Jump to content

Recommended Posts

உதிர்ந்த பூமாலையான பெங்களூரு! ஆர்சிபி கதையை முடித்த வில்லியம்சன், சன்ரைசர்ஸ் பவுலர்கள்

sun%20risers

வெற்றிக்களிப்பில் கேப்டன் வில்லியம்சன் மற்றும் சன் ரைசர்ஸ் வீரர்கள்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஹைதராபாதில் நடைபெற்ற 39வது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சன் ரைசர்ஸ் அணி நிர்ணயித்த குறைந்த ரன் இலக்கான 147 ரன்களையும் எடுக்க முடியாமல் 141/6 என்று தோல்வி அடைந்தது. இதனையடுத்து பிளே ஆஃபுக்கும் தகுதி பெறாமல் வெளியேறும் நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியும் பேட்டிங்கில் பெரும் சொதப்பல்தான், கடைசி 4 ஓவர்களில் 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆனால் என்ன இலக்காக இருந்தாலும் சன் ரைசர்ஸ் பந்து வீச்சு தடுக்கும் திறமை கொண்டுள்ளது, அனுபவ புவனேஷ்வர் குமார், இளம் சித்தார்த் கவுல், புரியாத புதிர் ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான், பந்துகளை தினுசு தினுசாக வீசும் சந்தீப் சர்மா ஆகியோர் ஆர்சிபி-க்கு வெளியேற்ற அச்சுறுத்தலை அளித்துள்ளனர்.

   
 

இரு அணிகளிலும் ஒப்பிடும் போது கேன் வில்லியம்சன் தான் நன்றாக பேட் செய்தார், அவர் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தது வெற்றியைத் தீர்மானித்தது.

மோசமான ஷாட் தேர்வு, ரஷீத் கானின் அற்புத விக்கெட்

விராட் கோலி நன்றாக ஆடிவந்த நிலையில் மோசமான ஷாட் தேர்வு அதைவிட மோசமாக அதை ஆடியதில் வெளியேற திருப்பு முனை ஏற்பட்டது. ஏ.பி.டிவில்லியர்ஸ் ஈகோ இல்லாத வீரர்தான், ஆனால் நேற்று ரஷீத் கான் ஒரு பந்தை கடுமையாக கூக்ளியாக வீசி உள்ளே திருப்பினார், அதில் ஆடிப்போன டிவில்லியர்ஸ், அடுத்த பந்தும் அதே போல் வரும் என்பதை எதிர்பார்த்தாரா இல்லை அப்படி வந்தாலும் ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில்தான் ஆடுவேன் என்று முன் கூட்டியே முடிவெடுத்தாரா என்பது தெரியவில்லை, ரஷீத் கானிடம் பவுல்டு ஆனார்.

bowledjpg

டிவில்லியர்ஸ் பவுல்டு ரஷீத் கான்

 

அடுத்தடுத்து 2 பெரிய விக்கெட்டுகள் ஆர்சிபிக்கு ஆணியறைந்தது, கடைசியில் கொலின் டி கிராண்ட்ஹோம் சில சாட்டையடி ஷாட்களை ஆடி 33 அவுட் என்றாலும் புவனேஷ்வர் குமாரின் கடைசி ஓவர் ஆர்சிபிக்குக் கொஞ்சம் டூமச்தான்.

பிட்சின் இரண்டகத் தன்மையை ஆர்சிபி அணி சரியாகப் புரிந்து கொண்டது, பந்துகள் பிட்சில் நின்று வந்தன, 3வது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ் (5), டிம் சவுதியின் பந்து ஒன்று நின்று வந்தது, உள்ளே வந்தது, கிராஸ் லைனில் ஆட முற்பட்டார் ஹேல்ஸ் பவுல்டு ஆனார். ஷிகர் தவணும் இந்தப் பிட்சில் திணறினார் 19 பந்துகளில் 13 ரன்களை கஷ்டப்படு எடுத்து சிராஜ் பந்தை புல்ஷாட் ஆடும் முயற்சியில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பாண்டே 5 ரன்களில் சாஹலின் நேர் பந்தை கோலிக்கு கேட்சிங் பயிற்சி அளித்து வெளியேறினார். 8.2 ஓவர்களில் 48/3 என்று இருந்த சன் ரைசர்ஸ் அணியை அதன் பிறகு உயர்த்தியது கேன் வில்லியம்சன், ஷாகிப் அல் ஹசன். இருவரும் சேர்ந்து 64 ரன்களைச் சேர்த்தனர். வில்லியம்சன் குறிப்பாக, இத்தகைய இரண்டகத் தன்மை பிட்ச்களில் ஆடுவதை ஒரு கலையாக வளர்த்தெடுத்துள்ளார், அன்று ஜெய்ப்பூரில் இதே மாதிரி பிட்சில்தான் அருமையான 63 ரன்களை அவர் 43 பந்துகளில் எடுத்தார். இடைவெளிகளை நன்றாகப் பயன்படுத்தி ஆடினார், பொறுமை காத்ததுடன் எந்தப் பந்தை எங்கு ஆட வேண்டும் என்பதில் வில்லியம்சனிடம் நேர்த்தி இருந்தது, இதனால்தான் இத்தகைய லாயக்கற்ற பிட்ச்களிலும் கூட அவரால் சிக்கல் இல்லாமல் ஆட முடிகிறது.

5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதுவும் எதிர்கொண்ட கடைசி 9 பந்துகளில் 25 ரன்கள் என்று அதிரடியும் காட்டினார், உமேஷ் யாதவ் பந்தில் டீப் ஸ்கொயர் லெக்கில் மந்தீப் சிங்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த ஐபிஎல்-ல் வில்லியம்சன் அடித்த 5வது அரைசதமாகும் இது. ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களையும் யூசுப் பத்தான் 12 ரன்களையும் எடுக்க வில்லியம்சன் விக்கெட்டோடு கடைசி 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுடன் முடிந்தது சன் ரைசர்ஸ். சவுதி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

60/1 லிருந்து சரிந்த ஆர்சிபி, சன் ரைசர்ஸின் கிடுக்கிப்பிடி பவுலிங்!

பார்த்திவ் படேல் அட்டகாசமான 4 பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 20 ரன்கள் என்று தொடங்கினார், ஆனால் உள்ளே வந்த ஷாகிப் பந்தை ஸ்வீப் ஆட முயன்று கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். மனன் வோராவுக்கு பாவம் பேட்டிங் சரியாக அமையவில்லை, 10 பந்துகளில் 8 ரன்களை அவர் எடுப்பதற்குள் விராட் கோலி, புவனேஷ்வர் குமாரை ஒரு கிளாசிக் பஞ்ச் பவுண்டரியுடன் தொடங்கி சிலபல பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினார்.

ஷாகிப் அல் ஹசனின் ஒரே ஓவரில் இறங்கி வந்து லாங் ஆனில் கொசுவை அடிப்பது போல் ஒரு சிக்சருடன் ஒரு அருமையான ஷார்ட் ஆர்ம் புல், மற்றும் ஒரு எட்ஜ் பவுண்டரி என்று 15 ரன்கள் வாங்கினார். கவுல் பந்தை ஏறி வந்து ஒரே அடி அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார், பிறகு பாயிண்டில் சிங்கிள் தட்டி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகரன்கள் சாதனை வைத்திருந்த சுரேஷ் ரெய்னாவைக் கடந்தார் விராட். மனன் வோரா 8 ரன்களில் சந்தீப் சர்மா பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

kohlijpg
 

இந்நிலையில்தான் ரஷீத் கான் வீச வந்த போது கோலி எட்ஜ் ஆனார், வில்லியம்சன் கையில் வந்த கேட்சை விட்டார், அது பவுண்டரிக்கும் சென்றது, பவுலருக்கு இரட்டை வேதனை!! இது கேட்ச் அல்ல மேட்ச் என்று நினைத்த வேளையில்தான் விராட் கோலி 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த விராட் கோலி ஷாகிப் அல் ஹசன் பந்தை புல் ஆட முயன்றார், ஆனால் பந்து எங்கு சென்றது தெரியுமா? ஷார்ட் தேர்ட்மேனுக்கு. யூசுப் பத்தான் கொஞ்சம் திண்டாடினார் ஏனெனில் கோலி புல் ஷாட் ஆடினால் அது தேர்ட்மேனுக்கு வரும் என்று எந்த பீல்டரும் எதிர்பார்க்க முடியாதுதானே? இதுதான் திருப்பு முனையாயிற்று. டிவில்லியர்ஸ் அடுத்தடுத்த கூக்ளியில் ஒன்றில் பீட் ஆகி அடுத்ததில் பவுல்டு ஆனார். மிக அருமையான பவுலிங், டிவில்லியர்ஸின் கணிப்பையே பொய்யாக்குவது சுலபமல்ல.

மொயின் அலி 10 ரன்களில் சித்தார்த் கவுல் பந்தை புல்ஷாட் ஆட முயன்று மட்டையின் அடி விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பிறகு சந்தீப் சர்மா, ஷாகிப், ரஷீத் கான் ஆகியோர் 4 ஓவர்களில் 23 ரன்களையே கொடுத்தனர். ஆர்சிபிக்கு 24 பந்துகளில் 39 ரன்கள் தேவை. மந்தீப் சிங், கொலின் டி கிராண்ட் ஹோம் கிரீசில் இருந்தனர்.

அப்போதுதான் ரஷீத் கானை 2 சிக்சர்கள் அடித்தார் கிராண்ட்ஹோம், 3 ஓவர்கள் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ்வர் குமார் மிக அருமையான லெக் கட்டர்களால் கட்டிப்போட்டார் 6 ரன்கள்தான் அந்த ஓவரில் வந்தது.

12 பந்துகளில் 19 ரன்கள் என்ற நிலையில் சித்தார்த் கவுல் ஓவரை அடிக்க முடியவில்லை 7 ரன்கள்தான் வந்தது, கடைசி ஓவரில் 12 ரன்கள், வெற்றி பெற வாய்ப்பிருந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் அதியற்புதமான கடைசி ஓவரை வீசினார். பவுண்டரியே கொடுக்கவில்லை, கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில் புவனேஷ்வர் குமாரின் துல்லியத் தாக்குதல் யார்க்கரில் பவுல்டு ஆனார். மந்தீப் சிங் 21 நாட் அவுட். கிராண்ட்ஹோம் 33. சன் ரைசர்ஸ் பவுலிங்கில் மொத்தம் 45 டாட் பால்கள். ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். ரஷீத் கான் டிவில்லியர்ஸ் என்ற அற்புத விக்கெட்டுடன் 4 ஓவர்களில் 31 ரன்கள். அது கிராண்ட் ஹோம் அடித்த 2 சிக்சர்களினால் இவர் அனாலிசிஸ் கொஞ்சம் ஆட்டம் கண்டது. 141/6 என்று முடிந்தது ஆர்சிபி.

ஆட்ட நாயகனாக கடினமான பிட்சில் பிரமாதமாக ஆடிய கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article23809329.ece

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

எங்கள் கதை இப்படி... அவர்கள் கதை அப்படி: தோல்விக்குப் பிறகு விராட் கோலி

 

 
kohlijpg

படம். | பிடிஐ.

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணிக்கு எவ்வளவோ வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார், ஆனால் ஆர்சிபி கேப்டனாக 147 ரன்களை கூட விரட்டல் மன்னனால் விரட்ட முடியவில்லை, இது போன்று எத்தனையோ தோல்விகள் ஐபிஎல்-ல் சந்தித்து வருகிறார் விராட் கோலி.

இந்நிலையில் நேற்றும் தோற்க முடியாத ஒரு போட்டியில் ஆர்சிபி அணி சன் ரைசர்ஸின் கட்டுக்கோப்புக்கு இரையாகி இலையுதிர்ந்தது.

 

ஆட்டம் முடிந்து விரக்தியின் பிடியில் இருந்த விராட் கோலி கூறியதாவது:

அப்படித்தான் இந்த ஆட்டம் சென்றது. சரியல்ல, தரநிலைக்கு உகந்ததாக இல்லை. தோற்கத் தகுதியானவர்கள்தான் நாங்கள், போதுமான அளவில் முனைப்புடன் ஆடவில்லை.

நாங்கள் தேர்வு செய்த ஷாட்கள் ஆட்டத்தின் அந்தக் கட்டத்தில் தேவையற்றது.  மந்தீப் சிங், கொலின் டிகிராண்ட்ஹோம் நின்றால் வெற்றி வாய்ப்பு உண்டு என்று ஆடினர்.  இந்த சீசனில் எங்கள் கதை இப்படி.

பீல்டிங்கில் நன்றாக செயல்பட்டோம். அழுத்தமான தருணங்களில் சிறப்பாக ஆடும் வீரர்கள் சன் ரைசர்ஸில் உள்ளனர்.  இந்த சீசனில் அவர்கள் கதை அப்படி.

அவர்கள் தங்கள் வலுவையும் அறிந்துள்ளனர், வரம்புகளையும் அறிந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் வெற்றிகரமாகத் திகழ்கின்றனர். சன் ரைசர்ஸ் பவுலிங்கில் மிகச்சிறந்த அணியாக உள்ளது, ஒட்டுமொத்தமாக கிங்ஸ் லெவன் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைக் குறிப்பிடலாம்.

http://tamil.thehindu.com/sports/article23809689.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கேற்ற கொண்டை என்பதுபோல் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் சிக்ஸ் எல்லாம் அடித்து வான வேடிக்கை காட்டவேணும் என்று நினைப்பதில்லை. நமக்கு போர் நல்லா போனால் போதும் என்று அடக்கத்துடன் விளையாடுகின்றார்கள். "அடக்கம் அமரருள் உய்க்கும்" . சியர்ஸ் டூ ஹைதராபாத்.....!  ?

Link to comment
Share on other sites

மேஜிக்கல் முஜீப்: அசத்தும் 17 வயது ஆப்கான் லெக் ஸ்பின்னர்

 
 
TH08MUJEEBjpg

முஜீப் உர் ரஹ்மான். | படம்: விவேக் பெந்த்ரே

நடப்பு ஐபில் தொடரில் சன் ரைசர்ஸின் ரஷீத் கான், கிங்ஸ் லெவன் அணியின் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் பந்து வீச்சு நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர்.

அதுவும் 17 வயது முஜீப் உர் ரஹ்மான் பெரிய வீரர்களையெல்லாம் தன் புதிர் ஸ்பின்னினால் திணறடித்து வருவது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கே ஒரு புதிய வண்ணத்தைச் சேர்த்துள்ளது.

 

போரும், பயங்கரவாதமும், தாலிபனீயமும் தலைவிரித்தாடும் ஒரு ஏழை நாட்டிலிருந்து ஐபிஎல் ஏலத்தில் ரூ.4 கோடிக்கு எடுக்கப்பட்ட முஜீப் ஒரு இளம் ஹீரோவாக ஆப்கன் ரசிகர்களுக்கு மாறியுள்ளார்.

இதுவரை ஸ்பின்னர்கள் பந்துகளை எப்படித் திருப்புவார்களோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பந்துகளை திருப்புவதால்தான் அவரை எளிதில் கணிக்க முடியவில்லை என்று ஏற்கெனவே கிரிக்கெட் பண்டிதர்கள் இவரை விதந்தோதி வருகின்றனர்.

இந்நிலையில் முதல் தர கிரிக்கெட்டில் 344 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கே.என்.அனந்தபத்மநாபன் என்ற தற்போதைய ஐபிஎல் நடுவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “மணிக்கட்டு மூலம் அல்லாமல் விரல்களைப் பயன்படுத்தி முஜீப் வீசும் லெக்ஸ்பின் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இவரைப்போன்ற இன்னொரு பவுலர் இல்லை என்றே கூற வேண்டும்” என்று பாராட்டினார்.

17,000 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ள உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களின் ஒருவராகத் திகழும் இந்திய கேப்டன் விராட் கோலியையே முஜிப் உர் ரஹ்மான் அன்று திகைக்கவைத்தார். விராட் கோலியின் மட்டைக்கும் கால்காப்புக்கு இடையே புகுந்து ஸ்டம்பைத் தாக்கும் கூக்ளியை வீசினார் முஜீப். ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஞாயிறன்று இவரது பந்து வீச்சில் திகைத்தார்.

ராஜஸ்தான் ராயல்சின் 3 விக்கெட்டுகளை 4 பந்துகளில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

எந்த நிலையிலும் வீசுகிறார், அன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை தைரியமாக வீசினார் இந்த 17 வயது முஜீப். 12 ரன்களைத்தான் விட்டுக் கொடுத்தார்.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் ஹராரே மைதானத்தில் 4 விக்கெட்டுகளை 43 ரன்களுக்கு எடுத்து மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தார் முஜீப்.

எனவே ஆப்கான் அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்று முதல் டெஸ்ட்டில் ஆடும்போது ரஷீத் கான், முஜீப் இருவரும் ஆடினால் அது இந்திய பேட்ஸ்மென்களுக்கும் ஸ்பின் பிட்சில் பிரச்சினைதான், வலுவான இந்திய பேட்டிங்கை இந்திய பிட்சில் இவர்கள் இருவரும் எதிர்கொள்வதும் ஒரு கற்றல் முயற்சிதான்.

http://tamil.thehindu.com/sports/article23810164.ece

Link to comment
Share on other sites

குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறுவது எப்படி?

 

நடப்பு ஐபிஎல் தொடரில் சராசரி ரன்கள் மட்டுமே அடித்து எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி வெற்றி வாகைசூடுவது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. #IPL2018 #SRH #SunRisersHyderabad

 
குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறுவது எப்படி?
 
 
நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. முன்னணி வீரர்கள் என அனியில் பெரிதாக யாரும் இல்லை. தடை காரணமாக வார்னர் விளையாட முடியாத சூழல். நட்சத்திர வீரராக உள்ள தவான், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மணிஷ் பாண்டே ஆகியோரும் பெரிதாக ஜொலிக்கவில்லை.
 
மொத்தத்தில் அணியின் பேட்ஸ்மேன்கள் இதுவரை தங்களது திறமையை வெளிக்காட்டாமலேயே உள்ளனர். இதனால், அந்த அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் சராசரி ரன்களையே எடுத்து வருகிறது. ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் 130 முதல் 150 ரன்கள் வரை மட்டுமே எடுத்துள்ளது.
 
பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான இரு சேசிங் ஆட்டங்களிலும் மட்டுமே அந்த அணி 170 ரன்களை தாண்டியுள்ளது. ஆனால், அந்த இரு போட்டிகளிலுமே ஐதராபாத் தோல்வியடைந்தது. மற்ற சேசிங் போட்டிகளிலும் எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டிவிடுவதால் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அழுத்தம் இல்லை. இதனால், மிக எளிதாகவே பல ஆட்டங்களை அந்த அணி வென்றுள்ளது.
 
201805080933177729_1_srhh._L_styvpf.jpg
 
பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை பொறுத்த வரை மிகவும் வலுவாக அந்த அணி இருப்பதனாலே பிளே-ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. எதிரணியில் உள்ள முக்கிய வீரர்களின் விக்கெட்டை விரைவில் காலி செய்வதினால், அந்த அணியை குறைந்த ரன்களில் சுருட்ட முடிகிறது. திட்டமிடப்பட்ட நேர்த்தியான பந்துவீச்சு மட்டுமே இதற்கு காரணம்.
 
15 ஓவர்களுக்கு பிறகு எந்த அணியும் அதிரடியாக விளையாட தொடங்கிவிடும். எனவே, கடைசி 5 ஓவர்களில் பந்துவீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி இருக்கும். ஆனால், ஐதராபாத் அணி பவுலர்கள் இந்த கடைசி கட்ட ஓவர்களில் தான் மிகச்சிறப்பாக பந்து வீசுகின்றனர்.
 
புவனேஷ்வர் குமார், ரஷித் கான், சித்தார்த் கவுல், யூசுப் பதான் ஆகியோர் ஒவ்வொரு ஆட்டத்திலும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். “ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவது சிறப்பான ஒன்றாக உள்ளது. ஆனாலும் பலமுறை கடின முயற்சிகளுக்கு பின்னரே அது கிடைத்துள்ளது. எங்களது பந்துவீச்சு அபாரமான ஒன்றாக உள்ளது, பீல்டிங்கும் கூட” என ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
 
201805080933177729_2_srh3._L_styvpf.jpg
 
2016-ம் ஆண்டு ஐதராபாத் அணி சாம்பியன் அணியான ஐதராபாத், இதேபோல, சிறப்பான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக இம்முறை சாம்பியன் கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர். #IPL2018 #SRH #SunRisersHyderabad

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/08093317/1161591/SunRisers-Hyderabad-Performance-got-appreciated-by.vpf

 

 

ஐபிஎல் கிரிக்கெட்- பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?

 

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

 
ஐபிஎல் கிரிக்கெட்- பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?
 
ஜெய்ப்பூர்:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. இந்தூரில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி ஆகியோர் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி செயல்படவில்லை. கடந்த லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 51 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் 28 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கிருஷ்ணப்பா கவுதம், ஜெய்தேவ் உனட்கட், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

ஆர்.அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் பஞ்சாப் அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

பஞ்சாப் அணி பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், கெய்லை அதிகம் நம்பி இருக்கிறது. மயங்க் அகர்வால், கருண்நாயர், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முஜீப் ரகுமான், ஆன்ட்ரூ டை ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோல்வி கண்டால் ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பட்டு போய்விடும். எனவே ராஜஸ்தான் அணி முந்தைய தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் போராடும். பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றம் காண முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும், பஞ்சாப் அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன. #IPL2018 #RR #KXIP 

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/08081720/1161578/kings-xi-punjab-vs-rajasthan-royals-match-on-today.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #IPL2018 #RRvKXIP

 
ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு
 
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் ராஜஸ்தான் ராயல் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 18 வயதான மஹிபால் லாம்ரோர் அறிமுகமாகியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஜோஸ் பட்லர், 2. ரகானே, 3. சஞ்சு சாம்சன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ஸ்டூவர்ட் பின்னி, 6. மஹிபால் லாம்ரோர், 7. ஜாப்ரா ஆர்சர், 8. கிருஷ்ணப்பா கவுதம், 9. ஜெய்தேவ் உனத்கட், 10. இஷ் சோதி, 11. அனுரீத் சிங்.

201805081949347669_1_lomror001-s._L_styvpf.jpg

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. லோகேஷ் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. அக்‌ஷ்திப் நாத், 4. கருண் நாயர், 5. அக்சார் பட்டேல், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. மனோஜ் திவாரி, 8. அஸ்வின், 9. அன்ட்ரிவ் டை, 10. மோகித் சர்மா, 11. முஜீப் உர் ரஹ்மான்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/08194934/1161745/IPL-2018-rajasthan-royal-bat-first-against-Kings-XI.vpf

65/2 * (6.4/20 ov)
Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvKXIP

 
ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
 
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 18 வயதான மஹிபால் லாம்ரோர் அறிமுகமானார்.

அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னில் வெளியேறினார்.

201805082142213443_1_KXIP-s._L_styvpf.jpg

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பட்லர் அதிரடியாக விளையாடி 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

201805082142213443_2_tye-s._L_styvpf.jpg

இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
 
 
29/3 *
Link to comment
Share on other sites

ஸ்மைல் ப்ளீஸ் கோலி: மேலும் ஓர் ஆட்டத்தில் தோற்றாலும் ஆர்சிபி-யால் பிளேஆஃப்-புக்குச் செல்ல முடியும்!

 

 
kohli_new818181

 

நேற்றும் சோகமாக இருந்தார் விராட் கோலி. ஹைதராபாத்திடமும் தோற்றுப்போனதால் இனிமேல் பெங்களூர் அணியால் 16 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாது என்கிற நிலை. 14 புள்ளிகள் இருந்தாலும் நெட்ரன்ரேட் உதவவேண்டும். இப்படியொரு சிக்கலான நிலையில் அவரால் மட்டும் எப்படி உற்சாகமாக இருக்கமுடியும்? 

நேற்றைய ஆட்டத்தில், பெங்களூரு அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றது. டாஸ் வென்ற பெங்களூரு பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 146 ரன்களையே எடுக்க முடிந்தது. பெங்களூரு தரப்பில் சிராஜ் அபராமாக பந்துவீசி 3 விக்கெட்டையும், டிம் செளதி 2 விக்கெட்டையும், உமேஷ், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டையும், ரஷீத்கான், கெளல், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் அடிப்படையில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ஹைதராபாத். ஆனால், 6 புள்ளிகளுடன் பரிதாபமான நிலையில் உள்ளது பெங்களூர். இனிமேல் பிளேஆஃப் வாய்ப்பில்லை என்று சோகமாக உள்ளார் ஆர்சிபி ரசிகர்கள்.

ஆனால், அவர்களின் சோகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது ஒரு கணக்கு. 

ஒரு ரசிகர், பெங்களூருக்குச் சாதகமான பிளேஆஃப் சாத்தியக்கூறுகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதன்படி முடிவுகள் அமைந்தால், மீதமுள்ள நான்கு ஆட்டங்களில் பெங்களூர் வென்றாலே போதும்... 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்கு நேரடியாகத் தகுதி பெறமுடியும். அட, வேண்டுமானால் மேலும் ஓர் ஆட்டத்தில்கூட கோலி அணி தோற்றுக்கொள்ளட்டும். அப்போதும் நெட்ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் அணியால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும் என்கிறது அந்தக் கணக்கு. எப்படி என்று பார்க்கலாம்.

மீதமுள்ள போட்டிகளின் முடிவுகள் இவ்வாறு அமையவேண்டும்:

மே 8: பஞ்சாப் - ராஜஸ்தான் = பஞ்சாப் வெற்றி 
மே 9: கொல்கத்தா - மும்பை = மும்பை 
மே 10: தில்லி - ஹைதராபாத் = ஹைதராபாத் 
மே 11: ராஜஸ்தான் - சென்னை = சென்னை 
மே 12: பஞ்சாப் - கொல்கத்தா = பஞ்சாப் 
மே 12: தில்லி - பெங்களூர் = பெங்களூர் 
மே 13: சென்னை - ஹைதராபாத் = ஹைதராபாத் 
மே 13: மும்பை - ராஜஸ்தான் = மும்பை
மே 14: பஞ்சாப் - பெங்களூர் = பெங்களூர் 
மே 15: கொல்கத்தா - ராஜஸ்தான் = கொல்கத்தா 
மே 16: மும்பை - பஞ்சாப் = பஞ்சாப்
மே 17: பெங்களூர் - ஹைதராபாத் = பெங்களூர் 
மே 18: தில்லி - சென்னை = சென்னை
மே 19: ராஜஸ்தான் - பெங்களூர் = பெங்களூர் 
மே 19: ஹைதராபாத் - கொல்கத்தா = ஹைதராபாத் 
மே 20: தில்லி - மும்பை = தில்லி 
மே 20: சென்னை - பஞ்சாப் = சென்னை

இந்த முடிவுகளின்படி அணிகள் கடைசியாக புள்ளிகள் பட்டியலில் இவ்வாறு அமையும்: 

ஹைதராபாத் - 22 புள்ளிகள்
சென்னை - 20 புள்ளிகள்
பஞ்சாப் - 18 புள்ளிகள்
பெங்களூர் - 14 புள்ளிகள்
மும்பை - 12 புள்ளிகள்
கொல்கத்தா - 12 புள்ளிகள்
தில்லி - 8 புள்ளிகள்
ராஜஸ்தான் - 6 புள்ளிகள்

அதாவது இதன்படி நெட்ரன்ரேட் பிரச்னை எதுவும் இல்லாமல் ஜம்மென்று பிளேஆஃப்-புக்கு நேரடியாகச் செல்லலாம் ஆர்சிபி. 

வேண்டுமானாலும் ஓர் ஆட்டத்தில் தோற்றுக்கொள்ளட்டும். அப்போதும் 12 புள்ளிகளுடன் நெட்ரன்ரேட் உதவியுடன் பிளேஆஃப்-புக்குச் செல்ல முடியும். 

இந்தக் கணக்கை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதை ஆர்சிபி ட்விட்டர் கணக்கு லைக் செய்துள்ளதால் பலருக்கும் இதுகுறித்து தெரியவந்துள்ளது.

ஆக... ஸ்மைல் ப்ளீஸ் கோலி. இன்னமும் வாய்ப்புள்ளது. கடைசிவரை போராடவும்.

IPL3.jpg

http://www.dinamani.com/sports/special/2018/may/08/die-hard-rcb-fans-tweet-explaining-teams-playoffs-qualification-scenario-2915772.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனுக்கு உதவி செய்வது தான் மிகப்பெரிய தானம்?

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvKXIP

 
ஐபிஎல் 2018- 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
 
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
ரகானே 9 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து அவுட்டானார்.
 
சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
 
201805090016474680_1_rahul-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, 159 ரன்களை இலக்காக கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர்.
 
ஆனால் ராஜஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பஞ்சாப் அணியினர் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.
லோகேஷ் ராகுல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். மற்றவர்கள் அனைவரும் விரைவில் அவுட்டாகினர்.
 
இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோற்றது. ராகுல் 95 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
 
ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், சோதி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ஜோஸ் பட்லருக்கு வழங்கப்பட்டது.
 #IPL2018 #RRvKXIP

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/08234802/1161772/rajasthan-royals-beat-kings-XI-punjab-by-15-runs.vpf

Link to comment
Share on other sites

ஆரஞ்சு தொப்பியை ராகுல் வென்றதைத் தவிர வெற்றிக்கான முயற்சியே இல்லாத ஆட்டத்தில் பஞ்சாப் தோல்வி

 

 
rahul1

ராகுல். | ஏ.எஃப்.பி.

ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ம் 40வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 158/8 என்று எடுக்க, தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராகுல் 95 நாட் அவுட் என்ற போதிலும் 143/7 என்று தோல்வி அடைந்தது.

போராடித் தோல்வியடைந்தது கிங்ஸ் லெவன்... அதாவது வெற்றி பெறப் போராடித் தோல்வி தழுவவில்லை, எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இலக்கை தோற்க வேண்டுமென்றால் அதற்கும் போராடத்தானே வேண்டும். ஆகவே “போராடித் தோல்வி” என்ற சொற்றொடரில் இருவேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன. 1. வெற்றி பெற போராடித் தோல்வியடைவது, 2. தோல்வி பெறவே போராடுவது. இந்த புதிய அர்த்தங்களையெல்லாம் நமக்கு வெளிப்படுத்தும் ஒரு போட்டித் தொடர்தான் ஐபிஎல் கிரிக்கெட். நேற்றைய ஆட்டம் இந்த உணர்வைத்தான் ஏற்படுத்தியது.

 

ஏனெனில் ஓவருக்கு 9-10 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து 14-15 ரன்கள் தேவை என்ற நிலையிலும் கூட கவலைப்படாமல், சிக்ஸ், பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளையும் ஒன்று ,இரண்டு என்று எடுப்பதற்கும் போராட்ட குணம் தேவை அல்லவா? களத்தில் இப்படி ஆடிக்கொண்டிருக்க அங்கு கிங்ஸ் லெவன் இடத்தில் ஒரு உணர்வு கூட காட்டவில்லை. சேவாக், அஸ்வின் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லாம் முன்னேற்பாடுதான் போலும். இவ்வளவு டிஆர்பி ரேட்டிங், 24000-25000 பார்வையாளர்களுக்கு என்ன கிடைக்கிறது? ஏமாற்று வேலையினால் கிடைக்கும் ஏமாற்றத்தைத் தவிர. இவையெல்லாம் வேறு ஒரு கணக்கீட்டில் நடக்கின்றன, அதன் தர்க்கங்கள் நம் அறிவுக்கு எட்டாதவை(?!)

ராகுல் 95 ரன்களைத் தவிர மற்ற ஸ்கோர்கள் இதோ: 1,0,3,9,7,9,11,1.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லர் 82 தவிர மற்றவர்கள் ஸ்கோர் இதோ: 9, 8, 22, 14, 11, 9, 0, 0

கிங்ஸ் லெவன் பஞ்சாப் பவுலிங்கில் 37 டாட் பால்கள்.

ராஜஸ்தான் பவுலிங்கில் 44 டாட் பால்கள். இது போன்ற விவரங்களைத் தவிர இத்தகைய ஆட்டங்களில் பேச என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

தேவையற்ற மாற்றங்கள் தேவையற்ற முயற்சிகள்:

ராகுல் திரிபாதி கடந்த ஐபிஎல் போட்டியில் தொடக்க வீரராக இறங்கி வெளுத்துக் கட்டியவர் ஓவருக்கு 10 ரன்கள் என்பது அவரது பவர் பிளே சராசரியாகும். ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் அவரை நடுக்களத்தில் இறக்கி அஜெண்டா போட்டு அவரைக் காலி செய்தனர், கடைசியில் நேற்று அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். வீரரை எப்படி அழிப்பது என்பதை ஐபிஎல் அணிகளிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். நேற்று டி ஆர்க்கி ஷார்ட்டையும் அணியில் எடுக்காததால் ராயல்ஸ் பேட்டிங் ரஹானே, பட்லர், சாம்சன், ஸ்டோக்ஸ் என்பதாகக் குறுகியது. ஸ்டுவர்ட் பின்னி, மஹிபால் லொம்ரோர் பற்றியெல்லாம் பேச என்ன இருக்கிறது? ஏன் இந்த மாற்றங்கள்? (உஷ்! கேக்காதீங்க) மேலும் கே.கவுதமை 3ம் நிலையில் இறக்கி அவர் 8 பந்துகளில் 6 ரன்களில் வெளியேறினார்.

அதே போல் அஸ்வின் கிங்ஸ் லெவன் பேட்டிங்கில் 3ம் நிலையில் இறங்கியது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை?! கவுதம் வீசிய மிகவும் ஒரு பழையபாணி ஆஃப் பிரேக்கில் அசிங்கமாக மட்டையை சுழற்றி பவுல்டு ஆனார். ஏன் இவருக்கு இது? மீண்டும் இந்திய ஒருநாள், டி20 அணிகளில் ஓரங்கட்டப்படுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் செய்வது போல்தான் இருக்கிறது. மயங் அகர்வாலை உட்கார வைத்தார். கருண் நாயரை இறக்கியிருக்கலாம், அல்லது புதிய வீரர் ஆகாஷ்தீப் நாத், மனோஜ் திவாரி, ஸ்டாய்னிஸ் என்று யாரை வேண்டுமானாலும் இறக்கியிருக்கலாம். ஆனால் அஸ்வின் இறங்கியதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே போல் ஸ்டாய்னிஸ் களமிறங்கும் போது ஏறக்குறைய பஞ்சாப் தோல்வியை உறுதி செய்திருந்தது. இப்படி ஏகப்பட்ட உஷ் கண்டுக்காதீங்க தருணங்களுடன் ஒரு போட்டி நடந்தேறியது.

பட்லருக்கு நன்றாகப் போட்டுக் கொடுத்ததில் ஸ்டாய்னிஸின் முதல் ஓவரிலேயெ 11 ரன்கள், அடுத்த ஓவர் அக்சர் படேல், புதிய பந்தில் அக்சர் படேல் வீசி எங்காவது பார்த்திருக்கிறோமா? அக்சர் படேல் ஓவரில் 14 ரன்கள். அங்கிட் ராஜ்புத் அணியில் இல்லை. அடுத்த ஓவரில் மோஹித் சர்மா 10 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஓவர் ஆண்ட்ரூ டை. 4 ஓவர்களில் 4 பவுலர்கள், இதுதான் அஸ்வின் கேப்டன்சி, கடைசியி டை தான் விக்கெட் எடுத்தார். ரஹானே லெக் திசையில் அடிக்க ஆஃப் திசையில் கேட்ச் ஆனது. மீண்டும் மோஹித் சர்மா ஓவரில் கவுதம் சிக்ஸ் பட்லர் பவுண்டரியுடன் 14 ரன்கள். அடுத்த டை ஓவரில் 11 ரன்கள், பவர் பிளேயில் பட்லர் 22 பந்துகளில் 45 நாட் அவுட். ராஜஸ்தான் 6 ஓவர்களில் 63/1. 27 பந்துகளில் பட்லர் அரைசதம் எடுத்தார். அதன் பிறகு 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

கடந்த போட்டியில் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆட்ட நாயகன் மேஜிக் முஜிபுர் இம்முறையும் சாம்சன், பட்லர் ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை கடைசி ஓவரில் வீழ்த்த ராயல்ஸ் 158/8 என்று முடிந்தது. 10 ஓவர்களில் 82/2 என்று இருந்த ராயல்ஸ், இப்படியாக மடிந்தது.

ஆண்ட்ரூ டை 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணியில் கிறிஸ் கெய்ல் நின்ற இடத்திலிருந்தே மைதானத்துக்கு வெளியே அடிக்கும் திறமை கொண்டவர் எதற்காக அப்படி குடுகுடுவென்று இறங்கி வந்து ஸ்டம்ப்டு ஆனார் என்பது புரியாத புதிர். அஸ்வின் தன்னை முன்னால் 3ம் நிலையில் இறக்கிக் கொண்டு டக் அவுட் ஆனார், இதனால் கருண் நாயர் தேவையில்லாமல் ஜோஃப்ரா ஆர்ச்சரை சுற்றி கேட்ச் ஆக 19/3 என்று ஆனது கிங்ஸ் லெவன். ஆகாஷ் தீப் நாத் (9), மனோஜ் திவாரி (7)அக்சர் படேல் (9) (இவர் ஸ்டாய்னிஸுக்கு முன்னால் இறக்கப்படுகிறார்?!), ஸ்டாய்னிஸ் 11 என்று ஒரு புறம் சொதப்ப கே.எல்.ராகுல் 70 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 95 நாட் அவுட். இந்த இன்னிங்ஸின் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள யேல் பல்கலைக் கழகமும் போதாத ஆய்வுப்படிப்பு நமக்குத் தேவை. வெற்றிக்கான ரன் விகிதம் 12 ரன்கள் ஆன போது கூட இவரும் சரி, ஸ்டாய்னிஸும் சரி பவுண்டரி அடிக்க முயற்சி கூட செய்யவில்லை. கடைசியில் உனாட்கட்டை ரிவர்ஸ் ஸ்வீப்பெல்லாம் ஆடினார். 66-லிருந்து 95 ஆக அவர் ஸ்கோர் உயர்ந்ததோடு சரி, இந்தத் தொடரில் 471 ரன்களுடன் ஆரஞ்சுத் தொப்பியை ராயுடுவிடமிருந்து பறித்தார். கிங்ஸ் லெவன் 143/7 என்று முடிந்தது. ஆட்ட நாயகன் ஜோஸ் பட்லராம்.

http://tamil.thehindu.com/sports/article23820689.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தமான பித்தலாட்டம்.......!  ?

(அவுட்டானதுக்கு அப்புறம் கெய்ல் கண்ணிலேயே (காமராவிலேயே) படவில்லை).

Link to comment
Share on other sites

கோலி திணறுகிறார்... தோனி பதுங்குகிறார்... முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம்!

 
 

ப்கானிஸ்தானில் இருந்து வந்து ஒருவன் இந்தியாவுக்கு சுழற்பந்து சொல்லிக்கொடுப்பான் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பெயருக்குத்தான் லெக் ஸ்பின்னர். கூக்ளி, கேரம் பால், ஆஃப் ஸ்பின் என சுழற்பந்தின் 360 டிகிரியிலும் பந்துவீசுகிறான் இந்த 17 வயது பொடியன் முஜீப் உர் ரஹ்மான்!

முஜீப்

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் தொடரின் ஆகச்சிறந்த பௌலர்களாக, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவர் இருப்பார்கள் என யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருப்போமா? ரஷித் கானும், முஜீப் உர் ரஹ்மானும் அப்படித்தான் இருக்கிறார்கள் என ட்வீட் செய்திருந்தார் ஹர்ஷா போக்ளே. உண்மையில் யாருமே கணிக்காத ஒரு விஷயம் இது. 2018 ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்சேஷன் இந்த முஜீப் உர் ரஹ்மான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் இவர், இதுவரையிலான 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். பெரும்பாலானோர் மணிக்கட்டைப் பயன்படுத்திதான் கூக்ளி வீசுவார்கள். ஆனால், முஜீப் விரல்களில் பவர் கொடுத்து கூக்ளி வீசுகிறார். லெக் ஸ்பின் என்பது (வலது கை பேட்ஸ்மேனுக்கு) ஸ்டம்புகளுக்கு நேராக பிட்ச்சாகி வெளியே செல்வது. ஆனால், ஸ்டம்புகளுக்கு நேராக பிட்ச்சாகி வெளியேபோவது போல இருந்து, அது ஸ்டம்ப்பை நோக்கி திரும்பினால் அது கூக்ளி. 17 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலியால் கூட முஜீப்பின் கூக்ளியை கணிக்க முடியவில்லை. பிட்ச்சில் பட்டு ஸ்டம்ப்பைவிட்டு வெளியேபோகும் என கோலி நினைக்க, நேராக உள்ளே வந்து மிடில் ஸ்டம்ப்பை வீழ்த்தியது அந்த பந்து. முஜீப் நிகழ்த்திய மேஜிக் அது. 

யூடியூப் கற்றுத்தந்த சுழல் வித்தை!

5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் முஜீப் கிரிக்கெட்டே ஆட ஆரம்பித்தார் என்றால் நம்ப முடியுமா? `யூடியூப்பில் அஷ்வின், சுனில் நரேன், அஜந்தா மென்டீஸ் பெளலிங்கைப் பார்த்துதான் கேரம் பால் போடக்கற்றுக்கொண்டேன்’ என்கிறார் முஜீப். விரல்களால் கிரிக்கெட் பந்தை ஃப்ளிக் செய்யவேண்டுமென்றால் அதற்கு விரல்களில் அதீத பவர் வேண்டும். பல மணி நேர இடைவிடா பயிற்சி வேண்டும். இரண்டையும் கச்சிதமாக செய்ததால்தான் உலக அரங்கில் வந்து மிரட்டலாக நிற்கிறார் முஜீப்!

முஜீப்

முஜீப் மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர். ஆனால், செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் வறுமைக்கும் முஜீப்புக்கும் சம்பந்தம் இல்லை. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரத்தில் பல நூறு ஏக்கர் நிலம் முஜிபின் தாய்க்கு சொந்தமானது. இந்த இடத்தில்தான் முஜீப்பின் மாமா மகன் நூர் அலி ஸ்ர்தான் கிரிக்கெட் விளையாடப் பயிற்சி எடுக்கிறார். இவர்தான் இப்போது ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். முஜீபைவிட 12 வயது மூத்தவரான ஸர்தானோடு சேர்ந்து முஜீப்பும் வீட்டுக்குள்ளேயே விளையாட ஆரம்பிக்கிறார். அப்படித்தான் முஜீபுக்கு கிரிக்கெட் அறிமுகமாகிறது.

டேப் பாலில்தான் பயிற்சி. டேப் பால் என்பது டென்னிஸ் பாலில் எலெக்ட்ரிக்கல் டேப்பை சுற்றி விளையாடுவது. இப்படி டேப்பை சுற்றுவதால் டென்னிஸ் பாலின் எடை அதிகமாகும். இதனால் பந்தில் வேரியேஷன்ஸ் அதிகரிக்கும். பந்து வேகமாகப் பறக்கும். இந்தப் பந்தில் விளையாடி உருவானவர்கள்தான் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள். அப்படித்தான் டேப் பாலில் விளையாட ஆரம்பிக்கிறார் முஜீப். 

இனிமேலாவது படி... இனிமேல்தான் கிரிக்கெட்!

ஆப்கானிஸ்தானில் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணித் தேர்வு நடக்கிறது. 13 வயதான முஜீப் கலந்துகொள்கிறார். விளையாட ஆரம்பித்து ஓராண்டே ஆன முஜீப்புக்கு இடம்கிடைக்கவில்லை. ''இனிமேலாவது படிப்பில் கவனம் செலுத்து'' என்கிறார் முஜீப்பின் அம்மா. `இனிமேல்தான் கிரிக்கெட்டில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்’ என்று முடிவெடுக்கிறார் முஜீப். 

ஆப்கானிஸ்தானின் தேசிய அணிக்குப் பயிற்சி ஆட்டத்தில் பந்துவீச முஜீப்புக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் நாட்டின் சீனியர் வீரர்கள் 6 பேரின் விக்கெட்டை சாய்க்கிறார் முஜீப். அவரின் ஸ்பின் வேரியன்ஷன்களை ரீட் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். இப்படித்தான் சீனியர் வீரர்களின் கவனம் ஈர்க்கிறார். ஆப்கானிஸ்தானின் அண்டர் - 19 அணியில் இடம்பிடிக்கிறார்.

அண்டர் 19 அணி வங்கதேசம் செல்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைகிறது ஆப்கானிஸ்தான். ''எல்லா போட்டிகளிலுமே ஆப்கானிஸ்தான் எங்களிடம் தோல்வியடையும். இது  வாஷ் அவுட் சீரிஸாக இருக்கும்'' என முதல் வெற்றி தந்த மிதப்பில் பேசுகிறார் வங்கதேச அணியின் கேப்டன். ஆனால், ஒரு போட்டி மழையால் ரத்தாக மூன்று போட்டிகளிலுமே ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைகிறது வங்கதேசம். 3-1 என கோப்பையை வெல்கிறது ஆப்கானிஸ்தான். 4 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைப் பறிக்கிறார் முஜீப். அடுத்ததாக ஆசிய கோப்பை அண்டர் -19 போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான். 20 விக்கெட்டுகள் எடுக்கிறார் முஜீப். இங்கேயும் ஆப்கானிஸ்தான்தான் சாம்பியன்!

ஆப்கானிஸ்தானின் தேசிய அணியில் இடம்பிடிக்கிறார் முஜீப். அயர்லாந்துக்கு எதிராக ஆடும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து `ப்ளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது வெல்கிறார் முஜீப். எந்தப் பதற்றமும் பரபரப்பும் அவரிடம் இல்லை. பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு வேரியஷனுடன் வந்துவிழுகிறது. வங்கதேச 20/20 கிரிக்கெட்டில் விளையாடுகிறார். ஐபிஎல் வாய்ப்பு காத்திருக்கிறது

50 லட்சம் டு 4 கோடி!

ஐபிஎல் ஏலத்தில் முஜீப் உர் ரஹ்மானுக்கு 50 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாக அறிவிக்கிறார் ஏலத்தை நடத்திய ரிச்சர்ட். டெல்லியும், பஞ்சாபும் மாறிமாறி முஜீப்பை தங்கள் அணியில் எடுக்க விலையை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். விட்டுக்கொடுக்கவே இல்லை ப்ரீத்தி ஜிந்தா. 8 மடங்கு விலை உயர்ந்து 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார் ப்ரீத்தி ஜிந்தா. 

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அணியின் கேப்டனும் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னருமான அஷ்வினே, சுழற்பந்தில் முஜீப்பைதான் நம்பிக்கொண்டிருக்கிறார். இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் முழுமையாக நான்கு ஓவர்கள் வீசியிருக்கிறார் முஜீப். சராசரியாக ஒரு போட்டியில், தான் வீசும் 24 பந்துகளில் 10 டாட் பால்கள் வீசுகிறார் முஜீப். எக்ஸ்ட்ராக்கள் குறைவு. பஞ்சாப் இறுதிப்போட்டிவரை விளையாடினால் முஜீப்தான் இந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருப்பார்.

ஆங்கிலம் தெரியாது. இந்தி, உருதும் தெரியாது. தெரிந்த ஒரே மொழி பாஷ்டோ (Pashto) மட்டுமே. அதனால் விமானப் பயணங்களில் காதில் ஹெட்போனை மாட்டுக்கொண்டு அமைதியாகப் பயணிக்கிறார். இவரின் ரோல் மாடல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் ஆப்கானிஸ்தானின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.

முஜீப்

டெல்லி டேர்டெவில்ஸ் உடன் இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகிறது பஞ்சாப். வெற்றிபெற்றேயாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறது டெல்லி. பஞ்சாப் கேப்டன் அஷ்வின் தன்னுடைய 4 ஓவர்களையும் முதலில் முடித்துவிட்டு டெத் ஓவர்களில் முஜீப்பை இறக்குகிறார். கடைசி ஓவர். ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்கிறார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவை. பந்துவீச வருகிறார் முஜீப். முதல் பந்து டாட் பால். அடுத்தப் பந்தில் சிக்ஸர் விளாசுகிறார் ஷ்ரேயாஸ். முஜீபின் முகத்தில் எந்த பதற்றமும் இல்லை. மூன்றாவது பால் மீண்டும் டாட் பால். ஒரு ரன் ஓடியிருக்கலாம். ஆனால், இந்த ஓவரில் இன்னும் மூன்று பந்துகளில் 11 ரன்கள் அடித்துவிடுவேன் என நம்பிக்கையுடன் நிற்கிறார் ஐயர். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன், ஒரு பவுண்டரி அடிக்கிறார் ஷ்ரேயாஸ். கடைசி பந்தில் கேட்சாகி ஷ்ரேயாஸ் ஐயர் அவுட். பஞ்சாபை வெற்றிபெறவைக்கிறார் முஜீப். 

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாபின் எல்லா பவுலர்களையுமே வெளுத்தார் தோனி. ஆனால், முஜீபின் ஓவர்களில் சிங்கிள் எடுக்க முயன்றாரே தவிர அடித்து ஆடவில்லை. தன்னுடைய அனுபவத்தால் முஜீபின் பந்துகளை ரீட் செய்வது கடினம் என பதுங்கி ஆடினார் தோனி. அடித்து ஆட முயற்சி செய்த கோலி அவுட் ஆனார்.

`21-ம் நூற்றாண்டின் முதல் கிரிக்கெட்டர்’ என முஜீப்பை கொண்டாடுகிறது கிரிக்கெட் உலகம். ஆமாம், இவன் ஜென் ஸீ தலைமுறையின் வீரன். பயம், பதற்றம், தடுமாற்றம் என எதுவுமே இந்த இளைஞனிடம் இல்லை. கோலியாக இருந்தாலும் சரி, அது தோனியாக இருந்தாலும் சரி... இந்த இளைஞன் யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்கிறான்... வீழ்த்துகிறான்... இனி கிரிக்கெட் முஜீப்களால் முன்னேறும்!

https://www.vikatan.com/news/sports/124550-magical-spinner-mujeeb-ur-rahman-kxips-trump-card.html

Link to comment
Share on other sites

மும்பை அணியை வீழ்த்தும் முனைப்பில் கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்

 
Run%20rate1acol
 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று மோதவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் முதலில் வெற்றிகளைக் குவித்த கொல்கத்தா அணி தற்போது தொடர்ந்து தடுமாறி வருகிறது.

 

அதே நேரத்தில் தொடக்கத்தில் தடுமாற்றத்தைச் சந்தித்து வந்த மும்பை அணி தற்போது கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு புத்துயிர் பெற்றுள்ளது.

மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியுடன் 21 முறை மோதியுள்ள மும்பை, அதில் 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் கொல்கத்தா, மும்பை அணி மோதும் இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது எனலாம்.

மே 6-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை, மும்பை வீழ்த்தியது நினைவிருக்கலாம். இதற்கு முன் 2015-ம் ஆண்டில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியை, கொல்கத்தா வீழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் 2 அணிகளும் இன்று மோதவுள்ளன. இரு அணிகளுக்குமே இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலை இரு அணிகளுக்குமே உள்ளது. எனவே இந்த ஆட்டம் இரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக உள்ளது.

கொல்கத்தா அணியின் கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், நித்தீஷ் ராணா, சுப்மான் கில், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் கடந்த 2 ஆட்டங்களில் அவர்களிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

இந்த ஆட்டத்தில் அவர்கள் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் சுனில் நரைன், தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் நடுவரிசையில் களமிறங்கினார்.

ஆனால் நடுவரிசையில் அவர் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. எனவே அவர் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கக்கூடும்.

அதேபோல பவுலிங்கில் ரஸல், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்ஸன் ஆகியோர் தங்களது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் சிவம் மாவி காயம் அடைந்திருந்தார். அதனால் அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்கி தனது திறமையை நிரூபித்தார்.

இந்த ஆட்டத்திலும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்புக் கிடைக்கக் கூடும். மொத்தத்தில் மும்பையை வீழ்த்தும் முனைப்பில் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

அதேபோல புத்துயிர் பெற்றுள்ள மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணி வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றிப் பாதையில் செல்லத் தொடங்கியிருக்கிறார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் பேட்டிங் தூணாக உள்ளார். அதேபோல எவின் லீவிஸ், இஷான் கிஷண், ஹர்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா, டுமினி ஆகியோரிடமிருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

ஹர்திக் பாண்டியாவும், கிருணால் பாண்டியாவும் பேட்டிங்கில் மட்டுமல்லாது, பவுலிங்கிலும் எதிரணிக்கு சவால் விட்டு வருகின்றனர். குறிப்பாக கிருணாலின் அற்புதமான சுழல்பந்துவீச்சுக்கு எதிரணியினர் மிரண்டு வருகின்றனர். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article23819713.ece

Link to comment
Share on other sites

`நீங்க எதுக்கு பாஸ் ஒன் டவுன் இறங்குனீங்க?' - அஷ்வின் பரிதாபங்கள் #RRvKXIP

 
 

இரண்டு நாள்களுக்கு முன்னர்தான், பஞ்சாப்பும் , ராஜஸ்தானும் `டர்பன் பாய்ஸ்' இடத்தில் மோதிக்கொண்டன. அதில் ராஜஸ்தானின் பட்லரும்  (51) , பஞ்சாபின் ராகுலும் (84) அரைசதம் அடித்தனர். இறுதியாக பஞ்சாப் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று ராஜஸ்தான் முதல் பேட் செய்தது. இந்த இரண்டு நபர்கள் மட்டுமே அரைசதம் கடந்தனர். ஆனால், வென்றது ராஜஸ்தான் அணி. அவ்வளவு தான் வித்தியாசம். #RRvKXIP

#RRvkXIP

 

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். `அப்பாடா , டாஸ் தோற்கணும்னுதான் இருந்தேன் " என்றார் அஷ்வின். டாஸ் மட்டும் தானா அஷ்வின். ஏன் ? எதற்கு ? எப்படி ? என எந்தக் கேள்விக்கும் பதில் இல்லாமல், டீமில் நன்றாக மயாங்க் அகர்வாலையும், அன்கித் ராஜ்புட்டையும் தூக்கிவிட்டு, அக்ஷ்தீப் நாத், மோஹித் ஷர்மாவைக் களமிறக்கினார். 
`தங்க மோதிரம் போட்டாத்தான் தலைக்கு எண்ணெய் வைப்பேன் `மோடில் பட்லர் இருந்தாரோ என்றுதான் தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் ஒன்றுமே செய்யாமல், ஸ்டோக்ஸ் போல அவுட்டாகிக்கொண்டிருந்த பட்லர், ஓப்பனிங் இறங்கியதிலிருந்து அதிரடி செய்கிறார். டெல்லிக்கு எதிராக 67. பஞ்சாப்புக்கு எதிராக 51 என அடித்தவர், நேற்றைய போட்டியிலும் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்துக் கணக்கைத் தொடங்கினார். ஆண்ட்ரூ டை வீசிய நக்கில் பந்தில், ரஹானே நடையைக் கட்ட, முதல் முறையாக கிருஷ்ணப்ப கௌதம் ஒன் டவுன் இறங்கினார். `யாராக இருந்தாலும், அடித்துப் பழகுவது மோகித் ஷர்மா பந்துவீச்சில்தான் `என்பதை கௌதமும் அறிந்தே வைத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் dugoutலேயே அந்தப் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் கௌதம். மீண்டும் ஸ்டாய்ன்ஸ் பந்தில் சிக்ஸர் அடிக்க, ஆசைப்பட்டு, மனோஜ் திவாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

#RRvKXIP

ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் என அடித்துக்கொண்டிருந்தவர், ஏழாவது ஓவர் இறுதியில் 25 பந்துகளில் 48 ரன்கள் கடந்திருந்தார். அஷ்வின் பந்தில் சிங்கிள் அடித்து, ஹாட்ரிக் அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின் பந்தில் லாங் ஆன் திசையில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தாலும், நேற்றைய போட்டி முழுக்க ஸ்பின்னர்கள் வசம்தான் இருந்தது. 

இந்த ஐபிஎல்லின் ஸ்பின் நாயகன் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் சாம்சன், பட்லர் இருவரும் அவுட்டானபோது, அணியின் ஸ்கோர் 132 /4 . பின்னியும், `அதிக விலை' ஸ்டோக்ஸும் களத்தில் இருந்தனர். அற்புதங்கள் நிகழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் 30 ரன்களாவது எடுக்கலாம். 12 கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 10 இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு ரன்னுக்கு விலை வைத்திருப்பார் போல பென் ஸ்டோக்ஸ். 

#RRvKXIP

ஆட்டத்தின் கடைசி ஓவரை டை வீசினார். மீண்டும் ஒருமுறை மோசமான ஷாட் செலக்ஷன் காரணமாக 14 ரன்களுக்கு அவுட்டானார் பென் ஸ்டோக்ஸ் முதல் பந்தையே, சிக்ஸருக்கு அடிக்க முற்பட்ட ஆர்ச்சர், லாங் ஆஃபில் நின்றுகொண்டிருந்த மனோஜ் திவாரிக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி பந்தில் உனத்கட்டு டக் அவுட். கடைசி ஓவரில் மூன்று விக்கெட் எடுத்து, `ஓவர்நைட்டில் ஒபாமாவாகி' பர்ப்பிள் கேப் கைப்பற்றினார் டை. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப். 
முதல் ஓவரை கிருஷ்ணப்ப கௌதம் மிகவும் நேர்த்தியாக வீசினார். இந்த சீசன் முழுக்கவே ராகுலின் ஃபார்ம் வியக்க வைக்கிறது. இந்தியா முழுவதுமாக ஒரு கீப்பர் அணியை உருவாக்கும் அளவுக்கு, ஐபிஎல்லில் கீப்பர் பேட்ஸ்மேன்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஒரு பக்கம் டெல்லியின் பன்ட், இன்னொரு பக்கம் பஞ்சாபின் ராகுல். ஆனால், இவர்களையும் கடந்து இன்னும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து கொண்டிருக்கிறார் தோனி. 
.

எப்போதும், தன் கால்களை எதற்கும் நகற்றாத கெயில், முதல் முறையாக கிரீஸுக்கு வெளியே வந்து ஷாட் ஆட முயற்சி செய்ய, பந்தை லாகவமாக லெக் சைடில் வீசினார் கௌதம். பட்லர் அதை `தோனி' வேகத்தில் ஸ்டம்பிங் செய்ய , ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் கெயில். நன்றாக இருந்த மயாங்க் அகர்வாலையும், அஷ்வின் இந்தப் போட்டியில் விளையாட அனுமதிக்காததால், கருண் நாயர் வருவார் போல, எனக் காத்திருந்தால், வேற லெவலில் ஒரு வேலை செய்தார் அஷ்வின்.  

#RRvKXIP

``என்னுடைய அடுத்த ஸ்டெப்ப உங்களால கணிக்கவே முடியாது. ஓப்பனிங் இறங்குவாங்கன்னு நினைக்கற வீரர்கள், மிடில் ஆர்டர்ல இறங்குவாங்க. மிடில் ஆர்டர் வீரர்கள் ஓப்பனிங் இறங்குவாங்க `` ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் அஷ்வின் உதிர்த்த பொன்மொழி இது. `நான் செய்யப்போற இந்தக் காரியத்த பார்த்து, நீங்க ஆடிப்போயிருவீங்க, அசந்து போயிருவீங்க `டோனில் இது இருந்தாலும், பஞ்சாப் சென்ற தமிழன் ஏதோ வித்தியாசமாகச் செய்யப்போகிறார் எனப் பலரும் காத்துக்கொண்டிருந்தார்கள். சுனில் நரேன் எல்லாம் அடிக்கிறாரே, நாம்தான் டெஸ்ட்டில் சதம் எல்லாம் அடித்திருக்கிறோமே, `நாமளே ஓனர் ஆகிட்டா' என நினைத்து, ஒன் டவுன் இறங்கினார். சந்தித்த இரண்டாவது பந்திலேயே, ஸ்டம்ப்புகள் சிதற அவுட் . `எதற்கு இந்த வேலை' என அஷ்வின் ரசிகர்களே நினைத்திருப்பார்கள். 

அடுத்த ஓவரில் கருண் நாயரும் அவுட். 4 ஓவர் முடிவில் 20 ரன்களுக்கு 3 விக்கெட் என ப்ரீத்தி ஜிந்தாவையே சோக மோடுக்கு மாற்றிவிட்டனர் டர்பன் பாய்ஸ். ஸ்டோக்ஸ் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தாலும், பவர்பிளே இறுதியில் 33 ரன்களே எடுத்திருந்தது பஞ்சாப். தேவைப்படும் ரன்ரேட் அப்போதே 9 ஐ நெருங்கிவிட்டது. புதிதாக வந்த நாத்தும், 13 பந்துகள் பிடித்து 9 ரன்களில் சோதியின் பந்துவீச்சில் அவுட்டானார்.

வந்தவர்கள் ரன் அடிக்காவிட்டாலும், பரவாயில்லை, முடிந்தளவு பந்துகளைச் சாப்பிட்டனர். திவாரி 7 (8 பந்துகள்), கருண் நாயர் 3 (5), நாத்  9 ( 13 ), திவாரி 7 (8 ), ஸ்டாய்ன்ஸ் 11 (16 ) என அனைவருமே மோசம். அதே சமயம், அவர்களை நொந்தும் பயனில்லை எனப் போங்கு காட்டியது மைதானம். பந்துகளை கனெக்ட் செய்யவே சிரமப்பட்டனர் பேட்ஸ்மேன்கள். ஐபிஎல்லின் இரண்டாம் பாகத்தில் இப்படிச் சில மைதானங்கள் சொதப்புவதுண்டு. 

#RRvKXIP

சென்ற போட்டியிலும், இதே பேட்டிங் சொதப்பலைச் செய்தது பஞ்சாப். அதிலும் மீட்பர் ராகுல். கடந்த போட்டியில் 44 பந்துகளில் அரைசதம், இந்தப் போட்டியில் 48 பந்துகளில் அரைசதம். இந்தத் தொடரில் 14 பந்துகளில் அரைசதம் கடந்தவர் ராகுல் என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம். ராகுலுக்கு பார்ட்னர்ஷிப் தர, ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும், பஞ்சா இந்தப் போட்டியை வென்றிருக்கும். 

ஆர்ச்சர் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ` `அதிக விலை' உனத்கட் வீசினார்.. ஸ்டாய்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்தி , இந்தத் தொடரில் தன் எட்டாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். பென் ஸ்டோக்ஸாவது பந்துவீசி ஏதோ செய்கிறார். உனத்கட் எல்லாம் ஏலத்தொகையான 11.5 கோடி ரூபாய்க்கு, இதுவரை என்ன செய்தார் எனத் தெரியவில்லை. 1 கோடிக்கு 1 விக்கெட்னாவது ஏதாவது பண்ணுங்க பாஸ்!  95 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுலால், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லமுடியவில்லை. 

இறுதியாக 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். நான்காவது வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான், புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. 6 வெற்றிகளுடன் பஞ்சாப் 3வது இடத்தில் இருக்கிறது. 

``தான் மூன்றாவதாக இறங்கியது பரிசோதனை முயற்சி. அது வேலை செய்யவில்லை" என்றார் அஷ்வின். சோதனை செய்து பார்க்க இது நேரமில்லை அஷ்வின்.  

https://www.vikatan.com/news/sports/124587-what-does-ashwin-do-in-one-down.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - கொல்கத்தாவுக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

 
 அ-அ+

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி. #IPL2018 #KKRvMI

 
 
 
 
ஐபிஎல் 2018 - கொல்கத்தாவுக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
 
ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
201805092229387968_1_chawla-2._L_styvpf.jpg
 
விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.
 
இதனால் மும்பை அண் இ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, கொல்கத்தா அணி  211 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
#IPL2018 #KKRvMI

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/09222938/1161968/mumbai-indians-needs-211-runs-to-win-by-kolkatta-knight.vpf

67/4 * (9/20 ov, target 211)
Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018 - 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

 
அ-அ+

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை துல்லியமான பந்துவீச்சால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை அணி. #IPL2018 #KKRvMI

 
 
 
 
ஐபிஎல் 2018 - 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை
 
ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.
 
201805092346188797_1_Ishan-2._L_styvpf.jpg
 
இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.
 
இதையடுத்து, கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் ந்ரேன் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர்.
 
மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் சிறந்த பீல்டிங்கில் கொல்கத்தா அணி சிக்கியது. இதனால் அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் மட்டுமே 21 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சரியாக ஆடவில்லை
 
இதனால் கொல்கத்தா அணி 18.1 ஓவரில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றது.
 
மும்பை அணி சார்பில் குருனால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெக்லெகன், பும்ரா,  மயங்க் மார்கண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #KKRvMI

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/09234619/1161975/mumbai-indians-beat-kolkatta-knight-riders-by-102.vpf

Link to comment
Share on other sites

சிஎஸ்கேவுக்கு எதிராக ‘பிங்க்’ உடையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்

 

 
rahane-dhoni

தோனி, ரஹானே. ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் காலக்கட்டத்தில்.   -  கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே.

ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரில் தங்களை பிளே ஆஃப் சுற்றுக்குத் தக்கவைக்க போராடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்குகிறது.

புற்று நோய் விழிப்புணர்வுக்காக பிங்க் நிற உடையில் ரஹானே தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.

 
 

ரஹானே இது குறித்து கூறும்போது, “புற்று நோய் இல்லாத சமூகக்கட்டமைப்புக்கு இந்த முயற்சி ஒரு வீரராக சிறிய ஆனால் முக்கியமான அடியெடுப்பாகும். விழிப்புணர்வை அதிகரிக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் பிங்க் உடன் மேலும் இரண்டு நிறங்கள் கலந்த உடையில் ராஜஸ்தான் களமிறங்குகிறது.

இந்த 3 வண்ணங்களும் மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், செர்விக்கல் கேன்சர் ஆகியவற்றைக் குறிக்கிறது.

ஆனால் பிங்க் நிறம் குறித்து கிரிக்கெட்டில் ஒரு சுவையான புள்ளி விவரம் உண்டு, தென் ஆப்பிரிக்கா அணி கேன்சர் விழிப்புணர்வுக்காக ஒவ்வொரு முறை பிங்க் உடையில் களமிறங்கும் போதும் வெற்றி கண்டுள்ளது, இந்தியாவுக்கு எதிராகவும் சமீபத்தில் பிங்க் உடையில் இறங்கி வெற்றி கண்டுள்ளது.

எனவே ராஜஸ்தான் ராயல்ஸின் சமூகப் பொறுப்புடைமையுடன் அதன் வெற்றி ஆசையும் சிஎஸ்கேவுக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.

http://tamil.thehindu.com/sports/article23826686.ece

Link to comment
Share on other sites

ஹைதராபாத் வெற்றிக்கு தடை போடுமா டெல்லி?: பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று மோதல்

SAN-IYER1

ஷ்ரேயஸ் ஐயர்   -  PTI

 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணி அமர்க்களமாக ஆடி வருகிறது. ஹைதராபாத் அணி தான் விளையாடிய 10 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றுள்ளது. 2-ல் மட்டுமே தோல்வி கண்டது. 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அந்த அணி உறுதி செய்துள்ளது.

 

பேட்டிங் சுமாராக இருந்தாலும், அந்த அணியின் பந்துவீச்சு அமர்க்களமாக உள்ளது. அந்த அணி வீரர்கள் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுக்கின்றனர்.

அதேபோல பேட்டிங்கிலும் கேப்டன் கேன் வில்லியம்ஸன், ஷிகர் தவண், அலெக்ஸ் ஹேல்ஸ், மணீஷ் பாண்டே, சாஹா, தீபக் ஹூடா, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர்.

இந்தத் தொடர் முழுவதுமே கேன் வில்லியம்ஸன் சிறப்பாக விளையாடி வருகிறார். கடைசி ஆட்டத்தில் 39 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

ஆனால் டெல்லி அணியின் நிலைமை மோசமாகவுள்ளது. 10 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே அந்த அணி வெற்றி கண்டது. எஞ்சிய 4 ஆட்டங்களில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றாலும், அந்த அணிக்கு பிளே-ஆப் சுற்று வாய்ப்பு என்பது மிக மிக கடினமே.

டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பிருத்வி ஷா, மேக்ஸ்வெல் போன்ற திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும், வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. ஹைதராபாத் அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் இளம் வீரர் பிருத்வி ஷா 65 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் மொத்தம் 163 ரன்கள் குவித்தபோதும், டெல்லியால் வெற்றியைப் பெற முடியவில்லை.

கடைசி ஓவர்களில் டெல்லி வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “இந்தத் தோல்வி எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது. தொடக்கத்தில் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலில் இருந்தோம். ஆனால் அடுத்த ஆட்டங்களில் நாங்கள் கோட்டை விட்டோம். முக்கியமான ஆட்டங்களில் கேட்ச்களை தவறவிட்டோம். அது எங்களின் வெற்றியைப் பறித்துவிட்டது” என்றார்.

இந்தத் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் மோசமாக விளையாடி வருகிறார். அவரது பார்ம் அணிக்கு பெரும் கவலையை அளித்தது. டெல்லி அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும். ஆனாலும் ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு நாங்கள் தடைபோடுவோம் என்று கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.

ஹைதராபாத் அணியில் ஷிகர் தவாணின் பேட்டிங் பார்ம் மட்டுமே கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து கேப்டன் வில்லியம்ஸன் கூறும்போது, “ஷிகர் தவாண் சிறந்த ஆட்டக்காரர். வரும் ஆட்டங்களில் அவரது திறமையை நீங்கள் காண முடியும். நாங்கள் ஓர் அணியாக திரண்டு ஒட்டுமொத்த திறமையையும் காட்டி வருகிறோம்” என்றார். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article23832265.ece

Link to comment
Share on other sites

மும்பை இந்தியன்ஸின் நிக்கல் நிக்கல் சல்தேரே! #KKRvMI

 
 

மே மாதம் வந்துவிட்டால் மும்பை ஜெயிக்குமாம்! அந்த ராசிப்படி ஏப்ரல் மாதம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி மே மாதம் தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கெத்தாக இருந்த கொல்கத்தா மும்பையிடம் படுமோசமாக தோல்வியடைந்து 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. #KKRvMI

#KKRvMI

 

இஷான் கிஷனின் வெறித்தன இன்னிங்ஸ்... மும்பையின் வெற்றித் தருணங்கள்!

10 போட்டிகளில் சிறப்பான கேப்டனாக இருந்த கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக், நேற்று மட்டும் ஏன் இவ்வளவு சொதப்பினார்; அம்பயர்களின் முடிவுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சாதகமாக இருப்பதுபோல் இருந்ததே எதனால்?; மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல்-ன் பிற்பாதியில் மட்டும் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிறதே எப்படி என நேற்றைய போட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால், இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் யாரிடமும் பதில் இல்லை!

டாஸ் வென்றதும் ஃபீல்டிங்!

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் மும்பையை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். கொல்கத்தா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸுடன் ஆடும் இரண்டாவது போட்டி இது. மும்பை வான்கடேயில் நடந்த போட்டியில் விக்கெட்டுகள் இருந்தும் 184 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது கொல்கத்தா. ஈடன் கார்டனில் நேற்று நடந்த போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. காயம் அடைந்திருந்த ஷுப்மான் கில்லுக்குப் பதிலாக ரிங்கு சிங்கும், மிட்செல் ஜான்சனுக்குப் பதிலாக டாம் கரணும் இடம்பிடித்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

#KKRvMI

இஷான் கிஷனின் வெறித்தன இன்னிங்ஸ்... மும்பையின் வெற்றித் தருணங்கள்!

சூர்யகுமார் யாதவ், எவர்ட்டன் லூயிஸ் பேட்டிங்கை தொடங்கினார்கள். முதல் ஓவரை ஆண்ட்ரு ரஸல் வீசினார். சூர்யகுமார் யாதவ் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார். இரண்டாவது ஓவர் வீசிய பிரசித் கிருஷ்ணாவின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தார் யாதவ். மூன்றாவது ஓவரை டாம் கரண் வீசினார். இரண்டு பவுண்டரிகள். நான்காவது ஓவர் சுனில் நரேனுக்கு. இந்த ஓவரிலும் ஒரு பவுண்டரி விழுந்தது. தொடர்ந்து நான்கு ஓவர்களிலும் நான்கு பெளலர்களை மாற்றிய தினேஷ் கார்த்திக் ஐந்தாவது ஓவரை மீண்டும் பிரசித் கிருஷ்ணாவிடம் கொடுத்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் லூயிஸின் கேட்சை தவறவிட்டார் குல்தீப் யாதவ். பவர் ப்ளேவின் கடைசி ஓவர் பியுஷ் சாவ்லாவிடம் வந்தது. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் சூர்யகுமார். ஆனால், நான்காவது பந்தில் லூயிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் சாவ்லா. பவர் ப்ளேவின் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 46 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. 

மீண்டும் சாவ்லா வீசிய ஒன்பதாவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார். 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார் சூர்யகுமார். 10-வது ஓவரில் இருந்து இஷான் கிஷனின் பேயாட்டம் ஆரம்பித்தது. குல்தீப் யாதவின் ஓவரில் சிக்ஸர் அடித்தவர், அடுத்த சாவ்லா ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். 

குல்தீப் யாதவின் 15-வது ஓவரில் இஷானின் வெறித்தனம் உச்சம் தொட்டது. இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்தார் இஷான். இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் அடித்தது மும்பை. எதிர்முனையில் ஹிட்மேன் ரோஹித்தே இஷானின் இந்த வெறித்தனத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அடுத்த ஓவர் வீசிய நரேனின் ஓவரில் இஷாந்த் அவுட் ஆகும்போது மும்பை அணியின் ரன்ரேட் 10-ஐத் தொட்டிருந்தது. 21 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி என 62 ரன்கள் அடித்திருந்தார் இஷான் கிஷன். 

ரோஹித் ஷர்மா பெரிதாக அடிக்கவில்லை என்றாலும் 7-வது ஓவரில் வந்தவர் 18-வது ஓவர் வரை களத்தில் இருந்தார். 31 பந்துகளில் 36 ரன்கள் அடித்து பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

#KKRvMI

இங்குதான் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் ட்விஸ்ட்! ஆண்ட்ரு ரஸல் 2 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். டாம் கரண் மூன்று ஓவர்கள் 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். இப்படி 2 டெத் பெளலர்கள் இருக்க, பியுஷ் சாவ்லாவிடம் ஓவரைக் கொடுத்தார் தினேஷ். மூன்று சிக்ஸர், 1 பவுண்டரி என மொத்தம் 22 ரன்கள். மொத்தம் 210 ரன்கள் அடித்தது மும்பை. இதில் கடைசி 7 ஓவர்களில் மட்டும் அதாவது 42 பந்துகளில் 98 ரன்கள். 210 ரன்களில் 70 சதவிகித ரன்கள் பவுண்டரி சிக்ஸர்களால் கிடைத்தவை. மும்பை மொத்தம் 16 பவுண்டரி, 14 சிக்ஸர்கள் அடித்திருந்தது.

கொல்கத்தாவின் சூர மொக்கை சேஸிங்!

ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்கள் சேஸ் செய்ததுதான் கொல்கத்தாவின் இதுவரையிலான சாதனை. இந்தமுறை அவர்கள் சாதனையை அவர்களே முறியடிப்பார்கள் என ஈடன் கார்டனில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்க, சொதப்பல் ஆட்டம் ஆடியது கொல்கத்தா. முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் கேட்ச் என சுனில் நரேன் வந்தவேகத்தில் பெவிலியனுக்கு கிளம்பினார். 

#KKRvMI

இஷான் கிஷனின் வெறித்தன இன்னிங்ஸ்... மும்பையின் வெற்றித் தருணங்கள்!

கிறிஸ் லின் சில பவுண்டரிகள் அடித்து கொல்கத்தாவுக்கு நம்பிக்கை கொடுக்க, காண்டானது மும்பை பெளலர்கள் இல்லை, ராபின் உத்தப்பாதான். ஒரு ரன் எடுக்க வா, வா என  கிறிஸ் லின்னைக் கூப்பிட்டு ரன் அவுட் ஆக்கினார் உத்தப்பா. அங்கிருந்து ஆரம்பித்தது கொல்கத்தாவின் சூர மொக்கை ஆட்டம். ராபின் உத்தப்பா 14 ரன்களில் அவுட், ரஸல் 2 ரன்னில் அவுட், தினேஷ் கார்த்திக் 5 ரன்களில் ரன் அவுட், ரானா 21 ரன்னில் அவுட் என 67 ரன்களுக்கு 6 பேட்ஸ்மேன்களையும் இழந்தது கொல்கத்தா. அதன்பிறகு 18 ஓவர்கள்வரை ஆட்டம் இழுத்துக்கொண்டே போனாலும் ரன்கள் உயரவில்லை. 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது கொல்கத்தா.  

தோல்விக்குப் பிறகு `நாங்கள் அணியாக இணைந்து விளையாடாததுதான் தோல்விக்குக் காரணம்’ என்றார் தினேஷ் கார்த்திக். ஆனால், ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸிடம் சரண் அடைந்ததுபோல் இருந்தது கொல்கத்தாவின் ஆட்டம். கேப்டன்ஸியில் இருந்து எல்லாமே சொதப்பல்தான்.

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்றுவிடும், ஃபைனல் மும்பைக்கும்- சென்னைக்கும்தான் என இப்போதே ட்விட்டரில் பெட் கட்டுகின்றனர். ``கெளம்பு கெளம்பு முடிஞ்சி போச்சி... கெளம்பு கெளம்பு'' என அம்பானி சொல்வதாக பூரிக்கிறார்கள் மும்பை ரசிகர்கள். அடுத்து ராஜஸ்தானை சந்திக்கிறது மும்பை. இந்தப்போட்டியில் வெற்றிபெற்றால் மும்பை ப்ளே ஆஃபில்  அச்சுறுத்தும்!

https://www.vikatan.com/news/sports/124651-ishan-kishan-just-too-good-for-kkr.html

Link to comment
Share on other sites

தடாலடியாக நான்காவது இடத்துக்கு முன்னேறிய மும்பை: இதர அணிகள் பதற்றம்!

 

 
nita_rohit1

 

இதை யாருமே எதிர்பார்த்திருக்கமுடியாது. 

மே 4-ம் தேதி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி தற்போது நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐந்தே நாள்களில் கடகடவென முன்னேறி முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடித்ததால் இதர அணிகள் கலக்கமடைந்துள்ளன. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி மிகவும் சுவாரசியமாக கட்டத்தை அடைந்துள்ளது. 

மே 4 அன்று, பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதனால் கடைசி இடத்தில் இருந்த மும்பை, 5-ம் இடத்துக்கு முன்னேறி அசத்தியது. மே 6 அன்று, கொல்கத்தா அணியை 13 ரன்களில் வீழ்த்தியது மும்பை. அந்த வெற்றிக்குப் பிறகும் புள்ளிகள் பட்டியலில் மும்பை 5-வது இடத்தில்தான் இருந்தது. 10 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது கொல்கத்தா. மிக மோசமான நிலையில் இருந்தபோதும் மற்ற அணிகள் போல துவளாமல் மீண்டு வருகிறது மும்பை. 

நேற்றைய ஆட்டம் பழைய மும்பையை ஞாபகப்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. மும்பை வீரர் இஷான் கிஷண் ஆட்டநாயகன் ஆனார் கடந்த 11 சீசன்களில் இரு அணிகளும் மொத்தம் 22 ஆட்டங்கள் விளையாடியதில் 18 ஆட்டங்களில் மும்பையே வென்றுள்ளது.

இந்த வெற்றியினால் தற்போது 10 புள்ளிகளுடன் ஜம்மென்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது மும்பை. யாரும் எதிர்பாராத திருப்புமுனை இது. 

மே 1 அன்று பெங்களூருவிடம் தோற்றது மும்பை. அதனையடுத்து 8 ஆட்டங்களில் 2-ல் வெற்றி 6-ல் தோல்வி என்கிற மோசமான நிலையில் இருந்தது மும்பை. மீதமுள்ள ஆறு ஆட்டங்களை வென்றால்தான் பிளேஆஃப் என்கிற இக்கட்டான நிலைமை வேறு. பெங்களூருக்கு எதிரான அந்தத் தோல்வி மும்பை அணியை மிகவும் காயப்படுத்தியது. அன்று முதல் புதிய அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தார்கள் மும்பை வென்றார்கள்.

பஞ்சாப்பை வீழ்த்தியும் அடுத்ததாக கொல்கத்தாவை இருமுறை வீழ்த்தியும் தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது மும்பை. இதனால் நீண்டநாளாக நான்காம் இடத்தில் இருந்த கொல்கத்தா தற்போது 5-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. 

அடுத்ததாக ராஜஸ்தான், பஞ்சாப், தில்லி ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது மும்பை. இந்த மூன்றிலும் வென்றுவிட்டால் பிளேஆஃப் உறுதி. ஆனால் இது நடக்கக்கூடாது என்பதுதான் இதர அணிகளின் விருப்பம். ஏனெனில் ஐபிஎல்-லில் மிகவும் ஆபத்தான அணி மும்பை தான். சென்னை சூப்பர் கிங்ஸை அதிகமுறை வென்ற அணி இதுமட்டும்தான். அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள மும்பையால் எந்த அணியின் ஐபிஎல் கனவையும் சிதைக்கமுடியும்.

list2.JPG

list.JPG

http://www.dinamani.com/sports/special/2018/may/10/mumbai-enters-top-4-2917061.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

ஐபிஎல் 2018 - 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

 

 

இன்னுமொரு மகா சொதப்பல்

Link to comment
Share on other sites

பஞ்சாப் அணியின் நடுவரிசை வீரர்கள் மோசமாக ஆடுவது கவலை அளிக்கிறது: பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் பேட்டி

 

 
HODGE1

பிராட் ஹாட்ஜ்.   -  Getty Images

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் மோசமாக விளையாடி வருவது கவலை அளிக்கிறது என்று அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வி கண்டது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

 

தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் மட்டும் கடைசி வரை வெற்றிக்காக போராடினார். அவர் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 70 பந்துகளில் இந்த ரன்களை ராகுல் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் அனைவருமே மோசமாக விளையாடியதால் பஞ்சாப் தோல்வி கண்டது.

இதுகுறித்து பஞ்சாப் அணி பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் கூறும்போது, “எங்கள் அணி பேட்டிங்கில் வலுவான அணி என்பது தெரியும். ராகுல், கிறிஸ் கெயில் என அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் நடுவரிசை வீரர்கள் மோசமாக விளையாடினர். இதனால் நாங்கள் தோல்வி கண்டோம். நடுவரிசை வீரர்களின் பேட்டிங் எங்களுக்கு கவலை அளிக்கிறது.

பந்துவீச்சாளர்கள் தங்களது கடமையை சரியாகச் செய்தனர். இந்த போட்டி முழுவதுமே பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது” என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் குவித்தாலே அது எதிரணிக்கு சவாலான ஸ்கோராக இருக்கும் என்று எண்ணினோம்.

முதல் 6 ஓவர்களில் நன்றாக ஸ்கோர் செய்தோம். அதன் பின்னர் ஆடுகளத்தில் பந்துகள் எழும்பவில்லை. ரன்கள் குவிப்பது சிரமமாக இருந்தது. பின்னர் பந்துவீச்சின்போது கிருஷ்ணப்பா கவுதம் சிறப்பாக பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுகளை பறித்தது எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

எங்கள் அணியின் ஆலோசகர் ஷேன் வார்னே, எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். இதுபோன்ற மாபெரும் வீரர்கள் எங்களுடன் துணை நிற்பது பெருமை. வெற்றிக்கான படிக்கட்டுகளை எங்களுக்காக அவர் அமைத்து வருகிறார்” என்றார். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article23832258.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்கெய்ல்லை ஓப்பினிங் பாட்ஸ்மன்னாக  இறக்குவதைவிட மூன்றாவது நாலாவதாக விடுவது பலனளிக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

இஷான் கிஷான் திடீர் விளாசலுக்கு என்ன காரணம்?- டிப்ஸ் அளித்த இரு முக்கிய நட்சத்திர வீரர்கள்

 

 
kishan

இஷான் கிஷானுக்கு டிப்ஸ்களை வழங்கிய தோனி: கோப்புப்படம்

மும்பை இந்தியன் அணியின் இளம் வீரர் இஷான் கிஷானின் திடீர் அதிரடி ஆட்டத்துக்கு இரு முக்கிய வீரர்கள் அளித்த ஊக்கமும், அளித்த டிப்ஸ்களும் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரரும் 19 வயதான இஷான் கிஷான் 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அதிரடியாக பேட் செய்தார். 211 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் குவிப்புக்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிஷான் முக்கியக் காரணமாகும். ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி வாங்க முயன்ற நிலையில், ரூ.6.20 கோடிக்கு இஷான் கிஷானை மும்பை அணி வாங்கியது.

இந்த வெற்றிக்குப் பின் இஷான் கிஷான்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று அதிரடியாக ரன் சேர்த்ததைப் பார்த்து என்னை மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கியது. ஆனால், தொடக்கத்தில் என்னால் அணியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாட முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் என்னை 4-வது வீரராகவும், கடைசியிலும் களமிறக்கினார்கள். அதனால் என்னால் நினைத்ததுபோல் பேட் செய்ய இயலவில்லை.

ஏனென்றால், நான் தொடக்க ஆட்டக்காரராகவும், ஒன்டவுனிலும் களமிறங்கி விளையாடுபவன். என்னை கடைசி வரிசையில் களமிறக்கியபோது, என்னுடைய பேட்டிங் திறமையை நிரூபிக்க முடியாமல் போனது.

இதைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன், ரோகித் அண்ணன், என்னிடம் பேசினார். 'உன்னுடைய இயல்பான ஆட்டத்துக்கு ஏன் திரும்பவில்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் பேட் செய்வதுபோல் விளையாடு. நீ விரைவாக ஆட்டமிழந்தாலும் உனக்குப் பின்னால் மற்ற வீரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உன்னுடைய இயல்பான ஆட்டத்தில் நீ விளையாடு' எனத் தெரிவித்தார்.

அணியின் பயிற்சியாளரும் இதேபோன்று பேசி எனக்கு ஊக்கமளித்தார். இந்த போட்டியில் களமிறங்கும் முன்புகூட ரோகித் அண்ணன் எனக்கு பேட்டிங்கில் பல்வேறு டிப்ஸ்களை அளித்தார். குறிப்பாக சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும், லெக் ஸ்பின்னையும், கூக்ளி பந்துவீச்சையும் எதிர்கொள்வது குறித்தும் எனக்கு டிப்ஸ்களை ரோகித் வழங்கினார்.

குல்தீப்பின் பந்துவீச்சை ஏற்கெனவே நான் விளையாடி இருப்பதால், எனக்குப் பெரிதாக பயம் இல்லை. கையில் இருந்து பந்து வெளியேறும் போதே கணித்து ஆடத் தொடங்கினேன். அது எனக்கு சரியான பலனை அளித்து, அடித்து ஆட துணைபுரிந்தது.

மற்றொரு முக்கிய வீரரான மகேந்திர சிங் தோனி எனக்கு கீப்பிங் குறித்தும், ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது குறித்தும் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரிடம் இருந்து ஹெலிகாப்டர்  ஷாட்களை ஆடுவது குறித்து நான் கற்றுக்கொண்டேன். ஹெலிகாப்டர் ஷாட்களை விளையாடும் முன் பந்துவீச்சை நன்கு கவனி, களத்தின் சூழலை அறிந்துகொள், களத்தில் நிலைப்படுத்திக்கொள் என்று பல்வேறு டிப்ஸ்களை தோனி எனக்கு வழங்கினார்.

தோனி மிகப்பெரிய லெஜெண்ட். அவர் இப்போது எதிரணியாக இருந்தாலும், எனக்கு பல்வேறு ஆலோசனைகளையும், பேட்டிங் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தார். இவர்கள் இருவரின் ஆலோசனையே எனக்கு இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடத் துணை புரிந்தது.''

இவ்வாறு இஷான் கிஷான் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23838665.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.