன் தான் என் வாழ்வின் ரகசியம்.

நான் அதுக்காக பெருமைப்படுறேன். என் வாழ்க்கையில எனக்காக, எனக்காக மட்டும், என்னால ஒரு முடிவாவது எடுக்கமுடிஞ்சுத நினைச்சு சந்தோஷப்படுறேன்.

(பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யாவால் பகிரப்பட்ட வட இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மைக் கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

http://www.bbc.com/tamil/india-43182870

Link to comment
Share on other sites

  • 2 months later...
On 1/20/2018 at 3:34 AM, புங்கையூரன் said:

உயிரினங்களில் பெண் இனம் என்பது ஒரு விசித்திரமான படைப்பு!

அதனால் இயற்கை..அவளுக்குப் பல அனுகூலங்களைக் கொடுத்திருக்கின்றது!

பூவுலகில் உயிரினங்களின் இருப்பின் தொடர்ச்சியே...பெண் இனத்தில் தான் தங்கியுள்ளது!

ஆண் இனத்தை நம்பி...இயற்கை இல்லை! இயற்கை அதற்கும் மாற்று வைத்திருக்கின்றது!

'அவக்காடோ' போன்ற தாவரங்களின் பூக்கள் பகலில் ஆண் பூக்களாகவும்...இரவில் பெண் பூக்களாகவும் மாறும் இயல்புடையவை!

'ஹயினா' போன்ற சில விலங்கினங்கள்...தேவைகேற்ப ஆணாகவோ...அல்லது பெண்ணாகவோ மாறும் குணமுடையவை!

ஒரு பெண் நினைத்தால்...ஒரு தெய்வமாகவோ...அல்லது ஒரு பேயாகவோ கூட ஆகக் கூடிய வலிமை அவளிடம் உள்ளது!

அதனால் தான்...மதங்களும்...கலாச்சாரங்களும்...அவள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன!

ஒரு பெண்...விலைமாதாக மாறுவதோ...ஒரு நல்ல மனைவியாக அமைவதோ..அல்லது ஒரு காதலியாக அமைவதோ...அவள் வாழும் சூழலில் தான் தங்கியுள்ளது!

சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவள் மாறித் தான் ஆக வேண்டும்!

அது தான் இயற்கை!

எனவே....ஆண் சிங்கங்களே...உங்கள்ஈகோக்களைப் பத்திரமாக உங்களுடனேயே வைத்திருங்கள்!

நீங்கள் இல்லாமல் பெண் சிங்கங்கள் வாழ முடியும்! எனினும் பெண் சிங்கங்கள் வேட்டையாடாமல் விட்டால்.....நீங்கள் அன்றைய நாள் பட்டினி!

ஏனெனில் உங்களுக்கு வேட்டையாடத் தெரியாது!

@ புங்கையூரன், தங்களின் மேற்குறிப்பிட்ட  கருத்துடன் முற்றிலும் ஓத்துப்போகிறேன். 
 
சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவள் மாறித் தான் ஆக வேண்டும்! அது தான் இயற்கை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.