யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

படம் : வரபிரசாதம்(1976)
இசை: R.கோவர்த்தன்

இசை (உதவி) : இளையராஜா

வரிகள்: புலமைப்பித்தன்;
பாடியவர்கள்:வாணிஜெயராம், K.J.ஜேசுதாஸ்; 

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,
விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல,

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,  
உள்ளம் நெகிழ்ந்தான்,  
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
அன்பான தெய்வம்,  அழியாத செல்வம்,
பெண் என்று வந்தால் என்என்று சொல்வேன்???....

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,  
உள்ளம் நெகிழ்ந்தான்,

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்கை நலமாக வேண்டும்,
நடமாடும் கோவில், மணவாளன் பாதம்,
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்,
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்,
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை...

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்
ஆஹாஹஹஹா.....

Share this post


Link to post
Share on other sites

பாடும் குரல் இங்கே ......!  🌻

Share this post


Link to post
Share on other sites

மண்ணை நம்பி மரம் இருக்கு.....!  😀

Share this post


Link to post
Share on other sites

படம் : ஆடி பெருக்கு(1962)

இசை : AM ராஜா

பாடியோர் : AM ராஜா & P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்

ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் இரு
காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார்

பெண்:
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
பண்ணறியா மனிதர் முன்னே வீணையை வைத்தார்
ஆண்:
பண்ணறிந்தும் மீட்டு முன்னே யாழைப் பறித்தார் யாழைப் பறித்தார்
பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார்

பெண்:
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்

ஆண்:
முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே

பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்

Share this post


Link to post
Share on other sites

படம் : குமாரவிஜயம் (1976)

வரிகள்: பூவை.செங்குட்டுவன்

இசை: G.தேவராஜன்

பாடியோர் : K.J ஜேசுதாஸ் & P.சுசீலா

கன்னி ராசி என் ராசி
காளை ராசி என் ராசி...
ஆ...
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது  
பொறுந்தாவிட்டால் சன்யாசி

கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது  
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
ஒரு பக்க காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது
உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த பெண்மை இது
பெண்மை இது
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம் சமரசமா
சமரசமா
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு
மயங்க விடு

கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
பொறுந்தாவிட்டால் சன்யாசி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு.......!   😀

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

படம் : அச்சாணி(1978)

இசை : இளையராஜா

பாடியவர்: S.ஜானகி.

வரிகள்: வாலி

மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே ......
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
.மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எல்லோரும் வாழவேண்டும்........!    😀

Share this post


Link to post
Share on other sites

திரைப்படம்: கைதி கண்ணாயிரம்
(1959)
இசை: K V.மகாதேவன்
வரிகள் : மருதகாசி
பாடியோர்:  P சுசீலா, மாஸ்டர் ஸ்ரீதர்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக்கொஞ்சி................

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்(நஞ்சை)
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளியில் சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்

சபாஷ்....

(கொஞ்சிக்கொஞ்சி)

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது( அக்கம்)
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்

சபாஷ்..

(கொஞ்சிக்கொஞ்சி)

தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ

புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்

சபாஷ்...

Share this post


Link to post
Share on other sites

படம்: வீட்டுக்கு வீடு(1970)
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SPB & LR ஈஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
              அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
               உங்கள் முகம் அதிசய கனவு
              நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு

ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில்
             பறவை பறக்கும் அழகோ
             தேவியின் வெண்நிற மேனியில்  
            விளையாடும் பொன்னழகு
பெண்: லாலாலா...லாலா....லாலாலா....
ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில்
             பறவை பறக்கும் அழகோ
             தேவியின் வெண்நிற மேனியில்  
             விளையாடும் பொன்னழகு
பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்  
              மயங்கி களிக்கும் அழகோ
              காதலின் ஆனந்த போதையில்  
             உறவாடும் உன்னழகு
ஆண்: லாலாலா...லாலா....லாலாலா....
பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்  
              மயங்கி களிக்கும் அழகோ
             காதலின் ஆனந்த போதையில்  
             உறவாடும் உன்னழகு  
ஆண்: கற்பனை அற்புதம்  
பெண்: காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்
ஆண் :கற்பனை அற்புதம்  
பெண்: காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என
              தேடி அணைக்கும் அழகே
              மைவிழி நாடகப் பார்வையில்
              கலை நாலும் சொல்லிவிடு
பெண்: பாரெனும் மெல்லிய பனியிலும் ஓடிய
              பருவகால இசையே
             பார்த்தது மட்டும் போதுமா
            ஒரு பாடம் சொல்லிவிடு
ஆண்: வந்தது கொஞ்சமே
பெண்: வருவதோ ஆயிரம்
ஆண்: ஒவ்வொரு நினவிலும்
பெண்: உலகமே நம்மிடம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
             நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு

Share this post


Link to post
Share on other sites

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்......!  😁 

Share this post


Link to post
Share on other sites

படம்: குங்குமம் (1963)

வரிகள்:கண்ணதாசன்

இசை: K V மகாதேவன்

பாடியோர்:TMS & P சுசீலா

பெண்:-
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,

ஆண்:-

தூங்காத., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,

பெண்:- தூங்காத கண்ணென்று.., ஒன்று..,,

ஆண்:-

முற்றாத இரவொன்றில்.., நான்வாட..,
முடியாத..,கதையொன்று.., நீ.., பேச.., முற்றாத இரவொன்றில்.., நான்வாட.., முடியாத..,கதையொன்று.., நீ.., பேச..,

பெண்:-

முத்தாரம்தாளாமல்.., உயிரொன்று சேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,
முத்தாரம்தாளாமல்.., உயிரொன்றுசேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,

ஆண்:-
 
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

பெண்:-

யாரென்னசொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது.., யாரென்ன சொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது..,

ஆண்:-
 
தீராத.., விழையாட்டு.., திரைபோட்டு விழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று.., தீராத.., விழையாட்டு.., திரைபோட்டுவிழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று..,

பெண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

ஆண்:-

வெகுதூரம்.., நீசென்று.., நின்றாலும்..,
விழிமட்டும்.., தனியாகவந்தாலும்.., வெகுதூரம்.. நீசென்று.., நின்றாலும்., உன்.., விழிமட்டும், தனியாகவந்தாலும்..,

பெண்:-

வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று.., வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று..,

ஆண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,
ஆண்:- துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று..,

பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,

ஆண்:- தாங்காத.., மனம்என்று.., ஒன்று..,

பெண்:- ஆகா.., ஆ.., ஆகா.., ஆ..

ஆண்:- தந்தாயே.., நீஎனைக்கண்டு.., தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., -

 

Share this post


Link to post
Share on other sites

முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா......!  😁

Share this post


Link to post
Share on other sites

என்னை பார்த்து .....!   😀

Share this post


Link to post
Share on other sites

வண்டொன்று வந்தது வா என்று சொன்னது.......!   😁

Share this post


Link to post
Share on other sites

மனமே முருகனின் மயில் வாகனம்....!  😁

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும் ஜேம்ஸ் கெலஹர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்       படத்தின் காப்புரிமை Getty Images சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற உணவுகள் சாப்பிடுவது அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாதிப்பு ஏற்படுவதை நிரூபிக்கும் முழுமையான ஆதாரமாக அவர்களுடைய ஆய்வு இல்லை. ஆனால் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகம் சாப்பிடுதலுக்கு இட்டுச் செல்கின்றன என்று கூறப்படும் ஆய்வுகள் நடைபெறும் சூழ்நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இன்னும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அல்ட்ராபதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை? தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைப் பொருத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கலோரி உணவு என்பது ``பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்'', அவற்றில் அடங்குபவை பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள். ``பதப்படுத்திய உணவுகள்'' என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, பன்றி இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி, டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன், பீர் போன்றவை. அடுத்து வருவது ``அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள்'' தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும். ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கலந்திருந்தால், அது அநேகமாக அல்ட்ரா பதப்படுத்திய உணவுப் பொருளாகக் கருதப்படும் என்று நவர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைரா பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். இதற்கான உதாரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம். பதப்படுத்திய இறைச்சி வகைகள், காலை உணவு தானியங்கள், அல்லது தானிய கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து மிகுந்த குளிர்பானங்கள், சிக்கன் இறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட ரொட்டி, பீஸ் பிஸா , போன்ற ``சாப்பிடுவதற்குத் தயாராக'' உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள். கண்டறிந்த விஷயங்கள் எவ்வளவு மோசமானவை? ஸ்பெயினில் உள்ள நவர்ரா பல்கலைக்கழத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19,899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர். அல்ட்ரா பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்கிற்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர். பாரிஸ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள இரண்டாவது ஆய்வில் 105,159 பேர் ஐந்து ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அல்ட்ரா பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இருதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது அதில் கண்டறியப்பட்டது. அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை சாப்பிடுவோரில் 100,000 பேரில் 277 பேருக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வந்தன. இதைக் குறைவாக சாப்பிடுவோரில் 100,000 பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது. குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அல்ட்ரா பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், ``அடுத்து வரும் தசாப்தங்களில் இருதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்'' என்று பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை Getty Images ஆகவே இந்த உணவுகள் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா? ``இதற்கான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன'' என்று டவ்வியர் கூறுகிறார். ``சுதந்திரமான ஆய்வுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை'' அவர் சுட்டிக்காட்டுகிறார். பதப்படுத்திய அல்ட்ரா உணவுகள் ``மிக நிச்சயமாக'' ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பு குறித்து கடந்த ஆண்டு ஒரு இணையத் தொடர்பு உருவாக்கப்பட்டது. இந்த சவால் 100 சதவீதம் நிச்சயமானது. அதிகமாகப் பதப்படுத்திய உணவு மற்றும் ஆரோக்கியக் குறைபாட்டுக்கு இடையில் உள்ள தொடர்பு பற்றி ஆய்வுகள் பரிசீலித்துள்ளன. ஆனால் எதனால் என்ன பாதிப்பு, இரண்டில் எந்த விஷயம் இதற்குக் காரணம் என்று நிரூபிக்க முடியவில்லை. அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புகைப்பிடித்தல் போன்ற மற்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களும் உள்ளன. இதைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் பொருத்தமான எல்லா விஷயங்களுமே இதில் கவனிக்கப்பட்டன என்பதற்கான உத்தரவாதம் கிடையாது என்று தி ஓப்பன் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியர் கெவின் மெக்கோன்வே கூறியுள்ளார். ``இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் உள்ளன - ஆனால் இன்னும் நான் உறுதி செய்யும் நிலையில் இல்லை'' என்கிறார் அவர். அல்ட்ராபதப்படுத்திய உணவுகள் ஏன் கெடுதலானவை? அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் பற்றிய முதலாவது ஆய்வில், மக்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற தன்னார்வர்கள் சாப்பிட்ட ஒவ்வொரு கைப்பிடி உணவையும் அமெரிக்க தேசிய ஆரோக்கிய நிலையங்களின் பேராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்கு கண்காணித்தனர். அல்ட்ரா பதப்படுத்திய உணவுகளைத் தந்தபோது, அவர்கள் தினமும் 500 கலோரிகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டனர். அவை சக்தி அடர்வு மிக்கவை. ஆனால் ஊட்டச் சத்துகளும், நார்ச்சத்துகளும் குறைவு. உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிலையில், வெவ்வேறு உணவுகள் மூலமாக நிறைய சேர்க்கைப் பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியக் கேடாக முடியும். சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதால் மக்கள் இதை அதிகம் சாப்பிடுகிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போன்ற ஆரோக்கியமான உணவுகளை, உணவுப் பட்டியலில் இருந்து தள்ளி வைக்கிறார்கள் - ஐஸ்கிரீம் கிடைக்கும் போது வாழைப்பழத்தை யார் விரும்புவார்கள்? இந்த விஷயங்கள் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பயனுள்ள ஆலோசனை எதுவும் உண்டா? படத்தின் காப்புரிமை Getty Images அல்ட்ரா பதப்படுத்திய உணவு என்ற வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆரோக்கியத்துக்கான ஆலோசனை மிகவும் பழக்கமானது தான்: மத்திய தரைக்கடல் பகுதி மக்களின் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொள்வது அது. குறைந்தபட்ச அளவுக்கு பதப்படுத்திய உணவுகள் அல்லது பதப்படுத்தாத உணவுகள் இந்த உணவுப் பழக்கத்தில் அடங்கும். இதில் பழங்கள், காய்கறிகள், மீன், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், அவரை வகைகள் மற்றும் முழு தானியங்களில் இதில் அடங்கும் என்று பிரிட்டன் இருதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகர் விக்டோரியா டெய்லர் கூறுகிறார். ``இந்த உணவுப் பழக்கத்துடன், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது ஆகியவை இருதயம் மற்றும் ரத்த ஓட்ட நோய்கள் ஏற்படுவதன் ஆபத்தைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது'' என்கிறார் அவர். அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் மீது வரி விதிப்பது, விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளைப் பரிசீலிக்கலாம் என்று பேராசிரியர் பெஸ்-ரஸ்ட்ரோலோ கூறுகிறார். ஆதாரங்களின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அல்ட்ராபதப்படுத்திய உணவு என்ற லேபிள் முட்டாள்தனமானதா? படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்த வகையான பிரெட் சாப்பிடுவதால் ஏதாவது வேடுபாடுகள் தோன்றுகிறதா? நிச்சயமாக நிறைய விமர்சனங்கள் உள்ளன. உணவுக்கு அல்ட்ரா பதப்படுத்திய உணவு என லேபிள் செய்வது தொடர்ச்சியாக இல்லாமல் போகலாம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தில் சத்துணவு மற்றும் ஆரோக்கியத் துறை நிபுணராக இருக்கும் டாக்டர் குண்டர் குன்லே கூறுகிறார். ``அதிக பதப்படுத்தல் செயல்பாடுகள் மற்றும் கூட்டுப் பொருள்கள் சேர்க்கப்படும் பாலாடைக் கட்டி அல்ட்ரா பதப்படுத்திய உணவாகக் கருதப்படாமல், கொறிப்பு உணவை அவ்வாறு கருதுவதற்குக் காரணம் இதுதான். ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் பரவலான உணவு வகைகளை இணைத்து வகைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்குப் பயன் தரக் கூடியது என்பதை பரிந்துரைகளுக்கான அடிப்படையாக அது கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப் பட்டுள்ளன.  
    • உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது. உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன. கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு இருப்பதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமை WTI Image caption வீட்டிற்குள் நுழைந்த புலி புலிகளின் வாழ்விடமாகவும் இருப்பதால் 2006ம் வருடம் புலிகள் காப்பகாமாகவும் அறிவிக்கப்பட்டது காசிரங்கா தேசிய பூங்கா. மேலும், யானை, நீர் எருமை , பன்றி மான், சதுப்பு மான் எனப்படும் மான்வகைகள், பல வகையான பறவைகள் என எண்ணற்ற வன உயிரினங்கள் வாழ்கின்ற பகுதி இது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவின் பெரும்பரப்பு வெள்ளம் சூழ்ந்து காணப்படுறது. இப்பூங்காவின் 95 சதவீத நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கி விட்ட நிலையில் அங்கு வாழும் வன உயிர்கள் உயிருக்கு போராடும் மோசமான நிலை உருவாகியுள்ளது. படத்தின் காப்புரிமை WTI அசாம் மாநில வனத்துறையினரும், இந்திய கானுயிர் அறக்கட்டளை,விலங்குகள் நல பன்னாட்டு நிதியம் அமைப்புகளை சார்ந்தோரும் உள்ளூர் மக்களின் உதவியோடு இணைந்து வெள்ளத்தில் தத்தளிக்கும் உயிரினங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர். காசிரங்காவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கானுயிர் அறக்கட்டளை நிறுவனத்தினரிடம் காசிரங்கா தேசிய பூங்காவில் வாழும் காட்டுயிர்கள் நிலை குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் பேசியது பிபிசி தமிழ். அவர்கள் அளித்த விவரங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமை WTI மரணித்த காட்டுயிர்கள்... தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற போதும் , கானுயிர்கள் உயிரிழக்கும் துயரமும் நிகழ்கின்றது. அசாம் மாநில வனத்துறையின் அதிகார பூர்வ அறிக்கை படி, காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 92 காட்டுயிர்கள் இறந்துவிட்டன. இதுவரை 8 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இறந்துள்ளன, அதில் 7 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளன. 41 ஹாக் மான்கள், 6 கரடி, 2 முள்ளம்பன்றி, 4 கடமான், 1 நீர் எருமை , ஒரு சதுப்பு மான் என மொத்தம் 63 காட்டுயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது. பிரம்மபுத்திராவின் தெற்கு நதிக்கரையில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி விட்டதால், மறுபக்கத்தில் இருக்கும் உயரமான பகுதியான கர்பி மலைப்பகுதியை நோக்கி செல்கின்றன அந்தப் பகுதியில் வாழும் காட்டுயிர்கள். படத்தின் காப்புரிமை WTI ஆனால் அப்பகுதியை அடைய காசிரங்கா தேசிய பூங்காவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். அப்படி சாலையைக் கிடைக்கும் பொழுது வாகனங்களில் அடிபட்டு விடும் அபாயத்தையும் சந்திக்கின்றன காட்டுயிர்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மேட்டுப்பகுதிக்கு செல்ல முயலுகையில் வாகனங்களில் அடிபட்டு 14 மான்கள் இறந்துள்ளன. யானைகள் பொதுவாக நன்கு நீச்சல் தெரிவதால் தப்பித்துவிடும், அப்படி இருந்தும் ஒரு யானை வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளது. மேலும் 10 மான்கள் மற்றும் 1 காண்டாமிருகத்தின் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்கின்றனர். படத்தின் காப்புரிமை WTI மீட்பு பணிகள்.... இந்திய கானுயிர் அறக்கட்டளை, விலங்குகள் நல பன்னாட்டு நிதியம் அமைப்பு வனத்துறையுடன் இணைந்து காசிரங்காவில் அமைத்து இருக்கும் மீட்பு முகாம்களில் கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் ஆய்வாளர் என பலரும் இணைந்து தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோர், இதுவரை 61 வன உயிரினங்களை மீட்டு உள்ளனர். அதில் 46 உயிரினங்கள் உரிய மருத்துவ சிகிசிச்சை அளிக்கப்பட்டு யரமான வெள்ளம் பாதிக்காத வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 9 மான்களும், 2 ஒற்றை கொம்பு காண்டாமிருக குட்டிகளும் மீட்பு முகாமில் பராமரிப்பில் உள்ளன. தாயை தொலைத்த காண்டாமிருகக் குட்டிகள்.... வெள்ளப்பெருக்கில் சிக்கி தாயை இழந்து தவித்துக் கொண்டிருந்த ஒற்றை காண்டாமிருகக் குட்டிகளை மீட்கப்பட்டுள்ளது . பொதுவாக இந்த காண்டாமிருககுட்டிகள் நான்கு வருடங்கள் வரை தங்களது தாயோடு இணைந்து இருக்கும் இயல்புடையவை. ஆனால் இரண்டு வயது கூட நிரம்பாத இந்த குட்டிகள் வெள்ளத்தில் தங்கள் தாயைத் தொலைத்து விட்டன. விட்டன. தாயின் துணையினையும் இழந்து, வெள்ளத்தில் நீந்த முடியாமல் சோர்வடைந்து கிடந்த இந்தக் குட்டிகள் மீட்டகப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர் இந்திய கானுயிர் அறக்கட்டளையினர். வெள்ளத்தில் இருந்து தப்பித்து வீட்டினுள் நுழைந்த புலிக்குட்டி காசிரங்கா தேசிய பூங்காவின் வெள்ளம் சூழ்ந்த பரப்பில் இருந்து தப்பித்து , மறுபுறம் உள்ள உயரமான வனப்பகுதியை அடைவதற்காக நடுவில் உள்ள தேசிய நெடுஞசாலையினை கடக்க முயற்சித்த புலிக்குட்டி ஒன்று சாலையின் அருகே உள்ள வீட்டினில் நுழைந்து விட்ட்து . வீட்டில் இருட்டாக இருந்த அறையினுள் நுழைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலிக்குட்டியினை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் செல்ல வழி செய்துள்ளது மீட்பு குழு. https://www.bbc.com/tamil/india-49047624
    • அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்   சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு. அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு அல்லது வேறு எந்த விடயம் பற்றி,  பரப்புரை  செய்யப்படும்,   தவறான தகவல்கள்  மற்றும்  தவறான தகவல்களை அடையாளம் காண்பது குறித்தும், எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்தும்,  கலந்துரையாட விரும்புகிறேன். அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான மூன்று ஒத்துழைப்பு உடன்பாடுகள் தொடர்பான அண்மைய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிப்பதில்  இருந்து ஆரம்பிக்கலாம். இந்த உடன்பாடுகளில் ஒன்று, வருகைப் படைகள் உடன்பாடு, இது இன்னமும் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இன்னொன்று கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு. இது 2007இல் கையெடுத்திடப்பட்டு, 2017இல், புதுப்பிக்கப்பட்டது.  இது இராணுவ ஒத்துழைப்பை  – குறிப்பாக, கூட்டு பயிற்சிகள், இடர் மீட்பு போன்ற விடயங்களில், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. மூன்றாவது, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவி பொதியை  உள்ளடக்கியது. இவை தொடர்பான, சில அடிப்படை உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இராணுவ தளத்தை அமைப்பது, அல்லது சிறிலங்காவில் நிரந்தர இராணுவ இருப்பை நிறுவுவது தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த நோக்கமும் கிடையாது. அதேபோல,  மிலேனியம் சவால் நிறுவனம் மூலம் அமெரிக்கா எந்த நில உரிமையைப் பெறவோ,  கட்டுப்பாட்டை பேணவோ முனையவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே  சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவையும் உதவிகளையும் வழங்கும். அமெரிக்க – சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்ளும் போது, அந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணம் செலுத்துவதற்கான ஒரு சட்ட கட்டமைப்பை வழங்குவதற்கே, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தற்காலிகமாக சிறிலங்காவில் பயிற்சிகள் அல்லது  அதிகாரப்பூர்வ கடமைக்கு வரும்,  அமெரிக்க படையினர் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின்  சிவில் பணியாளர்களின் நிலையை வருகைப் படைகள் உடன்பாடு விபரிக்கிறது. மிலேனியம் சவால் நிறுவன உடன்பாட்டுக்கும், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அது ஒரு இராணுவ உடன்பாடும் கிடையாது. மிலேனியம் சவால் நிதிய கொடை, பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு அபிவிருத்தி  உதவி உடன்பாடு ஆகும்.இது அமெரிக்க மக்களிடமிருந்து கிடைத்த பரிசே தவிர,  கடன் அல்ல. இந்த உடன்பாடுகளைப் பற்றி அதிகம் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது பார்வையில், தவறான தகவல்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான கருத்துகள், எமது ஜனநாயக நாடுகளின் ஒருமைப்பாடு மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். நாங்கள் பேச்சு நடத்துகின்ற வருகைப் படைகள் உடன்பாட்டில்,  பயிற்சி, ஒத்திகைகள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய பரிமாற்றங்களுக்கான பரஸ்வர வசதிகளை அளிக்கிறது. அதன் அர்த்தம், தளங்களை அமைப்பதோ, அமெரிக்க படையினரின் நிரந்தர பிரசன்னமோ அல்ல. சிறிலங்கா தனது எல்லை மற்றும் பிராந்திய நீர் அல்லது வான் வெளியில் அமெரிக்க படையினர், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவு அல்லது வெளியேறுவதற்கான  ஒப்புதலை அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறைமை உரிமைகளையும் கொண்டிருக்கும். வருகை படைகள் உடன்பாடு குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன்  நாங்கள் இன்னமும் பேச்சு நடத்தி வருகிறோம். இடர் மீட்பு, கூட்டுப் பயிற்சிகள் போன்ற சூழல்களில், நடைமுறைகளை முன்கூட்டியே உருவாக்கி, வசதிகளை ஏற்படுத்தலாம். வருகைப் படைகள் உடன்பாட்டின் கீழ், எந்தவொரு படையினரும், சரியான ஆவணங்கள் இன்றியோ, முறையான அனுமதியைப் பெறாமலோ,  சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது. பலமான, இறைமை கொண்ட, சுதந்திரமான சிறிலங்காவுக்கே அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தோ-பசுபிக் பாதுகாப்புக்கு  சிறிலங்காவின் பங்களிப்பை  நாங்கள் மதிக்கிறோம். சிறிலங்கா இந்த விடயத்தில் இன்னும் திறமையாக இருக்க உதவுவதே, வருகை படைகள் உடன்பாடு குறித்து நாங்கள்  பேச்சு நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளதற்குக் காரணம் ஆகும். சீனாவுக்கும் வருகை படைகள் உடன்பாட்டுக்கும்  எந்த தொடர்பும் இல்லை; இது சிறிலங்காவுடனான நீண்டகால இருதரப்பு கூட்டு பற்றியது. சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையீடு செய்வதாக அண்மையில் ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் வந்துள்ளன. சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையிடவோ, அல்லது தலையீடு செய்யப் போவதோ அல்லது நேரடியாக ஈடுபடவோ இல்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சிறிலங்கா நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களுக்கு எமது நாடு பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சியில் நிதிமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற-  புதிய வகை குற்றங்கள் குறித்த சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது. ஒரு வலுவான மற்றும் சுயாதீன நீதித்துறை, ஒரு வலுவான ஜனநாயகத்தின் தூண் ஆகும். அமெரிக்க சட்டவாளர் சங்கத்தின் கிளையை சிறிலங்காவில் அமைக்கும் நோக்கம் ஏதும் கிடையாது. சிறிலங்கா மக்களே தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். இன்னும் சில மாதங்களில் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள். மக்களின் விருப்பங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. எந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுடன் பணியாற்ற தயாராக உள்ளது. சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு ஆண்டுக்கு 40 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறோம், பெரும்பாலும் யுஎஸ் எய்ட் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி உதவி வழங்கும் நிறுவனமாகும். மிலேனியம் சவால் நிறுவனம் மற்றொரு உதவி வழங்குநராகும். எமது திட்டங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலானவை. பால்பண்ணைத் தொழிலின் விருத்திக்கு ஆதரவு அளிப்பது தொடக்கம், அமெரிக்கன் கோணர்களில் ஆங்கில வகுப்புகளை நடத்துவது வரை, பல உதவி முயற்சிகளை உள்ளடக்கியது. அமெரிக்க படையினர் சிறிலங்காவில் குற்றமிழைக்கும் போது, இங்கு தண்டனை வழங்கப்பட முடியாது என்ற கரிசனையை எழுப்பியதற்கு நன்றி. கடினமான மற்றும் சோகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். வருகைப் படைகள் அல்லது சோபா  போன்ற ஒரு உடன்பாட்டைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முன்கூட்டியே ஏற்றுக் கொள்வது தான். பல நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டிய உடன்பாடுகள் உள்ளன. உதாரணமாக, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா படையினர்  குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது, அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, சிறிலங்கா சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. சிறிலங்காவின் பன்முகத்தன்மையையும், நாட்டின் இறையாண்மையையும் அமெரிக்கா மதிக்கிறது. அந்த மதிப்பு எமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் இதயத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் சிறந்த வலுவான இறைமையுள்ள பங்காளராகவே சிறிலங்கா இருக்கிறது. ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு எவ்பிஐ அமைப்பின் ஆதரவை வழங்கினோம். எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும், மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கு இன்னும் பல வழிகளைத் தேடுவோம். எல்லா நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு புதிய வகையான பயங்கரவாதம் சிறிலங்காவில் உள்ளது. நீண்டகால ஒத்துழைப்பு மற்றும்  ஜனநாயகத்தைப் பின்பற்றுவதன் ஊடாக, வலுவான ஒத்துழைப்புகள், சட்டத்தின் ஆட்சி, சிவில் சுதந்திரங்களுக்கு தொடர்ந்து மதிப்பளிப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை நாங்கள் அறிவோம். பொருளாதார ரீதியில், சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது.  ஆண்டுதோறும் சிறிலங்கா ஏற்றுமதி செய்யும் 11.7 பில்லியன் டொலர் பொருட்களில், கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் பொருட்கள் அமெரிக்க சந்தைகளுக்கே அனுப்பப்படுகின்றன. சிறிலங்காவில் இருந்து அமெரிக்கா பெரும்பாலும் ஆடைகளைளே இறக்குமதி செய்கிறது. இறப்பர், தொழில்துறை பொருட்கள், இரத்தினக் கற்கள், தேயிலை மற்றும் வாசனைத்ப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சிறிலங்காவுக்கான அமெரிக்க ஏற்றுமதியில் விலங்கு தீவனங்கள், மருத்துவ உபகரணங்கள், சோயா பீன்ஸ், பிளாஸ்டிக், பால் பொருட்கள், கோதுமை, துணி மற்றும் ஆடைகள் ஆகியன அடங்கும். http://www.puthinappalakai.net/2019/07/19/news/39055
    • அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில் ஏற்பட்டது. குறித்த காணியில் வெள்ளிக்கிழமை (19) காலை அதன் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு உலாவிக் கொண்டிருந்த நிலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார். இதனை அடுத்து அருகிலுள்ள இராணுவத்தினரும் அவ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டதுடன்  ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இதனைத் தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு சோதனை குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது எனினும் எந்தவித ஆயுதமும் நபர்களோ கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/126911/
    • தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் பொது மக்களும் தமது அனைத்து சக்திகளையும் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது; “கன்னியா வெந்நீரூற்று என்பது பண்டைய காலம் தொட்டு தமிழ் மக்களின் மதவழிபாட்டுத்தலப் பிரதேசமாக இருந்து வந்திருப்பதை வரலாற்று ரீதியாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். நாம் அறிந்த காலத்தில், எமது நேரடி தரிசனத்தின்போது கூட அப்பகுதியில் பௌத்த சின்னங்களோ சிலைகளோ இருந்திருக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே இந்த சர்ச்சை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் திருகோணமலையை சிங்களப் பெரும்பான்மையாக மாற்றுவதற்கு பகிரங்கமாகவே திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதேவேளை  தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒன்றாகவே வெலிஓயா சிங்களக் கிராமம் உருவாக்கப்பட்டமையும் அதற்கு பாதுகாப்பு அரணாக குரங்குபாஞ்சான் முஸ்லிம் கிராமத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டமையும் சரித்திர சான்றாகும். கல்லோயாத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசமான அம்பாறையில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு, முஸ்லிம்களிடமிருந்து அப்பிரதேசம் கபளீகரம் செய்யப்பட்டது போன்றே திருகோணமலையும் தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கன்னியாவை ஆக்கிரமிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அண்மைய அட்டகாசங்களும் அரங்கேறியுள்ளன. இந்த வெட்கக்கேடான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். அவ்வாறே நுவரெலியாவின் கந்தப்பளை மாடசாமி இந்து ஆலயத்திலும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அத்துமீறல்கள், தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமிப்பதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சியாகவே பார்க்க முடிகிறது. இவை மிகவும் பௌத்த மதத்திற்கே இழுக்கான, அருவருக்கத்தக்க, பிற்போக்கான செயற்பாடுகளாகும். இதேபோன்று உலகின் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் கால் பதித்த பாபாத மலை எனும் பகுதி முஸ்லிம்களுக்கும் உரித்தான வரலாற்றுப் பாரம்பரிய இடமாக இருந்தும், அப்பகுதியில் ஜெயிலானி பள்ளிவாசலும் இருக்கின்ற நிலையில், தற்போது அங்கு முஸ்லிம்களுக்கான உரிமை மறுக்கப்படுகின்ற சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாக சரித்திரமே இல்லாதபோது பாபாத மலையை புத்தருக்கான இடமாக உரிமை கோருவது எந்த வகையில் நியாயமானது. புதைபொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் சிங்களவர்களை மாத்திரமே உத்தியோகத்தர்களாகக் கொண்ட புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களமும் சரித்திர பேராசிரியர்களும் தங்களது இனத்திற்காக, அவர்களுக்கு வேண்டிய இடங்களையெல்லாம் பௌத்த புராதான இடங்களாக பிரகடனம் செய்து வருகின்றமையானது தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதற்கான சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. பேரின சக்திகளின் பின்புலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற இவ்வாறான அடாத்தான அக்கிரமங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை என்பது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுத்து, அவர்களை அடக்கியாள  வேண்டுமென்கின்ற பேரின வெறிச்சிந்தனையையே நாம் எதிர்க்கிறோம். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் இவ்வாறான பேரின மேலாதிக்க செயற்பாடுகளை தகர்த்தெறிவதற்கு தமிழ், முஸ்லீம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இதன் அவசியத்தை இரு தரப்பினரும் உணர்ந்து செயற்பட வேண்டும். அதேவேளை தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, தமிழினத்திற்கு துரோகமிழைத்த கருணா அம்மான், தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் ஆணைக்கு துரோகமிழைத்த வியாழேந்திரன் போன்றோர் கல்முனை வடக்கு உப செயலக விடயத்தில் பேரின வெறிபிடித்த பிக்குகளை இங்கு அழைத்து வந்து, உதவி கேட்க முடியுமானால், கன்னியா வெந்நீரூற்று போன்ற தமிழினத்தின் இதயத்தில் பேரினவாதிகள் கைவைக்கின்றபோது மௌனம் காப்பது ஏன்? இந்த சூட்சுமங்களை தமிழ் மக்கள் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும்” என்றும் முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.  #தமிழருக்கு  #ஆதரவாக #முஸ்லிம் #பிரயோகிக்க   #கன்னியா #இராணுவ முகாம் பாறுக் ஷிஹான்   http://globaltamilnews.net/2019/126902/