Jump to content

Recommended Posts

சிக்ஸர் - பௌண்டரி மழை; மேட்ச் வின்னரான வாட்சன் - 5 சுவாரஸ்ய தகவல்கள்

ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனுக்கு 36 வயதாகிறது. சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்டாலும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஷேன் வாட்சன்படத்தின் காப்புரிமைCSK/TWITTER

நேற்று நடந்த போட்டியில் 51 பந்தில் சதமடித்துள்ளார் வாட்சன். இந்த சீசனில் மட்டும் இரண்டு சதங்களை விளாசியுள்ளார் வாட்சன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 57 பந்தில் 106 ரன்கள் குவித்தார். இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்துள்ளார் ஷேன் வாட்சன்.

நேற்று நடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் ஐதராபாத் அணியைச் சேர்ந்த புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்டார். வாட்சன் ஒருகூட ரன் எடுக்கவில்லை. ஓவர் மெய்டனானது.

11-வது பந்தில் தான் முதல் ரன்னை எடுத்தார் வாட்சன். ஆனால் 51-வது பதில் அவரின் ஸ்கோர் 100. நேற்றைய போட்டியின் நாயகனான ஷேன் வாட்சன் 11 பௌண்டரிகளையும் எட்டு சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

1. ஐபிஎல்லில் இதுவரை நான்கு சதங்கள் விளாசியுள்ளார். நான்கு சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் கண்டுள்ளார்.

ஷேன் வாட்சன்படத்தின் காப்புரிமைHARBAJANSINGH/TWITTER

2. ஐபிஎல்லில் இரண்டு முறை தொடர்நாயகன் விருது பெற்றுள்ளார். 2008 மற்றும் 2013 ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் நாயகன் வென்றார் ஷேன் வாட்சன்.

3. ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று ஃபார்மெட்டிலும் சதமடித்த முதல் நபர் வாட்சன். ஆஸ்திரேலியாவுக்காக 59 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 190 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்

4. வாட்சன் ஒரு ஆல்ரவுண்டர். வலது கை பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் வலது கை மிதவேகப்பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 291 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

5. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதமடித்த ஒரே கிரிக்கெட் வீரர் ஆனார் ஷேன் வாட்சன்.

'' புவனேஷ்வர் குமார் அருமையாக பந்து வீசினார். முதல் பத்து ரன்கள் ரன்கள் எடுக்காததால் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விதத்திலாவது எடுக்கவேண்டும் என நினைத்தேன் ஆனால் இரண்டு பௌண்டரிகள் அடித்தபிறகு என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது'' என ஐபிஎல் இறுதியாட்டத்தில் ஆட்டநாயகன் விருது வாங்கிய பிறகு கூறினார் வாட்சன்.

https://www.bbc.com/tamil/sport-44274708

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

கம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐபிஎல் சீசனை அழகாக்கிய CSK! #IPL2018

 
 

தோ... ஒரே இன்னிங்ஸில் இரண்டாண்டுக் கால இடைவெளிக்கும் சேர்த்து விருந்துவைத்துவிட்டார், ஷேன் வாட்சன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ரசிகன் மிஸ் பண்ணிய அத்தனை தருணங்களையும் மீண்டும் உருவாக்கிக் கொடுத்துவிட்டது, சென்னை சூப்பர் கிங்க்ஸ். சாரி பாஸ்... சிஎஸ்கே. இந்த சீசனில் சிஎஸ்கே-யின் சின்ன ரீவைண்ட் இது.

ஷேன் வாட்சன்

 

சூதாட்டப் புகாரால் விதிக்கப்பட்ட இரண்டாண்டுத் தடை, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த     ஐபிஎல்-க்கே தண்டனையாகத்தான் அமைந்தது. இந்த அணிகளுக்கு மாற்றாக, பிசிசிஐ-யால் உருவாக்கப்பட்ட குஜராத், புனே அணிகளும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த சிஎஸ்கே-வும் சீசனிலேயே இல்லை. இந்த நிலைமை இந்த ஆண்டு மாறப்போகிறது எனத் தெரிந்ததுமே கொண்டாட்டத்திற்குத் தயாராகினர் சென்னை ரசிகர்கள். சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் ஜெர்சியோடு களமிறங்கி, சிக்சர் அடித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தார் தோனி. அப்போது பறக்கத்தொடங்கிய மஞ்சள்கொடி, இதோ...இன்று மகுடத்தில் வந்து நிற்கிறது. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்திருக்கிறது சிஎஸ்கே.

இரண்டு ஆண்டுகள் முடிந்து மீண்டும் வீரர்கள் ஏலம்... யாரெல்லாம் சென்னை அணியிலேயே தொடர்வார்கள்? மீண்டும் பழைய சென்னை அணியே அமையுமா... சிஎஸ்கே பழைய ஃபார்முக்குத் திரும்புமா... தோனிதான் கேப்டனா? இப்படி, இன்னும் எக்கச்சக்க கேள்விகள் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்தன. தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரை மட்டும் ரீட்டெய்ன் செய்துவிட்டு, ஏலத்தை சந்தித்தது சென்னை. ராயுடு, வாட்சன், டு ப்ளேசிஸ், ஹர்பஜன், தாஹிர் என சீனியர் வீரர்களாக சென்னை அணிக்குள் வரவே, 'அங்கிள்ஸ் அணி' எனக் கலாய்த்தனர் ரசிகர்கள். அனுபவம் மிக்க வீரர்கள் அணி என்றது சென்னை. ஏலம் முடிந்ததுமே, வீரர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு மார்க் போடத்தொடங்கினர் விமர்சகர்கள். எந்தப் பட்டியலிலும் சென்னைக்கு முதலிடம் பிடித்ததாக நினைவில்லை. சரி, களம்தானே அதை முடிவுசெய்ய வேண்டும்? முதல் போட்டியில் மும்பையோடு தொடங்கியது இந்த ஆண்டு யுத்தம்.

ஹர்பஜன் மற்றும் ரெய்னா CSK

மும்பைக்கு சாதகமாகத் திரும்பிய அந்தப் போட்டியை அப்படியே சிக்ஸர்களால் சென்னைப் பக்கம் திருப்பினார் பிராவோ. முதல் போட்டி; சீசனின் முதல் வெற்றி. நீண்டநாள் கழித்து சென்னைக்கு கேப்டனாக தோனிக்கும், அந்த எனர்ஜியை சீசன் முழுவதும் குறையாமலே பார்த்துக்கொண்டது சென்னை. மற்ற அணிகளில் எல்லாம் கெயில், கே.எல்.ராகுல், பண்ட் , நரைன், டிவில்லியர்ஸ் என வீரர்கள் தனித்தனியாக ஜொலிக்க, சென்னையோ... எல்லா வீரர்களையும் விஸ்வரூபம் எடுக்கவைத்தது. மும்பையுடன் பிராவோ, கொல்கத்தாவுடன் பில்லிங்க்ஸ், பஞ்சாப் மற்றும் ஆர்.சி.பி-யுடன் தோனி, ராஜஸ்தானுடன் வாட்சன், ஹைதராபாத்துடன் ராயுடு, ப்ளேஆப்பில் டு ப்ளேசிஸ், பஞ்சாப்புடன் கடைசி போட்டியில் இங்கிடி, முக்கியமான கட்டத்தில் சஹார் மற்றும் தாக்கூர் என அணியின் எல்லா வீரர்களுமே ஜொலித்தனர். 140, 180 என எந்த ஸ்கோராக இருந்தாலும் கடைசி ஓவர் வரை சென்று சேஸ்செய்து, பிபி ஏறவைத்து அழகுபார்த்தது, யெல்லோ ஆர்மி. சீசனில் விளையாடிய எல்லா அணிகளையும் அசத்தல் பந்துவீச்சின்மூலம் ஆட்டம் காணவைத்த ஹைதராபாத் அணி, ஏனோ சென்னையை ஃபைனல் வரையிலுமே வெல்ல முடியவில்லை. லீக் முதல் ஃபைனல் வரைக்குமான நான்கு போட்டியிலுமே தோனி Vs வில்லியம்சன் போரில், தோனிக்கேதான் மீண்டும் மீண்டும் வெற்றி. 

CSK 2018 champions

நகம்கடிக்க வைத்த திரில்லர் மேட்ச், வெறித்தனமான இரண்டு தோனியின் ஃபினிஷிங் இன்னிங்க்ஸ்கள், பேட்ஸ்மேன்களின் வாணவேடிக்கை, ஹர்பஜன் மற்றும் தாஹிரின் தீந்தமிழ் ட்வீட்கள். இறுதியாக, சிஎஸ்கே-வுடன் மோதுவதுதான் ஐபிஎல் ஃபைனல் என்ற எழுதப்படாத இலக்கணம் என இந்த சீசன் முழுக்கவே முழு என்டர்டெய்ன் தந்தது சிஎஸ்கே. 

 

சிஎஸ்கே-வைக் கொண்டாட தோனிதான் முதல் காரணம். ஆனால், தோனி மட்டுமே முழுக் காரணம் கிடையாது. இவை எல்லாமும்தான்! சரிதானே?

https://www.vikatan.com/news/sports/126089-chennai-super-kings-journey-in-ipl-2018.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: வீரர்கள் பெற்ற பிற விருதுகள்

 

 
rishab

சிறந்த வளரும் வீரர், சிறந்த ஸ்டைலிஷ் வீரர் விருது வென்ற ரிஷப் பந்த்.   -  பிடிஐ

ஐபிஎல் 2018 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகாவெற்றியுடன் அபாரமாக முடிந்தது. தொடக்கப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருந்ததையடுத்து வெற்றியுடன் தொடங்கி வெற்றிக்கோப்பையுடன் முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதற்கு முக்கியக் காரணம் கேப்டன் தோனி, அவரது உறுதியும் அமைதியும் பெரிய அளவுக்கு வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்தது, அதன் உச்ச கட்டமாக வாட்சன் நேற்று வெளுத்துக் கட்டி சதம் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது வாட்சனுக்கு வழங்கப்பட்டது.

 
 

இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் வேறு சில வீரர்களும் விருதுகளை வென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த மைதானம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

7 போட்டிகளுக்கும் குறைவாக ஆடப்பட்டதில் சிறந்த ஐபிஎல் மைதானம்: மொஹாலி

சிறந்த வளரும் வீரர்: ரிஷப் பந்த், ரூ10.லட்சத்துக்கான காசோலையைப் பெற்றார்.

ஃபேர் பிளே விருது: மும்பை இந்தியன்ஸ்

சிறந்த கேட்ச்: விராட் கோலிக்கு ட்ரெண்ட் போல்ட் எடுத்த அந்த திகைக்க வைத்த கேட்ச்.

சிறந்த ஸ்ட்ரைக் ரேட்: சுனில் நரைன்

சீசனின் மிகச்சிறந்த ஸ்டைலிஷ் வீரர்: ரிஷப் பந்த்

புதியன புகுத்தும் யோசனைக்கான விருது: தோனி

அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் கேப்: ஆண்ட்ரூ டை.

அதிக ரன்களுக்கான ஆரஞ்சு கேப்: கேன் வில்லியம்சன்.

சீசனின் மதிப்பு மிக்க வீரர்: சுனில் நரைன். (உண்மையில் இந்த விருதை ரஷீத் கானுக்குக் கொடுத்திருக்க வேண்டும்)

http://tamil.thehindu.com/sports/article24010498.ece

Link to comment
Share on other sites

சிஎஸ்கேயின் வெற்றியை உறுதி செய்த அந்த 3 ஓவர்கள்: வில்லியம்சன் தவறு?

 

 
sun%20risers

புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.   -  படம். | கேவிஎஸ். கிரி

ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் அதிரடி சதத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்களானாலும் இடையில் 3 ஓவர்களை கேன் வில்லியம்சன் கொஞ்சம் சரியாகத் திட்டமிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

வில்லியம்சனுக்கு பெரிய பின்னடைவு நேற்று சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகியோர் மோசமாக வீசியதே, மேலும் ஷாகிப் அல் ஹசனை சரியாகப் பயன்படுத்தவில்லை, வாட்சன் நன்றாக செட்டில் ஆகி பந்து கால்பந்து சைசுக்குத் தெரிய ஆரம்பித்த போது ஷாகிப் அல் ஹசனைக் கொண்டு வந்தார்.

 
 

சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சன் ரைசர்ஸின் வெற்றிகளில் அபாரமாக வீசியவர்கள் ஆனால் நேற்று இருவரும் மோசமாக வீச, ஷேன் வாட்சனுக்கு அவருக்கு வாகான இடங்களில் வீசினர். இதனால் இருவரும் 7 ஓவர்களில் 95 ரன்கள் விளாசப்பட்டனர்.

7 ஓவர்களில் 95 ரன்களைக் கொடுக்கும் ஒரு சிறந்தப் பந்து வீச்சு அணி வெற்றி பெற வாய்ப்பேயில்லை, இலக்கு என்னவாக இருந்தாலும் இப்படி வீசுவது கொஞ்சம் தரநிலைக்குக் கீழான பந்து வீச்சுதான்.

ஆட்டத்தின் 11 ஓவர்கள் முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குத் தேவை 9 ஓவர்களில் 84 ரன்கள். அப்போது ரஷீத் கானுக்குத் தொடர்ந்து கொடுத்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சி செய்திருக்க வேண்டும், ஆனால் அவர் ரஷீத் கானை பந்து வீச்சிலிருந்து அகற்றி விட்டு பிராத்வெய்ட், சந்தீப் சர்மா ஆகியோருக்கு 3 ஓவர்களை நடுவில் கொடுத்தார். 12வது ஓவரில் பிராத்வெய்ட் 9 ரன்களைக் கொடுத்தார், 13வது ஓவரில் சந்தீப் சர்மா ஹாட்ரிக் சிக்சர்களுடன் 2 பவுண்டரிகள் என்று 27 ரன்களைக் கொடுத்தார். மீண்டும் பிராத்வெய்ட்டிடமே 14வது ஓவரைக் கொடுக்க ரெய்னா விக்கெட்டை அவர் வீழ்த்தினாலும் அதே ஓவரில் வாட்சனுக்கு வாகாக 2 பந்துகளை வீச ஒன்றுபவுண்டரி ஒன்று சிக்ஸர்.

இந்த ஓவரில் 14 ரன்கள் வந்தது, ஆகமொத்தம் 12-14 ஓவர்களில் 50 ரன்களை சன் ரைசர்ஸ் கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு வெகு அருகில் வந்தது. ரஷீத் கானுக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குத் தேவை பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் மாறியது. டி20-யில் இந்த நிலைமையில் அதுவும் 8 விக்கெட்டுகள் மீதமிருக்கையில் எந்த அணியும் வெற்றி பெற முடியாது.

http://tamil.thehindu.com/sports/article24010768.ece?homepage=true

Link to comment
Share on other sites

நெருக்கடித் தருணங்களை சிஎஸ்கே சிறப்பாகக் கையாண்டது: கேன் வில்லியம்சன் புகழாரம்

kane%20williamson

கேன் வில்லியம்சன், ரஷீத் கான். | படம்: ஏ.பி.

ஐபிஎல் 2018 கிரிக்கெட் எதிர்பார்த்தது போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று கோப்பையை தோனி தூக்குவதுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

சென்னைக்கு அழுத்தமான கணங்கள் இல்லை என்று கூற முடியாது, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றாலும் நெருக்கடி தருணங்கள் இருக்கவே செய்தன, ஆனால் அவற்றை அபாரமாக அந்த அணி கையாண்டு மீண்டது என்று சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

 
 
 

கேன் வில்லியம்சன் சிஎஸ்கேவைப் பாராட்டிக் கூறியதாவது:

இது இந்த ஆட்டத்தின் இயற்கை. சில வேளைகளில் எதிரணியினரின் நல்ல கிரிக்கெட்டை கைதட்டி வரவேற்க வேண்டியதுதான். சிஎஸ்கே பேட்டிங் அப்படிப்பட்ட ஒரு தருணமாகும்.

தனித்துவமான பேட்டிங், அவர்கள் வாய்ப்புகளையே வழங்கவில்லை. எங்கள் கைகளில் அடிப்பதை விட தூக்கி பவுண்டரிக்கு வெளியே அடித்தனர். 8 விக்கெட் வெற்றிதான், ஆனாலும் எங்களுக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தன. அந்தத் தருணங்களில் ஆட்டத்தின் போக்கு விரைவில் மாறிவிடும்.

அந்தக் கணங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் இத்தகைய தருணங்களை சிஎஸ்கே சிறப்பாகக் கையாண்டதால் வெற்றி பெற்றது, இதற்காக அந்த அணியைப் பாராட்டவே வேண்டும். நெருக்கடியைப் புறந்தள்ளி பேட்டிங்கில் நிரூப்பித்தனர்.

பிட்ச் 180 ரன்களை சிறப்பாக தடுத்து விடும் என்றே நினைத்தோம். முதல் 6 ஓவர்கள் அவர்களால் அடிக்க முடியவில்லை, ஆனால் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆவது நின்ற உடன் ஷேன் வாட்சன் புகுந்தார். அவரை நிறுத்த முடியவில்லை.

இந்தத் தொடர் முழுதுமே நடுவில் 2 விக்கெட்டுகள் எதிரணியினரை நிலைகுலையச் செய்யுமாறு ஆடினோம், ஆனால் இந்தப் போட்டியில் அது நடக்கவில்லை, அதனால்தான் ஷேன் வாட்சன் பேட்டிங் பாராட்டுக்குரியது, அனுபவத்தைக் காட்டிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இவ்வாறு கூறினார் கேன் வில்லியம்சன்.

http://tamil.thehindu.com/sports/article24010615.ece

Link to comment
Share on other sites

சிஎஸ்கே சாம்பியன்: வாட்ஸனுக்கு “புதுப்பெயர்” சூட்டி புகழ்ந்த தோனி

 

 
dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி வெற்றிக்கோப்பையுடன், மகள் ஜிவா, மனைவி சாக்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி   -  படம்உதவி: இன்ஸ்ட்ராகிராம்

11-வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ள நிலையில், இறுதிஆட்டத்தில் பட்டையை கிளப்பிய ஷேன் வாட்ஸனுக்கு செல்லமாக “புதிய பெயர்” வைத்து கேப்டன் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டி கடந்த 50- நாட்களுக்கும் மேலாக நடந்தது. சூதாட்ட சர்ச்சை காரணமாக 2 ஆண்டுகள் தடைமுடிந்து, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் பெற்று இருந்ததால், முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே இந்த முறை பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 
 

அதற்குஏற்றார்போல், லீக் ஆட்டங்களிலும், ப்ளே ஆப் சுற்றிலும் அற்புதமான ஆட்டங்களைவெளிப்படுத்திய சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பையில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்களைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாட்ஸனின் அபாராமான சதத்தால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இறுதி ஆட்டத்தில் தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்ஸன், முதல் 10 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்னை எடுத்தார், ஆனால், அடுத்த 41 பந்துகளில் காட்டடி அடித்து சதத்தை நிறைவு செய்தார். இவரின் மிரட்டலான பேட்டிங் சென்னை அணிக்கு எளிதான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.

ஷேன் வாட்ஸனின் ஆட்டத்த கேப்டன் தோனி நேற்று வெகுவாகப் புகழ்ந்தார். இன்ஸ்ட்ராகிராமில் கையில் வெற்றிக் கோப்பையையும், தனது மகள் ஜிவாவையும் ஏந்திக்கொண்டு தோனி தனது மனைவி சாக்ஸியுடன் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் வாட்ஸனுக்கு புதுப்பெயரை செல்லாகச் சூட்டியுள்ளார்.

watsonjpg

சதம் அடித்த மகிழ்ச்சியில் வாட்ஸன்

 

தோனி அதில் குறிப்பிடுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. மும்பை இன்று மஞ்சள்நிறத்தில் மாறி எங்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. ஷேன் ”ஷாக்கிங்” வாட்ஸன் அனைவருக்கும் இன்பஅதிர்ச்சி தரக்கூடிய இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார். இந்த சீசன் மிக இனிமையாக முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்ஸனுக்கு , ஷேன் ஷாக்கிங் வாட்ஸன் என தோனி சூட்டியுள்ளதை வாட்ஸனும் வரவேற்றுள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய வாட்ஸன் 2 சதம், 2 அரைசதம் உள்ளிட்ட 555 ரன்கள் சேர்த்தார்.

http://tamil.thehindu.com/sports/article24010972.ece

Link to comment
Share on other sites

தேதி 27, என் ஜெர்சி எண் 7, எங்களின் 7வது ஐபிஎல் இறுதி: வெற்றிக்குப் பிறகு தோனி குதூகலம்

 

 
csk

ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்   -  படம். | ஏ.எஃப்.பி.

குறுகிய வடிவ கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனான தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று இன்னொரு ஐபிஎல் மகுடத்தைச் சூடியது. சன் ரைசர்ஸ் அணியை சற்றும் எதிர்பாராதவிதமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கியது சிஎஸ்கே.

வாட்சன் ஆட்டத்தை ‘நோ-கான்டெஸ்ட்’ என்பார்களே அப்படிக் கொண்டு சென்றார். ரஷீத் கான் பவுலிங்குக்கு மரியாதை கொடுப்போம் என்ற முடிவு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கை கொடுத்தது.

 
 

இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது:

இறுதிப் போட்டிக்கு நுழைகிறோம் எனும்போதே அனைவரும் தங்கள் பங்கு என்னவென்பதை தெரிந்து வைத்திருந்தனர். பீல்டிங்கைத் தேர்வு செய்யும் போது நம் திட்டங்களில் சிறு அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்து கொள்ள வேண்டும். இதுதவிர எங்கள் பேட்ஸ்மென்களுக்கு அவர்கள் ஸ்டைல் தெரியும்.

களத்தில் பேட் செய்பவர்கள் கடினமாக உணர்ந்தால் புதிதாக வரும் பேட்ஸ்மெனுக்கும் கடினமாக இருக்கும் என்பது தெரியும்தானே.

ரஷீத் கான் எப்படி சாதுரியமாக வீசுவாரோ, அதேபோல்தான் புவனேஷ்வர் குமாரும் பேட்ஸ்மெனை ஏமாற்றும் ஒரு பவுலர் எனவே ஒரு பவுலர் மட்டும்தான் எங்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என்பதல்ல. இது ஒரு நல்ல பேட்டிங் ஆகும். மிடில் ஓவர்களில் அடித்து நொறுக்க முடியும் என்பது எங்களிடம் உள்ள நம்பிக்கையாகும்.

பிராவோவை முன்னால் இறக்கும் திட்டம் எதுவும் இல்லை. ராயுடு எங்கள் முக்கிய பேட்ஸ்மேன். எனவே நடு ஓவர்களில் அடிக்க ஆளிருந்தது. அனைத்து வெற்றிகளுமே சிறப்பு வாய்ந்ததுதான், இதில் எது சிறந்தது, பிடித்தது என்று தேர்வு செய்வது கடினம்.

நிறைய பேர் எண்கள், புள்ளிவிவரங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய தேதி 27, என் ஜெர்சி எண் 7, இது எங்களுடைய 7வது பைனல். வயது பற்றி நிறைய பேசியாகிவிட்டது, ஆனால் உடல்தகுதிதான் முக்கியம். ராயுடுவுக்கு 33 வயது என்பது ஒரு பிரச்சினையல்ல. எந்த கேப்டன்களை நீங்கள் கேட்டாலும் களத்தில் நன்றாக நகர்ந்து இயங்கும் பீல்டர்களையே விரும்புவார்கள். இதற்கு வயது ஒரு தடையல்ல 19-20 வயதாக இருந்தாலும் 30 வயதாக இருந்தாலும்.

ஆனாலும் எங்களுடைய பலவீனங்கள் எங்களுக்கு நன்றாகவே தெரியும், வாட்சன் டைவ் அடித்தால் காயமடைவார், அதனால் அவர் அதைச் செய்ய வேண்டாம் என்றே விரும்புவோம். இவையெல்லாம் எங்களுக்குத் தெரிந்ததுதான், வயது என்பது ஒரு எண் மட்டுமே. ஆனால் உடற்தகுதியில் ஃபிட் ஆக இருக்க வேண்டும். இப்போதைக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. சென்னைக்குச் செல்கிறோம். முடிவு என்னவாக இருந்திருந்தாலும் சென்னைக்குச் சென்று ரசிகர்களையும் அணிக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க வேண்டும். விடுதி ஒன்றில் அனைவரும் ஒன்றிணைந்து மாலைப்பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கவிருக்கிறோம்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/article24010267.ece

Link to comment
Share on other sites

சிஎஸ்கே சாம்பியன்: தோனியின் புதிய சாதனைகள், அதிக சிக்ஸர் விளாசிய அணி- சுவாரஸ்யமான 10 தகவல்கள்

 

 
ipl

வில்லியம்ஸன், எம்.எஸ்.தோனி, ஷேன் வாட்ஸன் : கோப்புப்படம்

11-வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்தும், இறுதிப்போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் குறித்தும் பல்வேறு ருசிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 
 

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்களைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாட்ஸனின் அபாரமான சதத்தால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் படைக்கப்பட்ட சில முக்கிய சாதனைகள்.

1. 11-வது ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் 735 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். ஒரே போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியில் இதுவரை 2 வீரர்கள் மட்டுமே உள்ளனர். 2016-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 973 ரன்களும், டேவிட் வார்னர் 848 ரன்களும் சேர்த்தனர்.

2. இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் 10 டாட்பால்களை வீசினார். இறுதிப்போட்டியில் அதிகமான டாட் பந்துகளை வீசிய பட்டியலில் புவனேஷ் குமார் இணைந்தார். இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்ற இலங்கை வீரர் தில்ஹாரா பெர்ணான்டோ சிஎஸ்கே அணிக்கு எதிராக 10 டாட் பந்துகளை வீசினார்.

3. இறுதிப்போட்டியில் சதம் அடித்த ஒரே அணி வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா சதம் அடித்தார். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வாட்ஸன் சதம் அடித்தார். இருவரும் தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளனர்.

4. ஒரே ஐபிஎல் சீசனில் அதிகமான சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது வீரராக வாட்ஸன் இணைந்தார். இந்த சீசனில் வாட்ஸன் இருசதங்கள் அடித்தார். இதற்கு முன், 2011-ல் கிறிஸ் கெயில், 2016-ல் விராட் கோலி, 2017-ல் ஹசிம் அம்லா ஆகியோர் ஒரே சீசனில் அதிகமான சதங்கள் அடித்து சாதனை புரிந்திருந்தனர்.

5. டி20 இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த அல்லது சேஸிங் செய்த அணிகளில் இடம் பெற்று அதிகமான ரன் குவித்த 2-வது வீரர் எனும் பெருமையை ஷேன் வாட்ஸன்(117ரன்கள்) பெற்றார். இதற்கு முன் பங்களாதேஷ் பிரியமியர் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தாகா டைனமைட்ஸ் அணிக்கு எதிராக ராங்பூர் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற கெயில் 146ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருக்கிறது. வாட்ஸன் தற்போது சேர்த்த 117 ரன்கள் 2-வதாகும்.

6. ஐபிஎல் இறுதிப்போட்டியில் எந்த அணியில் இடம் பெற்ற வீரரும், சேஸிங்கின் போது, 50 ரன்களுக்கு மேல் சேர்க்கும்போது அதிகமான ஸ்டிரைக் ரேட் வைத்ததில் வாட்ஸன் முதலிடம் பெறுகிறார். வாட்ஸனின் 57 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் 205.27 ஆகும். 2016-ம் ஆண்டு இறுதிஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த கெயில் 38 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். அப்போது அவரின் ஸ்டிரைக் ரேட் 200 மட்டுமே இருந்தது.

7. 11-வது ஐபிஎல் சீசனில் அதிகமான சிக்ஸர் அடித்த அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பெற்றது. 145 சிக்ஸர்களை சிஎஸ்கே அணி வீரர்கள் அடித்துள்ளனர். ஒரே சீசனில், ஒரே அணியால் அடிக்கப்பட்ட அதிகமான சிக்ஸர்களும் இதுவாகும். இதற்குமுன் கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரு அணி 142 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

cskwinningtrophyjpg
 

8. ஒரே சீசனில் ஒரு அணியை 4 முறை தோற்கடித்த அணி என்ற பெருமையை சிஎஸ்கே அணி பெற்றது. அதாவது, சன்ரைசர்ஸ் அணியை இந்த சீசனில் லீக் சுற்றில் 2முறையும், ப்ளே ஆப்ஃபில் ஒரு முறையும், இறுதிப்போட்டியில் ஒருமுறையும் என 4 முறை சிஎஸ்கே அணி தோற்கடித்தது.

9. ஐபிஎல் போட்டியில் ஒரே அணிக்கு அதிகமான கோப்பைகளை பெற்றுக்கொடுத்த கேப்டன்களில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கே முதலிடம். சிஎஸ்கே அணி வென்ற 3 சாம்பியன்களும் தோனியின் தலைமையில்தான் கைப்பற்றப்பட்டதாகும்.

10. அதிகமான டி20 போட்டிகளில் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களில் தோனிக்குத்தான் முதலிடம். இதுவரை, தோனி தலைமையில் 7 வகையான டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்லப்பட்டுள்ளது. தோனி தலைமையில் 3 ஐபிஎல் போட்டிகளில் சாம்பியன் பட்டம், 2 முறை சாம்பின்லீக் டி20 போட்டியில் கோப்பை, ஒரு டி20 உலகக்கோப்பையில் மகுடம், ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வாகை சூடப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article24011807.ece

Link to comment
Share on other sites

மரண அடி மாஸ்டர்... சி.எஸ்.கே ஏன் சிங்கம்..? இதான் பதில்! #CSKvsSRH

 
 

'கம்பேக்னா இப்படி இருக்கணும்' எனக் கெத்தாக விளையாடிக்காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 மாதங்களுக்கு முன்னால், `முன்னாள்' ஐபிஎல் அணியாக இருந்த சிஎஸ்கே., இப்போது சாம்பியன். திக்கித்திணறி கடைசி ஓவரில் வெற்றி பெற்று தொடரைத் தொடங்கியவர்கள், கொஞ்சம்கூட சன்ரைஸர்ஸுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஃபைனலில் வென்றுவிட்டனர். சதம் அடித்த வாட்சன் மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இங்கிடி, சஹார் ஆகியோரின் பந்துவீச்சு, ரெய்னாவின் கூல் கேமியோ ஆகியவையும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணங்கள். நல்ல நிலையில் இருந்த சன்ரைஸர்ஸ் ஆட்டத்தைத் தவறவிட்டது எங்கே... சென்னையின் கைகள் ஓங்கியது எப்படி? #CSKvsSRH

CSK கம்பேக்

 

மேலும் படங்களுக்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள்!

பவர்பிளே : சன்ரைஸர்ஸ் = 42, சி.எஸ்.கே = 35. ஆனால்..!

சென்னை டாஸ் வென்று பௌலிங் தேர்வுசெய்ய, தவான் - கோஸ்வாமி ஜோடி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. நோ பாலோடு ஆட்டத்தைத் தொடங்கினாலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார் தீபக் சஹார். முதல் ஓவரில் 6 ரன். இரண்டாவது ஓவரில் தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு அசைப்பட்டு ரன் அவுட்டானார் கோஸ்வாமி. தவானுடன் வில்லியம்ஸன் ஜோடி சேர, சீராக ரன்ரேட் உயர்ந்தது. ஒவ்வொரு போட்டியிலும் தன் பந்துவீச்சில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறார் இங்கிடி. நான்காவது ஓவரில் வில்லியம்ஸனை அவர் திணறவைக்க 6 பந்துகளும் டாட். மெயிடன்! 4 ஓவர் முடிவில் சன்ரைஸர்ஸ் 17/1. மிகவும் மோசமாக இருந்த சன்ரைஸர்ஸ் ரன்ரேட் அடுத்த இரண்டு ஓவர்களில் உயர்ந்தது. சஹார் ஓவரில் வில்லியம்ஸன் ஒரு பௌண்டரி ஒரு சிக்ஸர் அடிக்க, ஷர்துல் தாக்கூர் ஓவரில் தவான் லாங் ஆன் திசையில் அட்டகாசமாக ஒரு சிக்ஸர் அடித்தார். பவர்பிளே முடிந்தபோது அணியின் ஸ்கோர் 42/1. ரன்ரேட் : 7.00. 

சன்ரைஸர்ஸ் அணியைப் பொறுத்தவரை, இது அவர்களுக்கு நல்ல தொடக்கம்தான். மிடில் ஆர்டர் சுமாராக இருக்கும் நிலையில், அதிகம் விக்கெட்டுகளை இழக்கக் கூடாது என்பதே அவர்களுக்கு முக்கியத் தேவை. ஆனால், சூப்பர் கிங்ஸ், பவர்பிளேவை அவர்களைவிடவும் மெதுவாகத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே வாட்சனை அலறவிட்டார் புவி. இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என அவர் வேரியேஷன்கள் காட்ட, மெயிடனோடு தொடங்கியது சி.எஸ்.கே இன்னிங்ஸ். சந்தீப் ஷர்மா வீசிய இரண்டாவது ஓவரில் 5 ரன். புவி... மீண்டும் மிரட்டுகிறார். தீபக் ஹூடா ஓவர்த்ரோ செய்ய, ஒரு பந்தில் 5 ரன். மற்ற ஐந்துமே டாட் பால்கள். சந்தித்த முதல் 10 பந்துகளையுமே டாட் பாலாக்கினார் வாட்டோ. சந்தீப் ஓவரில் புயல் வேக ஸ்ட்ரெய்ட் டிரைவால் பௌண்டரி அடித்து ரன் விரதத்தை 11-வது பந்தில் கலைத்துக்கொண்டார். ஆனால், அந்த ஓவரிலேயே கேட்ச்சாகி வெளியேறினார் குவாலிஃபயர் நாயகன் டுப்ளெஸ்ஸி. 

வாட்சன் அதிரடி

மேலும் படங்களுக்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள்!

ஐந்தாவது ஓவர்... முதல் தவறைச் செய்தார் வில்லியம்ஸன். விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவனேஷ்வர் குமாருக்கு 3-வது ஓவர் கொடுத்தார். அவரது ஓவரை மிகவும் கவனமாகவே எதிர்கொண்ட சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள், அந்த ஓவரிலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அடுத்த ஓவர் மீண்டும் சந்தீப் கையில். அதுவரை அமைதியாக இருந்த வாட்சன், அந்த ஓவரில் மிட்விக்கெட் ஏரியாவில் ஒரு சிக்ஸரும், மிட் ஆஃப் திசையில் ஒரு பௌண்டரியும் அடிக்க, பவர்பிளேவில் 35 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. சன்ரைஸர்ஸ் ஸ்கோரை ஒப்பிடும்போது 7 ரன் குறைவு. ஆனால், புவியின் 3 ஓவர்கள் முடிந்துவிட்டன. ரஷீத் கானின் 4 ஓவர்கள் போக, இனி அவர்கள் கவனமாக ஆடவேண்டியது அந்த ஒரு ஓவர் மட்டும்தான். ஆக, மீதமிருக்கும் 14 ஓவர்களில் 9 ஓவர்களை டார்கெட் செய்யலாம் என்ற சாதகமான நிலை சென்னைக்கு!

டெத் ஓவர்கள் : ஆசம் இங்கிடி... சொதப்பல் பிராத்வெய்ட்!

என்ன... பிராத்வெய்ட் சொதப்பினாரா?! 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த வீரர் எப்படி சொதப்பியவராக முடியும்? நிச்சயம் ஆக முடியும். 3 சிக்ஸர்களிலேயே 18 ரன். மற்ற 8 பந்துகளிலும் சேர்த்து அவர் எடுத்தது 3 ரன்தான். `அடிச்சா சிக்ஸர்தான்' என அவர் சுற்றிக்கொண்டே இருக்க, 19 ஓவரில் மட்டும் 3 பந்துகளை டாட் பாலாக்கினார் பிராத்வெய்ட். விளைவு அந்த ஓவரில் வெறும் 8 ரன். இங்கிடி, பிராவோவின் `டெத் பௌலர்' ரோலைத் தனதாக்கிக்கொண்டு மிகச் சிறப்பாக பந்துவீசினார். பிராவோ போல ஸ்லோ பால்கள் மட்டுமே போடாமல், லைன் லென்த் என அனைத்து ஏரியாவிலும் பெர்ஃபெக்‌ஷன் காட்டினார். அவர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முடியாதபோது, குறைந்தபட்சம் சிங்கிள் ஆடி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்திருக்கலாம். நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றிருந்த யூசுஃப் பதான் சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவருக்கும் ஸ்ட்ரைக் கொடுக்காமல், குறைந்தபட்சம் 10 ரன்னையாவது குறைத்துவிட்டிருப்பார் பிராத்வெய்ட். 

#CSKvsSRH

திரும்ப வந்துட்டேன்னு கெத்து காட்டி கோப்பை ஜெயிச்ச சி.எஸ்.கே வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு

அந்த ஓவரில் ரன் போயிருந்தால், 20-வது ஓவரை ஷர்துல் வீசியபோது அவருக்கு நெருக்கடி இருந்திருக்கும். அவரும் கூலாக பந்துவீச, கடைசி ஓவரில் வெறும் பத்தே ரன். 178 ரன்னோடு முடிவுக்கு வந்தது சன்ரைஸர்ஸ் இன்னிங்ஸ். பிராவோ வீசிய 18-வது ஓவர் தவிர்த்து மற்ற 4 ஓவர்களிலும் 10 ரன்னைத் தாண்டவில்லை. கடைசி 5 ஓவர்களில் அவர்கள் அடித்தது வெறும் 52 ரன். முதல் 6 ஓவர்களுக்கு 42 என்பது ஓகே ஸ்கோர்தான். ஆனால், கடைசி 5 ஓவர்களில் 52 என்பது மோசமான ஸ்கோர். சன்ரைஸர்ஸ் இந்த ஆட்டத்தில் சறுக்கிய இடம் இதுதான். அப்போ சென்னை டெத் ஓவர்களில் எப்படி பேட்டிங் செய்தது? 16-வது ஓவர் தொடங்கும்போதெல்லாம் வான்கடே மைதானம் மஞ்சளாகவே மாறியிருந்தது. 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி. கையில் 8 விக்கெட்டுகள். எப்படி பேட்டிங் செய்தால் என்ன? ஆட்டம் அதற்கு முன் மிடில் ஓவர்களிலேயே முடிந்துவிட்டது. அப்போதே சிஎஸ்கே வெற்றியை சாத்தியமாக்கிவிட்டார் வாட்சன்.

மிடில் ஓவர்கள்: பேட்டிங்கில் அசத்தி பௌலிங்கில் சொதப்பிய வில்லி அண்ட் கோ. தாண்டவமாடிய வாட்டோ!

பவர்பிளேவிலும் டெத் ஓவர்களிலும் ஓர் அணியால் ரன் குவித்துவிட முடியும். ஆனால், அந்த அணியின் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பது, மிடில் ஓவர்கள்தான். விக்கெட்டும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ரன்ரேட்டும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பௌண்டரிகளும் அடிக்க வேண்டும், ஸ்ட்ரைக் ரொடேட் செய்தும் ஆடவேண்டும். 7 முதல் 15 ஓவர்கள் வரை இந்த நெருக்கடிகள் அனைத்தையும் சமாளித்து ஆட வேண்டும். அதிக ரன் வரும் பவர்பிளேவிலும் டெத் ஓவர்களிலும் சுமாராக விளையாடிய சன்ரைஸர்ஸ், மிடில் ஓவர்களில் நேர் எதிராக விளையாடியது. பவர்பிளேவின் கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடத் தொடங்கியிருந்த வில்லியம்ஸன் ரன்வேகத்தை மேலும் உயர்த்தினார். ஜடேஜா பந்துவீச்சில் தவான் (26 ரன்கள்) போல்டாக, அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடினார். கரண் ஷர்மாவின் லெக் பிரேக்கில் சன்ரைஸர்ஸ் கேப்டன் ஸ்டம்பிங் ஆகி 47 ரன்களில் வெளியேறினார். 

#CSKvsSRH

திரும்ப வந்துட்டேன்னு கெத்து காட்டி கோப்பை ஜெயிச்ச சி.எஸ்.கே வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு

வழக்கமாக ஏனோதானோ என ஆடும் யூசுப் பதான், இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடினார். அதிகமாக பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்கள் அடிப்பதிலும் கவனம் செலுத்தினார். மோசமான பந்துகளை மின்னல் வேகத்தில் பௌண்டரியை நோக்கி அனுப்பினார். அதனால் ரன்ரேட் சீராக 8-8.50 சுற்றி நகர்ந்துகொண்டிருந்தது. 7 முதல் 15 வரை, அந்த 9 ஓவர்களில் சன்ரைஸர்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்தது. மிடில் ஓவர்களில் அவர்களின் ரன்ரேட் 9.33. டி-20 போட்டிகளைப் பொறுத்தவரை, இது மிகவும் சிறப்பான செயல்பாடு. ஆனால், அந்தச் சிறப்பான செயல்பாட்டை பந்துவீச்சில் செய்யத் தவறியதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது சன்ரைஸர்ஸ் அணி. சிஎஸ்கே-வின் மிடில் ஓவர்களில் சன்ரைஸர்ஸ் பௌலர்கள் கொடுத்த ரன் 111. ரன்ரேட் 12.33 ! அதாவது மிடில் ஓவர்களில் மட்டும் 27 ரன் அதிகம் கொடுத்துள்ளது அந்த அணி. அந்த 27 ரன்கள் சந்தீப் ஷர்மா வீசிய ஒரே ஓவரில் கிடைத்தவை. ஆம், ஒரே ஓவரில் 27 ரன்! காரணம், ஷேன் வாட்சன்!

முதல் பத்து பந்துகளில் ரன்னே இல்லை. அடுத்த 47 பந்துகளில் (@248.94) 117 ரன் குவித்து தனி ஆளாக ஆட்டத்தை சன்ரைஸர்ஸ் பக்கமிருந்து கடத்திச்சென்றுவிட்டார். தொடக்கத்தில் வாட்சன் தடுமாறிக்கொண்டிந்தபோது, சித்தார்த் கௌல் கையில் பந்தைக் கொடுத்தார் வில்லி. இந்திய அணிக்குத் தேர்வாகும் முன் நன்றாக பந்துவீசிக்கொண்டிருந்தவர், அதன் பிறகு தொடர்ந்து ரன்னை வாரிவழங்கிக்கொண்டிருந்தார். ஃபைனல் என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல் இந்தப் போட்டியிலும் அதைத் தொடர்ந்தார். தொடர்ந்து லெக் ஸ்டம்ப் லைனிலேயே வீசிக்கொண்டிருக்க, ரெய்னா பௌண்டரிகளாக விளாசினார். ரெய்னா ஒருபுறம் அடித்து ஆட, நெருக்கடி குறைந்த வாட்சன் `பீஸ்ட்' மோடுக்கு மாறினார். வான்கடேவின் ஒவ்வொரு ஸ்டேண்டுக்கும் பந்துகளை அனுப்பிக்கொண்டிருந்தார். கௌல் வீசிய இரண்டு ஓவர்களில் 32 ரன்கள், ஷகிப்பின் ஓவரில் 15 ரன்கள், சந்தீப் வீசிய 13 ஓவரில் 27 என ஒவ்வொரு ஓவரிலும் இரட்டை இலக்க ஸ்கோர்களை அடித்துக்கொண்டிருந்தார் வாட்சன். 

watson சி.எஸ்.கே

ஒரு கட்டத்தில் கொஞ்சம் ஓட சிரமப்பட்டதால், `நோ ரன்னிங்... ஒன்லி ஹிட்டிங்' என அனைத்துப் பௌலர்களையும் விரட்டி விரட்டி வெளுத்தார். ரஷீத் கான் வந்தபோதும் சிங்கிள்களைத் தாண்டி பேராசைப்படவில்லை. பவர்பிளே முடிவில் கொண்டிருந்த அதே ப்ளான்தான்... புவி, ரஷீத் ஓவரில் விக்கெட் விழக் கூடாது... திட்டமிட்டதுபோலவே அந்த 8 ஓவர்களில் (41 ரன்கள்) விக்கெட்டே விழவில்லை. அவர்களுக்கும் சேர்த்து சந்தீப், கௌல், ஷகீப் ஆகியோர் ரன்களை வாரி வழங்க, 13-வது ஓவரிலேயே ஆட்டத்தில் தன் பிடியை இழந்துவிட்டது சன்ரைஸர்ஸ். அதைத் துண்டித்தவர் 36 வயது சீனியர் கிங் வாட்சன்!

'டீம் முழுக்க சீனியர் சிட்டிசன்கள்' என்று விமர்சனம் செய்யப்பட்ட சிஎஸ்கே., `We are born Champions' என்பதை நிரூபித்துள்ளது. 9 ஆண்டுகளில், 7 ஃபைனல்கள், 3 கோப்பைகள் என அசைக்க முடியாத அணியாக, ஐபிஎல் தொடரின் அடையாளமாக விளங்குகிறது!

 

கம்பேக்னா இப்படி இருக்கணும்!

https://www.vikatan.com/news/sports/126110-csk-became-ipl-champions-for-the-third-time.html

 

 

 

கோப்பை வென்றது சென்னை 'சீனியர்' கிங்ஸ் - விமர்சனங்களுக்கு சிஎஸ்கே தக்க பதிலடி

 

 
CSK_IPL

 

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 11-ஆவது ஐபிஎல் சீசன் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற நேற்றைய இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

நடப்பு சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை அணி வாட்சன், ராயுடு, டு பிளேசிஸ், பிராவோ, ஹர்பஜன் சிங், முரளி விஜய், இம்ரான் தாஹிர் என 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களையே பெரும்பாலும் எடுத்திருந்தது. அதுமட்டுமின்றி தக்கவைக்கப்பட்ட வீரர்களுள் தோனி, ரெய்னா ஆகியோரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

வாட்சன்  - 36 வயது
டு பிளேசிஸ் - 33 வயது
ரெய்னா - 31 வயது
ராயுடு - 32 வயது
தோனி - 36 வயது
பிராவோ - 34 வயது
கரண் சர்மா - 30 வயது
ஹர்பஜன் சிங் - 37 வயது
இம்ரான் தாஹிர் - 39 வயது

இதனால், ஏலத்தின் முடிவில் சிஎஸ்கேவின் விரிவாக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்ல சென்னை சீனியர் கிங்ஸ் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். 

டி20 கிரிக்கெட், கிரிக்கெட் விளையாட்டின் நவீனம் என்பதால் பெரும்பாலும் இளம் வீரர்கள் தான் இதற்கு சிறப்பாக ஜொலிப்பார்கள் என்ற எண்ணம் பெரும்பாலோனோர் மத்தியில் இருந்து வந்தது. 

ஆனால், இந்த பார்வை, எண்ணங்கள் அனைத்தும் தவறு. வயது என்பது வெறும் எண் தான் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற அனைத்து அணிகளையும் விட சிறந்த அணி என்பதை கோப்பை வென்று நிரூபித்துள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறப்பட்ட வீரர்களான தோனி, ரெய்னா, வாட்சன், டு பிளெசிஸ், ராயுடு, பிராவோ என இவர்கள் தான் நடப்பு சீசனில் பெரும்பாலான போட்டிகளில் முக்கிய வீரர்களாக ஜொலித்து விளங்கினர். 

ராயுடு, நடப்பு சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். வாட்சன் 555 ரன்களும், தோனி 455 ரன்களும், ரெய்னா 445 ரன்களும் குவித்து தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியில் அனைத்து வீரர்கள் திணறிய போதும் மனம் தளராத டு பிளெசிஸ் தனது அனுபவத்தை கொண்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை அடையச் செய்தார். 

நேற்றைய இறுதிப்போட்டியிலேயே வாட்சன் சதம் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், அவரால் தனது முதல் 10 பந்துகளில் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் சந்தீப் சர்மாவின் ஸ்விங்கில் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தார். இருப்பினும், அவர் நிதானம் காட்டி களத்தின் தன்மையை அறிந்து சரியான நேரம் வரும் வரை காத்திருந்து பின்னர் அதிரடிக்கு மாறினார். 

முதல் 10 பந்துகளில் ரன் குவிக்காதவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவித்து ஸ்டிரைக் ரேட்டை 200-க்கு மேல் வைத்துள்ளார். இது தான் அனுபவம் என்பதை வாட்சன் நிரூபித்தார். 

இதையடுத்து ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு தோனி வயது குறித்து பேசுகையில், 

"நாங்கள் வயது குறித்து நிறைய பேசினோம். ஆனால், உடற்தகுதி தான் முக்கியம். உதாரணத்துக்கு ராயுடுவுக்கு 33 வயது. அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார். மைதானத்தின் பெரும்பாலான பகுதிகளை கடந்து சிறப்பாக செயல்படுவார். அவர், மைதானத்தில் பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் நீண்ட நேரம் செலவிட நேர்ந்தாலும் அடுத்த போட்டியில் விளையாட முடியாது என்று புகார் கூற மாட்டார். அதனால், வயதை விட உடற்தகுதி தான் முக்கியம். 

கேப்டன்கள் பெரும்பாலும் விரும்புவது எதுவென்றால், பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால், வீரர்கள் எந்த ஆண்டில் பிறந்தார்கள் என்பது முக்கியமில்லை. 19 வயது வீரராக இருந்தாலும் சரி, 20 வயது வீரராக இருந்தாலும் சரி களத்தில் உடற்தகுதியுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 

இருப்பினும் எங்களிடம் இருக்கும் குறைபாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். ஆனால், எந்த பிரிவில் நாம் சிறப்பாக செயல்பட முடியாது என்பதை நாம் உணர வேண்டும் என்பது தான் முக்கியம். 

உதாரணத்துக்கு, வாட்சனை ஒரு ரன்னை தடுக்குமாறு அழுத்தம் கொடுத்தால் அவர் ஹாம்ஸ்ட்ரிங் மூலம் காயமடையும் வாய்ப்பு  நிறைய உள்ளது. அதன்பிறகு அவர் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்படும். அதனால், நாம் கூறவேண்டியது அவர்கள் தங்களை அர்பணித்து 1 ரன்னை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால், ஒரு ரன்னை தடுப்பதற்காக காயம் அடைவது என்பது சரியல்ல.  

ஏனென்றால் வாட்சனோ, பிராவோவோ காயமடைந்து அடுத்த போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் நான் அணி அதே பலத்துடன் இருக்க வீரர்களுள் நிறைய மாற்றங்களை செய்ய நேரிடும். அதனால், வயது என்பது வெறும் எண் தான், உடற்தகுதி தான் முக்கியம்" என்றார். 

ஒருவரை நாம் எத்தனை வயது மூத்தவர்கள் என்று கூறுகிறோமோ அத்தனை அனுபவங்கள் அவர்களிடம் இருக்கும் என்பதையும் நினைவு கூற வேண்டும். அதற்கேற்றவாறு, டி20 கிரிக்கெட் என்பது இளம் வீரர்களின் விளையாட்டு மூத்த வீரர்களுக்கானது அல்ல என்ற பொதுப் பார்வையை மாற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.

http://www.dinamani.com/sports/2018/may/28/csk-shuts-criticisms-for-chennai-senior-kings-by-lifting-the-trophy-2928431.html

Link to comment
Share on other sites

ஐபிஎல்: ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வாங்கிய வீரர்களின் முழுப் பட்டியல்!

 

 
narine1111

 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது.

இந்த வருடம் ஆட்ட நாயகன் விருது ஷேன் வாட்சனுக்கும் தொடர் நாயகன் விருது சுனில் நரைனுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் போட்டியில் இதுவரை ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது பெற்றவர்களின் முழுப்பட்டியல்:

ஐபிஎல்: தொடர் நாயகன் 

2008 - ஷேன் வாட்சன்
2009 - ஆடம் கில்கிறிஸ்ட்
2010 - சச்சின் டெண்டுல்கர்
2011 - கிறிஸ் கெய்ல்
2012 - சுனில் நரைன்
2013 - ஷேன் வாட்சன்
2014 - கிளென் மேக்ஸ்வெல்
2015 - ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 - விராட் கோலி
2017 - பென் ஸ்டோக்ஸ்
2018 - சுனில் நரைன்

ஐபிஎல்: ஆட்ட நாயகன்

2008 - யூசுப் பதான்
2009 - அனில் கும்ப்ளே*
2010 - சுரேஷ் ரெய்னா
2011 - முரளி விஜய்
2012 - மன்வின்தர் பிஸ்லா
2013 - கிரோன் பொலார்ட்
2014 - மணிஷ் பாண்டே
2015 - ரோஹித் சர்மா
2016 - பென் கட்டிங்
2017 - கிருணாள் பாண்டியா
2018 - ஷேன் வாட்சன்

( * தோல்வியடைந்தபோதும் கும்ப்ளேக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.)

http://www.dinamani.com/sports/special/2018/may/28/player-of-the-tournament-in-each-ipl-2928504.html

 

 

ஐபிஎல் வரலாற்றில் இந்த வருடம்தான் அதிக சிக்ஸர்கள்! முழு விவரம்!

 

 
watson_dd1_(1)

 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது.

ஐபிஎல் போட்டியைப் பலரும் விரும்புவதற்குக் காரணம், அடிக்கடி அடிக்கப்படும் சிக்ஸர்கள். தொடர்ச்சியாக அடிக்கப்படும் சிக்ஸர்கள், மைதானத்தைத் தாண்டிச் செல்லும் சிக்ஸர்கள், விக்கெட் கீப்பரின்
பின்னால் அடிக்கப்படும் சிக்ஸர்கள் எனப் பலவிதங்களில் சிக்ஸர்கள் அடிக்கப்படுவதால் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையுடனே ஐபிஎல் போட்டியை ரசிப்பார்கள்.

வேறு எந்த வருடத்தை விடவும் இந்த வருடம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முழு விவரம்:

ஐபிஎல் - சிக்ஸர்களின் எண்ணிக்கை 

2008 - 622
2009 - 506
2010 - 585
2011 - 639
2012 - 731
2013 - 673
2014 - 714
2015 - 692
2016 - 638
2017 - 705
2018 - 872

ஐபிஎல் 2018 - அதிக சிக்ஸர்கள்

ரிஷப் பண்ட் - 37
ஷேன் வாட்சன் - 35
அம்பட்டி ராயுடு - 34
கேஎல் ராகுல் - 32
ஆண்ட்ரே ரஸ்ஸல் - 31

ஐபிஎல்: ஒவ்வொரு வருடம் அதிக சிக்ஸர் அடித்த வீரர் 

2008 - ஜெயசூர்யா (31)
2009 - கில்கிறிஸ்ட் (29)
2010 - உத்தப்பா (27)
2011 - கெய்ல் (44)
2012 - கெய்ல் (59)
2013 - கெய்ல் (51)
2014 - மேக்ஸ்வெல் (36)
2015 - கெய்ல் (38)
2016 - கோலி (38)
2017 - மேக்ஸ்வெல்/வார்னர் (26)
2018 - ரிஷப் பண்ட் (38)

http://www.dinamani.com/sports/special/2018/may/28/no-of-sixes-hit-in-each-ipl-season-2928508.html

 

 

ஐபிஎல் கோப்பையை குடும்பத்துடன் ஏந்தி மகிழ்ந்த சிஎஸ்கே வீரர்கள்! (படங்கள்)

 

 
dhoni91919xx

 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது.

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் கிடி, தாகுர், சர்மா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.  

18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்து சென்னை வெற்றி பெற்றது. 8 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து வாட்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னை அணி வென்ற ஐபிஎல் கோப்பையை அதன் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் ஏந்தி மகிழ்ந்தார்கள். சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள அதன் புகைப்படங்கள்:

har1.jpg

raina12.jpg

raina_harbhajan11.jpg

dhoni91919.jpg

http://www.dinamani.com/sports/special/2018/may/28/celebrations-with-family-2928518.html

Link to comment
Share on other sites

தோனியின் ‘மின்னல் வேக ஸ்டெம்பிங்’ புதிய சாதனை:150-வது வெற்றி; ஒட்டுமொத்த சிக்ஸர்?

 

 

 
stumpping

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதி ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸனை ஸ்டெம்பிங் செய்த தோனி   -  படம் உதவி: ட்விட்டர்

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஸ்டெம்பிங்கிலும் சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸனை ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஏறக்குறைய 175ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இதுவரை 33 மின்னல் வேக ஸ்டெம்பிங்குகளைச் செய்து பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பியுள்ளார்.( தோனியின் ஸ்டெம்பிங் வேகம் குறித்து ரசிகர்களுக்குத் தெரியும், பேட்ஸ்மேன் கிரீஸைவிட்டு வெளியே கால் ஒரு நொடி விலகினாலும் ஸ்டெம்பில் பைல்ஸ் இருக்காது)

இதன் மூலம் உத்தப்பாவின் 32 ஸ்டெம்பிங் சாதனையை தோனி முறியடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ஸ்டெம்பிங்குகளை செய்து 3-ம் இடத்தில் உள்ளார். விர்திமான் சாஹா 18 ஸ்டெம்பிங்குகள் செய்துள்ளார்.

அதேபோல டி 20 போட்டிகளில் அதிகமான கேட்சுகளைப் பிடித்தவகையில் தோனி மூன்றாம் இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 94 கேட்சுகளையும் பிடித்து முதலிடத்தில் உள்ளனர். தோனி 83 கேட்சுகளைப் பிடித்து 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 79 கேட்சுகளைப் பிடித்து 4-ம் இடத்திலும் உள்ளனர்.

150-வது வெற்றி

 

dhoni2jpg
 

டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். இதுவரை 255 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட தோனிக்கு, நேற்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிடைத்தது 150-வது வெற்றியாகும்.

தோனிக்கு அடுத்த இடத்தில் கம்பீர் உள்ளார். இதுவரை 170 போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்ட கம்பீர் 98 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த சிக்ஸர்கள்

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில்தான் சிக்ஸரில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடந்த ஐபிஎல் போட்டியில் 51 ஆட்டங்களில் 8 அணிகள் சார்பில் ஒட்டுமொத்தமாக 872 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 705 சிக்ஸர்கள் விளாசப்பட்ட நிலையில், அதைக் காட்டிலும் 167 சிக்ஸர்கள் அதிகமாகும். கடந்த 2012-ம் ஆண்டு அடிக்கப்பட்ட 731 சிக்ஸர்கள்தான் இதுவரை சாதனையாக இருந்தது. அது இந்த முறை முறியடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், முதலாம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் 622 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஆனால் அதைக் சிக்ஸர்களைக் காட்டிலும் இந்த முறை 250 சிக்ஸர்கள் கூடுதலாக அடிக்கப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com/sports/article24013395.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

 

2018 ஐபிஎல்: சுவாரஸ்ய விஷயங்களும், தெரியாத தகவல்களும்

 

 
ipl%20star

ஆன்ட்ரூ டை, கேஎல் ராகுல், ரிஷாப் பந்த், ராஷித் கான் : கோப்புப்படம்

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் அதிக சதம் அடித்தவர், அதிக அரை சதம் அடித்தவர், சிக்ஸர், பவுண்டரிஅதிகமாக அடித்த வீரர், விக்கெட்டுகள், மெய்டன் எடுத்த பந்துவீச்சாளர் ஆகியோரின் விவரங்கள் வந்துள்ளன.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 51 ஆட்டங்களைக் கொண்ட 11-வதுசீசன் ஐபிஎல் போட்டியில் பல்வேறு சாதனைகளை வீரர்கள் படைத்துள்ளனர்.

 
 

அவை குறித்த விவரம் வருமாறு.

அதிக ரன்: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் 17 போட்டிகளில் பங்கேற்று 735 ரன்கள் சேர்த்ததே தனி ஒருவீரர் சேர்த்த அதிகபட்ச ரன்களாகும். இவர் ஆரஞ்சு தொப்பி வென்றார். 2-ம் இடத்தில் ரிஷாப் பந்த்(684 ரன்கள்), 3-ம் இடத்தில் லோகேஸ் ராகுல் (659 ரன்கள்) உள்ளனர்.

ஒரு ஓவரில் அதிக ரன்: டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 28 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். ஜோஸ் பட்லரும் 28 ரன்கள் சேர்த்துள்ளார்.

அதிக பவுண்டரி: டெல்லி அணி வீரர் ரிஷாப் பந்த் 68 பவுண்டரிகள் அடித்ததே அதிகபட்சமாகும். 2-வது இடத்தில் லோக்கேஸ் ராகுல் (66), வில்லியம்ஸன் (64) 3-ம் இடத்திலும் உள்ளனர்.

அதிக சிக்ஸர்: டெல்லி அணி வீரர் ரிஷாப் பந்த் 37 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாகும். 2-வது இடத்தில் வாட்ஸன் (35), 3-வது இடத்தில் அம்பதி ராயுடு (34) உள்ளார்.

அதிக அரைசதம்: சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன் 8 அரை சதம் அடித்துள்ளார். 2-ம் இடத்தில் கே.எல் ராகுல் (6), டிவில்லியர்ஸ்(6) 3-ம் இடத்திலும் உள்ளனர்.

அதிக சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்ஸன் 2 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.

watsonjpg

ஷேன் வாட்ஸன்

 

விரைவு அரைசதம்: கிங்ஸ் லெவன் வீரர் கே.எல்.ராகுல் டெல்லி அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரை சதம் அடித்ததே அதிவேக அரை சதமாகும்.

விரைவு சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்ஸன் 51 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாகும்.

அதிகபட்ச ஸ்கோர்: டெல்லி வீரர் ரிஷாப் பந்த் 128 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.

சிறந்த ஸ்டிரைக் ரேட்: ராஜஸ்தான் வீரர் கிருஷ்ணப்பா கவுதம் 196.37 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளதே சிறந்ததாகும்.

மிகப்பெரிய சிக்ஸ்: பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் 111 மீட்டர் உயரத்துக்கு அடித்த சிக்ஸரே உயரமான சிக்ஸராகும்.

பந்துவீச்சு

அதிக விக்கெட்: கிங்ஸ்லெவன் வீரர் ஆன்ட்ரூ டை 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாகும்.

அதிக மெய்டன்: சிஎஸ்கே வீரர் லுங்கி இங்கிடி 2 மெய்டன் ஓவர்கள் வீசியதே சிறப்பானதாகும்.

அதிக டாட் பால்: சன் ரைசர்ஸ் வீரர் ராஷித் கான் 17 போட்டிகளில் 68 ஓவர்கள் வீசி 167 டாட்பந்துகளை வீசியுள்ளதே சிறப்பானதாகும்.

சிறந்த எக்கானமி: ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஈஷ் சோதி ஒரு ஓவருக்கு 5.86 ரன்கள் கொடுத்ததே சிறந்த பந்துவீச்சு, எக்கானமி ஆகும்.

அதிக வேகம்: ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர் ஜேப்ரா ஆர்சர் மணிக்கு 152 கி.மீ வேகத்தில் வீசியதே அதிவேக பந்துவீச்சாகும்.

மோசமான பந்துவீச்சு: சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பாசில் தம்பி ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்களில் வீசி 70 ரன்கள் வாரிவழங்கியதே மோசமான பந்துவீச்சாகும். அடுத்த இடத்தில் உமேஷ் யாதவ் (59), ஷிவம் மவி (58) ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

http://tamil.thehindu.com/sports/article24016167.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

வந்தார்கள்.... வென்றார்கள்!: மீண்டு வந்த சிஎஸ்கே அணியின் வெற்றி கதை

 

கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று தொடங்கிய 11-ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது.

மீண்டு வந்த சிஎஸ்கே அணியின் வெற்றி கதைபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, போட்டியின் 19.5 ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை அணி பங்குபெறவில்லை.

அந்த அணியின் வீரர்கள் பிரிக்கப்பட்டு வேறு பல அணிகளில் சேர்க்கப்பட்டனர்.

சிஎஸ்கே மற்றும் தோனிபடத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

அக்காலகட்டத்தில் சிஎஸ்கே அணித்தலைவர் தோனி, ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடினார். மற்ற வீரர்களும் வேறு அணிகளில் விளையாடினர்.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் கோப்பையை வென்ற இனி சிஎஸ்கே அணி விளையாட முடியாதா என்ற ஏக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 10 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

வயதான வீரர்கள் எனும் விமர்சனம்

2018 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 30 வயதை தாண்டிய பல வீரர்களை எடுத்தது. சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் சென்னை அணி குறித்து விமர்சனங்கள் கிளம்பின.

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங் '' எந்த வீரர் நன்றாக விளையாடுவார்; எப்படிச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பதுதான் முக்கியம். அனுபவம் வாய்ந்த வீரர்கள் மட்டுமே தொடர் முழுமைக்கும் உதவுவார்கள். ஆகவே இந்த வருடத்தைப் பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த வீரர்களாகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை கருதியே ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்தோம்'' என முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அணியில் நிறைந்திருக்கிறார்கள் என்ற விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

சிஎஸ்கே மற்றும் தோனிபடத்தின் காப்புரிமைSESHADRI SUKUMAR

முதல் போட்டியில் சென்னை அணியின் வெற்றி அவ்வணியின் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்தது. கடந்த ஆண்டின் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய அப்போட்டியில் சென்னை அணிக்கு வைக்கப்பட்ட இலக்கு 166 ரன்கள்.

15-வது ஓவர் முடிவில் 105 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் பிராவோ தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடினார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசினார். முப்பது பந்துகளில் அவர் எடுத்த 68 ரன்கள் சென்னை அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புக்கான கதவை ஆட்டத்தின் கடைசி நேரத்தில் திறந்துவிட்டது.

முன்னதாக இப்போட்டியில் காயமடைந்து ஓய்வெடுக்கச் சென்றிருந்த கேதர் ஜாதவ் கடைசி கட்டத்தில் மீண்டும் களமிறங்கி அபாரமாக ஒரு பௌண்டரி மற்றும் சிக்ஸரை விளாசி சென்னை அணி மீண்டும் வெற்றியுடன் சீசனைத் துவக்க உதவினார்.

சிஎஸ்கேபடத்தின் காப்புரிமைCSK/TWITTER

சொந்த மண்ணில் முதல் வெற்றி

இரண்டாவது போட்டியில் சென்னை அணி அதன் சொந்த மண்ணில் விளையாடியது. மிகவும் பழைமை வாய்ந்த சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால் காவிரி விவகாரம் தொடர்பாக எழுந்த போராட்டங்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக்கூடாது என சில அமைப்புகள் மற்றும் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. சென்னையில் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் உயர் பாதுகாப்போடு தனது இரண்டாவது போட்டியில் விளையாடியது சென்னை அணி.

மீண்டு வந்த சிஎஸ்கே அணியின் வெற்றி கதைபடத்தின் காப்புரிமைARUN SANKAR

கொல்கத்தாவுக்கு எதிரான அப்போட்டியில் சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு கடைசி மூன்று ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலையில் மீண்டும் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக விளையாடி வென்றது . கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு பந்து மீதம் வைத்து சொந்த மண்ணில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் விளையாடிய முதல் போட்டியில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதல் தோல்வி

பஞ்சாப் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சென்னை கடைசி மூன்று ஓவர்களில் 55 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. சிஎஸ்கே அணித்தலைவர் தோனி சிக்சரும் பௌண்டரியுமாக விளாசினாலும் அவரது அணியால் மூன்று ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது சென்னை. தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் விளாசியிருந்தார். சென்னை அணிக்கு 2018 ஐபிஎல் சீசனில் முதல் தோல்வி இது.

காவிரி போராட்டம்படத்தின் காப்புரிமைARUN SANKAR

'தடை விலகியது; ஆனால், சென்னையில் விளையாடமுடியவில்லை'

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் சென்னை அணிக்கு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் பிளே-ஆஃப் சுற்றில் சென்னை அணி இல்லாமல் இருந்தது.

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு, களத்துக்கு திரும்பிய சிஎஸ்கே அணிக்கு தொடர்ச்சியாக சொந்த மண்ணில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வீரியமடைந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டன.

சொந்த மண்ணில் ரசிகர்கள் புடை சூழ ஆரவாரத்துக்கு மத்தியில் விளையாட முடியாத நிலையில் புனேவுக்கு சென்னையில் இருந்து பிரத்யேக ரயில் மூலம் ரசிகர்களை அழைத்துச் சென்றது சிஎஸ்கே நிர்வாகம்.

'' நாங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் களத்தின் பண்புகளை கொண்டே அணியைத் தேர்வு செய்தோம். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக புனேவில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சொந்த மண் சாதகத்தை பெற வீரர்கள் கூடுதலாக கடினமாக உழைக்க வேண்டியுள்ளது '' என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர்.

புனே மண்ணில் தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது தோனி படை. இப்போட்டியில் ஷேன் வாட்சன் அடித்த சதத்தால் மிக எளிமையாக வென்றது சிஎஸ்கே.

டு பிளசிஸ்படத்தின் காப்புரிமைGALLO IMAGES

பிளே ஆஃபில் 'தனி ஒருவன்' டு பிளசிஸ்

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை அணிக்கு பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை. ஆனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தது. முதலிடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இருந்தது.

பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்துடனான போட்டியில் சென்னை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற 140 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இப்போட்டியில் 97 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. வலுவான ஹைதராபாத் பௌலிங்கை எதிர்கொண்டு 18 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க வேண்டுமென்றநிலையில் டு பிளசிஸ் அதிரடியில் 13 பந்திலேயே 43 ரன்கள் விளாசி சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஷேன் வாட்சன்படத்தின் காப்புரிமைCSK/TWITTER

இறுதிப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை இந்த சீசனில் நான்காவது முறையாக வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இறுதிப்போட்டியில் வாட்சன் விளாசிய பௌண்டரி மற்றும் சிக்ஸர்களில் 19-வது ஓவரிலேயே சிஎஸ்கேவுக்கு கோப்பை சாத்தியமானது.

இந்த சீசனில் சென்னை அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தனர். பேட்டிங்கில் வாட்சன் கைவிட்டால் ராயுடு; ராயுடு அவுட் ஆனால் ரெய்னா; ரெய்னா சொதப்பினால் தோனி; தோனியும் கைவிட்டால் ட்வைன் பிராவோ என பல வீரர்களும் சில போட்டிகளில் சேஸிங்கில் அணியை காப்பாற்றியுள்ளனர்.

பிளே ஆஃப் போட்டியில் ஃபாப் டு பிளாசிஸ் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

''வயதைப் பற்றி நாம் அதிகமாக பேசிவிட்டோம் ஆனால் விஷயம் என்னவெனில் உடல்திறன்தான் முக்கியம்'' என கோப்பையை வென்ற பிறகு தோனி கூறினார்.

'' ஒவ்வொரு சீஸனும் எங்களுக்கு வித்தியாசமாக இருந்துள்ளது; மற்ற அணிகளில் அடிக்கடி வீரர்களை மாற்றினார்கள் நாங்கள் எங்களுடைய முக்கிய வீரர்களை தக்கவைத்தோம். தோனி என்னை நன்றாக கையாண்டார். அணியின் வெற்றிக்கு அணியில் உள்ளவர்களை எப்படி கையாளுகிறோம் என்பது முக்கியம். களத்திற்குச் சென்று விட்டால் அந்தவேலையை தோனி சிறப்பாகச் செய்வார். எனக்கும் அவருக்கும் நம்பிக்கையும் நல்ல உறவும் இருந்தது'' என்றார் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங்.

ரெய்னாபடத்தின் காப்புரிமைMANJUNATH KIRAN

சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசினார்.

'' சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் மற்ற எந்த அணிகளையும் விட ஆட்டத்தில் மிகவும் அழுத்தம் தரும் சூழ்நிலைகளை மிகவும் நன்றாக கையாளுவார்கள். அணிச்சேர்க்கையை ஒவ்வொரு சீசனுக்கும் அவர்கள் பெரிய அளவில் மாற்றுவதில்லை. இதனால் முக்கிய வீரர்களுக்கு இடையே பந்தம் சிறப்பாக உள்ளது. மேலும் அணியில் பேட்டிங் பௌலிங் இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும்விதமாக வீரர்கள் சேர்க்கையை கடைபிடிக்கிறார்கள். சென்னை அணியின் வெற்றி சூட்சமங்களுள் இதுவும் ஒன்று'' என்றார்.

சடகோபன் ரமேஷ்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionசடகோபன் ரமேஷ்

ஐபிஎல் இறுதியாட்டம் பற்றிய பேசிய சடகோபன் ரமேஷ் '' ரஷீத்கானை எப்படி கையாள வேண்டும் என்பதில் சென்னை வீரர்கள் மிகத் தெளிவாக இருந்தார்கள். எந்தக்கட்டத்திலும் அவரது பந்தை விளாச முயற்சிக்கவில்லை. பெரும்பாலும் அவரது ஓவரில் விக்கெட் விழாமல் குறிப்பிடத்தக்க ரன்கள் சேர்த்தால்போதும் எனும் மனநிலையில் இருந்தனர். ரஷீத்கானுக்கு பதிலாக மற்ற பௌலர்களின் ஓவர்களை விளாசித் தள்ளினார்கள். இவை சென்னை அணி ஏற்கனவே தெளிவாக திட்டமிட்டு மிகச்சிறப்பாக செயல்படுத்தியாகத் தெரிகிறது. தெளிவான திட்டமிடலும் செயல்படுத்துதலும் சென்னையின் முக்கிய பலம்'' என்றார்.

தோனிபடத்தின் காப்புரிமை-

''மேலும், சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு 'தோனி காரணி' என்பது முக்கியமானது. வீரர்களை கையாளுதல் மற்றும் போட்டியின் எந்த கட்டத்திலும் அவரது அணுகுமுறை சிறப்பாக இருந்துள்ளது. ஒரு அணியின் கேப்டனின் உடல்மொழி உடைமாற்றும் அறையில் வீரர்களின் மனநிலையில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தும்.

தோனியின் உடல்மொழி மற்றும் அவரது அனுபவம் சிஎஸ்கேவுக்கு கைகொடுக்கிறது. 2017 ஜனவரியில் இருந்து அவர் பெரிய தொடர்கள் எதிலும் அணித்தலைவராக பணிபுரியவில்லை. தனது கேப்டன்சி திறனை மீண்டும் உலகுக்கு உணர்த்த ஒரு வாய்ப்பாகவும் இந்த சீசன் தோனிக்கு அமைந்தது. மேலும் தோனியின் பேட்டிங் இந்த சீசனில் அமர்க்களமாக இருந்தது. அவரது அதிரடி பாணி பழைய நினைவுகளை கிளறியது. பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிலும் தோனி ஜொலித்தார்'' எனக் கூறினார் சடகோபன் ரமேஷ்.

சென்னை அணி ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக 2010, 2011 ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இதுவரை ஒன்பது சீசன்களில் பங்கேற்றுள்ள சிஎஸ்கே ஏழு முறை இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்று மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-44276140

Link to comment
Share on other sites

3 முறை ஐபிஎல் சாம்பியன்; 3 வெவ்வேறு அணிகளில் தொடர்ந்து இடம் பெற்ற வீரர் தெரியுமா?

 

 

 
karn%20shar

இந்திய வீரர் கரண் சர்மா : கோப்புப்படம்

2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை ஐபிஎல் சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற ஒரே முதல் இந்திய வீரர் லெக் ஸ்பென்னர் கரண் சர்மா ஆவார்.

ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஒரே அணியில் இடம் பெற்ற வீரர்கள் சிலர் இருந்தாலும் அந்த அணி தொடர்ந்து மூன்று முறை பட்டம் வென்றதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமட்டுமே தொடர்ந்து 2 முறை பட்டம் வென்றுள்ளது. வேறு எந்த அணியும் தொடர்ந்து பட்டம் வெல்லவில்லை.

 

ஆனால், சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற தொடர்ந்து மூன்று முறை இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் கரண் சர்மா மட்டுமே என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. அந்த அணியிலும் கரண் சர்மா இடம் பெற்று இருந்தார். அதன்பின் அடுத்த ஆண்டு நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், இவர் போன அதிர்ஷ்டம் 2017-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம்வென்றது. அதன்பின் 2018-ம் ஆண்டு நடந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கரண் சர்மா வாங்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற கரணம் சர்மா இந்த முறை 6 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக இறுதிப்போட்டியில் முக்கிய விக்கெட்டான வில்லியம்ஸனை வெளியேற்றியதும், கோஸ்வாமியை ரன் அவுட் செய்ததும் கரண் சர்மா ஆவார்.

கடந்த 3 ஆண்டுகளாக தான் இடம் பெற்றிருந்த அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்று பெருமையுடன் குறிப்பிட்டு, அணிகளின் ஹெல்மெட்டை வைத்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் கரண் சர்மா பதிவிட்டுள்ளார்.

kapng

கரண் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட 3 அணிகளின் ஹெல்மெட்

 

சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த கரண் சர்மா 6 போட்டிகளில் மொத்தம் 9.3 ஓவர்கள் வீசி, 89 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவரின் எக்கானமி 9.39 ஆகும்.

சிஎஸ்கே அணியில் அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங் இருந்தபோதிலும், இறுதிப்போட்டியில் கரண் சர்மாவுக்கு கேப்டன் தோனியும், பயிறச்சியாளர் பிளெம்மிங்கும் வாய்ப்புக் கொடுத்தனர். தனக்கு கிடைத்த வாய்ப்பை கடைசிப் போட்டியில் வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி கரண் சர்மா நிரூபித்தார்.

http://tamil.thehindu.com/sports/article24038272.ece

 

 

சிஎஸ்கேயின் சிறந்த ‘என்டெர்டெய்னர்’ யார்? - விறுவிறு கேள்விகளுக்கு ரெய்னாவின் சுறுசுறு பதில்

 

 

 
raina

ரெய்னா. | படம்- விவேக் பெந்த்ரே.

ஐபிஎல் 2018 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கியப் பங்களிப்பு செய்த சுரேஷ் ரெய்னா ஊடகம் ஒன்றில் சில விரைவு கேள்விகளுகு சுறுசுறுவென பதில் அளித்தார்.

விரைவுக் கேள்விகளும் ரெய்னா பதில்களும் வருமாறு:

 

யார் நல்ல என்டெர்டெய்னர்? - பிராவோ

யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா

யார் அறுவை? - ஒருவரும் இல்லை

யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள்: இந்திய வீரர் இல்லை

எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள்: எல்லாரும்தான்

அணியில் ஜோக்குகள் அதிகம் அடிப்பவர்: ஹர்பஜன் சிங்

சிறந்த பேட்ஸ்மென்: அஃப்கோர்ஸ் எம்.எஸ்.தோனி.

ஐபிஎல் சிறந்த பவுலர்: புவனேஷ்வர் குமார், புத்திகூர்மையான பவுலர்

இவ்வாறு பதிலளித்தார் ரெய்னா.

http://tamil.thehindu.com/sports/article24037833.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் கோப்பையை மீண்டும் ஒருமுறை சென்னைக்கு பெற்றுத் தந்ததில் பெருமை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குதூகலம்

 

 
IMG1208

சிஎஸ்கே அணி வீரர்களுடன் கேப்டன் தோனி மற்றும் பேட்டிங் ஆலோசகர் மைக்கேல் ஹஸ்ஸி.

சென்னைக்கு மீண்டும் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்ததில் பெருமை அடைகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே-ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன், சிஎஸ்கே மீண்டும் மோதும் நிலை ஏற்பட்டது. லீக் சுற்றில் 2 ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்றில் ஒரு ஆட்டம் என அனைத்திலும் சிஎஸ்கே வென்றிருந்ததால் உறுதியுடன் களமிறங்கியது.

 

இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சென்னை அணி வெற்றி கண்டது. ஷேன் வாட்சனின் அதிரடியான சதத்தால் சென்னை அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது.

2010, 2011-ல் கோப்பையை வென்றிருந்த சிஎஸ்கே அணி 2018-ல் மீண்டும் கோப்பையை வென்றதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த திங்கள்கிழமை மாலை சென்னை திரும்பிய தோனி தலைமையிலான அணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வீரர்கள், அவர்களது குடும்பத்தார், உரிமையாளர்கள், அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது. விருந்து நிகழ்ச்சியில் கேப்டன் தோனி பேசியதாவது:

2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. பல்வேறு விஷயங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருந்தது. சென்னை அணியில் 30 வயதுக்கும் அதிகமான வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தனர். சில வீரர்கள் 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதனால் நாம் சிறந்த அணி என்பதை இந்த உலகுக்கு மட்டும் அல்ல நமக்கு நாமே நிரூபிக்கவேண்டிய நிலை இருந்தது.

எனவே லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டோம். நம் அனைவரின் எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும் வகையில் நாக்-அவுட் சுற்றை அடைந்தோம். டி 20 போட்டிகள் என்பது வித்தியாசமானது. நமது அணி சிறந்த பங்களிப்பைத் தரவேண்டும். எதிரணியைச் சேர்ந்த ஒரு பேட்ஸ்மேன் 2 அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடலாம். அதைப் போலத்தான் பந்து வீச்சாளரும் ஆட்டத்தை நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிடலாம். அணியில் உள்ள தனிப்பட்ட வீரர் ஒருவராலும் ஆட்டத்தை வெல்ல முடியும். அப்படி வெல்ல முடியாமல் போனால் நாம் எங்கு தவறு செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

சென்னை அணியில் அதிக வயதான வீரர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்து கவலையளிக்கும் விஷயமாக இருந்தது. அடுத்த ஐபிஎல் போட்டி நடைபெறும்போது நமக்கு இன்னும் ஒரு வயது கூடியிருக்கும். அடுத்த ஓராண்டுக்குள் வீரர்கள் உடற்தகுதியை இப்போது இருப்பது போலவே வைத்துக்கொண்டால் போதுமானது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒளிபரப்பு அருமையாக இருந்தது. அந்த நிறுவனத்துக்கு எனது நன்றி.

இந்தத் தொடரில் பல வீரர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்தது. பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் மனம் தளரக்கூடாது. ஐபிஎல் போட்டியில் சர்வதேச போட்டிக்கான நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் உங்களுக்கு அணியில் நிச்சயம் இடமுண்டு. அப்படி பரிமளிக்காத பட்சத்தில் உங்களது இடத்தை வேறொருவர் நிரப்பிவிடுவார் என்பதை மறக்கக்கூடாது.

கடந்த 2 மாதங்களில் வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களுடன் அடுத்த ஆண்டு போட்டிக்கு வரவேண்டும். பயிற்சியாளர்களிடம் உங்களது திறமைகளை நிரூபித்து விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்க முயலவேண்டும். உங்களை பயிற்சியாளர்கள் மெருகேற்றுவார்கள். கோப்பையை வென்ற அணி என்பதில் நாம் நிச்சயம் மகிழ்ச்சியடையவேண்டும். 2 ஆண்டு தடைக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

சென்னை அணிக்காக அருமையான ஒரு பாடலை டுவைன் பிராவோ உருவாக்கியிருந்தார். அதற்காக அவருக்கு எனது நன்றிகள். அடுத்த முறை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கோப்பையை தக்க வைக்க நாம் முயல்வோம். சென்னைக்கு மீண்டும் கோப்பையை பெற்றுத் தந்ததில் பெருமை அடைகிறோம்.

இவ்வாறு தோனி பேசினார்.

http://tamil.thehindu.com/sports/article24042502.ece

Link to comment
Share on other sites

இடமாற்றத்தை நோக்கி 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி - எங்கு நடத்த வாய்ப்பு?

 

 
IPL-Trophy

கோப்புப்படம்

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை வேறு நாட்டில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. எந்த நாட்டில் நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 11-வது ஐபிஎல் போட்டிகளில் இரு ஐபிஎல் போட்டிகள் வேறு வழியின்றி வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. உள்நாட்டில் தவிர்த்து வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகளை ஐபிஎல் நிர்வாகம் நடத்தும்போது எதிர்பார்த்த வருவாய் இழப்பு அணிகளுக்கும், நிர்வாகத்துக்கும் ஏற்படுவது என்பது இயல்பு.

 
 

ஏனென்றால், உள்நாட்டில் போட்டிகள் நடக்கும் போது, அந்தந்த மாநில அணிகளின் போட்டிகளைக் காண ரசிர்கள் அதிக ஆர்வத்துடன் வருவார்கள், டிக்கெட் விற்பனை அதிகரிக்கும். உதாரணமாக இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் அனைத்தும் காவிரி பிரச்சினை காரணமாக புனேவுக்கு மாற்றப்பட்டது.

 இதனால், சிஎஸ்கே நிர்வாகத்துக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கக்கூடும். ஆனால், சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு இருந்தால், சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைத்திருக்கும்.

இதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்த காரணத்தில் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டன. அதன்பின் 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் காரணமாக துபாய்க்கு பாதி அளவு போட்டிகள் மாற்றப்பட்டன.

இதேபோல 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதிகளோடு, ஐபிஎல் போட்டி நடத்தும் தேதிகளுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடாது என்பதால் போட்டியை வெளிநாட்டில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, துபாயில் வெளியாகும் கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

rajivshukla-mjpg

ராஜீவ் சுக்லா. ஐபிஎல் தலைவர்

 

‘‘2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது ஏதுவாக இருக்காது என நினைக்கிறேன். மக்களவைத் தேர்தல் தேதிகளுக்கும், போட்டியின் தேதிகளுக்கும் மோதல் இருந்தால், பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸார் மறுத்துவிடுவார்கள்.

இதனால், போட்டிகளை வெளிநாட்டில்தான் நடத்த வேண்டிய நிலை இருக்கும். ஏற்கனவே 2009, 2014-ம் ஆண்டுகளில் தேர்தல் தேதிகளோடு, ஐபிஎல் போட்டியின் தேதிகளும் சேர்ந்து வந்ததால், பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மாநில அரசுகளும், மத்திய அரசும் தெரிவித்தன. அதனால்

போட்டியைத் தென் ஆப்பிரிக்காவிலும், துபாயிலும் நடத்தினோம். ஆதலால், இந்த முறையும் அவ்வாறு நேர்ந்தால், வேறுவழியில்லை வெளிநாட்டில்தான் நடத்தவேண்டியது இருக்கும்’’ என சுக்லா தெரிவித்தார்.

ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தால், பெரும்பாலும் துபாயில் நடத்தப்படவே அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதற்கான ஆலோசனையில் ஐபிஎல் நிர்வாகம் ஈடுபட்டுஇருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2009-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் முழுமையாகத் தென் ஆப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் பாதி ஆட்டங்கள் துபாயிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article24067267.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

எதிரணிகளுக்கு ஏராளமான ‘ஹார்ட் அட்டாக்’குகளை கொடுத்தவர் தோனி: கே.எல்.ராகுல் புகழாரம்

 

 

 
kl-rahul-bc

கிங்ஸ்லெவன் அணி வீரர் கே.எல். ராகுல் : கோப்புப்படம்

தனது அதிரடியான ஷாட்கள் மூலமும், சிக்ஸர்கள் மூலமும் எதிரணிகளுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தியவர் தோனி என்று கே.எல்.ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த கே.எல். ராகுல், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய மிகச்சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், 659 ரன்கள் குவித்தார், அதிகமான சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.

   
 
 

கடந்த ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த கே.எல்.ராகுல், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும், ரூ.11.5 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் விலைக்கு வாங்கப்பட்டார்.

சமீபத்தில் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தோனியின் பேட்டிங்கை ரசித்தது குறித்து கே.எல். ராகுல் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்தே தோனி பேட்டிங்கை தொலைக்காட்சியில் விரும்பிப் பார்ப்பேன். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் எதிரணிக்குப் பயத்தை ஏற்படுத்தும். தோனியின் பேட்டிங்கும், அவர் விளையாடி அணியை வெல்ல வைக்கும் காட்சியும் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகப் பார்ப்பதும், ஐபிஎல் போட்டியை அவர் தலைமையிலான அணி வென்றதையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ms-dhonjpg

தோனி

 

தோனியை ஒரு தனி மனிதராகவும், அணியின் கேப்டனாகவும் குறித்து பேசுவதற்குப் பெருமையாக இருக்கிறது. அதிலும் அவர் போட்டிகளில் அடிக்கும் சிக்ஸர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தோனி அடிக்கும் ஷாட்களும், சிக்ஸர்களும் பல நேரங்களில் எதிரணிக்கு ஏராளமான 'ஹார்ட் அட்டாக்' வரவழைத்து இருக்கும். இதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

பெங்களூரு அணியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மாறியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. புதிய கேப்டன் அஸ்வின் நடுநிலையாகச் செல்லக்கூடியவர். தோல்வி அடைந்தாலும், வெற்றி பெற்றாலும் எப்போதுமே நிலை மாறாமல் செயல்படுவார். பந்துவீச்சாளர்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் அஸ்வின் செயல்படுவார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகச்சிறந்த அனுபவமாகவும் அமைந்தது.

கிறிஸ்கெயில் மைதானத்துக்கு வெளியே மிகச்சிறந்த நண்பர், அவருடன் இருந்தால் நேரம் செல்வதே தெரியாது. கெயில் அதிரடியாக ஆடத் தொடங்கிவிட்டால், அன்றைய போட்டியில் வெற்றி உறுதி. இந்த ஆண்டு கெயில் விளையாடிய விதத்தைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

chrisgayle1523873686725x725jpg

கிறிஸ் கெயில்

 

ஒவ்வொரு பந்தையும் வீணடிக்கக் கூடாது, ரன்களைச் சேர்க்க வேண்டும் என்ற பசியோடு இருப்பவர் கெயில். பெங்களூரு அணியில்நான் இருந்ததில் இருந்து கெயிலுடனான நட்பு எனக்குத் தொடர்ந்து வருகிறது. பவர்ப்ளே ஓவரில், கெயிலின் ஆட்டமும், என்னுடைய பேட்டிங்கும் எத்திரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என நினைக்கிறேன்.''

இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article24068862.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • 2 months later...

ஐபிஎல் போட்டி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் வெட்டோரி திடீர் நீக்கம்: புதிய பயிற்சியாளர் நியமனம்

 

 

 

 

DanielVettor

டேனியல் வெட்டோரி

ஐபிஎல் போட்டியில் முக்கியஅணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான டேனியல் வெட்டோரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

வெட்டோரிக்கு பதிலாக, இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்குத் துணை புரிந்த முன்னாள் இந்திய பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு பயிற்சியாளாக வெட்டோரி இருந்துவந்த நிலையில், திடீரென மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த ஆண்டு ஐபிஎல்போட்டிக்கு பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் கொண்டு வரப்பட்டு, இப்போது, அடுத்து ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பெங்களூருஅணி ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. 3 முறை மட்டுமே இறுதி ஆட்டம் வரை வந்துள்ளது. அதிலும் இந்த ஆண்டும், கடந்த ஆண்டும் 6-வது 8-வது இடத்தையே பிடித்தது. மேலும் அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களான மெக்கலம், மனன் வோரா, விராட் கோலி,  டிவில்லியர்ஸ், கறிஸ் வோக்ஸ், பவன் நெகி, வாஷிங்டன் சுந்தர், குயின்டன் டீ காக் உள்ளிட்ட வீரர்கள் இருந்தும் அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதையடுத்து அதிரடியாக பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளார்.

kristenJPG

கேரி கிறிஸ்டன்

 

இதுகுறித்து கேரி கிறிஸ்டன் கூறுகையில், ‘‘தலைமைப் பயிற்சியாளர் வெட்டோரி தலைமையில் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கும் வாய்ப்புப் பெற்றேன். மிகவும் ரசித்து அந்த பணியைச் செய்தேன். பெங்களூரு அணியோடு தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால் சிறப்பாக செய்யக்கூடிய பணியை அணிக்கு வழங்குவேன்.

என்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உயர்த்திய அணி நிர்வாகத்துக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன், அடுத்து வரும் ஆண்டுகள் அணிக்கு வெற்றிகரமாக அமையும்’’ எனத் தெரிவித்தார்.

ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில், ‘‘கடந்த 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணியுடன் நான் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்குச் சிறப்பானது. பெருமைப்படுகிறேன். ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் ஆர்சிபி அணியில் இருந்திருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24822069.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விராட் கோலி நீக்கம்?- ஆர்சிபி அணிக்கு டி வில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்க திட்டம்

 

 
koh%20de

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு, 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டீ வில்லியர்ஸை கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய தகுதி படைத்த அணிகளாகக் கருதப்பட்டது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. ஆனால், 3 முறை இறுதிப்போட்டி வரை சென்றும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. பல நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தும் அந்த அணியால் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்திக்கும் சூழல் இருந்தது.

 
 

இதையடுத்து பெங்களூரு அணியில் புதிய மாற்றங்களை உண்டாக்கும் நோக்கிலும், அடுத்த ஆண்டு சீசனில் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கிலும் பல அதிரடி மாற்றங்களை அணி நிர்வாகம் சமீபத்தில் செய்தது.

அதன்படி சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரியை நீக்கிவிட்டு, இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்குக் காரணமாக இருந்து பயிற்சியளித்த கேரி கிரிஸ்டனை பயிற்சியாளராக நியமித்தது. மேலும், பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், பயிற்சி அதிகாரியாகவும் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட்டார்.

koh%20and%20dejpg
 

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். ஆனால் கோலி தலைமையில் 2016-ம் ஆண்டு மட்டுமே பெங்களூரு அணி இறுதிப்போட்டி வரை சென்றது. மற்றபடி 4 தொடர்களிலும் லீக் சுற்றுகளில் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

 இதனால், அடுத்த சீசனுக்கு கேப்டனை மாற்றிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்கும் மிகப்பெரிய முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக பெங்களூரில் வெளிவரும் நாளேடும், ஆங்கில செய்திச் சேனல் ஒன்றிலும் செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி அடுத்த சீசனுக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும் ஊடகங்களில் வெளியான செய்தியை இதுவரை பெங்களூரு அணி நிர்வாகம் மறுக்கவில்லை.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கிலும் விளையாட, டி வில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் பிஎஸ்எல் லீக் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளதாக டி வில்லியர்ஸ் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/sports/article24901786.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.