Jump to content

சில சமையல் அறை டிப்ஸ்சுகள்

Recommended Posts

சில சமையல் அறை டிப்ஸ்சுகள்

முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காச்சும் போது அடிப்பிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாளும் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே....

1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை பிறிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்வதால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை பிரஸ்சாக பயன்படுத்தலாம்.

2. காளான்கள் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளிலினை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும்.

4. எண்ணை கறையை அழிப்பதற்கு, எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

5. மண் கறைகளை துணிகளில் இருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும்.

தொடரும்....

Link to comment
Share on other sites

இதெல்லாம் உங்களோட கண்டுபிடிப்பா?? :rolleyes: நன்றி

Link to comment
Share on other sites

பாருங்க நான் குட்டி பையன் எப்போ எனக்கு தாடி வளரும் அப்போ சேவெடுக்கலாம் என்டு வெயிட் பண்ணிட்டிருக்கேணக்கும் :lol:

ஏன் இப்ப கதைக்காம ம் ம் என்று சொல்லுறீங்கள் கதையுங்கோவேன் பிறகு நான் இந்த பக்கத்துக்கு வரமாட்டேன்

:angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ம்

என்ன இப்ப அடிக்கடி ம் கொட்டுறீர்.எங்கையோ நல்லாய்ச் சாத்து வாங்கீட்டீரோ?ஓய் சைவம் உம்மைத்தான்........... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சமையல் குறிப்புகள்

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

--------------------------------------------------------------------------------

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

--------------------------------------------------------------------------------

தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

--------------------------------------------------------------------------------

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

--------------------------------------------------------------------------------

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

--------------------------------------------------------------------------------

தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

--------------------------------------------------------------------------------

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை ஏன் மருத்துவம் பகுதில போட்டு இருக்கு.. சமையல் பகுதில போட்டு இருக்கலாமே... :):o

Link to comment
Share on other sites

இதை ஏன் மருத்துவம் பகுதில போட்டு இருக்கு.. சமையல் பகுதில போட்டு இருக்கலாமே... :):o

உங்கள போலக்களுக்கு தட்டு தவறி வரும் போது பக்குறதுக்குத்தான் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள போலக்களுக்கு தட்டு தவறி வரும் போது பக்குறதுக்குத்தான்

புரியலை.. வானவில்..நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் மருத்துவம் பகுதில போட்டு இருக்கு.. சமையல் பகுதில போட்டு இருக்கலாமே... :):o

சமையல் பகுதியில கவனம் செலுத்தாட்டி மருத்துவரிடம் தான் தஞ்சம் எண்டுதான் மருத்துவம் பகுதியில போட்டிருக்குபோல

Link to comment
Share on other sites

சில சமையலறை டிப்ஸ்கள்...சைவன் என்னிடம் தந்தார் இதனை எழுதச்சொல்லி ஆகவே எனக்கு அனுமதி தரவும்

6.பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த நீரைத்தெளிக்கவும்.

7. பால் காச்சுவதற்கு முன் அப்பாத்திரத்தினை நன்கு தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தபின்பு காச்சினால் பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.

8. முட்டையை வேகவைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேகவைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ள இருப்பவை சிதறி வராது அப்படியே முட்டை வடிவில் இருக்கும்.

9.ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக பாவனைக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்ட்டையை குளிர்ந்த உப்புத்தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தைரியமாக குப்பைவாளியினுள் போடலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை நீங்கள் சமையளில் பாவிக்கலாம்.

10. வெங்காயம் நறுக்கும் போது கண்களில் இருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே சில நிமிடங்கள் ஈரம் உள்ளே இருப்பவை சாடையாக கட்டியாக வரும்வரை வைத்து அதன் பின்னர் வெட்டினால் உங்கள் கண்கள் குளமாகாது.( நல்ல அறிவுரையுங்க)

11. உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் ஒரே கூடையில் வைத்தால் அவை இரண்டும் சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருக்க அந்த உருளைகிழங்குகளினை ஒரு பையினுள் போட்டு அந்த பையினுள் ஒரு அப்பிள் பழத்தினை வைக்க ஒரு பிரச்சனையும் இல்லை.

12. வெங்காய நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி.

13. பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காய் பால் காச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்துக்கு பால் புளிக்காமல் கமகம மணத்துடன் இருக்கும்.

14. முட்டைகளை 30- 40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு அதன் மேல் ஒரு பிரஸ்ஸால் சமையள் எண்ணை தடவி விடவும்.

இன்னும் நிறைய இருக்கு தொடரும்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.