• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

படம் : ஒரு கொடியில் இரு மலர்கள்(1976).

வரிகள் : வாலி

பாடியவர் : K J ஜேசுதாஸ்

இசை : M S விஸ்வநாதன்

அலங்கார ஓவியம் அன்பெனும் காவியம்
அண்ணனின் தங்கை அங்கே

நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம்
கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

அன்பு சொன்ன வேதம் நான்
அன்று கொண்ட பாசம்
எங்கு நின்ற போதும் என்
எண்ணம் உன்னை வாழ்த்தும்
அன்னமிட்ட கைகள் நான்
அன்னை என்று சொல்லும்
கங்கை போல பொங்கும் என்
தங்கை கொண்ட உள்ளம்
கற்பனை ஒரு கோடி எந்தன் கண் வழி உருவாகி
இன்று சொப்பனம் காணுதம்மா
எங்கோ சிந்தனை ஓடுதம்மா

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

மாலை சூடி கொண்டு
என் மஞ்சள் வாழை கன்று
நாணம் பொங்க நின்று நான்
காண வேண்டும் என்று
அண்ணன் செய்த யாவும்
நீ அறிந்ததில்லை இன்று
காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று
கட்டிலில் ஓர் உறவு பின்னால்
தொட்டிலில் ஓர் உறவு
இது போல் ஆயிரம் உறவு வரும்
எங்கே அண்ணனின் நினைவு வரும்

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம் : ஒரு கொடியில் இரு மலர்கள்(1976).

புரட்சி 
ஏக் பூல் தோமாலி என்ற இந்திப்படத்தின் காப்பி என்று எண்ணுகிறேன்.
யாழில் ஆராதனா ஏக் பூல் தோமாலி இரண்டும் நிறைய நாள் ஓடிய படங்கள்.
இணைப்புக்கு நன்றி.

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

படம் : கப்பல் ஒட்டிய தமிழன்(1961)

வரிகள் : சுப்ரமணிய பாரதி

இசை : G ராமநாதன்

பாடியவர்கள் : P B சீனிவாஸ் & P சுசீலா..

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)

நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)

Share this post


Link to post
Share on other sites

கண்போன போக்கிலே கால் போகலாமா.....!   😁

Share this post


Link to post
Share on other sites

படம் : அன்னை (1962) பாடியவர்கள்: P B .ஸ்ரீனிவாஸ் - P.சுசீலா
இசை: R .சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

 ....
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

....
காவியக் கண்ணகி இதயத்திலே ஆ...
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊரறியும்
கோவலன் என்பதை ஊரறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

....
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

...
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

...
ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

...
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

Share this post


Link to post
Share on other sites

சரவணப் பொய்கையில் நீராடி.....!  🌺

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

படம் : மீண்ட சொர்க்கம் (1960)

வரிகள் : கண்ணதாசன்

இசை : T சலாபதி ராவ்

பாடியோர் : A M ராஜா & P சுசீலா

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்

ராஜா:
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

ராஜா:
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மண மேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்

ராஜா:
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: ஓஹோ..

ராஜா:
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

Share this post


Link to post
Share on other sites

நீயே கதி ஈஸ்வரி.....!   🌺

Share this post


Link to post
Share on other sites

செய்யும் தொழிலே தெய்வம்......!    😁

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

படம் : கலோ மிஸ்ரர் ஜமீன்தார்( 1965)

வரிகள் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர் : P சுசீலா

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே..
...
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ...
...
(இளமை...)
...

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

 அந்த கால பயிர்ச்செய்கை பாடல்

படம் : பழனி (1965 )

வரிகள் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியோர் : TMS & PBS & சீர்காழி கோவிந்தராஜன்.

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்.

Share this post


Link to post
Share on other sites

எனக்கொரு மகன் பிறப்பான்......!   😁

Share this post


Link to post
Share on other sites

படம் : தர்மம் தலை காக்கும் ( 1963 )

வரிகள் : கண்ணதாசன்

இசை: K V மகாதேவன்

பாடியோர் : T M சவுந்தரராஜன் & P சுசீலா

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்


முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து -
கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து -
நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காத்து..

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் -
சொல்லைக்கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் -
இடைகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

Share this post


Link to post
Share on other sites

படம் : மங்கையர் திலகம் (1955)

பாடியவர் : ஜிக்கி

இசை : S தட்சிணாமூர்த்தி

வரிகள் : கண்ணதாசன்

ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

சிறு மலர் பேசும்
செய்தியும் கூறும்
சிங்கார எண்ணங்கள் சேர்க்கும்
இளமை காலம்
இனிமை யாகும்
இளமை காலம்
இனிமை யாகும்
இன்பம் கூரும்
கவிதை யாகும்
ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

யவ்வன வாழ்வில்
செங்கனி மாது
சந்தோஷம் கொண்டாடும் போது
உலகம் யாவும்
அழகில் ஆடும்
உலகம் யாவும்
அழகில் ஆடும்
உள்ளம் தோரும்
கலைகள் கூடும்
ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா
ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்

டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

Share this post


Link to post
Share on other sites

அடுத்தவன் போட்ட  தாளத்துக்கு எல்லாம் ஆடாதே ஆடாதே .....!   😁

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

கருப்பு வெள்ளையில் வெளிவரா திரைபடம் ..

படம்  : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று..(1978)

இசை : இளையராஜா

வரிகள் : வாலி

பாடியவர்கள் : S ஜானகி & P ஜெயசந்திரன் .

வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் (வானம்)

விண் மீன்கள் தாலாட்ட பூந்தென்றல் சீராட்ட
மலர் காமன் பாராட்ட
இரு கண்கள் சந்திப்பு நகை மாலை முல்லைப்பூ
பாடல் ஒன்று பாடச் சொல்லி
காதல் தேவன் ஆணையிட்டானோ....(வானம்)

நீராடும் தீர்த்தங்கள் தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
இனி மாலை நேரங்கள் கலைச் சோலை ஓரங்கள்
தோகை ஒன்று பக்கம் வந்து
ஆடும் என்று சேதி சொல்லுங்கள்....(வானம்)

வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் (வானம்)

 

Share this post


Link to post
Share on other sites

ஒருவர் மனதை ஒருவர் அறிய .....!  😁

Share this post


Link to post
Share on other sites

படம் : எங்க அம்மா சபதம்(1974)

வரிகள்: கண்ணதாசன்

இசை :விஜயபாஸ்கர்

பாடியோர் : SP பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க  வந்தது உறவு
சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமமாகும் காட்சி உண்டு
பூ மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் பிறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா..

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் .....!  😁

Share this post


Link to post
Share on other sites

                இரசிக்கத்தானே இந்த அழகு .....!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம்: சபாஷ் மீனா(1958)
வரிகள்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோடி, பி.சுசீலா

காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் பிரேமையினாலே

காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ..

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம் : வல்லவன் ஒருவன் (1966)

இசை : வேதா

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : TMS & P சுசீலா

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது

இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும் போதே…கைகளினாலே
வேடிக்கை செய்யவும் வேண்டும்
அதில் ஆடி வரும்…இன்பம் ஓடி வரும்

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
பாட்டுக்கு யார் துணை வேண்டும்
தோட்டத்து பூவை மார்புக்கு மேலே
சூடிட யார் சொல்ல வேண்டும்
இங்கு யாருமில்லை…இனி நேரமில்லை

இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது

செண்பகப் பூவில் வண்டு விழுந்து
தேன் குடித்தாடுதல் போலே
சேர்ப்பதை சேர்த்து…பார்ப்பதை பார்த்து
வாழ்ந்திட துடிப்பதனாலே
இனி பிரிவதில்லை…உன்னை விடுவதில்லை

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது

இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது

Share this post


Link to post
Share on other sites

மண்ணை நம்பி மரம் இருக்கு கண்ணே ....!   😁

Share this post


Link to post
Share on other sites

பாடும் குரல் இங்கே .....!  😄

Share this post


Link to post
Share on other sites

படம் : பாலூட்டி வளர்த்த கிளி (1976)

வரிகள்: கண்ணதாசன்

இசை : இளையராஜா

பாடியவர் : S ஜானகி

கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
.
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கள்ளம் இல்லை முள்ளும் இல்லை பூவிலே
கண்ணா ஓடோடி வா ராஜா வா ராஜா வா
.
கொலைகொலையா முந்திரிக்கா  
 நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
.
மான் வளர்த்த குட்டி ஒரு மூனு - அந்த
மூனும் ஒரு குடும்பம்
பாலூட்டி வந்ததந்த மானு - அதன்  
பாசம் ஒரு உலகம்
சிரிச்சா அதுவும் சிரிக்கும்
அம்மானை எப்போதும் நாம் காப்போம்
சிறிய வயசு உனக்கும் எனக்கும்  
பெரிய மனசு நமக்கு இருக்கு

கண்ணா ஓடோடி வா ராஜா வா
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
out
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கள்ளம் இல்லை முள்ளும் இல்லை பூவிலே
கண்ணா ஓடோடி வா ராஜா வா
.
எல்லோருக்கும் தந்தை அந்த சாமி அது  
எங்கோ குடி இருக்கு
கல்லானசாமிக்கொரு தூது அது
எங்கே துணை இருக்கு
எடுக்க அணைக்க வளர்க்க அன்பென்னும்  
நூலாலே நம்மை இணைக்க
அல்லும் பகலும் அவரை நினைக்க  
அன்பை நினைச்சி நெருங்கி இருக்க

கண்ணா ஓடோடி வா ராஜா வா
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி

கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கள்ளம் இல்லை முள்ளும் இல்லை பூவிலே
கண்ணா ஓடோடி வா ராஜா வா ராஜா வா
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சந்தர்ப்பங்கள் வளங்கப்படும்போதுதான் ஒவ்வொருவரது அடையாளமும் வெளிவரும். நல்ல தொகுப்பாளர் ஆனால் சமய என்கின்றபோது மிகச் சாதாரண லொஜிகையும் (?) விட்டு விலகுகிறாரோ எனத் தோன்றுகிறது. "சேலத்தில் 1971-ல் பெரியார் நடத்திய பேரணியில் கலந்துகொண்ட பெரியார் தொண்டர் திருச்சி செல்வேந்திரன் நக்கீரனுக்கு அளித்த பேட்டி. ரஜினிகாந்த் பேசியதை கேட்டீர்களா? அந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது?  டிரக்கில் ராமன், சீதை "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' கட் அவுட் வைத்து ஊர்வலம் நடந்தது. ரஜினி சொன்னதுபோல நிர்வாணமாக அல்ல, முழு உடையோடு, அலங்காரங்களோடு தான் இருந்தது. ஊர்வலத்துக்கு தி.மு.க. அரசு கடுமையான தடை போட்டிருந்தது. ஊர்வலம் வரும்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், ஜன சங்கத்தினரும் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தனர். போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்து, சாலையின் இருபக்கமும் நிற்க வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குரூப்பை சுற்றியும் வட்டமாக போலீசார் நின்றனர்.   ஊர்வலத்தில் ஒரு டிரக்குக்கு நான் இன்சார்ஜ். அதில்தான் ராமன், சீதை சிலைகள் இருந்தன. சிலைகள் தூக்கிக் கொண்டு வருவதாக கோஷங்கள் மட்டும்தான் எழுப்பினார்கள். கறுப்புக் கொடி காட்டிய கும்பலில் ஒருவர் எங்களை நோக்கி செருப்பால் அடித்தார். நான் உள்பட இரண்டு பேர் டிரக்கில் நின்றுகொண்டிருந்தோம். சிலை எங்களைவிட உயரமாக இருந்தது. அவர் அடித்த வேகத்தில் செருப்பு சிலை மீது பட்டு கீழே விழுந்தது. சடசடவென்று இரண்டு, மூன்று செருப்புகள் விழுந்தன. இதைப் பார்த்த தி.க.வினர் கைதட்டினார்கள். ஏனென்றால் ஜனசங்கத்தினரே சிலை மீது அடிக்கிறார்களே என்று. அதற்குப் பிறகு கோபம் வந்து இன்னும் வேகமாக அடித்தார்கள். அதில் ஒரு செருப்பு என் முகத்தில் பட்டது. அப்போது கீழே ஊர்வலத்தில் இருந்த ஜனங்கள் வண்டியில் ஏறி சிலையை அடிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு அப்புறம் நாங்களும் ஒரு அடி அடித்தோம். இதுதான் நடந்தது. அதற்குப் பிறகு ஊர்வலம் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அரை மைல் தள்ளி பெரியார் டிரக்கில் வந்துகொண்டிருந்தார். "துக்ளக்' பத்திரிகையில் பெரியாரே ராமரை அடிக்கிற மாதிரியும், கலைஞர் கைத்தட்டுகிற மாதிரியும் சொல்கிறார்களே?  அது அவர்களே போட்ட ஒரு கார்டூன். நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு போனதா?  விசாரணை நடந்தது. நீதிபதி, "அவ்வளவு உயரம் ஏறி பெரியார் அடித்திருக்க முடியாது. அது நம்பும்படியாக இல்லை' என்று சொன்னார். வழக்கு தள்ளுபடியானது. நிர்வாணமாக கொண்டு வந்தார்கள் என்று ரஜினி சொல்கிறார்?  இல்லவே இல்லை. அந்த படத்தைப் பார்த்தாலே தெரியுமே. அந்த படங்கள் இருந்தால், எடுத்து பார்த்தால் தெரியும். ரஜினி இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன?  அரசியல்தான். இப்போது இதனை ஒரு ஆயுதமாக எடுக்கிறார்கள்."   இன்றைய நக்கீரனில் வெளிவந்த கட்டுரை . 28-01-2020
  • அன்று தமிழரின் வரலாறுகள் அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க.... அதை இன்று ஆராய்ச்சி செய்பவர்களை நையாண்டிகள் செய்வது ஒரு புறம். வெள்ளைத்தோல்கள் செய்த ஆராய்ச்சிகளில் தமிழர் சம்பந்தமான தடயங்கள் எதுவுமில்லை என்பவர்கள் ஒருபுறம். கீழடியை தோண்டத் தோண்ட மூடுபவர்கள் ஒரு புறம். தமிழ்  தமிழினம் எவ்விதத்திலும் உயர்ந்து விடக்கூடாது என்பதில் பிற கலாச்சாரங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது கண்கூடாகவே தெரிகின்றது. எம்மவர்கள் எதிரியையும் தலையில் வைத்து கோண்டாடுவதில் திறமை வாய்ந்தவர்கள்.இதை காலம் காலமாகவே பார்த்து வருகின்றோம். அதை கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரும் கண்டு களித்தோமே. இலங்கையின் தமிழ் பிரதேசங்களில்  பௌத்த விகாரைகளும் முஸ்லீம் குடியேற்றங்களும் வேகமாக பரவி வருகின்றதாம். எனவே இன்றைய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் போல் அன்றைய காலகட்டத்திற்கேற்ப ஒரு மாற்றுக்கருத்து மாணிக்கமாவது பிறந்தே தீரும்.ஏனெனில் தமிழினத்தின் தலைவிதி அப்படி
  • Sri Lanka confirms first case of coronavirus -health official Reuters January 27, 2020 11:46 AM EST COLOMBO — Sri Lanka has confirmed the first case of coronavirus in the country, a senior Sri Lankan health official said on Monday. “A Chinese lady, who is in her 40s, arrived on the 19th as a tourist and fell ill on the 25th and was confirmed as having the coronavirus following a test on Monday,” Sudath Samaraweera, the chief epidemiologist with Sri Lanka’s Ministry of Health, told Reuters, adding that this marks the first confirmed case in the island nation. The new flu-like virus, first reported in the Chinese city of Wuhan, has killed more than 80 people and infected more than 2,700 others. Although most cases identified remain in China, more than a dozen other countries have so far reported cases. (Reporting by Waruna Karunatilake in Colombo; Writing by Euan Rocha; Editing by Alex Richardson)    
  • உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்! குணமாக்கக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவிற்கு 106 பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர். அந்நாட்டை நிலைகுலையச் செய்திருக்கும் இவ்வைரஸ் தொடர்பில் மருத்துவர்கள் தங்கள் முயற்சிகள் அனைத்தையும் முடுக்கி விட்டிருக்கின்றனர். சில நகரங்களை அரசு தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. சீனாவில் தங்கியிருக்கும் பிரஜைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தங்களிடம் மருந்து இருப்பதாகவும் அரசு அனுமதியளித்தால் சீனா செல்லத் தயார் எனவும் சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர்,     https://www.ibctamil.com/world/80/135996?ref=home-imp-parsely
  • தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி By A.Pradhap     இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டு தொடரை கைப்பற்றியது.  தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து வசம் போட்டியின் போது, பெப் டு ப்ளெசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்களை வீசிமுடிக்க தவறியுள்ளது. இதனை அவதானித்த நடுவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்ட பின்னர், போட்டி மத்தியஸ்தரான எண்டி பைக்ரொப்ட் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். நடுவர்கள் முறையீட்டின் அடிப்படையிலும், பெப் டு ப்ளெசிஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்க அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான விதிமுறைகளின் படி, அணியானது குறித்த நேரத்தில் ஓவர்களை நிறைவுசெய்ய தவறினால், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இருந்து ஓவருக்கு தலா 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும். அதன்படி, மூன்று ஓவர்கள் வீசத் தவறிய தென்னாபிரி க்க அணிக்கு, 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகளை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணிக்கு, தற்போது 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அணி 24 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  http://www.thepapare.com/south-africa-fined-docked-six-championship-points-for-slow-over-rate-tamil/