Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிளகிலே மருத்துவம்


Recommended Posts

மிளகிலே மருத்துவம்.

சுறு சுறுவென்னும் காரத்தன்மை கொண்ட மிளகு சளி,

இருமல்,

விசத்தன்மை,

வாதம்

முதலியவற்றிற்கு அருமருந்தாக பயன்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள்.

முதலில் இங்குள்ள பழைய உறுப்பினர்களுக்கு இதைப்பற்றி எழுதவிடுகிறேன். அப்படி அவர்கள் எழுதமுடியாது என்று ஓரிரு நாட்களில் நான் உணர்ந்து கொண்ட பிறகு ஜமுனா நான் எழுதுகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பழைய உறுப்பினர்களுக்கு என்னத்துக்கு இந்த மருந்து சிறந்தது?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பழைய உறுப்பினர்களுக்கு என்னத்துக்கு இந்த மருந்து சிறந்தது?

அதையும் கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும்

Link to post
Share on other sites

மிளகிலே மருத்துவம்.

1, தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம்( ஓமம் என்றால் என்னங்க இந்திய கள உறுப்பினர்களே????), உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும்.

2. மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து கொண்டு சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

3. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

4. பசியில்லாமல் இருந்தால் ஒரு ஸ்பூன் மிளகை வறுத்தெடுத்து பொடி செய்து கைப்பிடியளவு துளசி இலையைப்போட்டு கொதிக்க வைத்து, சூடு ஆறியவுடன் தேனில் கலந்து குடித்தால் குணமாகும்.

5. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும். டாக்டர் செலவும் மிசாம். உடம்பினை பிற்காலங்களில் தாக்கும் அன்டிபயடிக்ஸும் எடுக்கத்தேவையில்லை)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.