Jump to content

Recommended Posts

ஐபிஎல் பிளே ஆஃப்: சென்னைக்கு வெற்றி வாய்ப்பு? பலமும் பலவீனமும்

 

 
Dhoni_Rayudu

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 1 எனும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று (செவ்வாய்கிழமை) மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிகளின் லீக் சுற்றுகள் முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. லீக் சுற்றுகளின் முடிவில் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதையடுத்து, இந்த இரு அணியும் இன்று நடைபெறவுள்ள பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 1 போட்டியில் மோதுகின்றன. 

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 27-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் 2வது குவாலிபையர் போட்டியில் விளையாடும் 2-ஆவது வாய்ப்பு கிடைக்கும். அதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2வது அணியாக முன்னேறும். 

முதல் குவாலிபையர் போட்டியில் இன்று மோத இருக்கும் 2 அணிகளும் தங்களது பலம் மற்றும் பலவீனங்களில் நேர்மாறாக உள்ளன. நடப்பு சீசனில் சென்னை அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஹைதராபாத் அணியோ மாறாக பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை அணி லீக் சுற்றில் 9 போட்டிகளில் வெற்றியையும், 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. சென்னை அணி பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங்கிலேயே பலமாக தென்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் ராயுடு நம்பிக்கை அளிக்கின்றனர். வாட்சனுக்கு கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் அவர் மீண்டும் களமிறங்குவார் தெரிகிறது. 

பலமான பேட்டிங்:

பேட்டிங் வரிசையில் வாட்சன், ராயுடு, ரெய்னா ஆகியோர் டாப் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கின்றனர். நடுகள வரிசையில் தோனி நல்ல நிலையில் உள்ளார். பினிஷிங்க் பொறுப்பில் பிராவோ இதுவரை சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். 

ஆனால், இதற்கு நடுவில் பில்லிங்ஸ் தான் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். முதல் போட்டியில் அரைசதம் அடித்த பிறகு அவர் தொடர்ச்சியாக ஒற்றை இலக்கு ரன்களுடனையே ஆட்டமிழந்து வருகிறார். அதனால், அவருக்கு பதிலாக அனுபவ டு பிளேசிஸை அணியில் சேர்த்து நடுகளத்தில் கூடுதல் பலம் சேர்க்கலாம். 

டு பிளேசிஸை தொடக்க வீரராக களமிறக்கி ராயுடுவை மீண்டும் நடுகளத்து மாற்றி பிளே ஆஃபில் தோனி ரிஸ்க் எடுக்கமாட்டார் என்று தெரிகிறது. பின்னர், பினிஷிங்கில் ஜடேஜாவும் மெல்ல மெல்ல வலு சேர்க்கிறார். அதனால், சென்னை அணி பலமான பேட்டிங்காகவே தென்படுகிறது. 

இது போதாதென்று கடந்த போட்டியில் களமிறங்கிய பந்துவீச்சாளர் சாஹரும் அதிரடி காட்ட அவரும் பேட்டிங்கில் பங்களிக்க காத்திருக்கிறார். பந்துவீச்சில் பலமான ஹைதராபாத்தை எதிர்கொள்ள இது போன்ற நீண்ட பேட்டிங் வரிசை சென்னை அணிக்கு அவசியம்.

ஹைதராபாத்துக்கு சிம்ம சொப்பணம் ராயுடு:

லீக் சுற்றில் சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான 2 போட்டியிலும் சென்னை அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராயுடு தான். முதல் லீக் போட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்தது. அதில், ராயுடு நடுகள பேட்ஸ்மேனாக களமிறங்கி தடுமாறி வந்த சென்னை அணியை அதிரடியில் மிரட்டி ரன் ரேட்டையும் உயர்த்தி அசத்தினார். அந்த போட்டியில் அவர் 37 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். 

2வது லீக் சுற்றில் இலக்கை விரட்டி சென்னை அணி களமிறங்கியது. அதில், ராயுடு வாட்சனுடன் இணைந்து அதிரடி தொடக்கத்தை தந்தார். அரைசதம் அடித்த பிறகு வாட்சன் ஆட்டமிழக்க ராயுடு தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினார். அதன்மூலம் அந்த அவர் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார். அதனால் தான் இந்த 2 போட்டியிலும் அவரே ஆட்டநாயகன் விருதை வென்றார். 

அதனால், அவர் இன்றைய பிளே ஆஃப் போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறார். 

பந்துவீச்சு:

சென்னை அணி வருத்தப்பட வேண்டிய விஷயமே டெத் பந்துவீச்சு எனும் கடைசி கட்ட பந்துவீச்சு தான். அந்த அணி தொடக்கத்தில் சாஹர், நிகிடி என ஸ்விங்கில் மிரட்டினாலும், கடைசி கட்ட பந்துவீச்சு என்று வரும் போது சொதப்பல் தான். அதன் ஸ்பெஷலிஸ்ட் என கருதப்படும் பிராவோவே அதில் சொதப்புகிறார். டெல்லி அணியுடனான கடைசிக்கு முந்தைய லீக் போட்டியில் கடைசி ஓவரில் பிராவோ 26 ரன்களை வாரி வழங்க, அதுவே அந்த போட்டியின் போக்கை முற்றிலுமாக மாற்றியது. 

அதே சொதப்பல்களை சென்னை அணி இந்த போட்டியிலும் கடைபிடிக்காமல் எழுச்சி பெற வேண்டும். தொடக்கத்தில் சாஹர், நிகிடி அசத்துகின்றனர். பின்னர், ஹர்பஜன், ஜடேஜா சுழல் கூட்டணி நடுகள ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதை கச்சிதமாக செய்து வருகின்றனர். இவர்களுடன் ஷர்துல் மற்றும் வாட்சனும் ஒத்துழைக்க காத்திருக்கின்றனர். டெத் பந்துவீச்சை பொறுத்தவரை பிராவோவுடன் வாட்சன், ஷர்துல் மற்றும் நிகிடி உள்ளனர். நிகிடி கடந்த போட்டிகளில் நல்ல நிலையில் உள்ளதால் டெத் பந்துவீச்சில் சொதப்ப மாட்டார் என்று தெரிகிறது. 

ஹைதராபாத்தின் பலவீனம் தான் சென்னையின் பலம்

ஹைதராபாத் அணி பேட்டிங்கில் வில்லியம்ஸனையே பெரிதும் சார்ந்திருக்கிறது. அவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் மிகப் பெரிய பிரச்சனை முடிந்துவிடும். அவரையடுத்து, தொடக்கத்தில் தவான் மற்றும் ஹேல்ஸ் அவ்வப்போது நம்பிக்கை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு சாஹர் மற்றும் நிகிடி தங்களது ஸ்விங்கை கையாள வேண்டும். பின்னர், ஹைதராபாத் அணி சொல்லிக்கொள்ளும்படி பினிஷிங்கில் ஜொலித்தது கிடையாது. அவ்வபோது பாண்டே மற்றும் யூசுப் பதான் அதிரடி காண்பிப்பர். 

ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், சென்னை அணிக்கெதிரான 2 லீக் போட்டிகளிலும் பெரிதளவு சோபிக்கவில்லை. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்த ஹைதராபாத் அணி கடைசி 3 லீக் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், அது அந்த அணிக்கு உளவியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். 

குறிப்பாக 2வது பந்துவீச்சில் எதிரணியை எத்தனை சிறிய இலக்காக இருந்தாலும் கட்டுப்படுத்தி சுருட்டுவதில் வல்லமை படைத்த அணியாக வலம் வந்த ஹைதராபாத்தால் கடைசி கட்ட லீக் போட்டிகளில் அதனை தொடரமுடியவில்லை. அதனால், இதுவும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கலாம். 

மொத்தத்தில் பேட்டிங் பலமும், பந்துவீச்சு பலமும் நேருக்கு நேர் மோதவுள்ளதால், அதுவும் முக்கியமான போட்டியில் மோதவுள்ளதால் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவு உள்ளது.

நாம் என்னதான் போட்டிக்கு தயாரானாலும், வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் அன்றைய போட்டியில் களத்தில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது தான் வெற்றிக்கு அவசியம். அதனால், சென்னை அணி ஹைதராபாத்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் இன்றைய போட்டியில் தங்களது திட்டங்களையும்,வியூகங்களையும் தக்க நேரத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். 

இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

http://www.dinamani.com/sports/2018/may/22/ipl-play-off-csk-is-on-upper-hand-against-srh-2924700.html

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

இறுதி சுற்றில் கால் பதிக்கும் முனைப்பில் சிஎஸ்கே: தகுதி சுற்று 1-ல் ஹைதராபாத்துடன் இன்று மோதல்

 

 
22CHPMUDHONI

தோனி   -  THE HINDU

22CHPMUDHONI2

தோனி   -  AFP

22CHPMUDHONI3

தோனி   -  THE HINDU

22CHPMUWILLIAMSON

வில்லியம்சன்   -  THE HINDU

 
22CHPMUDHONI

தோனி   -  THE HINDU

ஐபிஎல் தொடரில் தகுதி சுற்று 1-ல் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

லீக் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 18 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் ரன்ரேட் விகிதத்தில் ஹைதராபாத் (+0.284) அணி முதலிடமும், சென்னை அணி (+0.253) 2-வது இடமும் பிடித்தன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 27-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு மற் றொரு வாய்ப்பு கிடைக்கும். அதா வது தோல்வியை சந்திக்கும் அணி 25-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் லீக் ஆட்டங்களில் இருமுறை ஹைதராபாத் அணியை வென்றிருப்பது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியின் உத்வேகத்தை இன்றைய ஆட்டத்துக்கும் வியாபிக்க செய்வதில் சென்னை அணி வீரர்கள் தீவிரம் காட்டக்கூடும். நேற்றுமுன்தினம் புனேவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் சுற்று கனவை தகர்த்த நிலையிலேயே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது.

 

அதேவேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பின்னர் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று களமிறங்குகிறது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிரான இந்த மூன்று ஆட்டங்களிலும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு கடும் சிதைவுக்குள்ளானது.

அதிலும் ஹைதராபாத் அணியின் தொடர்ச்சியான 6 வெற்றிகளுக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போட்ட பின்னரே மற்ற அணிகளும் ஹைதராபாத்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தின.

ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனை மட்டுமே ஒட்டுமொத்தமாக சார்ந்துள்ளது. இந்த சீசனில் அதீத பார்மில் இருக்கும் அவர், 661 ரன்கள் வேட்டையாடி உள்ளார். அவருக்கு உறுதுணையாக விளையாடி வரும் ஷிகர் தவண் 437 ரன்கள் எடுத்துள்ள போதிலும் அவரிடம் இருந்து சீரான ஆட்டம் வெளிப்படுவதில்லை. நடுகள பேட்டிங்கையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஹைதராபாத் அணி. அதிலும் முக்கியமாக மணீஷ் பாண்டே கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோரை உள்ளடக்கிய பந்து வீச்சு குழுவுக்கு சென்னை அணியின் தொடக்க வீரரான அம்பாட்டி ராயுடு சவால் அளிக்கக்கூடும். ஏனெனில் கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக மோதிய ஆட்டத்தில் ராயுடு சதம் விளாசியிருந்தார்.

மேலும் தொடரின் முதற்பகுதியில் நடைபெற்ற ஆட்டத்தில் 79 ரன்கள் விளாசி மிரளச் செய்திருந்தார். இந்த சீசனில் 586 ரன்கள் குவித்துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

சென்னை அணியின் பேட்டிங் தனிப்பட்ட ஒரு வீரரை மட்டும் சார்ந்திருக்காமல் இருப்பது பலமாக கருதப்படுகிறது. 446 ரன்கள் விளாசியுள்ள தோனி, 438 ரன்கள் குவித்துள்ள ஷேன் வாட்சன் ஆகியோருடன் 391 ரன்கள் குவித்து கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னாவும் பலம் சேர்ப்பவராக உள்ளார். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக பின்கள வீரர்களின் பேட்டிங் திறனையும் தோனி, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சோதித்து பார்த்துள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. அந்த ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் 19 ரன்களும், தீபக் ஷகார் 39 ரன்களும் சேர்த்து அசத்தினர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்களுக்கு 4 விக்கெட்களை சாய்த்த லுங்கி நிகிடி, இளம் வீரரான தீபக் ஷகார் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். இந்த ஜோடிக்கு ஷர்துல் தாக்குர், டுவைன் பிராவோ ஆகியோரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். நடுகள ஓவர்களில் ஹர்பஜன், ஜடேஜாவும் தங்களது அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தும் பட்சத்தில் அணியின் பந்து வீச்சு மேலும் வலுப்பெறும்.

 

மகளிர் டி 20 காட்சி போட்டி

பிளே ஆஃப் சுற்றையொட்டி இன்று பிற்பகல் 2 மணி அளவில் மும்பை வான்கடே மைதானத்தில் ட்ரெய்ல்பிளேசர் - சூப்பர் நோவா ஆகிய அணிகள் பங்கேற்கும் மகளிர் டி 20 காட்சி போட்டி நடைபெறுகிறது. இந்த இரு அணியிலும் இந்தியா மற்றும் வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடு கின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article23956069.ece

Link to comment
Share on other sites

தோனியின் வியூகம்... வில்லியம்சனின் எலிகன்ஸ்... கூல் கேப்டன்ஸியில் கலக்கப்போவது யார்? #CSKvsSRH

 
 

இரண்டு கூல் கேப்டன்கள்... ஆனால், அனல் களம்... ஃபைனலுக்குள் முதலில் நுழையப்போகும் அணி எது என்கிற விறுவிறு ஆட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது ஐபிஎல். #CSKvsSRH

9 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குவாலிஃபையருக்குள் விளையாடவைத்திருக்கும் தோனிக்கும், முதன்முறையாக அணிக்குத் தலைமையேற்று குவாலிஃபையருக்குள் கொண்டுவந்திருக்கும் கேன் வில்லியம்சனுக்குமான யுத்த நாள்தான் இன்று. இந்த குவாலிஃபையரில் தோற்றாலும், ஃபைனலுக்குள் செல்ல இரண்டு அணிகளுக்கும் எலிமினேட்டர் வாய்ப்பு இருக்கிறதென்றாலும் இருவருமே அந்த வாய்ப்பை விரும்பமாட்டார்கள். காரணம் அது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை. 

 

மும்பையில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் அணி மும்பையிலேயே தங்கியிருக்கலாம். நான்கு நாள் ஓய்வும் பயிற்சியும் எடுக்கலாம். தோற்றால், வெள்ளிக்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் போட்டிக்காக கொல்கத்தா செல்ல வேண்டும். சிரமமான கொல்கத்தா பிட்ச்சில் வெற்றிபெற்று மீண்டும் மும்பை வரவேண்டும். இந்த ரூட் இருவருக்குமே கசக்கும் என்பதால் வெற்றிபெற இருவருமே துடிக்கிறார்கள்.

தோனி #SRHvCSK

கூல் கேப்டன் யார்?

அனுபவம் வாய்ந்த உத்திகள் அதிகம் பயன்படுத்தும் தோனியா? அல்லது எலிகன்ட்டான கூல் கேப்டன் கேன் வில்லியம்சனா? கேப்டன்ஸியில் கலக்கப்போவது யார் என்பதுதான் இன்றைய கேள்வி. இந்த சீஸனில் பரீட்சார்த்த முயற்சிகளில் தோனி நிறையவே இறங்கியிருக்கிறார். சீனியர் சிட்டிசன்களின் அணி என்று ஏலத்தின்போது கிண்டல் செய்யப்பட்ட அணியை ஒருங்கிணைத்து, பலமான அணியாக மாற்றியதில் தோனியின் பங்கு அதிகம். நம்பிக்கை இழக்காமல் ஆட்டத்தின் இறுதிப்பந்து, இறுதி பேட்ஸ்மேன் வரை எப்படி விளையாடுவது என்கிற உத்தியை சென்னை அணிக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் தோனி.

ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் தோனியைவிடவும் கூல் கேப்டனாக இருக்கிறார். எப்படிப்பட்ட பிரஷர் சூழலாக இருந்தாலும் டென்ஷன் ஆகாமல், அணியினரையும் டென்ஷன் ஆக்காமல் சூழலைச் சமாளிக்கிறார். மும்பை பிட்ச்சில், மும்பைக்கு எதிராக வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது ஐதராபாத். பேட்டிங் பிட்ச்சில் வெற்றி சாத்தியமே இல்லை என்னும் சூழலில் மும்பையின் பேட்டிங் ஆர்டரை முற்றிலுமாக குலைத்துப்போட்டது ஐதராபாத்தின் பெளலிங். அன்றைய போட்டியில் பெளலிங் ரொட்டேஷனை மிகச்சிறப்பாகச் செய்தார் வில்லியம்சன். அதனால் இன்று கேப்டன்களின் பலத்தைப் பொருத்தே, நம்பிக்கையைப் பொருத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும். 

சென்னையின் ப்ளேயிங் லெவனில் மாற்றங்கள் உண்டா?

இரண்டு அணிகளுக்குமே தாங்கள் தேர்வு செய்யப்போகும் ப்ளேயிங் லெவன் மிகமிக முக்கியமானது. 2018 ஐபிஎல் சீசனில் சென்னையும், ஐதராபாத்தும் மோதும் மூன்றாவது மோதல் இது. ஏற்கெனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னையே வென்றிருக்கிறது என்றாலும் அதில் ஒரு வெற்றி திக்கித்திணறி பெற்ற வெற்றி. ஐதராபாத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சென்னையின் பலமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் அம்பதி ராயுடு என்னும் பேட்ஸ்மேன். இன்னொருவர் தீபக் சாஹர் என்னும் பெளலர். அம்பதி ராயுடு முதல் போட்டியில் 37 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். மற்றொரு போட்டியில் செஞ்சுரி. 2 போட்டிகளில் 179 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 177-க்கும் மேல் வைத்திருக்கிறார் அம்பதி. இரண்டு போட்டிகளிலுமே ராயுடுவின் விக்கெட்டை ஐதராபாத் பெளலர்கள் எடுக்கவில்லை.

#SRHvCSK

அதேபோல் பெளலிங்கில் தீபக் சாஹர். ஐதராபாத்தில் நடந்த முதல் மேட்ச்சில் நான்கு ஓவர்கள் வீசி, அதில் ஒரு மெய்டன் ஓவர் போட்டு, வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார் சாஹர். அடுத்து புனேவில் நடந்த மேட்ச்சில் 4 ஒவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தின் முதல் விக்கெட்டையும் எடுத்தார். இவர்கள் இருவரும்தான் இன்று சென்னையின் சூப்பர் ஸ்டார்கள்.

சாம் பில்லிங்ஸ் இன்றைய போட்டியில் அணிக்குள் இருக்கமாட்டார். போன மேட்ச்சில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட வாட்சன் அணிக்குத் திரும்புவார். ஐதராபாத்துக்கு எதிரான இரண்டாவது மேட்ச்சில் அரைசதம் அடித்தவர் வாட்சன். அதேபோல் டு ப்ளெஸ்ஸி இன்று ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என எதிர்பார்க்கலாம். வாட்சன், ராயுடு, டு ப்ளெஸ்ஸி, ரெய்னா, தோனி, ஜடேஜா, பிராவோ என்பதுதான் சென்னையின் பேட்டிங் லைன் அப்-ஆக இருக்கும். 

பெளலர்களைப் பொறுத்தவரை ஐதராபாத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் லுங்கி எங்கிடி விளையாடவில்லை. ஆனால், அவர் இன்று ப்ளேயிங் லெவனில் இருப்பார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஸ்விங்கால் விளையாடிவர் எங்கிடி. தீபக் சாஹர், லுங்கி எங்கிடி, ஷ்ரதுல் தாக்கூர், ஹர்பஜன் சிங், பிராவோ, ஜடேஜா என்பதுதான் தோனியின் பெளலிங் பிளானாக இருக்கும். டெத் ஓவர்களில் பிராவோ அதிக ரன்கள் கொடுக்கிறார் என்கிற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. அது உண்மைதான்.

ஐதராபாத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் கொடுத்தவர் பிராவோதான். ஆனால், முதல்  போட்டியில் சென்னையை காப்பாற்றியவரும் பிராவோதான். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்கிற நிலையில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து சென்னையை வெற்றிபெறவைத்தார். அதேபோல் இரண்டாவது போட்டியில் முக்கிய விக்கெட்டான தவானின் விக்கெட்டை எடுத்தவரும் பிராவோதான். அதனால் பிராவோ அணிக்குள் இருப்பது சென்னையின் பெரும்பலம் என்பதோடு இந்த மும்பை பிட்ச்சில் முதல் மேட்ச்சில் பேட்டிங்கால் அதிரவைத்தவர் பிராவோ.

ஐதராபாத்தின் பிளேயிங் லெவன்?
ஐதராபாத்தின் பலமே பெளலிங்தான் என்பது கடைசியாக விளையாடிய போட்டிகளில் பொய்யாகிப் போனது. ஐதராபாத்தின் சூப்பர் பெளலரான புவனேஷ் குமாரை ரிஷப் பன்ட் போட்டிப்புரட்டி எடுத்ததும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசிப்போட்டியில் புவனேஷ் குமார் விக்கெட் இல்லாமல் போனதும், அவரது பெளலிங் இன்று எடுபடுமா என்கிற சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. அதேபோல் ஐதராபாத்தின் சூப்பர் ஸ்பின்னரான ரஷீத் கான் கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் விக்கெட்டே எடுக்கவில்லை.

சென்னைக்கு எதிரான இரண்டு போட்டிகளிலுமே ரஷித் கான் சிறப்பாகப் பந்துவீசவில்லை. சென்னைக்கு எதிரான முதல் மேட்ச்சில் நான்கு ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்தார் ரஷீத்கான். சென்னைக்கு எதிரான இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் கார்லோஸ் பிராத்வெய்ட் அணிக்குள் இடம்பிடிப்பார். புவனேஷ் குமார், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், பிராத்வெய்ட், ரஷீத் கான், ஷகிப் அல் ஹசன் என்பதுதான் ஐதராபாத்தின் பெளலிங் லைன் அப் ஆக இருக்கும். பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை தவான், கோஸ்வாமி, வில்லியம்சன், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகீப் அல் ஹசன் என்பதுதான் பேட்டிங் ஆர்டராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

#SRHvCSK

மும்பை பிட்ச்!

2018 ஐபிஎல்-ன் முதல் போட்டியில் மும்பையுடன் இந்த பிட்ச்சில் விளையாடியது சென்னை. அன்றைய போட்டியில் சென்னையை வெற்றிபெறவைத்தவர் டுவெய்ன் பிராவோ. இந்த சீசனில் மும்பையில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. மூன்று மேட்ச்களில் சேஸ் செய்த அணிகளும், நான்கு மேட்ச்களில் முதலில் பேட் செய்த அணிகளுமே வெற்றிபெற்றிருக்கின்றன. இந்த சீசனில் பெங்களூருவுக்கு எதிராக மும்பை அடித்த 213 ரன்கள்தான் இந்த பிட்ச்சில் அதிகபட்சம். அதேபோல் ஐதராபாத்துக்கு எதிராக 87 ரன்களுக்குள் மும்பை சுருண்டதுதான் குறைந்தபட்ச ஸ்கோர். இரண்டு கேப்டன்களுமே இன்று டாஸில் வென்றால் ஃபீல்டிங்கைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். முழுக்க முழுக்க பேட்டிங் பிட்ச் என்பதால் 200 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் அது சேஸ் செய்யும் அணிக்கு சவாலான ஸ்கோராக இருக்கும்.

#SRHvCSK

வெற்றி யாருக்கு?
லீக் சுற்றில் இரண்டு மேட்ச்களிலும் சென்னை வெற்றிபெற்றுவிட்டதால் இன்றும் சென்னையே வெற்றிபெறும் என்று சொல்லிவிடமுடியாது. தவான், கேன் வில்லியம்சன் தவிர  பேட்டிங் வரிசை பிரமாதமாக இல்லை, மிடில் ஆர்டர் சொதப்புகிறது என ஐதராபாத்துக்கு பலவீனங்கள் இருக்கின்றன. அதேபோல் பெளலிங்கில் பலமான அணியான ஐதராபாத் பெளலர்கள் கடைசியாக நடந்த மேட்ச்களில் அதிக ரன்கள் விட்டார்கள். ஆனால், சென்னையை வீழ்த்த முடியாத அணி இல்லை ஐதராபாத். ஐதராபாத்தின் பெளலர்கள் ஃபார்முக்கு வந்தால் சென்னையின் பேட்டிங் எடுபடுவது சிரமம்!

https://www.vikatan.com/news/sports/125638-will-kane-willamson-surprise-dhonis-chennai-super-kings.html

Link to comment
Share on other sites

தோனிக்குள் உறங்கிய புலியைத் தட்டி எழுப்பிய தினேஷ் கார்த்திக்கின் ‘அந்த’ சிக்ஸ்: சடகோபன் ரமேஷ் கருத்து

 

 
dhoni-dinesh

தினேஷ் கார்த்திக், பின்னால் தோனி விக்கெட் கீப்பர்.   -  படம். | ஏ.எஃப்.பி.

நடப்பு ஐபிஎல் போட்டியில் தோனி, கார்த்திக், கேப்டன்சி, பினிஷர் என்ற பேச்சுக்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன, மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா என்றார்கள் ஆனால் அவர்கள் அணிகள் வெளியே சென்று விட்டது, சற்றும் எதிர்பாராமல் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு 16 புள்ளிகளுடன் தோனி தலைமை சிஎஸ்கேவுக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுத்தது.

இதோடு மட்டுமல்லாமல் தினேஷ் கார்த்திக் தோனியை ஒப்பிடும் போது நடப்பு ஐபிஎல் போட்டிகளில் சீரான முறையில் பினிஷராக வெற்றிகரமாக ஆடி வருகிறார். தோனியின் பேட்டிங்கும் 2011 தோனியை நினைவூட்டுவது போல் புத்தெழுச்சி பெற்றுள்ளது, ஆனாலும் திடீரென அன்று டெல்லிக்கு எதிராக குறைந்த இலக்கைக் கூட வெல்ல முடியாமல் அவர் ஆட்டமிழந்தார். நடு ஓவர்களில் அவரால் அன்று அவர் விருப்பத்திற்கேற்ப ரன்கள் எடுக்க முடியவில்லை. பிட்ச் சரியில்லை என்றார்.

 
 

இந்நிலையில் முன்னாள் இந்திய, தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் ஆங்கில நாளேடு ஒன்றில் கூறியிருப்பதாவது:

இரு அணிகளும் உண்மையிலேயே நன்றாக ஆடுகின்றன (சென்னை, ஹைதராபாத்). ஆனால் இதில் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து அணியாக ஒன்று திரண்டு சென்னை அணி எழுச்சிபெற்றுள்ளது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.

மற்ற அணிகளுக்கு இம்மாதிரி மீண்டும் வந்து ஆடுவது கடினமாக அமைந்திருக்கும் என்றே கருதுகிறேன். இது சாத்தியமானது தோனியின் தலைமைத்துவத்தினால்தான், அதற்காக அவருக்கு எனது பாராட்டுக்கள்.

அதுவும் தோனி இப்போது பேட்டிங் செய்வதைப் பார்க்கும் போது 2011 உலகக்கோப்பையில் ஆடிய, பழைய தோனியின் ஆட்டத்தை மீண்டும் நினைவுறுத்துகிறார். தோனி இப்படியாடுவது இந்திய அணிக்கும் நல்லது. இதற்கு மறைமுகக் காரணமான தினேஷ் கார்த்திக்குக்குத்தான் நாம் நன்றி கூற வேண்டும். நிதாஹஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்து வெற்றி சிக்ஸுக்குப் பிறகே தோனியின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த புலி விழித்துக் கொண்டது.

அணியில் போட்டி மனப்பான்மை இருப்பது நல்லது. இன்று அரையிறுதி ஆடும் சென்னைக்கு இன்னொரு அனுகூலம் என்னவெனில் பெரிய போட்டிகளில் நாக்-அவுட் போன்றவற்றில் ஆடுவதில் சென்னை அளவுக்கு அனுபவம் மற்ற அணிகளுக்கு இல்லை. ராயுடு நல்ல தொடக்கம் கொடுப்பார் என்று நம்புவோம், அதே போல் தோனி இன்று முன்னால் களமிறங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் சடகோபன் ரமேஷ்.

http://tamil.thehindu.com/sports/article23957739.ece?homepage=true

Link to comment
Share on other sites

இன்று நடக்கும், சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் முதல் ‘ப்ளே-ஆஃப்’ போட்டி ரத்தானால் யாருக்கு பைனல் வாய்ப்பு?

 

 
cs

சிஎஸ்கே கேப்டன் தோனி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன்: கோப்புப்படம்   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

மும்பையில் இன்று இரவு நடக்கும் ப்ளே-ஆஃப் தகுதிச் சுற்றுப்போட்டி ரத்தானால், எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்று தெரியவந்துள்ளது.

ஐபிஎல் 11-வது சீஸன் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் ப்ளே ஆஃப் சுற்றுப்போட்டி தொடங்குகின்றன. 18 புள்ளிகளுடன் சன் சைரசர்ஸ் ஹைதராபாத் அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 18 புள்ளிகள் பெற்றாலும் கூட நிகர ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி முதலிடத்தைப் பெற்றது.

இன்றைய முதலாவது ப்ளேஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மோதுகிறது. 2-வது ப்ளேஆப் சுற்றுப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதலாவது தகுதிச் சுற்றுப்போட்டி மழை காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திலோ அல்லது ரசிகர்களின் இடையூறு காரணாமாக போட்டி ரத்து செய்யப்பட்டால், மீண்டும் போட்டி நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் சரிசமமான புள்ளிகளும் தரப்படாது. மாறாக, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி அதாவது, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

மாறாக போட்டி ரத்து செய்யப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றதாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2-வது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டிய சூழல் ஏற்படும். இதில் வெற்றி பெற்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும்.

cskjpg

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

 

ஒருவேளை எந்தவிதமான இடையூறும் இன்றைய போட்டியில் நேராமல் போட்டி நடந்தால், சன்ரைசர்ஸ் அணியை வென்று நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறலாம். அல்லது தோல்வி அடையும் பட்சத்தில் 2-வது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக தகுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும். போட்டி ரத்தானாலும், அல்லது இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், மற்றொரு போட்டியை சென்னை அணி சந்திக்க வேண்டும்.

 

http://tamil.thehindu.com/sports/article23958571.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் பிளே ஆஃப் விறுவிறு தொடக்கம்: முதல் பந்தில் தவன் பவுல்டு; வில்லியம்சன் 3 பவுண்டரிகள்

 
dhawan

படம். | வி.கணேசன்.

மும்பையில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை.

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.

ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார்.

வில்லியம்சனைக் கட்டுப்படுத்த முடியுமா? இதே முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினார்.

தவண் கோல்டன் டக் அடித்தார். வில்லியம்சனும், கோஸ்வாமியும் ஆடி வருகின்றனர். சிஎஸ்கேவுக்கு அருமையான தொடக்கம்.

http://tamil.thehindu.com/sports/article23961130.ece?homepage=true

46/3 * (5.5/20 ov)
Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் - பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை

அ-அ+

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை. #IPL2018 #CSKvSRH

 
 
ஐபிஎல் கிரிக்கெட் - பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை
 
ஐபிஎல் 2018 தொடரின் ‘குவாலிபையர் 1’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
 
ஐதராபாத் அணியில் ஷிகர் தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.
 
அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
 
18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
201805222254589863_1_brath-2._L_styvpf.jpg
 
சென்னை அணி சார்பில் பிராவோ 2 விக்கெட், சாஹர், நிகிடி, ஷர்துல் தாகுர், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, சென்னை அணி 140 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் இறங்கினர். வாட்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
 
அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
 
முதலில் இருந்தே ஐதராபாத் அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சென்னை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. டு பிளசிஸ் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று அரை சதமடித்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
 
இறுதியில், பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. டு பிளசிஸ் 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐதராபாத் சார்பில் சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #CSKvSRH
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/22225459/1164940/chennai-super-kings-beat-sunrisers-hederabad-by-2.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பாராத வெற்றி. பாராட்டுக்கள்.பஞ்சாப் வெளியேறிதால் நான் இப்ப கொல்கத்தாவுக்கு மாறி விட்டேன்.பார்ப்போம்

Link to comment
Share on other sites

சரி கொல்கத்தாவும் கையை விட்டால் எங்கு போவீர்கள்?..tw_blush:

6 minutes ago, சுவைப்பிரியன் said:

எதிர் பாராத வெற்றி. பாராட்டுக்கள்.பஞ்சாப் வெளியேறிதால் நான் இப்ப கொல்கத்தாவுக்கு மாறி விட்டேன்.பார்ப்போம்

 

சும்மா ஒரு தகவலுக்கு கேட்டு வைப்போம் என்றுதான்.

நீங்கள் தாராளமாக யாரையும் ஆதரிக்கலாம்

Link to comment
Share on other sites

‘கிரேட் எஸ்கேப்’: கதிகலக்கிய சன் ரைசர்ஸ்; டுபிளெசிஸ் சூப்பர் பேட்டிங்கில் ஐபிஎல் இறுதியில் சிஎஸ்கே

 

 
faf

வெற்றி நாயகன் டுபிளெசிஸை பாராட்டும் சிஎஸ்கே வீரர்கள்.   -  படம். | ஏ.பி.

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியிம் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் உறுதியாக நின்ற டுபிளெசிஸ் புவனேஷ்குமாரை நேராக அடித்த அபாரமான சிக்சரினால் சன் ரைசர்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரேட் எஸ்கேப் ஆகி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு 7வது முறையாக நுழைகிறது ‘பிராண்ட்’ சிஎஸ்கே. விரட்டலில் ஒருநேரத்தில் 62/6 என்று உதிர்ந்து கொண்டிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

 

டாஸ் வென்ற தோனி முதலில் ஹைதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியை சென்னை தன் சூப்பர் பவுலிங்கினால் 139/7 என்று மட்டுப்படுத்தியது. ஆனாலும் குறைந்த ரன் இலக்குகளை திறம்பட தடுத்துப் பழக்கப்பட்ட சன் ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியிலும் ரஷீத் கானின் அற்புதமான பவுலிங், கவுலின் தொடக்க 2 விக்கெட்டுகளினால் தோனிபடையின் வயிற்றை கலக்கினர். கலங்கிப்போனது என்னவோ உண்மைதான். ஏனெனில் ஐபிஎல்-ன் மிகப்பெரிய பிராண்ட் சிஎஸ்கே மற்றும் தோனி ஆவார்கள், ஆகவே இன்னொரு வாய்ப்பிருந்தாலும் பிளே ஆபில் முதல் தோல்வி பிராண்ட் இமேஜுக்கு ஏற்படும் அடியாக மாறியிருக்கும், ஆனால் டுபிளெசிஸ் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 67 ரன்கள் விளாச அவருக்கு உதவியாக முதலில் ரெய்னா (22), கடைசியில் சாஹர் 10 ரன்கள், தாக்கூர் 15 (5 பந்து) முக்கிய பங்களிப்புகளினால் 19.1 ஓவர்களில் 140/8 என்று வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

முன்னதாக சாஹருக்கு பிராத்வெய்ட் பிடித்த கேட்ச் சந்தேகமானது, அதனை களநடுவர் அவுட் என்றார், ஆனால் அவர் கேட்சை கிளீனாக எடுக்கவில்லை, தரையில் பட்டது போல்தான் இருந்தது, களநடுவர் அவுட் என்று கூறினாலும் 3வது நடுவருக்கு அனுப்பினார். டிவி நடுவர் ரீப்ளேக்களைப் போட்டுப்பார்த்தும் முடிவாக ஒன்றும் புரிபடவில்லை, ஆனால் களநடுவர் அவுட் என்றதால் சாஹர் 10 ரன்கள் என்ற முக்கியப் பங்களிப்புடன் வெளியேற வேண்டியதாயிற்று.

அதே போல் டுபிளெசிஸ் முக்கியக் கட்டத்தில் ரஷீத் கான் பந்தில் கால்காப்பில் வாங்கினார், முழங்கால் மட்டத்தில்தான் பந்து பட்டது. களநடுவர் எல்.பி.என்று தீர்ப்பளித்தார். இங்கு அம்பயர்ஸ் கால் எல்லாம் கிடையாது போலும். டுபிளெசிஸ் ரிவியூ கேட்டார், ஆனால் ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்தது தெரியவந்தது, பிழைத்தார் டுபிளெசிஸ், பிழைத்தது சென்னை சூப்பர் கிங்ஸும்தான். ரஷீத் கான் தன் 4 ஓவர்கள் ஸ்பெல்லில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து தோனி, பிராவோ விக்கெட்டுகளை ‘சீப்’ ஆக வீழ்த்தி சன் ரைசர்ஸ் அணியைப் போட்டிக்குள் கொண்டு வந்தார், மேலும் கடைசியில் பவுண்டரி போகும் பந்தை அபாரமாகத் தடுத்து ரன்னர் முனைக்கு ஒரு வலுவான த்ரோவை அடிக்க ஹர்பஜன் சிங் ரன் அவுட் ஆனார், இப்படியாக முக்கியத் தருணங்களிலெல்லாம் ரஷீத் கான் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சென்னை பேட்டிங்கும் சொதப்பலாகி மீண்ட கதை:

பந்துகள் ஸ்விங் ஆக புவனேஷ் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் வாட்சன் பீட் ஆனார். ஒன்று லேட் அவுட் ஸ்விங், இன்னொன்று இன்ஸ்விங், இன்சைடு எட்ஜில் தப்பினார். ஆனால் இதே ஓவரில் ஒரு பந்து டெஸ்ட் கிளாஸ் பந்தாக அமைய உள்ளே வந்து வெளியே ஸ்விங் ஆக வாட்சன் எட்ஜ் தப்பவில்லை, வெளியேறினார்.

அதன் பிறகு ரெய்னாவுக்கு எல்லா டீம்களும் போடுவது போல் அவருக்கு சில இலவச பவுண்டரிகளை சந்தீப் சர்மா வழங்கினார், 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்து சென்னைக்கு ஒரு உத்வேகத்தை அளித்தார் ரெய்னா. 4வது ஓவரில்தான் சித்தார்த் கவுல் சென்னையைக் கவிழ்த்தார்.

கவுல் ஷார்ட் பிட்ச்தான் வீசுவார் என்று நினைத்து ஆஃப் ஸ்டம்புக்குக் குதித்தார் ரெய்னா. லெக் அண்ட் மிடில் நன்றாகத் தெரிந்தது பவுல்டு ஆனார். ஆனால் 22 முக்கிய ரன்களை அவர் எடுத்தார். அடுத்த பந்தே சென்னை சூப்பர் கிங்சின் சூப்பர் பேட்ஸ்மென் ராயுடு மீண்டுமொரு முறை தன்னால் நல்ல தரமான பந்து வீச்சை சரியாக ஆட முடியாது என்பதை நிரூபித்தார், பந்து உள்ளே டிப் ஆனது அதாவது தாமதமாக ஸ்விங் ஆகி யார்க்கர் லெந்த் ஆகி பவுல்டு ஆனது, ராயுடு பந்து உள்ளே வருமா வெளியே செல்லுமா என்பதை ஒரு விநாடியில் முடிவெடுக்க வேண்டும், ஆனால் பந்து அதற்குள் முடிவெடுத்தது, தனக்கு ஸ்டம்புதான் வேண்டுமென்று, டக் அவுட் ஆனார். ஹாட்ரிக் பந்தை தோனி மிட் ஆஃப்க்கு அடித்தார். குமார் 3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுக்க சிஎஸ்கே 5 ஓவர்களில் 25/3 என்று இருந்தது.

தோனி பொறுமை காத்தார், அவராலும் அடிக்க முடியவில்லை, 8 பந்துகள் பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தார். கடைசியில் கவுல் ஷார்ட் பிட்ச் பந்தை நீட்டாக புல்ஷாட் பவுண்டரி அடித்தார்.

ரஷீத் கான் வீசிய கூக்ளியில் தோனி பவுல்டு:

 

rashidjpg

தோனியை வீழ்த்திய ரஷீத் கான். | ஏ.எஃப்.பி.

 

தோனி 18 பந்துகளில் 9 ரன்கள் என்று ஆடிக் கொண்டிருந்த போது 8வது ஓவரில் ரஷீத் கான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து கூக்ளியாக்கினார் பந்து சுருக்கென்று உள்ளே வந்தது. தோனி காலை ஓரளவுக்கு முன்னால் நீட்டியும் பந்தை ரீச் செய்ய முடியவில்லை, அவரது பேட்டுக்கும் கால்காப்புக்கும் இடையே காண்டா மிருகம் செல்லும் இடைவெளி ரஷீத் கான் பந்து செல்லாதா என்ன? அருமையான பந்தில் பவுல்டு ஆனார். ஒன்று ஒரு ஸ்டெப் இறங்கி வந்து ஆடியிருக்க வேண்டும், இல்லையெனில் பின்னால் சென்று ஆடியிருந்தால் ஒருவேளை தப்பியிருக்க வாய்ப்புண்டு. டுபிளெசிஸ் ஒரு சிக்ஸ் அடித்து நிலைமையைச் சரிகட்டினார்.

பிராவோ இறங்கினார் அவரும் தோனி போல்தான் 11 பந்துகளில் 7 ரன்கள், அப்போது ரஷீத் கானுக்கு ஒரு ஸ்லிப் வைத்து மிரட்டினார் வில்லியம்சன், பந்து திரும்பி எழும்பியது பிராவோ ஸ்லிப்பில் தவனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஜடேஜா, சந்தீப் சர்மா வீசிய வேகம் குறைக்கப்பட்ட பந்தை கொஞ்சம் முன்னதாகவே மட்டையால் தடுத்தாட கொண்டு வந்தார் பந்து மட்டையில் பட்டு பவுலரிடமே கேட்ச் ஆனது. 62/6.

பார்த்தார் டுபிளேசிஸ் சரிப்பட்டு வராது என்று பலவீனமான பவுலரான ஷாகிப் அல்ஹ்சனை லெக் திசையில் 2 இழுப்பு இழுத்தார் ஒன்று பவுண்டரி, மற்றொன்று சிக்ஸ். கடந்த போட்டியின் பிஞ்ச் ஹிட் நாயகன் சாஹர், சந்தீப் சர்மாவின் மெதுவான பந்தை மிட்விக்கெட்டில் அருமையாக சிக்ஸ் அடித்து அசத்தினார். இவர் 10 ரன்களில் இருந்த போதுதான் நடுவரின் சந்தேகத்துக்கிடமான தீர்ப்பினால் பிராத்வெய்ட்டின் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

30 பந்துகளில் 48 ரன்கள் தேவை. ஹர்பஜன் சிங் இறங்கி தடவு தடவென்று தடவினார் ரஷீத் கான் வீசியதும் அவருக்குப் புரியவில்லை, கவுல் வீசிய ஓவரிலும் அவர் மட்டையிலிருந்து வெறும் காத்துதான் வந்தது.

அப்போதுதான் பிராத்வெய்ட் மோசமாக 18வது ஓவரை வீச டுபிளெசிஸ் முதலில் ஓவர் பிட்ச் பந்தை கவரில் பவுண்டரி விளாசினார். அடுத்தும் ஓவர் பிட்ச் இம்முறை மிட்விக்கெட்டில் சிக்ஸ், டுபிளெசிஸின் அருமையான அரைசதம் நிறைவு. அடுத்து வேகமாக வீச வேண்டிய பந்தை வேகம் குறைத்து வீச மிட்விக்கெட்டில் பவுண்டரி பறந்தது. அப்போதுதான் அதே ஓவரில் ஹர்பஜன் சிங் 2 ரன்களில் ரஷீத் கானின் மிக அருமையான பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார், அவர் அவுட் ஆன பிறகும் டுபிளெசிஸ் பிராத்வெய்ட்டை ஒரு பவுண்டரி அடிக்க 20 ரன்கள் அந்த ஓவரில் வந்தது, சிஎஸ்கே 117/8 என்ற இக்கட்டான நிலையில் ஷர்துல் தாக்கூர் இறங்கினார்.

அதிர்ஷ்ட பவுண்டரிகள்:

அடுத்த ஓவரை சித்தார்த் கவுல் வீச தாழ்வான புல்டாஸ் எட்ஜ் ஆகி தேர்ட்மேனில் பவுண்டரி ஆனது, அடுத்த பந்து பீட் ஆகியிருந்தால் பவுல்டு, ஆனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டு சைனீஸ் கட் ஷாட்டில் பைன்லெக்கில் இன்னொரு பவுண்டரி போனது. பயங்கர அதிர்ஷ்டம். இதே ஓவர் கடைசி பந்தில் மிக அருமையாக நேராக தூக்கி பவுண்டரி அடித்தார் தாக்கூர். 134/8 என்று கடைசி 6 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்று வந்த போது புவனேஷ்வர் குமார் பந்தை டுபிளெசிஸ் அருமையாகத் தூக்கி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

லுங்கி இங்கிடி அசத்தல்: பிராத்வெய்ட் அதிரடியில் 139 ரன்கள் எடுத்த சன் ரைசர்ஸ்:

ஷிகர் தவண் முதல் பந்திலேயே உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். சாஹர் மீண்டுமொருமுறை அற்புதமான ஸ்விங் பவுலிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் அதே ஓவரில் கேன் வில்லியம்சன் 3 பவுண்டரிகளை விளாசினார்.

எஸ்.பி.கோஸ்வாமிக்கு தோனி ஒரு ரன் அவுட் வாய்ப்பைத் தவற விட்டாலும் அவர் லெக் திசையில் ஒதுங்கி ஒதுங்கி ஆடியது கை கொடுக்கவில்லை 12 ரன்களில் லுங்கி இங்கிடி பந்தில் இப்படி ஒதுங்கி ஆடினார் இங்கிடி பந்து அவரைத் துரத்தியது. இங்கிடியிடமே கேட்ச் ஆனார்.

ngidijpg

சிக்கனமாக வீசி அசத்திய இங்கிடி. | படம். | ஏ.எப்.பி.

 

15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த வில்லியம்சன், தாக்குர் வீசிய லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை புல் செய்ய நினைத்து லெக் திசையில் எட்ஜ் செய்தார் தோனிக்கு நேரடியான கேட்ச். ஷாகிப் அல் ஹசனுக்கு சாஹர் ஒரு பந்தை வீச வழுக்கியது போல் தெரிந்தது, ஹசன் மண்டைக்கு மேல் லெக் திசையில் சென்றது அது வைடு, நோபால் என்று எதுவேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம் ஆனால் எராஸ்மஸ் அதிர்ச்சியூட்டும் விதமாக டெட் பால் என்றார். ஷாகிப் அல் ஹசனும் 12 ரன்களில் பிராவோவின் லெக் சைடு பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். வில்லியம்சன், ஷாகிப் இருவருமே தேவையில்லாமல் லெக் திசையில் தோனியிடம் அவுட் ஆகினர்.

5வது ஓவர் 3வது பந்தில் பவுண்டரி வந்ததோடு சரி. யூசுப் பத்தான், மணீஷ் பாண்டே என்ற ஹிட்டர்கள் இருந்தும். 44 பந்துகளுக்கு பவுண்டரியே வரவில்லை. இதில் ஜடேஜா 3 ஓவர்கள் வீசி 8 ரன்களுக்கு பாண்டேயைக் காலி செய்தார், பாண்டே 16 பந்துகளில் 8 ரன்கள் என்று சொதப்பி ஜடேஜாவிடம் வெளியேறினார். 13வது ஓவர் வரை சன் ரைசர்ஸின் ரன் ரேட் 6 ரன்களுக்குக் கீழ்தான். 75/5. பவுண்டரி வறட்சியை யூசுப் பத்தான் தாக்கூரை பவுண்டரி அடித்து தீர்த்து வைத்தார். கடைசியில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களில் பத்தான், பிராவோ பந்தில் அவரது அற்புதமான டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

18வது ஓவர் தொடங்கும் போது 15 பந்துகளில் 8 என்று இருந்த பிராத்வெய்ட், தாக்கூரை 2 அரக்க சிக்சர்கள் அடித்தார். இங்கிடி தன் 4வது ஓவரை, சிஎஸ்கேயின் 19 வது ஓவரை சிக்கனமாக வீச் 4 ரன்கள்தான் கொடுத்தார், 20வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீச பிராத்வெய்ட் 2 பெரிய சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் சேர்த்தார், இதனால் 139/7 என்று முடிந்தது சன்ரைசர்ஸ். பிராத்வெய்ட் 29 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் நாட் அவுட்.

ஆனால் டுபிளெசிஸின் உறுதியான இன்னிங்ஸ், கொஞ்சம் அதிர்ஷ்டம் ஷர்துல் தாக்கூரின் இரண்டு மகா அதிர்ஷ்ட பவுண்டரிகள் ஆகியவற்றினால் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரேட் எஸ்கேப் ஆனது. ஆட்ட நாயகன் டுபிளெசிஸ்.

http://tamil.thehindu.com/sports/article23963133.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் தொடரின் வெளியேற்றும் சுற்றில் ராஜஸ்தான் - கொல்கத்தா இன்று மோதல்

 

 
23CHPMUDk

தினேஷ் கார்த்திக்   -  THE HINDU

ஐபிஎல் தொடரில் வெளியேற்றும் சுற்றில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் லீக் சுற்றில் இருமுறை ராஜஸ்தானை வீழ்த்தி உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஈடன்கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்திருந்தது. கடைசியாக பங்கேற்ற 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது அந்த அணி. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகளில் சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை கொல்கத்தா மட்டுமே பெற்றுள்ளது.

 

இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது தகுதி சுற்று 2-ல் விளையாட தகுதி பெறும். வெளியேறும் சுற்றில் வெற்றி பெறும் அணியானது முதல் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வெற்றி கண்டால் மட்டுமே இறுதி போட்டியில் கால்பதிக்க முடியும். அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் அணி, யாரும் எதிர்பாராத வகையில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

அந்த அணியில் ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது சற்று பின்னடைவுதான். எனினும் இவர்கள் இல்லாத நிலையிலும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றை இறுக பற்றிக் கொண்டது ராஜஸ்தான் அணி. இதன் பின்னர் மும்பை, பஞ்சாப் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் ஏமாற்றம் அடைந்ததால் பிளே ஆஃப் சுற்றில் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்தது அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி.

வெளியேற்றும் ஆட்டம் என்பது கால் இறுதி ஆட்டம் போன்றதே, தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான். ராஜஸ்தான் அணிக்கு கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருந்து சவால் காத்திருக்கக்கூடும். ஏனெனில் இந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த மூவர் கூட்டணி அந்த ஆட்டத்தில் 7 விக்கெட்களை வேட்டையாடியிருந்தது. அதிலும் குல்தீப் யாதவ் 20 ரன்களுக்கு 4 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.

பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில் ராகுல் திரிபாதி கடந்த ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடி 80 ரன்கள் சேர்த்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். சஞ்சு சாம்சன், ரஹானே, ஹென்ரிச் கிளாசென், கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் பேட்டிங் வலுப்பெறும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனை பெற்றிருப்பது பலமாக உள்ளது. இந்த சீசனில் அவர், 6 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றிக்கான பங்களிப்பைச் செய்துள்ளார். இந்த சீசனில் 438 ரன்கள் சேர்த்துள்ள அவர் மீண்டும் ஒரு பயனுள்ள இன்னிங்ஸை விளையாட ஆயத்தமாக உள்ளார். இதபோல் தொடக்க பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் சுனில் நரேனும் ராஜஸ்தான் அணிக்கு சவால் கொடுக்கக்கூடும். கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நித்திஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23965247.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

சரி கொல்கத்தாவும் கையை விட்டால் எங்கு போவீர்கள்?..tw_blush:

 

சும்மா ஒரு தகவலுக்கு கேட்டு வைப்போம் என்றுதான்.

நீங்கள் தாராளமாக யாரையும் ஆதரிக்கலாம்

ஏங்க போறது தொடர்ந்து விளையாட்டடைப் பாக்கிறது தான்.மனதளவில் ஏதோ ஒரு அணிக்கு ஆதரவு என்று இருநடதால் மடச் பாக்க கொஞ்சம் ஆர்வமாக இருக்கும்.அவளவுதான்.?

Link to comment
Share on other sites

நிறைய வீடியோ பதிவுகளைப் பார்த்தும் அவரை ஆட முடியவில்லை: ரஷீத் கான் பற்றி டுபிளெசிஸ்

 

 
rashid

ஏப்.22, 2018-ல் நடந்த போட்டியில் டுபிளெசிஸை வீழ்த்திய ரஷீத் கான்.   -  படம். | கிரி.

140 ரன்கள் வெற்றி இலக்கை ஏதோ 400 ரன் இலக்கு போல் சன் ரைசர்ஸ் ரஷீத் கான், கவுல், புவனேஷ்வர் குமார் மூலம் முட்டுக்கட்டை போட கடைசியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிசின் அனுபவம் மற்றும் திறமையினால் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

 

நான் அதிகம் ஆடவில்லை என்ற நிலையில் பங்களிப்பு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று நான் என்னுடைய பழைய ஆட்டங்கள நினைவுபடுத்திக் கொண்டேன். அதிலிருந்து மனரீதியாக நம்பிக்கையைப் பெற்றேன். நான் ஓய்வறைக்குள் நுழைந்து “எப்படிப்பா ஜெயிச்சோம்?” என்று சகவீரர்களிடம் கேட்டேன்.

சில வேளைகளில் ஆட்டம் தொட முடியாத இடத்துக்குச் சென்று விடும். ஆனால் நிற்க வேண்டும். ஷர்துல் தாக்கூர் வந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் (அதிர்ஷ்டகர எட்ஜ் பவுண்டரிகள்), ரஷீத் கான் உண்மையில் பெரிய பவுலர். அவர் பந்துகளை உண்மையில் கணிக்க முடியவில்லை. அதனால்தான் அவர் ஓவர் முடியட்டும் என்று காத்திருந்தோம்.

ரஷீத் கான் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எதிரணியினருக்கு கடும் சவால்களை அளிப்பார் என்று இப்போதே தெரிகிறது. அவர் தன் சொந்தத் திறமையிலேயே போட்டிகளை வென்று கொடுப்பார். அதனால்தான் அவர் பவுலிங்கை மரியாதை கொடுத்து ஆடவேண்டும். நிறைய வீடியோ பதிவுகளைப் பார்த்தும் அவரை ஆட முடியவில்லை, என்றார் டுபிளெசிஸ்.

ரஷீத் கான் அவரது ஓவரை முடிக்கும் போது சிஎஸ்கே 93/7, பிறகு சித்தார்த் கவுல் சிக்கனமாக வீச கடைசி 3 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது புவனேஷ்வர் குமாரை வீச அழைக்காமல் ஷார்ட் பிட்ச், புல்பிட்ச் கிங் பிராத்வெய்ட்டை அழைத்தார் கேன் வில்லியம்சன், அப்போது டுபிளெசிக்குள் உறங்கிய சிங்கம் எழுந்து உறுமியது அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டதால் போட்டி மாறியது.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் டுபிளெசிஸ் கூறும்போது, “பிராத்வெய்ட்டுக்கு எதிராக அனைத்து ரிஸ்குகளையும் நானே எடுக்க முடிவெடுத்தேன். அவரது வேகப்பந்தும், ஸ்லோ பந்தும் ஒன்றே போன்றதுதான். அதனால் இந்த ஓவரை இலக்கு வைத்தோம்.

ரஷீத் கான் எங்களைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்த போது ஷாகிப் அல் ஹசன் வந்தார், அவர் பந்துகள் திரும்பவில்லை உடனே அவர் ஓவரில் 12-15 ரன்களை எடுப்போம் என்று முடிவெடுத்தோம்.

தோனி அணியின் பெரியண்ணா போன்றவர். களத்தில் தோழமை உணர்வுடன் ஆடுகிறோம், அதற்காக தோனிக்கு நன்றி” என்றார் டுபிளெசிஸ்.

http://tamil.thehindu.com/sports/article23968029.ece?homepage=true

Link to comment
Share on other sites

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

 

அ-அ+

தினேஷ் கார்த்திக், ரஸல் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். #IPL2018 #KKRvRR

 
ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரைன், 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

201805232043564910_1_russell-s._L_styvpf.jpg

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நேரத்தில் ஷுப்மான் கில் 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/23204356/1165181/IPL-2018-KKR-170-runs-targets-to-rajasthan-royals.vpf

Link to comment
Share on other sites

சிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?- தோனியின் பளீச் பதில்

 

 

 
ms-dhoni-

சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி: கோப்புப்படம்   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

சிஎஸ்கே அணி இக்கட்டான சூழலிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு என்ன காரணம் என்பதற்கு கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.

11-வது ஐபிஎல் டி20 சீஸன் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மும்பையில் நேற்று நடந்த முதல் ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்தப் போட்டியில் 140 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

ஒருநேரத்தில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில், தொடக்க ஆட்டக்காரர் டூப்பிளசிஸ் நிதானமாக பேட் செய்து அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தார். டூப்பிளசிஸ் 42 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி மற்றொரு தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த வெற்றி குறித்தும், தோல்வியின் தருவாயில் அணி மீண்டது குறித்தும் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் போட்டியின் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி கூறியதாவது:

இன்றைய போட்டியில் டூப்பிளசிஸின் பேட்டிங், எங்களுக்கு அனுபவமாக இருந்தது. ஒருவர் அதிகமான போட்டியில் விளையாடமல் இருந்து வாய்ப்பு கொடுக்கும் போது சிறப்பாக விளையாடுவது என்பது எளிதானதல்ல. அதற்கு உடலையும், மனதையும் நன்றாக பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். இது அனுபவத்தின் மூலமே கிடைக்கும். அணியில் உங்களின் பங்கு என்ன, என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்தவகையில் டூப்பிளசிஸ் பங்கு அளப்பறியது.

ஒருவேளை இந்தப் போட்டியில் நாங்கள் தோற்றிருந்தால்கூட, இறுதிப்போட்டிக்கு வர மற்றொரு வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. நாங்கள் வெற்றி பெறும்போது எப்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தபோட்டியில் எங்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்துவீச்சு அருமை. எதிரணியில் புவனேஷ்குமார் நன்றாகப் பந்துவீசினார், அவருக்கு ஆதரவாக ராஷித்கானின் பந்துவீச்சும் அமைந்திருந்து. நடுவரிசையில் திடீரென 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்கும் புதிரான பந்துவீச்சாளர் ராஷித்கான்.

dressing%20roomjpeg

சன்ரைசர்ஸ அணியுடனான நேற்றை போட்டிக்கு பின் ஓய்வறையில் பிராவோ நடனமாடுவதை தோனி உள்பட அனைவரும் ரசித்த் காட்சி

 

நாங்கள் சிறப்பாக, வெற்றிக்கூட்டணியாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியின் பிரதிபலிப்பு அனைத்தும் ஓய்வறையில்(டிரஸ்ஸிங் ரூம்) எதிரொலிக்கும்.

ஓய்வறையில் நான் ஒரு கேப்டன் போல் அல்லாமல் ஜூனியர், சீனியர் வேறுபாடின்றி பழகுவதும், அனைவரிடத்திலும் சமூகமான உறவுகள் உருவாக்கி ஏதுவான சூழலை உண்டாக்குவதுதான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். ஓய்வறையில் மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்காவிட்டால், வெற்றிகள் சாத்தியமாகாது.

இந்த வெற்றி வீரர்களுக்கு மட்டுமல்ல, அணி நிர்வாகம், அணியில் உள்ள மற்ற ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஓய்வறையில் ஒரு வீரருக்கு கூட நல்லவிதமான சூழல் இல்லாவிட்டால் கூடஅது மனவருத்தம்தான். ஓய்வறையில் நல்லசூழல் இல்லாவிட்டால், விளையாட்டில் நல்லவிதமாக செயல்பட முடியாது.

இந்த வெற்றியில் இருந்து டூப்பிளசிஸ் ஆட்டத்தில் இருந்து ஏராளமாகக் கற்று இருக்கிறோம். நல்ல வீரர்களை கொண்டு, தொடக்கத்தில் இருந்து பல்வேறு வீரர்களை ஒவ்வொரு போட்டியிலும் பயன்படுத்தி வருகிறோம். இறுதியில்தான் சிறந்த பந்துவீச்சாளரை அடையாளம் காண முடியும்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்

 

http://tamil.thehindu.com/sports/article23967476.ece

 

 

 

 

 

சாம் பில்லிங்ஸ் காயம் டுபிளெசிஸுக்கு வழிவிட்டது: ஸ்டீபன் பிளெமிங்

jhnjpg

சாம் பில்லிங்ஸ் காயம் அடைந்த காரணத்தால் டுபிளெசிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே நடந்த இறுதி போட்டிக்கு நுழைபவர்களுக்கான ஆட்டத்தில் சன்ரைசர் நிரணயித்த 140 இலக்கை அடைய சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்டார் வீரர்கள் சற்று தடுமாறி போய்விட, தொடக்க வீரராக களமிறங்கிய டுபிளெசிஸ் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சென்னை அணி இறுதி போட்டியில் நுழைய முக்கிய காரணமாக இருந்தார்.

 

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியதற்காக . டுபிளெசிஸிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த சில போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டுபிளெசிஸ் விளையாடாமல் இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்கு எதிராக அவர் களமிறக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி போட்டி துவங்குவதற்கு முன் அனைவரிடமும் இருந்தது. எனினும் அனைவரின் கேள்விக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலை டுபிளெசிஸ் அளித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் கூறும்போது,

“சாம் பில்லிங்ஸ் பஞ்சாப் உடனான போட்டியின்போது காயம் அடைந்தார். சாம் பில்லிங்கிஸின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் தொடர்ந்து இப்போட்டியில் பங்கேற்க எண்ணியிருந்தால் அவர் கடினமாக உணர்ந்திருப்பார். இதனால் அந்த வாய்ப்பை நாங்கள் டுபிளெசிஸிஸ்குக்கு வழங்கினோம். நாங்க இந்த முறை வித்தியாசமான காம்பினேஷனை உபயோகித்தோம். டுபிளெசிஸியின் திறமை, மனப்பக்குவம்  மற்றும் இந்த போட்டியில் அவரது பங்களிப்பு ஆகியவை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சில நேரத்தில் இதனை அதிஷ்டம் என்று கூறலாம்.  நீங்கள் சரியான நேரத்தில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவர் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை விளையாடினால் எவ்வாறு இருக்குமோ அதுதான் நேற்றைய போட்டியிலும் நடந்தது" என்றார்.

http://tamil.thehindu.com/sports/article23968572.ece

Link to comment
Share on other sites

சிஎஸ்கே, ஹைதராபாத் உயிரைக் கொடுத்து விளையாடின: பிளே ஆஃப் குறித்து சச்சின் உள்ளிட்டோர் ட்வீட்

 

 
csk

சித்தார்த் கவுல், ரெய்னாவை வீழ்த்தினார். | பிடிஐ.

140 ரன்கள் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 62/6 பிறகு 93/7 என்று உதிர்ந்து கொண்டிருந்த போது டுபிளெசிஸ் ஒரு சாதுரியமான இன்னிங்ஸைக் கட்டமைக்க சிஎஸ்கே இறுதிக்குத் தகுதி பெற்றது.

ஆட்டம் விறுவிறுவென நடைபெற்றது, இரு அணிகளுமே சவாலாக ஆடியது, இது பற்றி சச்சின், அஸ்வின் உள்ளிட்டோர் ட்விட்டரில் பாராட்டியுள்ளனர்

 

சச்சின் டெண்டுல்கர்: வாட் ஏ கேம்! திடீர்த் திருப்பங்களுடன் உண்மையில் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு. சென்னை அணி விட்டுக் கொடுக்கவில்லை, சன் ரைசர்ஸ் அணி உயிரைக்கொடுத்து ஆடியது. வெல் டன்.

ஆல்பி மோர்கெல்: கற்பனைத்திறமான பினிஷ் கொடுத்தார் டுபிளெசிஸ். பார்க்க மிக பிரமாதமான போட்டி.

எஸ்.பத்ரிநாத்: டி20 கிரிக்கெட்டின் சாராம்சமே எப்போது யார் பவுலிங்கை அடிக்க வேண்டும் என்பதே ஃபாப் டுபிளெசிஸ் நேற்று இதனை காண்பித்தார்.

ஜேம்ஸ் டெய்லர்: ஐபிஎல்-ன் இன்னொரு அதிசயிக்க வைத்த போட்டி, டுபிளெசிஸ் கடைசியில் அனுபவத்தைக் காட்டினார்.

மொகமத் கயீஃப்: டுபிளெசிஸிடமிருந்து என்ன ஒரு இன்னிங்ஸ்!! அனைவரும் திணறிய பிட்சில் பிரமாதம். விதிவிலக்கான இன்னிங்ஸ். ரொம்ப நல்ல வெற்றி (romba nalla victory)

அஸ்வின்: ஃபாப் டுபிளெசிஸ் நீ ஒரு சாம்பியன்.

சாம் பில்லிங்ஸ்: ஓ! இன்னொரு நம்ப முடியாத வெற்றி!!

சஞ்சய் மஞ்சுரேக்கர்: சிஎஸ்கேயின் வெற்றிக்கதை வயதைக் காட்டிலும் அனுபவத்தை ஆதரிப்பதாக உள்ளது.

முரளி விஜய்: ஒரு அணி, ஒரு திசை, ஆச்சரியகரமான ஆட்டம்.

சுரேஷ் ரெய்னா: விரல் நகங்களைக் காலி செய்யும் பினிஷ். இறுதிக்குள் நுழைந்து, எங்கு எங்கள் இடமோ அங்கு சென்றுள்ளோம்.

ஹேமங் பதானி: தோனி தலைமையில் 9 ஐபிஎல்-ல் 7வது இறுதி. எந்த ஒரு வீரரும் தன் அணியை இவ்வளவு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றதில்லை. (பார்சிலோனா கேப்டன் இனியெஸ்டாவின் சாதனை தெரியாமல் கூறுகிறார்) ஒவ்வொரு ஆண்டும் நெய்யப்பட்ட சிறப்பான மேஜிக் இது. இது சாதாரணமல்ல. ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணி சிஎஸ்கேதான்.

மேத்யூ ஹெய்டன்: நாங்கள் விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம். விசில் போடு.

ஆலன் டோனல்ட்: டுபிளெசிஸ் தனது உயர்தரம் மற்றும் அனுபவத்தை காட்டினார். நெருக்கடியில் அவர் காட்டிய நிதானம் பெரியது. இறுதிப்போட்டிக்குள் நுழைவது எப்படி என்று அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23968959.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் - ராஜஸ்தானை வீழ்த்தி 2வது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா

 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. #IPL2018 #KKRvRR

 
ஐபிஎல் கிரிக்கெட் - ராஜஸ்தானை வீழ்த்தி 2வது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா
 
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே சுனில் நரைன் அவுட்டானார். அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார்.
 
அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். ஷுப்மான் கில் சிறப்பாக ஆடி 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
 
201805232244185107_1_rr-2._L_styvpf.jpg
 
இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரி ஆர்ச்சர், பென் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்ய ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் இறங்கினர்.
 
அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது திரிபாதி 20 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ராகானேவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 
 
ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அரை சதமடித்த நிலையில் சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. பின்னி டக் அவுட்டானார்.
 
கிளாசனுடன் கிருஷ்ணப்பா கவுதம் இணைந்தார். 2 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது.
 
கொல்கத்தா அணி சார்பில்  பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையருக்கு தகுதி பெற்றது. #IPL2018 #KKRvRR

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/23224418/1165201/kolkatta-knight-riders-beat-rajasthan-royals-by-25.vpf

Link to comment
Share on other sites

7-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் பங்குபெறும் சிஎஸ்கே: சாதனை விவரங்கள்

 

 
dhoni_wk22

 

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களைக் குவித்தார்.

4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸும் 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

7-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை விவரங்கள்:

* சென்னை சூப்பர் கிங்ஸ், டி20 கிரிக்கெட்டில் 9-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கிறது. 

இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்

2008: ஐபிஎல்
2010: ஐபிஎல்
2010: சாம்பியன்ஸ் லீக்
2011: ஐபிஎல்
2012: ஐபிஎல்
2013: ஐபிஎல்
2014: சாம்பியன்ஸ் லீக்
2015: ஐபிஎல்
2018: ஐபிஎல்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிகமுறை பங்கேற்ற அணிகள்

சென்னை - 6 (2 வெற்றி)
மும்பை - 4 (3 வெற்றி)
பெங்களூர் - 3 ( 0 வெற்றி)
கொல்கத்தா - 2 (2 வெற்றி)
தில்லி - 1 (1 வெற்றி)
பஞ்சாப் - 1 (0 வெற்றி)
ராஜஸ்தான் - 1 (1 வெற்றி)
புணே - 1 (0 வெற்றி)
ஹைதராபாத் - 1 (1 வெற்றி)
தில்லி - 0

* 9 முறை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணி, 7-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கிறது. 11 முறை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 8-வது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ளார். 2017-ல் மட்டும் புணே அணிக்காக இறுதிச்சுற்றில் பங்கேற்றார். மற்ற அனைத்து வருடங்களிலும் சென்னை அணிக்காக இறுதிச்சுற்றில் பங்கேற்றார். 

* தோனி, ரெய்னா ஆகிய இருவருமே 20-வது முறையாக ஐபிஎல் பிளேஆஃப்/அரையிறுதியில் பங்கேற்றுள்ளார்கள். சென்னை அணிக்காக இருவரும் எல்லா வருடங்களிலும் பிளேஆஃப்-பில் விளையாடியுள்ளார்கள். ஆனால் 2016-ல் புணே அணிக்காக தோனி விளையாடியபோதும் 2017-ல் குஜராத் அணிக்காக ரெய்னா விளையாடியபோதும் பிளேஆஃப்-பில் விளையாடமுடியாமல் போனது. 

* இந்த வருட புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 2-ம் இடத்தைப் பிடித்தது. இதுபோல இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள், ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றுள்ளன (2011, 2012, 2013, 2014, 2015). ஆனால், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற அணிகள் இருமுறை மட்டுமே (2008, 2017) சாம்பியன் ஆகியுள்ளன. இந்த அதிர்ஷ்டம், சென்னை அணிக்கு இந்த வருடம் உதவுமா?  

ஐபிஎல் இறுதிச்சுற்றில் சென்னை

2008 - தோல்வி
2010 - வெற்றி
2011 - வெற்றி
2012 - தோல்வி
2013 - தோல்வி
2015 - தோல்வி
2018 - ?

http://www.dinamani.com/sports/special/2018/may/23/faf-du-plessis-stuns-srh-takes-csk-to-7th-ipl-final-2925392.html

 

 

 

ஒவ்வொரு முறையும் புதிய ஆட்ட நாயகனை உருவாக்கும் சிஎஸ்கே!

 

 
du_Plessis55

 

ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் டுபிளெஸிஸ் அதிரடியாக ஆடி 67 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி மிகவும் திணறி 7 விக்கெட்டை இழந்து 139 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கார்லோஸ் சிறப்பாக ஆடி 43 ரன்களை
குவித்தார்.

4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 67 ரன்களுடன் டுபிளெஸிஸும் 15 ரன்களுடன் தாகுரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 140 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டுபிளெஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 14 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை 80 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 20, 17 ரன்களை சென்னை எடுத்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இதுவரை இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இதுவரை பங்களிப்பு செய்யாத டுபிளெஸிஸ் நேற்று கடைசிவரை விளையாடி சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உதவினார். இந்த வருடம் ஆட்ட நாயகன் விருது பெரும் 8-வது சிஎஸ்கே வீரர் இவர். வேறு எந்த அணியிலும் இந்தளவுக்கு பலர் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்ததில்லை.

ஐபிஎல் 2018 - ஆட்ட நாயகன் விருது பெற்ற சிஎஸ்கே வீரர்கள்

ராயுடு
வாட்சன்
பில்லிங்ஸ்
பிராவோ
தோனி
ஜடேஜா
இங்கிடி
டு பிளெஸ்ஸிஸ் 

ஐபிஎல் 2018 - ஒவ்வொரு அணியில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்களின் எண்ணிக்கை

8 - சென்னை
5 - தில்லி
5 - மும்பை
4 - பஞ்சாப்
4 - கொல்கத்தா
4 - ராஜஸ்தான்
4 - ஹைதராபாத்
3 - பெங்களூர்

http://www.dinamani.com/sports/special/2018/may/23/faf-du-plessis-saves-chennai-super-kings-to-book-place-in-ipl-final-2925387.html

Link to comment
Share on other sites

கவுதமுக்கு முன்னால் பின்னி! 4விக். மட்டுமே இழந்து ராஜஸ்தான் தோற்ற அதிசயம்; கொல்கத்தா வெற்றி

 

 
rajastan%20royals

வெற்றிக்களிப்பில் ராஜஸ்தான். | படம். ஏ.பி.

ஐபிஎல் 2018-ன் 2வது பிளே ஆஃப் ‘ராஜஸ்தான் வெளியேறுதல்’ சுற்றில் ராஜஸ்தான் வெளியேறியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்னொரு பிளே ஆஃப் சுற்றில் சன் ரைசர்ஸுடன் மோதுகிறது.

டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான், கொல்கத்தாவை 169/7 என்று மட்டுப்படுத்தியது. கவுதம் (2/15), சோதி (15/0), ஷ்ரேயாஸ் கோபால் (34/1) அபாரமாக வீசி கட்டுப்படுத்தினர். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்து உஷ் கண்டுக்காதீங்க தோல்வியை அடைந்தது.

   
 

ரஹானே ஆடியது சூழ்நிலைக்குத் தக்க இன்னிங்ஸா?

ரஹானே 41 பந்துகளில் 46 ரன்கள் என்று பார்க்கும் போது ஓரளவுக்கு நல்ல இன்னிங்ஸ் போல்தான் தெரியும். ஆனால் நடு ஓவர்களில் அவர் பவுண்டரி அடிக்க முடியவில்லை. 4 ஓவர்களில் 1 பவுண்டரிதான் அடித்தார். 20 ரன்களைத்தான் அவர் எடுத்தார். 15 ஒவர்கள் வரை நின்ற அவரது ஸ்ட்ரைக் ரேட் 112 என்பது போதுமானதல்ல. 15வது ஓவரில் ரஹானே ஆட்டமிழக்கும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் 109/1. 10 ஓவர்களில் 87/1 என்ற நிலையில் வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 8.30. 14 ஓவர் முடிந்து 15வது ஓவர் தொடங்கி ரஹானே, குல்தீப் யாதவ்விடம் அவுட் ஆகும் போது 109/1.

rahanejpg

ரஹானே. | ஏ.பி.

 

வெற்றிக்குத் தேவைப்படும் விகிதம் ஓவருக்கு 10.16. இதுதான் ரஹானே தன் அணிக்குச் செய்தது!! உதாரணத்துக்கு 10 பந்துகளில் 8 டாட்பால்களை ஒரு பேட்ஸ்மென் விடுகிறார் என்றால் ரன் வந்த அந்த 2 பந்துகளும் சிக்சர்களாக இருந்தால் அது ஸ்மார்ட் பேட்டிங் என்று கூறலாம் 10-ல் 8 டாட், ஆனால் ரன் வந்த அந்த 2 பந்துகளிலும் சிங்கிள் என்றால் அது வெட்டி பேட்டிங்தான், இந்த உதாரணம் போல்தான் இருந்தது ரஹானே பேட்டிங்.

கவுதமை இறக்காமல் ஸ்டூவர்ட் பின்னியை இறக்கியது:

சஞ்சு சாம்சன்(50) அவுட் ஆகி 17 ஓவர்கள் முடிவில் 127/3. 18 பந்துகளில் 43 ரன்கள் தேவை. அப்போது இந்தத் தொடரில் சில பினிஷிங்குகளைச் செய்த கவுதமை இறக்காமல் ஸ்டூவர்ட் பின்னியை இறக்கியது பேரதிர்ச்சி. பின்னி 3 பந்துகள் ஆடி ஸ்கோரர்களைத் தொந்தரவு செய்யாமல் வெளியேறினார். கவுதம் இறங்கும்போது 12 பந்துகளில் 40 ரன்கள் தேவை. சூப்பர் மேன் டிவில்லியர்ஸ், கெய்ல், ரஸல், பிராவோ போன்றோருக்கே இது சிரமமானது. பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 170 ரன்கள் பக்கம் வரை விரட்டும் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழக்கிறது என்றால் 94% போட்டிகளை வென்றுள்ளதாகக் கூறுகிறது கிரிக் இன்போ புள்ளிவிவரங்கள். ஆனால் அதிலும் தோற்று ஒரு விநோத சாதனையை நிகழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸாகவே இருக்க முடியும்.

தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரசல் அபாரம்

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ். நரைன், உத்தப்பாவை கவுதமிடம் இழந்து ராணாவை ஆர்ச்சரிடம் சொற்ப ரன்களுக்கு இழந்து 24/3 என்று ஆனது. கிறிஸ் லின் மரபான பேட்டிங் முறைக்குச் சென்றதால் 22 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவரிடமே கேட்ச் ஆக 51/4 என்று ஆனது. 8 ஓவர்களில் 51/4 என்றாலும் தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில், ஆந்த்ரே ரஸல் உற்சாகமாக ஆடினர், மூவரும் 80 பந்துகளைச் சந்தித்து 129 ரன்களைச் சேர்த்தனர். உத்வேகத்தைக் குறைக்காமல் ஆடினர். தினேஷ் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 ரன்களையும் ஷுப்மன் கில் 17 பந்துகளில் 3 நான்குகள் 1 ஆறுடன் 28 எடுத்தார். ரஸல் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 49 ரன்கள். லாஃப்லின் (3ஓவர் 35/2), உனாட்கட் (2 ஓவர் 33) நன்றாக வாங்கினர். ஷ்ரேயஸ் கோபால் 3 ஓவர்கள் வரை பந்துகளைத் திருப்பி சிரமப்பட வைத்து 14 ரன்களையே கொடுத்தார், ஆனால் அவர் தன் கடைசி ஓவரில் தவறுகளிழைக்க கார்த்திக், ஷுப்மன் கில் பாய்ந்து 20 ரன்களைக் குவித்தனர்.

russeljpg

ரஸல். | ஏ.பி.

 

ராஜஸ்தான் இலக்கைத் துரத்தியபோது மீண்டும் திரிபாதி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 13 பந்தில் 20 ரன்கள் எடுக்க 5.1 ஓவரில் 47 என்ற நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் சாவ்லா அவரை தன் பந்தில் கேட்ச் ஆக்கி வெளியேற்றினார்.

சாம்சன் வெளுத்துக் கட்ட, ரஹானே சொதப்ப அடுத்த 9 ஒவர்களில் 62 ரன்கள்தான் வந்தது 7 ரன்களுக்கும் சற்று குறைவு. அப்போதுதான் ரஹானே குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். கவுதமை இறக்காமல் பின்னியை இறக்கியக் கதையைத்தான் ஆரம்பத்தில் விவரித்துள்ளோம், ஹென்ரிச் கிளாசனால் ரிஸ்ட் ஸ்பின்னை அடிக்க முடியவில்லை அவர் 18 பந்துகளில் 18 ரன்களையே எடுக்க முடிந்தது. கவுதம் 12 பந்துகளில் 40 ரன்கள் தேவை எனும்போது இறக்கப்பட்டதால் அவர் 7 நாட் அவுட். 4 விக்கெட்டுகளை இழந்து 144/4 என்று தோற்றது ராஜஸ்தான். ஆட்ட நாயகன் ரஸல். ஏனெனில் பவுலிங்கிலும் 3 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

ஐபிஎல் என்பது ஒரு மெகா பிராண்ட், அணிகள் குட்டிக் குட்டி பிராண்ட்கள், இந்த வணிகத் தர்க்கத்தில் என்ன கணக்கீடுகளின் படி அணிகள் வெற்றி பெறுகிறது என்பது புரியாத புதிர். இந்தப் புதிரின் அடிப்படையில்தான் இந்தக் கொல்கத்தா வெற்றியையும் பார்க்க வேண்டியுள்ளது. சன் ரைசர்சுடன் நாக் அவுட்டில் விளையாடுகிறது கொல்கத்தா.

http://tamil.thehindu.com/sports/article23974704.ece?homepage=true

Link to comment
Share on other sites

இப்படியா ஆடுவது? ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியில் ஷேன் வார்ன் கடும் ஏமாற்றம்

 
warnejpg

ஷேன் வார்ன். | படம். விவேக் பெந்த்ரே.

ஐபிஎல் 2018 பிளே ஆஃப் நாக் அவுட் சுற்றில் கொல்கத்தா எடுத்த 169 ரன்களை விரட்டி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 144 ரன் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இடைப்பட்ட ஓவர்களில் கடும் சொதப்பல் பேட்டிங், காரணம் அஜிங்கிய ரஹானே. பிறகு பின்னியை கவுதமுக்கு முன்னால் இறக்கியது என்று ஏகப்பட்ட தவறுகளை ராஜஸ்தான் செய்தது.

 
 

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை அறிவுரையாளர் ஷேன் வார்ன் தன் ட்விட்டரில் கூறியதாவது:

என்னவொரு ஏமாற்றமான முடிவு இது. ஏகப்பட்ட பந்துகள் விரயம் செய்யப்பட்டன. இடைப்பட்ட ஓவர்களில் அடித்து ஆடி ஆட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றிருக்க வேண்டும்.

இந்த ஆட்டம் நாம் வெற்றி பெற வேண்டிய ஆட்டம், இலக்கைக் கடந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆனாலும் ஒட்டுமொத்த அணி குறித்தும் பெருமையடைகிறேம் அவர்கள் சிறப்பான முயற்சிக்கு பாராட்டுக்கள். இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும், தோல்வி காயப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

http://tamil.thehindu.com/sports/article23975187.ece

Link to comment
Share on other sites

ஆர்சிபி ரசிகர்களே...மன்னித்துக் கொள்ளுங்கள்: விராட் கோலி உருக்கம்

viratjpg
virat-kohli-rcb

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம்

ஐபிஎல் 11-வது சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் ஆர்சிபி அணி விளையாட முடியாததற்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலே போட்டியில் இருந்து வெளியேறியது. 14 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தது.

   
 

வலுவற்ற பந்துவீச்சு, நிலைத்தன்மை இல்லாத பேட்டிங் ஆகியவை இந்த முறை ஆர்சிபி அணியின் மோசமான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. அணியின் தோல்விக்குப் பின் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் கேப்டன் விராட் கோலி இருந்து வந்தார்.

இந்நிலையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி விராட் கோலி, ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

எங்களால் நினைத்த அளவுக்கு 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது, காயப்படுத்தி இருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

viratjpg

விராட் கோலி

 

இதுவும் வாழ்க்கையின் ஒருபகுதிதான். வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைத்து விடாது. அடுத்த சீசனில் நாம் எப்படி விளையாட வேண்டும், தயாராக வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த சீசனில் அனைத்தும் மாற வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, ஐபிஎல் சீசனில் இன்னும் கூடுதல் முயற்சிகளோடு, அதிகமான பலத்தோடு நாங்கள் களமிறங்கி விளையாடுவோம்.

இவ்வாறு கோலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களைச் சேர்த்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 14 போட்டிகளில் 548 ரன்கள் சேர்த்து 6-வது இடத்தில் உள்ளார். இவரின் சராசரி 54.80. ஏபி டிவில்லியர்ஸ் 480 ரன்கள் சேர்த்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23975980.ece

Link to comment
Share on other sites

சேஸிங்கில் கடைசி 3 ஓவரில் விஸ்வரூபம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

 

சேஸிங் செய்யும்போது கடைசி 3 ஓவரில் விஸ்வரூபம் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றியை ருசித்துள்ளது. #IPL2018 #CSK

 
 
 
 
சேஸிங்கில் கடைசி 3 ஓவரில் விஸ்வரூபம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
 
ஐபிஎல் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பதினான்கு லீக் ஆட்டத்தில் 9-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற குவாலிபையர் 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது, பின்னர் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அபார பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

டு பிளிசிஸ் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி 3 ஓவரில், அதாவது 18 பந்தில்  43 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே இருந்தது. ஆனால் 13 பந்திலேயே, அதாவது 19.1 ஓவரிலேயே 140 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெறுவது சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இந்த சீசனில இது முதல் தடவை அல்ல. ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போது முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. 17 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 3 ஓவரில் (18 பந்தில்) 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. 18-வது ஓவரில் 20 ரன்னும், 19-வது ஓவரில் 20 ரன்னும் எடுத்தது. கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 169 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.

5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் அடித்தது. பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. கடைசி மூன்று ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

201805241657384240_1_chennaisuperkings002-s._L_styvpf.jpg

24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்து 8 ஓவரில் 205 ரன்கள் குவித்தது. பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. கடைசி 3 ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 2.4 ஓவரிலேயே 44 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெரும்பாலான அணிகள் கடைசி 3 ஓவரில் 35 ரன்களை கூட எடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் விஸ்வரூபம் எடுத்து எளிதாக சேஸிங் செய்து அசத்தியுள்ளது.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/24165738/1165386/chennai-super-kings-easy-chasing-morethan-40-runs.vpf

Link to comment
Share on other sites

சிஎஸ்கே அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்?; ஹைதராபாத் - கொல்கத்தா இன்று மோதல்

 

 
25CHPMUCAPTAINS

வில்லியம்சன், தினேஷ் கார்த்திக்.   -  THE HINDU

25CHPMUWILLIAMSON

பயிற்சியின் போது வில்லியம்சனுடன் உரையாடிய ஷிகர் தவண்.   -  PTI

Match%20summ25052018col

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோத உள்ள அணி எது என்பதை தீர்மானிக்கும் தகுதி சுற்று 2-வது ஆட்டத்தில் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி லீக் சுற்றில் கடைசி 3 ஆட்டங்களிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும் நேற்றுமுன்தினம் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி சுற்று 2-வது ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அதேவேளையில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் தகுதி சுற்று 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கடைசி கட்டத்தில் வெற்றியை நழுவவிட்டது.

அந்த ஆட்டத்தில் 140 ரன்கள் இலக்கை விரட்டிய சென்னை அணி 17 ஓவர்களில் 97 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் வில்லியம்சன் சரியான களவியூகம் அமைக்கத் தவறினார். 18-வது ஓவரில் அவர், பந்து வீச பயன்படுத்திய கார்லோஸ் பிராத்வெயிட் 20 ரன்களை வழங்கினார். இதுவே ஹைதராபாத் அணியிடம் இருந்து வெற்றி நழுவிச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் 5-வது பந்து வீச்சாளரை தேர்வு செய்வதில் ஹைதராபாத் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

19 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள சித்தார்த் கவுல், 18 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ரஷித் கான் ஆகியோருடன் இணைந்து புவனேஷ்வர் குமார் (9 விக்கெட்கள்) சற்று மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும். பிரதான பந்து வீச்சுக்குழு வலுவாக இருப்பினும் பேட்டிங் துறையில் ஹைதராபாத் அணிக்கு பெரிய பிரச்சினை உருவெடுத்துள்ளது நடுகளம்தான். இந்த சீசனில் 57.05 சராசரியுடன் 685 ரன்கள் குவித்துள்ள வில்லியம்சனை மட்டுமே பேட்டிங்கில் பிரதானமாக நம்பியிருப்பது பலவீனமாக உள்ளது. தகுதி சுற்று 1-ல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன ஷிகர் தவண் மற்றும் நடுகள வீரர்களான மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு இந்த பிரச்சினை இல்லை. டாப் ஆர்டரில் யாராவது ரன் குவிக்கத் தவறினால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடுவது பலமாக உள்ளது. எலிமினேட்டர் சுற்றில் சுனில் நரேன் விரைவிலேயே ஆட்டமிழந்த நிலையில் பிற்பகுதியில் ஆந்த்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 49 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். 15 ஆட்டங்களில் 490 ரன்கள் குவித்துள்ள தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து மேலும் சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.

 

 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோத உள்ள அணி எது என்பதை தீர்மானிக்கும் தகுதி சுற்று 2-வது ஆட்டத்தில் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி லீக் சுற்றில் கடைசி 3 ஆட்டங்களிலும் சிறந்த திறனை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும் நேற்றுமுன்தினம் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி சுற்று 2-வது ஆட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அதேவேளையில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் தகுதி சுற்று 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கடைசி கட்டத்தில் வெற்றியை நழுவவிட்டது.

அந்த ஆட்டத்தில் 140 ரன்கள் இலக்கை விரட்டிய சென்னை அணி 17 ஓவர்களில் 97 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் வில்லியம்சன் சரியான களவியூகம் அமைக்கத் தவறினார். 18-வது ஓவரில் அவர், பந்து வீச பயன்படுத்திய கார்லோஸ் பிராத்வெயிட் 20 ரன்களை வழங்கினார். இதுவே ஹைதராபாத் அணியிடம் இருந்து வெற்றி நழுவிச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் 5-வது பந்து வீச்சாளரை தேர்வு செய்வதில் ஹைதராபாத் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

19 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள சித்தார்த் கவுல், 18 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ரஷித் கான் ஆகியோருடன் இணைந்து புவனேஷ்வர் குமார் (9 விக்கெட்கள்) சற்று மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும். பிரதான பந்து வீச்சுக்குழு வலுவாக இருப்பினும் பேட்டிங் துறையில் ஹைதராபாத் அணிக்கு பெரிய பிரச்சினை உருவெடுத்துள்ளது நடுகளம்தான். இந்த சீசனில் 57.05 சராசரியுடன் 685 ரன்கள் குவித்துள்ள வில்லியம்சனை மட்டுமே பேட்டிங்கில் பிரதானமாக நம்பியிருப்பது பலவீனமாக உள்ளது. தகுதி சுற்று 1-ல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன ஷிகர் தவண் மற்றும் நடுகள வீரர்களான மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

அதேவேளையில் கொல்கத்தா அணிக்கு இந்த பிரச்சினை இல்லை. டாப் ஆர்டரில் யாராவது ரன் குவிக்கத் தவறினால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடுவது பலமாக உள்ளது. எலிமினேட்டர் சுற்றில் சுனில் நரேன் விரைவிலேயே ஆட்டமிழந்த நிலையில் பிற்பகுதியில் ஆந்த்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 49 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். 15 ஆட்டங்களில் 490 ரன்கள் குவித்துள்ள தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து மேலும் சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.

http://tamil.thehindu.com/sports/article23984796.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் இறுதிப்போட்டி ‘பிக்ஸ்’ செய்யப்பட்டதா?- ரசிகர்களின் கோபத்தால், பரபரப்புக்குக் காரணமான வீடியோ நீக்கம்

 

 

 
ipl%20final%202

தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, வில்லியம்ஸன் : கோப்புப்படம்

11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கும் நிலையில், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எந்த அணி மோதப்போகிறது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதப்போகிறது என்ற விளம்பர வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால், ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் மீண்டும் நுழைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தில் பேஸ்புக், ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

 
 

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 2-வது அணியை தேர்வு செய்யும் 2-வது ப்ளேஆஃப் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதப்போகிறதா அல்லது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதப்போகிறதா என்பது யாருக்கும் தெரியாது.

இன்று நடக்கும் போட்டியின் முடிவு அடிப்படையில் அதாவது, எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பிவரும் ஹாட் ஸ்டார் தளத்தில் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதப்போகிறது என்ற முன்னோட்ட விளம்பரம் வெளியானது.

தோனி தலைமையிலான வீரர்களுக்கும், தினேஷ் காரத்திக் தலைமையிலான வீரர்களுக்கும் இடையே போட்டி நடக்கப்போகிறது என்பதை குறிக்கும் வகையில் வீரர்களை வைத்து விளம்பரம் இருந்தது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் அணி குறித்து முடிவு தெரியாத தெரியாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் மோதும் என்று முன்கூட்டியே விளம்பரம் எப்படிச் செய்ய முடியும். அப்படியென்றால் போட்டியின் முடிவு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா?, பிக்ஸிங் செய்யப்பட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ ரசிகர்கள் சிலர் பதிவிறக்கம் செய்து, பேஸ்புக், ட்விட்டரில் பதிவேற்றம் செய்து, தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ஐபிஎல் என்றாலே பிக்ஸிங் செய்யப்பட்டதுதானா?, கேகேஆர், சிஎஸ்கே அணிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால், இந்த அணிகள்தான் பைனலுக்கு வரும் என்றும், கேகேஆர் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டுவர பிசிசிஐ உதவி செய்யும், தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளும் உத்தி எனக் கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இதற்கிடையே, இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுவது போன்று வெளியான விளம்பரம் குறித்து ரசிகர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அந்த விளம்பரம் ஹாட்ஸ்டார் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

மேலும், இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதுவது போன்ற விளம்பரமும் இருந்தது. அதுவும் நீக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23989281.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.