Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுத்தமான தேனிலே மருத்துவம்.


Recommended Posts

சுத்தமான தேனிலே மருத்துவம்.

சுத்தமான் தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லீற்றர் பாலுக்கு ஒரு லீற்றர் தேன் சமமானது. எங்கே மேலே சொல்லவில்லை என்று ஆதங்கப்படவேண்டாம். முதலில இங்க இருக்கிற பெரிய மனிதர்கள் சிலர் நான் சொல்லவருவதிலும் பார்க்க கூட சொல்லாம் என்னும் ஒரிரு தினங்களில் ஆகவே விட்டுப்பிடிப்போமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தமிழ் பரிகாரிகள்(தமிழ் வைத்தியர்கள்) இல்லை இங்கே வாரவை மருத்துவர்களும், பேராசிரியர்களும், எஞ்ஜினியரும் ஆகவே பயப்பிடாம எடுத்துவிடும்

:P :huh:

Link to post
Share on other sites
  • 2 weeks later...

சுத்தமான தேனிலே மருத்துவம்

சுத்தமான் தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லீற்றர் பாலுக்கு ஒரு லீற்றர் தேன் சமமாகும்.

1. பித்த நீர்ச சுரப்பி இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.

2. குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதயநோய் ஆகியவற்றுக்கு தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

3. தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்திபேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல், ஆகிய நோய்கள் குணமாகும். பசியை அது வளர்க்கும் அதே நேரம் ஜீரணத்துக்கும் உதவும்.

4. தேன் தேவையில்லாத படிந்து தொந்தையில் இருக்கும் தீங்குவிழைவிக்கக்கூடிய கொழுப்பினை கரைக்கக்கூடியது. ஆகவே உடல் பருமனாக, தொந்தி பெரிதாக , உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

5. ரத்தப்பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றில் இருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக்கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. நமது உடம்பின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப்புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

7. வயதான சிலருக்கு அவ்வப்போது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்கள் குற்றமடைதல், அல்லது குரல் தொனியே இல்லாது தொண் டையை அடைத்து விடுதல் போன்ற கப நோயகள் கண்ட போது, ஒரு நாளைக்கு நலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து குடித்து வந்தால் நல்ல குணம் ஆகும்.

8. முக்கிய மாக இளம் வயதினர், நடுத்தர வயதினர்கள் மக்டொனால்களில் சாப்பிடுவதும், மதுபாணம், சிகரற் பிடிக்கும் பழக்கம் இருக்குமானால் நிச்சயமாக கிழமையில் கடைசிநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் கண்விழித்ததும் சில எழிமையான உடற்பயிற்சிகளினை செய்யவும். இதனால் கை, கால்கள் சுறுசுறுப்பாவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். அதன் பின்பு பல் துவக்கியதும் ஒரு டம்ளரில் வெது வெதுப்பான நீரில் 2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறும், ஒரு மேசைக்கரண்டி தேனும் கலந்து குடிக்கவும். எலுமிச்சை கல்லீரலில் உள்ள நஞ்சை வெளியேற்றும். தேன் உடம்பின் தசைகளை ஈரமாக்கும். தண்ணீர் உடம்பில் சேர்ந்திருக்கும் கெட்ட நீர், உப்பு இவைகளை அகற்றி வெளியேற்றும். அதிகப்படியான நீர்தான் சள்ளை உருவாகவும், உடம்பு ஊதவும் காரணமாகிறது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுர் வேத மருத்துவமா இல்லை இயற்க்கை மருத்துவமா.......?

Link to post
Share on other sites

இயற்கையின் வழி தோன்றியதே ஆயுள் வேத மருத்துவம் என்று நான் நினைக்கின்றேன். யாரும் தெரிந்தவர்கள் இதற்கு சரியான் பதிலை உங்களுக்கு தருவார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையின் வழி தோன்றியதே ஆயுள் வேத மருத்துவம் என்று நான் நினைக்கின்றேன். யாரும் தெரிந்தவர்கள் இதற்கு சரியான் பதிலை உங்களுக்கு தருவார்கள்.

கை மருந்து. வீட்டு வைத்தியம், இயற்கை வைத்தியம் ஆகிய மூன்றும் ஒன்றைதான் குறிக்கிறது.

நிற்க!

என்னிடம் தேனும் கறுவா பட்டைத்தூளும் கலந்த ஒரு வைத்தியம் சம்பந்தமான .PPS file இருக்கிறது. அதை எப்படி இவ் இழைத்தில் (thread) தரவேற்றுவது என யாராலும் சொல்ல முடியுமா?

நன்றிகள்

Link to post
Share on other sites

அதுதானுங்க எனக்கும் தெரியுதில்லை. இங்க கேட்கக்கூடாது கத்தனும்.

ஏனங்க உங்களத்தான் இங்க யாராச்சும் எங்களுக்கு உதவி செய்வீர்களா??????????????????? இப்ப கேட்டிருக்கும். யாரு சொக்காட்டியும் மோகன் இதுகளினை கட்டாயம் பார்ப்பார். அடிச்சுச்சொல்லுகிறேன்.

Link to post
Share on other sites

சர்க்கரை நோய் இல்லாதவரென்றால் உணவு உண்ட சிறிது நேரம் கழித்து படுக்கப்போவதற்கு முன்பு ஒரு தம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேனைக் கல்ந்து குடித்து விட்டுப்படுக்கவும். அலாதியான தூக்கம் வரும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேன் மிகச் சிறந்த மருத்துவ குணம் உள்ளது என்பதை நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே அறிந்திருக்கின்றோம்.

புலிப்பாசறை சொன்ன தகவல்களின் படி ஊளைச்சதை குறைய வேண்டுமெனில் காலை எழுந்ததும் காலைச்சாப்பாட்டிற்கு முன்னர் வெதுவெதுப்பான இளஞ்சூட்டு நீரில் தேசிக்காய் பாதி மூடி பிழிந்து இரண்டு மேசைக்கரண்டி தேன் கலந்து குடித்துவர உடல் மெலியும் ஆனால் அதன் பின் பால் கலந்த தேனீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதே வேளை தலைமுடி கொட்டுப்படவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை நோர்வேயில் இருந்து ஒளி/ஒலிபரப்பாகும் தாய்நிலத்திலிருந்த மருத்துவர் டலஸ்(அ)டலிமா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

சர்க்கரை வியாதிகள் உள்ளவர்கள் தேனைத் தவிர்ப்பது மிக நல்லது.

மாதவிடாய்க்காலங்களின் ஏற்படும் வயிற்றுவலிக்கும் தேன் ஒரு மிகச் சிறந்த நிவாரணி. வறுத்து அரைத்த சீரகத்தூளுடன் தேனைக்கலந்து சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. சாப்பாடும் செரிக்கும்.

காலை வேளையில் பாணை ஆகாரமாகக் கொண்டவர்கள் பாணோடு தேன் தொட்டுச் சாப்பிடுங்கள்.உடல் மினுமினுப்பு அடையும்.

நன்றி.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.