Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி........!  😁

  • Thanks 1
Link to post
Share on other sites
  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!    

பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டேமனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி........!  😁

படம்  :பெற்றால் தான் பிள்ளையா (1966)

இசை : MSV 

பாடியோர் : TMS

வரிகள் : வாலி 

கவியரசர் கண்ணதாசன் நினைவு நாளில் அவருடைய அரிய தத்துவ பாடல் ஒன்றை போடுவீர்கள் என்டு எதிர்பார்த்து வந்தனன் தோழர் ..👍

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒன்றைப் போடுங்கள்தோழர்........!   🙏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பணத்தோட்டம் (1963) 

இசை : MSV & ராமமூர்த்தி

வரிகள் :  கண்ணதாசன்

பாடியவர் : TMS 

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் –அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி (மனத்)

சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி (மனத்)

ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி (மனத்)

எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி! (மனத்)

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் மலர்சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே......!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம்  : பருவகாலம்(1974) 
இசை :  தேவராஜன் 
வரிகள்:  புலமைபித்தன் 
பாடியோர் :  மாதுரி 

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்...(வெள்ளி)

பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனதுறவை..

எங்கோ இருக்கும் மனிதர் யாரும்
இங்கே வரவேண்டும் – இனி
எல்லா நலமும் எல்லா வளமும்
எவரும் பெறவேண்டும்...(வெள்ளி)

முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து
சிந்தும் புன்னகையோ – அலை
மோதும் அருவி என்னைப் போலே
இளமைக் கன்னிகையோ..

அன்னை மடியில் பிள்ளை இருந்தால்
அன்பு பெருகாதோ - கொடி
ஆசைக் கொண்டால் தழுவும் பூவின்
உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ..

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977) 
இசை : இளையராஜா 
வரிகள் :  வாலி 
பாடியோர் : SPB & சுசீலா

ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ!

ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க் கவிதை பாடினான் (ஒரு)

தமிழ் கொண்ட வைகைப்போலே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட

பனிப் போல கொஞ்சும் உன்னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட

மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ?
வா.........மெல்ல வா........ (ஒரு காதல் தேவதை)

கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட

மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக

ஊடல் எனும் ஒரு நாடகம்
கூடல் தனில் அரங்கேறிடும்
வா........நெருங்கி வா..

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தேடி தேடி காத்திருந்தேன் தெய்வம் என்னை பார்க்கவில்லை .........!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .....!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம்: ரங்கராட்டினம் (1971)

இசை V.குமார்

வரிகள் :  கண்ணதாசன் 

பாடியோர் : A.M  ராஜா &  L.R ஈஸ்வரி 

முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே)

ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம்
என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்

பெண்ணல்லவா மனம் போராடுது
நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்)

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம், சோம்பல் இருந்தா ஏற்பது கஷ்டம்......!  👍 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 06:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: ரங்கராட்டினம் (1971)

இசை V.குமார்

வரிகள் :  கண்ணதாசன் 

பாடியோர் : A.M  ராஜா &  L.R ஈஸ்வரி 

முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே)

ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம்
என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்

பெண்ணல்லவா மனம் போராடுது
நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்)

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..

அருமையான பாடல்.நீண்ட நாளுக்கப்புறம் கேட்கிறேன்.
நன்றி புரட்சி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நடக்காது ஜம்பம் பலிக்காது என்னைத் தொடவே உம்மாலே முடியாது.....!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுக்கோடி உறுமிமேளம் .......!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா குடை பிடிக்க ..

படம்: அபலை அஞ்சுகம்(1959) 

வரிகள் : சுரதா

இசை : K.V மகாதேவன்

பாடியோர்: T.R  மகாலிங்கம் & P. சுசீலா 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்......!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம்: அழகர் மலை கள்வன்(1959)

இசை :  கோபாலன்

வரிகள் : புரட்சிதாசன்

பாடியோர் :A.L ராகவன் & P.சுசீலா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உன் விழிவாசல் அழகான மணிமண்டபம்........!  💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனசிலே .....!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் : காவேரி (1955)

இசை : G.ராமநா தன்

வரிகள் : உடுமலை. நாராயணகவி

பாடியோர் : C.S.செயராமன்& சிக்கி

அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ
யாருமில்லா வேளையிலே இந்த வெட்கம் ஏனோ....
இன்பமாம் ராஜபோகம் ஏழைக்கேது ஸ்வாமி
இருவர் நாமும் உறவு கொண்டால் ஏற்குமோ இப்பூமி.....

அரசனென்றாலும் ஆண்டியென்றாலும்
மருவிய காதலிலே பேதமுன்றோ
ஆசையினால் பேசும் வாசகம் நிஜமா
அன்பாலென்றும் ஒன்று சேருமா
சந்தோஷம் தீர்ந்தால் பின் மாறுமா

ஸப்தகலை ஞானமெனும் கடவுள் மீது ஆணை
கனவிலும் என் நினைவிலும் நான் கைவிடேனே மானே....
............???????? வீரமது நாடு
உற்ற துணை நாமேதான் உலகினிலே

வேண்டுமென் பாக்யமெல்லாம்
வேல் விழி நீயல்லவோ
வேண்டாத வீண் புகழ்ச்சி வேண்டுமோ
கண்ணே இன்னும்கூட நாணமா...
அன்பே என் ஆருயிரே அவனியில் நாமே
இன்ப துன்பம் எதுவரினும் இசைந்து வாழுவோமே....

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடையின்மேலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது.....!  💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்.......!   👋

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குன்றுதோறாடிவரும் குமரவடிவேலன் .....!  😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார தேருக்கு சேலை கட்டி .....!   💞

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் : எங்கள் குடும்பம் பெருசு(1958)

இசை: TG லிங்கப்பா

 பாடியோர்: TMS &  சுசீலா

 வரிகள்: கிருட்டிண மூர்த்தி

ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் பிரேம விலாசா
ராதா மாதவ வினோத ராணி
எந்தன் மனதின் பிரேம விலாசி....(ராதா)

வாடா மல்லிகை பூவனந்தனிலே
மோக மூட்டும் நிலவினிலே
சொர்க்கம் தானே இங்கே நானே
ஆனந்தமானேன் ஆசையினாலே (ராதா)
ஜீவியமெல்லாம் கோகுலவாசி
உலவும் யமுனா நதி நீயே
நானே ராதா மாதவன் நீயே
ஆடுவோம் மகிழ்ந்தே பிரேமையினாலே (ராதா) ..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீளமானதொரு தொலைவில் ஆழமானதொரு மௌனமும் கோரமானதொரு வெறுமையும் தவிப்பானதொரு தனிமையும் வஞ்சகமானதொரு புன்னகையை வீசிவிட்டு அருகே நின்று வா வா என்று வருந்தி அழைக்கும்! மௌனமும் வெறுமையும் தனிமையும் புதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்பி நலம் விசாரித்து விட்டு திசை தெரியாமல் போ போ எனத் துரத்தி விட்டு ஹா ஹா என்று கோரச் சிரிப்பு சிரிக்கும்! துடித்துக் கொண்டிருக்கும் மொழிகளுக்கிடையே மறைந்து போகும் மௌனம் மௌனத்துக்கு நடுவே ஒலித்து மறைந்து போகும் கதறல் இவற்றைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொள்ளும் வெறுமை! எதுவுமே இல்லாமையே வெறுமை எதுவுமே கிடைக்காமையே ஏக்கம் இல்லாமையும் கிடைக்காமையும் வாழ்வின் தாக்கமான தேக்கம்! மௌனங்களுக்கு தாளம் சேர்த்தும் துன்பங்களை புன்னகையால் மூடியும் இல்லாமையை அருகிருந்து நேசித்தும் தனிமையை விரும்பி யாசித்தும் வெறுமையை திறமையுடன் பிரவேசித்தும் இவை எல்லாவற்றையும் இயன்றவரை பூசித்தும் வாழ்ந்தால் உளத்தில் திண்மை பிறக்கும்! -தமிழ்நிலா.
    • மரணம் தரும் ரணம் என்றுமே ஆறாதது......ஆனால் அதையும் கடந்துதான் ஆகவேண்டும்.....நல்ல கவிதை.....பாராட்டுக்கள்.....!   👍
    • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
    • சூரப்பாவை பழி வாங்குவதா: அரசு மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டு வருகிறதே விசாரித்தீர்களா?- கமல் கேள்வி   சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்த தமிழக அரசின் செயலுக்கு மக்கள் நீதிமய்யம் கமல் கடும் கண்டனம் தெரிவித்து உயர் கல்வி அமைச்சர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சை எழுந்தது. தமிழரல்லாத ஒருவரை நியமிப்பதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இந்நிலையில் சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது. சூரப்பாவை பணி இடை நீக்கம் செய்யவேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ட்விட்டர் மூலம் காணொலி வெளியிட்டுள்ள அவர் ஆளுங்கட்சியை கடுமையாக சாடியுள்ளார். கமல்ஹாசன் ட்விட்டர் காணொலி பதிவு வருமாறு: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழகத்தில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்த கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது அதில் மாற்றம் இல்லை, ஆனால் வந்தவரோ வளைந்துக்கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்துக்குழையாதவர். தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என முனைந்தவர். பொறுப்பாளர்கள் நம் ஊழல் திலகங்கள், வளைந்துக் கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம், எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடிவளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடைப்போட்டு காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா? உயர் கல்வி அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுத்தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி ஒரு வார இதழில் குற்றம் சாட்டினாரே அளித்தாரே விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனைத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை, கரைவேட்டிகள் இங்கும் மூக்கை நுழைப்பது ஏன். இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வளைக்க பார்க்கிறார்களா. சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், கமல்ஹாசன் ஆன நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதிமய்யம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிக்குமான பிரச்சினை இல்லை. நேர்மையாளர்களுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தைச் சிதைப்போம் என சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை. சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகள் இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெருகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன? இதை இனிமேலும் தொடர் விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாக விடக்கூடாது. நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்பவர்கள் தங்கள் மவுனம் கலைத்து பேசியே ஆகவேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாறவேண்டும். நேர்மைதான் நமது சொத்து அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஒட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும்”. இவ்வாறு பேசியுள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/608515-revenge-on-surappa-kamal-s-sudden-support-have-you-investigated-the-allegations-of-corruption-against-the-regime-kamal-question-2.html    
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.